மோனிஷா நாவல்கள்
Avalukaga avan-5
Quote from bhagyasivakumar on November 19, 2020, 11:04 PMஅன்று அழகான காலைப்பொழுது திருவிழா முடிந்து ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நேரம் அது. மொத்த குடும்பமும் ஒரே காரில் அடைந்து அமர்ந்திருந்தனர். ஆம் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் வரும் காட்சிப்போல.
"ஸ்ஸா...பாட்டி என்ன நீ இடிச்சிட்டு இருக்க" என்றாள் தமிழ்.
"ஏண்டி நீ ஒல்லிக்குச்சி மாதிரி இருக்க நாங்க உக்காந்தா உன் பக்கத்தில் அப்படித்தான் இருக்கும்" என்க அனைவரும் கொல்லென சிரித்துவிட...அவளது முறைமாமன் மகிழ் மட்டும் உம்மென்று முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு வந்தான். அவனுக்கு என்ன மனகஷ்டமோ வேறு என்ன இருக்க முடியும் வாசகர்களே அதான் நம் கதாநாயகி காதலுக்கு கருப்பு கொடியல்லவா காட்டியிருக்கிறாள்.
மகிழின் முகவாட்டத்தை யார் கவனித்தாரோ இல்லையோ நம் கதாநாயகி கவனிக்க தவறவில்லை.
கார் ஓர் தேநீர் கடையருகே நின்றது. எல்லோரும் தேநீர் சுவைக்க இறங்கினர்.
"மாமா...."என்றழைக்க அவளது அழைப்பில் சட்டென்று திரும்பியவனுக்கு அவள் என்ன கேட்க போகிறாள் என்று குழப்பம். எனினும் ஒரு சம்பரதாயம் புன்னகை சிந்தியவன் சொல்லு தமிழு என்றான்.
"மாமா எல்லாரும் சிரிச்சிட்டு சந்தோஷமா இருந்தாலும் நீ ஏன் டல்லா இருக்க எதாவது பிரச்சனையா" என்று கேட்க அதற்கு அவன் ஒன்றுமில்லை என்று தலையசைக்க அவள் அதை விடுவதாக இல்லை.
"மாம்ஸ் நீ எதையோ மறைக்கிற" என்றாள். அதற்கு அவனோ சிரித்துவிட்டு "அட போய் டீ சாப்பிடு டி தமிழு" என்க..
"என்னது...டி யா நான் என்ன உன் பொண்டாட்டி யா" என்று வம்பிழுக்க அப்படியே இந்த நிமிடம் அவள் சொன்னது நிறைவேறாதா என்ற ஏக்கம் அவன் மனதினுள் இருக்க அதை மறைத்துக்கொண்டு.
"ஹாஹா ஏன் என் அக்கா பொண்ணை டி சொன்னா தப்பா" என்று கேட்க...
"அதெல்லாம் கிடையாது டி சொன்னா அப்றம் பேசவே மாட்டேன்" என்று முகத்தை சுல்லென்று வைத்துக்கொண்டு சொல்ல அவளது கோபமான முகத்தை ரசித்தவன். அவளை சமாதானம் செய்து விட்டு அவளிடம் தேநீர் எடுத்து வந்து நீட்டினான்.
தேநீரை சுவைப்பது என்றால் நம் கதாநாயகியிற்கு அலாதியான பிரியம் தான் ஏனெனில் பெரும்பாலும் அவளது களைப்பை போக்குவது அவள் தாய் மகாலட்சுமி போட்டு தரும் அந்த இஞ்சி டீ தான்.
தாயின் கைவண்ணம் போல் அதே சுவையில் இருந்தது இந்த தேநீரும்.
"வாவ் டீ அட்டகாசம்" என்றபடி அவள் குழுவையை அங்கு இருக்கும் மேஜையில் டங்குனு வைக்க. அருகில் இருந்த குமரன்
"ஓய் என்ன இது என்ன நம்ப வீட்டு சிங்கா..டங்குனு வைக்கிற மெதுவா வை" என்று கிண்டலாக சொல்ல...
"ஈஈஈஈ" என்று பல்லைக்காட்டியவள் காரின் அருகில் சென்று ஏறிக்கொள்ள இந்த முறை எதர்ச்சையாக மகிழ் பக்கத்தில் அமரும் சூழ்நிலை.
"மாம்ஸ் உன் பக்கத்தில் உக்காந்தப்றம் தான் கம்பர்டா இருக்கிறது. இவ்வளவு நேரம் இந்த பாட்டி இடிச்சிட்டு வந்ததுல செம்ம கடுப்பு" என்க...அவன் அதைக்கேட்டு சிரித்தான் தன் முகதாடியை வருடியபடி.
இவர்கள் இருவரும் அருகாமையில் அமர்ந்திருப்பதை இம்முறை மகாலட்சுமி ரசிக்க துவங்கினாள்.
'ஜோடி பொறுத்தம் நல்லா தான் இருக்கிறது. ஆனால் அவளோட படிப்பு கனவு இதெல்லாம் நினைக்கிறப்ப வேண்டாம்னு தோன்றுது. ஆனால் என் மகள் என் தம்பியை கட்டிக்கிட்டா நல்லா தான் இருக்கும். பார்ப்போம்' என்று மனதினுள் வார்த்தையை அசைப்போட்டப்படி இருந்தாள்.
நாட்கள் உருண்டோடின.
.....
அடுத்த சூப்பர் சிங்கர் நீஙாகளாகவும் இருக்கலாம் வாருங்கள் ஆடிஷனில் கலந்துக்கொள்ளுங்கள் என்று பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பு நடந்துக்கொண்டிருக்க...
"ஆடிஷன் டேட் நாளைக்கு ம்ம்ம் போகவேண்டியது தான்" என்றபடி முடிவெடுத்து அவ்வாறே கிளம்பினாள்.
போகும் வழியில் பஸ் ப்ரேக் டவுன். ஆட்டோவில் செல்ல காத்துகிடக்க தற்செயலாக கார்த்திக் அவனுடைய இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருக்க..
"ஹே....தமிழு" என்று ஆசையாக அருகில் நிற்க..
"ப்ச்ச் என்ன இப்ப தமிழுக்கு பேசாமல் போங்க" என்றாள் கோபமான தோரணையில்.
"ஹலோ இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு. சரி என் லவ் நீங்க ஏத்துக்க எல்லாம் வேண்டாம் விடுங்கள் . இப்ப நீங்க எங்கே போகணும் சொன்னால் ட்ராப் தருவேன்" என்றான் தன் தோள்பட்டையை குலுக்கியபடி.
"மிஸ்டர் எனக்கு போகத்தெரியும் " என்றாள் கைகளை நீட்டியபடி,
"ஓ...சீனியர் கிட்ட கை நீட்டி பேசுற அளவுக்கு தைரியம் வந்துட்டு போல.." என்று நக்கலடிக்க...
"சீனியரா அது ஸ்கூலோட சரி" என்று முகத்தை சுளிக்க...
"சரி சரி இப்ப பைக்ல வருவீங்களா மாட்டிங்களா தமிழு" என்றழைக்க ஆபத்திற்கு பாவமில்லை என்பதுபோல் அவனது இருசக்கர பின்னிருக்கையில் அமர்ந்து அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தாள். ஆடிஷன் துவங்கியது.
அவள் மனதிற்கு எட்டியது அந்த பாடல்.
"தோழா...தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்" என்ற பாடலை ஷ்ருதி மாறாது அழகாய் பாடி முடிக்க நடுவரோ...க்ரீன் பஸர் அழுத்தி..
"யூ ஆர் செலக்டட்" என்றுரைக்க சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள் நம் கதாநாயகி. மேடை ஏறி பாடியதே அவளுக்கு அளவுக்கடந்த மகிழ்ச்சி.
வீட்டுக்கு வந்தவள் இந்த சந்தோஷமான செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள அன்று தான் முதன்முதலில் துரைசிங்கம் அவளுடைய பாடலை பாராட்டி.
"நல்லா பாடு டா செல்லம் இதே மாதிரி" என்று வாழ்த்த அவளுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி.
"அப்பாவே சொல்லிட்டாரு அப்றம் என்ன பாடிட வேண்டியது தான்" என்றாள் சிரித்தபடி . அடுதடுத்த ஆடிஷனில் எல்லாம் வென்றுக்கொண்டே வந்தாள். இதற்கிடையில் சி.ஏ அனுமதியும் கிடைத்துவிட படிப்பு ஒருபக்கம் பாட்டு ஒருபக்கம் என்று சதா எந்நேரமும் தன்னுடைய லட்சியத்தை அடைய போராடிக்கொண்டிருந்தாள்.
மகிழுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியும் கூட. ஒருபோதும் அவனுடைய காதல் அவள் லட்சியத்தை சிதைத்து விடக்கூடாது என்று கவனமாக இருந்தான். ஒருதலையாய் அவளை காதலித்துக்கொண்டிருந்தான் அவளை மனைவி என்ற ஸ்தானத்தில் வைத்தபடி.
அவளுடைய நிகழ்ச்சி எல்லாம் சேனலில் ஒளிபரப்ப அதையெல்லாம் விடாமல் பார்க்க துவங்கினான் கார்த்திக்.
"ப்ச்ச்... உன்னை மாதிரி ஒரு பொண்ணு யாருக்கு கிடைக்கும். நீ மட்டும் காதலை ஏத்துகிட்டா எவ்வளவு நல்லாருக்கும்' என்று மனதில் நினைத்தவன் அடுத்த நொடியே...
'இல்லை இல்லை.. நீ லவ் பண்ணலனாலும் பரவாயில்லை. என்கிட்ட ஒரு ப்ரண்டா சிரிச்சு பேசினா அதுவே போதும்' என்று முடிவுக்கு வந்தான்.
......
சிஏ வகுப்பில் அவளுக்கு நெருக்கமான தோழி "கவிதா" எப்போதும் கவி கவி என அவள் பின்னால் சுற்றினாள் நம் தமிழ். இருவரும் தங்களது நட்பை அழகாக பகிர்ந்து கொள்ள துவங்கினர்.
"ஏய் தமிழு கலக்குற டி சூப்பர் சிங்கர்ல" என்று கவி பாராட்ட
"நீ வேற கவி ஏதோ எனக்கு தெரிஞ்சத பாடுறேன்" என்றாள் சாதாரணமாக.
"அப்றம் சொல்லு தமிழு உன் மனசுக்கு பிடிச்சவங்க யாரு" என்க இந்த முறை இந்த கேள்வியிற்கு பதில் தெரியவில்லை. சற்று நிதானித்து.
"என் லைப்ல அந்த மாதிரி யாருமில்லை" என்று கூற.
"அப்போ உன் மனசுல யாரும் இல்லையா டி" என்று கேட்க.
அதற்கு உச்சுக்கொட்டியபடி யாரும் இல்லை என்று தலையசைத்தாள். அதைக்கேட்டு அவள் தோழி...
"ஏண்டி இந்த வயசுல விரும்பாமல் எந்த வயசுல விரும்பப்போற"என்று கேட்க.
"யார் சொன்னா நான் விரும்பலனு..நான் தான் விரும்புறேனே" என்று சொல்லி முடிக்கவும் வகுப்பு ஆரம்பம் ஆவதற்கும் சரியாக இருந்தது.
அவள் யாரை விரும்புகிறாள்?
அன்று அழகான காலைப்பொழுது திருவிழா முடிந்து ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நேரம் அது. மொத்த குடும்பமும் ஒரே காரில் அடைந்து அமர்ந்திருந்தனர். ஆம் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் வரும் காட்சிப்போல.