மோனிஷா நாவல்கள்
En Iniya Pynthamizhe - 31
Quote from monisha on May 20, 2022, 11:25 AM31
உணவு உற்பத்தி செய்வதைத் தாண்டி உழவனின் அடிப்படை தேவைகளைப் பூர்த்திச் செய்வதில் மிக முக்கிய இடத்தைப் பிடிப்பது ஆடு, மாடு, கோழி வளர்ப்புகள்தான்.
சமீப காலமாகவே நாட்டுக் கோழிகளும் முட்டைகளும் சந்தையில் நல்ல விலைக்குப் போகின்றன.
சந்திரன் ஏற்கனவே கோழி வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். ஆதலால் நாட்டுக் கோழி மற்றும் முட்டை உற்பத்தி மூலமாக ஓரளவு அவனுக்கு வருமானம் வந்தது. இருப்பினும் அது மட்டுமே அவர்கள் தேவைக்குப் போதுமானதாக இல்லை.
அவர்கள் தங்கள் பொருளாதார நிலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய காட்டயத்தில் இருந்த அதேநேரம் இயற்கை வேளாண்மையைக் கைவிட்டுவிடவும் கூடாது என்ற முடிவிலும் உறுதியாக இருந்தனர்.
பெரிதாக ஆடம்பரமில்லாத அவர்களின் வாழ்க்கையின் தேவைகள் என்னவோ குறைவுதான். இருப்பினும் கையிருப்புகளும் சேமிப்புகளும் அவர்களின் விவசாய பணிகளுக்காக கரைந்து கொண்டே வந்தது.
எப்போதும் போல ஊரில் மரம் வெட்டுதல் மற்றும் சிலரின் வயல் வேலைகளுக்கு உதவி செய்யும் விதமாக சந்திரன் கொஞ்சம் பணம் ஈட்டினான். இருப்பினும் அவை மட்டுமே போதாது.
கறவைப் பசுக்களை வாங்குமளவுக்கு அவர்களிடம் அப்போது பணமும் இல்லை. வருங்கால நிலையைக் கருத்தில் கொண்டு ஆடு வளர்க்க முடிவெடுத்தனர். தங்கள் கையிருப்புகளை வைத்து சந்திரன் மூன்று ஆடுகளை வாங்கியிருந்தான்.
மேலும் அவர்கள் இயற்கை வேளாண்மை முறையில் தங்கள் நிலத்தில் பசுந்தாள் உரமிடுதல் முறையை முயன்றனர்.
பசுந்தாள் உரமென்பது பசுமையான சிதைக்கப்படாத பொருள்களை உரமாகப் பயன்படுத்துதலாகும். பசுந்தாள் உரபயிர்களான தக்கைப்பூண்டு, பில்லி, கொத்தவரை, அகத்தி போன்றவற்றை வளர்த்து அவை போதுமான வளர்ச்சி அடைந்தவுடன் மண்ணில் மூன்றடி ஆழத்திற்குத் திருப்பிப் போட்டு மடித்து உழுவதாகும்.
இவர்களின் இந்த முயற்சிகள் பலவும் ஊர்மக்கள் பார்வையில் கேலி கிண்டலுக்கு உள்ளானது.
அதுவும் இன்றைய காலகட்டத்தில் அடிப்படைத் தேவைகளை மறந்து எல்லோரும் ஆடம்பர தேவைகளின் பின்னே ஓட,
விவசாயிகள் பலரும் விவசாயத்தைக் கைவிட்டு நகரத்தில் கூலிகளாகப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அப்படியிருக்கும் போது தமிழ் அவளின் படிப்பின் தகுதிக்குக் கிடைத்த நல்ல வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்வது அவர்கள் பார்வைக்குக் கேலிக்கூத்தாகத் தெரிவது ஒன்றும் ஆச்சரியமில்லை.
அவர்களின் எள்ளல் பேச்சுகளை எல்லாம் தமிழும் சந்திரனும் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத போதும்,
‘நகரத்துல கிடைச்ச நல்ல வேலையை வுட்டுப் போட்டு யாராச்சும் இப்படி வந்து விவசாயம் செய்வாங்களா?” என்று உறவினர்கள் கேள்விகளுக்கும்,
‘அந்தப் புள்ளைக்கு என்ன கிறுக்கு புடிச்சிருக்கா?’ என்ற ஊர்க்காரர்களின் கேலி பேச்சுக்களும் அவர்களை விடாமல் தொடர்ந்தன.
அன்று அவள் வீட்டிற்கு வந்த தங்கை செல்வியும் கூட தமக்கையிடம் இதே கேள்வியைதான் கேட்டாள்.
தமிழ் அப்போது பின்கட்டில் மாட்டுச்சாணம் வெல்லம் எல்லாம் ஒன்றாகக் கரைத்து அமிர்த கரைசலைத் தயாரித்துக் கொண்டிருந்தாள். அவளைத் தேடிக் கொண்டு வீட்டிற்கு வந்த செல்வியும் அரசனும், தமக்கை செய்யும் வேலையைப் பார்த்து உள்ளம் துடித்துப் போயினர்.
“அக்கா” என்று செல்வி அழைக்கவும்,
“ஏ! செல்வி அரசா வாங்க வாங்க” தங்கை தம்பிகளைப் பார்த்து அவள் வியப்பும் மகிழ்ச்சியுமாக வரவேற்றாள்.
“என்னங்க க்கா இதெல்லாம்?” என்று அரசன் முகம் சுளிக்க,
“இது அமிர்த கரைசல்… மாட்டு சாணமும் வெல்லமும் கலந்து தயாரிக்கிறது… மண்ணுக்கு ஊட்டம் கொடுக்க” என்று தம்பியிடம் விளக்கம் தந்துவிட்டு,
“ஒரே நிமிஷம் இரண்டு பேரும் உள்ளே உட்காருங்க… இதை கரைச்சு மூடி வைச்சுட்டு வந்துடுறேன்” என்றாள்.
அரசன், செல்வி இருவரின் முகமும் வாட்டமானது. இருவரும் அன்றுதான் எப்படியோ தன் அம்மாவை சமாளித்து ஆசையாக தமக்கையைப் பார்க்க வந்த நிலையில், அவள் இப்படியொரு வேலையைச் செய்து கொண்டிருப்பது அவர்கள் மனதிற்கு ஒப்பவில்லை.
தமிழ் தன் வேலையைச் சீராக முடித்துவிட்டு இருவருக்கும் குடிக்க தேநீர் கலந்து கொடுக்க, செல்வியும் அரசனும் தயக்கத்தோடு அதனைப் பெற்று கொண்டனர்.
“என்ன இரண்டு பேர் மொவரையும் சரி இல்ல… ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டுக் கொண்டே, “என்ன செல்வி?” என்றவள் பார்வையால் தங்கையை அளவெடுத்தாள்.
“அந்தப் பிரச்சனையெல்லாம் இப்போ இல்லைங்க க்கா”
“புறவு என்ன?” என்ற தமக்கையின் கேள்விக்கு,
“அது வந்துங்க க்கா” என்றவள் தயங்கித் தயங்கி, “உங்களால எப்படிங்க க்கா இந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய முடியுது… அதுவும் உங்க படிப்பு என்ன? கனவும் லட்சியமும் என்ன?” என்று தொடர்ந்து கொண்டிருந்த தங்கையிடம்,
“நீயுமா டி” என்று தமிழ் சலித்துக் கொண்டாள். இந்த மாதிரியான பேச்சுகளை அவள் நிறையவே கேட்டுவிட்ட கடுப்பில் சொல்ல,
“எல்லோரும் உங்ககிட்ட இதையே கேட்குறாங்கன்னு எனக்கு புரியுதுங்க க்கா… ஆனா உங்களுக்கு எஞ்சினியரிங் எம்புட்டு உசுருன்னு எனக்கு தெரியும்… அதுக்காக நீங்க எம்புட்டு கஷ்டப்பட்டுப் படிச்சிங்கன்னும் எனக்கு தெரியுமுங்க க்கா… ஆனா இப்போ நீங்க இந்த மாதிரி வேலை செய்றதை எல்லாம் சத்தியமா பார்க்கவே முடியலங்க… எனக்கே இப்படின்னா நம்ம ஐயனுக்கு” என்றவள் விழிகள் கண்ணீர் துளிர்த்து விழ,
“இப்ப எதுக்கு அழுறவ… முதல் கண்ணைத் தொட” என்றவள்,
“என்ன அப்படி நான் ஒரு கீழ்த்தரமான வேலையைச் செஞ்சு போட்டேன்னு நீ கண்ணுல தண்ணி வுடுறவ” என்று தங்கையைக் கண்டிப்போடுப் பார்த்தாள்.
“சை ச்சே… நான் அப்படி சொல்லைங்க க்கா” என்று உடனடியாக மறுத்த தங்கையிடம்,
“முதல ஒரு விசயத்தைப் புரிஞ்சிக்கோ… இன்னைக்கு நம்ம நாட்டுக்கு ஒரு நல்ல டாக்டர் நல்ல எஞ்சினியரிங்கோட தேவையை விடவும் ஒரு நல்ல விவசாயியோட தேவை ரொம்ப முக்கியமா இருக்கு… நான் ஆரம்பத்துல ஒரு வீம்புக்காகதான் விவசாயம் செய்யோணும்னு நினைச்சேன்… ஆனா இப்போ ஒரு லட்சியத்தோட செய்யோணும்னு நினைக்கிறேன்… இயற்கை விவசாயம் செஞ்சு கேலி செய்யற ஒவ்வொருத்தர் முகத்திலையும் கரியைப் பூசணும்” என்றாள் தீர்க்கமாக.
செல்விக்கு ஆச்சரியமாக இருந்தது. தமக்கையின் பிடிவாதமும் தெளிவும் இந்தச் சூழ்நிலையிலும் கொஞ்சமும் மாறவில்லை என்பது புரிந்தது.
ஆதலால் செல்வி, “நீங்க எது செஞ்சாலும் அதுல ஜெய்ச்சிடுவீங்க க்கா” என்று நம்பிக்கையோடு தன் தமக்கையிடம் உரைத்தாள்.
அந்தச் சமயத்தில் அமைதியாக அமர்ந்திருந்த தன் தம்பியைப் பார்த்த தமிழ், “என்னடா செல்வியே பேசிட்டு இருக்கா? நீ எதுவும் பேச மாட்டுற… நீயும் அம்மாவை மாதிரி என்ற மேல கோபமா இருக்கியா என்ன?” என்று வினவினாள்.
“அதெல்லாம் இல்லைங்க க்கா” என்றவன் அவளிடம் சகஜமாகப் பேசினான்.
அப்போது பேச்சு வாக்கில், “எங்க க்கா அவங்களைக் காணோம்?” என்று கேட்கவும்,
“எவங்களை?” என்று தமிழ் அவனை ஏறஇறங்க ஒரு பார்வை பார்க்க,
“அதானுங்க க்கா… மாமாவைக் கேட்குறானுங்க” என்றாள் செல்வி.
“மாமான்னு கூப்பிட்டா என்னடா குறைஞ்சா போயிடுவ” என்று தமிழ் அவனை முறைக்க, அவனோ பதில் சொல்லாமல் அமைதி காத்தான்.
“அவனை வுடுங்க க்கா… அவன் அப்படிதான்” என்ற செல்வி,
“ஆமா மாமா எங்க? எப்போ வருவாங்க” என்று வினவினாள்.
“நம்ம தலைவர் வூட்டுக்குப் போயி இருக்காங்க… ஜீவாமிர்தம் தயாரிக்க நாட்டு மாட்டு சாணம் தேவை… இங்க ரொம்ப பேர்கிட்ட நாட்டு மாடு இல்லை இல்ல… நாட்டு மாடு நம்ம வூட்டுல… புறவு தலைவர் வூட்டுலதானே இருக்கு” என்றாள்.
“ஓ” என்று செல்வி தலையசைக்க,
“ஆமா அதென்னங்க க்கா ஜீவாமிர்தம்?” என்று அரசன் ஆர்வமாக சந்தேகம் கேட்கவும்,
“ஜீவாமிர்த கரைசல் நம்ம மண்ணுக்கு உயிர் கொடுக்கும்” என்றாள்.
“புரியலைங்களே” என்று இருவரும் குழம்பி தமக்கையைப் பார்க்க,
“அதாவது மண்ணோட உயிரே மண்ணுல வாழுற நுண்ணுயிரிகள்தான்… ஒரு கிராம் மண்ணுல ஐந்து கோடி லட்சம் நுண்ணுயிரிகள் வாழுமாம்… ஆனா இப்போ நாம உரம்குற பேர்ல மண்ணுல கொட்டிகிட்டு இருக்க யூரியாவும் அமோனியாவும் மண்ணில வாழுற மண்புழுக்களையும் நுண்ணுயிரிகளைக் கொன்னுட்டு இருக்கு… மண் உயிரில்லாம போயிடுது… அதாவது வளமெல்லாம் போயிடுது… அப்படி உயிரில்லாத மண்ணுக்குத் திரும்பவும் இந்த ஜீவாமிர்த கரைசல் ஊட்டம் கொடுக்கும்… இந்த கரைசலை மண்ணுக்கு கொடுக்கிறது மூலமா மண்ணுல நுண்ணுயுயிரிகளும் மண் புழுவும் பெருகும்” என்று தெளிவுப்படுத்தினாள்.
அரசன் அப்போது, “அப்படி மண்புழுவும் நுண்ணியுயிரி பெருகிறதால என்ன பலன்?” என்று தீவிரமாக சந்தேகம் கேட்க,
“நுண்ணுயுயிரிகள் இருக்க மண்ணுதான் உயிரோட்டமான மண்… மண்ணில நம்ம இடுற கழிவுகளை அந்த நுண்ணுயுயிரிகள் உண்டுட்டு… அது வெளியேத்துற கழிவுகள்தான் மண்ணுக்கு ஊட்டத்தைக் கொடுக்குது
இங்கிலீஷ்ல அதைதான் கம்போஸ்ட்னு சொல்லுவோம்… அது இயல்பாவே நம்ம மண்ணில நடக்குற ப்ரோசஸ்… அதேபோல மண்புழு மண்ணில இருக்க மட்குகளை உண்டுட்டு மண்ணோட அடிலயும் மேலயும் உழவு ஓட்டுற மாதிரி போய் வரும்.
அப்படி அது போய் வருவதால அடி மண்ல இருக்க சத்து மேல வருது… மண்ணில் காற்றோட்டம் உருவாகுது… பயிரோட வேர்களுக்கு சத்து போக அதுவே கிளறி வுடுது… இதனாலதான் மண் புழுவை விவசாயியின் நண்பன்னு சொல்றாங்க” என்றாள்.
“இதெல்லாம் புக்ல படிச்சிருக்கோம்… ஆனா இந்தளவு ஆழமா புரிஞ்சு படிச்சது இல்ல” என்று செல்வி சொல்ல,
“நமக்குக் கொடுக்கப்படுறது ஏட்டு கல்விதான்… அதான் நமக்கு பல விஷயங்கள் புரியறது இல்ல… ஏன் இதை பத்தி தெரிஞ்ச விவசாயிங்க கூட தான் என்ன தப்பு செய்றோம்னு உணர்றது இல்லயே.
பெரிய பெரிய ட்ராக்டர்ஸ் கொண்டு வந்து மண்ணுல உழவு செய்றேன்னு மண் புழுவை அழிச்சிட்டிருக்காங்க… ட்ராக்டர்ஸ் நம்ம வேலையைச் சுலபமாக்கிட்டதா நம்ம நினைச்சிட்டு இருக்கோம்… ஆனா அது பொய்… அது மண் புழுவை அழிச்சு இன்னும் நம்ம வேலையைச் சிக்கலாக்கிட்டு இருக்குங்குறதை யாரும் புரிஞ்சிக்கல.
இங்கேதான் விவசாயத்தோட உயிர் சங்கிலி அறுந்து போச்சு… நிலத்தை உழ மாட்டைப் பயன்படுத்தினோம்… விளைஞ்சதுல வைக்கோலை மாட்டுக்குக் கொடுத்தோம்… மாட்டோட சாணத்தை மண்ணுக்குக் கொடுத்தோம்
சாணம் நம்ம நிலத்துல நுண்ணியிரிகளும் மண்புழுவும் பெருக உதவுச்சு… நிலத்துக்கு ஊட்டம் கொடுத்துச்சு… ஆனா இப்போ இந்த சைக்கிளை நம்ம உடைச்சிட்டோம்” என்றவள் சொல்லி முடிக்கும் வரை அவர்கள் இருவரும் ஆர்வமாகக் கேட்டிருக்க அவள் மேலும் தொடர்ந்தாள்.
“இந்த ஜீவாமிர்தத்தை நீர்ல கலந்து மண்ணுக்குக் கொடுத்தா மண்புழு நுண்ணுயுயிரிகள் அதிகரிக்கும்… நம்ம மண் உயிரோட்டமான மண்ணாக மாறும்…
இதை தயாரிக்க நாட்டு பசுஞ்சாணம் இல்லன்னா காளை மாட்டு சாணம் 10 கிலோ வரைக்கும் தேவைப்படும்… நம்மகிட்ட காளையன் மட்டும்தானே இருக்கான்… அதான் தலைவர் வூட்டுக்குப் போய் பசுஞ்சாணம் எடுத்துட்டு வர போயிருக்காங்க” என்றாள்.
“ஏனுங்க க்கா? அம்புட்டு தூரம் போகோணோம்… நம்ம வூட்டுலயே இருக்கும் போது” என்று செல்வி சொல்ல,
“அதான் அம்மாவும் ஐயுனும் என்ற மேல கோபத்துல இருக்காங்களே… புறவு எப்படி அவங்க கிட்ட கேட்க” என்றாள்.
“அட என்னங்க க்கா நீங்க… என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல… இனிமே என்கிட்ட கேளுங்க… நான் எடுத்துட்டு வந்து தர்றேன்” என்று அரசன் சொன்னதைக் கேட்டு, “தேங்க்ஸ் டா” என்றபடி தம்பியின் தலையைக் கோதிவிட்டாள்.
“ஆமா எப்படிங்க க்கா உங்களுக்கு இம்புட்டு விஷயம் தெரிஞ்சுது… நம்ம ஐயன் என்னதான் விவசாயம் பண்ணாலும் இதை பத்தி எல்லாம் அவங்க நம்ம கிட்ட பேசுனதே இல்லையே” என்று அரசன் அவளிடம் துருவித் துருவி அவள் சொன்னவற்றைக் குறித்த விளக்கங்களைக் கேட்டிருந்தான்.
தமிழ் அவனுக்கு விளக்கம் கொடுத்து கொண்டே அலமாரியிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து கொடுத்து, “இது காமராஜ் சார் எனக்கு கொடுத்தது… இதை படி… இதுல நிறைய விஷயம் இருக்கு” என்றாள்.
‘நம்மாழ்வாரின் எந்நாடுடைய இயற்கையே போற்றி’
அரசன் அந்தப் புத்தகத்தைக் கையில் வாங்கிக் கொள்ள, செல்விக்குச் சிரிப்பு தாளவில்லை.
“எதுக்குடி இப்போ லூசாட்டும் சிரிக்குற?” என்று தமிழ் தங்கையை முறைக்க,
“அட நீங்க வேற ங்க க்கா… இவன் சப்ஜக்ட் புக்கையே படிக்க மாட்டுறானுங்க… மேக்ஸ்ல எம்புட்டு மார்க்குன்னு கேளுங்க” என்று செல்வி கேலி செய்ய அவன் முகம் சுருங்கிப் போனது.
“போங்க… நான் போறேன்” என்றவன் கோபித்து வெளியே நடக்க,
“பார்த்தீங்களா… மார்க்கை கேட்டதும் சாமளிச்சிட்டு அப்படியே ஓட பார்க்கிறானுங்க” என்று செல்வி இன்னும் எக்காளம் செய்து சிரித்தாள்.
“வாயை மூடு செல்வி” என்று அவளை அதட்டிவிட்டு தம்பியை அழைக்க வெளியே செல்ல, அப்போது வாசலில் வந்து நின்ற சந்திரன் அரசனை நிற்க வைத்து அவனை நலம் விசாரித்துக் கொண்டிருந்தான்.
“வூட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம போவாங்களா?” என்று அரசனிடம் அவன் கேட்க,
“இல்ல நான் போகோணோம்” என்றவன் வம்படியாகச் சொல்லி செல்ல பார்க்கவும்,
“டே அரசா நில்லு டா” என்று தமிழ் அவன் கைப் பற்றித் தடுத்து நிறுத்தினாள்.
“அவ சும்மா விளையாட்டுக்குச் சொன்னா… அதுக்குப் போய் கோவிச்சுக்கியாக்கும்… வாடா உள்ளே” என்றவனை இழுத்துச் சென்றாள்.
அப்போது சந்திரன் தான் எடுத்து வந்த பசுஞ்சாண கூடையை ஓரமாக வைத்துவிட்டு கை கால்களை அலம்பிக் கொண்டு உள்ளே வர, அந்த உடன்பிறப்புகள் இடையில் தீவிரமாக வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் சம்பாஷனையில் நடந்தவற்றை ஓரளவு புரிந்து கொண்டவன்,
“என் மச்சானை யாரது கிண்டல் பண்றது… தொலைச்சுப் போடுவேன்” என்றபடி அவன் உள்ளே வர,
“இங்க என்ன நடக்குதுன்னு முதல தெரியாம நீ ஊடால மூக்கை நுழைக்காதே” என்று தமிழ் கணவனிடம் சொல்ல,
“தெரியும்… என் மச்சான் ஏதோ மார்க் கம்மியா வாங்கிட்டான்னு பேசிட்டு இருந்தீங்க” என்றவன் மேலும்,
“மார்க் கம்மியா வாங்குனா என் மச்சான் புத்திசாலி இல்லன்னு ஆகிடுமா?” என்றான்.
“மார்க் பத்தி எல்லாம் நீ பேசாதே… நீ வாங்குன கோழி முட்டையெல்லாம் வைச்சு இந்த ஊருக்கே சமைச்சு போடலாம்” என்று தமிழ் அவனைக் கேலி செய்ய, அரசனும் செல்வியும் பக்கென்று சிரித்துவிட்டனர்.
“போதும் நிறுத்துடி… நான் டென்த் பாஸ்… நீ மட்டும் தேவையில்லாம ஒரு சின்ன பிரச்சனையைப் பெருசாக்காம இருந்திருந்தா நான் மேலே படிச்சிருப்பேனாக்கும்” என்றான்.
“நீ லவ் லெட்டர் கொடுத்தது சின்ன பிரச்சனையா? இதுல அதையும் நீ தப்பு தப்பாதான் எழுதிக் கொடுத்த? அந்தக் கன்றாவியை எங்க யாரலையும் படிக்கவே முடியல… இதுல இவங்க அப்படியே மேலே படிச்சு கிழிச்சு இருப்பாங்களாக்கும்” என்றவள் எள்ளல் செய்யவும், அரசனுக்கும் செல்விக்கும் சிரிப்பு தாளவில்லை.
“உங்க அக்காவை நம்பாதே மச்சான் அவ பொய் சொல்றா?” என்றான்.
“எது பொய்?” என்றவள் உறுத்து பார்க்க சந்திரன் அரசனிடம்,
“என்னைய பிடிக்காத மாதிரியே உங்க எல்லோர்கிட்டயும் நடிச்சு போட்டு இருந்தா இல்ல… அது பொய்தானே மச்சான்” என்ட்று அவன் தோளில் கைப் போட்டு ரகசியம் பேசினான்.
“இப்ப அவன் உன்கிட்ட என்ன சொன்னான்?” என்று தமிழ் அரசனிடம் கேட்க,
“சொல்லிடாத மச்சான்… புறவு உங்க அக்கா என்னைய வகுந்து போடுவா” என்று சந்திரன் குரலைத் தாழ்த்திச் சொல்ல அரசன் இம்முறை சத்தமாகச் சிரித்துவிட்டான்.
தமிழும் செல்வியும் ஒருவர் முகத்தைப் பார்த்து வியப்பைப் பரிமாறிக் கொண்ட அதேநேரம், “என்னடா நடக்குது இங்க? அவன் என்ன சொன்னான்… ஒழுங்கா சொல்லு” தமிழ் முறைப்பாக தம்பியிடம் கேட்கவும் அரசன் சந்திரனைப் பார்த்துவிட்டு,
“அது ஒன்னும் சொல்லலைங்க க்கா” என்று மழுப்பிவிட்டான்.
“அடப்பாவி” என்று தமிழ் அதிர,
“மாமன் மச்சான் உறவுன்னா லேசுல நினைச்சுட்டீங்களா?” என்று சந்திரன் பெருமிதமாகச் சொல்ல,
“என்ன திடீர்னு மாமன் மச்சான் அன்பு பொங்குது” என்று தமிழ் சொல்ல செல்வி அப்போது,
“நீங்கதான் அவனை மச்சான்னு சொல்றீங்க… அவன் உங்களை மாமான்னு கூப்பிட மாட்டுறானே” என்றாள்.
“அவன் மாமான்னு கூப்புடுலன்னா எங்க மாமா மச்சான் உறவு இல்லன்னு ஆகிடுமாக்கும்” என்றவன் மேலும்,
“இவன் இல்லன்னா என்ற காதல் கைக் கூடியிருக்குமா? இல்ல எனக்கும் தமிழுக்கும் கண்ணாலம் நடந்திருக்குமா? யாருக்குக் கிடைப்பான் இப்படி ஒரு தெய்வ மச்சான்” என்றவன் சொல்லிக் கொண்டே அரசன் தோளில் தன் கையை இருக்க,
“நீ என் தம்பிக்கு சப்போர்ட் பண்ற மாதிரி தெரியலயே… நக்கலடிக்குற மாதிரி இருக்கே” என்று தமிழ் சொல்லி சிரிக்க,
“எனக்கும் அப்படித்தானுங்க க்கா தோனுது” என்று சொல்லி செல்வியும் சிரித்தாள்.
அரசன் ஏதும் புரியாமல் சந்திரனைப் பார்க்க, “சத்தியமா நான் நக்கலடிக்கல மச்சான்… அவளுங்க வேணும்டே நம்ம மாமன் மச்சான் உறவுல புகுந்து ஊடால கபடி விளையாடுறாங்க” என்றவன் சமாளிக்க தமிழ் உடனே,
“யாரை வேணா நம்பு… ஆனா அவனை மட்டும் நம்பாத அரசா” என்றாள்.
“போடி போடி… அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்” என்றவன் அரசனிடம் திரும்பி, “நீங்க என்ன சொன்னாலும் அவன் எனக்கு தெய்வ மச்சான்தான்” என்றான்.
“டே முடியலடா ரொம்ப ஓவரா இருக்கு” என்று தமிழ் கடுப்பாக,
“சும்மா மச மசன்னு நிற்காம போய் சமைக்கிற வேலைய பாருடி… புள்ளைங்க எல்லாம் வந்திருக்காங்க… பசிக்குது” என்றவன் திரும்பி, “என்ன மச்சான் பசிக்குதுதானே?” என்று கேட்க அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆமாம் இல்லையென்று இருபுறமும் அவன் குழப்பத்தில் தலையசைக்க தமிழும் செல்வியும் அவன் சந்திரனிடம் மாட்டிக் கொண்டு விழிப்பதைப் பார்த்து சிரித்து சிரித்து ஓய்ந்து போயினர்.
அவர்கள் புறப்படும் வரை வீடே கலகலப்பாக இருந்தது. அவர்கள் உணவு உண்டு முடித்து கிளம்பும் தருவாயில் சந்திரன் ஒரு பை நிறைய கொய்யா பழங்களைப் பறித்துவந்து, “இந்தா மச்சான்… உனக்கு கொய்யா பழம்னா ரொம்ப பிடிக்கும்னு உங்க அக்கா சொன்னா” என்று அதனை அவனிடம் கொடுத்தான்.
“இது உலக மகா நடிப்புடா சாமி” என்று தமிழ் வாயிற்குள் முனங்க,
இதற்கிடையில் செல்வி முகத்தைச் சுருக்கிக் கொண்டு, “என்ன மாமா நீங்க… எனக்கு எதுவும் இல்லையா? அவனுக்குப் பிடிச்சது மட்டும்தான்னே” என்க,
“உனக்கு மாம்பழம்தானே பிடிக்கும்… அது இப்போ சீசன் இல்லையே செல்வி… மாம்பழம் சீசன் வந்ததும் மாமா உனக்கு கூடை கூடையா வாங்கி தரேன்” தமிழுக்கு கணவனின் சமாளிப்புகளைக் கேட்டு தாங்க முடியாமல் வாயைப் பொத்திக் கொண்டாள்.
“நல்லா சமாளிக்குறீங்க மாமோய்” என்று செல்வி சொல்லிவிட்டு,
“சரிங்க க்கா நாங்க புறப்படுறோம்… வரேன் மாமா” என்றவள் வெளியேறிவிட, “வரேனுங்க க்கா” என்று அரசன் தயங்கித் தயங்கி, “போயிட்டு வரேனுங்க மாமா” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
சந்திரன் மனைவியைப் பார்த்து கண்ணடித்து, “என்னவோ என் தம்பியை மாமான்னு கூப்பிட வைச்சு காட்டுன்னு சாவல் வுட்ட இல்ல… பார்த்தியா? கூப்பிட வைச்சுட்டேன்” என்று பெருமை பொங்க சொல்ல,
“பெரிய ஆளுதான்டா நீ… ஏதோதோ சால்ஜாப்பு பண்ணி என் தம்பியை மாமான்னு கூப்பிட வைச்சிட்ட” என்று அவள் புகழ, “இந்த வாயாலேயே வடை சுடுற வேலையெல்லாம் வேண்டாம்டி” என்றவன் சொல்ல,
“புறவு எப்படி சுடோணோம்?” என்றவள் கேட்கும் போதே அவள் இடையை அழுந்த பற்றி இழுத்து அவள் இதழ்களில் தீவிரமாக முத்த லீலைத் தொடங்கினான்.
நாட்கள் நகர நகர அவர்கள் நிலத்தைப் போல அவர்கள் உறவும் உயிரும் ஊட்டமும் பெருகிய வண்ணம் இருந்தது.
அதுவல்லாது அரசன் அவர்கள் வீட்டுக்கு வந்து போவதும் வாடிக்கையானது. சந்திரனுக்கும் அவனுக்குமான மாமா மச்சான் உறவு மேலும் பலப்பட தொடங்கியது.
31

Quote from Marli malkhan on May 17, 2024, 2:07 AMSuper ma
Super ma