மோனிஷா நாவல்கள்
En Iniya Pynthamizhe - 25
Quote from monisha on May 5, 2022, 11:31 AM25
பைந்தமிழின் முகம் வெளுத்துப் போயிருந்தது. சிகிச்சை தரும் மருத்துவர்கள் அவள் உடல் நிலையைப் பார்த்து எந்தவித முடிவுக்கும் வர முடியாமல் குழம்பிய அதேசமயத்தில் காவல் துறையினர் வந்து சந்திரனை விசாரித்தனர்.
இறுதியில் அவள் மருந்து எதுவும் குடிக்கவில்லை என்பது ஓரளவு ஊர்ஜிதமாக, ஏதேனும் விஷக்கடி ஏற்பட்டிருக்குமா என்று சோதித்தனர்.
அப்போதுதான் அவள் உள்ளங்கையிலிருந்த காயம் அவர்களுக்குப் பிடிபட்டது. அதன் வழியாகவே அவளுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றவாறு யூகித்தனர்.
அவர்கள் யூகத்திற்கு ஏற்றார் போல தமிழின் அம்மா சகுந்தலா அவள் வீட்டிற்கு வந்த அன்று மாமரத்திற்கு அடிக்க வைத்திருந்தப் பூச்சி மருந்து கரைசலை கவனியாமல் தன் அடிப்பட்ட கரத்தை அவள் அதில் நனைத்திருக்க கூடும் என்று சொன்னார். அவருமே அந்தக் காட்சியைப் பார்க்கவில்லை.
அதன் பின் மருத்துவர்கள் விரைந்து செயல்பட்டனர். தமிழின் உடல் பாதிப்பை வைத்தும் அவர்களின் யூகத்தை வைத்தும் தங்கள் சிகிச்சையைத் தொடங்கியிருந்தனர்.
சில மணி நேர தீவிர சிகிச்சைக்குப் பின் தமிழின் உடல் நிலை சீரானது. அந்த சில மணிநேரத்தில் சகுந்தலா அந்த மருத்துவமனையே அதிருமளவுக்கு அழுது புலம்ப, மதுசூதனன் மனைவியை சமாதானம் செய்ய கூட இயலாமல் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார்.
அரசனும் செல்வியும் கூட தமக்கையை எண்ணித் தேம்பித் தேம்பி அழ, சங்கரனும் பரிமளமும்தான் அவர்களுக்குத் தைரிய வார்த்தைக் கூறித் தேற்றினார்.
இதற்கிடையில் சகுந்தலா, “அரசனும் செல்வியும் ஹாஸ்பிட்டல இருந்தா அழுதுட்டேதான் இருப்பாங்க பரிமளம்… அதுவும் காலங்காத்தால இருந்து புள்ளைங்க சாப்பிட கூட இல்ல… அவங்கள உங்க வூட்டுக்கு அழைச்சிட்டு நீயும் கிளம்பு” என்க,
“இல்ல இல்ல அக்காவுக்கு சரியாகுற வரைக்கும் நாங்க எங்கேயும் வர மாட்டோம்” என்று அவர்கள் இருவரும் பிடிவாதமாக மறுத்துவிட்டனர்.
அப்போது சங்கரன் அவர்களிடம், “அதெல்லாம் அக்காவுக்கு ஒன்னும் ஆகாது கண்ணுங்களா? நீங்க கவலை படாதீங்க” என்று தைரிய வார்த்தைக் கூற,
“உஹும்… அக்காவுக்கு சரியாகுற வரையில நாங்க எங்கேயும் வர மாட்டோம்” என்று முடிவாகக் கூறிவிட்டனர்.
இவர்களுக்கு ஆறுதல் கூற உறவினர்கள் பலரும் சூழ்ந்திருக்க, சந்திரன் மட்டும் தனியாகவே அமர்ந்திருந்தான். யாருமே அவனுக்கு ஆறுதலும் கூறவில்லை. அவன் அருகில் கூட ஒருவரும் செல்லவுமில்லை.
அவன் மட்டும் அறை வாசலில் தனியே ஒரு ஓரமாய் இருக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்த செல்வி தன் தம்பியிடம், “பாவம் டா அவங்க… தனியா அழுதிட்டு இருக்காவுங்க… நாம் போய் பேசுவோமா?” என்று கேட்க,
“எதுக்கு? அந்த ஆளுதான் நம்ம அக்காவுக்கு இப்படி ஆனதுக்கு காரணமே” என்று அரசன் சீற்றமாகப் பொங்கினான்.
“வாயை மூடு அரசா… என்னதா இருந்தாலும் அவங்க நம்ம அக்கா வூட்டுகாரர்… இப்படியெல்லாம் நீ பேசறது தப்பு” என்று செல்வி தம்பியைக் கண்டிக்க,
“நான் அப்படிதான் பேசுவேனுங்க க்கா… நீங்க வேணா போங்க… பேசறதுன்னா நீங்க போய் அவன்கிட்ட பேசிக்கோங்க“ என்றவன் அவளை விட்டு இரண்டு இருக்கைத் தள்ளி அமர்ந்து கொண்டான்.
செல்விக்கு மனம் கேட்கவில்லை. சந்திரன் தலையைத் தாங்கிப் பிடித்து அமர்ந்திருந்த கோலத்தைப் பார்க்க அவளுக்கு ரொம்பவும் பாவமாக இருந்தது.
ஆனால் அவனிடம் போய் பேச அவளுக்கு வழியில்லை. அவள் பெற்றோரும் உறவினர்களும் அங்கேதான் இருந்தனர். அதுவும் தமிழ் மருந்து எதுவும் குடிக்கவில்லை என்ற போதும் அவர்கள் சந்திரன் மீதான தங்கள் கோபத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
அவள் இப்படி ஒரு ஆபத்தான நிலையிலிருக்க, அவனின் கவனக்குறைவே காரணம். மருத்துவமனையில் அவன் தாமதித்து சேர்ப்பித்துவிட்டான் என்று அவன் மீது பழிச் சுமத்துவதிலேயே அங்கே குழுமியிருந்த அவளின் உறவினர்கள் குறியாக இருந்தனர்.
ஆனால் அவன் அவர்கள் பேசும் எதற்கும் செவிமடுக்கவில்லை. தன்னவள் நலமாக இருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்கும் வரை அவன் உயிர் அவனிடம் இல்லை.
சில மணிநேரங்களில் மருத்துவர் அவள் நலமாக இருக்கிறாள் என்று தெரிவித்துவிட்டுச் சென்றார். அவள் மயக்கம் தெளிந்த நிலையில் தான் எப்படி மருத்துவமனைக்கு வந்தோம் என்று புரியாமல் அங்கிருந்த செவிலியரிடம், “எனக்கு என்னாச்சு? நான் எப்படி ஹாஸ்பிட்டல?” என்று விவரம் கேட்க,
அவரும் அவளுக்கு நடந்த பாதிப்புகளையும் சிகிச்சைகளையும் தெரியப்படுத்தினார். உண்மையிலேயே அப்போதும் கூட அவளுக்கு என்ன நடந்தது என்று யூகிக்க முடியவில்லை.
இரவு சந்திரனிடம் சண்டைப் போட்டு அறைக்குள் வந்து கதவைத் தாழ்பாளிட்டு அழுது கொண்டிருந்தாள். அப்போது தலை சுற்றல் குமட்டல் பின்னர் நாவில் எச்சில் ஊறுவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.
என்ன நடக்கிறது என்று புரியாமல் தவித்தவளுக்கு அந்தச் சூழ்நிலையிலும் சந்திரனிடம் உதவி கோர துளி கூட விருப்பமில்லை. வீம்புக்கென்று அவள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு படுக்கையில் சுருண்டுக் கொள்ள, அவள் எப்போது மயக்க நிலைக்குப் போனால் என்று அவளுக்குத் தெரியவில்லை.
அவள் இவ்விதம் தனக்கு நேர்ந்ததை குறித்து நினைவுப்படுத்திக் கொண்டிருக்கும் போதே அவளின் பெற்றோரும் தங்கை தம்பியும் உள்ளே நுழைந்தனர். அவர்களின் முகத்தைப் பார்க்கும் போதே எந்தளவு அவர்கள் வேதனையில் ஆழ்ந்திருப்பார்கள் என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
அதேநேரம் சந்திரன் அவர்களோடு வரவில்லையா என்று தேடியவளுக்குள் ஏமாற்றம் பரவிய போதும் அவள் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அவனைப் பற்றி அவர்களிடமும் கேட்கவில்லை.
தமிழ் மயக்கம் தெளிந்து கண்விழித்துவிட்டாதாகச் சொன்ன நொடியில்தான் சந்திரன் மூச்சேவிட்டான். ஆனால் அவன் உள்ளே நுழைய இருந்த சமயத்தில் அங்கிருந்த செவிலியர், “எல்லோரும் இப்படி மொத்தமா உள்ளே போனா டாக்டர் திட்டுவாரு… கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க” என்று அவனையும் சில உறவினர்களையும் தடுத்து நிறுத்திவிட்டிருந்தனர்.
அவன் அவளை எப்போது பார்ப்போம் என்று தவித்திருக்க, தமிழின் பெற்றோர்கள் அவளிடம் பேசிவிட்டு வெகுநேரம் கழித்தே வெளியே வந்தனர்.
செல்வி மட்டும் புறப்படுவதற்கு முன்னதாக தமிழின் கையைப் பற்றியபடி, “மாமா பாவம் க்கா… நீ பூச்சி மருந்தைக் குடிச்சிட்டேன்னு நினைச்சு எல்லோரும் அவங்கள திட்டித் தீர்த்துட்டாங்க… அதுவும் பரிமளம் சித்தி என்னவெல்லாம் பேசுனாங்க தெரியுமா?” என்றாள்.
தன் சகோதிரி சொன்னவற்றை கேட்டவளின் கண்கள் வேதனையைப் பிரதிபலித்தன. ஆனாலும் அவள் நேற்று இரவின் கோபத்தையும் மறந்திருக்கவில்லை.
செல்வி இவ்விதம் பேசிவிட்டு வெளியே சென்ற பிறகு மற்ற உறவினர்களும் உள்ளே வந்திருந்தனர்.
அவர்களே முந்தியடித்து கொண்டு அவளிடம் நலம் விசாரிக்க அவள் பார்வை பின்னே நின்ற சந்திரனை ஒரே ஒரு முறைதான் பார்த்தது. வேண்டுமென்றே அவனைப் பார்க்காமல் அவள் இவர்களிடம் மட்டுமே பேசினாள்.
“போதும்… அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று செவிலிப் பெண் அவர்களை வெளியே அனுப்ப, சந்திரன் தன் மனைவியைத் தவிப்போடுப் பார்த்தான். அவளின் உறவினர்கள் யாரும் அவனை ஒரு வார்த்தை கூட பேசவிடவில்லை.
அவர்கள் எல்லோரும் வெளியேற சந்திரன் அந்த செவிலிப் பெண்ணிடம் கெஞ்சினான். அவர் மறுப்பாகத் தலையசைத்தார்.
பின்னர் என்ன நினைத்தாரோ? அவனை விட்டுவிட்டு அவர் வெளியே சென்றுவிட சந்திரன் தமிழ் அருகில் வந்து அமர்ந்தான். அவன் படுக்கையில் கிடந்த அவள் முகத்தைப் பார்த்தபடி அவள் கைகளைப் பற்றிக் கொள்ள, அத்தனை நேரம் அவள் அவன் மீது கொண்டிருந்த கோபமெல்லாம் எங்கே மறைந்து போனதென்றே தெரியவில்லை.
அழுது சிவந்த அவன் கண்களின் தெரிந்த அளவிட முடியாத வேதனையையும் தவிப்பையும் பார்த்து அவள் மனம் இளக,
“தமிழு” என்று அவன் குரல் கரகரத்தது.
அவன் விழிகள் மீண்டும் கண்ணீரில் நனைய அவள் அவன் கைகளைப் பற்றிக் கொள்ள, அவனும் அவள் கைகளை தன் கரத்திற்குள் மூடி கொண்டான்.
அவன் பிடி தந்த அழுத்தமே அவன் மனவேதனையைப் பறைசாற்ற, தன் பெற்றோர்களின் வார்த்தைகள் அவனை ரொம்பவும் காயப்படுத்தியிருக்கும் என்ற எண்ணத்தில்,
“சாரி சந்திரா… அம்மாவும் ஐயாவும் ஏதோ புரிஞ்சுக்காம பேசிட்டாங்க… நீ அதெல்லாம் பெருசா எடுத்துக்காதே” என்றாள்.
“நான் அதெல்லாம் பெருசா எடுத்துக்கல… அவங்க எல்லோரும் என்கிட்ட அப்படி பேசுனாங்கன்னா அது உன் மேல இருக்க பாசத்தாலதான்… உன் ஐயன் அம்மா சித்தி மாமான்னு உனக்காக அழவும் கவலைப்படவும் அம்புட்டு பேர் இருக்காங்கடி… எனக்கு அது ஒரு வகையில சந்தோசம்தான்… ஆனா” என்று நிறுத்தி ஏக்கமாக நிமிர்ந்து அவள் முகம் பார்த்தபடி தொடர்ந்தான்.
“எனக்கு நீ மட்டும்தானேடி இருக்க… எனக்காக அக்கறைப்படவும் கவலைப்படவும் என்கிட்ட உரிமையா கோபப்பட்டு சண்டை போடவும்ன்னு எல்லாத்துக்கும் நீ தாண்டி இருக்க… நீ மட்டும் தாண்டி இருக்க… எங்கேயோ நீ இருந்தா கூட நீ எனக்காக இருக்காங்குற நம்பிக்கையே எனக்கு போதும்” என்றவன் சொல்லும் போதே அவன் விழிகள் கலங்கியது.
அவள் விழிகளிலும் நீர் ஊற்றாகப் பெருக்கெடுத்தன.
“சந்திரா” என்றவள் குரல் கம்மியது.
“என் அம்மத்தா கூட இப்படிதான் ஒரு நாள்… இராத்திரி தூங்கிட்டு இருக்கும் போதே” என்றபடி கண்ணீர் சிந்தி,
“நான் காலம்பற விடிஞ்சு பார்த்தா” அவன் பேச முடியாமல் திக்கித் திணறி அழுது கொண்டே,
“அதேபோல இன்னைக்கு நீயும் நான் கூப்பிட கூப்பிட எழுதிருக்கவே இல்லையா?” அவன் குரல் நடுக்கத்தில் அப்படியே நின்றது.
அவள் நீர் நிறைந்த விழிகளோடு மௌனமாக அவன் வலியை உள்வாங்கினாள்.
“உனக்கு என்னவோ ஏதோன்னு… நான் அந்த நிமிஷம் செத்தே போயிட்டேன்” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி அவள் கைகளைப் பற்றியபடி குலுங்கி குலுங்கி அழுதான்.
“சந்திரா… ப்ளீஸ் அழாதே… இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்கே தெரியாது…” என்றவள் சமாதானம் கூற, அவன் தன் கண்ணீரைத் துடைத்தபடி அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“நீ அன்னைக்கு சொல்லும் போது எனக்கு புரியல… ஆனா இப்போ புரியுது… பூச்சி மருந்து எவ்வளவு ஆபத்தானதுன்னு… அதுவும் உங்க ஐயா கலந்து வைச்ச தண்ணியைத் தொட்டதுக்கே இம்புட்டு பெரிய ஆபத்துன்னா
நம்ம சுயலாபத்துக்காக விளையுற சாப்பாட்டு பொருள்ல இந்த விஷத்தை நாம கலந்திட்டு இருக்கோமே… அது எம்புட்டு பெரிய பாவம்
அவனவனுக்கு வந்தாதான் வயித்து வலியும் தலைவலியும்னு சொல்லுவாங்க… நம்ம நேசிக்குற உயிரு உசுருக்காக போராடுற வலி இருக்கே… நரகம்டி
ஆனா அப்படி எத்தனை உசுருக்கு நான் தெரிஞ்சே விஷத்தை விளைய வைச்சு கொடுத்திட்டு இருந்திருக்கேன்… உஹும் இனிமே பண்ண மாட்டேன்…
எம்புட்டு பெரிய நஷ்டம் வந்தாலும் பரவாயில்ல… இனிமே பூச்சி மருந்து ரசாயன உரமும் போட்டு நான் விவசாயம் பண்ண மாட்டேன்… சத்தியமா பண்ண மாட்டேன்” என்று தீர்க்கமாக உரைத்தான்.
“நிசமா சொல்றியா சந்திரா?” என்று அவள் வியப்பாகப் பார்க்க,
“ஆமான்டி… இனிமே நான் இயற்கை விவசாயம்தான் பண்ணுவேன்… நான் விதைக்குற எந்தப் பொருளையும் ஒரு துளி விசத்தை கூட கலக்க மாட்டேன்” என்று அவளிடம் உறுதியாகக் கூறினான்.
25

Quote from Marli malkhan on May 17, 2024, 1:21 AMSuper ma
Super ma