மோனிஷா நாவல்கள்
En Iniya Pynthamizhe - 14
Quote from monisha on April 5, 2022, 10:34 AM14
“டேய்ய்யியி” என்று சந்திரன் ஆவேசமாக அரசனை இழுத்து தள்ளிவிட்டு தன் சட்டையைச் சரி செய்து கொண்டான்.
அவன் தள்ளிய வேகத்தில் அரசன் பின்னுக்கு சென்று விழுந்த சமயத்தில் தமிழ் தன் வீட்டு வாயிலுக்குப் பதறியடித்து கொண்டு வந்து நின்றாள். அரசன் சொன்ன வார்த்தை அவளுக்கு உள்ளே வரை கேட்டிருந்தது.
எதுவும் பிரச்சனை வந்துவிட போகிறதோ என்று அவள் அஞ்சி வெளியே வருவதற்குள் எல்லாம் அவள் கையை மீறிப் போய்விட்டது.
“அக்கா” என்று அரசன் தன் கைகளை உதறிக் கொண்டு எழுந்து நின்று,
“பாருங்க க்கா அவன் என்னைத் தள்ளி வுட்டுப் போட்டான்” என்று கவலை கொள்ள,
“அவனாவாது தள்ளிதான் வுட்டான்… இப்ப நான் இருக்க கோபத்துக்கு உன்னை வைச்சு விளாசிப் போடுவான்… ஒழுங்கா உள்ளார போயிடு… சொல்லிட்டேன்” என்று பொரிந்து தள்ளினாள்.
“நான் என்னங்க க்கா பண்ணேன்… அவன்தான்”
“என்ற கிட்ட அடி வாங்காம ஒழுங்கா உள்ளர போயிடு” என்று அவள் சீறியதில் அரசன் தான் அப்படி என்ன செய்துவிட்டோம் என்ற யோசனையோடு உள்ளே சென்றுவிட்டான்.
ஆனால் பிரச்சனை அதோடு முடியவில்லை. அப்போதுதான் தொடங்கியிருந்தது.
அவள் வீட்டு வாயிலில் அந்த சில விநாடிகளுக்குள் பெரிய கூட்டமே கூடியிருந்தது. அந்தத் தெருவில் வசிக்கும் முக்கால்வாசி பேர் அவளுடைய சொந்த பந்தங்கள். அதுவும் எல்லோருமே அக்கா சித்தி அத்தை என்று நெருங்கிய உறவு முறைகள்தான்!
அவர்களுள் பரிமளம் ஒரு ஆல் இந்தியா ரேடியோ! அவர் தற்போது நடந்த விஷயத்தை எல்லோரிடமும் பரப்பிக் கொண்டிருக்க,
“இது என்னடி கொள்ளையா இருக்கு… நிசமாவா சொல்ற” என்று ஏதோ சர்வதேச ரகசியத்தைக் கண்டறிந்தது போல ஆச்சரியமும் அதிசயமும் கொண்டனர் அங்கே குழுமியிருந்தப் பெண்கள்.
அதுவும் அவர்கள் எல்லோரும் சந்திரனைப் போக விடாமல் வழிமறித்துக் கொண்டு அவனைக் கேள்வி மேல் கேள்விக் கேட்டுக் குடைய, அவனும் எப்படி எப்படியோ அந்தப் பெண்கள் கூட்டத்தை சமாளித்துவிட்டு தப்பி ஓடிவிட பார்த்தான்.
ஆனால் அதற்கான சிறு சந்தர்ப்பத்தைக் கூட அவர்கள் அவனுக்குத் தருவதாக இல்லை.
இதில் பரிமளம் வேறு அவனிடம் தீவிரமாக, “என்ன மறைக்குற நீ? இதெல்லாம் எப்போதுல இருந்து” என்று விசாரிக்க இந்தக் காட்சியைப் பார்த்த தமிழுக்கு இந்தப் பிரச்சனை எங்கே போய் முடியுமோ என்று தலை கிறுகிறுத்தது.
சந்திரனிடம் அங்கிருந்து போகும்படி அவள் ரகசியமாகக் கையசைக்க அவனும் அதற்கான முயற்சிகளில்தான் இருந்தான்.
பரிமளித்திடம், “அதெல்லாம் ஒன்னும் மறைக்கலங்க க்கா… நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் எதுவும் இல்லைங்க… என்னை விடுங்க க்கா… நான் போகோணோம்… நிறைய வேலை கிடக்கு” என்று சொல்லித் தப்பிக் கொள்ள பார்க்க,
“நீ எதையும் மறைக்கல இல்ல… புறவு என்ன? ஒன்ற சட்டையை விலக்கிக் காட்டு” என்ற பரிமளத்தின் வார்த்தையில் தமிழ் விதிர்விதிர்த்து போனாள் என்றால் சந்திரன் அதிர்ந்து நின்றான்.
“அதானே…. ஒன்னும் இல்லன்னா விலக்கிக் காட்டிட்டுப் போவேன்… ஏன் பொட்ட புள்ள மாதிரி இப்படி வெட்கப்பட்டுட்டு நிற்குறவன்?” அங்கிருந்து பெண்கள் எல்லாம் நிலைமை புரியாமல் அவனைக் கிண்டல் செய்து கடுப்பேற்றினர்.
“ஏன்? பொட்ட புள்ளைங்களுக்கு மட்டும்தான் வெட்கமா? ஆம்பளைங்களுக்கு கிடையாதாக்கும்… சின்ன பையன் சொன்னதைப் போய் பெருசாக்கிட்டு… அவன் ஏதோ ஒளறான்… போய் அவங்க அவங்க ஊட்டு வேலைய பாருங்க… அடுத்தவன் வூட்ல என்ன பிரச்சனை நடக்குதுன்னு பார்க்கிறதுதான் உங்க எல்லோருக்கும் வேலையாக்கும்” என்றவன் கோபம் கொள்வது போல அந்தக் கூட்டத்திலிருந்து தப்பிவிட பார்த்தான்.
ஆனால் அவனுக்கு அன்று நேரம் சரியில்லை போல. பைக்கில் அந்த வழியே சென்ற சங்கரன் அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து என்னவென்று விசாரிக்க, நிலைமை இன்னும் மோசமானது.
தமிழ் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் தன்னறைக்குள் போய் முடங்கிவிட்டாள். பரிமளம் சங்கரனிடம் விஷயத்தைச் சொல்ல, “என்னடா சந்திரா… அக்கா சொல்றது எல்லாம் நிசமா?” என்று விசாரிக்க,
பரிமளம் எக்காளமாக, “இப்போ காட்டுவே… உனக்கு பொம்பளைங்கல கண்டாதானேவே வெட்கம்” என்று சொல்ல அவன் முகம் இருளடர்ந்து போனது.
சங்கரன் அவனைக் கூர்மையாக அளவெடுக்க, “என்னடா? அவங்க சொல்றதெல்லாம் நிசம்தானா… சொல்லு” என்று அழுத்திக் கேட்டார்.
சகுந்தலாவின் சித்தப்பா மகன்தான் சங்கரன். தமிழ் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் வேறு. சந்திரனுக்கு வேறு வழியே இருக்கவில்லை. சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என்று தோன்ற,
அவரிடம் மெல்லிய குரலில், “நான் உங்ககிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிடுறேனுங்க… அதுக்கு முன்னாடி இங்கன இருக்க கூட்டத்தைக் கலைச்சு வுடுங்க” என்று வேண்டுகோளாகக் கேட்டுக் கொண்டான்.
சந்திரன் சொல்வது சரியென்று படவே சங்கரன் பரிமளத்தை தவிர எல்லோரையும் அனுப்பிவிட்டார்.
எல்லோரும் சந்திரனுக்கும் தமிழுக்கும் இடையில் என்ன இருக்கும் என்று புரளி பேசிக் கொண்டே களைந்து செல்ல, அதன் பின் சங்கரன் பொறுமையாக சந்திரனிடம் விசாரிக்க, நடந்த அனைத்தையும் அவரிடம் விவரமாக உரைத்தான்.
“சத்தியமா இதுல தமிழுக்கு எந்த சம்பந்தமுமில்லைங்க… நான் ஏதோ புத்திக்கெட்டத்தனமா மூணு வருஷத்துக்கு முன்னே இப்படி பச்ச குத்திக்கிட்டேனுங்க… தமிழுக்கு இந்த விசயம் கூட தெரியாதுங்க” என்றான்.
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பரிமளமோ, “வித்தாரகள்ளி விறகொடிக்க போனாலும் கத்தாழ முள்ளு கொத்தோட ஏறிக்கிச்சாம்… யாருகிட்ட கதை வுடுற” என்றவர் அவனை நம்பாமல் நீட்டி மொழங்க,
“இல்லைங்க க்கா… நான் சொல்றது அம்புட்டும் உண்மை.. தமிழுக்கு இதுல எந்தவித சம்பந்தமில்லைங்க… தப்பெல்லாம் என்ற பேர்லதானுங்க… நீங்க என்ன தண்டனை கொடுக்கிறதா இருந்தாலும் அது எனக்கு கொடுங்க” என்று அவன் இறங்கிக் கேட்டுக் கொண்டான்.
சாளரம் வழியாக அவன் கெஞ்சிக் கொண்டிருந்ததைப் பார்த்த தமிழ் உள்ளம் கலங்கி போனாள்.
“இதுல நாங்க செய்ய ஒன்னும் இல்ல… பெத்தவங்கதான் முடிவு பண்ணனோம்” என்று சங்கரன் சொல்ல சந்திரனுக்கு அதற்கு மேல் என்ன செய்வதென்றே புரியவில்லை.
அப்போதுதான் அவர் சந்தேகமாக அவனைப் பார்த்து, “அது சரி… நீ எதுக்கு இப்போ இங்கன வந்த… அதுவும் அந்தப் புள்ளைய பேர் சொல்லி கூப்பிட்டு இருக்க” என்று கேட்க அவன் பதிலின்றி நின்றான்.
அவள் தன் வீட்டிற்கு வந்ததையும் அவளுடைய கைப்பேசி தன்னிடம் இருப்பதையும் சொன்னால் அதை எப்படி எடுத்து கொள்வாரோ என்ற அச்சத்தில் அவன் மௌனமாக நிற்க,
“நீ வாயை மூடிக்கிட்டு நிற்குறதைப் பார்த்தா ஏதோ சரியில்லையே” என்று பரிமளம் இடைபுகுந்து தன் கற்பனைகளை அள்ளித் தெளிக்க.
சங்கரன் அப்போது கைப்பேசி மூலமாக மதுசூதனனிடம் விஷயத்தைத் தெரியப்படுத்திவிட்டார்.
“வேணாமுங்க… இந்த விசயத்தைப் பெருசாக்காதீங்க” என்று சந்திரன் எவ்வளவோ கெஞ்சியும் ஒன்றும் பலனில்லை. அதற்குள் சந்தையிலிருந்து திரும்பிய சகுந்தலாவிடம் பரிமளம் நடந்த முழுக்கதையையும் விவரிக்க,
“நிச்சயமா என்ற பொண்ணுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்காது… இந்த களவாணி பயபுள்ளதான் அவ ஸ்கூல் படிக்குற காலத்திலேயே அவ பின்னாடி சுத்திகிட்டுக் கிடந்தான்” என்று அவர் மகளைத் திடமாக நம்பியதில் சந்திரனுக்கு நிம்மதியாகதான் இருந்தது.
ஆனால் பரிமளம் சகுந்தலாவைத் தனியாக அழைத்துச் சென்று, “சோழியும் குடுமியும் சும்மா ஆடுமாக்கும்… எதுக்கும் நீ தமிழைப் போய் ஒரு வார்த்தை கேளு… அப்படி அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமில்லைனு சொல்லிட்டா… இந்தப் பயலை வெட்டிக் கூறு போட்டுடலாம்” என, சகுந்தலாவின் மனம் அடித்துக் கொண்டது.
இருப்பினும் மகள் மீதான நம்பிக்கையை அவர் விட்டுக் கொடுத்துவிடவில்லை. அவள் இப்படியெல்லாம் ஒரு காரியத்தை செய்ய என்ன? மனதால் நினைக்க கூட மாட்டாள் என்று தீர்க்கமாக நம்பினார்.
ஆதலால் கணவர் வரும் வரை அவர் மேலும் அந்தப் பிரச்சனையைப் பேசிப் பெரிது பண்ண விரும்பவில்லை. தமிழிடமும் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.
மதுசூதனன் வீட்டை அடைந்த மறுகணம் நேராக வந்த சந்திரனின் மார்பில் பச்சை குத்தியிருந்த தன் மகளின் பெயரைப் பாரத்து அதிர்ந்து போனார்.
“நான் உனக்கு அப்படி என்ன கெடுதல் பண்ணிப் போட்டேன்… ஏன்டா இப்படி ஒரு காரியத்தைப் பண்ண… சொந்தம் பந்தம் யாருமில்லாம இருக்கியேன்னு ஒன்ற மேல நான் இரக்கப்பட்டனே… அதுக்கு எனக்கும் என் குடும்பத்துக்கும் நீ செஞ்ச கைமாறா டா இது” அவர் கொந்தளிப்போடு கேட்ட கேள்வியில் சந்திரனுக்கு உயிரே போனது.
அவனால் எதுவுமே பேச முடியவில்லை.
பிரச்சனை மேலும் பூதகாரமாக வெடிக்கத் தொடங்கியது. சந்திரனுடன் எப்போதும் நெருக்கமாக இருக்கும் கண்ணனை அழைத்து விசாரித்தனர். இது பற்றி அவனுக்குத் தெரியுமா என்று?
தெரியாது என்று சொன்னவன் மேலும் ஆச்சியை அழைத்து கொண்டு தமிழ் அவன் வீட்டுக்குப் போன விஷயத்தைச் சொல்லிவிட, அத்தனை நேரம் சகுந்தலா மகள் மீது கொண்டிருந்த நம்பிக்கை லேசாக தளரத் தொடங்கியது.
அதற்கும் மேலாக தமிழின் கைப்பேசி சந்திரனிடமிருந்த விஷயமும் தெரிந்து போக, அவர்களின் சந்தேகம் இன்னும் வலு பெறத் தொடங்கியது.
பரிமளம் சொல்வது போல இதில் தமிழுக்கும் கூட சம்பந்தம் இருக்குமோ என்றவர்கள் சிந்தனை செய்ய, சகுந்தலா அரசனை அழைத்து விசாரித்தார்.
“இந்த பிரச்சனை பெருசாகாம காப்பாத்து கருப்பா” என்று தன்னறைக்குள் இருந்தபடி தீவிரமாக வேண்டிக் கொண்டிருந்தாள் தமிழ். ஆனால் கருப்பனுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை போல.
அந்தப் பிரச்சனை மேலும் மேலும் வளர்ந்து கொண்டேதான் போனது.
அரசனை சகுந்தலா உலுக்கி எடுத்ததில் சற்றே மிரண்டவன் நான்கு வருடம் முன்பு நடந்த சம்பவத்தை மொத்தமாக உளறி வைத்துவிட. பிரச்சனை அதிதீவிரமாக மாறியிருந்தது.
செல்வி வேண்டாமென்று எவ்வளவோ கையசைத்தும் அரசன் அவளைக் கவனியாமல் அந்த விஷயத்தைப் போட்டு உடைத்துவிட அவள் பதறியடித்து கொண்டு தன் தமக்கையிடம் வந்து,
“அக்கா… அரசன் எல்லாத்தையும் உளறிப் போட்டானுங்க க்கா” என்றாள்.
“என்னத்தடி உளறுனா? தெளிவா சொல்லு”
“அன்னைக்கு கருப்பன் கோவில நடந்த சம்பவத்தைச் சொல்லிப் போட்டானுங்க க்கா” என்று செல்வி சொல்ல தமிழ் நடுங்கிப் போனாள்.
“எல்லாம் போச்சு… என்ன நடக்க போகுதோ?” என்று செல்வி படபடக்க, தமிழின் சிந்தனையில் ஒரே ஒரு விஷயம்தான் சுழன்றது. அது சந்திரன்தான்!
“ஐயோ! சந்திரனை அடிச்சே கொன்னு போடுவாங்களேடி”
“என்னங்க க்கா நீங்க… நான் உங்களுக்காக கவலை படுறேன்… நீங்க என்னடான்னா போயும் போயும் அந்த தருதலை பயலுக்காக கவலை படுறீங்க” என்று செல்வி கடுப்பாக, அவள் பேசுவதை ஒரு பொருட்டாக கூட மதியாமல் தமிழ் எழுந்து ஓடினாள்.
அவள் நினைத்தது போல்தான் நடந்து கொண்டிருந்தது. சந்திரனை வீட்டின் தோட்டத்தில் வைத்து அடித்து வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தனர்.
“உனக்கு எம்புட்டு ஏத்தம் இருந்தா எங்கப் பொண்ணு மேல கை வைச்சிருப்ப” என்று சங்கரனும் மதுசூதனனும் வெறிக்கொண்டு அவனைத் தாக்க,
“அவனை விட கூடாது… கொன்னு போடோணோம்” என்று சகுந்தலா சீறிக் கொண்டிருந்தார்.
அப்போது தமிழ் வெளியே வந்து நின்றதைப் பார்த்தவர், “ஏன் டி இந்த விசயத்தை முன்னாடியே சொல்லல… சொல்லி இருந்தா அப்பவே அவனை வெட்டி கூறு போட்டிருக்கலாம் இல்ல” என்று எரிமலையாகப் பொங்கிய தாயிடம் என்ன சொல்வது? எப்படி சொல்வது என்று புரியாமல் ஊமையாக நின்றுவிட்டாள்.
அவன் இப்படி அடி வாங்குவதை ஒரு மூன்று வருடம் முன்பாக பார்த்திருந்தால் அவள் சந்தோஷத்தில் மிதந்திருப்பாள்தான். ஆனால் இப்போது முடியவில்லை. அவள் உள்ளம் தவித்தது.
அவர்கள் கிராமத்தில் உள்ளவர்கள் எதை வேண்டுமானலும் மன்னிப்பார்கள். ஆனால் வீட்டிலுள்ள பெண்கள் மீது கை வைத்தால் அவனைக் கொன்று போடவும் தயங்க மாட்டார்கள்.
அத்தகைய வெறி அவள் தந்தையிடம் அப்போது இருந்தது. இந்தச் சூழ்நிலையில் அவர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றி அழைத்து போகவோ அல்லது அவன் சார்பாக பேசவோ கூட அவனுக்கு யாருமில்லையே என்று யோசித்த போது அவள் உள்ளம் துடித்தது அவனுக்காக!
“ம்மா வேண்டாமுங்கம்மா… விட்டுர சொல்லுங்க ம்மா” என்ற தமிழின் கெஞ்சலை சகுந்தலா காதில் வாங்கவேயில்லை.
“அவன் செஞ்சதுக்கு இதெல்லாம் பத்தாது”
அப்போது அவனைக் காப்பாற்ற தமிழின் மூளைக்கு ஒரு உபாயம் தோன்றியது. அது மிகவும் விபரீதமானது என்று தெரிந்த போதும் அதை விட்டால் அவளுக்கு அவனைக் காப்பாற்ற வேறுவழியும் இருக்கவில்லை.
அந்த நொடியே அவள், “அடிக்குறதை செத்த நிறுத்துறீங்களா?” என்று கத்திவிட, அடிப்பதை நிறுத்திவிட்டு மதுசூதனனும் சங்கரனும் அவள் குரல் வந்த திசையில் திரும்பினர்.
“நீ பேசாம உள்ளற போடி” என்று சகுந்தலா மகளை அடக்க, அவளால் அவனை அந்த நிலைமையில் அப்படியே விட்டுப் போக முடியவில்லை.
“போக முடியாது… இந்த விசயத்துல நானும் சம்பந்தப்பட்டு இருக்கேன்… இதுல என்ற தப்பும் இருக்கு” என்றவள் சொன்ன நொடி சகுந்தலாவின் முகம் இருளடர்ந்து போனது.
“என்னடி சொல்ற… தெளிவா சொல்லு” என்றவர் மகளை உலுக்கி எடுக்க,
“என்ற சம்மதமில்லாம எதுவுமே நடக்கலீங்கம்மா” என்று அவள் சொன்னதுதான் தாமதம்!
“அடிப்பாவி! உன் மேல எம்புட்டு நம்பிக்கை வைச்சு இருந்தேன்… மொத்தமா சிதைச்சு போட்டியே டி” என்று சகுந்தலா ஆக்ரோஷமாக மகளின் கன்னத்தில் அறைந்ததில் அவள் தள்ளிச் சென்று விழுந்தாள்.
மதுசூதனன் தன் மொத்த கோபமும் வடிந்து மகள் சொன்ன அந்த வார்த்தையில் நொறுங்கி போய் நின்றுவிட்டார்.
எந்தப் பெற்றோரின் நம்பிக்கையைக் காக்க வேண்டுமென்று தனக்குள் ஏற்பட்ட காதலைப் புதைத்து கொள்ள எண்ணினாலோ, தற்போது அவளே… அவளின் வார்த்தைகளாலேயே அவர்களின் நம்பிக்கையைச் சுக்குநூறாக உடைத்து எறிந்துவிட்டாள்.
14

Quote from Marli malkhan on May 17, 2024, 12:18 AMSuper ma
Super ma