மோனிஷா நாவல்கள்
En Iniya Pynthamizhe - 19
Quote from monisha on April 19, 2022, 12:21 PM19
“என்னடி இது கோலம்?” என்று சகுந்தலா மகளிடம் கேட்க, அவளுக்கு அப்போதே தான் இருக்கும் நிலைமை உரைத்தது.
உதட்டைக் கடித்தபடி தலையில் தட்டிக் கொண்டவள், “நீங்க உள்ளர வாங்க… நான் இதோ வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு அவசரமாக பின்புறமிருந்த குழாயில் முகம் கைகளை எல்லாம் சோப்பு போட்டு தேய் தேய் என்று தேய்ந்து கழுவிவிட்டு அதனை முகர்ந்து பார்த்தவள்,
‘பரவாயில்ல எந்த வீச்சமும் வரல…. எல்லாம் அந்தப் பிசாசுனால’ என்று அவனையும் திட்டிக் கொண்டு நன்றாகத் துண்டால் துடைத்தவள் கொடியில் காய்ந்திருந்த வேட்டியையும் துண்டையும் எடுத்து வந்து குளியலறை கதவின் மீது போட்டு,
“சந்திரா சீக்கிரம் வா… எங்க ஐயனும் அம்மாவும் வந்திருக்காங்க?” என்று தகவல் கூற,
“இங்கயா… இப்பவா?” என்றவன் குரலில் அதிர்ச்சித் தொனித்தது.
“ஆமா ஆமா… சீக்கிரம் வா” என்றவள் அவசர அவசரமாக வீட்டிற்குள் ஓடினாள்.
அவர்கள் இருவரும் வீட்டை ஆராய்ந்து பார்த்தபடி நின்றிருந்தனர்.
பெயருக்கென்று ஒரு சிறிய தொலைக்காட்சி, மடித்து வைத்திருந்த மெத்தை, பேச்சிக் கிழவியின் படம், கொஞ்சமாகப் பூசை சாமான்கள் ஒரு அலமாரி முழுக்க அவர்கள் துணிகள், இதில் தமிழின் துணிகள் வைக்க இடமில்லாமல் பெட்டியிலேயேதான் கிடந்தது.
“எப்படிதானுங்க உங்கப் பொண்ணு இங்கன இருக்குறா?” என்று சகுந்தலா யோசிக்க,
“இதுக்குதான் நான் அப்பவே சங்கரன் வீட்டுச் சாவியைக் கொடுத்தேன்” என்று மதுசூதனன் பொறுமினார்.
“அதான் பெரிய இவனாட்டும் வாங்க மாட்டேனுட்டானுங்களே” என்று சகுந்தலாவின் முகத்தில் அழுத்தமான கோபத்தின் சாயல்!
ஆனால் மதுசூதனனுக்குக் கோபம் வரவில்லை. மகளை எண்ணி மனம் வேதனையில் துடித்தது. எதற்கு இவள் இப்படியொரு வாழ்க்கையைத் தேடிக் கொண்டால் என்று எண்ணி உள்ளுர மருகினார்.
செல்வி அரசனை விட தமிழ் மீது அதீத நம்பிகையும் பாசமும் வைத்திருந்தார். மனம் தாங்கவில்லை.
இந்த வாழ்க்கை வேண்டாம் என தான் மகளிடம் சொல்லியிருக்க வேண்டுமோ? ஊரும் உறவும் பேசுகிறார்கள் என்று தப்பான முடிவை எடுத்துவிட்டோமோ? மகள் மீதிருந்த கோபத்தில் தான் அவளுக்கு இந்தத் திருமணத்தை செய்து வைத்து பெரிய அநீதி இழைத்துவிட்டோமோ?
இவ்வாறாக அவர் தன்னைத்தானே குற்றவாளியாக நிறுத்திக் கொண்டு அவதியுற, தமிழ் பின்வாசல் வழியே உள்ளே நுழைந்தாள்.
அங்கிருந்த ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு, “நீங்க உட்காருங்க ஐயா” என்று சொல்லிவிட்டுப் பாயை எடுத்து விரித்து, “நீங்களும் உட்காருங்கம்மா” என்று சொல்லியபடி அவர்களுக்கு தண்ணீர் எடுத்துவந்து தர, அதனை வாங்க கூட இல்லை அவர்கள்!
“ஒன்ற வூட்ல உட்கார்ந்து நாங்க ஒன்னும் விருந்து சாப்பாடு சாப்பிட வரல” சகுந்தலா எரிச்சலாகச் சொல்ல, தமிழுக்குச் சுருக்கென்று இருந்தது.
அவர் மேலும், “உன்னைய கட்டிக் கொடுத்ததோட ஒன்ற சந்காத்தமே வேண்டாம்னு தலை முழுகிடலாம்னுதான் பார்த்தோம்… ஆனா முடியலேயே” என, தமிழ் விழிகளில் கண்ணீர் நிரம்பியது.
“என்னங்க ம்மா இப்படியெல்லாம் பேசுறீங்க?”
“நீ செஞ்ச அந்தக் கேவலத்துக்கு வேறு எப்படிறி பேச சொல்ற?” என்றவர் வெறுப்போடு ஆரம்பித்து,
“ஆமா என்னடி வூடு இது… ஒரு சாமான் செட்டு கூட இல்லாம” என்றார் முகமெல்லாம் கடுகடுக்க!
தமிழுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
“பார்க்குறவங்க எல்லாம் உன்னைய ஒன்னும் சொல்ல மாட்டங்க… எங்களைதான்டி காரித் துப்புவாங்க… பெத்த பொண்ணுக்குச் சீர் செனத்த கூட செய்ய துப்பில்லன்னு…
இதுல நீ கழனில வேலை எல்லாம் பார்க்குறியாம்… ஒன்ற ஐயன் சொன்னாவுங்க” என்று அவர் கொதிக்க,
“அது இல்லைங்க ம்மா… நான்” என்று பேச எத்தனித்தவளை ஒன்றும் பேச விடாமல்,
“இந்த கர்மத்துக்கு எதுக்குடி அந்த பெரிய படிப்பு படிச்சவ… அப்பவே இப்படித்தான் ஒரு வாழ்க்கையை வாழ போறேன்னு சொல்லி இருந்தா ஸ்கூல முடிச்சதும் உன்னைய கட்டிக் கொடுத்து அனுப்பி இருப்பேன் இல்ல” என, தாயின் சொற்கள் அவள் மீது நெருப்பை வாரி இறைப்பது போல தோன்றியது.
சகுந்தலா அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அத்தனை நாளாக அவர் மனதிற்குள் அடக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் ஒட்டுமொத்தமாக மகள் மீது கொட்டிக் தீர்த்தார்.
“இதுல என்சினியரிங் படிக்க போறேன்னு சொல்லி அம்புட்டு காசை வீணாக்கிப் போட்டியே டி… ஒவ்வொரு ரூபாவும் உங்க ஐயன் கஷ்டப்பட்டு ரா பகலா வியர்வை சிந்தி உழைச்ச காசுடி… என் வயிறெல்லாம் எரியுதுடி… பாவி” என்று சொல்லி அதற்கு மேல் தாளமுடியாமல் அழவே தொடங்கியிருந்தார்.
மதுசூதனன் விரக்தியோடு, “இதெல்லாம் இப்ப பேசி என்ன ஆக போகுது… யார் தலையில என்ன விதிச்சிருக்கோ அதானே நடக்கும்” என்றவர்,
“வந்த விசயத்தைப் பத்தி மட்டும் பேசுவோம் சக்கு” என்றார்.
இருவரையும் அவள் குழப்பமாக ஏறிட, அவர் எடுத்து வந்த பையிலிருந்த பணக்கட்டுகளை எடுத்து மகளிடம் நீட்டி,
“என்னங்கயா இது?” என்றவள் புரியாமல் விழித்தாள்.
“உனக்கு சீர்வரிசை வாங்க ஏற்பாடு பண்ணி வைச்சு இருந்த பணம்… ஒன்ற புருஷன்தான் பெரிய இவராட்டும் சீர்வரிசை வேண்டாமுன்னு சொல்லி போட்டாங்க… அதான் பணமா எடுத்துட்டு வந்திருக்கேன்
இந்தப் பணத்தை வைச்சு ஏதாச்சும் வியாவாரம் மாதிரி பண்ண சொல்லு… ஒன்ற புருஷன் நிலத்தையும் சேர்த்து நான் விவசாயம் பார்த்து அதுல வர வருமானத்தை நானே உங்களுக்குக் கொடுத்துடுறேன்… இந்த இரண்டு ஏக்கருக்காக எதுக்கு தனியா கஷ்டப்பட்டு உழைக்கோணோம்” என்று தான் சொல்ல நினைத்ததை தெளிவாகச் சொல்லி முடித்தார்.
“ஐயா… இல்லீங்க யா…” என்றவளின் பேச்சை இடைமறித்தவர்,
“நான் உங்க நல்லதுக்காகதான் சொல்றேன்… இந்த விவசாயம் உங்களுக்கு வேணாம்…
வருஷ காலத்துக்கும் கடனாளியா கிடந்து வெயிலையும் மழையிலையும் நின்னு நின்னு ஒரு சுகத்தையும் காணாம வேதனை படுற வாழ்க்கை உங்களுக்கு வேணாம்.
புயல் வருமா வெள்ளம் வருமா இல்ல மழை பெய்யாம வறட்சி வருமான்னு வானத்தைப் பார்த்துகிட்டு இருக்க இந்த வாழ்க்கை வேணாம்.
கண்ணாடி மாதிரி கலகலத்து ஓடிட்டு இருந்த நம்ம நதில இப்போ சாயம்தாம் ஓடுது… நம் ஊர் பக்கம் நிலதத்தடி நீர்ல கூட அந்த ரசாயனம் கலந்து போச்சு
இனிமே இந்த விவசாயத்தை நம்பி எல்லாம் ரொம்ப நாள் காலத்தை ஓட்ட முடியாது… இனிமே இந்த விவசாயமும் நம்மல காப்பாத்தாது… நாமளும் விவசாயத்தைக் காப்பாத்த முடியாது” என்றவர் மகள் கையை ஆதரவாகப் பற்றி,
“வேணாம்டா கண்ணு… உங்களுக்கு இந்த விவசாயமே வேணாம்… ஒன்ற புருஷன் எதாச்சும் நல்ல தொழிலா பார்த்து பிழைச்சிக்கிட சொல்லு” என்று அவள் கையில் அந்தப் பணத்தைத் திணித்துவிட்டார்.
அவர் விழிகளின் வழியே இறங்கிய கண்ணீரை பார்த்த நொடி அவள் உயிரே போய்விட்டது.
அவர் அப்படி உடைந்து அழுது இதுநாள் வரை அவள் பார்த்ததே இல்லை. எத்தனையோ பிரச்சனைகளிலும் திடமாக நிற்பவர். சமாளிப்பவர். தன் மனகஷ்டங்களை யாரிடமும் அதிகம் பகிர்ந்து கொள்ளாதவர்.
ஆனால் அவர் இன்று தன் கையைப் பற்றி அழுவதைப் பார்த்து அவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை. அவள் விழிகளிலிருந்து கண்ணீர் கரை புரண்டு ஓடியது.
“ஐயா” என்ற வார்த்தையை தவிர வேறு எந்த வார்த்தையையும் அவள் தொண்டை குழியிலிருந்து வெளியே வரமாட்டேன் என்று திக்கி நின்றது.
சகுந்தலா தன் முந்தானையில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “வாங்க மாமா… போகலாம்” என்று சொல்ல, அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர்.
அவர்களைத் தடுக்க வேண்டுமென்று கூட அவளுக்குத் தோன்றவில்லை. எதையும் செய்ய முடியாத இயலாமை. மனம் முழுவதும் ஏதோ ஒரு வெறுமை!
உடலும் மனமும் ஓய்ந்து போக அப்படியே அந்தப் பணத்தைக் கையில் வைத்து கொண்டு தரையில் சரிந்தாள்.
சந்திரன் குளித்து விட்டு வந்த பின்பு, “என்னடி? உங்க ஐயனும் அம்மாவும் வந்திருக்காங்கனு சொன்ன… எங்க காணோம்?” என்று கேட்க, அவளிடம் பதிலில்லை.
“கிளம்பிட்டாங்களா? நீ குடிக்க ஏதாச்சும் கொடுத்தியா? சாப்பிட்டுப் போக சொல்ல வேண்டியதுதானே… என்னடி எதுவும் பேச மாட்டேங்குற?” அவன் கேள்விகள் இப்படியாகத் தொடர்ந்து கொண்டே இருக்க, அவள் மெளன சிலையாகச் சமைந்திருந்தாள்.
“என்ன தமிழு? என்னாச்சு?” என்றவன் நிதானமாக வினவிக் கொண்டே அவள் அருகில் அமர்ந்து,
“ஆமா… இது என்னடி கையில பணம்?” என்றான்.
அவன் கேட்ட நொடிதான் அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“அது… இந்த பணம்” என்றவள் அந்தப் பணத்தைக் கையில் வாங்கியதை கூட உணரவில்லை. தன் தந்தையின் கண்ணீர் மட்டுமே அவள் நினைவில் நின்றிருந்தது.
“உங்க ஐயன் கொடுத்தாங்களா?” என்று சந்திரன் கேட்டு அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அவள் பதில் பேசாமல் தலை கவிழ்ந்து கொள்ளவும் அவன் தாடை இறுகியது.
“எதுக்கு இந்தப் பணத்தை வாங்குன… ஆமா… யாரைக் கேட்டு வாங்குன?” என்றவன் பொறிய ஆரம்பிக்கவும்,
“இப்ப எதுக்கு கத்துற? நான் ஒன்னும் விரும்பி எல்லாம் இந்தப் பணத்தை வாங்கல” என்றாள்.
“ஓ! நீ வாங்காமதான் இது உன் கையில இருக்கா… ஆமா எதுக்கு இந்தப் பணம்?” என்றவன் கடுகடுக்க அவள் பேச வாயெடுக்கவும்,
“வேண்டாம்… நீ எதுவும் சொல்ல வேண்டாம்… இந்தப் பணம் எதுக்காக வேணாம் இருந்துட்டுப் போகட்டும்… ஆனா நமக்கு இந்தப் பணம் வேண்டாம்… ஒழுங்கா கொண்டு போய் கொடுத்துப் போடு… சொல்லிட்டேன்” என்றவன் உறுதியாகச் சொன்னான்.
“போதும் நிறுத்துறியா? இந்தப் பணத்தை நீ வேணும்னு சொல்லி இருந்தாலும் நான் உனக்கு கொடுத்திருக்க மாட்டேன்… விளங்குச்சா?” என்று அவளும் பொங்கினாள்.
“அப்புறம் எதுக்கு டி இந்தப் பணத்தை வாங்குன”
“ஐயா சாமி… இந்தப் பணத்தை நான் கொண்டு போய் கொடுத்து போடுறேன்… இத்தோட இந்தப் பிரச்சனையை வுட்டுடு” என்று ஒரு கும்பிடு போட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.
“எதுக்கு வாங்கோணோம்? இப்ப எதுக்கு திரும்பிக் கொடுக்கோணோம்” அவனுக்கு அவள் செயல் ஒன்றும் விளங்கவில்லை.
அவனுடன் என்னதான் இணக்கமாக இருந்தாலும் தன் பிரச்சனைகளையும் கவலைகளையும் அவனிடம் அவளால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. உடலளவிலிருந்து நெருக்கம் அவனுடன் அவளுக்கு மனதளவில் இல்லை.
தமிழ் குளித்து முடித்துவிட்டு நேராக தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றாள்.
“என்னடி காத்து இந்த பக்கம் வீசுது… புருசன் வூட்டுக்குப் போன புறவு பெத்தவங்களை மறந்து போட்டியா?” பரிமளித்தின் எடக்கான பேச்சும் உறவினர்களின் கேலி கிண்டல்களும் ஏற்கனவே காயப்பட்ட அவள் மனதை மேலும் மேலும் காயப்படுத்தியது.
இவர்களை எல்லாம் கடந்து அவள் வீட்டை அடைந்த போது செல்வி தமக்கையை இறுக கட்டிக் கொண்டு, “வாங்க க்கா” என்று ஆனந்தமாக வரவேற்க, ஏனோ அவளால் இயல்பாகப் புன்னகைக்க கூட முடியவில்லை.
“நீ எப்படி இருக்க? அரசன் எப்படி இருக்கான்?” சம்பிரதாயத்திற்கு என்று சில கேள்விகளைக் கேட்டுவிட்டு,
“அம்மா எங்க?” என்றாள்.
“அம்மா… அக்கா வந்திருக்காங்க” என்று செல்வி குரல் கொடுக்க சகுந்தலா வெளியே வந்தார்.
வேகமாக அவள் அந்தப் பணப்பையை எடுத்து நீட்டி, “இந்தாங்க பிடிங்க” என்றாள்.
சகுந்தலா மகளைக் குழப்பமாகப் பார்க்க அவர் கையில் வலுக்கட்டாயமாகத் திணித்துவிட்டு, “எனக்கு இந்தப் பணம் வேண்டாம்” என்று சொன்னவள் மேலும்,
“எனக்கு நீங்க நல்ல படிப்பு கொடுத்திருக்கீங்க… நான் சாகுற வரைக்கும் அது என் கூட வரும்… அப்படி ஒன்னும் என் படிப்பை நான் வீணாக்கிட மாட்டேன்… நானும் வீணா போயிட மாட்டேன்” என்றாள் தெளிவாக!
சகுந்தலா வாயடைத்து போய் நிற்க, “அதேபோல என்ற வூட்டுகாரரு விவசாயம்தான் பார்ப்பாரு… என்ற ஐயன் தாத்தன் எல்லாம் விவசாயம்தான் பார்த்தாங்க… அதை நான் அழிஞ்சு போக வுட மாட்டேனாக்கும்” அவளை எந்த உணர்வு அப்படி பேச வைத்ததோ? அதுதான் அவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்திற்கான விதையாக விழுந்திருந்தது.
“ஏ தமிழு நில்லுடி… ஐயன் ஒன்ற நல்லதுக்குதான்” என்று சொன்ன சகுந்தலாவிடம், “நான்தான் சொன்னேன் இல்ல… நீங்க கொடுத்த படிப்பு என்னைய காப்பத்தோம்னு… நீங்க செல்விக்கும் அரசனுக்கும் செய்ய வேண்டியதை செய்யுங்க” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து அகன்றுவிட்டாள்.
“செத்த நேரம் இருந்துட்டு போங்க க்கா” என்ற செல்வி அவளைத் தடுத்த போதும் அவளால் அத்தகைய மனநிலையோடு அங்கே இருக்க முடியுமென்று தோன்றவில்லை.
கருப்பன் கோவிலுக்குப் போக எண்ணிக் குறுக்கே தோட்டத்தின் வழியே புகுந்து நடந்தாள். அங்கே கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக அமர்ந்திருக்க வேண்டுமென்று அவள் நினைத்திருக்கையில் காலையில் அவள் பார்த்த கூட்டம் இன்னும் அங்கிருந்து செல்லாமல் இருந்தனர்.
சிலர் சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்க, பலரும் கூட்டமாக அமர்ந்து ஓய்வாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
இப்போதைக்கு இங்கே இருக்க முடியாது என்று அவள் கோவிலை விட்டு விலகி நடக்கும் போது, “தமிழு” என்ற ஒரு பெண்ணின் குரல் கேட்டுத் திரும்பினாள்.
ரொம்பவும் பழகிய குரலாக இருக்கவும் அவள் யாரென்று திரும்பிப் பார்க்க அவளுடன் பள்ளியில் படித்த பெண்.
அவள் கையில் ஒரு குழந்தையோடு நின்றிருக்க, “ஏ குணா… எப்படி இருக்கவ?” என்று தமிழ் அவளை விசாரிக்கவும், “நல்லா இருக்கேன்… பாப்பாவுக்கு காது குத்த வந்தோம்” என்றாள்.
“ஓ! உன் பாப்பாவுக்குதான் காது குத்துனாங்களா? நான் யாரோ என்னவோன்னு நினைச்சேன்… இல்லாட்டி நானும் பிரியாணி சாப்பிட வந்திருப்பேன் இல்ல” என்றாள்.
“இப்ப கூட என்னடி… சாப்பிடு” என்றவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக, “எனக்கு இந்த மீந்ததெல்லாம் வேண்டாம்… என்னைய எல்லாம் தனியா கூப்பிட்டு ஒரு முழு கடா விருந்து போடோணோம்… ஆமா” என்றாள்.
இவ்வாறாக தோழியிடம் அவள் கேலியும் கிண்டலுமாகப் பேசிக் கொண்டே கொஞ்சம் இயல்பான மனநிலைக்கு வந்திருக்க அப்போது அவள் தோழி, “ஏன் தமிழு… நீ அந்த சந்திரனை போய் கல்யாணம் பண்ணிகிட்டியாமே?” என்று கேட்டுவிடவும், அவள் முகம் இறுகியது.
“அவனை எப்படிறி? உனக்குதான் அவனைச் சுத்தமா பிடிக்காது இல்ல… அதுவும் உன்னாலதானே அவனை ஸ்கூல வுட்டே தூக்குனாங்க” என்றவள் பேசிக் கொண்டே போகவும்,
“அதெல்லாம் பழைய கதை குணா… இப்ப சந்திரா அப்படியெல்லாம் இல்ல” என்றவள் அழுத்தமாகச் சொல்லிவிட்டு, “ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதே… சொல்லி போட்டேன்” என்றாள்.
“சரி பேசல… கோவிச்சுகாதே… செத்த நேரம் பேசிட்டு போடி” என்று சொல்லி அவளை மண்டபத்தில் உட்கார வைத்து, “ஸ்கூல் முடிச்சதும் மாப்பிளை பார்த்துட்டாங்க… தெரியுமா?” என்றவள் தன் சோக கதையைத் தொடங்கியிருந்தாள்.
“ஏண்டி நீ வேணாம்னு சொல்ல வேண்டியதுதானே?”
“என்னத்த சொல்ல… அதான் கணக்குல போயிடுச்சு இல்ல”
“ஒரு சப்ஜெக்ட்தானே… திரும்பி உடனே எழுதி இருக்கலாமே டி”
“எனக்கு அந்த கணக்கு வாத்தியாரையும் பிடிக்கல… கணக்கையும் பிடிக்கல… அதான் கண்ணாலத்துக்கு ஒத்துகிட்டேன்… ஆனா ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டேன்… மாப்பிளை விவசாயியா மட்டும் இருக்க கூடாதுன்னு” என்றவள் சொன்ன நொடி தமிழ் அதிர்ந்து பார்த்தாள்.
“நல்ல வேளை… அவங்க வொர்க் ஷாப் வைச்சு இருக்காங்க… நல்ல வருமானம்” என்றவள் தன் கணவன் புராணம் பாட ஆரம்பிக்க,
“எனக்கு நேரமாச்சு நான் கிளம்போணோம்” என்று தமிழ் எழுந்து கொள்ள, அந்தப் பெண்ணின் அருகில் ஒரு சின்ன பையன் அவள் முந்தானையைப் பிடித்து இழுத்து, “ம்மா… வா… வா” என்று அழ,
“இவனும் ஒன்ற பையனாடி?” என்று கேட்கவும்,
“ம்ம்ம்… பேரு சர்வேஷ்… மூணு வயசு… கண்ணாலம் ஆன முதல் மாசமே நின்னு போச்சு… புறவு இரண்டு வருசத்துல இன்னோனு… இதுங்கள வைச்சு மாராடிக்கவே எனக்கு சரியா இருக்கு” என்று புலம்பத் தொடங்கினாள்.
கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாக வைத்திருந்த தோழியைப் பார்த்த நொடி தமிழ் மனதில் ஏதோ குறுகுறுத்தது. அதன் பின் தோழியிடம் விடைப் பெற்றுவிட்டு வீடு வந்து சேர்ந்தவள் மனதில் ஏதோ புரியாத குழப்பம்.
சந்திரனும் வீட்டில் இல்லை. அவள் அம்மா வீட்டிற்குச் சென்றிருப்பதால் வர தாமதமாகும் என்று எண்ணி அவன் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டான்.
அவள் மௌனமாக திண்ணையில் அமர்ந்து, “இன்னைக்கு என்ன தேதி?” என்று சிந்தனையில் நாள் கணக்கைப் போட்டுக் கொண்டிருந்தாள்.
திருமணத்திற்கு முன்பாக எத்தனை நாட்களுக்கு முன்பு என்று யோசித்து கணக்கிட்டவளுக்கு வானமே இடிந்து தலையில் வீழ்ந்து விட்ட உணர்வு!
“எப்படி எப்படி எப்படி… நான் எப்படி இதை பத்தி யோசிக்காம போனேன்… கடவுளே!” என்று அவள் ஆவேசமாகத் தலையிலடித்துக் கொண்டாள்.
அவள் மீது அவளுக்கே அப்படியொரு கோபம் வந்தது.
வீசிக் கொண்டிருந்த குளிர்ந்த காற்று கூட அவளைத் தொட்ட நொடி உஷ்ணமாக மாறிவிடுமளவுக்கு அவள் உடலும் உள்ளமும் வெப்பமாகத் தகித்தது.
19

Quote from Marli malkhan on May 17, 2024, 12:47 AMSuper ma
Super ma