மோனிஷா நாவல்கள்
Iru Thruvangal - Episode 41

Quote from monisha on September 12, 2025, 12:56 PM41
ஆபத்தின் அறிகுறி
இருள் விலகி கதிரவன் காலை பொழுதை பிரகாசமாய் மாற்றிக் கொண்டிருக்க சுபாவின் மனதில் சூழ்ந்திருந்த இருள் மட்டும் விலாகமலே இருந்தது. திருமூர்த்தி அவளைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொள்ள, பலரிடம் இருந்து பாராட்டுக்கள் அவளின் வாதத்திற்கு குவிந்த வண்ணம் இருக்க, அவள் மனம் களிப்படையவில்லை. அப்படி அவளைச் சூழ்ந்து கொண்டிருந்த கவலை எதை பற்றியது என்பது அவள் மனம் மட்டுமே அறிந்த உண்மை.
இவை எல்லாவற்றையும் மீறி நீதிமன்றத்திற்கு புறப்படத் தயாரானாள்.
சுபாஷ் மழலை மொழி மாறாமல்,. “அப்பா எங்கே... காணோம்?” என்று சுபாவிடம் கேட்க நேற்று இரவு சமுத்திரன் அவளிடம் கோபமாய் சண்டை போட்டு விட்டு கூடிய சீக்கிரத்தில் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்ப போவதாக சொல்லிவிட்டு சென்றதை நினைவுப்படுத்தியது. அதற்குள் சுபாவின் அம்மா கையில் பூஜை தட்டோடு வந்து நெற்றியில் குங்குமம் இட்டுவிட்டாள்.
“முதல்முறையா கடவுள் கிட்ட போய் நிற்கும் போது நான் என்ன வேண்டிக்கணும்னு குழப்பமா இருக்கு சுபா” என்றாள் சுபாவின் அம்மா.
“இனிமேயாவது உன் பொண்ணு யாரையும் சார்ந்து வாழக் கூடாதுன்னு வேண்டிக்கோ” என்றாள் சுபா.
“என் மகள் ஜெயக்கிணும்னு எனக்கும் ஆசைதான்... அது உன் வீட்டுக்காரரை தோற்கடிச்சிதான் நடக்கணுமா சுபா?” என்றாள் அவளின் அம்மா.
சுபா சிரித்தபடி, “யாரு ஜெயிக்க போறோம் என்பதெல்லாம் முக்கியமில்லம்மா... தப்புச் செஞ்சவங்களுக்குத் தண்டனை கிடைக்கணும்... அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டு சுபா திருமூர்த்தியுடன் புறப்பட அவளின் அம்மாவின் கண்களில் நீர் தேங்கியிருந்து.
கணவன், குடும்பம், குழந்தைகள் என்ற வரையறைக்குள் தேங்கி கிடந்தவள் இன்று ஆற்றுவெள்ளமாய்ப் பெருகி ஓட தொடங்கும் போது பாதை கொஞ்சம் கரடுமுரடானதாகவே இருக்கும் என்பதே சுபா அம்மாவின் மனதில் உள்ள கவலை.
உண்மை இல்லாத உறவுகள் என்றாவது ஒரு நாள் அதன் சுயவடிவத்தைப் பெறும் போது நிச்சியம் பிரிவை சந்தித்தே தீரும். அதே போல் நிதர்சமான அன்பு கொண்டவர்களின் உறவு எத்தனை பிரிவை கடந்தும் நிலைத்து நிற்கும். நம் விந்தியா ஆதித்தியாவின் காதலைப் போல.
கடந்து வந்த பிரிவுகளைத் தாண்டி அவர்களுக்கு இடையில் நெருக்கம் அதிகமானது.
ஆதித்தியா விந்தியாவைக் கண்இமைக்காமல் இடது புற கன்னத்தை கைககளில் தாங்கி பிடித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்க… அவள் கருநீல நிற புடவையை உடுத்தி கொண்டு கண்ணாடியை பார்த்தபடி நெற்றியின் வகுட்டில் குங்குமம் வைத்துக் கொண்டிருந்தாள்.
“ஆதி டைமாச்சு. ஏர்போர்ட்டுக்கு போய் ஷபானாவை பிக்அப் பண்ணனும்... அப்புறம் கோர்ட்டுக்கு வேற போகணும்”என்று அவள் சொல்லிவிட்டு திரும்ப அவன் இருந்த இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருந்தான்.
அவன் அசையாமல் சிலை போல் உட்கார்ந்திருக்க விந்தியா அவன் முன்னே கைகளை அசைத்து பார்த்தாள்.
“ஹெலோ மிஸ்டர்... கோர்ட்டுக்கு போணும் வர்றிங்களா இல்லையா? அப்புறம் ஜாமீன் கேன்ஸலாகும்... போலிஸ் தேடி வரும்... சொல்லிட்டேன்”
அவள் அருகில் நின்றதை அவன் சாதகமாய் மாற்றிக் கொண்டு இழுத்து மடியில் அமரவைத்து அணைத்துக் கொண்டான்.
“விடுங்க ஆதி... டைமாச்சுன்னு சொல்லிட்டிருக்கேன் விளையாடிட்டு இருக்கீங்களே”
“என் கண் முன்னாடி இப்படி தேவதை மாதிரி அலங்கரிச்சிட்டு... போயும் போயும் வா கோர்ட்டுக்கு போகலாம்னு கூப்புடுற...”
“வேற சாய்ஸே இல்ல... இப்ப கோர்ட்டுக்கு கிளம்பித்தான் ஆகணும்... அந்த மனோஜ் என்ன சொல்லப் போறான்... சமுத்திரன் உங்க மேல என்னவெல்லாம் பழி போட போறானோன்னு நினைச்சா கவலையா இருக்கு”
“இன்னிக்கு எதைப் பத்தியும் எனக்குக் கவலை இல்ல... எனக்கு நம்பிக்கை இருக்கு... இனிமே எல்லாமே நல்லதாகவே நடக்கும்” என்று சொல்ல அவனை உதறி விட்டு எழுந்து கொண்ட விந்தியாவின் மனதில் ஒருவிதமான படபடப்பும் பய உணர்வும் ஏற்பட்டிருந்தது.
ஏதோ தப்பாக நடக்கப் போகிறதென அவள் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டிருந்தது. அவளின் இந்த எண்ணங்களுக்கு இடையில் ஆதித்தியா அவள் நெற்றியில் வைத்திருந்த குங்குமத்தை நேர்த்தியாகச் சரி செய்துவிட்டான். அதற்குள் நந்தினி கதவை தட்டி காலை உணவு சாப்பிட அழைக்க விந்தியா அவன் கைகளைப் பிடித்து இழுத்தபடி
“நேரமாச்சு ஆதி... சாப்பிட்டு கிளம்பலாம்”என்றாள்.
அவர்கள் இருவரும் உணவு உண்ணும் போது பேசிக் கொண்ட விதம் விந்தியாவின் முகத்தில் கோபம் மறைந்து வெட்கத்தால் பொலிவடைத்த அழகைக் கண்ட நந்தினி ஒருவாறு யூகித்து விட்டாள். அதை மாதவியிடம் சொல்லி மகிழ்ச்சி அடைந்தாள். மாதவிக்கும் அவர்கள் இருவரின் நடவடிக்கையில் வித்தியாசத்தை உணர விந்தியாவைத் தனியே அழைத்தாள்.
“நீயும் மாப்பிள்ளையும் சமாதானம் ஆயிட்டீங்களா?” என்று மாதவி கொஞ்சம் தயங்கியபடி கேட்க விந்தியா மெளனமாகச் சிரித்தாள்.
“எவ்வளவு தடங்கலுக்கு அப்புறம் உனக்குக் கல்யாணம் கூடி வந்தது... உன் பிடிவாத குணத்தை எல்லாம் தாண்டி எப்படி வாழப் போறியோ பயந்துட்டே இருந்த விந்தும்மா... ஆனா மாப்பிள்ளை உன்னை இந்தளவுக்கு புரிஞ்சிக்கிட்டு நடந்துக்குறது எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு...” என்று மாதவி உணர்ச்சி பொங்க பேசினாள்.
“போதும்மா உன் மாப்பிள்ளை புராணம்” என்றாள் விந்தியா.
“சரி சரி... இனிமேயாச்சும் சண்டை கிண்டை போடாம ஒழுங்கா இரு“ என்றாள் மாதவி
“உன் மாப்பிள்ளை என்னவோ மகாத்மா மாதிரியும், நான்தான் எல்லாம் பிரச்சனைக்கும் காரணம் மாதிரி பேசிட்டிருக்க”
ஆதித்தியா பின்னாடி வந்து அவள் தலையில் தட்டினான்.
“அம்மா ஏதோ சொல்றாங்கன்னா அதைக் கேட்டு நடந்துக்கோ... அதை விட்டுட்டு ஏன் விதண்டாவாதம் பண்ற” என்றான்.
“நீங்க ரொம்ப ஒழுக்கம்... எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டீங்க” என்று கோபித்துக் கொண்டு விந்தியா அந்த இடத்தை விட்டுக் கோபமாக அகன்றாள்.
ஆதித்தியா மாதவியைப் பார்த்து, “அத்தை... உங்க பொண்ணால என் கூடச் சண்டை போடாம இருக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ… அவ்வளவு உண்மை என்னால உங்க பொண்ணைப் பிரிஞ்சு இருக்கவே முடியாதுங்கறது... நீங்க அதனால எதுக்கும் கவலைப்படாதீங்க” என்று உரைத்தான்.
மாதவியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அவர்கள் இருவரையும் ஆனந்தமாய் வழியனுப்பி வைத்தாள்.
விமான நிலையத்தில் இருந்து ஷபானாவையும் அவள் மகன் ஆஷிக்கையும் அழைத்துக் கொண்டு விந்தியாவும் ஆதித்தியாவும் காரில் நீதிமன்றத்தை நோக்கி விரைந்தனர்.
ஷாபானாவை ஆதித்தியாவிற்கு முன்னாடியே கேத்ரீன் மூலமாக அறிமுகம் என்பதால் காரை ஒட்டிக் கொண்டே இயல்பாக அவளிடம் பேசிக் கொண்டு வந்தான். விந்தியா முன்புற இருக்கையில் அமர்ந்திருக்க ஷாபானாவும் ஆஷிக்கும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
“இவங்கதான் உங்க மனைவியா?” என்று ஆதித்தியாவிடம் ஷபானா வினவினாள்.
“சாரி ஷாபனா... அறிமுகப்படுத்தவே மறந்துட்டேன்... இவங்கதான் என் மனைவி விந்தியா” என்றான்.
“எப்படி ஆதி சார்? ஆச்சர்யமா இருக்கு... நீங்க காதல் கல்யாணத்தில் எல்லாம் எனக்கு அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்லன்னு சொல்வீங்க” என்றாள் ஷபானா
“விதி யாரை விட்டுச்சு” என்றுஆதி சொல்ல விந்தியா அவன் புறம் திரும்பி கோபமாய் பார்க்க ஆதித்தியா சமாதனமாய், “சும்மா டார்லிங்” என்று அவள் புறம் திரும்பி கண்ணடித்தான்.
ஷபானா அவர்களைக் கவனிக்காதது போல் அமர்ந்திருக்க ஆதித்தியா கேத்ரீன் பற்றி அவன் மனதில் ரொம்ப நாள் தேங்கியிருந்த சந்தேகத்தைக் கேட்டான்.
“ஷபானா... கேத்ரீனுக்குச் சென்னையில் கெஸ்ட் ஹவுஸ் இருக்கும் போது அவ ஏன் ஹோட்டலில் ஸ்டே பண்ண முடிவு எடுத்தா?”
“மேடமுக்கு உங்களை மீட் பண்ற ஐடியா இருந்திருக்கலாம்”
“நிச்சயமா அப்படி இருக்காது... கேத்ரீனுக்கு என் மேல இருந்த கோபம் அவ்வளவு சாதாரணமானது கிடையாது”
“இல்ல சார்... மேடம் வெளிப்படையா சொல்லல... இருந்தாலும் அவங்க மனசில் அப்படி ஒரு எண்ணம் இருந்திருக்கு.
அன்னைக்கு ஹோட்டலில் கிளைன்ட் மீட்டிங் நடந்துட்டு இருந்த போது நீங்க மேடம பாத்துட்டு கிராஸ் பண்ணி போனீங்க இல்ல... அப்போ மேடம் கண்ணில் உங்கள பாத்து பேசணும்னு தவிப்பு இருந்துச்சு” என்றாள் ஷபானா.
“கேத்ரீன் ஆதித்தியாவை பாத்துப் பேசியிருந்தால் தப்பா எதுவும் நடக்காம இருந்திருக்குமோ என்னவோ?” என்றாள் விந்தியா.
“நடத்து முடிஞ்சதை பத்தி நாம என்ன பேசி என்ன ஆகப் போகுது?” என்று ஆதித்தியா சொல்ல விந்தியா “தட்ஸ் ரைட்” என்றாள்.
நீதிமன்ற வாசலில் வந்து கார் நிற்க ஷபானா தன் முகத்தைக் கருப்பு துணியால் மூடி பர்தாவை உடுத்திக் கொண்டாள்.
“விந்தியா... நீ முன்னாடி போ... நம்ம கேஸ் ஹியரிங் ஆரம்பிக்கும் போது நான் ஷபானாவை கூட்டிட்டு வர்றேன்” என்று ஆதித்தியா சொல்ல விந்தியா நீதிமன்றத்தில் சுபா நின்றிருந்த திசை நோக்கி நடந்து சென்றாள்.
அந்த நேரத்தில் ஷபானா தன் பேக்கில் இருந்த லேப்டாப்பை ஆதித்தியாவிடம் கொடுத்தாள்.
“இந்தாங்க சார்... இது கேத்ரீன் மேடமோட லேப் டாப். மேடம் லாக்கரில் இருந்த ஆதாரத்தை எல்லாம் எப்படியோ எடுத்துட்டாங்க... இதைப் பத்தி தெரிஞ்சிருந்தா நிச்சயம் இதையும் விட்டு வைச்சிருக்க மாட்டாங்க”
ஆதித்தியா குழப்பத்தோடு அதனைக் கையில் வாங்கிக் கொண்டான்.
“நான் சென்னையில் இருந்து கேத்ரீன் மேடமை தனியா விட்டுட்டு கிளம்பும் போது, ‘நான் வரவரைக்கும் இந்த லேப்டாப்பை பத்திரமா வைச்சுக்கோ’னு சொல்லி கொடுத்தாங்க... பட் நவ்... ஷீ இஸ் நோ மோர்” என்று சொல்லி கண்கலங்கியபடி மேலும் தொடர்ந்தாள்.
“இதை நான் யார்கிட்ட கொடுப்பேன்? நீங்கதான் மேடமுக்கு ரொம்ப நம்பிக்கைக்குரியவர்... அதனால்தான் உங்கக்கிட்ட கொடுக்கிறேன் “ என்று ஷபானா சொல்லி முடிக்க ஆதித்தியா அந்த லேப்டாப்பை வாங்கி இயக்கி பார்த்தான். ஆனால் அது பாஸ்வார்ட் கேட்டது.
சுபாவை பார்த்த சமுத்திரன் அவள் அருகாமையில் வந்து நின்றான்.
“உனக்கு ரொம்பதான் தைரியம்... என்னை ஜெயிக்க முடியும்னு எந்த நம்பிக்கையில் கோர்ட்டு வரைக்கும் வந்திருக்க?” என்றான் சமுத்திரன்.
சுபா அவனிடம் எதவும் பேச விருப்பப்படாமல் மௌனமாகவே நின்றிருந்தாள்.
“பூனை சூடு போட்டுக்கிட்டாலும் புலியா மாறிட முடியாது... தெரியுமா?” என்று மீண்டும் அவளைச் சீண்டும் விதமாகப் பேச விந்தியா அவர்களை நோக்கி வந்தாள்.
“பூனை தன்னை புலினு நினைச்சிக்கிட்டா பரவாயில்ல... எலி விவஸ்த்தையே இல்லாம தன்னை புலினு நினைச்சுக்குது” என்றாள் விந்தியா நக்கலாக!
“என்ன சொன்ன?” என்று சமுத்திரன் விந்தியாவை நோக்கி கேட்க… அவள் சிரித்தபடி, “இதுவே உனக்கு விளங்கல... நீ எல்லாம் வாதாடினா எங்க விளங்கப் போகுது?” என்று சொல்லிக் கொண்டே சுபாவை அங்கிருந்து நகர்த்திச் சென்றாள்.
நீதிமன்றத்தில் கேத்ரீன் வழக்குக்கான விசாரணை தொடங்க மனோஜை அழைத்துக் கொண்டு சிவா உள்ளே சென்றான்.
வழியில் நின்றிருந்த சமுத்திரன் சிவாவை நோக்கி, “நீ விளையாடுகிற விளையாட்டு உனக்கே வினையா முடியப் போகிறது சிவா... ஜாக்கிரதையா இரு “என்றான்.
சிவா அந்த வார்த்தைகளைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் போனாலும் அது ஏதோ ஆபத்தின் அறிகுறியாய் அவன் மனதில் உறுத்தியது.
41