மோனிஷா நாவல்கள்
Iru Thruvangal - Episode 39

Quote from monisha on September 9, 2025, 11:01 AM39
அரங்கேற்றிய நாடகம்
நீதிபதியிடம் சுபா, “இந்த சீடி ஆதாரத்தை தாங்கள் ரகசியமாகப் பார்க்க வேண்டும். இது பற்றி வெளியே தெரிந்தால் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடும்” என்றாள்.
இதைக் கேட்ட நீதிபதி கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு, “இந்த ஆதாரத்தை ரகசியமாக வைத்திருப்பதில் பப்ளிக் பிராஸிக்யூட்டர் பத்மநாதனுக்கு ஆட்சபேணை இல்லாத பட்சத்தில் நீங்கள் சொல்வதற்கு அனுமதி அளிக்கிறேன்” என்றார்.
“அந்த ஆதாரம் வெளிப்படையாகக் காண்பிக்க வேண்டும்” என்று சொல்வதற்காக பத்மநாதன் எழுந்திருக்க…
அருகில் காவல் உடையில் நின்றிருந்த சிவா மெலிதான குரலில், “அந்த ஆதாரத்தை வெளியிட்டால் மினிஸ்டர் பெயரும் சேர்ந்து வெளியாகும், பரவாயில்லையா?” என்று சொல்ல… பத்மநாதன் கொஞ்சம் கதிகலங்கி போனார்.
தப்பித்தவறி மினிஸ்டர் வித்யாதரன் பெயர் வெளியிடப்பட்டால் தன்னுடைய நிலைமை என்னவாகுமோ என்று மிரண்டவர். “எனக்கு ஆட்சேபணை இல்லை” என்று சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டார்.
சமுத்திரனுக்கு சுபா கொடுத்த சீடி ஆதாரம், பிறகு பத்மநாதனின் பதில், எல்லாமே பெரும் குழப்பமாய் இருந்தது.
சுபா கொடுத்த சீடியை நீதிபதி தனிப்பட்ட முறையில் லேப்டாப்பில் போட்டு பார்த்தார். அது பற்றிய விளக்கங்களையும் சுபா அதனோடு இணைத்திருக்க ஒருவாறு அந்த ஆதாரத்தின் நோக்கம் புரிந்தது.
அங்கே இருப்பவர்கள் எல்லோரும் குழப்பத்தோடு அமர்ந்திருக்க நீதிபதி சுபாவிடம் தம் வாதங்களை எடுத்துரைக்கச் சொன்னார்.
“யுவர் ஒனர்... இந்த வழக்கில் காவல்துறை சேகரித்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கபட்ட விளக்கங்களும் காரணிகளும் ஒரு தலைபட்சமானது.
மிஸஸ். கீதா குணசேகரன் வாக்குமூலத்தின்படி கேத்ரீனுடன் கல்லூரியில் படித்த மனோஜுடன் பெரியளவில் விரோதம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் இது பற்றிக் காவல்துறை தம் விசாரணையில் எங்குமே குறிப்பிடவில்லை. இது எந்த விதத்தில் நேர்மையான விசாரணையாக இருக்க முடியும். இது பற்றிய சரியான விளக்கத்தைத் தெரிந்து கொள்ள இன்ஸ்பெக்டர் சிவாவிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்” என நீதிபதியிடம் அனுமதி கேட்டாள்.
“ப்ரொசீட் “என்று நீதிபதி அனுமதி வழங்க சிவா கூண்டில் ஏறி நின்றான்.
சுபாவின் அத்தனை செயலுக்கான சூட்சமங்களைக் கற்றுக் கொடுத்தவனே இப்போது அவள் முன் பதில் சொல்ல நின்று கொண்டிருக்கிறான். இதுவரை நடந்ததையும் சேர்த்து இப்பொழுது நடக்கப் போவதும் அவர்களின் நாடகத்தில் ஒன்றுதான்.
“உங்கக்கிட்ட நான் கேட்கிற கேள்விக்கு வெளிப்படையா பதில் சொல்றீங்களா இன்ஸ்பெக்டர் சிவா?” என்று கேட்டாள் சுபா.
“நிச்சயமாக” என்றான் சிவா.
“மனோஜ் பத்தின எந்தவொரு விஷயத்தையும் நீங்க விசாரிக்கத் தவறிட்டீங்களா இல்ல தெரிஞ்சே விசாரிக்காம விட்டுட்டீங்களா?”
“ஆதித்தியா மேல இவ்வளவு ஸ்டராங்கான ஆதாரம் இருந்ததால் எங்க பார்வை வேறு பக்கம் திரும்பல”
“கடிவாளம் கட்டின குதிரையைப் போல ஆதித்தியாவை சுற்றியே உங்க விசாரணையை நடத்திருக்கீங்க... இல்லை?”
“இல்லை... கேத்ரீன் வழக்கோட எல்லா கேள்விக்கான பதிலும் ஆதித்தியாவை சுற்றியே இருந்தது”
“அதெல்லாம் சரி... ஆதித்தியா படிச்ச காலேஜ்ல நீங்க ஏன் விசாரிக்கல”
“வேணு மகாதேவன் சார் அவசியமில்லைனு சொன்னாரு”
“அப்படின்னா சரி... நீங்க போகலாம்” என்று சுபா சொல்ல. சிவா சரியாக அவர்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் நாடகத்தின் மத்திய புள்ளியான வேணு மகாதேவனிடம் வந்து நின்றனர்.
சுபாவின் பார்வை புரிய நீதிபதியே அடுத்ததாக ஏ சி வேணு மகாதேவனை விசாரிக்க அனுமதி கொடுத்தார். வேணு மகாதேவன் கம்பீரமாய்க் கூண்டில் நிற்க, தான் தடுமாறிவிடக் கூடாது என்ற பயம் சுபாவின் முகத்தில் அதிகமாக தெரிந்தது.
“மிஸ்டர் வேணு மகாதேவன்... உங்களுக்கு மனோஜ் யாருடைய மகன் என்பது தெரியுமா?”
ஆரம்பத்திலேயே இந்தக் கேள்வியை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன் மனதில் உள்ளதை முகத்தில் காண்பிக்காமல் பதில் சொன்னார்.
“மனோஜே யாருன்னு தெரியாத போது அவர் யாருடைய மகன்னு எனக்கெப்படி தெரியும்?”
“அதானே உங்களுக்கு எப்படித் தெரியும்? அப்போ மனோஜை கைது பண்ணுவதில் உங்களுக்கு எந்த வித ஆட்சபணையும் இல்லையே?”
“மனோஜை கைது பண்ணும் அளவுக்கு இந்த கேஸில் அவருக்கு எதிரான ஆதாரம் இல்லை”
“ஏன் இல்லை... மனோஜுக்கு கேத்ரீனை கொலை செய்ய மோட்டிவ் இருக்கு”
“என்றோ நடந்த சம்பவத்தைக் கொலைக்கான காரணம்னு எப்படிச் சொல்ல முடியும்? கேத்ரீனை சந்தித்து தொந்தரவு கொடுத்திருந்தாலோ இல்லை கொலை செய்வேன்னு மிரட்டி இருந்தாலோ நீங்கள் சொல்வது சாத்தியம்”
“இதெல்லாம் மனோஜ் செய்யலனு உங்களுக்கு எப்படித் தெரியும்? மனோஜ் சொன்னாரா... இல்ல கேத்ரீன் சொன்னாங்களா?”
கொஞ்சம் நேரம் யோசித்த வேணு பிறகு தான் நினைத்ததை பதிலாகச் சொன்னார்
“இந்தக் கேஸில் இரண்டு விஷயம்தான் சாத்தியம்... ஒன்று ஆதித்தியா கேத்ரீனை தள்ளி விட்டிருக்கணும் இல்லைனா ஆதித்தியா குற்றவாளி இல்லாத பட்சத்தில் கேத்ரீன் தானாக தவறி விழுந்திருக்கனும்... ஆதித்தியாவின் வாக்குமூலமும் அதுதான்”
“இன்னொரு விஷயமும் சாத்தியம் ஏசி சார்... அதுதான் கேத்ரீனின் தற்கொலை”
சுபாவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட எல்லோருமே குழம்பினர் நீதிபதி உட்பட...
அதிர்ச்சியில் இருந்து மீண்ட வேணு மகாதேவன் சுபாவை நோக்கி, “கேத்ரீன் எதற்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?“
“அதற்கான பதிலை நான் சொல்ல வேண்டுமென்றால் மனோஜ் இங்கே வர வேண்டும்”
பத்மநாதனுக்கு அதிர்ச்சி தாளவில்லை. எந்தத் திசையில் இந்த வழக்கு செல்ல கூடாதென்று நினைத்தார்களோ சுபா அதற்கு நேர்மாறாக காய்களை நகர்த்திக் கொண்டு சென்றாள்.
“ஆதித்தியாவைக் காப்பாற்ற சுபா இந்த வழக்கை திசை திருப்பப் பார்க்கிறார்...” என்று பத்மநாதன் சொல்ல சுபா அவரை நோக்கி…
“மனோஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?” என்று அவள் கேட்க பத்மநாதன் வாயடைத்துப் போனார்.
நீதிபதி சில நிமிடங்கள் யோசித்த பின், “இந்த வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை நாளை மறுநாள் நடைபெறும். அப்பொழுது காவல்துறை மனோஜை தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுகிறேன் “என்று சொல்லி முடித்து விட்டு “நீதிமன்றம் கலையலாம்” என்றார்.
சுபா வெளியே வரும் பொழுது நிருபர்கள் கூட்டம் அவளைச் சூழ்ந்து கொள்ள அவர்களின் சரமாரியான கேள்விக்குப் பதில் சொல்லாமல் தப்பித்து வந்தாள்.
அவள் வெளியே வந்ததும் விந்தியா அவளை ஆரத்தழுவி கொண்டு, “ஓவர் நைட்டில் நீ பெரிய ஸ்டாராகிட்ட சுபா” என்றாள்.
“நீங்க வைச்ச நம்பிக்கைதான் எல்லாத்துக்குமே காரணம்” என்றாள் சுபா.
ஆதித்தியா சுபாவை பார்த்து நெகிழ்ந்தபடி, “கூடப் பிறந்தவங்க இல்லைனு நான் பலமுறை வருத்தப்பட்டிருக்கேன்... ஆனா நீ உண்மையில் கூடப்பிறந்த உறவுகளுக்கு எல்லாம் மேல்” என்றான்.
“நீங்க செஞ்ச உதவியை விட இதெல்லாம் பெரிய விஷயம் இல்லண்ணா” என்று சுபா சொல்லிக் கொண்டிருக்க… சிவா அவர்களை நெருங்கி வராமல் தூரத்தில் நின்றபடி வீட்டிற்குப் போகச் சொல்லி தலையசைத்தான்.
அங்கே அவர்களுக்கு ஏதோ ஆபத்து நிகழுமோ என்ற அச்ச உணர்வோடு அப்படி சொன்னான். விந்தியா ஆதித்தியாவோடு காரில் புறப்பட சுபா திருமூர்த்தியுடன் புறப்பட்டாள்.
காரில் பயணித்துக் கொண்டு வீடு வரும் வரை விந்தியாவும் ஆதித்தியாவும் மெளனமாகவே வந்து சேர்ந்தனர்.
காரிலிருந்து இறங்கி விந்தியா வீட்டிற்குள் நுழைய வீடே புகைமூட்டமாய்க் காட்சியளித்தது. இருமலுடன் உள்ளே வந்த விந்தியா என்னவென்று நந்தினியிடம் விசாரித்தாள். அவள் ஹோமம் பூஜை யாகம் புதிதாய் ஏதேதோ கதை சொல்ல விந்தியாவிற்கு எரிச்சல் ஏற்பட்டது.
“இதெல்லாம் அம்மாவோட வேலையா?” என்று விந்தியா நந்தினியிடம் கேட்டாள்.
“ஆமாம் அண்ணி... அண்ணனோட பிரச்சனை தீர்வதற்கு இதுதான் வழி” என்று சொல்லி நந்தினி ஏதோ தீர்த்த தண்ணீரை தெளிக்க வர விந்தியா அவளைத் தடுத்தாள்.
“எனக்கெதுக்கு? பின்னாடி வருகிறவருக்குதான் எல்லாப் பிரச்சனையும்... போய் அவர் தலையில் மொத்தமா கொட்டு. அப்பையாவது பிரச்சனை தீருதானு பாக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவள் அறைக்குள் சென்றாள்.
ஆதித்தியா பின்னோடு வர மாதவி தானாகவே வந்து பிரசாதம் கொடுத்துத் தீர்த்தம் தெளித்து விட்டு திருநீர் இட்டாள். அவனும் அமைதியாக மாதவியின் செயலுக்கு உடன்பட்டான்.
ஆதித்தியா அறைக்குள் நுழைய விந்தியா ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
“என்ன பலமான யோசனை?” என்று ஆதித்தியா விந்தியாவின் முகத்தைப் பார்த்து கேட்டான்.
“இல்ல... நீங்க இவ்வளவு பவ்யமா நடிக்கிறீங்களே... அது யாரை ஏமாற்ற?” என்று கேட்டாள்.
“நான் நடிக்கிறேனா?”
“எங்க அம்மாகிட்ட எதுக்கு இந்த நல்ல பிள்ளை வேஷம்?”
ஆதித்தியா சிரித்தபடி அவள் முகத்தைப் பார்த்தான்.
“நீ மட்டும் வேஷம் போடல”
“நானா?”
“என்னைப் பிடிக்காத மாதிரி நடந்துக்குறது... வெறுக்கிற மாதிரி பேசுறது... இதெல்லாம் வேஷமில்லை?”
“இல்லை... பிடிக்கல... வெறுக்கிறேன் என்பதெல்லாம் அப்புறம்... எனக்கு உங்கள பார்க்க கூட விருப்பமில்ல” என்றாள்.
“அவ்வளவு கோபம்? அப்புறம் ஏன் வார்த்தைக்கு வார்த்தை கோர்ட்டில என்னோட கணவர்னு அழுத்தமா சொன்ன? ஏன் ஆதித்தியான்னு சொல்லியிருக்கலாமே?”
“ஆமாம் சொன்னேன்... அதுதான் உண்மையில் நடிப்பு”
“சும்மா பொய் பேசாதே... உன் வார்த்தையில ஆரம்பிச்சி மனசு முழுக்க நான் இருக்கேன்... ஆனா நீ அதை மறைக்கிற”
“நான் எதையும் மறைக்கவும் இல்ல… மறக்கவும் இல்ல…”
“சரி விந்தியா... நான் உன் நம்பிக்கைய உடைச்சிட்டேன்... உன் பேச்சை கேட்கல... உன்னை வேதனை படுத்திட்டேன்... உன்னைப் பத்தி கவலைபடாம சுயநலமா நடந்துகிட்டேன்... அதுக்காக நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்...
பட் இத காரணமா சொல்லி என்னை விட்டு போணும்னு சொல்லாதே... நீ இல்லாம என் வாழ்க்கை கண்டிப்பா முழுமையடையாது... நான் செஞ்ச கடைசி... கடைசி தப்பு இதுதான்னு நினைச்சுக்கோ... என் மனசில இருந்து சொல்றேன்... என்னை மன்னிச்சிடுடி”
“தப்பு செஞ்சா மன்னிப்புக் கேட்கலாம்... நீங்க செஞ்சது தப்பா ஆதி... சொல்லுங்க... அது என்னைப் பொறுத்தவரைக்கும் கொலை. என் காதலையும் நம்பிக்கையையும் கொன்னுட்டு ஈஸியா மன்னிப்பு கேட்குறீங்க...
அன்னிக்கு நான் அழுத போது நீங்க அதைப் பெரிசாவே எடுத்துக்கல... என்னை நீங்க மனுஷியா பார்க்கல... ஒரு பொம்மை மாதிரி இல்ல பாத்தீங்க...
போதும் ஆதித்தியா... இனிமே நீங்க என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டு சங்கடப்படுத்தாதீங்க... ப்ளீஸ்... நான் உங்க வாழ்க்கையில வந்ததுக்காக நான் வேணும்னா மன்னிப்புக் கேட்கிறேன்... என்னை விட்டுடுங்க ஆதி”
“சரிடி விட்டுடறேன்... ஆனா என்னைப் பிரிஞ்சி வாழ உன்னால முடியும்னு நினைக்கிறியா?” என்று அவள் கோபமாகப் பேசினாலும் அவன் இயல்பாகவே கேட்டான்.
“என்னால முடியும்” என்று சொல்லிக் கொண்டு ஆதித்தியாவை பார்த்தபடி அவனைக் கடந்து போக அவளின் காலில் ஏதோ தடுக்க விழ போனாள்.
ஆதித்தியா “பாத்து” என்று சொல்லி அவளை நெருங்கி போக, விந்தியா அவனின் தயவும் இல்லாமலே சுதாரித்துக் கொண்டாள்.
“ஆதி ஸ்டே அவே... நான் விழல... என்னைத் தாங்கிப் பிடிக்கிற சீனெல்லாம் இங்க இல்ல...” என்று சொல்லி விட்டு வெளியே போனாள் விந்தியா.
போன சில நொடிகளிலே “அம்மா” என்று அவளின் சத்தம் கேட்க ஆதித்தியா வெளியே வந்தான்.
விந்தியா தரையில் விழுந்து கிடந்தாள். தன்னையும் மீறிக்கொண்டு சிரிப்பு வர விந்தியாவிற்குக் கோபமாய் வந்தது.
“ஏ நந்தினி... தீர்த்தம் தெளிக்கிறேன்னு தரையெல்லாம் தண்ணி கொட்டி வைச்சிருக்க”
“அவ தண்ணி கொட்டினா... உனக்குக் கண்ணு தெரியல... தரைய பாத்து நடக்கனும்” என்றாள் மாதவி.
நந்தினி “சாரி அண்ணி “என்று சொல்லிக் கொண்டு அவளுக்குக் கை கொடுத்து தூக்க வர, ஆதித்தியா அவளை விலகச் சொல்லிட்டு தானே விந்தியாவைத் தூக்கிக் கொண்டான்.
நந்தினியும் மாதவியும் சிரிக்க விந்தியாவோ கத்தினாள்.
“நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று அவள் சொல்லுவதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அறைக்குள் தூக்கி வந்து படுக்கவைத்தான்.
“உன்னைத் தாங்கிப்பிடிக்கிற சீன் இல்லைனு சொன்ன... அது இருக்கா இல்லையானு நான் முடிவு பண்ணனும்” என்றான் ஆதித்தியா கேலியாக.
“நல்லா இருக்கிறவளை தூக்கிட்டு வந்துட்டு டயலாக் வேற” என்று சொல்லியபடி படுக்கையிலிருந்து எழுந்து கொண்டாள்.
“பொய் சொன்னா இப்படி எல்லாம் நடக்கும் விந்து”
“நான் பொய் சொன்னேனா?”
“ஆமாம்”
விந்தியா அவனிடம் விதாண்டாவாதம் செய்யத் தயாராக இல்லை. ஆனால் ஆதித்தியா அவன் சொல்ல நினைத்ததைச் சொன்னான்.
“நீ பொய் சொல்லு... திட்டு... சண்டை போடு... கோபப்படு... என்ன வேணா பண்ணு. ஆனா இந்தப் பிரச்சனை எல்லாம் முடிஞ்சு நம்ம வீட்டுக்கு போகும் போது என் கூடக் கிளம்பி வந்துரு... உனக்கு வேற ஆப்ஷனே இல்ல”
“அதிகாரம் பண்றீங்களா?”
“அன்பா சொன்னா கேட்டுடுவியா?”
அதற்கு மேல் விந்தியா எதுவும் பேச விருப்பபடவில்லை. அவர்களுக்கு இடையில் ஒரு விதமான மெளனம் நிலவியது. விந்தியாவின் கோபமும் இறுக்கமும் சூரிய ஒளி பட்ட பனிப் பாறைகள் போல கறைந்து கொண்டே வருவதை அவள் உணர ஆரம்பித்தாள்.
39