மோனிஷா நாவல்கள்
En Iniya Pynthamizhe - 13
Quote from monisha on April 4, 2022, 9:43 AM13
குளிர் காய்ச்சல் வந்தவள் போல பைந்தமிழ் போர்வைக்குள் சுருண்டிருந்தாள். கண்களை இறுக மூடி தன்னைத்தானே நிலைப்படுத்திக் கொள்ள பெரும்பாடுப்பட்டுக் கொண்டிருந்தாள்.
ஆனால் அது அவளால் முடியவில்லை. அவளின் சிந்தை முழுவதும் அவனாகவே இருந்தானே!
அவனைத் தவிர்த்து வேறெதைப் பற்றியும் யோசிக்க முடியாத அளவுக்கு அவனிடத்தில் சிக்கிக் கொண்டு தவித்தது பெண்ணவள் மனம்!
தனக்கு அவன் செய்த அவமானத்தைக் கேவலத்தை எப்படி மறக்க முடிந்தது என்று எண்ணிய போதே அவள் மனசாட்சி அவளை காரி உமிழாத குறை!
சை! எப்படி அதனை மறந்தோம்… என்று திரும்ப திரும்ப அந்த நாளை நினைவுப்படுத்தி அவன் மீதான வெறுப்பைத் தக்கவைத்துக் கொள்ளத்தான் அவளும் பார்க்கிறாள். ஆனால் முடியவில்லையே!
அவனுடைய கம்பீரமான தோற்றத்திலும்! காந்தமான பார்வையிலும்! ரசனையான பேச்சிலும்! ஏன்… ஒவ்வொரு செய்கையிலும் அவன் அவளை வெகுஆழமாக வசீகரித்திருந்தான்.
அதுவும் இன்று அவனிடம் அவளுக்கு உண்டான தடுமாற்றம் போல வேறு எந்த ஆணிடமும் அவளுக்கு உண்டானதில்லை.
தான் ஏன் அவன் வீட்டிற்குச் சென்றோம். அவனிடம் அப்படியெல்லாம் பேசினோம். எல்லாவற்றிற்கும் மேலாக அவனிடம் கிறங்கி நின்றோம் என்று தன் செயலை எண்ணித் தானே கூனிக்குறுகினாள்.
கூடவே கூடாது… எந்த நிலையிலும் காதல் என்ற பைத்தியக்காரத்தனதிற்குள் தான் சிக்கிவிட கூடாது என்று தீர்க்கமாக எண்ணியவள் அவன் நினைப்பை ஓரங்கட்டிவிட்டு தன் பெற்றோரின் முகத்தைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தினாள். அவர்கள் தினம்தோறும் தங்களின் படிப்பு மற்றும் இதர தேவைக்காக படும் சிரமங்களை நினைத்துக் கொண்டாள்.
தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கும் பெற்றோரின் நம்பிக்கையை தான் ஒருபோதும் உடைத்துவிடவே கூடாது என்று அவள் உறுதியாக இருந்தாள்.
பாவம்! அவளுக்குத் தெரியாது.
இன்னும் ஒரு சில மணிநேரங்களில் இல்லை நிமிடங்களிலோ?
அவளே அவர்களின் மரியாதையையும் கௌரத்தையும் ஆழக் குழிதோண்டி புதைக்கப் போகிறாள் என்று! அதுவும் அவனுக்காக…
இப்படி அவள் தனக்குள்ளாகவே ஒரு மனபோராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் விளையாடிக் களைத்து வீட்டிற்குள் நுழைந்த அரசன் தொலைக்காட்சியை இயக்கிவிட்டு சேனலை தாறுமாறாக மாற்றிக் கொண்டிருந்தான். அப்போதிருந்த அவளின் மனநிலைக்கு அந்தச் சத்தம் பெரும் அபஸ்வரமாக ஒலித்தது
இது அரசனுடைய வேலைதான் என்று நன்கு அறிந்தவள் எரிச்சலோடு தம்பியிடம் எகிற வர, முகப்பறையில் யாருமில்லை. தொலைக்காட்சியை அப்படியே இயக்கத்தில் விட்டு அவன் வெளியே சென்று விட்டிருந்தான்.
போதாக்குறைக்கு எந்த சேனலையோ வைக்க எத்தனித்து அது வேறெதோ ஒரு சேனலில் ஓடிக்கொண்டிருந்தது.
படுஎரிச்சலோடு அதனை அணைக்கலாம் என்று அவள் முன்னேறிய போது அதில் ஒளிர்ந்த காட்சிகளைப் பார்த்து அவள் அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.
‘அறிந்து வந்தால் மோதல்… அறியாமல் வந்தால் காதல்’
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் காதல் வசனத்தைத் தொடர்ந்து தொடங்கியது அந்த பாடல்!
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்

அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்!
அவர் ரசித்து லயித்து நாயகியின் அழகை வர்ணித்து பாடிக் கொண்டிருக்க, அவள் மனம் நேராக அவன் நினைவில்தான் சென்று நின்றது.
“இது என்னங்க க்கா அதிசயம்… எம்.ஜி.ஆர்னாலே உங்களுக்குப் பிடிக்காது… அவரோட பாட்டு… படம் பார்த்தாலே அப்படி கத்துவீங்க… இப்ப என்னவோ அப்படி ரசிச்சு பார்த்துகிட்டு இருக்கீங்க” என்று அவள் பின்னோடு வந்து நின்ற அரசன் கேட்ட போதுதான் அவள் மூளைக்கு உரைத்தது.
அவள் தன்னையும் மறந்து அந்தப் பாடலை ரசித்துப் பார்த்திருந்ததை!
ஆனால் அவள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை எண்ணியா பார்த்தாள். பேச்சிக் கிழவியின் எம்.சி.ஆரை எண்ணி அல்லவா பார்த்திருந்தாள்!
அதுவும் அந்தப் பாட்டை கேட்டவுடன் அவன் தன் அழகை ரசித்து வர்ணித்த விதம்தான் அவள் நினைவுக்குள் வந்து நின்றன.
அவள் எந்தளவு அவன் நினைப்பை விட்டு வெளியே வர வேண்டுமென்று எண்ணுகிறாளோ அதைவிடவும் அதிகமாக அவனின் நினைப்பு அவளை ஆக்கிரமித்து கொள்ளத் தொடங்கியிருந்தது.
அரசனின் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அவனைத் தீவிரமாக முறைத்துவிட்டு அறைக்குள் வந்தவள், நேராக கண்ணாடியின் முன் நின்று தன் பிம்பத்தை உற்று நோக்க, அவளுக்கு உண்மையில் ஆச்சரியம்தான்!
அவனளவுக்கு தான் கூட தன்னை அப்படி ரசித்ததிருக்க மாட்டோம் போலவே என்று எண்ணம் தோன்ற அவள் பாதங்கள் காற்றில் மிதப்பது போன்ற உணர்வு! என்னதான் அவள் தப்பி ஓட முயன்றாலும் காதல் அவளுக்குள் புகுந்து ஆட்டிபடைக்கத் தொடங்கியது.
அவள் அவ்விதம் காதல் மயக்கத்திலிருக்க, சரியாக அந்தச் சமயத்தில் வீட்டின் வாயிலிலிருந்து ஒலித்தது சந்திரனின் குரல். அதுவும், “தமிழு” என்று திண்ணமாய் அவள் பெயரைக் குறிப்பிட்டு அவன் அழைத்ததில் அவள் பதறிவிட்டாள்.
அவள் எதற்கு வந்திருக்கிறானோ என்று அரண்டு போனவள் அப்படியே அடங்கி ஒடுங்கி கால்களை மடக்கிக் கொண்டு தரையில் அமர்ந்து கொண்டாள்.
அதுவும் தற்சமயம்தான் அவனைப் பார்க்கவே கூடாது என்று சங்கல்பம் எடுத்திருந்தாள். ஆனால் அந்த சங்கல்பத்தை சில நிமிடங்களிலேயே உடைக்கவென அவன் நேராக வீடு தேடி வந்துவிடுவான் என அவள் யோசித்து கூட பார்க்கவில்லை.
அதேநேரம் வாயிலில் நின்றிருந்த சந்திரனைப் பார்த்ததும் அரசனுக்கு அதீத எரிச்சல் மூள, “இவன் ஏனுங்க க்கா நம்ம வூட்டுக்கு வந்திருக்கான்… அதுவும் ஐயா கூட இல்லைங்க… போதாகுறைக்கு உங்க பேரை வேற கூப்புடுறான்” என்று சீற,
“ப்ளீஸ் அரசா… அவனை இங்கிருந்து எப்படியாச்சும் அனுப்பிவுடு” என்றவள் தம்பியிடம் கெஞ்சாத குறையாகக் கேட்டாள். ஆனால் அவள் அப்படி சொன்னது அவள் வாழ்கையைப் புரட்டி போடும் ஒரு பயங்கர பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்க கூடும் என்று அவள் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.
“நீங்க பயப்படாதீங்க க்கா… நான் அவனைத் துரத்திவுடுறேன்” என்று சீற்றத்தோடுச் சென்ற அந்த இளையவனுக்குத் தெரியாது.
‘அவனை அனுப்பிவிடு’ என்றவளின் வார்த்தையிலிருந்தது அவனிடமிருந்த பயம் இல்லை. காதல் என்று!
அதே கோபத்தோடு சந்திரன் முன்னே வந்து நின்றவன், அவன் தன் தமக்கைக்குத் தொல்லை கொடுக்கவே வந்திருக்கிறான் என்று எண்ணியிருந்தான்.
ஆனால் உண்மையில் சந்திரன் அங்கே வந்தது அவளிடம் மன்னிப்பு கோரதான்.
அவளிடம் தான் இன்று பேசியது முழுக்க முழுக்க அநாகரிகம் என்று உரைக்கவும்தான் அவளைத் தேடி அவன் அங்கே வந்தது. அதேநேரம் அவன் காரணமே இல்லாமல் வரவில்லை. அவள் தன் கைபேசியைத் திண்ணையில் மறந்து வைத்துவிட்டு வந்ததில் ஆச்சியை அவர் வீட்டில் விட்டுச் செல்ல வந்தவன் அந்தக் கைபேசியைக் கொடுத்துவிட்டு அவளிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று எண்ணியிருந்தான்.
ஆனால் அதற்குள் அரசன் அங்கே பெரிய களேபரத்தை நிகழ்த்திவிட்டிருந்தான்.
“இப்ப எதுக்கு நீ எங்க அக்காவைக் கூப்புடுற? திரும்பியும் பிரச்சனை பண்ண போறியா?” என்று சந்திரனை வாயிலிலேயே நிற்க வைத்து கோபமாக கத்த தொடங்கினான்.
“நான் எந்தப் பிரச்சனையையும் பண்ண வரல… தமிழை ஒரு நிமிஷம் கூப்பிடு… நான் பேசிட்டுப் போயிடுறேன்” என்றவன் நிதானமாகவே உரைத்த போதும் அரசனால் அத்தகைய நிதானத்தைக் கடைபிடிக்க முடியவில்லை.
“என்னடா? திரும்பவும் என்ற அக்காவுக்கு தொந்தரவு கொடுக்க வந்திருக்கியா?” என்றவன் ஆவேசமாக,
“அதெல்லாம் இல்ல… நான் ஒன்ற அக்காகிட்ட ஒரு இரண்டு வார்த்தை பேசோணோம்… அம்புட்டுதான்” என்றவன் மேலும் அவனிடம் வம்பு வளர்க்க விரும்பாமல், “தமிழு வெளியே வா” என்று அழைத்தான்.
அந்த அழைப்பைக் கேட்ட போதும் அவள் வெளியே வர முயற்சிக்கவில்லை. அவனை மீண்டும் சந்தித்தால் தன் உணர்வுகள் கட்டவிழ்த்து கொள்ளுமே என்ற பயம்! அவன் மீதான ஈர்ப்பு அவளை மொத்தமாக மூழ்கடித்து விடுமோ என்ற தவிப்பு!
அவள் இத்தகைய மனநிலையில் கிடக்க சந்திரனுக்கு அவள் தன் மீது கோபத்திலிருக்கிறாளோ என்ற கவலை!
“தமிழ் ஒரே நிமிஷம் உன்கிட்ட பேசோணோம் வெளியே வா” என்று மீண்டும் அவன் அழைக்க,
அரசன் நிலைமை புரியாமல், “என்ற அக்கா பேரை நீ கூப்பிடாதே” என்று உக்கிரத்தோடு அவன் சட்டையைப் பிடித்து உலுக்கத் தொடங்கினான்.
அப்போது அந்தக் காட்சியைப் பார்த்த பரிமளம், “டே அரசா என்ன பண்ற?” என்று பதறிக் கொண்டு வந்தாள். சந்திரனுக்கு அவனை விலக்கித் தள்ளுவது பெரிய விஷயமில்லை எனினும் சிறுவனிடம் தன் பலத்தைக் காட்ட வேண்டுமா என்று யோசித்து,
“சட்டையிலிருந்து கையை எடு” என்று வார்த்தையளவில் அவனை எச்சரித்தான்.
“மாட்டேன் டா” என்று அரசன் பலமாக உலுக்கியதில் சந்திரனின் சட்டையின் பொத்தான்கள் அறுந்து விழவும் அவன் இடது மார்பிலிருந்த பைந்தமிழ் என்ற பெயர் அரசன் கண்களுக்குத் தென்பட்டுவிட்டது.
தன் தமக்கையின் பெயரை அவன் பச்சை குத்தியிருப்பதைப் பார்த்த நொடி அவன் அதிர்ந்தே போனான்.
“நீ எதுக்குடா என்ற அக்காவோட பேரைப் பச்ச குத்தி வைச்சு இருக்க?”
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும் என்பது போல வீட்டு வாயிலில் நின்று கொண்டு அரசன் அவ்வாறு உரக்க கேட்டு வைத்தது அங்கிருந்த பரிமளம் சித்தியின் காதில் தெள்ளத்தெளிவாக விழுந்தது.
அவள் மீதான கண்மூடித்தனமான காதலில் அவன் விளையாட்டாக விதைத்த வினை அன்று பெரும் விபரீதமாக முடிந்திருந்தது.
13

Quote from Marli malkhan on May 17, 2024, 12:14 AMSuper ma
Super ma