மோனிஷா நாவல்கள்
IrumunaiKathi - Episode 2
Quote from monisha on November 1, 2023, 10:52 AM2
தரிசனம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிம்மவாசல் அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. எங்கு திரும்பினாலும் மக்கள் தலை. அலைக் கடலெனக் கூட்டம் கூட்டமாய் மக்கள் திரண்டிருந்தனர்.
அப்படியென்ன ஆச்சர்யமும் அதிசயமும் அங்கே நிகழ்கிறது என்ற கேள்விக்கு விடையாய் நிற்கிறது அதிகம்பீரமான இராஜராஜேஸ்வரி ஆலயம்!
கடலிலிருந்து மீட்கப்பட்ட நூற்றாண்டுகள் பழமையான இராஜராஜேஸ்வரி சிலை... மீண்டும் சிம்மவாசலில் எழுப்பப்பட்ட கோயிலில் வாசம் செய்யப்போகிறாள்.
ஆம்! இன்று இராஜராஜேஸ்வரி ஆலயத்தின் குடமுழுக்கு விழா!
அதாவது சரியாய் அந்தச் சிலை கடலிலிருந்து மீட்கப்பட்டு ஏழு வருடங்களுக்குப் பிறகு..
பலதரப்பட்ட இன்னல்கள் சங்கடங்களை கடந்து வெற்றிகரமாய் இராஜராஜேஸ்வரிக்கு கோயில் கட்டப்பட்டது. அதில் முக்கிய பங்குவகித்தது சிம்மவர்மனின் பேத்தி செந்தமிழ்தான்!
செந்தமிழ். நாற்பதைத் தொட்ட பின்னும் அவள் முகத்திலிருந்த தேஜஸும் கம்பீரமும் துளியளவும் குன்றவில்லை என்று சொல்வதை விட அது பன்மடங்கு அதிகரித்திருந்தது என்று சொன்னால் சரியாகயிருக்கும்.
மூழ்கிப்போன ராஜசிம்மன் அமைத்த கோயில் கோபுரத்தின் அதிகம்பீர கட்டமைப்பை அப்படியே பிரதிபலித்திருந்தது இன்றைய கோயில் கோபுரம்.
அந்தக் கணம் செந்தமிழ் தன் தாத்தாவை நினைவு கூர்ந்தாள். இந்த அற்புத காட்சியைப் பார்க்க அவரில்லாமல் போய்விட்டாரே என்ற வருத்தம். அதோடு நினைத்ததை சாதித்துவிட்ட பெருமிதம் என இரண்டுமே அவள் முகத்தில் மாறி மாறிப் பிரதிபலித்தன.
அந்தச் சமயம் கோபுரத்தின் கலசங்களுக்கு அர்ச்சகர்கள் தமிழில் மந்திரங்கள் ஓதி புனித நீரால் அபிடேகம் செய்தனர். அப்போது வானின் உச்சியில் ஒரு கருடன் வட்டமிட, அந்த காட்சியைப் பார்த்த கொண்டிருந்த மக்கள் கூட்டம் பக்தி பரவசத்தில் திளைத்தன.
இந்த ஆராதனை அபிடேகங்கள் நீடித்துக் கொண்டிருக்கும் போது அருகில் நின்றிருந்த தன் கணவனைக் காணாமல் செந்தமிழ் தேட, வீர் அப்போது சிறுதொலைவில் நின்று ரகுவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
வீரை பார்ததவுடனே ரகு மரியாதை நிமித்தமாய் தன் வலது கரத்தை நெற்றியில் தொட்டு சல்யூட் அடித்தான்.
“நான் வேலையை விட்டு அஞ்சு வருசமாச்சு... நீ இன்னும் இந்தப் பழக்கத்தை நிறுத்தலையா ரகு?” என்று கேட்கவும்,
“அது கஷ்டம் ண்ணா... உங்களைப் பார்த்ததும் என் கை தானா சல்யூட் அடிக்கப் போயிடுது” என்றான். இதைக் கேட்ட வீர் ரகுவின் தோளைத் தட்டிச் சிரித்தார். உறவுமுறை ஆன பிறகும் கூட ரகுவால் இந்தப் பழக்கத்தை விட முடியவில்லை எனும் போது அவன் வேலையை விட்டால் மட்டும் முடியுமா என்ன? அது அவன் வகித்த பதவியினால் ரகுவிற்கு உண்டான மரியாதை அல்ல. அது அவன் மீதே உண்டான மரியாதை!
அதற்கேற்றார் போல் இன்றும் வீரின் கம்பீரத்தில் இம்மியளவு மாறுபாடுகள் கூட இல்லை.
“கூட்டம் நாம எதிர்பார்த்ததை விட அதிகமா இருக்கே... புரொட்டெக்ஷன்ல எந்தப் பிரச்சனையும் வந்திராதே” என்று வீர் கேட்க ரகு தவிப்போடு, “நானும் அதுதான் யோசிக்கிறேன் ண்ணா” என்றான்.
இந்த சம்பாஷணைகளைத் தள்ளி நின்று செந்தமிழ் கேட்டுவிட்டு மீண்டும் கோயிலை நோக்கித் திரும்பி நடந்தாள். அப்போது அவள் கண்ட காட்சி அவள் மனதை உலுக்கியது.
அது வேறொன்றும் இல்லை. அந்த மாபெரும் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் விக்ரம் செய்து கொண்டிருந்த காதல் லீலைகளைப் பார்த்துத்தான்.
வீரின் செல்ல மகள்தான் தமிழச்சி. அவள் பட்டுப் பாவாடை தாவணியில் பட்டாம்பூச்சிப் போல் வண்ணமயமாய் மின்னிக் கொண்டிருந்தாள்.
அந்தக் கூட்ட நெரிசலில் அவள் காற்று வராமல் தவித்திருக்க, அதை உணர்ந்தோ அல்லது அவளிடம் காதல் விளையாட்டுப் புரியும் நோக்கத்திலோ... ஆதிபரமேஸ்வரி விஷ்வாவின் ஒரே புத்திரன் விக்ரம் அவள் காது மடலில் ஊதினான். அந்தச் சில்லென்ற காற்று வீசியதில் அவள் துணுக்குற்று திரும்பி நோக்க... அவன் அவள் பார்வையில் படாமல் மறைந்து கொண்டான்.
இப்படி சில முறைகள் தொடர... அவள் சாதுரியமாய் அவன் அறியா வண்ணம் திரும்பி அவனைக் கண்டறிந்துவிட்டாள். அவள் அவன் கரத்தைப் பற்றிக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவனை ஒதுக்குப்புறமாய் அழைத்துச் சென்றுவிட ஒரு தாயாக இதனை எப்படி எடுத்து கொள்வெதென்று செந்தமிழுக்குப் புரியவில்லை. திகைத்து நின்றுவிட்டார்.
அந்தச் சமயம் பார்த்து அவர் தங்கை தேவி, “அர்ச்சகர் உள்ளே கூப்பிடுறாரு... வாங்க க்கா சுவாமி தரிசனம் பார்க்கப் போலாம்” என்று அழைக்க, அந்த எண்ணத்தை அப்போதைக்கு ஒதுக்கிவிட்டு,
“சரி தேவி... நீ போய் பசங்களை எல்லாம் கூப்பிடு” என்று சொல்லிக் கொண்டே ஆலயத்தின் உள் விமானத்தை நோக்கி நடந்தவர், அங்கே பார்த்தக் காட்சியில் தேகம் முழுக்க மயிர்க்கூச்செறிய உறைந்து நின்றார்.
இராஜவர்மன் அளித்த பொக்கிஷமான இராஜகிரீடம் தலையில் சூட்டப்பட்டிருக்க, கருவறையினுள் சர்வ அலங்காரங்களோடு கம்பீரமாய் வீற்றிருந்தாள் இராஜராஜேஸ்வரி!
இமைக்காமல் அந்தக் காட்சியைப் பார்த்த வண்ணம் இருந்தவருக்கு உள்ளம் நெகிழ்ந்து விழியோரம் நீர் கசிந்தது.
****
“தமிழ்... தமிழச்சி... தமிழச்சி!” என்ற ஒரு குரல் அவர் கரத்தை அழுத்தமாய் பற்றிக் கொண்டிருந்தது. தம் விழிகளை திறக்க முயன்றார். ஆனால் அது முடியவில்லை. அத்தனை நேரம் உள்ளத்தில் குடியிருந்த இன்பம் விலகி மனம் சஞ்சலப்பட்டது. அப்படியெனில் தான் இத்தனை நேரம் கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தோமா?
நடந்தேறிய நிகழ்வுகளைக் கனவாய் காணும் வழக்கம் இன்னும் செந்தமிழை விட்டுப் போகவில்லை.
உடலின் ஒவ்வொரு பாகமும் வலிக்க, அப்போது அந்தக் கோர விபத்து அவர் நினைவுக்கு எட்டியது.
இராஜராஜேஸ்வரி ஆலயத்தின் குடமுழுக்கு விழா நடந்து சரியாய் எட்டு வருடங்களுக்குப் பிறகு....
மகள் தமிழச்சி காரை இயக்க, செந்தமிழ் அருகில் அமர்ந்து அவளை வசைபாடிக் கொண்டு வந்தார்.
“ம்மா ப்ளீஸ்... என்னைப் புரிஞ்சுக்கோங்க... இனிமே எனக்கும் விக்ரமுக்கும் ஒத்து வராது”
“ஏன்டி ஒத்து வராது?”
“ஒத்து வராதுன்னா ஒத்து வராது... விடுங்களேன்”
“இது உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியலையா?”
“ப்ச்... ஏன்ம்மா...?” என்றவள் பதில் சொல்ல முடியாமல் தட்டுத்தடுமாற,
“இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி இந்த ஒரு வருஷமா ஒத்துமையாதானேடி இருந்தீங்க... நானும் ஆதியும் கூட ஆச்சரியப்பட்டோம்... ஆனா இப்போ இப்படி”
“ம்மா ப்ப்ப்ப்ப்ளீஸ்... இந்த மேட்டரை இதோட விடுங்க... நானும் விக்ரமும் மியூட்சுவலா டிவோர்ஸ் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்”
ஏற்கனவே தாங்க முடியாத வேறொரு அதிர்ச்சியில் இருந்தவருக்கு மகளின் இந்த முடிவு அடுத்த அதிர்ச்சி!
கார் வேகமாய் சென்று கொண்டிருந்தது. சில நிமிடங்கள் இருவருக்குள்ளும் மௌனமாகவே கழிந்தது.
செந்தமிழின் மனம் ஏதேதோ சிந்தனைகளில் ஆழ்ந்துவிட, அப்போது தமிழச்சி பதட்டத்தோடு, “கண்ட்ரோல் ரூம்” என்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
என்ன நிகழ்கிறது என்பதை கிரகிப்பதற்கு முன்னதாக தமிழச்சி, “ம்மா... டைம் இல்ல... நான் காரை ஸ்லோ பண்றேன்... நீங்க டோரை திறந்து வெளிய குதிங்க” என்றாள்.
“தமிழச்சி!” என்று அவர் அதிர,
“சாரி ம்மா... வேற வழியில்லை” என்று சொல்லி இமைக்கும் நொடிகளில் கார் வேகத்தைக் குறைத்து அவரை அவள் வெளியே தள்ளிவிட்டாள். மணற்சரிவில் உருண்டவர் அங்கிருந்த பாரங்கல்லில் தலை இடித்து நினைவு தப்பினார்.
ஏதோ பெரிய ஆபத்தைக் கருத்தில் கொண்டே அவள் அப்படி செய்திருக்கக் கூடும் என்பதை உணர்ந்த செந்தமிழுக்கு... இப்போது மகளுக்கு என்னவாயிற்றோ ஏதாயிற்றோ என்று பதட்டமானது.
அருகாமையில், “தமிழ்... தமிழ்” என்ற அவர் கணவனின் அழைப்பு ஓயாமல் கேட்க அவர் பிரயாத்தனப்பட்டு தம் விழிகளைத் திறந்தார். மங்கலாய் ஒரு வெளிச்சம். எதிரே நின்ற கணவனின் முகம் கூட சரியாய் புலப்படவில்லை. அப்போது அவர் ரொம்பவும் சிரமத்தோடு தம் உதடுகளைப் பிரித்து,
“த..மி..ழ..ச்...ச்ச் சி” என்று கவலையோடு வினவ,
“அவளுக்கு ஒன்னும் இல்ல தமிழ்... நல்லா இருக்கா” என்று மனைவியின் எண்ணம் புரிந்து வீர் பதிலளிக்க அவர் உள்ளம் நிம்மதியடைந்தது.
அப்போது ஒரு காரிருள் செந்தமிழை உள்ளிழுக்க காத்திருக்க, அவர் மீண்டும் தம் விழிகளை மூடிக் கொண்டார். இருள் கவ்விக் கொள்ள இத்தோடு தன்னாயுள் முடிந்து விட்டதா என்று எண்ணும் போது,
“என்னை விட்டுப் போயிடாதே தமிழ்.... நீ இல்லாம என்னால வாழ முடியாதுடி” என்று வீரின் கம்பீரக் குரல் வேதனையில் உடைந்தது.
அவர் உடல் ஒத்தழைக்க மறுக்க உள்ளம் மட்டும் சிந்தனையின் அடிவாரத்தில் இருந்தது.
‘நம்ம கையில என்ன இருக்கு’ என்று அவர் மனம் நம்பிகையை இழந்த சமயம், நாம் அவரிடம் அந்த விஷயத்தை சொல்லாமலே இறந்துவிடப் போகிறோமா என்று கேள்வி அவர் மனதைத் துளையிட,
‘ம்ஹும் ம்ஹும்... கூடாது கூடாது’ என்று படபடப்பானார்.
2