You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 5

Quote

5

ஆதித்தியா எங்கே?

ஹோட்டல் ஆதித்தியா.

பத்தாவது மாடியில் அமைந்திருந்த அந்தப் பெரிய அறை அலுவலகம் போல காட்சியளித்தது. சந்திரகாந்த் தமக்கே உரிய பாணியில் அந்தப் பெரிய இருக்கையில் அமர்ந்திருந்தார்.

“சார்... எங்க பார்த்தாலும் போலீஸ் நடமாட்டம். அதனால ஸ்டே பண்ணிருக்கிற எல்லோரும் அன்ஈஸியா ஃபீல் பண்றாங்க” என்றான் ஹோட்டல் மேனஜெர் ரமேஷ்.

சந்திரகாந்த் எதிரில் வக்கீல் உடையில் அமர்ந்திருந்த திருமூர்த்தி பதில் உரைத்தார்.

“என்ன பண்ண முடியும் ரமேஷ்? எதிர்பாராமல் இந்த விபத்து நடந்து போச்சு... போலீஸ் விசாரணை எல்லாம் நம்மால் தவிர்க்க முடியாது”

“இது விபத்துதானா? தற்கொலையா இருந்தா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டார் சந்திரகாந்த்.

“அப்படி இருக்கும்னு தோணல சந்திரா. போன வருடம் அந்தப் பொண்ணு கேத்ரீனுக்குத்தான் ’யங்கஸ்ட் பிஸ்னஸ் உமன்’ அவார்ட் கொடுத்தாங்க... அந்தக் கம்பெனி டாப் இந்தியன் கம்பெனிஸ் லிஸ்ட்டில இருக்கு. அதனாலதான் மீடியா கூட இந்த விஷயத்தைப் பூதகரமாய் மாத்திட்டு இருக்காங்க. இப்படிப்பட்ட பெண்ணா தற்கொலை பண்ணிக் கொண்டிருப்பாள்?”

“ம்...”

இப்படி அவர்கள் விபத்தைப் பற்றிப் பேசி முடித்தவுடன் ரமேஷை பார்த்து, “ஆதித்தியா எங்கே? நான் வந்ததிலிருந்து அவனைப் பார்க்கலையே…” என்றார்.

ரமேஷ் யோசனையோடு தயங்கி கொண்டே, “அக்ஸிடன்ட் நடந்ததிலிருந்தே அவரைக் காணோம்” என்று சொல்ல சந்திரகாந்த்தின் முகம் கோபமாக மாறியது.

ரமேஷை அனுப்பி விட்டு திருமூர்த்தியிடம் சந்திரகாந்த் ஆதித்தியா பற்றி விசாரித்தார். அவருக்குமே அதற்கான பதில் தெரியவில்லை.

“’அவன் கிட்ட அதிகாரத்தைக் கொடு... பொறுப்பா இருப்பான்’னு சொன்ன... பார்த்தியா திரு? பிரச்சனை என்றதும் இப்படிக் காணாம போய்விட்டான்”

“அவன் இங்கு இல்லாததிற்கு என்ன காரணம்னு தெரியல... அதற்குள் எதுக்கு டென்ஷன்?”

“அவனுக்கு சப்போர்ட் பண்றதை நிறுத்து... எனக்கு அவனைப் பற்றி நல்லா தெரியும்” என்று சொன்னதும் திரு அமைதியானார்.

“சரி திரு... ஆதி எங்கனு சமுத்திரனுக்கு ஃபோன் பண்ணி கேட்டுப்பாரு” அந்த முயற்சியும் தோல்விதான்.

‘ஆதித்தியா எங்கே?’ என்ற கேள்விக்கு யாருக்குத்தான் பதில் தெரியும்?

இப்படி முதல் அறிமுகத்திலேயே கதையின் நாயகனை தொலைத்து விட்டதற்காக வாசகர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம்.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content