மோனிஷா நாவல்கள்
Aval Draupathi Alla - 35
Quote from monisha on November 15, 2020, 10:40 PM35
இடம்மாறியது
சாரதியின் செல்பேசியின் அழைப்பு அந்த அறையின் நிசப்தத்தைக் கிழித்து கொண்டு கேட்க, அவன் முகத்தைச் சுருக்கி கொண்டு விழிக்க முற்பட்டான். கழுத்து லேசாய் வலிக்கத் தலையை நிமிர்த்த முடியாமல் சற்று சிரமப்பட்டு நிமிர்த்திக் கொண்டு விழிகளைத் திறக்க, அவன் அதிர்ந்தான்.
வீரா அவன் அருகில் இருந்தாள். அதுவும் இருவருமே அருகருகே அமர்ந்தபடியே உறங்கியிருக்கின்றனர். சாரதிக்கு அதிர்ச்சி தீர்ந்தபாடில்லை.
இரவெல்லாம் அவள் தோள் மீது சாய்ந்தபடியா தான் உறங்கிக் கொண்டிருந்தோம்?
இந்தக் கேள்வி எழுந்த மறுகணம் கொஞ்சம் ஆச்சர்யம்... குழப்பம் என எல்லாமும் சேர்ந்து அவனை ஆட்டுவிக்க விழிகளைப் பலமுறை தேய்த்து தான் பார்ப்பது நிஜம்தானா என உறுதிப்படுத்திக் கொண்டான்.
பொய்யில்லை. அவள் இன்னும் அவன் அருகில் அமர்ந்துதான் உறங்கிக் கொண்டிருந்தாள். அதுவும் அவள் மிருதுவான தோளை அவன் தலை சாய்க்கக் கொடுத்தபடி!
சாரதிக்கு இரவு நடந்தது எதுவும் நினைவுக்கு வரவில்லை. வீரா எப்போது தன் அறைக்குள் வந்திருப்பாள்? என்ன நிகழ்ந்திருக்கும்? எப்படி அவள் தன்னோடு உறங்கிக் கொண்டிருக்கிறாள்? இப்படியாக வரிசையாய் அவன் மனம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க, எதற்கும் அவனுக்குப் பதில் கிடைத்தபாடில்லை.
அம்மு நதியாவை அழைத்துக் கொண்டு மாலை வீடு வந்து சேர்ந்த போது... வீரா செய்த களேபரங்களும் அதற்குப் பின் அவள் தன்னை இழிவாய் பேசியதுவரையே அவன் மூளைக்குள் அழுத்தமாய் பதிவாகியிருந்தது. அதற்குப் பிறகு கோபத்தில் பாட்டில் பாட்டிலாய் மதுவை உள்ளிறக்கியது அவனுக்கு நினைவிருக்க, அதற்குப் பின் சுத்தமாய் துடைத்துவிட்டது போல இரவு நடந்த சம்பவங்களைக் குறித்த எந்தவொரு தடயமும் அவன் மூளையில் பதிவாகவில்லை.
‘இடியட்... ஒரு ப்ராண்டா அடிச்சிருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்காதுல்ல... ஒய் யூ க்ராஸ்ட் யுவர் லிமிட்ஸ்’ தலையிலடித்து மனதிற்குள்ளேயே தன்னைச் சாடி கொண்டபடி வீராவைப் பார்த்தவனுக்கு நேற்று அவள் பேசிய வார்த்தைகள் யாவும் காதிற்குள் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.
‘அந்த பேச்சு பேசிட்டு... எதுவுமே நடக்காத மாதிரி நம்ம ரூம்ல... அதுவும் நம்ம பக்கத்துல தூங்கிட்டிருக்கா... இவளை’ என்று பொருமியவன், “ஏ வீரா... வீரா” என்று அவள் கன்னத்தைத் தட்டி அவளை எழுப்ப முற்பட்டான்.
அவள் சிணுங்கியபடி, “இப்பதானே தூங்கினே... அதுக்குள்ள என்ன?” என்று தூக்க கலக்கத்தில் புலம்பிக் கொண்டு அவன் கரத்தைத் தன் கரத்தில் இறுக்கிக் கொண்டு வசதியாய் அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
புது இரத்தம் பாய்ச்சியது போல் அந்த நொடி வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓர் புது உணர்வை அனுபவித்தான். பெண்களின் ஸ்பரிசம் அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. சரச லீலைகளும் புதிதல்ல. ஆனால் இந்த உணர்வு சற்றே புதிது.
தன் கர வளையத்திற்குள் பல பெண்களை அவன் கிடத்தியிருக்கிறான். ஆனால் எந்தப் பெண்ணின் பிடிக்குள்ளும் அவன் சென்றதில்லை. இதுவே முதல்முறை... ஓர் பெண்ணின் பிடிக்குள்!
அவள் பிடி அத்தனை அழுத்தமாக இல்லையென்ற போதும் தன்னை விடுவித்துக் கொள்ள மனமில்லாமல் அவளின் அந்த நெருக்கத்தையும் தொடுகையையும் வெகுவாய் ரசிக்கத் தொடங்கியிருந்தான். காமத்துக்கும் காதலுக்குமான இடைப்பட்ட தூரத்தை அவன் கடந்து வந்த தருணம் அது!
அப்படியே அவள் பிடிக்குள் இருந்துவிடலாமா என்று தோன்றியது அவனுக்கு! ஆனால் அந்த உணர்வை முழுவதுமாய் அவனை அனுபவிக்க விடாமல் மீண்டும் அவன் செல்பேசி அழைக்க, அவள் விழித்துக் கொள்வாளோ என்ற பதட்டத்தோடு எட்டி அதனை அணைத்து விடலாம் என்று பார்த்தான். விழித்துக் கொண்டாள் அவள் தன்னை விட்டு விலகி விடுவாளே என்ற தவிப்பு அவனுக்கு!
அவன் எண்ணத்திற்கு ஏற்றார்போல் வீரா அந்தச் சத்தத்தில் விழிப்படைந்து விட்டாள். மெல்ல மெல்ல என்றல்லாது தடாலடியாய் எழுந்து கொண்டாள். முன்னமே சாரதி அருகில் இருப்பதை உணர்ந்தே, அப்படி அதிர்ச்சியாய் விழித்துக் கொண்டாள் போலும்.
அவன் கரத்தைத் தான் பிடித்திருக்கிறோம் என்று அறிந்த மறுகணமே விருட்டென தன் கரத்தைப் பிரித்துக் கொண்டு எழுந்தவள், அவன் இருப்பதைக் கண்டும் காணாதவளாய் எழுந்து கதவை நோக்கி நடந்தாள்.
“ஏ நில்லு டி” என்று அழைத்தபடி சாரதி அவளை வழி மறித்து நிற்க அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தாள். அவனை எதிர்கொள்ள முடியாத படபடப்போடு!
“எப்போடி நீ என் ரூம்க்குள்ள வந்த?” அவன் குழப்பமுற கேட்க, அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து நோக்கினாள் .
“அப்போ நைட் நடந்தது எதுவும் உனக்கு ஞாபகத்துல இல்லையா?”
“என்னடி நடந்துச்சு? நீ எப்படி டி என் பக்கத்தில வந்து தூங்கின”
“அப்போ உண்மையிலேயே உனக்கு எதுவும் ஞாபகத்துல இல்லையா?!” என்று அதே கேள்வியை அதே அதிர்ச்சியோடு மீண்டும் அவனிடம் அவள் வினவ... கடுப்பானவன்,
“அப்படி என்னடி நடந்துச்சு?” என்று கோபத்தோடு சற்றே அழுத்தமாய் கேட்டான்.
“அப்போ நீ குடி போதையிலதான் உளறுனியோன்னு... நினைச்சேன்... நீ வேற மாதிரி நடந்துக்கும் போதே... சும்மாவா சொல்லி இருக்காங்க... குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு” என்று அவள் பாட்டுக்கு ஒருபக்கம் புலம்பத் தொடங்க, சாரதிக்கு என்ன நிகழ்ந்ததென்று இம்மியளவு கூட யூகிக்க முடியவில்லை.
“அப்படி என்னடி ஆச்சு... என்னதாண்டி பேசினேன்?” பொறுமையாகவே அவன் வினவ அவளோ எரிச்சலோடு,
“அந்த கர்மத்தை இன்னாத்துக்கு குடிக்கணும்... அப்புறம் எல்லாத்தையும் மறந்து தொலைக்கணும்” என்று கேட்டு நொடித்துக் கொண்டாள்.
“உன் கதாகாலட்சேபத்தை நிறுத்திட்டு நடந்ததை சொல்லுறியா?”
“மறந்துட்ட இல்ல... அத்தோட வுடு... நான் போய் தங்கசிங்களை வேற எழுப்பிக் கிளப்பணும்” என்று அவள் அவசரமாய் அந்த அறைவிவிட்டு வெளியேறப் பார்க்க சாரதி அவளைப் போகவிடாமல் அவள் கரத்தைப் பற்றி அருகில் இழுத்து, “ஒழுங்கா சொல்லிட்டு போ... எப்போ நீ என் ரூமுக்கு வந்த... நைட் என்ன நடந்துச்சு” என்று கேட்டான்.
“போய்யா... முதல்ல போய் குளிச்சிட்டு வா... நைட்டு அடிச்சது நாறுது” என்றபடி அவனை விட்டு அவள் விலக, “இவ்வளவு நேரம் என் பக்கத்துலேயே சாஞ்சு தூங்குனியே... அப்போ நாரலயா டி” என்றவன் இன்னும் இறுக்கமாய் அவளை நெருக்கி அணைத்தான்.
அவள் அவஸ்தைப்பட்டு அவனைத் தள்ள அவனோ சினத்தோடு, “நேத்து நைட் என்னை அந்த கேவலப்படுத்திட்டு... எந்த தைரியத்தில என் ரூம்க்குள்ள... வந்து என் பக்கத்துலேயே தூங்கின” என்று கேட்க,
“யாரு... நான்... உன் பக்கத்துல தூங்கினேனா... நீதான் என் தோள் மேல சாஞ்சு தூங்கினே... நேத்து நைட் அய்யோ பாவம் மாதிரி எனக்கிட்ட பேசிட்டு... இப்ப இன்னாடன்னா அடப்பாவி மாதிரி நடந்துட்டிருக்க... விடுய்யா என்னை” என்று அவன் கரத்திலிருந்து தவித்துக் கொண்டிருந்தாள்.
“அப்படி என்ன பேசினேன்... ஒழுங்கா நீ இப்போ சொல்ற... இல்லன்னா அன்னைக்கு மாதிரி ஒரே லிப் டு லிப் தான்” என்றவள் இதழை அவன் நெருங்க அவள் வேகமாய் தன் உதட்டை மூடிக் கொண்டு, “ம்ஹும் ம்ஹும்... நான் சொல்றேன்” என்று அவள் தத்தளிக்க அவன் தள்ளி வந்து, “அப்படி வா வழிக்கு... சொல்லு டி” என்றான் அழுத்தமாக!
“இப்ப வேணாம் யா ... தங்கச்சிங்க ஸ்கூலுக்கு கிளம்பணும்... நீயும் ஆபீஸ் கிளம்பணும்ல... நைட்டு சொல்றேனே” என்று தயக்கமாய் கேட்டவளை ஏற இறங்கப் பார்த்தவன்,
“நைட்டு சொல்ற... சொல்லல” என்றவன் இன்னும் நெருக்கமாய் அவள் இடையைப் பிடித்து இழுத்து கொஞ்சம் கிறக்கமாய் அவள் கழுத்துபுரத்தில் இறங்கி உரசினான்.
“ம்ம்ம்ம்மா” என்று அவள் சத்தமாய் கத்திவிட பதறிக் கொண்டு அவளை விடுவித்தவன், “ஒண்ணுமே பண்ணல... அதுக்குள்ள ஓவரா ரியாக்ட் பண்ற... சீ போடி” என்றான். அவள் பெருமூச்செறிந்து தப்பித்தோம் பிழைத்தோம் என அந்த அறையை விட்டு ஓடிவிட்டாள்.
‘அப்படி என்னத்த பேசித் தொலைச்சிருப்போம்’ என்று சாரதி புலம்பிக் கொண்டே அலுவலகம் புறப்படுவதற்கான வேலைகளில் ஈடுபடத் தொடங்கியவன் கிளம்புவதற்கு முன்னதாக, “வந்ததும் ஒழுங்கா சொல்ற” என்று அவளை எச்சரித்துவிட்டே சென்றான்.
அலுவலகத்தை அடைந்ததும் கணேஷ் அன்றைக்கான வேலைளைப் பட்டியலிட்டு பின் சற்றுத் தயங்கி, “சார்... ஒரு விஷயம்” என்க,
“என்ன கணேஷ்?” என்று சிரத்தையேயின்றி கேட்டான் சாரதி.
“ஒரு ரேடியோ நிகழ்ச்சில உங்கள கெஸ்டா வர சொல்லி கேட்டிருக்காங்க... ஆனா நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு” என்று இழுத்தான்.
“ஏன் ஒத்துக்க மாட்டேன்?” என்று சாரதி அவனை நிமிர்ந்து பார்க்க,
“உங்களுக்கு லாபமில்லாத வேலையதான்... நீங்க செய்ய மாட்டீங்களே... அதான்”
“யார் சொன்னா லாபமில்லன்னு... அந்த நிகழச்சில என்னை சாரதி ஷாப்போட ஓனர்தானே அறிமுக படுத்துவாங்க... காசே இல்லாம ஓசி ல நம்ம கடைக்கு வர்ற விளம்பரத்தை வேண்டான்னு ஏன் சொல்லணும் ... பேசாம அக்செப்ட் பண்ணிட்டு... டைம் கேட்டு வை... அன்ட்.... அது என்ன நிகழ்ச்சி... என்ன மாதிரி கேள்வி கேட்பாங்கன்னு லிஸ்ட் வாங்கிடு” என்று சொல்லி முடிக்க, நாம இப்படி ஒரு பார்வையில் யோசிக்கவே இல்லையே என்று கணேஷ் வியப்புற்றான்.
அன்று அலுவல் வேலைகளை முடித்து சாரதி இரவு தாமதமாகவே வீட்டிற்கு வந்தான். வந்ததுமே அவன் பார்வை வீராவைத்தான் தேடியது. முத்துவிடம் அவர்கள் மூவரையும் பற்றி விசாரிக்க, “மூணு பேரும் சாப்பிட்டு தூங்க போயிட்டாங்க” என்க,
“அதுக்குள்ள தூங்க போயிட்டாளா... அவளை” என்று அவன் வாய்க்குள்ளேயே வீராவைத் திட்டிக் கொண்டிருக்க, அவன் முகபாவனையை பார்த்து முத்து புரியாமல், “சார்” என்று அழைத்தான்.
சாரதி உடனே, “நத்திங்.... எனக்கு சாப்பாடு வேண்டாம்னு சொன்னேன்... நீ சாப்பிட்டு போய் படு” என்று சொல்லிவிட்டு தன் அறை நோக்கிக் கோபமாய் நடந்தவன்... அவர்கள் அறையைப் பார்வையிட்டபடியே தன் அறைக் கதவை திறந்து உள்ளே நுழைய, அப்போது வீராவோ அவன் அறைக்குள் மும்முரமாய் சில பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
அவளை உள்ளே பார்த்தது அவனுக்கு முதல் அதிர்ச்சியென்றால் அவன் அறையின் பொருட்கள் யாவும் இடம் மாறியிருப்பதைப் பார்த்து அடுத்த அதிர்ச்சி!
35