You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Avinash Tony- நானும் நாவலும்

இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்
சிறப்பு
மிக சிறப்பு
Quote

வாழ்த்துக்கள் அவினாஷ் 

உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். 

உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.

 

Uploaded files:
  • th-6.jpg
Avinash Tony has reacted to this post.
Avinash Tony
Quote

நானும் நாவலும்

 

If the effects of drugs are characterized by paranoia, hallucination and euphoria, then books are the best drugs.

 

- Myself

 

          நானும் நாவலும்… இதைப் பார்த்தவுடன் எனது மனதில் தோன்றியது என்னவென்றால், நீண்டகால நண்பனுடைய தோழமையை மற்றவர்களுடன் பகிரக்கூடிய ஒரு சந்தர்ப்பம் என்பதுதான். வெறும் வார்த்தைகளுக்காக இல்லை, புத்தகம் என்னுடைய இணைபிரியா தோழர்தான்.

 

          மரத்திற்கு வேர் மிகவும் முக்கியமானது. அதுபோல, இந்தக் கதைக்கும் ஆரம்பமும் ஆழமும் முக்கியமானது. இந்த Disclaimer எதுக்குனா கதை என்னுடைய சின்ன வயசுல இருந்து ஆரம்பிக்க போகுது.

 

          எனக்குள் வாசிப்பு என்ற விதை தோன்றி, வளர காரணம் இரண்டு விஷயங்கள். முதலாவது, நான் படித்த பள்ளியில் வருடா வருடம் சுதந்திர தினத்தன்று Intra school competition நடத்தப்படும். பேச்சு, கட்டுரை, பாட்டு, ஓவியம் என்று அனைத்தும் தூள் பறக்கும். நமக்கு எப்போதுமே எழுத்தில் தான் திறமை வெளிப்படும்.

 

          இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வெற்றி பெறுவோர்க்கு showcase-ஐ அலங்கரிக்கும் கோப்பைகளையோ, வீட்டுக்குத் தேவைப்படும் பாத்திரங்களையோ தராமல், புத்தகங்களைத் தான் பரிசாகத் தருவர் (முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு கூட). விதை சிறிதாக இருந்தாலும், அதிலிருந்து உருவாகும் மரம் அப்படிப்பட்டதல்ல. அதுபோல்தான் இந்தப் பரிசுகளும். வருடத்திற்கு சராசரியாக நான்கு புத்தகங்கள் கிடைத்தாலும், பன்னிரண்டு வருடங்களாக, என்னை ஊக்குவித்த பழக்கம் இது. 

 

          இரண்டாவது மற்றும் அதி முக்கியமான காரணம், என் அண்ணன் தான். என்னை பொறுத்தவரை, ‘My Pioneer in Reading’ அவன் தான். என்னுடைய வாசிப்பை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்ற நபர். புத்தகங்களைப் பரிந்துரை செய்ததில் பெரும் பங்கு என் தமையனுக்கு தான். 

 

          ரொம்ப தூரம் வந்துட்டோம், மறுபடியும் கொஞ்சம் பின்னாடி போவோம். எங்க மாவட்டத்துல இருக்குற மத்திய நூலகத்துல வயது குறைவாக இருந்த காரணத்தால், என் அப்பாவோட பெயரில் கணக்கு தொடங்கினேன். அப்புறம் வீட்டுல இருக்குற நாலு பேரோட பெயரிலும் கணக்கு ஆரம்பித்து, அண்ணனுடன் போட்டிபோட்டு ஆளுக்கு இரண்டு புத்தகங்கள் எடுத்துக்குவோம்.

 

          அப்பவும், Enid Blyton-ஓட Mystery Series இல்லனா Hergé-ஓட The Adventures of Tintin Series மாதிரி புடிச்ச புத்தகங்களைப் பார்த்து, Quota தாண்டிடுச்சுனு தெரியும்போது, அதை ஹிந்தி/ சமஸ்கிருத புத்தகங்கள் இருக்கும் shelf-களில் மறைத்து வைத்து, அடுத்த முறை வரும்போது எடுப்பது எல்லாம் மலரும் நினைவுகள் தான்.

 

          பிறகு, R.K.Narayanan, Jules Verne, Robert Louis Stevenson, Mark Twain, Charles Dickens, H.G.Wells ஆகியோரின் Classics Edition மிகவும் பிடித்தமானது.   

 

          அடுத்த கட்டமாக படித்தது, கல்கியின் சிவகாமியின் சபதம். எட்டாம் வகுப்பில் புத்தகத்தின் அளவை பார்த்து, தினம் ஒரு பக்கமாக படிக்கலாம் என்று நினைத்து, பின் அவரது எளிய சொற்களால் கவரப்பட்டு, அடுத்தடுத்து படித்ததெல்லாம் மறக்கமுடியாதவை. சிவகாமியின் சபதத்தை விடவா பொன்னியின் செல்வன் நன்றாக இருக்கப் போகிறது என்று நினைத்து, அதை வாசிக்கத் தொடங்க, மறுபடியும் ஒரு விருந்துதான். ‘அலை ஓசை’ 1940-களுக்கே என்னை இழுத்துச் சென்று இரசிக்க வைத்த நாவல்.

  

          அதன்பிறகு கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு நாவல்களை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் நாவல்கள் பலவற்றை இணையத்தில் வாசிக்கத் தொடங்கினேன். எழுத்தாளர்களின் பெயர்களைக் கூற எனக்கும் ஆசைதான். ஆனால், அதுவே பெரிய வரிசை ஆகிவிடும். வித்தியாசமான களத்துடனும், நடையுடனும் எழுதப்படும் அனைத்துமே எனக்குப்  பிடித்தமான எழுத்துகள்தான்.

 

          ஆங்கிலத்தில் படித்த மற்ற பிடிச்ச புத்தகங்கள் Dan Brown-உடைய Single Day Adventure Series, J.K.Rowling-உடைய Harry Potter Series, Chetan Bhagat-உடைய புத்தகங்கள்( Revolution 2020- Most favourite ), Paul Coelho-வின் The Alchemist, Arthur Conan Doyle-வின் The Adventures of Sherlock Homes என்று நீண்டுக்கொண்டே செல்லும். William Shakespeare-உடைய Plays-ஐ Short form-இல் படித்திருந்தாலும், Long form-இலும் படிக்க ஆசை.

 

          சமீபத்தில் பழக்கமான எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களின் எழுத்துக்கள் என்னை சிறைபிடித்தன என்றே கூறலாம். அவருடைய கதைகளை பற்றிக் கூற வேண்டுமென்றால், தனி போஸ்ட்டே போடலாம். அவருடைய தெலுங்கு நாவல்களை ‘மொழிபெயர்ப்பு நூல்’ என்று தெரியாத அளவிற்கு, தமிழில் தந்த கௌரி கிருபாநந்தன் அவர்களுக்கும் நன்றிகள். ஏன்னா, நேக்கு தெலுங்கு வராது.

 

          விளையாடும் வயதில் ஆர்வமில்லை, ஆர்வம் வந்த போது, விளையாட ஆளில்லை. அப்போதெல்லாம், புத்தகமே துணை. முதலில் ஓய்வு நேரத்தில் படிக்க ஆரம்பித்து, பின்னர் உணவு உண்ணும் நேரத்தை கையகப்படுத்தி, இறுதியில் இரவு தூக்க மாத்திரை போட்டால் தான் தூக்கம் வரும் என்பது போல, சிறிது நேரம் ஏதாவது படித்தால்தான் தூக்கம் வரும் என்ற நிலையில் இருக்கிறேன்.

 

          இதற்கிடையில், Public exam-க்கு முதல் நாள் மனக்கட்டுப்பாட்டை சோதனை செய்ய ஒரு புது நாவலை எடுத்து முழுமூச்சாக படித்ததை நினைத்தால் இப்போது சிரிப்புதான் வருகிறது. சில நேரங்களில் அதில் addict ஆகி தவறுகள் செய்திருந்தாலும் வெறுக்க முடியாத பழக்கம் இந்த வாசிப்பு.

 

          கடந்த வருடம் பெற்ற ஒரு ஊக்கத்தினால் வாசிப்பின் மற்றொரு அடியை எடுத்து வைத்துள்ளேன் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு புத்தகத்தைப் படிக்கும்பொழுதும் ஒரு புதிய வாழ்க்கையை வாழ்வது போல இருக்கும். வாசிப்பில் நான் இன்றும் கற்றுக் கொண்டிருப்பது Perspective தான். ஒரு விஷயத்தில் நமது பார்வை மட்டுமல்லாது மற்றவரது பார்வையையும் அவரிடத்தில் இருந்து பார்க்க கற்றுக் கொண்டால் நிறைய பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

 

          இன்னும் நிறைய கூற பேராசைதான். ஆனால், போட்டியை நடத்துவோர் மனதில், ‘வார்த்தை எண்ணிக்கைக்கு Maximum limit வைத்திருக்கலாமோ ?’ என்று எண்ண வைக்க வேண்டாம் என்பதாலும், வாசிப்போரின் திட்டுக்கு பயந்தும், இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

 

          இறுதி வரை படித்த அனைவருக்கும், நன்றி! நன்றி! நன்றி!

 

வாசிப்பை நேசிப்போம் !

 

If reading is a hobby, then it is the emperor of hobbies.

 

- Myself

 

 

Uploaded files:
  • 1.jpg
  • 2.jpg
  • 3.jpg
Quote

கதை படிக்கிறதை கூட கதை மாதிரி சொல்ல உன்னால மட்டும் தான் முடியும். 

உன் வாசிப்பு அனுபவமும் உன் புத்தக தேர்வும் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. 

genius 

Avinash Tony has reacted to this post.
Avinash Tony
Quote

Library la book eduthu romba naal Achu . Olichu vaikrathu than svarasiyame...

monisha and Avinash Tony have reacted to this post.
monishaAvinash Tony
Quote
Quote from monisha on November 3, 2020, 9:24 PM

கதை படிக்கிறதை கூட கதை மாதிரி சொல்ல உன்னால மட்டும் தான் முடியும். 

உன் வாசிப்பு அனுபவமும் உன் புத்தக தேர்வும் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. 

genius 

Thanks a lot akka 😃😃😃

monisha has reacted to this post.
monisha
Quote

 

Quote from Aakashtony on November 3, 2020, 11:11 PM

Library la book eduthu romba naal Achu . Olichu vaikrathu than svarasiyame...

Yesssssssss 😎😎😎

monisha has reacted to this post.
monisha

You cannot copy content