You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Esther Joesph- நானும் நாவலும்

இந்த பதிவை குறித்த உங்கள் கருத்து
சிறப்பு
மிக சிறப்பு
Quote

வாழ்த்துக்கள் எஸ்தர் 

உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். 

உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.

 

Uploaded files:
  • reading-quote.jpg
Quote

Hai

நானும் நாவலும்

இது எனக்கு ரொம்ப பொருத்தம்.. ஏன்னா என் வாழ்க்கையின் முக்கால்வாசி நேரம் நாவல்ல தான் போகுது...என் வாழ்க்கை பசுமையா இருக்க நாவல்தான் காரணம்.. முதல்முதலாக என்னை போட்டு தாக்கிய நாவல் சித்ராங்கதா.. அட அட கதையா அது... காவியம் காவியம்.... அந்த உலகத்துல மாச கணக்குல இருந்தேன்... அப்புறமா தான் ரமணிசந்திரன் குழு மூலமா நிறைய சைட் தெரிஞ்சு இப்போ எல்லா சைட்லயும் படிக்கிறேன்

எந்த அளவிற்கு படிக்கிறேன்னா தூக்கம் வரவரைக்கும் படிக்கலாம்னு ஆரம்பிக்கற கதைகளை ஃபுல்லா முடிச்சிட்டு தான் தூங்கிருக்கேன்..சாப்பிடும்போது ஏன் பைக் டிராவல் ஏன் பாத்ரூம்ல கூட நா நாவல் படிச்சிருக்கேன்.. சார்ஜ் இல்ல என்ன விட்டுடுனு என் மொபைல் கதறுன கூட சார்ஜ் போட்டு பக்கத்தில் உட்கார்ந்து படிப்பேன்.. பசி தூக்கம் மறந்து புருஷன் பிள்ளையை மறந்து கூட படிச்சிருக்கேன்‌‌... நாவல் அதானே எல்லாம்...

எவ்வளவு மன வருத்தம் வேதனை இருந்தாலும் அதுல இருந்து வெளியே வர எனக்கு உதவியது இந்த நாவல்கள்தான்...
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் பாடல் வரும் அந்த மாதிரி என்னோட தனிமையை போக்க நாவல் இல்லாட்டி கண்டிப்பா பைத்தியமாகி இருப்பேன்...அமைதியா நானும் என் நாவலும்னு என் வாழ்க்கை சந்தோஷமாக போகுது....

ஒரு சில கதைகள் படிக்கும்போது அந்த கதைமாந்தர் கூடவே நானும் பயணிக்கிறேன்.. அவங்களோட வாழுறேன்..அவங்க அழுதா அழுது சிரிச்சா சிரிச்சு அப்படியே அந்த கதைகுள்ள நா போயிடுவேன்..நல்ல கதை படிச்சு முடிச்சதும் கிடைக்கிற நிறைவு அது வார்த்தையில் சொல்லி மாளாது....அது வேற ஃபீல்...

நிறைய படிச்சாலும் எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர்.... மல்லிகா மணிவண்ணன்... அவங்க எழுத்தை ஒன்னுக்கு நூறு முறை படிச்சாலும் ஒவ்வொரு முறையும் நான் மயங்கி தான் போறேன்...😍😍😍

நன்றி

Quote

உங்க அனுபவம் ரொம்ப class ஆ இருந்துச்சு எஸ்தர் 

அட அட அடா என்ன ஒரு ரசனையான வாசகி 

பாத்ரூம்ல கூட கதை படிப்பன்னு சொன்னதெல்லாம் வேற லெவல் 

உங்க வார்த்தையில் ஆழமான உண்மை இருக்கு... பல நேரங்களில் பெண்களின் தனிமை போக்கும் சிறந்த மருந்து புத்த்காமாகவே இருந்திருக்கிறது. மற்ற பழக்கங்களை விட நாவல் படிக்கும் பழக்கம் ரொம்பவும் ஆரோக்கியமானது .  

உங்கள் வாசிப்பு பயணம் இனிதே தொடர என் வாழ்த்துக்கள் 

You cannot copy content