மோனிஷா நாவல்கள்
Iru Thruvangal - Episode 18

Quote from monisha on July 18, 2025, 12:52 PM18
காதலும் யுத்தமும்
வேகமாய் நகர்ந்து கொண்டிருந்த காரில் விந்தியாவும் சந்திரகாந்தும் மும்முரமாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
“உன் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கும்மா” என்றார் சந்திரகாந்த்.
“இல்ல மாமா... நீங்க சொல்றது சரியா வராது. அதோட நம்பிக்கை வேற... பிராக்டிக்கல் வேற” என்றாள்.
“நோ ஆர்க்யுமென்ட்ஸ்... நீதான் இனிமே ஹோட்டல் எம். டி” என்றார்.
“இல்ல மாமா... ஆதித்தியா நிர்வகிப்பதுதான் சரியா இருக்கும்” என்றதும் சந்திரகாந்த் லேசாகப் புன்னகை புரிந்தார்.
“ஆதித்தியாவிற்கு ஹோட்டல் பிஸ்னஸில் துளி கூட இன்ட்ரஸ்ட் இல்லை... ஹி ஹேஸ் சம் அதர் ஐடியா. அது மட்டும் கரெக்டா வொர்க் அவுட் ஆச்சினா அவன் வெற்றி வேற லெவலில் இருக்கும்” என்று சந்திரகாந்த் சொல்லிக் கொண்டிருக்கும் போது கார் ஒரு பிரமாண்டமான வீட்டின் முன்னிலையில் நின்றது.
அந்த வீட்டின் வாசலில் இருந்த பெயர் பலகையில் திருமூர்த்திப் பி. ஏ. பி. எல். என்றும், சமுத்திரன் எம். ஏ. பி. எல் என்றும் பொறிக்கப்பட்டிருந்தது.
விந்தியாவும் சந்திரகாந்தும் உள்ளே நுழைய திருமூர்த்தி சந்திரகாந்த்தை கட்டியணைத்துக் கொண்டார். திருமூர்த்தி விந்தியாவையும் நலம் விசாரித்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் சுபா அவள் செய்யும் வேலையைப் பாதியில் நிறுத்தியபடி வந்து சந்திரகாந்த்தையும், விந்தியாவையும் பற்றோடு விசாரித்தாள்.
“எங்க என் பேரப்பிள்ளைங்க? கூப்பிடு சுபா” என்றார் சந்திரகாந்த்.
“இதோ அங்கிள்... கூப்பிடறேன் “ என்று சொல்லி, “சுபாஷ்... சமுத்திரா...” என்று உரக்கக் கத்தினாள்.
அவர்கள் இருவரும் மாடியிலிருந்து இறங்கி ஓடி வந்தனர். அவர்களின் முகச்சாயலே அவர்களை இரட்டை குழந்தைகளென தெளிவாய் காண்பித்தது. விந்தியா அவர்கள் இருவரையும் ஆர்வமாய் கன்னங்களைக் கிள்ளி கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
“அண்ணிக்கு குழந்தைங்கன்னா ரொம்ப இஷ்டம் போல... அப்போ நீங்களூம் சீக்கிரம் ஒண்ணைப் பெத்துக்கோங்க” என்றாள்.
“மழலைகளை விரும்பாதவங்க யாராவது இருக்க முடியுமா?” என்றாள் விந்தியா.
அந்த நேரத்தில் அந்த இரு வாலுகளுக்கும் சந்திரகாந்த் வாங்கி வந்த சாக்லேட், பிஸ்கேட் அனைத்தையும் சமமாகப் பிரித்துக் கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு ஓடி விட விந்தியா “ஸோ க்யூட்”என்றாள்.
“கல்யாணத்தின் போதே உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்... ஆனா டைமே கிடைக்கல” என்று சுபா விந்தியாவிடம் சொல்ல,
“இப்பதான் டைம் இருக்கே... கூட்டிட்டு போய் ஆசத்தீர பேசு” என்றார் சந்திரகாந்த்.
சுபா அவளை மாடிக்கு அழைத்துச் சென்றாள். அங்கே இருந்த பெரிய பலகை ஊஞ்சலில் அமர்ந்தபடி நிறைய கதைகள் பேசிக்கொண்டிருந்தனர்.
பேசி கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது... சுபா ஓயாமல் பேச விந்தியா அவற்றைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். சந்திரகாந்த், திருமூர்த்தியின் நட்பு பற்றியும் சமுத்திரன், ஆதியின் இன்று வரையிலான நட்பு பற்றியும் விளக்கமாய் சுபா சொல்லிக் கொண்டிருந்தாள்.
“என்ன அண்ணி... நான் பேசி பேசி உங்கள போரடிக்கிறேனோ?”
“இல்லவே இல்ல... நீ பேசிற விதத்தைப் பார்க்க அப்படியே என் தங்கை வனிதா மாதிரியே இருக்கு” என்றாள் விந்தியா.
“எனக்கு அந்தக் கொடுப்பனை இல்ல. நான் ஒரே பொண்ணு... என்னோட வீட்டுகாரருக்கும் கூடப் பிறந்தவங்கன்னு யாரும் இல்லை.” என்றாள் சுபா லேசான வருத்தத்துடன்.
“நீயும் இனிமே என்னோட சிஸ்டர்தான்... சரி... உங்க அம்மா வீட்டில இல்லையா?”
“அவங்க கோவிலுக்குப் போயிருக்காங்க... கடவுளே எழுந்து வெளியே போனு சொல்ற வரைக்கும் அவங்க வரமாட்டாங்க” என்றாள்.
“சரி சுபா... நீ என்ன பண்ணிட்டிருக்க?”
“இந்த வாலுங்களை மேய்க்கிறேனே... அதுதான் என்னோட பெரிய வேலை. எங்க அப்பா என்னைப் பி. ஏ. பி. எல் படிக்க வைச்சிருக்காரு. பட் நோ யூஸ்... படிச்சதும் கல்யாணம்... அப்புறம் குழந்தைங்க... பிராக்டீஸ் பண்ண நேரம் கிடைக்கவே இல்லை” என்றாள்.
விந்தியா மெலிதான சிரிப்போடு சொன்னாள்.
“எல்லா வேலைகளுக்கும் பெண்களுக்கு நேரமிருக்கும்... ஆனால் அவங்களுக்காக என்று கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியாது. உனக்கான நேரத்தை ஒதுக்கினாத்தான் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும் சுபா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாடியின் அறை கதவை திறந்து கொண்டு வெள்ளை உடையில் சமுத்திரன் வந்தான்.
“அவரு கோர்ட்டுக்கு கிளம்பிட்டாரு” என்று சுபா சொல்லிக் கொண்டிருக்கும் போதே சமுத்திரன் அவர்களை நோக்கி நடந்து வந்தான்.
சுபாவிடம் கண் ஜாடையிலேயே யாரென விந்தியாவைப் பார்த்து கேட்டான்.
“ஆதி அண்ணனோட வைஃப்” என்றாள் சுபா.
“என் ஹஸ்பெண்ட். சில காரணங்களால் கல்யாணத்துக்கு வர முடியாமல் போயிடுச்சு... அதனால்தான் உங்களை அடையாளம் தெரியல அண்ணி” என்று விந்தியாவைப் பார்த்து உரைத்தாள்.
விந்தியா இயல்பான புன்னகையோடு சமுத்திரனை பார்த்தாள்.
“ஹெலோ விந்தியா! பார்த்ததில்லை… ஆனா உங்கள பத்தி அப்பா நிறையச் சொல்லியிருக்காரு. ஐம் சமுத்திரன்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
“மாமா உங்கள பத்தியும் நிறையச் சொல்லியிருக்காரு சமுத்திரன்” என்றாள் விந்தியா.
சமுத்திரன் சுபாவை பார்த்து “காபி கொடுத்தியா?” என்று கேட்டதும், சுபா முகபாவத்திலேயே ‘இல்லை’ என்பது போல் தெரிவித்தாள்.
“வாய் ஒயாம பேசு... ஆனா மத்த எல்லாத்தையும் மறந்துடு... போங்க மேடம்... பேசுறதை நிறுத்திட்டு காபி எடுத்துட்டு வாங்க” என்றான்.
விந்தியா முந்திக் கொண்டு, “இல்ல வேண்டாம்மா” என்றாள்.
“நீ போய் எனக்கு எடுத்துட்டு வா” என்று சுபாவிடம் அதிகாரமாய்ச் சொன்னான்.
சுபா படியிறங்கி சென்று விட சமுத்திரன் விந்தியாவைப் பார்த்தபடி நிற்க, அவள் கொஞ்சம் இறுக்கமாக நின்று கொண்டிருந்தாள். அங்கே நிலவிய மெளனத்தைச் சமுத்திரன் கலைத்தான்.
“ஆதியோட கேரக்டர் பத்தி தெரிந்தும் நீங்க அவனைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்களே... பெரிய விஷயம்” என்றான். அவன் சொல்வதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் விந்தியா அமைதியாக நின்றாள்.
“ஆனா பணமும் சொத்தும் ஏராளமாக இருந்தா குணத்தைப் பத்தி கவலை இல்லை... என்ன சொல்றீங்க விந்தியா?” என்று சமுத்திரன் விந்தியாவை தன் வார்த்தைகளால் தாக்கினான்.
சமுத்திரன் விந்தியாவைக் காயப்படுத்தும் விதமாகவே பேசினான்.
இருப்பினும் விந்தியா சலனமற்று நின்று கொண்டிருந்தாள். அவளின் மன ஒட்டத்தை அறிந்து கொள்வது அத்தனை சுலபமல்ல. சமுத்திரன் அவளின் அமைதியை அவனுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து விந்தியாவின் மீது வார்த்தைகளால் தாக்கிக் கொண்டிருந்தான்.
“அப்பா சொல்றது போல எம். டி என்ற பொறுப்பு அவ்வளவு சுலபமானதல்ல... சொகுசா வாழற மாதிரியில்லை பொறுப்புகளையும் பதவியையும் சுமப்பது.
ஸ்டேட்டஸ்னு ஒண்ணு இருக்கில்லை... அத பத்தியும் கொஞ்சம் யோசிக்கணும். புலி மாதிரி பூனை கோடு போட்டு கொண்டால் அது புலியாகிடுமா என்ன?” என்று சமுத்திரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுபா காபியுடன் மாடியேறி வந்தாள்.
சுபாவின் முன்னிலையில் அவனின் பேச்சும் பார்வையும் மாறியிருப்பதை விந்தியாவால் உணர முடிந்தது. சிறிது நேரத்தில் சமுத்திரன் பேசுவதை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றதும் விந்தியாவும் சுபாவும் பின்னோடு இறங்கி வந்தனர்.
சந்திரகாந்த் விந்தியாவின் பெயரில் பொறுப்புகளை மாற்றுவதற்கான சில பத்திரங்களைத் தயாரிப்பது பற்றித் திருமூர்த்தியிடம் பேசிக் கொண்டிருக்க, சமுத்திரனின் முகம் கடுகடுவென மாறியிருந்தது.
திருமூர்த்தி விந்தியாவைப் பார்த்து, “விந்தியா... உன் மாமனார் இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுக்க நினைக்கிறாருனா... அது உன் மேல இருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்” என்றார்.
“ஆனா என் மருமகளுக்கு என் முடிவில விருப்பமில்லையே” என்றார் சந்திரகாந்த்.
விந்தியா சிரித்துக் கொண்டே, “இல்ல மாமா... நீங்க சொல்வதைப் போல நான் ஹோட்டல் பொறுப்புகளைக் கவனிச்சுக்கிறேன்... ஆனா எம். டி போஸ்ட்டில் இல்ல. கொஞ்ச நாள் எல்லா விஷயங்களையும் கத்துக்கிட்டு நிர்வகிக்கும் திறமையை வளர்த்துக்கிட்ட பிறகு” என்று விந்தியா சமுத்திரனை ஏளனமாய்ப் பார்த்தபடி சொன்னாள்.
“ஆமாம் மாமா. ஆனா என்னைச் சம்மதிக்க வைத்த கிரெடிட் முழுக்க மிஸ்டர். சமுத்திரனைதான் சேரும்... என்னோட கிளாஸ்... ஸ்டேட்டஸ்... எல்லாவற்றையும் தெளிவா சொல்லி புரிய வைத்தார்” என்று சொல்ல சமுத்திரன் அவளின் செயலால் கொஞ்சம் திகைத்து நின்றான்.
சந்திரகாந்த் சமுத்திரனை வெகுவாகப் பாராட்டிவிட்டு விந்தியாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அங்கே சமுத்திரன் பேசியதை பற்றி விந்தியா யோசிக்கும் போது அவன் மீது கோபத்தைவிடக் குழப்பமே அதிகமானது.
ஆனால் விந்தியாவைச் சந்தித்த பின் சமுத்திரன் தெளிவாகவே இருந்தான். அவன் விந்தியாவிற்கும் ஆதித்தியாவிற்கும் இடையிலான உறவை காதலாக மாற்றுவதா அல்லது யுத்தமாக மாற்றுவதா என்று.
18