மோனிஷா நாவல்கள்
Iru Thuruvangal - Episode 15

Quote from monisha on July 13, 2025, 6:00 PM15
அந்த நிலவொளியில்
விந்தியா ஆதித்தியாவை பார்க்க அந்த விழியின் தாக்கம் அவனைக் கலவரப்படுத்தியது. அவர்களுக்கு இடையில் இருந்த மெளனத்தை ஆதித்தியா கலைத்தான்.
“அதென்னடி லுக்கு… என்னைப் பாத்தா எப்படித் தெரியுது உனக்கு? என் தகுதி என்ன... உன் தகுதி என்ன? உன்னோட வீடு என்னோட பெட் ரூம் சைஸ் இருக்குமா? நான் என்னவோ உன் காலடியில் இருக்கிற மாதிரி அதென்ன ஒரு இளக்காரமான பார்வை?” என்று ஆதி இடைவெளி விடாமல் பேச,
விந்தியா சிறிதும் பதட்டமில்லாமல் தலையைத் திருப்பிக் கொள்ள, ஆதி கொஞ்சம் கோபத்தோடு அவள் தாடையை அழுத்திப் பிடித்து அவன் முகத்தைப் பார்க்க வைத்தான்.
“திமிரா? இங்க நான் பேசிட்டிருக்கேன்ல... என்னைப் பார்க்காம அதென்ன முகத்தைத் திருப்புறது. உனக்கு என்கிட்ட என்ன பிரச்சனயிருந்தாலும் என் கண்ணைப் பார்த்து பேசு” என்றான்.
விந்தியா அவனின் பிடியை சிரமப்பட்டு விலக்கி விட்டாள்.
”உங்களுக்கு மேனர்ஸ் தெரியாதா?”என்று அவள் தாடையைத் தடவியபடி கேட்டாள்.
“உனக்கு ரொம்பத் தெரியுமோ... ?”
“எதுக்கு நான் உங்க முகத்தைப் பார்த்து பேசணும்? பொறுப்பே இல்லாத, பெண்மையை மதிக்கத் தெரியாத, சொந்த அப்பாவுக்குக் கூட மதிப்பு கொடுக்காத உங்கள மாதிரி ஒருத்தரின் முகத்தைக் கூடப் பார்க்க எனக்கு விருப்பமில்லை” என்று தன் மனதில் உள்ளதை அழுத்தமாக வெளிப்படுத்தினாள் விந்தியா.
ஆதி இரு கைகளைத் தட்டியபடி, “சூப்பர்... பார்க்கவே விருப்பமில்லாத என் கையால எதுக்குடி தாலி கட்டிக்கிட்ட?” என்றான்.
“நானும் அதே கேள்வியைக் கேட்கலாமா? என் முகத்தைக் கூடப் பார்க்காம... என்னைப் பத்தி எதுவுமே தெரியாம... நீங்க எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க... மிஸ்டர். ஆதித்தியா “
ஆதித்தியா அப்படியே திகைத்து போய் நின்றான்.
“அப்போ என்னை டார்ச்சர் பண்றதுக்கு நீயும் மிஸ்டர். சந்திரகாந்தும் சேர்ந்து போட்ட பிளானா இந்த மேரேஜ்? அவன் பொறுப்பே இல்லாம இருக்கான்... திருத்தி வழிக்குக் கொண்டு வான்னு சொன்னாரா?”
“ஒ ஸ்டாப்... ரொம்ப உங்க கற்பனை குதிரையை ஓட விடாதீங்க. உங்களுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒரு கமிட்மென்ட் இருந்த மாதிரி எனக்கும் இருந்தது. தட்ஸ் இட்.
அப்புறம் உங்கள திருத்தி நல்வழிப்படுத்தனும்னு எனக்குச் சுத்தமா ஐடியா இல்ல... உங்கள மாதிரி ஒருத்தரை எல்லாம் திருத்தவும் முடியாது. இட்ஸ் இம்பாஸிபிள்!” என்று அலட்சியமாய் பேசினாள் விந்தியா.
அவள் பேச பேச அவன் கோபம் அதிகமானது.
“என்னடி திமிரா?”
“என்ன சும்மா வாடிப் போடினு... மரியாதை தெரியாதா?”
“நிறையத் தெரியும். எப்படி... மிஸஸ். விந்தியா ஆதித்தியான்னு கூப்பிடலாமா?”
விந்தியா உடனே காதுகளை மூடிக் கொண்டாள்.
“டோன்ட் கால் மீ லைக் தட்... ஐம் ஜஸ்ட் விந்தியா. புரிஞ்சுதா? அப்புறம் நல்லா கேட்டுக்கோங்க... நடந்தது கல்யாணம் இல்ல கமிட்மன்ட்.
நமக்குள்ள எந்த வித ரிலேஷன்ஷிப்பும் இல்லை. நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்... நீங்களும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. மோரோவர் நான் உங்க வாழ்க்கையோட முதலும் கடைசியுமான பெண்ணும் இல்லை... ரைட்?”
விந்தியா படபடவெனப் பொறிந்ததைக் கேட்டு அவன் அமைதியாய் நின்றான். அவளோ படுக்கையிலிருந்த தலையணையை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த சோபாவில் படுக்கப் போனவளின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். விந்தியா உடனே அங்கிருந்து எழுந்து கொண்டாள்.
“என்ன மிஸ்டர்?”
“பயந்திட்ட போல! எந்தப் பெண்ணையும் வலுக்கட்டாயமா என் வழிக்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் எனக்கில்ல... ரைட்” என்றான் ஆதித்தியா திமிரான பார்வையோடு!
“நான் ஒண்ணும் பயப்படல”
“திமிரும் தெனாவட்டும் தெரிஞ்ச அந்தக் கண்ணில இப்போ பார்த்தேனே”
“இப்போ உங்க பிரச்சனைதான் என்ன?”
“நான் உன்கிட்ட பேசணும்... உட்காரு” என்று சொல்லி சோபாவின் அருகில் இருந்த இருக்கையைக் காண்பித்தான். விந்தியா சலிப்போடு அமர்ந்தாள்.
“என்ன பேசணும்?” என்று முகத்தைத் திரும்பி கூடப் பார்க்காமல் கேட்டாள்.
“இப்போ வரைக்கும் என் மூளை இந்தக் கல்யாணத்தை கமிட்மன்டுன்னுதான் சொல்லுச்சு. பட் நவ்... எனக்கு வேற மாதிரி தோணுதே...”
“என்ன?”
“எப்போ நமக்குள்ள எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்லனு நீ சொன்னியோ... ஏன் இருக்கக் கூடாதுன்னு எனக்குத் தோணுது. நீ என்னோட ஈகோவை இவ்வளவு தூரம் சீண்டி விட்டுட்டு என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாதுனு சொன்னா நான் கேட்கணுமா?
நீ என் வாழ்கையோட முதலும் கடைசியுமான பொண்ணு இல்லதான். ஆனா நான்தான் உன் வாழ்க்கையோட முதலும் கடைசியுமான ஆண்.
நீ விந்தியா ஆதித்தியா என்பதை இனிமே அந்தக் கடவுளே இறங்கி வந்தாலும் மாத்த முடியாது. நீயா உன் மனசு மாத்திக்கிட்டு என்னோட மனைவியா இருப்ப. என்ன விந்தியா பார்க்கலாமா?” என்று ஆதி அவனின் ஆணவத்தைக் கொஞ்சம் அழகாகவே வெளிபடுத்தினான்.
விந்தியா கொஞ்சம் எகத்தாளமாகச் சிரித்து விட்டு, “ஒ... எஸ் பார்க்கலாமே... கனவுல கூட நீங்க நினைக்கிறது நடக்காது” என்றாள்.
“ம்... அப்படியா! பார்க்கத்தானே போற... இன்னிக்கு உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்... படுத்துக்கோ” என்று சொல்லி அவள் தலையணையைச் சரி செய்துவிட்டு எழுந்து கொண்டான்.
“ஒரு நிமிஷம்... மிஸ்டர் ஆதி” என்று போகிறவனை அழைத்தாள். அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அவனும் திரும்பி கவனித்தான்.
“மறந்துட்டேன்... ஏதோ தகுதிய பத்தி பேசுனீங்க இல்ல. இவ்வளவு பெரிய வீடா இருந்தாலும் அது உங்க அப்பாவோட உழைப்பு... இந்த பெட்ரூம் சைஸுக்கு சின்ன வீடா இருந்தாலும் அது என்னோட சுயசம்பாத்தியம். இதுதான் நம்ம இரண்டு பேருக்கு இடையிலிருக்கிற ஸ்டேட்டஸ்” என்று சொல்லிவிட்டுச் சோபாவில் படுத்துக் கொண்டு கண்களை மூடினாள்.
ஆதித்தியாவிற்குக் கடைசியில் அவள் சொன்ன விஷயம் அவன் மனதை குத்தியது. அவனை உறங்கவிடாமல் செய்துவிட்டு அவள் தூங்கிப் போனாள்.
இரவு வெகு நேரம் விழித்திருந்த களைப்பில் ஆதி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் தானாகவே விழித்துக் கொண்ட போது விந்தியா அந்த அறையில் இல்லை.
ஓரே நாளில் அவன் எண்ணங்களை அவள் மழுங்கடித்து விட்டது போல் தோன்றியது. அவள் அழகோடு கலந்த திமிரை கூட அவனைக் கோபத்தோடு ரசிக்க வைத்தது. இப்படியெல்லாம் சிந்தித்துக் கொண்டே அந்த அறையின் பால்கனி வழியாகத் தோட்டத்தைப் பார்த்தான்.
அங்கே விந்தியா, பைக்கில் அமர்ந்தபடி போலிஸ் உடை அணிந்திருந்த ஆடவனோடு பேசிக்கொண்டிருந்தாள். அவன் சிவா என்று வாசகர்களுக்குத் தெரிந்திருந்தாலும், அவனைத் திருமணத்திலும் பார்க்காததினால் ஆதித்தியாவிற்கு அவன் யாரென்று தெரியவில்லை.
அவர்களுக்கிடையில் வாக்குவாதம் நடைபெறுவதை மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் சிந்துவும் வனிதாவும் வெளியே வர, அவர்களை ஏற்றிக் கொண்டு அவன் சென்று விட்டான்.
இப்பொழுது ஆதியால் அவர்கள் உறவுமுறையைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவனை வழியனுப்பிவிட்டு திரும்பியவள் மேலே ஆதித்தியா நின்று கொண்டிருப்பதைக் கவனித்தும் கவனிக்காதது போல் உள்ளே சென்றாள்.
சந்திரகாந்த் அந்தப் பெரிய ஹாலில் சோபாவில் அமர்ந்து கொண்டு பேப்பரை கையில் வைத்துக் கொண்டிருந்தார்.
“சிவா எங்கம்மா?” என்று சந்திரகாந்த் விந்தியாவைப் பார்த்து கேட்க, சிவா உள்ளே வர மறுத்துவிட்டதைச் சொல்ல தயங்கியபடி, “ஏதோ அவசரமான வேலை இருக்காம்...” என்றாள்.
“உள்ளே வந்து ஒரு காபி குடிக்க எவ்வளவு நேரம் ஆகப்போகுது?”
“சாரி மாமா... அவன்தான் அவசரப்பட்டான்... நீங்க தூங்கிட்டிருந்தீங்க... அதான் வனிதா கூடச் சொல்லாம கிளம்பிட்டா”
“என்னம்மா நீ?” என்று அவர் ஏதோ சொல்ல தொடங்க, “இருங்க மாமா காபி எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லியபடி சமையலறைக்குள் நுழைந்தாள் விந்தியா.
சண்முகம் காபியை ரெடியாக டிரேவில் எடுத்து வைத்திருந்தார். “நான் கொடுக்கிறேன்” என்று சொல்லி விந்தியா அதை எடுத்துக் கொள்ள, சண்முகம் அதிலிருந்த இன்னொரு கப்பை காண்பித்து, “அப்படியே சின்ன ஐயாவுக்கும் கொடுத்துடுங்கம்மா” என்றான்.
விந்தியா வேறுவழியின்றி சரி எனச் சொல்லிவிட்டு சந்திரகாந்த்திற்கு காபியை வைத்துவிட்டு, மாடியேறி ஆதியின் அறையில் நுழைந்தாள்.
ஆதி அவள் காபியோடு உள்ளே வருவதைக் கவனித்துவிட்டு, “பரவாயில்ல... புருஷனுக்குப் பணிவா காபி எல்லாம் கொண்டு வந்திருக்க. நான் சொன்னது உன் மூளைக்கு எட்டியிருக்கு”
“ஹெலோ... காபி எடுத்துட்டு வந்ததுக்காக எல்லாம் நீங்க ரொம்பக் கற்பனை பண்ணிக்காதீங்க. வேணும்னா எடுத்துக்கோங்க... வேண்டாம்னா திருப்பி எடுத்துட்டு போறேன்” “
“ஏய் நில்லு...” என்று சொல்லிவிட்டு டிரேவில் இருந்த காபியை ஆதி எடுத்துக் கொண்டான்.
விந்தியா வெளியே போகத் திரும்பிய போது ஆதியின் அருகிலிருந்த டேபிளில் அவள் புடவை முந்தானை மாட்டிக்கொண்டது. அதை இருவரும் கவனிக்க, ஆதி அதை லாவகமாக எடுத்துவிட்டான்.
“முந்தானையை இப்படி பறக்க விட்டுட்டு போனா இப்படித்தான் மாட்டும்... அப்புறம் தடுக்கிதான் விழணும்”
“அப்படி எல்லாம் நான் விழமாட்டேன்...”
“விழுந்தாலும் பரவாயில்ல... அதான் நான் இருக்கேன்ல”
“எதுக்கு?”
“தாங்கி பிடிச்சுக்கத்தான்”
“நினைப்புதான்...” என்று சொல்லிவிட்டு விந்தியா வெளியே சென்றுவிட்டாள்.
அவள் போவதை பார்த்தபடியே காபியை வாயில் வைத்தவன் அதை குடிக்கச் சகியாமல் முகத்தைச் சுளித்தான்
“சீ... இதென்ன காபியா... கசாயமா? இப்படிக் கசக்குது. சக்கரை போட மறந்துட்டாளா? திமிரு பிடிச்சவ... வேணும்னே செஞ்சிருப்பா...”
விந்தியா கீழே சென்றதும் சந்திரகாந்த், “காபி சூப்பர்” என்றார்.
அவள் ஒன்றும் புரியாமல் “நான் போடல... சண்முகம் அண்ணன்தான் போட்டாரு”
“யார் போட்டா என்ன? என் மருமக கையால முதன்முதலில் கொடுத்த காபி ஸ்வீட்டா இருந்துச்சு”
விந்தியா குழம்பி கொண்டே சண்முகத்தைப் பார்க்க, “அப்போ சக்கரை இல்லாத காபி” என்று சண்முகம் கேட்க, விந்தியா தான் செய்த தவறை உணர்ந்தவளாய் உதட்டை கடித்துக் கொண்டாள்.
சந்திரகாந்த் சிரித்தபடி, “போகட்டும் விடும்மா... அவனுக்குத் தேவைதான்” என்றார்.
விந்தியாவிற்கு ஆதியின் நிலையை எண்ணிய போது முகத்தில் புன்னகை மலர்ந்தது.
15