மோனிஷா நாவல்கள்
IrumunaiKathi - Episode 10
Quote from monisha on November 20, 2023, 5:47 PM10
தேடல் படலம்
தயாளன் தமிழச்சியிடம் ஃபிரான்சில் கிடைத்த கற்சிலைகள் பற்றிய தகவல்களைச் சொல்லத் தொடங்கினார்.
“இந்த சிலைகள் எல்லாம் அங்க இருக்குற ஒரு ரகசிய குடோன் மாதிரி இடத்துல பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாம்... அந்த ஊர் போலீஸ்... தகவல் கிடைச்சு அங்க சோதனை போட்ட போது... இந்தச் சிலைகள் கிடைச்சதா சொல்றாங்க... இந்த தகவல் அங்கிருக்குற நம்ம தூதரகம் மூலமா நமக்கு தெரிய வந்திருக்கு”
“யாரையாச்சும் இது சம்பந்தமா கைது பண்ணி இருக்காங்களா சார்?”
“தெரியல தமிழச்சி... இன்னும் முழுசா எந்த தகவலும் வரல... இந்தச் சிலைகள் மட்டும் நம் ஊருக்கு சொந்தமானதுன்னு தகவல் குடுத்திருக்காங்க”
“இதைப் பத்தி பிரஸுக்கு சொல்லலாமா?”
“அதிகாரப்பூர்வமா மேலிடத்திலிருந்து அறிவிப்பு வரட்டும்... இது இரண்டு நாட்டு அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயம்... நம்ம பெரிய தலைவருங்க பேசிச் சிலைகளை எப்படி இங்க எடுத்துட்டு வர்றதுன்னு அவங்கதான் முடிவெடுக்கணும்”
“கரெக்ட்தான் சார்... ஆனா நம்ம அறிவிக்காம ப்ரெஸுக்கு விஷயம் தெரிஞ்சிட்டா” என்றவள் கேட்க தயாளன் அவளை யோசனையாய் பார்த்துத் தலையசைத்து, “அதுவும் கரெக்ட்தான்... நான் மேலிடத்துல பேசிட்டுச் சொல்றேன்” என்றார்.
பின்னர், “அது இருக்கட்டும்... நீங்க போன விஷயம் என்னாச்சு? கமலக்கண்ணனை அரெஸ்ட் பண்ணிட்டீங்களா?” என்று கேட்டார்.
“இல்ல சார்” என்று தயக்கமாய் அவரைப் பார்த்தவள் கைது செய்ய சென்ற இடத்தில் நடந்த முழு விவரங்களையும் அவரிடம் விவரித்தாள்.
அதனைக் கேட்டவர் அவளை எகத்தாளமாய் பார்த்து, “மொத்தத்துல கோட்டை விட்டுட்டீங்க” என்று கேட்டார்.
“நான் இந்த பிளானை சீக்ரெட்டாதான் சார் பண்ணேன்... அப்படியிருந்தும்” என்றவள் தயங்கி, “ஆனா அந்த ரெண்டு பேரையும் நான் கையும் களவுமா பிடிச்சிருக்கேன்... கண்டிப்பா அவனுங்க கமலக்கண்ணன் ஆளுங்கதான்” என்றாள்.
“சரி ஓகே ... அவங்க ரெண்டு பேரையும் நல்லா விசாரிங்க... அன்ட் கமலக்கண்ணனையும் சீக்கிரம் பிடிக்கிற வழியப் பாருங்க” என்று அவர் கட்டளையாய் உரைக்க அவளும் விறைப்பாய், “ஓகே சார்” என்று அவருக்கு சல்யூட் அடித்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
அதன் பின் நேராய் அவள் காவல் நிலையம் சென்றடைந்தாள். சரியாய் அதே சமயத்தில் இவான் ஸ்மித் ஈசிஆர் சாலையில் சற்றே ஒதுக்குப்புறமாய் கடலை நோக்கியபடி இருந்த அந்த வீட்டின் வெளிப்புற கேட்டின் பூட்டைத் திறந்து உள்ளே சென்றான்.
அடர்ந்த உயரமான தென்னை மரங்கள் சூழ, அந்த வீட்டின் தோட்டம் கவனிப்பாரின்றி செடிகள் எல்லாம் புதராய் மண்டிக் கிடந்தன. அவன் அந்தத் தோட்டத்தைக் கடந்து அந்தச் சிறு அழகிய வீட்டினை நெருங்கியவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அதன் வாயிற் கதவின் பூட்டைத் திறந்து உள் நுழைந்தான். கதவை அடைத்துவிட்டு உள்ளே சென்று படுக்கை அறைக் கதவைத் திறக்க,
அப்போது கை கால்கள் எல்லாம் கட்டிப் போட்டபடி ஒருவன் அந்த அறையில் மயக்க நிலையில் கிடந்தான். இவான் அவன் அருகில் சென்று கட்டுகளைக் கழற்றி அவன் எடுத்து வந்த கவரில் இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து தண்ணீரை அவன் முகத்தில் தெளிக்க, அந்த நடுத்தர வயதினன் விழித்தான்.
அவன் பார்வை முதலில் கண்டது கம்பீரமாய் நின்றிருந்த இவானைதான். அவன் அந்த நொடியே மிரண்டு பின்னோடு நகர்ந்து, “யார் நீ? எதுக்கு என்னைக் கூட்டிட்டு வந்து கட்டிப் போட்டிருக்க” என்று அலற,
“ரிலாக்ஸ்... ஐம் ஹியர் டு ஹெல்ப் யூ” என்று சொல்ல அந்த நபரின் பதட்டம் அப்போதும் குறைந்தபாடில்லை. அவனிடத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கினாலும் அவனைப் பார்த்தவனால் அது சாத்தியப்படும் என்று தோன்றவில்லை.
அதேநேரம் இவான் தனக்கு தமிழ் புரியாது என்றும் ஆங்கிலத்தில் பேசச் சொல்லித் தெரிவிக்க அந்த நபர் அச்சத்தோடு, “ஒய் யு கிட்னப்ட் மீ... ஹூ ஆர் யு?” என்று கேட்க, இவான் நிதானமாய் படுக்கையில் அமர்ந்து கொண்டு அவனுக்குப் பதிலுரைத்தான்.
“(அவர்கள் உரையாடல்கள் புரிதலுக்காக தமிழில்) நான் மட்டும் நேத்து நைட் உன்னைத் தூக்கலைன்னா தமிழ்நாடு போலீஸ் உன்னைத் தூக்கியிருக்கும்... இப்போ நீ ஜெயில்ல இருந்திருப்ப” என்று இவான் சொல்ல கமலக்கண்ணன் நடுநடுங்கிப் போனான். அவன் முகம் வெளிறிப் போனது.
கமலக்கண்ணன் அதிர்ச்சியாய் அதேநேரம் நம்பாமல் இவானைப் பார்க்க, “நம்பிக்கை வரலையா... அப்படின்னா இந்த மேட்டரை கேளு... உன்னைத் தேடி வந்த போலீஸ் அங்க உன்னைப் பார்க்க பைக்ல வந்த உன் ஆளுங்க ரெண்டு பேரை அரெஸ்ட் பண்ணிக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.. போதாகுறைக்கு அவங்க கையில ஒரு சிலை இருந்துச்சு” என்றதும் அவன் அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு தரையில் சரிந்தான்.
அவன் தாங்க முடியாத அதிர்ச்சியில் இவானைப் பார்க்க, “இப்போதைக்கு இந்த இடம்தான் உனக்கு சேஃப்... ஒரு வாரம் தலைமறைவா இரு... அப்புறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்” என்றான்.
“இங்கேயா... நோ நோ... மை பேமிலி” என்றவன் கவலையுற,
“அவங்களுக்கெல்லாம் ஒன்னும் ஆகாது... ஃப்ர்ஸ்ட் யு பி சேஃப்” என்று சொல்லி அவன் எடுத்து வந்த தண்ணீர் பாட்டில், உணவுப் பொருட்களை நீட்ட அவன் இவானைக் குழப்பமாய் பார்த்து, “நீ யாரு... எதுக்காக நீ என்னைக் காப்பாத்துற?” என்று கேட்டான்.
“அதேல்லாம உனக்குத் தேவையில்ல... நீ போலீஸ் கிட்ட சிக்காம உன்னை சேஃப் காட் பண்ணச் சொல்லி எனக்கு ஆர்டர் வந்துச்சு அதைத்தான் நான் செய்றேன்” என்றவன் சொல்ல அவன் ஆழமான பார்வையோடு, “யாரு உனக்கு ஆர்டர் போட்டது?” என்று கேட்டான்.
இவானின் முகம் எரிச்சலாய் மாற அவனை முறைத்தவன்,
“ஃபைன்... நீ என்னை பிலீவ் பண்ணலன்னா... ப்ளீஸ் மூவ்... நான் உன்னைத் தடுக்கப் போறதில்ல... அநேகமா உன் ஆளுங்க போலீஸ்கிட்ட உன்னைப் பத்தி எல்லா டீடைல்ஸும் சொல்லி இருப்பாங்க... அதுவும் அவனுங்களைப் பிடிச்சிட்டுப் போன யங் சார்மிங் வுமன் ஐபிஎஸ் ஆபிஸர்... கண்டிப்பா இந்நேரத்துக்கு அவனுங்களை ஒரு வழி பண்ணி எடுத்திருப்பா... நீயும் போய் சிக்கிட்டன்னு வைச்சுக்க... உன்னை பெப்பர் அன்ட் சால்ட் போட்டு டீப் ஃப்ரை பண்ணிடுவா” என்று அவனைப் பார்த்து கேலியாகச் சொல்லி சிரித்துவிட்டு, “ஹ்ம்ம்... கோ ஃபாஸ்ட்” என்றான்.
கமலக்கண்ணனின் முகம் இருளடர்ந்து போக பீதியில் இவான் கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி மொத்தமாய் ஒரே மடக்கில் குடித்தான். அவன் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, “நான் இங்கேயே இருக்கேன்” என்றவன் அவசரமாய் தன் பாக்கெட்டைத் துழாவி, “என் ஃபோன்” என்று கேட்டான்.
“நான் அதை டிஸ்போஸ் பண்ணிட்டேன்... அது இருந்தா உன்னை ஈசியா ட்ராக் பண்ணிடுவாங்க” என்றவன் எழுந்து நின்றுகொண்டு அவன் வாங்கி வைத்திருந்த ஒரு புது மொபைலை நீட்டி,
“இந்த செல்ஃபோனை வைச்சுக்கோ... எதாச்சும்ன்னா என்னை காண்டாக்ட் பண்ணு... அதுல என் நம்பர் இருக்கு... முக்கியமான விஷயம்... தப்பித்தவறி கூட உன் வீட்டுக்கு கால் பண்ணிடாதே... போலீஸ் அதை டேப் பண்ணி உன்னை கண்டுபிடிச்சிடுவாங்க... ரைட்” என்றான்.
கமலக்கண்ணனுக்கு இவான் மீது ஆழமான நம்பிக்கை பிறந்திருந்தது. “உங்க பேரு?” என்றவன் கேட்க, “ஸ்மித்!” என்று சொன்னவன் அங்கிருந்து புறப்படுவதற்கு முன் அவனுக்கு வேண்டிய உணவுப் பொருட்கள்... மற்ற எல்லாம் அங்கேயே இருப்பதாகச் சொல்லி அவனை வெளியே எங்கேயும் போக வேண்டாம் என அழுத்தமாய் அறிவுறுத்திவிட்டுச் சென்றான்.
கமலக்கண்ணன் ரொம்பவும் பயந்து போயிருந்தான். தான் போலீசிடம் சிக்கினால் தன் நிலைமை என்ன என்றவன் யோசித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் அவனுடைய ஆட்கள் போலீஸிடம் சிக்கியதில் பெருத்த அச்சத்தில் நடுநடுங்கிக் கொண்டிருந்தனர்.
அவள் விசாரிக்கத் தொடங்கியதில் இருந்து அவர்களிடம் இருந்து அவளுக்கு உருப்படியான எந்தத் தகவலும் கிட்டவில்லை.
“அடிச்சு... தோலை உரிச்சா... தானா இவனுங்க உண்மையைச் சொல்லுவானுங்க மேடம்” என்று வினோத் சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம்... நான் சொல்ற மாதிரி செய்... அந்த மந்தவெளில ஒரு அறுபது வயசு பாட்டியை ரேப் பண்ணி... அந்தப் பாட்டியோட நகையெல்லாம் தூக்கிட்டுப் போனானுங்க இல்ல... அந்த கேசுல இவனுங்க இரண்டு பேரையும் போட்டுவிடு... ரேப், மர்டர், திருட்டு மூணுக்கும் சேர்த்து காலம் பூரா களி திங்கட்டும்” என்றவள் சொல்லிவிட்டு எழுந்து செல்ல, “ஓகே மேடம்” என்றான் வினோத்!
“ஐயோ! மேடம்... நாங்க உண்மையெல்லாம் சொல்லிடுறோம்... எங்களைக் கோவில்ல இருக்குற சிலையெல்லாம் திருடச் சொன்னது அந்தக் கமலன்தான்” என்று ஒருவன் சொல்ல,
“எத்தனை வருஷமா அவனுக்காக இந்த வேலையை பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“ஏழு வருஷமா” என்று ஒருவன் தயக்கத்தோடு சொல்ல வினோத் அதிர்ந்து, “ஏழு வருஷம்னா... எத்தனை சிலைங்கடா” என்று கேட்டான்.
“அதெல்லாம் கணக்கு தெரியல சார்... கமலன் எந்தக் கோவில்ல இன்னா சிலை திருடணும்னு சொல்லுவாரு... நாங்க போய் அதைத் தூக்கின்னு வந்துருவோம்” என்றதும் தமிழச்சி கோபம் தெறிக்க இருவர் கன்னத்திலும் அறைந்து, “ப்ளடி பாஸ்டர்ட்ஸ்” என்றாள்.
அதன் பின் மெல்ல அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “எவ்வளவு டா வாங்குவீங்க ஒரு திருட்டுக்கு” என்று அவள் விசாரிக்க,
“பத்தாயிரத்தில ஆரம்பிச்சு லட்சம் வரைக்கும்... அதெல்லாம் தூக்கிட்டு வர பொருளோட வெயிட்டு... ரிஸ்கைப் பொறுத்து” என்றான் ஒருவன்.
அவள் அந்த நொடியே அவர்களை ஏற இறங்க கடுப்பாய் பார்த்துவிட்டு எழுந்து செல்ல, வினோத்தும் மற்ற கான்ஸ்டபிள்களும் சேர்ந்து அவர்களை அடி வெளுத்து வாங்கிவிட்டனர்.
அவள் நேராய் தன் இருக்கையில் வந்து மௌனமாய் அமர்ந்து கொள்ள, “என்னாச்சு மேடம்?” என்று வினோத் அவள் அருகில் வந்து நின்றான்.
“இல்ல... இவனுங்க ரிஸ்க் எடுத்துப் பத்தாயிரத்துக்கும் அம்பதாயிரத்துக்கும் திருடித் தர்ற சிலையை எங்கயோ வெளிநாட்டுல இருக்க ஒருத்தன் பல மில்லியன் டாலருக்கு விலை பேசுவான்... இதுக்கு இடையில இந்த கமலக்கண்ணனுக்கு ஒரு பத்து பதினஞ்சு லட்சம் கை மாறும்” என்றாள்.
வினோத் புருவங்கள் நெறிய, “அவ்வளவு ரேட் போகுமா மேடம்?” என்க,
அவள் அவனைப் பார்த்து புன்னகைத்து, “நமக்கே நம்ம பொக்கிஷங்களோட மதிப்பு தெரியாததாலதானே எங்கிருந்தோ ஒருத்தன் இதெல்லாம் அலேக்கா தூக்கி விலைப் பேசி வித்துகிட்டு இருக்கான்” என்று அவள் வெகுசாதரணாமாய் சொன்னாலும் அது நம்பி ஆகவேண்டிய மிகவும் வலி நிறைந்த உண்மை!
“மேடம் அந்த கமலக்கண்ணன்...”
“அவன் சென்னையை விட்டு போயிருப்பான்னு எனக்குத் தோணலை வினோத்... நைட் வரைக்கும் அவன் சாவகாசமா கடையில இருந்திருக்கான்... அவன் அக்கௌன்ட்ல... கார்டலன்னு எந்த ட்ரான்சாக்ஷனும் நடந்த மாதிரி தெரியல... கடையில இருந்து கிளம்பினவன் வீட்டுக்கு ஒரு ஃபோனும் பண்ணல... அதுவுமில்லாம நேத்து மிட் நைட் வரைக்கும் அவன் ஃபோன் ஆக்டிவாதான் இருந்திருக்கு... அப்புறம்தான் சிக்னல் மிஸ்ஸாயிருக்கு... அவன் எங்கேயோ பக்கத்துலதான் இருக்கணும்... ரொம்ப தூரம் போயிருக்க முடியாது” என்றவள் வினோத்திடம்,
“அவன் சம்பந்தபட்ட... அவனுக்குத் தெரிஞ்ச இடத்திலேயே தேடிப் பாருங்க... எதாச்சும் க்ளூ கிடைக்கலாம்... அதுக்குள்ள அவன் ஃபோன் இல்ல... சிம் கார்ட் எதாச்சும் அக்டிவேட் ஆகுதான்னு பார்க்கலாம்” என்றாள்.
நான்கு நாட்கள் கழிந்துவிட மாநகரம் முழுக்க கமலக்கண்ணனைத் தேடும் படலம் வெகுதீவிரமாகி இருந்தது. அனைத்துக் காவல் நிலையத்திற்கும் அவனுடைய புகைப்படங்கள் அனுப்பப்பட்டன. சோதனை சாவடிகளிலும் அவனைத் தேடும் படலம் மும்முரமாய் நடந்து கொண்டிருக்க, அவர்களுக்கு அவனைக் குறித்து ஒரு சிறு தகவல் கூட அப்போது வரை கிடைத்தபாடில்லை. மீண்டும் தான் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறோமே என்று தமிழச்சிக்கு அளவிட முடியா ஏமாற்றத்தில் மனஅழுத்தம் உண்டானது.
இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணகர்த்தாவான இவானோ ரொம்பவும் குதூகலமாய் விக்ரமின் வீட்டில் தன் பொழுதைச் சிறப்பாய் கழித்துக் கொண்டிருந்தான்.
விக்ரமுக்குதான் அவனைப் பார்க்கப் பார்க்க எரிச்சல் மூண்டது. ஒரு பக்கம் அவன் அம்மா அவனுக்கு பல்வேறு தமிழ் புத்தகங்களை மொழிபெயர்த்து விளக்கங்கள் தர, இன்னொரு பக்கம் அவனின் தந்தை இவானோடு சரிசமமாய் அமர்ந்து கிரிக்கெட் பார்த்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.
இப்படி அவன் வந்த சில நாட்களில் அந்த வீட்டில் ஒருவனாக மாறிவிட்டான். அது கூடப் பரவாயில்லை. சொந்த வீட்டிலேயே தான் அந்நியப்பட்டு நிற்கிறோமோ என்ற மனநிலை உண்டானதுதான் விக்ரமுக்குக் கடுப்பே!
இந்தக் கோபத்தையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு விக்ரம் தன் நண்பன் சிம்மாவிற்கு அழைக்க,
“என்ன விக்ரம்? நானே உனக்கு கால் பண்ணி இருப்பேன் இல்ல... எதுக்கு உன் பர்சனல் நம்பர்ல இருந்து கூப்பிட்ட... முதல்ல கட் பண்ணு... நான் ஸ்கைப்ல வரேன்” என்றான்.
சிம்மா சொன்னது போல் சிலநொடிகளில் ஸ்கைப் மூலமாக விக்ரமுக்கு அழைக்க, அவன் முகமோ கடுகடுத்துக் கொண்டிருந்தது.
“என்னதான் நினைச்சிட்டிருக்க நீ? அம்மாவை வந்து பார்க்கணும்கிற அக்கறையே இல்லையாடா உனக்கு” என்று எடுத்ததும் விக்ரம் தன் நண்பன் மீது பாய்ந்தான்.
“எனக்கும் அந்த வேதனை மனசுல இருக்கு விக்ரம்... ஆனா நான் இருக்கற நிலைமையில எல்லாத்தையும் என்னால அப்படியே விட்டுட்டு வர முடியாது”
“ஓ! உங்க அம்மாவை விட உனக்கு அந்த... டேம் ஆராய்ச்சிதான் முக்கியமா போச்சா?” என்று விக்ரம் கோபமாய் வெடித்தெழ,
“விக்ரம் புரிஞ்சுக்கோ... எனக்கு அம்மாவை விட எதுவும் முக்கியமில்ல... அதனாலதான் என் தவிப்பு வேதனையெல்லாம் அடக்கிட்டு இந்த வேலையில நான் இருக்கேன்” என்றவன் மேலும் தொடர்ந்தான்.
“அம்மா எப்பவும் சொல்லுவாங்க... எந்தக் காரணத்தைக் கொண்டும் நாம எடுத்த வேலையில இருந்து பின் வாங்கவே கூடாதுன்னு... அதுவும் எங்க அம்மாவுக்கு நம்ம மொழி மேல, இலக்கியங்கள் மேல, பாரம்பரியத்து மேல, எல்லாம் அவ்வளவு உயிர்... அதை ஒருத்தன் அசால்ட்டா விலைபேசி விற்கிறான்னு தெரிஞ்சும் நான் சும்மா இருந்தேன்னா... நான் அது எங்க அம்மாவுக்கும் தாய் மண்ணுக்கும் செய்ற துரோகம் இல்லையா?!” என்று சிம்மா உணர்ச்சிப்பூர்வமாய் சொல்ல விக்ரமுக்கு அவன் எதைப் பற்றி சொல்கிறான் என்று சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
எனினும் தன் நண்பன் எது செய்தாலும் அதில் ஓர் ஆழமான நியாயம் இருக்கும் என்று அவனுக்குத் தெரியும்.
இருந்தாலும் ஏதோ ஒரு ஆதங்கத்தில் அவன் வார்த்தைகளை விட்டுவிட்ட குற்றவுணர்வில், “சாரி மச்சான்... ஏதோ டென்ஷன்ல” என்று சொல்ல வர,
“என்ன விக்கி... நமக்குள்ள எதுக்கு சாரி... விடு... உன் கோபத்துலயும் நியாயம் இருக்கு... எனக்கும் அம்மாவைப் பார்க்கணும்னுதான்” என்றவன் கவலையோடு நிறுத்தினான்.
அப்போது அவர்கள் இடையில் சில நொடிகள் மௌனமாய் கழிய அப்போது சிம்மா தன் மௌனத்தைக் கலைத்து, “ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு... எங்க அப்பா பக்கத்துல இருக்கற வரைக்கும் எங்க அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது... அப்படி எதுவும் ஆகவும் விட மாட்டாரு... அதே போல அம்மாவுக்கு... அவங்க தாத்தாவுக்கு அப்புறம் இந்த உலகத்திலேயே அதிகமா நேசிக்கிறது எங்க அப்பாவைத்தான்... அதனால அவங்க அவரை ரொம்ப நாள் தவிக்க விட மாட்டாங்க” என்று சொல்ல விக்ரம் அவன் சொல்வதை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருக்க, “சரி விக்ரம்... நான் ஃபோனை வைச்சிடட்டா” என்று கேட்டான் சிம்மா!
“டேய் இருடா... எனக்கு ஒரு உண்மையைச் சொல்லிட்டுப் போ”
“என்னது?”
“அந்த இவான் உனக்கு சத்தியமா ஃப்ரெண்டா?”
“ஏன்? என்னாச்சு?” என்று சிம்மா துணுக்குற,
“கொல்றான்டா என்னைய... அவன் அலும்பு தாங்க முடியல... நாலு நாள் முன்னாடி என் பைக்கைக் கொண்டு போய் எங்கேயோ முட்டி கண்டம் பண்ணிட்டு வந்துட்டான்”
“அது ஏதாச்சும் தெரியாம நடந்திருக்கும் விக்கி”
“தெரியாம எல்லாம் சான்ஸே இல்ல... வண்டி முன்னாடி டேமேஜ் ஆகியிருக்கிறதைப் பாத்தா... அவன் வேணும்னே எங்கயோ போய் மோதி இருக்கான்”
சிம்மா அவன் சொன்னதைக் கேட்டு மௌனமாய் இருக்க விக்ரம் மேலும், “அது கூட பரவாயில்ல டா... அவன் அந்தப் பூனைக் கண்ணை வைச்சுகிட்டு... அப்படியே உத்து உத்துப் பார்க்குறான்... எனக்கு அப்படியே கடுப்பாகுது”
“பார்க்கிறதெல்லாம் கூட உனக்கு ஒரு பிரச்சனையா?”
“டே! அவன் என்னைப் பார்க்கல டா... என் ரூம்ல இருக்க தமிழச்சி ஃபோட்டோவை” என்று விக்ரம் மிகுந்த எரிச்சலோடு சொல்ல,
“உன்னை யாருடா ரூம்ல திரும்புற இடத்தில எல்லாம் அவ ஃபோட்டோவா மாட்டி வைக்க சொன்னது ... அப்புறம் யார் எங்கப் பார்த்தாலும் அவ ஃபோட்டோவை பார்க்கிற மாறிதான் இருக்கும்”
“என் ரூம்ல என் பொண்டாட்டி ஃபோட்டோவை நான் மாட்டி வைச்சிருக்கேன்... நீ என்னடா என்னைக் கேட்கறது”
“பொண்டாட்டியா?! ஹ்ம்ம் அப்புறம்” என்று கேட்டு சிம்மா அவனை விழியிடுங்கப் பார்க்க,
“ஏன்டா அப்படி பார்க்குற... சண்டைப் போட்டுப் பிரிஞ்சிருந்தா... அவ என் பொண்டாட்டி இல்லன்னு ஆயிடுவாளா?” என்று விக்ரம் வருத்தமாய் உரைக்க சிம்மா அவர்கள் விஷயத்தில் தலையிட விரும்பாமல் மௌனமானான்.
“என்ன மச்சான்? உனக்குத் தெரியாது... நான் உன் தங்கச்சியை எவ்வளவு நேசிக்கிறேன்னு... அவ இல்லாம என்னால சத்தியமா முடியல டா... நரகமா இருக்கு” என்று தன் வேதனையை வார்த்தைகளாய் கொட்ட அந்த நொடி விக்ரமின் விழிகளில் நீர் கசிந்தது.
சிம்மா கடுப்பாகி, “ஆமான்டா... இதெல்லாம் என்கிட்ட சொல்லு... போய் அவகிட்ட சொல்லுவியா?” என்க,
“எங்கடா... அவ நான் சொல்றதைக் காது கொடுத்துக் கேட்கறா... அவ நினைச்சதைப் பேசிட்டு போயிட்டே இருக்கா?” என்று விக்ரம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஹாய் சிம்மா!” என்று இவான் பின்னோடு வந்து நிற்க,
‘இவன் எப்போ வந்தான்’ என்று விக்ரம் அவனைத் திரும்பி பார்த்தான். அப்போது அவர்கள் இருவரும் பேசிக் கொள்ள,
சிம்மா இறுதியாய், “நான் ஏர்போர்ட் கிளம்பிட்டு இருக்கேன்... ரீச் ஆன பிறகு திரும்பியும் உங்ககிட்ட பேசறேன்” என்றான்.
“இப்போ எந்த ஊருக்குடா போற?” என்று விக்ரம் அதிர்ச்சியாய் வினவ, “வாஷிங்டன்” என்றான்.
“இதையே சாக்கா வைச்சு உலகம் பூரா சுத்திட்டு இருக்க... ஹ்ம்ம்... எனக்கும் ஒரு காலம் வரும்... அன்னைக்கு நான் நம்ம நாட்டோட பிரதமராகி இந்த உலகத்தோட எல்லா கன்ட்ரியும் சுத்திப் பார்க்கிறேன்”
“பிரதமாராகி நாட்டுக்கு நல்லது செய்யணும்னு யோசிக்காம... உலகம் பூரா சுத்தணும்னு யோசிக்கிற பாத்தியா... நீ சீக்கிரமே அரசியல்ல பெரியாளாகிடுவ விக்கி... நோ டவுட்” என்று சிம்மா கிண்டலாய் சொல்லிய அதே நேரம் அவன் இவானிடம் விழி அசைவால் ஏதோ ரகசியமாய் சொல்லிவிட்டு, “சரி விக்கி... நான் அப்புறம் பேசறேன்” என்று இணைப்பைத் துண்டித்தான்.
10