மோனிஷா நாவல்கள்
Avalukaga avan -7
Quote from bhagyasivakumar on November 26, 2020, 10:26 PM
வழக்கத்திற்கு மாற்றாக அன்று மகிழின் வீடு பரபரப்பாக இருப்பதை கவனித்தான். தன் தாயிடம் என்ன என்று கேட்க..
"டேய் மகிழு இன்னைக்கு நம்ப வீட்டுக்கு என் தம்பி குடும்பம் வரப்போகுது டா பெங்களளூரிலிருந்து" என்று வாயெல்லாம் பல்லாக சிரித்தவாறே கனகவள்ளி கூற..
"ஓ...என்னவாம் திடீரென" என்க..
"ஏன் உனக்கு என்ன பிரச்சனை" என்று வினவ அவனோ எதுவும் கூறாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். அவனுக்கு உண்மையில் மாமாவின் வருகையில் பிரச்சினை இல்லை ஆனால் மாமன் மகள் தர்ஷா தான் பிரச்சினை..
எந்நேரமும் மாடர்ன் ட்ரஸ் போட்டுக்கொண்டு மேனாமினிக்கிப்போல் தன்னை சுற்றி சுற்றி வருவாளே என்பது தான். தர்ஷா யார்? அப்படியென அவளைக்கண்டு பயப்படுகிறான். அப்படியே அவனை மயக்க நினைத்தாலும் தவறென்ன...வாசகர்கள் ஆகிய உங்களுக்கு தோன்றுகிறது அல்லவா கொஞ்சம் நேரம் ஆகட்டும் உங்களுக்கே புரியும்.
'பெங்களூரிலிருந்து சென்னை புரப்பட்ட ரயில் ஆறாம் ப்ளாட்பாரத்தை வந்தடைந்தது' என்று ஒலிக்கவும் ரயில் வந்து சேரவும் சரியாக இருந்தது. இறங்கிய பயணிகள் அனைவரும் தங்கள் பயணமூட்டையை சுமந்தபடி அங்கும் இங்கும் நடந்துக்கொண்டிருக்க ரயிலிலிருந்து இறங்கிய தர்ஷா கையில் ஒரு ஹேண்ட்பேக் மட்டும் சுமந்தபடி தனது ஜீன்ஸ் மட்டும் கருப்பு டீஷர்ட்டுடன் இறங்க....
"தர்ஷா சீக்கிரம் வா " என்று தாயின் குரலில்..
"இதோ வரேன் மாம்" என்று பதிலளித்துவிட்டு தனது கூலிங் க்ளாஸை அணிந்தபடி நடந்து வர. எதிரில் வந்த ஒரு இளைஞன்..
"மச்சி சூப்பர் பிகர்" என்று அருகில் இருந்தவனிடம் கிசுகிசுத்தான்.. அதனை எப்படியோ காதில் வாங்கியவள்..நேரே சென்று...
"ஹலோ மிஸ்டர்" என்க அவன் என்ன மேடம் என்று சொல்வதற்குள் அவளுடைய கை பளார் என்ற சத்தத்துடன் அவன் கன்னத்தை பதம் பார்த்தது. அவளை பிடித்து இழுத்துக்கொண்டு அவளுடைய பெற்றோர் ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தனர்.
"வா முருகேஷா..இப்பதான் அக்காளை பார்க்கணும் தோனிருக்குல" என்று கனகவள்ளி கேட்க..
"ஐயோ அப்படி எல்லாம் இல்லை கா கொஞ்சம் பிஸி வேலையில் அதான்". என்று சொல்ல... அதற்குள் தர்ஷா முந்திக்கொண்டு
"ஏன் அத்தை நீ வரவேண்டியதானே பெங்களூர் என்ன அமேரிக்கா பக்கத்துலயா இருக்கு" என்று நக்கலடிக்க...
"ஹாஹா.... ஏய் வாலு உன்னை" என்று கனகவள்ளி காதை திருக..
இப்படியே கலகலப்பான பேச்சுக்களோடு அன்றைய பொழுது கழிந்தது.மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து குளித்துமுடித்து மளிகைக்கடைக்கு செல்ல அவசர அவசரமாக காலை இரண்டு இட்லியை திணித்துவிட்டு கிளம்பிய மகிழை..
"மகிழ் மாம்ஸ் என்ன இது பொறுமையாக கிளம்புனா தான் என்ன ? கடை என்ன ஓடிரவா போகுது" என்றாள் தர்ஷா.
"இல்லை வந்து..." என்று தடுமாற அவள் விடுவதாக இல்லை மீண்டும் இரண்டு இட்லியை வைத்தவள் சாப்பிட்டு போ மாமா என்றவுடன் அதை மறுக்காமல் உண்டவன்.
"சரி கடைக்கு நேரமாகிடுச்சு கிளம்புறன்" என்று செல்ல இதை தூரத்தில் இருந்து கவனித்த கனகவள்ளி...
'இப்படி அக்கறையா பார்த்துக்க தான் அவனுக்கு ஒரு பொண்டாட்டி வேணும்னு பாக்குறேன். இந்த தமிழ்ச்செல்வி ஒத்துகிட்டா தானே' என்று பெருமூச்சு விட மகிழின் தலையெழுத்து எப்படியோ அப்படித்தான் நடக்கும் என்று உச்சுக்கொட்டியபடி நகர்ந்தார்.
மாமாவின் குடும்பம் வந்திருப்பது கேள்விபட்ட மகாலட்சுமி அவர்களை தன் வீட்டுக்கு மதிய விருந்துக்கு அழைத்திருந்தாள். அவர்களும் அவ்வாறே செல்ல....
"வாங்க வாங்க" என்று வரவேற்று அமரவைத்தாள்.
"ஹாய்... தமிழு" என்று ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள் தர்ஷா..
"ஹாய் தர்ஷா அக்கா" என்றாள் அணைத்தபடி. முறைப்படி தர்ஷா அவளுக்கு அத்தை என்றாலும் வயது வித்தியாசம் மூன்று வருடமே என்பதால் அக்கா என்று தான் அழைப்பாள்.
இருவரும் நீண்ட நாள் கழித்து சந்தித்து கொண்டதால் பரஸ்பர அன்பை பரிமாற்றம் செய்தனர்.
"அப்றம் தமிழு சி.ஏ கிளாஸஸ் எப்படி போகுது" என்று படிப்பை பற்றி ஆரம்பிக்க..
"நல்லா போகுது கா...நான் ஆசை பட்ட மாதிரி சி.ஏ ஜாயின் பண்ணி நல்லபடியா போகுது. ஆமாம் நீங்க என்ன பண்றீங்க"என்றாள் தமிழ்.
"நான் என்ன பண்ணப்போறேன் பி.காம் முடிச்சிட்டு வீட்டில் ஓபி அடிச்சிட்டு இருக்கேன்." என்று நகைக்க...தமிழும் சிறித்துவிட்டாள்.
"சரி போதும்... படிப்ஸ் பத்தி வா ஹாலுக்கு போலாம்" என்று இருவரும் ஹாலில் வந்தமற...பெரியவர்கள் ஏதோ கல்யாண பேச்சு எடுப்பது கவனித்தனர்
"தமிழுக்கு நல்ல வரன் இருந்தா சொல்லுங்கள் மாமா" என்று மகாலட்சுமி கூற...
"கவலைபடாத மகா கண்டிப்பாக சொல்றேன்" என்க..
"ஆமாம்... நம்ப தர்ஷாவுக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டிங்களா" என்று கேட்க முருகேஷனோ..."அட நீ வேற மகா , அந்த பேச்சு எடுத்தாலே வீட்டில் சண்டை தான்" என்றார் தர்ஷாவை பார்த்தப்படி.
"ஏன் தர்ஷா இப்படி ,கல்யாணம் பண்ணிக்க சீக்கிரம்" என்று மகா சொல்ல... தலையை மட்டும் அசைத்து இடத்தை விட்டு நகர்ந்தாள். தர்ஷா மனதில் என்ன இருக்கிறது யாருக்கு தெரியும். எப்படியோ நல்லபடியா அமைந்தால் சந்தோஷமே .
விருந்து தடபுடலாக இருந்தது வாழை இலையை பல பொறியல்கள் வருவல்கள் கொண்டு நிறப்பியிருக்க வந்தவர்கள் வயிறாற சாப்பிட்டு..
"மகா மாதிரி யாரும் சமைக்கவே முடியாது " என்று தர்ஷாவின் தாய் கூற..
"ஏன் மாமி நீங்களும் நல்லா தானே சமைக்கீறீங்க" என்றாள் மகா தன்னடக்கம் கொண்டு. வந்தவர்கள் அனைவரும் புறப்பட்டனர். உடன் தமிழும் சென்றாள்.
"மா அக்காவோட நானும் இருந்துட்டு வரனே" என்று கெஞ்சலாக கேட்கவே அவளை மகா அனுப்பி வைத்தாள். வீட்டில் தமிழ் இருப்பதை கண்டு மனமகிழ்ச்சி கொண்டான் மகிழ்.
'என்ன இந்த மாம்ஸ் தமிழை பார்த்தவுடன் பல்ப் மாதிரி பிரகாசமாக மூஞ்சியை வச்சிக்குது. ம்ம்ம்...' என்று அவளுக்குள் நினைக்க...
"தமிழு எப்படியிருக்க" என்றான் மகிழ்.
"நல்லாருக்கேன் மாமா...நீ எப்படியிருக்க".
"ம்ம்ம் இருக்கேன்". என்று பதிலளித்தவள் தனக்கு நடந்த பெண்பார்க்கும் சடங்கை பற்றி சொல்லி விவரித்தாள். பாட்டி சொன்ன ஐடியா சூப்பர் . பேசணும் என்று கூப்பிட்டேன் பட் தானா சண்டை முட்டிக்கிச்சு. என்று சொல்லி சிரித்தாள்.
"இதுக்கு தான் நான் கல்யாணமே வேண்டாம்னு இருக்கன்" என்றாள் அருகில் இருந்தபடி தர்ஷா..
"சரி நான் வரேன்" என்று மகிழ் இடத்தை விட்டு நகர...
"இந்த மாம்ஸ் நான் பேசினா மட்டும் விலகி விலகி போகுது. ஏதோ இருக்கு" என்று தமிழிடம் உரைக்க..
"அய்யே அக்கா நான் அடிக்கடி சந்திக்கிறதுனால என்கிட்ட மாமா உரிமையாக பேசுது. நீங்க எப்பயோ ஒருவாட்டி வரீங்க அதனால கொஞ்சம் தயக்கம் விடுங்க" என்றாள் எதார்த்தமாக.
"ஓ...அப்படி ம்ம்ம்" சரி வா நம்ப போய் வேலையை பார்ப்போம். என்று உள்ளே செல்ல... கனகவள்ளி அனைவருக்கும் தேநீர் தயாரித்து அம்மாடி தர்ஷா இந்த டீயை மகிழ் கிட்ட கொடுத்துட்டு வா என்றவுடன் சரி என்றவள் நேரே அவன் அறைக்கதவை தட்டி..
"மாமா இந்தாங்க டீ" என்று நீட்ட..அதனை வாங்கி கையில் ஏந்தியவன். அவளை ஒருகணம் பார்த்துவிட்டு.
"நீ குடிச்சியா டீ" என்று விசாரிக்க தர்ஷாவிற்கு என்ன ஓர் ஆச்சரியம்.
"மாம்ஸ் என்கிட்ட பேசலாம் செய்ற " என்றாள் கண்சிமிட்டியபடி. அவனும் பதிலுக்கு புன்னகையித்தான். இந்த புன்னகை இருவருக்கும் இடையே ஒரு பரஸ்பர நட்பை உருவாக்கியது.