மோனிஷா நாவல்கள்
IruMunaiKathi - Episode 29
Quote from monisha on December 1, 2023, 1:52 PM29
காதல் பரிசு
தமிழச்சி மதியிடம் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் முதலில் சிம்மாவிற்குச் சற்றுக் குழப்பமாய் இருந்தாலும் பின் தெள்ளத்தெளிவாய் விளங்கிற்று.
‘ஓ! அப்போ உன் மனசலையும் நான்தான் இருக்கேனா மதி?’ தனக்குள்ளேயே கேட்டு மகிழ்ந்து கொண்ட சிம்மா கதவின் இடுக்கில் இருந்து வெளியே பிரசன்னமாக, மதி தவிப்போடு அவன் முகத்தைப் பார்த்திராவண்ணம் எதிர்புறமாய் திரும்பி நின்று கொண்டாள்.
‘ச்சே! இந்த தமிழச்சி பேசுனதை எல்லாம் கேட்டு என்னைப் பத்தி என்ன நினைச்சிக்கிட்டாரோ? அவளுக்குக் கொஞ்சம் கூட அறிவேயில்லை’
“மதி” என்ற சிம்மாவின் அழைப்பு அவளின் எண்ணவோட்டத்தைக் கலைத்தது.
பதட்டத்தில் நின்றவள் அவனைத் திரும்பியும் பாராமல், “தமிழச்சி சும்மா விளையாட்டுக்கு அப்படி எல்லாம் சொன்னா... நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க” என்று சமாளிக்க முற்பட்டு, ‘என் அப்பன் குதருக்குள் இல்லை’ என்று தானே வலிய சென்று சிக்கிக் கொண்டாள்.
சிம்மாவின் கம்பீரமான சிரிப்பு ஒலி மதியின் காதில் ஒலிக்க, அவன் மனதில் தன்னைக் குறித்து என்னவெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பானோ என்று அவளுக்குப் படபடப்பானது.
“ஏன் மதி என் முகத்தைப் பார்க்காம திரும்பியே நிற்கிற... என்னவோ இன்னைக்குதான் என்ன புதுசா பார்க்கிற மாறி... ஊஹும்ம்... ஏதோ சரியில்லையே” என்றவன் சூசகமாய் சொல்லிச் சிரிக்க,
அந்த நொடியே அவன் புறம் திரும்பியவள், “அப்படியெல்லாம் இல்ல... நான் சரியாதான் இருக்கேன்... உங்க தங்கச்சி ஏதோ லூசாட்டம் உளறிட்டுப் போனா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?” என்றவள் திக்கி திணறி உளறிய அதே நேரம் அவனைப் பார்த்து முறைத்து கொண்டே பேசிய விதத்தில் அவளின் கோபமான மனநிலையை அவன் ஒருவாறு உணர்ந்து கொண்டான்.
“என்னாச்சு மதி... ஏன் இவ்வளவு கோபம்?”
“எனக்கு என்ன கோபம்... அதெல்லாம் இல்ல” என்றவள் வேகமாய் சென்று தன் பெட்டியை நிமிர்த்திப் பிடித்துக் கொண்டு, “ஃப்ளைட்டுக்கு டைமாச்சு... நான் கிளம்பணும்” என்று சொல்லிக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியேற முனைந்தாள்.
“எங்க மதி கிளம்புற?” என்று கேட்க,
“வேறெங்க? மும்பைக்குதான்” என்றவள் முறுக்கிக் கொண்டு பதிலளிக்க, “சொல்லவே இல்ல” என்று அவன் அதிர்ச்சியோடு நின்றான்.
“நான் அத்தை மாமாகிட்ட எல்லாம் சொல்லிட்டேன்... அதுவும் இல்லாம அத்தைதான் இப்போ குணமாயிட்டாங்க இல்ல... இனிமே என்னகென்ன இங்க வேலை” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உணர்சிவசத்தாலும் ஏமாற்றத்தாலும் அவள் விழியில் நீர் தளும்பி நிற்க சிம்மா பதறிக் கொண்டு,
“என்ன மதி? இப்படி எல்லாம் பேசுற... நம்ம வீட்ல யாரச்சும் உன்னைக் காயப்படுத்துற மாறி நடந்திக்கிட்டோமா?” என்று வினவினான்.
அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டபடி, “சேச்சே... அப்படி எல்லாம் இல்ல... எனக்குப் போக வேண்டிய வேலை... அதான்” என்றவள் குரல் தழுதழுத்தது.
அவள் ஏன் தன்னிடம் இப்படியெல்லாம் பேசுகிறாள் என்ற யோசனையோடு அவன் தயங்கி அங்கேயே நிற்க அவள் புறப்பட வேண்டும் என்று முடிவோடு, “டைமாச்சு... நான் கிளம்பிறேன்” என்றாள்.
“நான் வேணா டிராப் பண்ணவா?” என்றவன் கேள்வியாய் அவளைப் பார்க்க, “இல்ல இல்ல... அப்பா வருவாரு... நான் போயிக்கிறேன்” என்று அவன் முகம் பார்க்க கூட தவிர்த்துவிட்டு அவள் செல்லவும், அவனால் அந்த நிராகரிப்பைத் தாங்க முடியவில்லை. அவன் மௌனமாய் நின்றுவிட... அவள் முன்னேறி சென்ற சமயம்,
“உன்னை காணாது நான் இங்கு நானில்லையே!
விதையில்லாமல் வேர் இல்லையே!” என்ற பாடலின் ஒலிக் கேட்டு மதி அப்படியே நின்று தன் கைப்பையைத் துழாவிப் பேசியை எடுத்து பார்த்தாள். ஆனால் அழைத்தது அவள் பேசி அல்லவே.
சிம்மாவினுடையது. அவன் தன் சட்டை பேக்கெட்டில் இருந்த தன் பேசியின் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்து கொண்டு, “சரி மதி... பார்த்துப் போயிட்டு வா” என்று சொல்லிக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டான்.
ஏனோ அந்தப் பாடலை கேட்ட பின் அவளுக்குப் போகவே மனம் வரவில்லை. ஏதோ ஒன்று அவளைத் தடுத்து நிறுத்தியது. மீண்டும் பின்வாங்கி தன் படுக்கையின் மீது தலையைச் சாய்த்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
சில நிமிடங்கிளில், “ஏ அழகி” என்று குரல் கொடுத்து கொண்டே தமிழச்சி உள்ளே வந்தாள். மதி பதில் பேசாமல் இருந்த நிலையிலேயே கிடந்தாள்.
“ஆமா... நீ மும்பை கிளம்பிறியாமே...?” என்று கேள்வியோடு மதி முன்னே வந்து தமிழச்சி நிற்க, மதி தன் தோழியை ஏறிட்டு பார்க்கும் போதே அவள் கண்ணீர் மடை திறந்தது.
“அழகி என்னாச்சு?” என்று சொல்லிக் கொண்டே தமிழச்சி மண்டியிட்டு அவள் முன்னே அமர, தோழியிடம் எதையும் மறைக்க விரும்பாமல் தன் வேதனைகளை முழுவதுமாய் கொட்டித் தீர்த்தாள்.
அவள் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாய் கேட்டிருந்த தமிழச்சி முறைப்போடு எழுந்து நின்று, “சரியான லூசு கூமுட்டையா இருப்ப போல... என் அண்ணனைப் பார்த்தா வெளிநாட்டில இருந்து ஒரு வெள்ளைகாரியைத் தள்ளிட்டு வர மாறியா தெரியுது”
“அப்படி இல்ல”
“பேசாதே... அறைஞ்சு பல்லைக் கழட்டிடுவேன்... ஜெஸ்சி யார் தெரியுமா?... சிம்மா ஸ்கூல் ஃப்ரெண்ட் நந்துவோட வொய்ஃப்”
மதி அதிர்ச்சி நிறைந்த பார்வை பார்க்க தமிழச்சி மேலும், “என்ன ஏதுன்னு கூட விசாரிக்காம அதுக்குள்ள ஊருக்குப் போகவே கிளம்பிட்ட... சரியான லூசுடி நீ” என்று சீற்றமாய் உரைக்க, “ச்சே... எனக்கு அறிவே இல்ல” என்றபடி மதி தலையிலடித்துக் கொண்டாள்.
“அதான் தெரியுமே... அதானால்தான் நானும் முகிலும் உன் பேர்ல இருக்க மதியை கட் பண்ணிட்டு அழகின்னு கூப்பிடுறோம்” என்று தமிழச்சி கேலி செய்ய,
“ப்பே” என்று நொடித்துக் கொண்டாள் மதி.
“செய்றதெல்லாம் செஞ்சிட்டு... இப்போ எதுக்கு என்கிட்ட கோவிச்சுக்கிற” என்று தமிழச்சி கேட்க மதி நிதானத்திற்கு வந்து, “சரி அதை விடு... இப்போ நான் என்ன பண்ணட்டும்... அதை சொல்லு” என்ற கேட்டாள்.
“ஒழுங்கா ஊர் போய் சேர வழிய பாரு” என்று தமிழச்சி கடுப்பாய் சொல்லிவிட்டுச் செல்ல, மதி தான் செய்த முட்டாள்தனத்தை எண்ணித் தொடர்ச்சியாய் தலையிலடித்துக் கொண்டாள். வேறென்ன செய்வதென்றே அவளுக்குப் புரியவில்லை.
‘அத்தை மாமா கிட்ட எல்லாம் கிளம்பிறேன்னு சொல்லியாச்சு... இப்ப எப்படி போகாம’ என்று தனியாகப் புலம்ப, “மதி டைமாச்சு... இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க” என்று பரபரப்பாய் கேட்ட தந்தையின் குரலில் அவள் மேலும் பதட்டமானாள்.
“ராமு... இந்தப் பெட்டியை எடுத்துட்டுப் போய் கீழே கார்ல வையுங்க” என்று ரவி வேலையாளிடம் பணிக்க மதி பதறிக் கொண்டு, “எதுக்கு... அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... நீங்க போங்க ராமு” என்றாள்.
ரவி புரியாமல் மகளைப் பார்க்க ராமுவோ தயங்கி நின்றார்.
மதி மீண்டும், “ஏன் நிற்கறீங்க ராமு? போங்க” என்று குரல் கொடுக்க, அந்த வேலையாளும் விரைந்து அங்கிருந்து வெளியேறிவிட்டான்.
ரவி மகளைக் குழப்பமாய் பார்த்து, “டைமாச்சு மதி... கிளம்ப வேண்டாமா?” என்று விசாரிக்க,
“பேசாதீங்க ப்பா... நான் போகணும்னு சொன்னா... நீங்க உடனே டிக்கெட் புக் பண்ணிடுவீங்களா?” என்று அவரிடம் ஆவேசமாய் பொங்கினாள்.
“நீதானேமா... உடனே டிக்கெட் புக் பண்ணுங்கன்னு அடம் பிடிச்ச”
“அடம் பிடிச்சா... அதுக்குச் சொல்லி புரிய வைக்கணும்... அதை விட்டுட்டு”
“நான்தான் வேண்டாம்னு உன்கிட்ட சொன்னேனே” என்று ரவி மகளைப் பெருங்குழப்பத்துடன் பார்க்க,
“பண்றதெல்லாம் பண்ணிட்டு பேசாதீங்கப்பா” என்று சொல்லி அவர் வாயை அடைத்தவள், “ஒழுங்கா டிக்கெட் கேன்சல் பண்ணுங்க சொல்லிட்டேன்” என்று மிரட்டல் விடுத்துவிட்டு அறையை விட்டு வெளியேற, ரவிக்கு ஒன்றும் விளங்கவில்லை. மொத்தத்தில் அவளுக்குப் போக விருப்பமில்லை. அதுவரைக்கும் கொஞ்சமாய் அவருக்குப் புரிந்து போனது.
ஆனால் நடந்தவற்றின் முழு சூட்சுமமும் தெரிந்த தமிழச்சி அறை வாசலில் நின்று மதியைப் பார்த்து கேலி செய்து அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.
மதி கடுப்போடு, “சிரி சிரி... உனக்கு என் கஷ்டமும் வலியும் சத்தியமா புரியாது” என்று சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“கோபப்படறத விட்டுட்டு முதல உன் மனசுல இருக்கிறதைப் போய் அண்ணாகிட்ட சொல்லு” என்று தமிழச்சி சிரிப்பை நிறுத்திவிட்டு நிதானமாய் சொல்ல, “அது எப்படி... அவர்கிட்ட நான்” என்று முகத்தைச் சுருக்கினாள்.
“உஹும்... நீ இப்படியே இரு... ஒரு நாள் இல்ல ஒரு நாள்... எங்க அண்ணன்... ஏதோவது ஒரு கோவில் குருக்கள் பொண்ணையோ இல்ல அர்ச்சனை கூடை விற்கிற பொண்ணையோ தள்ளிட்டு வரப் போறான்” என்று சொல்லவும், “கொன்னுடுவேன்” என்று மதி சீற்றமாய் கத்தினாள்.
“இந்த சவுண்டெல்லாம் இங்க கொடுக்காத... முடிஞ்சா உன் ஆள்கிட்ட போய் கொடு” என்று தமிழச்சி வார்த்தைகளை வீச மதி ஆவேசமாய், “நான் இப்பவே போய் அவர்கிட்ட பேசுறேன்” என்றாள்.
“பேசுவியா இல்ல போன வேகத்தில ரீவர்ஸ் கீர் போட்டு திரும்பி ஓடி வந்திருவியா?” என்று தமிழச்சி கேலியாய் நகைத்து கொண்டே கேட்க, மதி ஏற இறங்கப் பார்த்துவிட்டு நேராய் சிம்மாவின் அறைக்குள் சென்று நின்றாள்.
அவன் மும்முரமாய் தன் லேப்டாப்பை ஆராய்ந்து கொண்டே தன் பேசியில் உரையாடிக் கொண்டிருந்தான். இவள் வந்து நின்றதை அவன் கவனிக்கவில்லை. இந்த சமயத்தில் தான் எப்படி பேசுவது என்று யோசித்து கொண்டே மதி பின்வாங்க எத்தனிக்க தமிழச்சியின் கேலி வார்த்தைகள் அவள் காதில் ஒலித்தன.
‘ஊஹும்... எந்தக் காரணத்தைக் கொண்டும் பின்வாங்க கூடாது... கண்டிப்பா இன்னைக்குச் சொல்லிடணும்’ என்று அவள் தீர்க்கமாய் எண்ணி கொண்டிருக்கும் போதே சிம்மா அவள் வாசலில் நிற்பதை பார்த்து, “உள்ளே வா மதி... ஏன் அங்கேயே நிற்கிற” என்றவன் தான் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நபரிடம், “நான் திரும்பியும் கூப்பிடுறேன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
அவளோ அவன் முகத்தைப் பார்க்க கூட தயங்கி நிற்க,
“என்ன மதி... அப்பவே கிளம்பணும்னு சொன்ன... இன்னும் டைம் ஆகலையோ?” என்றவன் அவளிடம் கேட்க அவள் தவிப்போடு, “அது வந்து... நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அவள் தடுமாறிக் கொண்டே சொல்ல அவன் முறுவலித்து, “அதுகென்ன பேசலாமே... நீ முதல்ல உட்காரு” என்று தன் அறையிலிருந்த இருக்கையைக் காண்பித்தான்.
“இல்ல பரவாயில்லை... நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிடுறேன்”
“ஏன் இவ்வளவு பதட்டபடுற... என்ன விஷயமா இருந்தாலும் நிதானமா சொல்லு” என்றான்.
“முடியலையே... எனக்கு ரொம்ப ஸ்டிர்ஸ்டா இருக்கு... உங்ககிட்ட என் மனசுல இருக்கிறதைச் சொல்ல முடியாம... சொன்னா நீங்க எப்படி எடுத்திப்பீங்களோன்னு... பயந்து பயந்து... ஆனா இனிமே என்னால முடியாது... நான் என் மனசுல இருக்கிறதைச் சொல்லத்தான் போறேன்” என்றவள் அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் பேசிக் கொண்டிருக்க அவன் இடையிட்டு எதுவும் பேசாமல் தன் கரங்களைக் கட்டிக் கொண்டு மௌனமாய் அவளைப் பார்த்திருந்தான்.
“நான் உங்களை விரும்புறேன்... இன்னைக்கு நேத்து இல்ல... சின்ன வயசுல இருந்தே... இதைச் சொல்லணும்னுதான் எனக்குள்ள அவ்வளவு போராட்டம்... இப்போ சொல்லிட்டேன்... இனிமே நீங்க முடியாதுன்னு சொன்னாலும் பரவாயில்ல” என்றவள் தன் விழிகளில் நீரூற்றாய் வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேச,
“ஏ மதி” என்று அவன் உடனடியாய் அவளை நெருங்கி தன் கரங்களால் அவள் கண்ணீர் வழிந்திருந்த கன்னங்களைத் துடைத்தபடி, “நான் ஏன் முடியாதுன்னு சொல்லணும்... எனக்குதான் உன்னை ரொம்ப பிடிக்குமே” என்க, அவள் திகைப்புற்றாள்.
“உன் மனசுல நான் இருக்க மாறி... என் மனசுலயும் நீதான் மதி இருக்க... இதை நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லி இருப்பேன்... ஆனா அப்போ உன் மனசுல நான் இருக்கேனான்னு எனக்கு சரியா தெரியல... இன்னைக்கு தமிழச்சி பேசுனதை வைச்சுதான் உன் மனசுலையும் நான்தான் இருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டேன்... சரி அம்மாகிட்ட சொல்லிட்டு... உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்... ஆனா நான் சத்தியமா நினைக்கல... நீ என்னை நினைச்சிக்கிட்டு இவ்வளவு கஷட்டபட்டுட்டு இருக்கன்னு” என்றவன் அவள் கன்னங்கள் ஏந்தி விழிகள் பார்த்து சொல்லிக் கொண்டிருக்க இமைக்கவும் மறந்து அவன் வார்த்தைகளைக் கேட்டு மெய்மறந்து நின்றுவிட்டாள்.
அத்தனை நெருக்கமாய் அவள் முகத்தைப் பார்த்திருந்தவனின் மனம் சலனப்பட, முயன்று தன்னை சமன்படுத்திக் கொண்டவன் அவளை விட்டு விலகி வந்து நின்றான். அவளோ நாணத்தோடு தலைகவிழ்ந்து கொள்ள, இருவருக்கிடையிலும் பலத்த மௌனம் சஞ்சரித்தது.
“சரி... நான் கிளம்பிறேன்” என்று மதி அந்த அறையின் நிசப்த நிலையைக் கலைக்க, “கண்டிப்பா இன்னைக்கே போகணுமா?” என்று அவன் ஏக்கமாய் கேட்க,
“நான் மும்பை போகல... போகிற ப்ளேன் கேன்சலாயிடுச்சு” என்றாள்.
“கேன்ஸலாயிடுச்சா? எது சென்னை டு மும்பை ஃப்ளைட்டா?” என்று அவன் கேலியாய் கேட்க, “உஹும்... நான் போகிறது கேன்ஸலாயிடுச்சு” என்றாள்.
“ஏன்?” என்றவன் கள்ளத்தனமாய் புன்னகைக்க அவள் அவன் முகத்தைப் பாராமல், “அத்தைக்கு நல்லா குணமானதும் போலாம்னு” என்று சொல்ல அவன் சிரித்துக் கொண்டே, “உன் உதடு சொல்றது பொய்னு உன் கண்ணு அப்பட்டமாய் காட்டிக் குடுக்குது” என்றான்.
“என்னன்னு” ஏதும் அறியதவளாய் அவனை அவள் நிமிர்ந்து பார்க்கவும் சரியான சமயமாய் பார்த்து சிம்மாவின் பேசி மீண்டும் ரீங்காரமிட்டது.
“உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதையில்லாமல் வேர் இல்லையே!
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதையில்லாமல் வேர் இல்லையே!
கிருஷ்ணா... உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதையில்லாமல் வேர் இல்லையே!
நிதம் காண்கின்ற வான் கூட நிஜம் அல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல...
நீயில்லாமல் நான் இல்லையே”
என்று ஒலித்துக் கொண்டிருந்தப் பாடலைக் கேட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து லயித்திருக்க அப்போது அந்த அழைப்புத் துண்டிக்கப்பட்டதில் பாடல் நின்றது. ஓர் அழகான கனவு கலைந்தது போன்ற உணர்வு இருவருக்கும்!
மதி அவன் முகத்தைப் பார்த்து, “என் ஃபோன் ரிங்க்டோனும் இதுதான்... எனக்கும் இந்தப் பாட்டுப் பிடிக்கும்” என்று சொல்ல அவளைப் பார்த்து ரசனையாய் புன்னகைத்து,
“எனக்கு உன்னாலதான் இந்தப் பாட்டு பிடிக்கும் மதி... உன் ஞாபகமாதான் இந்த ரிங்க்டோனை நான் வைச்சிருக்கேன்... நீ அன்னைக்கு தமிழச்சி ரூம்ல இந்தப் பாட்டுக்காக ஆடினியே...ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான்.
“நீங்கப் பார்த்தீங்களா?” என்றவள் வியப்புற, “ஹ்ம்ம்... பார்த்தேன்... உன் நடனமும் முகபாவமும் அவ்வளவு அழகு... திரும்பியும் எனக்கு அந்தப் பாட்டுக்கு நீ ஆடுறதைப் பார்க்கணும் போல இருக்கு மதி... ஆட முடியுமா? எனக்காக” என்றவன் கெஞ்சலாய் தொடங்கி கடைசி வார்த்தையில் அழுத்தம் கொடுத்து அவளை ஆழ்ந்து பார்க்க அவளுக்கு மூச்சு முட்டியது.
வெட்கத்தில் முகம் சிவக்க அவன் கேள்விக்குப் பதில் கூறாமல் அவள் அங்கிருந்து சென்றுவிட பார்க்க, “மதி ஒரு நிமிஷம்” என்று அவன் வார்த்தை தடைப்படுத்த அவள் மௌனமாய் நின்றாள்.
சிம்மா சில நிமிடம் கழித்து அவள் முன்னே வந்து, “நான் கேட்டது உனக்கு செய்ய விருப்பமில்லன்னா பரவாயில்ல” என்றவன் சொல்ல,
“சேச்சே... அப்படி எல்லாம் இல்ல... இப்போ வேண்டாம்னு”
“ஆமா... இப்போ வேண்டாம்... அதுக்கான ஒரு டைம் வரும்... அப்போ பார்த்துக்கலாம்” என்றவன் அவன் கரத்தில் வைத்திருந்த சுருட்டப்பட்ட காகிதத்தை நீட்டி, “இது உனக்காக... என் மனம் கவர்ந்தவளுக்கு நான் தர முதல் காதல் பரிசு” என்று சொல்ல அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை.
அவனைப் பார்த்து கொண்டே அதனைப் பெற்றுக் கொண்டவள் அந்தக் காகிதத்தைப் பிரிக்க எத்தனிக்க,
“இங்க பார்க்க வேண்டாம்... ரூமுக்கு போய் பாரு” என்றான்.
அவனைப் பார்த்து தலையசைத்துவிட்டு தன் அறை நோக்கி சென்றாள். அப்படி என்ன அந்தக் காகிதத்தில் இருக்க கூடும் என்ற ஆவலோடு தன் படுக்கையில் சாய்ந்து கொண்டு அதனைப் பிரிக்க, அவள் விழிகள் அசைவின்றி அந்த ஓவியத்தையே பார்த்திருந்தன.
அந்த ஓவியத்தில் இருப்பது தான்தானா என்ற சந்தேகத்தோடு பலவாறாக அதனைத் திருப்பித் திருப்பி பார்த்து ஊர்ஜிப்படுத்திக் கொண்டவள் அவனின் கைவண்ணத்தில் ஆடை ஆபரணங்களோடு புதுவித தோற்றத்தில் தன்னையே ஓவியமாய் பார்த்து பூரிப்படைந்தாள்.
பிரதிபலிப்பது தன் உருவம் என்பதை கடந்து அந்த ஓவியத்தில் தெரிந்த அவன் காதலோடு கூடிய ரசனையான பார்வையே அவளைக் கவர்ந்திழுத்தது. நேரங்கள் கடந்தாலும் அந்த ஓவியத்தைப் பார்க்கப் பார்க்க அவளுக்குச் சலிப்புத் தட்டவேயில்லை. மாயையாய் அந்த ஓவியித்திற்குள்ளாகவே அவள் புகுந்துவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
*
இரவு நடுநிசியை எட்டிக் கொண்டிருந்த சமயம் கதவு தட்டும் ஓசைக் கேட்டு விஷ்வா வாயில் கதவைத் திறக்க விக்ரம் சோர்வான விழிகளோடு, “சாரி ப்பா... ஃப்ளைட் கொஞ்சம் டிலே... அதான் லேட்” என்றான்.
விஷ்வா கதவை மூடி கொண்டே, “நீ சாப்பிட்டியா விக்ரம்?” என்று கேட்க, “கிளம்பும் போதே எல்லோரும் சாப்பிட்டுதான் கிளம்பனோம்” என்றான்.
“சரி நீ போய் படு” என்றவர் சொல்லிக் கொண்டே தன் அறைக்குள் நுழைய எத்தனித்தவர் மீண்டும் திரும்பி, “விக்ரம்” என்று அழைக்க, தந்தையின் அழைப்பைக் கேட்டு, “சொல்லுங்க ப்பா” என்று அவர் முகம் பார்த்து திரும்பி நின்றான்.
“நாளைக்கு எங்கயும் அவசரமா கிளம்பி போயிடாதே விக்ரம்” என்று அவர் சொல்ல, “ஏன் ப்பா” என்ற கேள்வியோடு தந்தையை ஆழ்ந்து பார்த்தான்.
“தமிழச்சி நீ எப்போ வருவேன்னு எனக்கு கால் பண்ணிக் கேட்டுகிட்டே இருந்தாடா... நீ இன்னைக்கு நைட் வந்திருவன்னு சொன்னேன்... அதான் நாளைக்கு காலையிலேயே உன்னைப் பார்த்து பேச வரேன்னு சொன்னா... அதான் நீ எங்கயும் கிளம்பி போயிடாதே” என்றவர் சொல்லி முடிக்கும் போதே அவன் ஆக்ரோஷமாய், “அவ ஒன்னும் என்னைப் பார்க்க வர வேண்டாம்... நான் அவகிட்ட பேச தயாரா இல்லை” என்றான்.
“கோபப்படாதே... அவ உன்கிட்ட சமாதானமா பேசதான் வரன்னு சொன்னா... நீயும் பழைய விஷயதெல்லாம் மறந்துட்டு” என்று விஷ்வா எடுத்துரைக்க,
“எதை மறக்கணும்? அவ மீடியா முன்னாடி என்னை சம்பந்தமே இல்லாதவனு சொன்னாளே அதையா... இல்ல அவங்க அப்பா என்னை யாருன்னு கேட்கும் போது ஒரு வார்த்தை கூட பேசாம கல்லு மாறி நின்னாலே... அதையா?” என்று கோபம் பொங்கக் கேட்டான்.
விஷ்வா அதிர்ச்சியோடு, “வீரேந்திரன் ஏன் உன்கிட்ட அப்படி கேட்டாரு?” என்க,
“ஹ்ம்ம்... அவருக்கு அவர் பொண்ணு எது செஞ்சாலும் ஒசத்தி... ஆனா எல்லாருக்கும் நான்னா இளக்காரம்தானே” என்றான்.
“நீ வேறேதோ டென்ஷன்ல் இருக்க போல... போய் படு... இந்த மேட்டரை காலையில பேசிக்கலாம்” என்றார் விஷ்வா.
“எப்போ பேசனாலும் என் முடிவு இதுதான்... அவக்கிட்ட சொல்லிடுங்க... இனிமே அவளுக்கும் எனக்கும் ஒத்து வராது” என்று முடிவாய் சொல்லிவிட்டு அவன் தன் அறைக்குள் நுழைய, இந்த வார்த்தைகள் உள்ளே இருந்த ஆதியின் செவிகளையும் எட்டி வேதனைப்படுத்தியது. இந்தப் பிரச்சனையை எப்படி சரி செய்வதென்று புரியாமல் ஆதியும் விஷ்வாவும் மகன் மருமகளின் எதிர்காலத்தை எண்ணித் தூக்கம் வராமல் தவித்திருந்தனர்.
அதேநேரம் விக்ரம் களைப்போடு தன் படுக்கை அறைக்குள் நுழைய இவான் அவனைப் பார்த்து, “ஹாய் விக்ரம்...? ரொம்ப லேட்டாயிடுச்சு போல... ஃப்ளைட் லேட்டா? நீ போன வேலையெல்லாம் முடிஞ்சுதா?” என்று வரிசையாக தன் கேள்விகளை அடுக்க, விக்ரம் வேண்டா வெறுப்பாய் அவனுக்கு ஒரு தலையசைப்பையும் கசந்த முறுவலையும் தந்துவிட்டு தன் தோளில் மாட்டியிருந்த பேகை ஓரம் வைத்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
அவனிடம் ஏதோ சரியில்லை என்று இவானுக்கு தோன்ற அவனிடம் மேலே எதுவும் பேச்சுக் கொடுக்காமல் மௌனமானான்.
விக்ரம் குளித்து தன் உடல் சோர்வைத் தணித்த போதும் மனசோர்வு தணிந்தபாடில்லை. அதே மனநிலையோடு அவன் படுத்துக் கொள்ள எத்தனித்த போது இவான் தன் பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தான். அப்போது அவன் கையிலிருந்த ஒரு தாள் கீழே விழ, அதனை விக்ரம் கையிலெடுத்து இவானிடம் கொடுக்க எண்ணும் போதே அதைக் கவனித்தான்.
அது ஒரு நடராஜர் சிலையின் புகைப்படம். அந்த நொடி அமிர்தாவினை சந்தித்த போது பார்த்த சிலையின் நினைவு வந்தது. அன்று பார்த்த அந்தச் சிலைக் குறித்து அவன் அதன் பின் பெரிதாய் யோசிக்கவில்லை. ஆனால் அந்தச் சிலைக்கும் இந்தச் சிலையின் படத்திற்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பதாய் தோன்றியது. ஆனால் அந்த எண்ணத்தை அலட்சியப்படுத்தி இவானிடம் அந்தப் புகைப்படத்தைக் கொடுத்தான்.
தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தின் முக்கியத்துவத்தை விக்ரம் அப்போது அறிந்திருக்கவும் இல்லை. ஆராயவும் முற்படவில்லை. நித்திரையில் ஆழ்ந்தான்.
ஆனால் தமிழச்சியும் சிம்மாவும் அந்த நடுநிசி இரவிலும் தங்கள் உறக்கத்தைத் தொலைத்துவிட்டு அந்த ரகசியத்தின் ஆணிவேர் எங்கே இருக்கும் என்ற தீவிரமான விவாதத்தை மேற்கொண்டிருந்தனர்.
29