மோனிஷா நாவல்கள்
Iru Thruvangal - Episode 36

Quote from monisha on August 26, 2025, 11:33 AM36
ஊடலும் மோதலும்
விடிந்தவுடன் ஆதித்தியா விந்தியாவை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தயாராகிக் கொண்டிருந்தான். அவள் நிச்சியம் அத்தனை சுலபத்தில் மன்னிக்க மாட்டாள் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் அவளைப் பார்க்க அவனுக்குக் கிடைத்த ஒரு காரணம்.
ஆதித்தியா தன் அறையில் இருந்து இறங்கி வந்தவன் சந்திரகாந்த் எப்போதும் போல் ஹாலில் இல்லாததினால் சண்முகத்திடம், “டேட் எங்கே?” என்று கேட்டான்.
“அவரு இன்னும் எழுந்திருச்சே வரலய்யா?” என்றான் சண்முகம்.
“இவ்வளவு நேரம் தூங்க மாட்டாரே” என்று சொல்லிக் கொண்டே சந்திரகாந்த்தின் அறை கதவை திறந்தான்.
அவர் ரொம்பவும் ஆழமான உறக்கத்தில் இருந்தது போல் ஆதித்தியாவிற்குத் தோன்றியது. அவர் உறக்கத்தைக் கலைக்க வேண்டமென்று ஆதித்தியா எண்ணமிட்டு வெளியே செல்ல எண்ணியவன் மீண்டும் திரும்பி வந்து சந்திரகாந்தை எழுப்ப யத்தனித்தான்.
தொட்டதும் ஆதித்தியா அதிர்ச்சியோடு சுவற்றோரமாய் விழுந்து விட்டான். சில்லென்று இருந்த அவர் உடல் அவனுக்கு எதிர்பாராத சந்தேகங்களை எழுப்ப அதை நம்ப முடியாமல் சந்திரகாந்தின் அருகில் சென்று “டேட்... டேட்”என்று உலுக்கினான். ஆனால் எந்த வித எதிர் விளைவுகளும் ஏற்படவில்லை. ஆதித்தியாவிற்குப் புரிந்து போனது. அங்கே உறங்குவது போலத் தெரிவது சந்திரகாந்தின் உயிரற்ற உடல் மட்டுமே.
ஆதித்தியா தன் தந்தையின் பாசத்திற்காக இளம் வயதிலிருந்து ஏங்கியவன். பெரும் பிரிவிற்குப் பிறகு புரிதலால் கிடைத்த அன்பு ஒரு நொடியில் தோன்றிய வானவில் போலக் கரைந்து போனதை ஏற்றுக் கொள்ள முடியாமல் சிலையெனவே அமர்ந்திருந்தான்.
மரணத்தின் வலி மரணிப்பவர்களை விட அதனை எதிர்கொள்பவர்களுக்கே பெரும் துயரை ஏற்படுத்தும் என்பதை ஆதித்தியா அவன் வாழ்வின் பேரிழப்பின் மூலம் உணர்ந்து கொண்டான்.
விந்தியாவிற்கு சந்திரகாந்தின் மரணம் அதிர்ச்சியையும் சொல்ல முடியாத பேரிழப்பையும் ஏற்படுத்தியது. கண்ணீரோடு கரைந்தவளை யாராலும் தேற்ற முடியவில்லை. சிறு குழந்தை போல் தேம்பி தேம்பி அழுதவளின் முன்பு சாக்ஷி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வந்து நின்றார்.
“என்ன விந்தியா இது? உன் தைரியத்தைப் பார்த்து நான் எவ்வளவு வியந்திருக்கேன். நீயா இப்படி ஓரே நிமிஷத்தில் உடைந்து போயிருக்கிறது? நோ... நீ எப்பவும் போல் அதே மன உறுதியோட இருக்கணும்... அதுதான் உன் மாமனாரோடு விருப்பமும் கூட.
உறக்கத்திலேயே மரணிக்கிற அதிர்ஷடம் அத்தனை சீக்கரத்தில் யாருக்கும் கிட்டாது... ஹி இஸ் ப்ளஸ்ட். நீ இப்படித் துவண்டு போகக் கூடாது.
ஆதித்தியாவை பாத்துக்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு... அவனின் நிலைமை ரொம்பவும் கஷ்டமா இருக்கு... வேதனையைத் தேக்கி வைக்கக் கூடாது... அது நம்மையே மூழ்கடிச்சிடும்... டே கேர் ஆஃப் ஹிம்” என்று சொல்லி விந்தியாவின் தலையைத் தடவி சமாதானம் செய்து விட்டு சென்றார்.
அப்பொழுதுதான் விந்தியா ஆதித்தியாவை கவனித்தாள் அவன் உலகமே மறந்த நிலையில் இருந்தான். அவன் கண்களில் அழுகைக்கு பதிலாய் ஏமாற்றத்தின் அதிர்ச்சியே நிறைந்திருந்தது. விந்தியா சுபாவை அழைத்து ஆதித்தியாவிடம் பேசச் சொன்னாள்.
அவள் அவனிடம் சொன்ன எந்த வார்த்தையும் காது கொடுத்த கேட்கவில்லை. சிவா ஆதியை நெருங்கி வந்து அவனுக்கு நிலைமையைப் புரிய வைத்தான். காலம் கடந்த ஞானத்தால் தன் தந்தையின் அன்பை புரிந்து கொள்ளாமல் போனோமோ என்று ஆதியை அழுத்தி கொண்டிருந்த துக்கம் பொங்கி கொண்டு கண்ணீராய் வெளியே வந்தது.
என்னதான் ஆதித்தியா மனதில் இருந்த வேதனை வெளிப்பட்ட போதும் அவன் தந்தையை இத்தனை நாளாய் நிராகரித்ததினால் ஏற்பட்ட குற்றவுணர்வு ஆறாத வடுவாய் அவன் வாழ்வின் இறுதி வரை தங்கி விடப் போகிறது.
சந்திரகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வீட்டில் இருந்த எல்லோருமே நிலைகுலைந்து போயிருந்தனர். அதிலும் விந்தியா வழிந்த கண்ணீரை துடைத்தபடியே இருக்க ஆதித்தியா எத்தனை மணி நேரம் தன் அறையினுள் அடைந்து கிடந்தானோ?
இந்தத் துயரத்தைக் கடந்து சிவா புறப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தான். மரணம் நிகழ்ந்த வீட்டில் சொல்லி விட்டுப் போகக்கூடாது என மாதவி சொல்ல, சண்முகம் அவர்களின் நிலைமையைச் சொல்லி ஆதித்தியாவை கீழே அழைத்து வந்தான்.
எல்லோருமே புறப்பட விந்தியா அவர்களோடு சேர்ந்து கொண்டாள். அவளின் செயல் எல்லோருக்குமே அதிர்ச்சியாய் இருந்தது. இந்நிலையிலும் என்னை விட்டு பிரிந்து போக வேண்டுமா என்று விந்தியாவைப் பார்க்க அவள் அவன் பார்வையை நிராகரித்தாள்.
சிவா உடனே விந்தியாவிடம், “இந்த நேரத்தில் நீதான் ஆதித்தியா கூட இருக்கணும் விந்து... அவரைத் தனியா விட்டு வருவது சரியல்ல” என்றான்.
“நீ வேணும்னா இங்க இரு சிவா... நான் என்ன வேண்டாம்னா சொன்னேன்? எனக்கு இனிமே இங்கு இருப்பதற்கான பிடிப்பும் இல்லை... எந்த உறவும் இல்லை” என்றாள்.
ஆதிக்கு விந்தியாவின் நிராகரிப்பு பழகிப் போனது. விந்தியாவிற்கு கல் நெஞ்சோ என்று நம் வாசகர்கள் யோசிக்கக் கூடும். விந்தியா வனிதாவின் காதலுக்காக சிவாவை நிராகரித்த போதே அவள் மனம் இறுகிய பாறையாகத்தானே இருந்தது. இன்று வரை அவளின் பிடிவாத குணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.
விந்தியாவிற்கு ஆதித்தியாவின் மீதான காதல் எத்தனை பெரியதோ அத்தனை பெரியதாக இருந்தது அவன் விருப்பத்தை அவள் மீது தினித்ததினால் ஏற்பட்ட கோபம்.
விந்தியா அவர்கள் யார் சொல்வதையும் கேட்காமல் வேகமாய் வெளியேறினாள். சிவா மாதவியின் காதில் ஏதோ சொல்ல, சில மணி நேரங்களில் ஆதித்தியாவையும் பிராயத்தனப்பட்டு சம்மதிக்க வைத்து கூடவே அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டை அடைந்தனர்.
விந்தியா அவர்கள் வரும் முன்னரே வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தாள்.
சற்றும் விந்தியா எதிர்பாராத விதமாய் ஆதித்தியாவும் அவர்களோடு வர அவளின் அழகிய கண்கள் அகல விரிந்தன. நந்தினி ஆதித்தியாவை விந்தியாவின் அறைப்பக்கம் அழைத்துச் செல்ல விந்தியா வேகமாய் வந்து வழிமறித்தாள்.
“நில்லு நந்தினி... எங்க கூட்டிட்டு வந்திருக்க? இப்போ எங்க அழைச்சிட்டு போற?”
“வேறெங்க அண்ணி... உங்க ரூமுக்குத்தான்...” என்று நந்தினி சொன்னதும் பதிலுக்கு ஏதோ சொல்ல இருந்த விந்தியாவை மாதவி இழுத்துக் கொண்டு போனாள்.
“கை விடும்மா... எதுக்கு இங்க அவரைக் கூட்டிட்டு வந்தீங்க?”
மாதவி பதிலுக்குக் கோபமாக, “ஏன் கூட்டிட்டு வரக் கூடாது? நீ செலவு பண்ணி கட்டின வீடுங்கிற திமிரா... இல்ல இங்க நீ வைச்சதுதான் சட்டமா?” என்றாள் மாதவி அதட்டலாக.
“அய்யோ! அப்படி எல்லாம் இல்லம்மா”
“அப்புறம் வேறெப்படி?” என்றாள் மாதவி.
“அவருக்கும் எனக்கும் ஒத்துப்போகாது... நாங்க ரெண்டு பேரும் சேர்ந்திருக்க முடியாது” என்று விந்தியா சொல்ல மாதவி பதில் பேசாமல் பளீரென்று கன்னத்திலேயே அறைந்தாள்.
விந்தியா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, “என்னவோ பண்ணுங்க” என்று திரும்பியதும்,
சிவா நின்று கொண்டு, “இதெல்லாம் உனக்குப் பத்தாதுடி... அத்தை இன்னும் இரண்டு கொடுத்திருக்கணும்” என்றான்.
“போடா... எனக்குத் தெரியும்…இதெல்லாம் உன் பிளான்தானே! உன்னை அப்புறம் பாத்துக்கிறேன் “ என்று சொல்லிவிட்டு அவனைக் கடந்து வந்தாள்.
ஆதித்தியா தன் அறைக்குள் சென்றதை பற்றி யோசித்தபடி அவள் தன் அறையை எட்டிப் பார்த்தாள்.
சிந்து ஓடி வந்து ஆதியிடம் பேசிக் கொண்டிருக்க, அவள் கேட்ட கேள்விக்கெல்லாம் அவன் பொறுமையுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
சிந்து அவனிடம், “நான்தானே உங்க டார்லிங்... நீங்க என் கூட எங்க வீட்டில வந்து இருங்க” என்றாள்.
விந்தியா மகிழ்ச்சியோடு ஆதியை பார்த்து, “இது நல்ல ஐடியா...” என்றாள்.
உடனே ஆதி சிந்துவின் முகத்தைப் பார்த்து, “நீங்க என் குட்டி டார்லிங்... அவங்க என் பெரிய டார்லிங்” என்றான்.
விந்தியா அவனை முறைத்தபடி பார்க்க அவன் முகத்தில் நகைப்பு மாறவில்லை.
சிந்துவின் முகம் சுருங்கிப் போக, “உங்களுக்கு என்னைப் பிடிக்குமா… அவங்களைப் பிடிக்குமா?” என்று மழலையாகப் பேச அவன் சொன்ன விதத்திலேயே அவனிடம் கேள்வியாகத் தொடுத்தாள்.
“இப்படிக் கேட்டா…” என்று ஆதி கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, “சரி... உனக்குச் சாக்லேட் பிடிக்குமா... இல்ல ஐஸ்கீரீம் பிடிக்குமா?” என்று கேட்க சிந்து யோசிக்காமல்
“இரண்டுமேதான்” என்று அவள் சொல்ல அவனும் அவளைப் போலே தலையாட்டியபடி,
“எனக்கும் இரண்டுமேதான்” என்றான் விந்தியாவைப் பார்த்தபடி!
அவன் பார்வையைத் தவிர்க்க விந்தியா அவன் பதிலை கவனிக்காமல் அங்கிருந்து சென்றாள்.
அந்த அறையும் படுக்கையும் சிறியதானாலும் இப்போதைக்கு அதுதான் அவனுக்குச் சொர்க்கம். விந்தியா தன்னோடு படுக்கையில் உறங்க மாட்டாள் என்று ஆதித்தியாவிற்குத் தெரிந்ததால் அவனே தரையில் படுத்துக் கொண்டான்.
அவன் தரையில் படுப்பது விந்தியாவிற்கு நெருடலாய் இருக்க, அந்தக் காரணத்திற்காக அவனிடம் இரவெல்லாம் சண்டை போட்டு கொண்டிருந்தாள். ஊடலும் மோதலுமாய் அவர்கள் காதல் நித்தம் நித்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
மாதவியோ ஆதித்தியாவை மகனை விட ஒரு படி அதிகமாகவே கவனித்துக் கொண்டாள். தந்தையை இழந்தவனுக்கு அன்னையின் அன்பு கிடைத்தது போல் உணர்ந்தான். அவன் மனதை அழுத்திக்கொண்டிருந்த கவலை எல்லாம் காற்றைப் போல் லேசானது.
இதற்கிடையில் ஹோட்டல் ஆதித்தியாவின் நிர்வாகப் பொறுப்புகள் குவிந்திருப்பதாக மேனேஜர் ரமேஷ் நேரில் வந்து ஞாபகப்படுத்த, விந்தியா தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கிக் கொண்டாள். இறுதியாக விந்தியாவின் பிடிவாதத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாமல் நிர்வாகப் பொறுப்புகளை ஆதித்தியாவே ஏற்றுக் கொண்டான்.
இங்கே நிலைமை இப்படி இருக்க ஆதித்தியாவின் தந்தை இறந்த காரணத்தால்… அவனால் ஆஜாராக முடியாது எனச் சுபா பெட்டீஷன் போட்டதால், அதை ஏற்றுக் கொண்ட நீதபதி கேஸை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.
அவளுக்குக் கிடைத்த அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு சுபா வழக்கிற்கான குறிப்புகளை ரொம்பவும் தெளிவாக எடுத்துக் கொண்டாள். ஆனால் அது சமுத்திரனுக்குப் புரியாத வண்ணம் சுருக்கெழுத்துக்களாய் எழுதி வைத்திருந்தாள்.
அவளுக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் குழந்தைகளின் சின்னச் சின்ன சேட்டைகளையும், சண்டைகளையும் காரணம் காட்டி அவளிடம் எரிந்து விழுந்தான். அவனின் கோபத்திற்கு அர்த்தம் புரிந்த போதும் சுபா மௌனமாகவே இருந்தாள்.
நாட்கள் கடந்து செல்ல அன்று காலை பத்து மணி...
நீதிமன்றத்தில் கேத்ரீனின் வழக்கிற்கான இரண்டாவது அமர்வு.
போனமுறை போல விந்தியா வராமல் தவிர்க்க முடியவில்லை. அவளையும் விசாரிக்க வேண்டி கோர்ட்டிலிருந்து நோட்டீஸ் வந்தது.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிருபர்கள் கேத்ரீன் கொலை வழக்கின் விசாரணை பற்றிய செய்தியை சேகரிக்க வந்தவர்களுக்கு அதுவரை தெரியாது… இன்னும் சில மணி நேரங்களில் இந்தக் கேஸ் பெரும் சென்சேஷனல் ந்யூஸாக மாறப் போகிறது என்று..
36