மோனிஷா நாவல்கள்
Iru Thruvangal - Episode 30

Quote from monisha on August 15, 2025, 5:12 PM30
விஸ்வரூபமாய் நிற்கிறாள்
ஆதித்தியா அன்று காலையில் சமுத்திரனின் வீட்டிற்கு வந்திருந்தான். உள்ளே வந்ததும் சுபா அளவில்லா ஆனந்தத்தோடு வரவேற்றாள்.
“இப்பதான் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா அண்ணா?” என்று கேட்டாள் சுபா.
“இப்ப கூடச் சூழ்நிலையும் சந்தர்ப்பமும்தான் என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கு” என்றான் ஆதி.
“பரவாயில்லண்ணா... ஆனா அண்ணியோடு வந்திருந்தால் ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும் “
“உங்க அண்ணிக்கு யார் சந்தோஷமா இருந்தாலும் பிடிக்காது... முக்கியமா நான்” இப்படி அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே சுபா சமுத்திரன் மகன் மகளான சுபாஷும், சமுத்திராவும் வீட்டைச் சுற்றி விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
சுபா அவர்கள் இருவரையும் ஆதியின் அருகில் அழைத்தாள். ஆதித்தியாவை பார்த்ததும் அந்த வாண்டுகள் ஒன்றும் புரியாமல் விழித்தன.
“என் டார்லிங்க்ஸுக்கு மேஜிக்கு பிடிக்குமா?” என்றான்
இருவரையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு, “உங்களுக்கு மேஜிக் தெரியுமா அங்கிள்?”என்றார்கள்.
“ம்... உங்க ரெண்டு பேருக்கும் என்ன வேணும்... சாக்லேட்டா பிஸ்கேட்டா?” என்று கேட்டான்.
அவர்கள் இருவருமே சுபாவின் முகத்தைப் பார்த்துவிட்டு அவளின் பாவனைக்கு ஏற்றவாறு, “அங்கிள் பிஸ்கேட்” என்றனர்.
“என் கையில இப்போ ஒண்ணுமில்ல... கம்மான் வாட்ச்”, என்று சொல்லிவிட்டு விரல்களைப் பல விதமாய் அசைத்து பிஸ்கேட் பாக்கெட்டை வரவழைத்தான்.
ரொம்பவும் சிலமணி நேரங்களில் அவர்கள் இருவருமே ஆதித்தியாவிடம் ஒட்டிக் கொண்டனர். சமுத்திரனின் வீட்டில் உள்ள அலுவலகத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்றான். அவன் உள்ளே நுழைய சமுத்திராவும் சுபாஷும் தெறித்து ஓடினர்.
“ஏ வா ஒடிடலாம்... அப்பா அடிப்பாரு”
சமுத்திரன் ஏதேதொ சட்ட புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்க ஆதித்தியா அங்கே இருந்த சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்.
ஆதித்தியாவை கவனித்த சமுத்திரன், “பரவாயில்லயே... எங்க ஞாபகம் கூட இருக்கா உனக்கு?” என்றான்.
“ஏன் அப்படி கேட்கிற?” என்று சொல்லியபடி அங்கிருந்த டிவியை ரிமோர்ட்டில் ஆன் செய்தான்.
“நீ விந்தியாவைப் பிரிஞ்ச துக்கத்தில் குடிச்சிட்டு தேவதாஸ் மாதிரி ரோட்டில விழுந்து கிடப்பியோனு...”
சமுத்திரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே டி. வி நியூஸில் ஆதித்தியாவை தரைகுறைவாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். அவன் கேத்ரீனிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததினால்தான் அவள் தவறி விழுந்ததாக தெரியாத உண்மையை மக்களிடம் தெளிவாகச் சேர்த்து கொண்டிருந்தனர்.
இன்னும் ஆங்கில நியூஸ் சேனல்களில் அவனின் ஃபோட்டோவை போட்டு செகக்ஷுவல் ஹராஸ்மென்ட் என்று புதுப்புது வார்த்தைகளைப் பொருத்தி நான்கு பேர் நியாயம் பேசிக் கொண்டிருந்தனர்.
இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்தியாவிற்கு கோபத்தைத் தாண்டி வெறி ஏற ரிமோட்டை அடிக்கத் தூக்கினான். அதற்குள் சமுத்திரன் கைகளிலிருந்து ரிமோட்டை பிடுங்கிக் கொண்டான்.
“நீ டிவியை உடைச்சிட்டு போயிடுவ... நான்ல என் மாமனாருக்குப் பதில் சொல்லணும்” என்றான் சமுத்திரன்.
“என்னடா இதெல்லாம்? என்ன மேட்டர்னே தெரியாம அவனுங்க இஷ்டத்துக்கு கதை அளந்துட்டு இருக்கானுங்க” என்றான் ஆதித்தியா வெறியோடு.
“இதுக்கெல்லாம் காரணகர்த்தாவை விட்டுட்டு டிவி மேலயும் சேனல்காரன் மேலேயும் கோபப்படறதுல என்ன யூஸ்?”
“யார பத்தி பேசற?”
“நீ கல்யாணம் பண்ணியே ஒரு உத்தமி... அவள பத்திதான் பேசிட்டிருக்கேன்”
“நீ இன்னும் அந்த விஷயத்தை விடலியா?”
“நல்லவனா இருடா... அதுக்காக இவ்வளவு நல்லவனா இருக்காதே”
“நான் அன்னிக்கு கேத்ரீனை பார்க்க போனதுக்கு அவ என்ன பண்ண முடியும்... எல்லாம் என் விதி” என்று ஆதி தலையில் கை வைத்துக் கொண்டான்.
“விதி இல்லடா... எல்லாம் விந்தியாவோட சதி. தியாகி வேஷம் போட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா... ஹோட்டல் ஆதித்தியாவோட மொத்த அட்மினிஸ்ட்டிரேஷனை தன் கையில வைச்சுகிட்டா...
உனக்கு உரிமையான பணத்தையே கேட்க விடாம, உன்னைப் ப்ரயின் வாஷ் பண்ணி, பேங்கில லோன் அப்ளை பண்ண சொல்லி கடன்காரன் ஆக்கிட்டா... இப்போ அவ முன்னாள் காதலன் மூலமா போலீஸில் உன்னை சிக்கவைச்சிட்டா... நாளைக்கு உன்னை மொத்தமா வெளிய வர விடாம பண்ணி சொத்தை எல்லாம் தான் பேரில மாத்திக்கப் பார்க்கிறா”
என்று சமுத்திரன் சொல்லி கொண்டிருக்க ஆதித்தியா கோபத்தில் அவனை வெளிவரவிடாமல் சமுத்திரன் அமர்ந்திருந்த இருக்கையில் கால் வைத்து அவனின் கழுத்தை பிடித்தான்.
“ஃபிரண்டுனு பார்த்தா ரொம்பத்தான் ஓவரா பேசுற நீ. சொத்து மேல ஆசைப்படறவளா என்னை ஒரு நிமிஷத்தில தூக்கி எறிஞ்சிட்டு போனா...
என் பணத்தைப் பாத்து மயங்கி என் காலடியில் விழுந்த நிறைய பொண்ணுங்கள பாத்திருக்கேன்... ஆனா எப்பேர்ப்பட்ட பணத்தையும் பார்த்து மயங்கி தன்னுடைய தன்மானத்தையும் தன்னையும் விட்டு கொடுக்க மாட்டா...
பணம் முக்கியம்னா அந்த தலைவணங்காத திமிரு எதுக்கு... எவன்கிட்ட வேணா படிஞ்சு போயிடலாமே...
தன்னோட சுயநலத்தை முக்கியமா நினைக்கிறவளா குடும்பத்தை இத்தனை வருஷமா சுகதுக்கத்தை மறந்து தாங்கிட்டிருந்தா... எத்தனை கோடியாயிருந்தாலும் அவளின் சம்பாத்தியம் தவிர மற்ற எல்லோருடைய பணமும் அவளுக்கு கால் தூசிக்கு சமானம்...
இப்ப கூட சிவாகிட்ட தப்பு இருக்குமோனு யோசிச்சேனே தவிர விந்தியாகிட்ட தப்பு இருக்கும்னு ஒரு செகண்டு கூட யோசிக்கல...
எப்பேர்பட்டவனாக இருந்தாலும் தப்பா அவள ஒரு பார்வை பார்த்தானா அத்தோட அவன் செத்தான்...
நீ அவ்வளவு பேசியும் உன்னை விட்டு வைச்சிருக்கானா... நீ என் ஃபிரண்டுங்கிற ஒரே காரணத்தாலதான்... என்ன சமுத்திரன் மண்டையில ஏறுச்சா? இனிமே விந்தியா என்ற பேரை கூட நீ சொல்லக் கூடாது” என்று அவன் சொல்லி முடித்துக் கழுத்தை விடும் போது சமுத்திரன் விழி பிதுங்கி தொண்டை குழி அமுங்கி சாவின் விளிம்பை தொட்டு விட்டு வந்தான்.
ஆதித்தியா அத்தோடு அந்த அறையை விட்டு கோபத்தோடு வெளியேறினான். சமுத்திரனுக்கு கொஞ்ச நேரத்திற்கு யோசிக்கும் திறமை அற்றவனாய் கிடந்தான். சுயநினைவு வந்த போதுதான் தெரிந்தது விந்தியா அவன் மனதில் வானின் உயரத்திற்கு விஸ்வரூபமாய் நிற்கிறாள் என்று.
விந்தியா கொஞ்சம் பயத்தோடே ஆதித்தியா வீட்டை அடைந்தாள். உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்த சண்முகம் விந்தியாவை நெகிழ்ச்சியோடு வரவேற்றான்.
விந்தியா வந்தவுடன் ஆதித்தியாவை பற்றியும் சந்திரகாந்த்தையும் பற்றியும் முதலில் விசாரித்தாள். இருவருமே வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் இதுதான் சமயம் என்று மாடி ஏறினாள். சண்முகத்திடம் ஆதித்தியா வந்தால் தான் இங்கிருப்பதாகச் சொல்ல வேண்டாமென சொல்லிவிட்டு போனாள்.
அறைக்குள் நுழைந்ததும் ஆதித்தியாவின் பொருட்கள் இருக்கும் கப்போர்ட்டை திறந்தாள். திறக்க முடியாமல் கதவு பூட்டியிருந்தது.
“இத்தனை நாளா திறந்திருக்கும்... இப்ப மட்டும் பூட்டுவானேன்?” என்று புலம்பியபடி விந்தியா சாவியைத் தேடினாள்.
விந்தியா ஒருமுறை ஆதித்தியா எதையோ அவனுடைய கப்போர்ட்டில் தேடும்போது அவனுடைய கல்லூரி ஃபோட்டோவை தவறவிட்டான். ஆனால் அவள் எடுக்கும் முன் ஆதித்தியாவே மீண்டும் அதை எடுத்து வைத்தான். அந்த ஃபோட்டோதான் சிவா விசாரணைக்காகக் கேட்கும் முக்கியமான ஆதாரம்.
கடைசியில் டிராவில் இருந்த சாவி கப்போர்ட்டை திறக்க உதவியது. கலைந்து போயிருந்த அந்தப் பைஃல்களுக்குள் எப்படி கண்டுபிடிப்போம் என விந்தியாவிற்கு மலைப்பாய் இருந்தது.
“அந்த சிவா இப்படி வம்புல மாட்டி விட்டுட்டானே” என்று புலம்பியபடி எல்லாவற்றையும் வரிசையாக திறந்து பார்த்து நொந்து போனாள். கண்டுபிடிக்கவே முடியாதோ என துவண்டு போன போது அந்தக் கப்போர்டின் அடியில் அந்த ஃபோட்டோ ஒட்டி கொண்டிருந்ததைப் பார்த்து விந்தியாவின் மனம் நிம்மதி அடைந்தவளாய் அதனை தன் ஹேன்ட் பேக்கில் வைத்தாள்.
அப்பொழுதுதான் விந்தியா அந்த அறையைக் கவனித்தாள். முற்றிலும் அலங்கோலமாய் கிடந்தது. ஆஷ் டிரே சிகரெட் துண்டுகளால் நிரம்பி இருந்தது. கலங்கிய கண்களோடு அந்த டிரேயில் இருந்தவற்றை குப்பைத்தொட்டியில் கொட்டினாள். அங்கே படுக்கையில் கிடந்த அவளுடைய ஃபோட்டோ அவனின் மனம் இந்தப் பிரிவால் எத்தனை வேதனை கொண்டிருக்கும் எனப் புரிய வைத்தது.
இந்த யோசனைகளுக்கு இடையில் ஆதியின் பைக் சத்தம் அவளின் காதில் ஒலித்தது. விந்தியா பால்கனி வழியாக எட்டிப்பார்க்க அவன் காற்றைப் போல வேகத்தில் வந்திறங்கி மின்னலென வீட்டினுள் நுழைந்தான்.
ஏதோ கோபத்தில் வருகிறான் என்பதை அவன் நடையில் புரிந்து கொண்டவள், இந்தச் சமயத்தில் அவன் எதிரே போய் இந்நிலையில் நின்றாள் என்னாகுமோ என்றெண்ணி கப்போர்ட்டுக்கு பின்னாடி இருந்த இடைவெளிக்குள் மறைந்து கொண்டாள்.
ஆதித்தியா கோபத்தோடு அறைக்கதவை திறந்து படாரென மூடினான். அந்தச் சத்தம் விந்தியாவைக் கலங்கடித்தது.
சமுத்திரன் மீதுள்ள கோபத்தால் அறையில் அப்படியும் இப்படியும் நடந்தான். திடீரென அந்த ஆஷ் டிரேவை பார்த்து குழப்பம் கொண்டவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான். விந்தியாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது. ஏன் இப்படி செய்தோம் எனத் தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.
ஆதித்தியாவின் முகபாவனை மாறி அமைதியாக சோபாவின் மீது சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டான். நேரம் கடந்து போக பொறுமை இழந்தவனாய், “எவ்வளவு நேரம் கண்ணாமுச்சி விளையாடுவ... வெளிய வா விந்தியா” என்றான்.
விந்தியாவிற்கு படபடப்பு அதிகமானது.
30