மோனிஷா நாவல்கள்
Iru Thruvangal - Episode 19

Quote from monisha on July 19, 2025, 7:51 PM19
பனிப்போர்
விந்தியா அறையில் அமர்ந்து கொண்டு சில பைஃல்களைப் புரட்டியபடி இருந்தாள். ஆதித்தியா அறைக்குள் கோபமாக நுழைந்து… அவன் விருப்பம் போல் ஏதேதோ புலம்ப, அவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் வேலையைப் பார்த்தபடியே,
“என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்று கேட்டாள்.
“நாளைக்கு நான் உன்னை அழைச்சுகிட்டு உங்க அத்தை வீட்டுக்கு விருந்துக்கு போகணும்னு மிஸ்டர். சந்திரகாந்த் ஆர்டர் பண்றாரு. அது என்ன? என்னைக் கேட்காமலே இவர் விருப்பம் போல எனக்குக் கமிட்மண்ட் பிஃக்ஸ் பண்றாரு... என்னால வரமுடியாது” என்று கொஞ்சம் கோபமாகச் சொன்னான் ஆதி.
விந்தியா அவனின் கோபத்தைப் பொருட்படுத்தாமல், “இட்ஸ் ஓகே... நீங்க வரலைன்னா ஒண்ணும் பிரச்சனை இல்லை... நான் மட்டும் போயிட்டு வர்றேன்” என்று பைஃல்களை புரட்டியபடியே பதில் சொன்னாள்.
அவள் இப்படிச் சொன்னதும் ஆதி அப்படியே திகைத்து போய் நின்றான். அவள் அத்தனை சுலபமாகச் சொன்னது ஆதித்தியாவிற்கு உறுத்தலாக இருந்தது.
“சோ... நான் வராததுனால உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை... அப்படித்தானே”
“எஸ்” என்று இம்முறையும் ரொம்பவும் இயல்பாக பதில் சொன்னாள்.
ஆதித்தியா கொஞ்ச நேரம் மௌனமாய் யோசித்துவிட்டு, “அப்போ நான் உனக்குப் பிரச்சனை தரவாச்சும் வருவேன்... ஐம் கம்மிங் ஃபார் யூ டார்லிங்” என்றதும் அத்தனை நேரம் வேலையில் பிஸியாக இருந்தவள், அவனின் வார்த்தைகளைக் கேட்டு நிமிர்ந்தாள்.
உடனே ஆதித்தியா அவளை நோக்கி கண்ணடித்து விட்டு அறையை விட்டு வெளியேறினான். அவனின் குறும்புத்தனமான பார்வையையும் முரண்பாடான எண்ணங்களையும் நினைத்து,
‘வர முடியாதுன்னு சொன்னான்... பரவாயில்லைனு சொன்னா, ஐம் கம்மிங் ஃபார் யூனு சொல்லிட்டுப் போறான். வாட் கைன்ட் ஆஃப் எ கேரக்டர் ஹி இஸ்!!” என்று தனக்குத் தானே குழம்பினாள். மொத்தத்தில் அவனின் செயலால் அவள் வேலைகள் ஸ்தம்பித்தன.
அடுத்த நாள் காலை விருந்துக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தாள் விந்தியா. ஒரு அழகான, மென்மையான தங்க நிற பார்டர் கொண்ட சிவப்பு நிற புடவையை அணிந்து கொண்டு அவள் கண்ணாடியை பார்த்தபடி நிற்க ஆதி அவளை ரசித்தபடி பின்னோடு வந்து நின்றான்.
“ரெடியா பேபி... போவோமா?”என்று ஆதி சொல்ல விந்தியா அவனைத் திரும்பி பார்த்து முறைத்தாள்.
“சாரி அழகா இருக்கு... ஆனா செளகரியமா இருக்குமா?”
“ஸ்டாப் காலிங் மீ பேபி... எனக்கு எரிச்சலா இருக்கு” என்றாள்.
ஆதித்தியா தோள்களைக் குலுக்கிவிட்டு சிரித்துக்கொண்டே பதில் எதுவும் பேசாமல் வெளியே புறப்பட்டான். விந்தியா சந்திரகாந்திடம் சொல்லி விட்டு வெளியே வந்தவள் அதிர்ச்சியடைந்தாள்.
ஆதித்தியா பைக்கில் அமர்ந்து கொண்டிருந்தான்.
“கார்தான் இத்தனை இருக்கே... பைக் எதுக்கு?” என்றாள் விந்தியா.
“என்கிட்டே பைக் இருக்கும் போது... கார் எதுக்கு?”என்றான் விதண்டாவாதமாக.
“நான் பைக்கில வரமாட்டேன்”
“அப்போ சரி... விந்தியாவுக்கு வர விருப்பமில்லைனு சொல்லிடட்டுமா உங்க அத்தைகிட்ட”
“திஸ் இஸ் டிஸ்கஸ்டிங்!” என்றாள் விந்தியா எரிச்சலோடு.
“நோ... இட் வில் பி எக்ஸைட்டிங் “ என்றான் பைக்கில் அமர்ந்து சிரித்தபடி.
விந்தியாவின் எல்லாக் கேள்விகளுக்கும் ஆதித்தியா நேர்மாறான பதில் வைத்திருந்தான். அவனிடம் வாக்குவாதம் செய்ய முடியாமல் இறுதியில் சம்மதித்தாள்.
அந்தப் பைக்கின் பின்புற இருக்கை கொஞ்சம் உயரமாய் இருக்க விந்தியா புரியாமல்,
“இந்தப் பைக்கில எப்படி உட்காருவது?” என்று கேட்டாள்.
“பைக்கில உட்காருவதற்கு கூடவா உனக்குக் கிளாஸ் எடுக்கணும்?”
விந்தியா சிரமப்பட்டே அந்த பைக்கில் ஏறி அமர்ந்தாள். அவன் செளகரியமா இருக்குமா என்று கேட்டதற்கான அர்த்தம் அப்பொழுதுதான் புரிந்தது.
இருவரும் சிவாவின் வீட்டு வாசலில் நின்றனர்.
“எப்படி இருந்தது டார்லிங்... பைக் ரைட்?”
“ப்ளீஸ் ஆதி... உள்ளே வந்து டார்லிங்... பேபினு கூப்பிடாதீங்க” என்று விந்தியா கெஞ்சினாள்.
ஆதித்தியா சிரித்தபடி “ஓகே டார்லிங்” என்றான்.
விந்தியா தலையில் அடித்துக் கொண்டு வேகமாக உள்ளே சென்றாள்.
ஆதித்தியா உள்ளே நுழைந்ததும் சரோஜாவும், தனசேகரனும் அவனை மரியாதையோடு வரவேற்றனர். வருண், நந்தினியோடு விருந்துக்கு மாதவியும் வந்திருந்தாள்.
மகளைப் பார்த்தவுடன் பூரிப்புடன் கட்டியணைத்துக் கொள்ள, வருண் ஆதித்தியாவை வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து வந்தான். எல்லோருமே ஆதித்தியாவை பெரும் மதிப்போடு வரவேற்க, சிவா மட்டும் அறையிலிருந்து வெளியே வராமல் உள்ளேயே இருந்தான்.
ஆதித்தியா பெயருக்காக எல்லோரிடமும் சிரித்தாலும், சிந்துவைப் பார்த்ததும் ஆனந்தமாய்த் தூக்கி வாரிக் கொஞ்ச ஆரம்பித்தான். சிந்துவிடம் சாக்லேட்டை ஒளித்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தவன் பின்னர் அவளைத் தவிக்க வைத்து நீட்டினான்.
“திஸ் இஸ் பாஃர் மை குட்டி டார்லிங்” என்று ஆதி சிந்துவிடம் சொல்ல விந்தியா அவளை அறியாமல் திரும்பி பார்த்தாள்.
ஆதித்தியாவும் அதை எதிர்பார்த்தவன் போல அவளை நோக்கி குறும்போடு கண்ணடிக்க விந்தியா உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆதியின் மீது அவளுக்கு ஏற்பட்ட ஈர்ப்பை மறைக்க முயற்சி செய்து, சில நேரங்களில் அவளை அறியாமல் அவனிடம் மாட்டிக் கொள்கிறாள்.
ஆதித்தியா சிந்துவோடு விளையாடிக் கொண்டிருக்க விந்தியா, தனசேகரனுடன் அமர்ந்து டி. வி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது” என்றார் தனசேகரன் டி. வி பார்த்தபடி!
“யாரை சொல்றீங்க மாமா?”
“அவன்தான் சென்டிரல் மினிஸ்டர் வித்தியாதரன். பல கோடிக்கணக்கான சொத்துக்களை மடக்கிப் போட்டுக் கொண்டு சாமியார் மாதிரி வேஷம் போடுறான்”
விந்தியா சிரித்துக் கொண்டே, “கோடிக்கணக்கான பேர் செய்யும் தப்பிற்கு நாம ஆயிரம் பேரை குறைச் சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன நியாயம் இருக்கு?” என்றாள்.
“நீ சொல்வது சரிதான் விந்தியா... ஓட்டு போடுகிறவர்கள் சரியா இல்லாததுதான் இவன மாதிரி ஆட்கள் உருவாவதற்கான காரணம்” என்று தனசேகரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரோஜா அருகில் வந்து நின்றாள்.
“வீட்டில விருந்துக்கு தயார் பண்ண வேண்டாமா? நீங்க பாட்டுக்கு ஊர் கதை பேசிட்டிருக்கீங்க... கடைக்குக் கிளம்புங்க” என்றாள் சரோஜா.
“இப்ப எதுக்கு மாமாவை தொந்தரவு பண்றீங்க? பனைமரம் மாதிரி ஒரு பிள்ளையை வளர்த்து வைச்சிருக்கீங்களே அவனை அனுப்புங்க அத்தை” என்று விந்தியா வேண்டுமென்றே சிவாவின் காதுகளில் விழும்படி உரக்கச் சொன்னாள். சிவா காதுகளில் விழுந்தாலும் அவன் அமைதியாகவே இருந்தான்.
“அவனுக்கு ஏதோ வேலை இருக்காம்மா” என்றாள் சரோஜா.
“அவருக்குத்தான் வேலை இருக்கு... நாங்க வெட்டியா இருக்கோம்மா என்ன... ஏன் மாமா?” என்று விந்தியா தன் மாமா தனசேகரனை தூண்டிவிட்டாள்.
“அதானே…” என்று அவளிற்கு ஒத்து ஊதினார் தனசேகரன்.
சரோஜா என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்க சிவா கோபமடைந்தவனாக வெளியே வந்தான்.
“என்னடி பிரச்சனை உனக்கு... என்னை வம்பு இழுக்கத்தான் வந்தியாக்கும்” என்று அவளிடம் கோபமாக பேச அத்தனை நேரம் அங்கே நடந்தவற்றைக் கவனிக்காமல் சிந்துவுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆதித்தியா கணநேரத்தில் சிவாவை திரும்பி பார்த்தான். விந்தியாவிடம் அவன் கோபமாகப் பேசிய விதம் அவனுக்குச் சுருக்கென்று வலித்தது.
ஆதித்தியாவிடம் ஏற்கனவே விந்தியா ‘டி’ போட்டு அழைக்கக் கூடாது எனக் கண்டித்திருக்க, அதைப் போல் சிவா பேசும் போது இயல்பாக எடுத்துக் கொண்டு சிரித்தது, அவனை மேலும் சிவாவின் மீதான வெறுப்பைத் தூண்டியது.
விந்தியாவும் சிவாவும் இதைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்க, சரோஜா மட்டும் ஆதித்தியாவின் பார்வையைக் கவனித்து புரிந்தும் கொண்டாள்.
சிவாவை தனியாக அழைத்துக் கண்டித்தாள். இருப்பினும் இருபது வருட நட்பினை நேற்று வந்தவனுக்காக மாற்ற வேண்டும் என நினைப்பது அவனுக்கு எரிச்சலை மூட்டியது.
விருந்து முடியும் வரை ஆதித்தியா கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தான். அதன் காரணத்தை விந்தியா புரிந்து கொள்ளாத போதும் சிவா அதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்டான். விந்தியாவின் மீதிருக்கும் உரிமையை நிலைநாட்ட சிவாவுக்கும் ஆதிக்கும் இடையில் ஒரு பனிப்போர் தொடங்கியது.
விருந்து முடிந்து ஆதியும் விந்தியாவும் வீட்டு வாசலை அடைந்தபோது, ஆதி தன் மனதை துளைத்த அந்தக் கேள்வியை விந்தியாவிடம் கேட்டான்.
19