You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Avalukaga Avan - 4

Quote
தமிழ் ஒருவழியாக தனது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டாள். அடுத்து எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் என்ற குழப்பமெல்லாம் அவளுக்கு இல்லை ஏனெனில் ஏற்கனவே அவள் சி.ஏ படிக்க ஏற்பாடு செய்திருந்தாள் அல்லவா. தனது நுழைவுத் தேர்வுக்காக அயராது உழைத்துக்கொண்டு இருந்தாள். இதற்கிடையில் கனகவள்ளி தனது சொந்த ஊரில் திருவிழா என்றும் அதற்கு குடும்பமாக எல்லோரும் சென்று வரலாம் என்றும் கூறியிருக்க அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது.

மகிழ் தனது அக்காள் குடும்பத்தினர் அனைவரும் செல்வதற்கு கார் ஏற்பாடு செய்திருந்தான். அவனும் கனகவள்ளியும் பேருந்தில் முன்னாளே பயணம் செய்தனர்.

"டேய் மகிழ் நம்ம ஊர் திருவிழா ரொம்ப விசேஷமானது டா நல்லா வேண்டிக்க புரியுதா" என்று கனகவள்ளி சொல்ல அவனோ சிரித்துக்கொண்டே சரிமா நான் என்ன வேண்டிக்கபோறேனு உனக்கு தெரியாதா என்ன என்றான். மகாலட்சுமி குடும்பத்தினர் காரில் வந்து இறங்கினர்.

"ஸ்ஸப்பா அம்புட்டு தூரம் உக்காந்து வந்தது இடுப்பெல்லாம் வலிக்குது" என்று மகாலட்சுமி மாமியார் உரைக்க..

"வாங்க சம்மந்தி " என்று கனகவள்ளி கைகூப்பி அழைத்து அமரவைத்து அனைவருக்கும் காபி தயார் செய்து எடுத்து வந்து தந்தார்.

நீண்ட நாட்கள் பிறகு ஊருக்கு வந்ததால் வீட்டை சுற்றி முற்றி பார்த்தாள் நம் கதாநாயகி தமிழ்ச்செல்வி. நடை முதல் தாழ்வாரம் வரை எல்லாவற்றையும் ஒரு சுற்று நோட்டமிட எதிர்பாராத விதமாக மகிழ் மீது மோதிக்கொள்ள...

"அச்சோ...சாரி மாம்ஸ்" என்க அவனோ புன்னகையித்தபடி "இட்ஸ் ஓகே தமிழ்" என்றான்.

தமிழுக்கு மகிழிடம் பிடித்ததே இதுதான். இந்த புன்னகை மற்றும் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனோபாவம். திருவிழா முடியும் வரை மாமா மாமா என்றவாறு அவனை சுற்றிசுற்றி வந்தாள்.

அவள் அப்படி தன்னை சுற்றி சுற்றி வருவது பிடித்திருந்தது என்றாலும் மனதில் அதிகப்படியான கற்பனை எதுவும் வளர்த்துக்க வேண்டாமே என்று சற்று விலகியே இருந்தான். அந்த விலகல் கனகவள்ளியிற்கு புரியவில்லை என்பதனாலோ என்னவோ மகிழிடம்..

"மகிழ்... ஏன் டா நீ இப்படி இருக்க அவதான் உன்னை சுற்றி சுற்றி வராலே நீ ஏன் அவளை விட்டு விலகியே இருக்க..என்னதான் இருந்தாலும் அவ நீ கட்டிக்க போற பொண்ணு தானே டா" என்று கூற..

"மா...இப்பவே எல்லாத்தையும் முடிவு பண்ணிடாத அவள் என்கிட்ட பழகுறது எல்லாம் தாய்மாமன் உரிமையில். மற்றபடி வேற எந்த நினைப்பும் இல்லை அவளுக்கு" என்று கூற...கனகவள்ளி முகவாட்டத்தில்

"சரி விடு பார்த்துக்குவோம்" என்றபடி கடந்து செல்ல அன்று மாலை சாமி ஊர்வலம் நடைப்பெற்றது. கங்கையம்மன் வீதிஉலா வரும் தருணம். மக்கள் அனைவரும் ஊர்வலம் காண காத்துக்கிடந்தனர்.

நம் தமிழ்ச்செல்வி பாவாடை தாவணியில் தலைநிறைய பூவுடன் நின்றுகொண்டு இருக்க அதை வெகு அருகாமையில் நின்றவாறு ரசித்துக்கொண்டிருந்தான் மகிழ். மொத்த அழகும் மொத்தம் சேர்ந்து உருவாகிய சிற்ப சிலைபோல் இருந்தாள் அவள். எப்பொழுதும் பள்ளி சீறுடை அல்லது டாப் ஸ்கர்ட் அணிந்த அவளை கண்டவனுக்கு இன்று பாரம்பரிய உடையில் அவளை பார்த்தவுடன் என்னவோ போல் தோன்றியது.

'இவ்வளவு நாள் இந்த அழகை எங்கு ஒலித்துவைத்திருந்தாள்' என்று நினைத்தான் அவன். சொல்லப்போனால் அந்த நிமிடத்திலிருந்து அவளை தன் காதலியாக மேலும் இருமடங்கு காதலிக்க துவங்கினான் மகிழ்.

......

இரண்டு நாள் கழிந்தது..

திருவிழாவும் முடிந்துவிட்டது. வீட்டில் இருப்பது சற்று கடுப்பாக இருக்கவே தன் கைப்பேசி எடுத்து துலாவிக்கொண்டிருந்தாள் தமிழ் சட்டென்று அதில் பதிவு பண்ணியிருக்கும் கார்த்திக்கின் எண் இருக்கவே... 

அவனிடம் பேசலாம் என்று தோன்றியது அவளுக்கு . அவனிடமிருந்து நம்பரை வாங்கியதிலிருந்து இன்று வரை அழைப்பு விடுக்கவேயில்லை அதனால் ஏதோ ஓர் தயக்கம்...

"ஹலோ.." என்றான் எதிர்முனையில்.

"நான்.. தமிழ் பேசுறன்" என்றவுடன் கார்த்திக் முகம் மலர்ந்தது.

"ஏய் தமிழ் ஹவ் ஆர் யூ" என்று நலம் விசாரித்து இருவரும் பேசத்துவங்கினர். அவர்களின் படிப்பை பற்றி சிறிய உரையாடல்கள் நிகழ்ந்தன.... 

"கார்த்திக்... ஒருவருஷம் முன்னாடி என்கிட்ட எதையோ சொல்லனும் நினைச்சு விட்டுடிங்க...அது என்ன ஆக்சுவலி" என்றாள் அன்று சந்தித்ததை நினைவுக்கூர்ந்தபடி

"அது...அது வந்து ஒன்றுமில்லை தமிழ்" என்றான் கார்த்திக் தடுமாறி.

"இல்லை கார்த்திக் ஏதோ சொல்ல வந்தீங்க ஆனால் சொல்லாமல் போய்ட்டிங்க" என்க.. இதற்கு மேல் மறைக்க விரும்பாமல் 

"தமிழு நான் சொல்றது கேட்டு தயவு செய்து கோபப்படாத.. நீ இவ்வளவு தூரம் கேட்டதுனால் சொல்றேன். நான் ஆக்சுவலி உன்னை லவ் பண்றேன்." என்றதும் ஒரு நிமிடம் உறைந்து போனாள். 

"என்ன... வாட் யூ மீன்"

"ஆமாம் தமிழ்... ஸ்டில் இதை உன் கிட்ட சொல்ல முடியாது தவிச்சிட்டு இருந்தேன். ஒவ்வொரு நாளும் நீ கால் பண்ணுவ பேசுவனு நானும் எதிர்பார்த்துட்டே இருந்தேன். இன்னைக்கு நீ கால் பண்ணி சர்ப்ரைஸ் பண்ணிட்ட...." என்க அவளுக்கு அவளரியாமல் கண்கள் கலங்கின...

"ஏய்....தமிழ் ஆர் யூ தேர்" என்றான்

"ம்ம்ம்... கார்த்திக் ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாம் சரி வராது . உங்களுக்கு என்கிட்ட என்ன பிடிச்சதுனு எனக்கு தெரியல..இது மே பி அட்ராக்ஷன் கூட இருக்கலாம். " என்று கூற...அவனோ தயக்கமின்றி நேரடியாக கேட்டுவிட்டான்.

"ஏன் தமிழு நீ வேற யாரையாவது காதலிக்கிறியா" என்க அவளோ அதை மறுத்தப்படி...

"இல்லை கார்த்திக் நான் யாரையும் காதலிக்கல...இப்பவரைக்கும் எனக்கு படிக்கணும் பாடணும் அப்டிங்கிறது தவிர எந்த சிந்தனையும் எனக்கு வரவில்லை. ஒருவேளை வந்தால் பார்ப்போம்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள். அவனிடம் பேசியதிலிருந்து அவள் முகம் வாட்டமாக காணப்பட்டன...

நேரம் கடந்து செல்ல...

"இந்தா டி காபி" என்று கனகவள்ளி நீட்ட அதை வாங்கி பருகியவள் நேரே அமர்ந்திருந்த தனது மாமனை ஏறிட்டு பார்த்தவள். காபியை பருகியவாறு..

"ஏன் மாமா... இவ்வளவு நாள் உங்கள் பக்கத்துலேயே இருக்கேனே, என்னை அடிக்கடி பாக்குற வாய்ப்பு உனக்கு கிடைக்குதே அப்போ ஒருநாள் கூட என்மேல காதல் வரலையா மாம்ஸ்... நீ உண்மைலயே க்ரேட். ஆனால் இந்த கார்த்திக் சை....சொல்லவே கஷ்டமா இருக்கிறது" என்க என்ன நடந்தது என்பதை முழுவதும் சொல்லி முடித்தாள்.

இதையெல்லாம் காதுகொடுத்து கேட்டவன்.

"தமிழு அப்போ உனக்கு யார் மேலயும் விருப்பம் இல்லையா" என்று கேட்க...

"தெரியல மாமா...ஆனால் இப்ப ஏதைபற்றியும் நான் யோசிக்கவே இல்லை... நான் லைப்ல பெரியாளா வரணும் அதான் மாமா நான் ஆசைப்படுறன்" என்று சொல்லியவுடன். என்னவோ தெரியவில்லை அவளது பாவமான முகத்தை பார்த்தவுடன் என்னவோ ஆயிற்று அவனுக்கு அவளை ஆசுவாசப்படுத்தி..

"தமிழ் நீ எதுக்கு கவலைபடாத நீ ஆசைப்பட்ட மாதிரி பெரியாளா வர நான் துணை நிற்பேன்" என்று சொன்னவுடன் சிறுப்பிள்ளை போல் அவனை அணைத்துக் கொண்டவள். 

"ரொம்ப தாங்க்ஸ் மாமா.." என்றாள். தனது என்னவளின் ஆசையை நிறைவேற்ற தயாரானான் மகிழ். அவளை காதல் பார்வையில் பார்ப்பதை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு அவள் கனவு கடலில் தானும் நீச்சலடிக்க எத்தனித்தான்.

மனதில் காதலை புதைத்து கொண்டு செயல்படும் மகிழும். தன்னை முழுவதுமாக நிராகரித்து விட்டாளே என்ற தவிப்பில் இருக்கும் கார்த்திக்கும் அடுத்து என்ன செய்ய போறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You cannot copy content