You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Avalukaga avan 8

Quote

தர்ஷாவுக்கும் நம் மகிழிற்கும் இடையே ஒருவித அழகான நட்பு துவங்கியது. எனவே இது சரியான தருணம் என்பதால் தமிழ் மீது இருந்த காதலை பற்றி சொல்லிவிடுவோம் எனத்தோன்றியது.

 

அன்று ஊர் சுற்றி காட்டுகிறேன் என்ற பெயரில் தர்ஷாவை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான். அவர்கள் எங்கே செல்ல கிளம்பினார்கள் என்று அவர்களுக்கே புரியவில்லை ஆனால் தர்ஷாவிடம் மனம் விட்டு பேச ஓர் தனிமை தேவைப்பட்டது. வாசகர்களே தனிமை என நான் குறிப்பிட்டது வெறும் குடும்ப உறுப்பினர்கள் அற்ற ஓர் இடம் அவ்வளவே.

 

ஆம் வேறுவழியின்றி வழக்கமாக அவன் செல்லும் அந்த சாய்பாபா கோவிலுக்கே அழைத்து வந்தவன் தரிசனம் முடிந்து அமைதியாக சிறிது நேரம் இருவரும் அமர்ந்தனர்.

 

"மாமா நீங்க என்கிட்ட எதாவது சொல்லணும் நினைக்கிறீங்களா"? என்றாள் அவன் மனதை நன்கு புரிந்தவளாக.

"ஆமாம் தர்ஷா ஆனால் இது நீ எப்படி எடுத்துப்ப தெரியல இது உனக்கு கொஞ்சம் வருத்தமாக கூட இருக்கலாம் ஆனால் சொல்லியே ஆகணும்" என்றதும் அவனை கண்கொட்டாமல் பார்த்தாள். அவள் பார்வையில் ஒரு பதற்றம் தெரிந்தது.

"தர்ஷா....நான் நம்ப தமிழை விரும்புறேன்" என்று ஆரம்பிக்கும் போதே அவள் உடம்பெல்லாம் தெம்பற்று கிடப்பதை போல் பலவீனமானது . அவள் கண்களும் நீர் சூழ்ந்தவாறு தேங்கி நிற்க....

"த...ர்ஷா  ஆர் யூ ஓகே" என்று மகிழ் கேட்க...

"ஐயம் ஆல்ரைட்" என்று சொன்னவள் மேலும் அவனை பேசவிடாது தடுத்தவள்.

"மாமா நேரம் ஆகுது வாங்க போகலாம்" என்க...

"ஏய் இப்பதானே வந்தோம் இரு நான் கொஞ்சம் மனசு விட்டு பேசணும்" என்றதும்..

"வேண்டாம் மாமா எதுவும் பேசாதிங்க இதுக்கு மேல என்னால எதுவுமே கேக்கமுடியாது. ஏன்னா என் மனசுல உங்களை பற்றி ஏதேதோ கற்பனை பண்ணி வச்சிருந்தேன். ஆனால் இப்படி ஒரே நொடியில் எல்லாம் போச்சு. இப்ப என்ன நீ அவளை விரும்புற அவ்வளவு தானே?”

"தர்ஷா...ப்ளீஸ் எமோஷனல் ஆகாத " என்றதும். "மாமா வண்டி எடு வீட்டுக்கு போகணும்" என்றாள் திட்டவட்டமாக. அவளது பேச்சில் இருந்த அர்த்தம் அவனுக்கு புரிந்தது. வண்டியை அவளை அமர்த்திக்கொண்டு கிளம்பினான்.

வந்ததும் வராததுமாக தன் துணிமணிகள் அடுக்கியவள் தன் தந்தையிடம் "அப்பா நம்ப இப்பவே ஊருக்கு கிளம்பணும். பஸ் டிக்கெட் ஆன்லைன் ல புக் பண்ணிட்டேன்" என்றதும் அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

தமிழ் அவளருகே சென்று "அக்கா என்ன ஆச்சு திடிரென" என்று கேட்க..

"விடு டி போ..போய் வேலையை பாரு" என்று கடிந்துக்கொள்ள எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தனர். என்னமோ நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்ட தந்தை முருகேஷன்

"சரி கிளம்புவோம்" என்றபடி விடைபெற்று கொண்டனர். தான் மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் இன்னொருவளை காதலிப்பதாக சொல்லும் போது அந்த வலி மிகவும் கொடியது. அந்த வலியை தான் தற்போது அனுபவித்து கொண்டிருக்கிறாள் தர்ஷா..

பெங்களூர் வந்துவிட்டாள் தர்ஷா...இதையெல்லாம் மறக்க ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். ஆம் இதை விட மன ஆறுதல் வேறென்ன இருக்கமுடியும். வீட்டில் இருந்தால் வீணாக நடந்ததை நினைத்து அல்லவா துயரப்படக்கூடும். அத்தகைய சூழல் தனக்கு வேண்டாமே என்று வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய நினைவுகளை மறக்கச்செய்தாள்.

நாட்களும் மெல்ல கடந்துக்கொண்டே போனது. இதற்கிடையில் தான் அன்று தமிழும் கார்த்திக்கும் சந்தித்துக்கொண்டனர். இவர்கள் இருவருடைய சந்திப்பு கார்த்திக்கின் வீட்டிலேயே நடந்தது.

"என்ன கார்த்திக் என்னை வரசொல்லிட்டு நீங்க எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கீங்க" என்றாள் அவனை எதிர்நோக்கியபடி.

பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லாததால் மனம் விட்டு அவளிடம் பேசவே அவளை வீட்டுக்கு அழைத்திருந்தான் கார்த்திக்.

"இல்லை தமிழு , எனக்கு உன்கிட்ட மனசுல இருக்கிற எல்லாத்தையும் சொல்லணும் தோனுச்சு அதான் உன்னை இங்கே கூப்பிட்டேன்"என்க அவளோ அவனை எதிர்நோக்கியபடி

"அதான் எல்லாத்தையும் சொல்லியிருக்கீங்களே கார்த்திக் நீங்க என்னை விரும்புறதாக" என்றாள் விலுக்கென்று..

"அப்போ உன்னோட பதில் தான் என்ன? இன்னும் நீ எனக்கு பதில் சொல்லவேயில்லையே" என்றான் அவள் கண்களை பார்த்து ஆனால் அவளால் அவனது கண்களை எதிர்நோக்க முடியவில்லை.

"என்ன தமிழு எதுவுமே சொல்ல மாட்டேங்குற" என்றான் புருவத்தை உயர்த்தியபடி.

"எனக்கு என்ன பதில் சொல்றது தெரியலையே கார்த்திக். உங்கள் காதலை ஏத்துக்குற மனநிலை எனக்கு இல்லை. எனக்கு படிக்கணும் என்று ஆசை என்னோட படிப்புக்கு காதல் தடையாக இருக்கக்கூடாது" என்றாள் தனது மெல்லிய குரலில்.

"ஹாஹா ஸோ இது தான் உன் பிரச்சினை அம் ஐ ரைட்" என்றவுடன் ஆமாம் என்பது போல் தலையசைக்க..

"இங்கே பாரு தமிழு எனக்கு உன்னை பார்க்காத வரை யார் மேலயும் காதல் எல்லாம் வரவில்லை. வரவும் போறதே இல்லை இனி யார் மேலயும் உன்னை தவிர... ஆனால் உன்னோட சம்மதம் எனக்கு வேணும். இங்கே பாரு..." என்றபடி அவள் முகத்தை நிமிர்த்தி

"தமிழ், எனக்கு தேவை உன்னோட அன்பு அரவணைப்பு அவ்வளவு தான். இவ்வளவு பெரிய வீட்ல கிட்டத்தட்ட நான் அனாதை போலத்தான் இருக்கேன். அப்பா அம்மா இரண்டு பேருக்கும் என்கூட பேசக்கூட நேரமிருக்காது அவ்வளவு பிஸி...சொல்லப்போனால் நான் அன்புக்காக ஏங்குறேன். என்னோட இந்த தவிப்பை உன்னால மட்டும் தான் போக்கமுடியும். கண்டிப்பாக நம்ப காதல் உன்னோட படிப்புக்கும் லட்சியத்துக்கும் தடையாக இருக்காது" என்று சத்தியம் செய்ய இதற்கு மேலும் பதில் கூறாமல் இருந்தாள் உண்மைக்காதலை இழக்கக்கூடும் என்று...

"கார்த்திக் டோன்ட் வொரி இனி உங்களுக்கு எல்லாமே நான் தான்" என்று அவனது கைகளை இருகப்பற்றினாள்.

அன்று கார்த்திக்கின் மனது இறக்கை கட்டி பறந்தது ஏதோ நினைத்ததை அடைந்துவிட்டோம் என்ற மனநிறைவு. இந்த காதலை பற்றி தர்ஷாவிடம் சொல்லி பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்த தமிழ் அவளது கைப்பேசியிற்கு அழைப்பு விடுத்தாள்.

முதலில் அழைப்பை துண்டித்தவள் பிறகு எடுத்து "ஹலோ" என்று ஆரம்பிக்க..

"அக்கா....எப்படியிருக்க" என்றாள் நம் தமிழ்ச்செல்வி.

"ப்ச்ச் இங்கே பாரு அக்கானு கூப்பிடாத இனிமே கடுப்பா இருக்கு. முதல்ல விஷயம் என்ன சொல்லு எனக்கு நிறைய வேலை இருக்கு "என்று சொல்லவே ஒன்றும் புரியாதவளாய்

"சரி நான் அப்றம் பேசுறேன்" என்று அழைப்பை துண்டித்தாள்.  எப்போதும் தன்னிடம் பாசமாக பேசும் தர்ஷா இன்று கோபமாக பேசத்தான் என்ன காரணம். அன்று மகிழ் மாமாவும் தர்ஷாவும் தனியே சென்று வந்தபோது ஏதோ நடந்திருக்கிறது ஒருவேளை மகிழிடம் கேட்டால் புரியுமோ என்று தன் மாமன் மகிழை சந்தித்தாள்.

"மாம்ஸ்... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றவுடன்

"சொல்லு" என்க

"உனக்கும் தர்ஷா அக்காவுக்கும் அன்று என்ன பிரச்சனை. என்கிட்ட அவங்க கோபப்பட என்ன காரணம்" என்று கேட்டவுடன் அவன் முகம் வாடியது.

"இல்லை ஒன்றுமில்லை தமிழ் சாதாரண பிரச்சனை தான்" என்று ஒதுங்கி போனான் மகிழ்.

"ஓ...அப்போ இதுல நான் எங்கே சம்மதப்பட்டேன்" என்க 

"அது பற்றி எனக்கு என்ன தெரியும் தமிழு." என்று கேட்க..

"மாம்ஸ் நீ எதையோ மறைக்கிற" என்று அவனது தோளை திருப்பி கேட்க அவனது கண்கள் கலங்கியிருந்ததை உணர்ந்து கொண்டாள்.

அவன் மனதில் இருப்பதை அவளிடம் சொல்லிவிடுவானா. ? என்னவாகும் பார்ப்போம். 

 

 

 

You cannot copy content