You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 14

Quote

14

இரு துருவங்கள்

விந்தியாவின் கண்கள் சிவாவை சுற்றிலும் தேட இறுதியில் அவன் வரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டாள். மனதில் ஏற்பட்ட வருத்தத்தை மறைத்தபடி மணமேடையில் ஏறினாள்.

மணமகள் மாலை அணிந்து கொண்டு வெட்கத்தோடு தலைகவிழ்ந்து வருவாள் என நாம் இலக்கியங்களில் படித்திருப்போம். ஆனால் விந்தியா அவற்றிற்கு நேர்மாறாய் நிமிர்ந்த தலையும், நேர்த்தியான நடையும் அபிநயமாய்ப் பேசுகின்ற விழிகளோடும் மணமேடை ஏறினாள்.

இத்தனை நேரம் ஆதித்தியா என்ன செய்து கொண்டிருப்பான் என்று நம் வாசகர்களுக்குத் தோன்றலாம். கண்களை மறைத்த புகையிலிருந்து மீண்டவனாய் விந்தியா வந்து கொண்டிருந்த திசையில் பார்த்தவன் பிரமித்துப் போனான் என்று சொன்னாலும் மிகையாகாது.

ஒயாமல் பேசிக் கொண்டிருந்தவன் ஊமையாய் மாறிப்போனானோ? அவன் பார்த்துப் பழகிய பெண்களை எல்லாம் க்யூட்டி, பியூட்டி, சாம்மிங், பேபி என்று வர்ணனையோடு அழைப்பதுண்டு. ஆனால் விந்தியாவின் பூர்த்தியான மரியாதைக்குரிய அழகிற்கு இந்த வார்த்தைகள் எல்லாம் சற்றும் பொருந்தாது.

அவளின் அழகு ஒரு முழுமையடைந்த கம்பீரமான ஒன்று. மதியை மயக்கும் அழகல்ல. மதியைத் தெளிவுறச் செய்யும் அழகு. விந்தியா மேடையிலிருந்த மாதவியின் கால்களில் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு மனையில் அவன் அருகில் அமரும்வரை ஆதி மலைத்துபோனபடி பார்த்திருந்தான்.

முன்னாடியே இவளை பார்த்துவிடாமல் போனோமே என அவன் மனம் ஏங்கிய போது, அவன் மூளை சொன்னது

“நோ ஆதி... டோன்ட் கெட் சோ இம்பிரஸ்ட். இது மேரஜ் இல்ல வெறும் கமிட்மன்ட்”

ஆதியின் மூளை அவனைச் சுதாரிக்கச் சொல்ல அவன் மனம் விந்தியாவின் அருகாமையில் கொஞ்சம் பலவீனமாய் மாறியது. இத்தனை நேரமாய் அவன் பார்வை விந்தியாவிடம் லயித்திருக்க அவள் ஒரே ஒரு முறை கூட அவனைத் திரும்பி பார்க்கவில்லை.

அவள் வெட்கப்படுகிறாளோ என்ற கேள்விக்கு இடமேயில்லை. அவள் பார்வையிலோ முகத்திலோ அதற்கான அறிகுறியே தெரியவில்லை. அந்தப் பார்வையில் ஒரு அலட்சியம் நிறைந்திருந்தது. சுற்றியுள்ள அனைவரையும் பார்த்து புன்னகையோடு அபிநயமாய் விசாரிக்கும் அவள் முகம் அவனைப் பொருட்படுத்தவே இல்லை.

 இது ஆதியின் கற்பனை என்று நம் வாசகர்களுக்கு தோன்றலாம். ஆதியின் கணிப்பு சரியாகவே இருந்தது. விந்தியா அவனைப் பாராமுகமாய் அலட்சியம் செய்தாள்.

அதன் காரணத்தை அவன் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்க, “கெட்டி மேளம்... கெட்டி மேளம்...” என்ற உரக்க சத்தம் கேட்க மேளங்கள் முழங்க வருண் நந்தினியின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான்.

ஆனால் அந்த நிரகராப்பை தாண்டி ஐயர் நீட்டிய தாலியை விந்தியாவின் கழுத்தில் கட்ட ஆதி தயங்கினான். அதற்குக் காரணம் அப்பொழுதேனும் அவனை அவள் கவனிப்பாளா என்று!

“கட்டுங்கோ...” என்று ஐயர் கதற, பின்னோடு சந்திரகாந்த் “கட்டுடா...” என்று சொல்லவும் வேறுவழியின்றி ஆதி விந்தியாவின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான்.

அந்தச் சமயத்திலும் விந்தியா அவனைக் கவனிக்காமல் அமர்ந்திருந்தது அவள் திமிரும் தலைகணமும் பிடித்தவள் என அவன் மனதில் ஆழ பதிய வைத்தது. அவர்கள் இருவரும் மனதளவில் இரு துருவங்களாய் ஒரே மேடையில் வீற்றிருந்தனர்.

எல்லா சடங்குகளும் நிறைவுற்றது. மண்டபத்தின் வாசலில் இரு கார்கள் வந்து நின்றன. வருணும் நந்தினியும் ஒரு காரில் நந்தினி குடும்பத்தாருடன் அவள் வீட்டுக்கு சென்றனர்.

இன்னொரு பிரம்மாண்டமான வெள்ளை நிற புதுக் கார் சிவப்பு ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சந்திரகாந்த் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க ஆதியும் விந்தியாவும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

மாதவி, வனிதா, சிந்துவும் பின்னாடியிருந்த கடைசி இருக்கையில் வீற்றுக் கொண்டனர். விந்தியா ஆதி விட்டு ரொம்பவும் இடைவெளியில் அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

விந்தியாவின் வீட்டு வாசலில் நிற்கும் வரை ஆதிக்கு அவள் சாதாரண மிடில் கிளாஸ் என்பதே தெரியாது. அவர்கள் உள்ளே நுழைய ஆரத்தி எடுத்து, மற்ற சடங்குளை எல்லாம் செய்து முடித்ததும், விந்தியா தன் அறையில் நுழைந்து எடுத்து வைக்க மறந்த சில பொருட்களைத் திணித்துக் கொண்டிருக்க… பின்னோடே ஆதி நுழைந்ததைக் கவனிக்கவில்லை.

அவளின் பின்பக்கம் ஆதி வர, விந்தியா அவள் திரும்பிய கணத்தில் ஓர் உயரமான கம்பம் போல் நின்றிருந்த அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் நழுவி போக பார்த்தவளின் ஒரு கையை அழுத்தி பிடித்தபடி, “வாட்ஸ் யுவர் பிராப்ளம்?” என்றான்.

அவனுடைய பிடி இறுக்கமாய் வலிக்க, “தோ வர்றேன் மாமா” என்றாள் விந்தியா.

அவ்வளவுதான். ஆதியின் பிடி நழுவ விந்தியா அங்கிருந்து வெளியே சென்றுவிட்டாள். ஆதி திரும்பிப் பார்த்து ஏமாந்து விட விந்தியா தப்பித்து விட்ட கோபத்தால், “எவ்வளவு தூரம் ஓடுவ... பார்க்கிறேன்” என்றான்.

டிரைவர் விந்தியாவின் பொருட்கள் மற்றும் பெட்டி எல்லாம் வண்டியில் ஏற்ற, எல்லோரும் விந்தியாவை அழுது கொண்டு வழியனுப்பினர்.

“விந்தியா என்னோட மகள் மாதிரி... நான் பார்த்துக்கிறேன்“ என்றார் சந்திரகாந்த்.

ஆதிக்கு அந்த நாடகங்களைப் பார்க்க விருப்பமின்றி காரில் சென்று அமர்ந்து கொண்டான். விந்தியா கண்களைத் துடைத்துக் கொண்டு அமர்ந்து கொள்ள, “சோ சேட்... அவ்வளவு கஷ்டப்பட்டெல்லாம் நீ வரணுமா என்ன?” என்றான்.

விந்தியா கோபப்பட்டு ஏதேனும் பதில் பேசுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமும் வெறுப்புமே மிச்சம்.

விந்தியாவோடு சிந்துவையும் வனிதாவையும் அன்று ஒரு நாள் துணைக்கு அனுப்பி வைத்தனர். சிந்து ஆதிக்கும் விந்தியாவுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டாள்.

“உன் பெயர் என்ன பேபி?”

“நான் உங்ககிட்ட பேசமாட்டேன்” என்றாள் சிந்து மழலையாக.

‘நீயுமா?’ என்று மனதில் நினைத்தவனாய், “ஏன் பேபி?”என்றான்.

“நீங்க எங்க பெரிம்மாவை கூட்டிட்டு போறீங்க”

“நான் என்னவோ உங்க பெரியம்மாவை வலுக்கட்டாயமா கடத்திட்டு போற மாதிரி இருக்கே... அவங்களாகவே வர்றாங்க... நீயே கேட்டுப்பார்”

“அப்படியா பெரிம்மா?” என்று விந்தியாவின் பக்கம் திரும்பி கேட்டாள் சிந்து.

“ஆமாம்... யாராவது உங்க பெரியம்மாவை விருப்பமில்லாம கூட்டிட்டு போக முடியுமா என்ன?” என்றாள் விந்தியா.

இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்க, சிறிது நேரத்திற்கெல்லாம் சிந்து ஆதியின் மடியில் அமர்ந்திருந்தாள். அவனும் அவளிடம் மழலையாகப் பேசி விளையாடிக் கொண்டிருந்தான்.

சந்திரகாந்த்தின் இல்லத்தை அடைந்தனர். அந்த இல்லத்தின் பிரம்மாண்டத்தை ஆதியின் நிச்சயத்தின் போதே குறிப்பிட்டுள்ளோம். இம்முறையும் அலங்காரம் ரொம்பவும் பிரமாதமாய் இருந்தது.

விந்தியா உள்ளே நுழைந்தவுடன் பூஜை அறையில் விளக்கேற்றினாள். கூடவே ஆதியின் அம்மா சங்கரியின் ஃபோட்டோவின் முன் வணங்கி விளக்கேற்றினாள். சந்திரகாந்த் வேலைக்காரன் சண்முகத்தை அழைத்து விந்தியாவையும் வனிதாவையும் ஆதியின் அறைக்கு அழைத்துச் செல்ல சொன்னார்.

ஆதி அப்படியே அவன் அம்மாவின் ஃபோட்டோவின் முன்பு நின்று கொண்டு சந்திரகாந்திடம், “நான் உங்கக்கிட்ட பேசணும்“ என்றான்.

அவர்கள் இருவருமே முகத்தைப் பார்த்து பேசிக் கொண்டதேயில்லை. அவனும் சந்திரகாந்தை ‘அப்பா’ என்று அழைப்பதும் இல்லை.

ஆதியின் குரல் கேட்டு, “என்ன பேசணும்?” என்று திரும்பினார்.

“உங்க டிமான்ட்தான் நடந்துடுச்சே... இட்ஸ் மை டர்ன்” என்றான்.

“சரி... உன்னோட பிஸ்னஸ் ஐடியா பத்தின டீடைல்ஸ், டீப் அனலைஸேஷன், எஸ்டீமேஷன்... இதெல்லாத்தையும் எனக்கு நீ கொடுத்த பிறகு... நான் ஒன் மன்த்தில ப்ரொசீட் பண்றேன்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்து சென்றுவிட்டார்.

ஆதித்தியா கோபம் தலைக்கேற, அவன் அம்மாவின் ஃபோட்டோ முன்பு, “பாத்தியாம்மா... உன் புருஷன் ஏதோ பேங்க் மேனேஜர் மாதிரி பேசிட்டு போறதை… இவர்கிட்ட என்னை மாட்டிவிட்டுட்டு போயிட்ட. இவரு என்னை ஒரு திமிரு பிடிச்சவக்கிட்ட மாட்டி விட்டுடட்டாரு” என்று புலம்பினான்.

வனிதா எதேச்சையாகக் கீழே வர ஆதியின் பேச்சை எல்லாம் கேட்டபடி நின்றுவிட்டாள். ஆதியும் அவளைக் கவனித்தான். வனிதா மாடியில் விந்தியா இருந்த அறைக்குப் பதட்டத்துடன் செல்ல படிக்கெட்டு லேசாக அவள் காலினை இடறிவிட்டது.

“பாத்து போங்க... இது உங்க வீடு மாதிரி நினைச்சீங்களா? கிரானைட். பொறுமையாகத்தான் நடக்கணும். உங்க அக்காகிட்டேயும் போய் சொல்லுங்க” என்றான் ஆதி திமிராக.

அவன் சொன்ன வார்த்தை அவர்களின் ஸ்டேட்டஸ் பற்றியது என்பது வனிதாவிற்குப் புரியாமலில்லை.

ஆதியின் அறையில்தான் விந்தியா அவள் உடைகளை மாற்றிக் கொண்டு வானின் நிறத்தில் ஒரு புடவையை உடுத்திக் கொண்டு ரொம்பவும் இயல்பான அலங்கரிப்போடு இருந்தாள்.

அந்த அறை முழுவதும் பூவின் வாசம் கமகமவென்று வீசிக்கொண்டிருக்கப் படுக்கையறை முழுவதும் பூக்கள் தூவப்பட்டிருந்தன. சந்திரகாந்த்தின் வீட்டைச் சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருக்க அந்த வெளிச்சத்தில் சந்திரனே மங்கியபடி காட்சியளித்தான்.

விந்தியா கண்ணாடியின் முன் குங்குமத்தை நேர்த்தியாக இட்டுக் கொண்டே வனிதாவை நோக்கி கேட்டாள்.

“என்னதான்டி உன் பிரச்சனை? எதுக்குடி அழற? குழந்தை வேற தூங்கிட்டா. தேம்பி தேம்பி அவள வேற எழுப்பி விட்டுடாதே” என்றாள்.

கடைசியில் கொஞ்சம் மனதை தேற்றிக் கொண்டு நடந்தவற்றை உரைத்தாள். விந்தியா தலையிலடித்துக் கொண்டு சிரித்தாள். வனிதாவிற்கு அவளின் அக்காவின் செயல் ஒன்றும் புலப்படவில்லை.

“உன்னை எப்படிக்கா அவர் சந்தோஷமா பாத்துப்பாரு?”

விந்தியாவிற்கு மீண்டும் சிரிப்புதான் வந்தது. வனிதாவை அருகில் அழைத்து அவள் கண்களைத் துடைத்தாள்.

“ஏன் வனிதா... உனக்குக் கிடைச்ச மாதிரி கணவன் யாருக்காச்சும் அமையுமா? அந்த வாழ்க்கையில நீ சந்தோஷமா இருக்கியா?” என்று அவள் கேட்ட கேள்வி வனிதாவின் நெற்றி பொட்டில் அடித்தது போல் தோன்றியது. அவள் பதில் பேச முடியாமல் நிற்க, விந்தியா மேலும் தொடர்ந்தாள்.

“அப்படி இருக்க இந்த வாழ்க்கை எம்மாத்திரம் சொல்லு. உன்னோட அழுகையையும் சந்தோஷத்தையும் மத்தவங்க தீர்மானிக்கக் கூடாது... அது நமக்குள்ள இருந்து வரணும்.

 பெண்கள் பலவீனமானவங்க... எதுக்கெடுத்தாலும் அழுவாங்கன்னு சொல்றதெல்லாம் கட்டுக்கதை. ஆணும் பெண்ணும் சரிசமாமான பலம் கொண்டவர்கள்.

அதிலும் பெண்ணின் மனோபலம் கொஞ்சம் அதிகம். அது ஏன் உனக்குப் புரியல. நாம நினைச்சா நல்ல வாழ்க்கையை நரகமாவும் மாத்திக்கலாம்... மோசமான வாழ்க்கையை சொர்க்கமாவும் மாத்திக்கலாம். புரிஞ்சுதாடி என் அழுமூஞ்சி தங்கச்சி! “ என்று விந்தியா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதித்தியா கதவைக் கூடத் தட்டாமல் உள்ளே நுழைந்தான்.

அவனைப் பார்த்தவுடன் வனிதா கண்களைத் துடைத்துக் கொண்டு சிந்துவை தோள் மேல் தூக்கி போட்டபடி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அவன் விந்தியாவைக் கோபமாகப் பார்க்க… அப்போது தான் முதல் தடவை விந்தியா நேருக்கு நேராய் ஆதித்தியாவின் முகத்தைப் பார்த்தாள்.

அவளின் ஏளனப் பார்வையில் அவன் தன்னை ஆணழகன் என்றும், பெண்கள் எல்லாம் அவனைப் பார்த்த மாத்திரத்தில் கவரப்படுவர் என்ற எண்ணமும் நொறுங்கிப்போனது. அவனின் கர்வமும் ஆண்மையும் துச்சமாய் அவள் பார்த்த பார்வையில் சாம்பலாய் வீழ்ந்து போனது.

எந்தப் பெண்ணைப் பார்த்து அவன் முதன் முறையாகப் பிரமிப்புற்றானோ, பெண்களில் அவளைத்தான் முதன்முறையாய் வெறுக்கவும் தொடங்கினான்.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli
Quote

Eppadi padikarathu entha story plz tell me

Quote from monisha on July 9, 2025, 9:14 AM

முழு நாவலும் கிண்டிலில் இருக்கு - விந்தையடி நீ எனக்கு என்ற பெயரில் உள்ளது . இல்லையென்றால் என்னுடைய தளத்தில் அத்தியாயங்களாக வாசிக்கலாம்.   

You cannot copy content