மோனிஷா நாவல்கள்
Iru Thruvangal - Episode 42

Quote from monisha on September 15, 2025, 11:29 AM42
சவால்
நீதிமன்றத்தில் நுழைந்த பின்னும் சுபா கொஞ்சம் தெளிவு இல்லாதவளாகவே தோன்றினாள். அதற்கு நேர்மாறாக சமுத்திரனின் முகத்தில் தன்னம்பிக்கை மிளிர்ந்து கொண்டிருந்தது.
ஆதித்தியாவும் சிவாவும் தங்களுக்குள்ளேயே ஏதோ ஒன்றை பற்றி ரகசியமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். மனோஜிடம் சமுத்திரன் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று அவன் பாடம் எடுத்துக் கொண்டிருக்க மனோஜின் கண்கள் கோபத்தோடும் சலனத்தோடும் விந்தியாவையே கவனித்துக் கொண்டிருந்தன.
தன் கணவன் மீது இத்தனை பெரிய பழி இருக்கும் போதும் அவள் இயல்பாய் அமர்ந்திருப்பது அவனைப் பெரிதும் குழப்பமடையச் செய்தது. அதுவும் இல்லாமல் சமுத்திரன் மீது மனோஜிற்கு நம்பிக்கை குறைவாகவே இருந்தது.
இதற்கிடையில் நீதிபதி கம்பீரமாய் வந்து தம்முடைய இருக்கையில் அமர, எல்லோருக்குள்ளும் ஒவ்வொரு விதமான பதட்டம் தொற்றிக் கொண்டது சமுத்திரனை தவிர. அவன் மட்டும் ஒருவிதமான அதீத நம்பிக்கையோடு காட்சியளித்தான்.
நீதிபதி இன்ஸ்பெக்டர் சிவாவை பார்த்து, “முன்பு நடந்த இந்த வழக்கின் விசாரணையில் சொன்னது போல் மனோஜை ஆஜர் படுத்தினீர்களா?” என்று கேட்க
“எஸ் யுவ்ர் ஆனர்”என்று சிவா சொல்லி அவனைக் கூண்டின் மீது ஏறி நிற்கும்படி சொன்னான்.
“இப்போது இந்த வழக்கு சம்பந்தபப்பட்ட வாதங்களைத் தொடங்கலாம்”.
சமுத்திரன், “எனது கட்சிக்காரர் மனோஜுக்கும் இந்த வழக்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இருப்பினும் எதிர்க்கட்சி வக்கீல் தம்முடைய வாதத்திறமையால் எமது கட்சிக்காரரை குற்றாவாளி என்ற பிரம்மையை உருவாக்கி நீதமன்றத்தில் ஆஜர் படுத்த வைத்திருக்கிறார்.
ஒரு பொய்யை உண்மை முலாம் பூசி எல்லோரையும் ஏமற்றும் கைதேர்ந்த வித்தையை தெரிந்தவர் எதிர்க்கட்சி வக்கீல் என்பதில் எனக்கு ஐயப்பாடில்லை.
அப்படியே எனது கட்சிக்காரரே குற்றவாளி என வைத்துக்கொண்டாலும், எதிர்க்கட்சி வக்கீல் அது சம்பந்தமாக எந்தவித வலுவான ஆதாரத்தையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. இனிமேலும் முடியாது.
ஆதித்தியாவிற்கு ஏற்கனவே என் கட்சிக்காரர் மீது தனிப்பட்ட முறையில் வன்மம் இருப்பதைத் தீர்த்துக் கொள்ள இப்படி ஒரு நாடகத்தை அவருடைய வக்கீலின் துணையோடு அரங்கேற்றியுள்ளார்.
இவை எல்லாம் ஒரு புறமிருக்க கேத்ரீனின் இறப்பு கொலையா தற்கொலையா என்ற பெரும் குழப்பத்தோடு இருக்கும் எதிர்க்கட்சி வக்கீல் கொலையாளி என என் கட்சிக்காரர் மனோஜை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது” என்று சமுத்திரன் சொல்லி முடித்தான்.
நீதிபதி சுபாவை பார்த்து “நீங்கள் உங்கள் வாதங்களை எடுத்துரைக்கலாம்” என்றார்.
“இந்த வழக்கை பொறுத்தவரை என் கட்சிக்காரர் ஆதித்தியாவை குற்றாவாளி என போலீஸ் தரப்பு ஒருதலைபட்சமாய் விசாரித்துக் கூண்டில் ஏற்றி விட்டது. ஆனால் காவல்துறை மனோஜிடம் இதுவரையில் எந்தவித விசாரணையும் நடத்தவில்லை.
ஏனென்றால் பணம் செல்வாக்கு பதவி என சேரக்கூடாதது எல்லாம் ஒன்றாய் சேர்ந்த மொத்த வடிவமாய் நிற்கிறார் இந்த மனோஜ். வழக்கின் உண்மை குற்றவாளியை தோலுரித்துக் காட்டுவதன் மூலமாகத்தான் என் கட்சிகாரர் ஆதித்தியாவை நிரபராதி என நிருபிக்க முடியுமே எனில் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இது கொலையா தற்கொலையா என்ற குழப்பம் எனக்கு மட்டுமில்லை. இங்கிருக்கும் எல்லோருக்கும் இருக்கிறது. கேத்ரீன் தனித்து வாழ பழகியவள். பெரும் நிர்வாகத்தைக் கட்டிக்காப்பவள். தைரியத்தின் மறுவுருவம் என்று சொல்லலாம்.
இருப்பினும் ஒரு பெண்ணிற்கு அவளால் தாங்க முடியாத துன்பம் நேரிடும் போது… அதை அவளால் சகித்துக் கொள்ள முடியாமல் போகும் போது… மனக்குழப்பத்தின் காரணமாக தற்கொலை என்பது தீர்வாய் அவளுக்குத் தோன்றி இருக்கலாம். அப்படி ஒரு நிலைக்கு கேத்ரீனை தள்ளியவனும் கொலைக் குற்றம் செய்யும் கொலையாளிக்கு நிகரானவனே.
அந்த உண்மையைக் கண்டறிய வேண்டுமெனில் கூண்டில் நிற்கும் இந்த மனோஜை சில கேள்விகள் கேட்க அனுமதிக்க வேண்டும் யுவர் ஆனர்”
நீதிபதி, “ப்ரொசீட்”என்றார்.
சுபா மனோஜ் நிற்கும் கூண்டின் அருகில் வந்து நின்றாள்.
“நீங்கதானே மனோஜ்?”
“ஆமாம்”
“உங்களுடைய அப்பா பெயர் என்ன?”
“வித்யாதரன்”
“சென்டிரல் மினிஸ்டர் வித்யாதரன்தானே”
உடனே சமுத்திரன், “அப்ஜக்ஷன் யுவர் ஆனர்... என் கட்சிக்காரர் குற்றவாளியா இல்லையா என்று விசாரிப்பதை விடுத்து அவரின் குடும்ப வரலாறை கேட்டு அவரின் சமுதாய அந்தஸ்த்தை குலைக்கும் நோக்கில் செயல்படுகிறார் “
சுபா நீதிபதியின் புறம் திரும்பி, “மனோஜின் தந்தையின் செல்வாக்கை தெரிந்து கொண்டால்தான் காவல்துறை இவரை விசாரிப்பதில் தயக்கம் காட்டுவதின் பிண்ணனி உங்களுக்கு புரியும் யுவர் ஆனர் “
நீதிபதி, “அப்ஜக்ஷன் ஓவர் ரூல்ட்... நீங்க விசாரணையைத் தொடரலாம்” என்றார்.
சமுத்திரன் கோபக் கனலோடு அமர்ந்து கொள்ள சுபா தன் விசாரணையை மனோஜிடம் தொடர்ந்தாள்.
“நீங்க சொல்லுங்க மனோஜ்... சென்ட்ரல் மினிஸ்டர் வித்யாதரன்தானே உங்க அப்பா”
“ஆமாம்”
“உங்க அப்பாவோட பதவியும் பெயரும் இருக்கிற அகந்தையில் பல பெண்கள் கிட்ட நீங்க அநாகரிகமா நடந்துக்கிட்டு இருக்கீங்க... இல்லையா?”
“நான் அந்த மாதிரியானவன் இல்லை... அதே போல் பதவி பெயர் புகழுக்கு எல்லாம் என் அப்பா மயங்குகிறவர் இல்லை... என்னையும் அப்படி வளர்க்கல... அவருக்கு மக்கள் சேவைதான் முக்கியம்...
அதனாலதான் என் மேல விழுந்த அபாண்டமான பழியை பொய்யாக்க ஒருநாளும் அவருடைய பதவி பெயரை பயண்படுத்தக்கூடாதுனு கண்டிப்பா சொல்லி இருக்காரு” என்று அவன் ரொம்பவும் பவ்யமாய் நடித்துக் கொண்டிருப்பதை சுபாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“இத பாருங்க மனோஜ்... இது கட்சி மீட்டிங் இல்ல... இங்க இருக்கிறவங்க யாரும் ஏமாந்த பொது ஜனமும் இல்ல... அதனால கொஞ்சம் உண்மையே பேசுங்க”
“நீங்க நம்பினாலும் நம்பாட்டியும் இதுதான் உண்மை”
“உண்மைன்னே நம்புறேன்... இவ்வளவு ஒழுக்கமா இருக்கிற உங்களை ஏன் கல்லூரியை விட்டு நீக்கினாங்க?”
“என்னைத் தப்பானவனும்... பெண்கள் கிட்ட தப்பா நடந்துக்கிறேன்னும் வாய் கூசாம ஒரு பொய்யான பழியை என் மேல போட்டு கல்லூரியை விட்டு நீக்கிட்டாங்க”
“அத்தனை பெரிய கல்லூரி நிர்வாகம் உங்க மேல ஆதாரம் இல்லாம பொய்யான பழியைப் போட்டுட்டாங்கன்னு நீங்க சொல்றது நம்பும்படியாக இல்லை” என்றாள்
“அப்படின்னா எனக்கு ஒரு சந்தேகம்... உங்கக்கிட்ட கேட்கலாமா” என்றான் மனோஜ்
“கேளுங்க” என்றாள் சுபா.
“இந்த வழக்கில் ஆதித்தியாவிற்கு எதிராக வலுவான ஆதாரம் இருக்கும் போதும் நீங்க அவர் குற்றாவாளி இல்லன்னும்... சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அப்படி அமைஞ்சு போச்சுனு நீங்க வாதாடிறீங்க... ஏன் என்னையும் அதே போல் சந்தர்ப்பும் சூழ்நிலையும் தப்பானவனாய் என் கல்லூரி நிர்வாகம் முன் நிறுத்திருக்கக் கூடாது... உங்க கட்சிக்காரருக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?”
இந்தக் கேள்வி சுபாவிற்குக் கொஞ்சம் நெருக்கடியாகவும் திகைப்பாகவும் இருந்தது. அதே சமயத்தில் ஆதித்தியாவிற்கு மனோஜின் குணம் நன்றாகத் தெரியும். ஆனால் இன்று அவனுடைய தெளிவு ஆதித்தியாவிற்கும் ரொம்பவும் ஆச்சர்யமாய் இருந்தது.
எல்லாவற்றை மீறி சுபா அவன் சிக்கப் போகும் ஒரு தருணத்திற்காகக் கேள்விகளை வரிசையாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“சரி அது போகட்டும்... கேத்ரீனுக்கும் உங்களுக்குமான பழக்கம் எப்படி?”
“கேத்ரீனை நான் மனதார நேசித்தேன்... அவளுக்கும் என் மீது கொஞ்சம் விருப்பம் இருந்தது. ஆனா ஆதித்தியா எங்க இருவருக்குள்ள பிரிவினை உண்டாக்கினது மட்டுமில்லாம என்னைப் பத்தி தப்புத் தப்பா சொல்லி கேத்ரீனை நம்பவும் வைச்சுட்டான்”
“கேத்ரீன் இன்னைக்கு உயிருடன் இல்லாததினால் நீங்க சொல்வதெல்லாம் உண்மையா மாறிடாது மனோஜ்”
“கேத்ரீன் உயரோடு இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?” என்று கண்ணீர் வடித்தான். சுபாவிற்கு அவன் நிதானமும் பதட்டமில்லாமல் கோர்வையாய் பொய் சொல்லும் விதம் அவளை மிரள வைத்தது.
“கடைசியாய் நீங்க கேத்ரீனை எப்போ சந்திச்சீங்க?”
“அது...” என்று கொஞ்சம் இழுத்தான் மனோஜ்.
“மறந்துட்டீங்களா? நான் வேணும்னா ஞாபகப் படுத்தட்டுமா?”
“அவசியமில்லை... கேத்ரீனோட இறப்பு நடந்த அன்று இரவுதான் கடைசியா அவங்களை ஒரு ப்ரைவட் பாரில் பார்த்தேன்... பேசினேன்...” என்று அலட்சியமாகச் சொன்னான்.
அவன் இல்லை என்று மறுப்பான் அல்லது தடுமாறுவான் என்று எதிர்பார்த்தாள். சுபாவிற்கு இம்முறையும் அவனுடைய தெளிவு மிரட்சியாய் இருந்தது. அவனிடம் கேள்விகளைத் தொடர்ந்தாள் சுபா
“அப்படின்னா அவங்களைக் காயப் படுத்துகிற அளவுக்கு நீங்க ஏதோ பேசியிருக்கீங்க... குடிக்கிறளவுக்கு அவங்களுக்கு நீங்க மனஅழுத்தம் கொடுத்திருக்கீங்க... உங்களுடைய சந்திப்புதான் கேத்ரீனோட தற்கொலைக்கு காரணமாவே அமைஞ்சிருக்கு... சரிதானா மனோஜ்?”
“இல்லை...” என்று திட்டவட்டமாய் மறுத்தான் மனோஜ்.
“அப்போ கேத்ரீன்கிட்ட நீங்க அப்படி என்ன பேசினீங்க?”
“நான் கேத்ரீனை உண்மையா காதலிச்சேன்னு சொன்னேன். ஆதித்தியாதான் நம்ம பிரிவுக்குக் காரணம்னு சொன்னதும்... பாவம் கேத்ரீனால் அதை நம்ப முடியல... ஆதித்தியாவின் சுயரூபத்தைப் பற்றி தெளிவா புரியும்போது கேத்ரீன் அவனைக் காதலிச்சதுக்காக அவமானப்பட்டாங்க...
அதுவே கேத்ரீன் குடிக்கிறதுக்கும் மன அழுத்தத்திற்கு காரணமாய் அமைஞ்சது... ஆனா அதுக்காக எல்லாம் கேத்ரீன் தற்கொலை பண்ணி இருக்கிற ஆள் இல்லை. இந்த ஆதித்தியாதான் கேத்ரீன் கொலைக்கு நிச்சயம் காரணமா இருக்க முடியும்”
“சபாஷ் மனோஜ்... எவ்வளவு பிரமாதமா பொய் சொல்றீங்க! கேத்ரீனை நீங்க காதலிக்கிறேன்னு சொன்னது அப்பட்டமான பொய்... நாலு வருஷத்துக்கு முன்னாடி கேத்ரீன் சுயநினைவு இல்லாத போது அவ வாழ்கையை நீங்க கெடுத்திருக்கீங்க...
பாவம்… அந்த உண்மை தெரியாத கேத்ரீன்கிட்ட நீங்க எல்லாத்தையும் சொல்ல அதை அவங்களால தாங்கிக்க முடியல. ஆதித்தியா மேல பழி போட்டதுனால ஏற்பட்ட குற்றவுணர்வும் தன்னோட வாழ்க்கையை உங்கள மாதிரி ஒருத்தரால் கெட்டுப்போச்சே என்கிற வேதனையும் கேத்ரீனை குடிக்க வைச்சிருக்கு.
அந்த போதையினால் ஏற்பட்ட மனஅழுத்தம் கேத்ரீனை தற்கொலை பண்ணிக்க வைச்சிருக்கு... இதுதான் உண்மை... அதுக்கான ஆதாரமும் என்கிட்ட இருக்கு”
உடனே சமுத்திரன் எழுந்து கொண்டு, “அந்த ஆதாரத்தைக் காண்பீங்க மிஸஸ். சுபா” என்றான்.
சுபா பதட்டமாய் சிவாவின் முகத்தைப் பார்த்தாள். சிவா காண்பிக்கச் சொல்லி தலையசைக்க, அவள் நீதிபதியின் புறம் திரும்பினாள். ஏற்கனவே நடந்த விசாரணையின் போது ரகசியமான ஆதாரம் ஒன்றை சமர்ப்பித்தாள்.
அது மனோஜும் கேத்ரீனும் ஒரு பாரில் நின்று பேசி கொண்டதற்கான கண்காணிப்புக் கேமராவில் பதிந்த வீடியோ ஆதாரம். அது எல்லோர் முன்னிலையில் போட்டு காட்டப்பட அதில் மனோஜ் ஏதோ பேச, கேத்ரீனின் முகம் வேதனைப்படுவதையும் கண்கலங்கி நிற்பதும் பதிவாகி இருந்தது. ஆனால் அந்த ஆதாரத்தில் அவர்கள் சம்பாஷணைகள் கொஞ்சம் கூட கேட்கவில்லை.
அந்த ஆதாரத்தை சுபா முதலிலேயே நீதிபதியிடம் கொடுத்து ரகசியமாய் வைத்துக் கொள்ளச் சொன்னதன் காரணம் மனோஜ் தான் கேத்ரீனை சந்திக்கவேயில்லை என்று பொய்யுரைப்பான் என எதிர்பார்த்தாள். கடைசியில் எல்லாம் சுபா எண்ணத்திற்கு நேர்மாறாய் அமைந்தது.
சமுத்திரன் ஒருவாறு அந்த ஆதாரத்தை யூகித்திருக்க வேண்டும். அதில் குரல் பதிவாக வாய்ப்பில்லை என்று கணித்துவிட்டு அதற்கு ஏற்றவாறு பொய்யை தயார் செய்து அதில் மனோஜை கச்சிதமாய் நடிக்க வைத்திருக்கிறான்.
சமுத்திரன் மேலும் சுபாவிற்கு நெருக்கடி கொடுக்கும் வாதத்தை எடுத்துரைத்தான்.
“இந்த ஆதாரத்தில் மனோஜ் கேத்ரீன் சந்திப்பு மட்டுமே பதிவாகியிருக்கும் நிலையில் எந்த அடிப்படையில் மனோஜ் மீது இத்தனை பெரிய குற்றச்சாட்டைத் திணிக்கிறீர்கள் மிஸஸ் சுபா” என்றான்.
“இந்த ஆதாரத்தில் குரல் பதிவாகாத காரணத்தால் நான் சொல்வது எல்லாம் பொய்யென்று ஆகிவிடாது... மனோஜ் மீதான குற்றத்தை நிச்சயம் நிருபிப்பேன்” என்று சுபா உணர்ச்சிவசப்பட…
சமுத்திரன் தன் இருக்கையில் அமர்ந்தபடி, “முடிந்தால் முயற்சி செய்யுங்கள்” என்றான் சவால் தொனியில்.
42