மோனிஷா நாவல்கள்
IruMunaiKathi - Episode 5
Quote from monisha on November 10, 2023, 12:23 PM5
துணிவு
வீர் உயிருக்கு உயிரான தன் மனைவியின் உயிரை... வேறெந்த சக்தியும் தன்னை விட்டுப் பிரித்துக்கொண்டு போய்விடக் கூடாதே என்ற அச்சத்தில் அவரின் கரத்தோடு தன் கரத்தை அழுத்தமாய் கோர்த்தபடி அமர்ந்திருந்தார்.
டாக்டர் சொன்ன வார்த்தைகள்தான் அவர் நினைவுகளுக்குள் சுழன்றுக் கொண்டிருந்தது. “இன்னும் இருபத்தி நாலு மணிநேரத்துல அவங்களுக்கு கான்ஷியஸ் திரும்பலன்னா அப்புறம் அவங்கள காப்பாத்தறது ரொம்ப ரிஸ்க்”
இதைக் கேட்ட வீரின் மனம் வேதனையில் உழன்றுக் கொண்டிருக்க, தமிழ் உணர்வற்ற நிலையில் படுக்கையில் கிடந்தார்.
வீர் தவிப்போடு, ‘என்னைப் பயமுறுத்திப் பார்க்கறதுல உனக்கு என்னடி அவ்வளவு சந்தோஷம்... சண்டைப் போட்டாலும் கோபப்பட்டாலும் உன்மேல நான் என் உயிரையே வைச்சிருக்கேன்னு உனக்குத் தெரியாது... ஏன்டி இப்படி என்னைக் கொல்ற... சத்தியமா என்னால உன்னை இப்படி பார்க்க முடியலடி... என்னைப் போட்டுப் படுத்தாதடி... பேசுடி... சண்டை போடுடி... எழுந்திருடி... என் தமிழச்ச்ச்ச்சி’ என்று தன் மனவுணர்வுகளை அவர் வார்த்தையால் கொட்டிக் கொண்டிருக்க,
“என்ன அண்ணா!... நீங்களே இப்படி உடைஞ்சு போகலாமா?” என்றபடி ரகு பின்னோடு வந்து அவரின் தோளைத் தொட்டார்.
“என்னால முடியல ரகு... உன் ஃப்ரெண்டை எழுந்திருக்கச் சொல்லு அவ இப்படி படுத்திருக்கிறதைப் பார்க்கப் பார்க்க எனக்கு பைத்தியமே பிடிக்குது”
ரகுவின் விழிகளிலும் அந்த நொடி கண்ணீர் வழிந்தோட, தமிழ் போன்ற அரிதிலும் அரிதாய் கிடைத்த தோழியை இழந்துவிட நேரிடுமோ என்று அவர் உள்ளமும் பொருமியது.
அப்போது ரகுவின் மனைவியும் தமிழின் தங்கையுமான தேவி, “அக்காவுக்கு எதுவும் ஆகாது மாமா... நீங்க இப்படி உடைஞ்சு போகாதீங்க... அக்காவால அதை நிச்சயம் தாங்க முடியாது” என்றார்.
“ஆமா ண்ணா” என்று ரகுவும் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வீரின் தோளைத் தடவ, தன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த அறையை விட்டு அவர் வெளியேறி விட்டார்.
அப்போது தேவியின் பேசி அழைத்தது. எதிர்புறத்தில் “அக்காவுக்கு என்ன?” என்று பதட்டத்தோடு ஒரு குரல் கேட்க நடந்தவற்றை எல்லாம் தேவி அவரிடம் விவரமாகத் தெரிவித்தார். அந்தக் குரலுக்கு உரிமையானவர் வேறுயாருமல்ல. நமக்கு ஏற்கனவே அறிமுகமான செந்தமிழின் தம்பி ரவிதான்.
ரவி திருமணம் ஆன கையோடு விளம்பர நிறுவனம் ஒன்று தொடங்கி மும்பையில் குடிபெயர்ந்துவிட்டார். அவ்வப்போது அவர் தன் மனைவி மகளோடு தங்கையையும் தமக்கையையும் பார்க்க சென்னை வருவது வழக்கம். இந்தச் செய்தியைக் கேட்டறிந்த அடுத்த நொடியே புறப்பட்டு வருவதாக தங்கையிடம் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
இந்நிலையில் மருத்துவர் கொடுத்த கெடு நெருங்கிக் கொண்டிருக்க, தமிழின் உடல்நிலையிலோ எந்தவித முன்னேற்றமும் இல்லை.
இதை எண்ணி தமிழச்சியின் மனநிலையும் ரொம்பவும் மோசமாகயிருந்தது. அவளுக்கு தன் தாயின் நிலையை எண்ணி ஒரு புறம் வேதனையென்றால் மறுபுறம் அவள் பார்த்துப் பார்த்து ரசித்த தன் தந்தையின் கம்பீரம் நிலைகுலைந்திருப்பதைக் கண்டு சொல்லிலடங்கா வலி.
அன்று இருந்த ஆபத்தான நிலையில் தன் தாயின் உயிரைக் காப்பாற்றவே அவரை ஓடும் காரிலிருந்து மணற்மேடான இடமாய் பார்த்துத் தள்ளிவிட்டாள். ஆனால் அவள் செய்தது இப்படி தன் அம்மாவை சாவின் விளிம்பில் தள்ளிவிடும் என்று கிஞ்சிற்றும் எதிர்பார்க்கவில்லை.
அதை எண்ணி அவள் மனம் குற்றவுணர்வில் தவிக்க, அப்போது அந்த அறைக்குள் அனுமதி கேட்டு நுழைந்தனர் அவளின் மேலதிகாரி ஏ.டி.ஜி.பி (அடிஷ்னல் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ்) தயாளனும் மற்றும் உடன் பணிபுரியும் ஏ.எஸ்.பி சரணும்!
அவளின் உடல் நலன் குறித்து விசாரித்த தயாளன் மேலும் அவள் தற்போது விசாரித்துக் கொண்டிருக்கும் வழக்கை வேறொருவருக்கு மாற்றித் தரும்படி அறிவுறுத்த, அவள் அதிர்ந்தாள்.
இரண்டு மாதமாய் இரவு பகல் பாராமல் அவள் உழைத்த உழைப்பை அப்படியே தூக்கிக் கொடுத்து விடுவதா? தற்காலிகம் என்றாலும் ஏனோ அது அவளுக்குச் சரியாகப்படவில்லை.
அதுவும் அவள் வேலைக்குச் சேர்ந்து முதல் வருடம் முடியும் போதே தற்காலிக வேலை நீக்கமடைந்து பின் பெரும் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் வேலைக்குச் சேர்ந்திருந்த நிலையில் அவளுக்கு கிடைத்த பொறுப்பு அது!
அதன் மூலமாக தன் மீது விழுந்த கரும்புள்ளியை எப்படியாவது நீக்கி தன் திறமையை நிரூபித்துவிடலாம் என்று எண்ணி அந்த வழக்கில் அவள் வெறித்தனாமாக தன் விசாரணையை நடத்திக் கொண்டிருந்தாள். அந்த சமயத்தில் இந்த விபத்து வேறு.
தமிழச்சி மனமுடைய, அவளின் விழிகளின் நுனியில் கண்ணீர் விழக் காத்திருந்தது.
அப்போது ஏடிஜிபி. தயாளன், “நம்ம ஏஎஸ்பி சரண்கிட்டயே எல்லா டீடைல்சையும் கொடுத்திருங்க தமிழச்சி” என்று உரைக்க அவருடன் நின்று கொண்டிருந்த சரண் முகத்தில் கர்வப்புன்னகை! தமிழிச்சியின் உள்ளம் மேலும் கொதித்தது.
சரணும் அவளும் ஐபிஎஸ் ட்ரைனிங்கில் ஒரே பேட்ச்!
அப்போது இருவருக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நடைபெறும். அவள் பெண் என்பதற்காகவே பல நேரங்களில் அவன் அவளை மட்டம்தட்ட, அவன் எண்ணத்தை அவள் உடைத்தெறிந்து பயிற்சிக் காலத்திலேயே அவனுக்குச் சரிக்கு நிகராக நின்று காட்டியிருந்தாள்.
ஆனால் மீண்டும் அவள் தகுதியைக் குறைத்து காட்டுகிற மாதிரியாக இப்படியொரு சூழ்நிலை உருவாகும் என்று அவள் நினைக்கவில்லை. அவளுக்கு என்ன சொல்வேதேன்றே தெரியவில்லை. மேலதிகாரியாக அவர் சொன்னதை தான் ஏற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அவள் தன் சம்மதத்தைத் தெரிவிக்க தலையுயர்த்திய போது வீர் அறைக்குள் நுழைந்தார்.
ஏடிஜிபி தயாளன் மரியாதையோடு முகமன் கூறி அவருக்குக் கைக் கொடுத்தார். தயாளன் அப்போது வீரிடம் அவரின் மனைவி உடல்நிலை குறித்தெல்லாம் விசாரித்துவிட்டு மேலும் தயாளன் தான் வந்த விஷயத்தைத் தெரிவிக்க,
வீர் அந்த நொடி தன் மகளின் முகத்தில் படர்ந்திருந்த வேதனையின் காரணத்தை அறிந்து கொண்டார்.
அவர் தயாளனிடம், “அதுக்கெல்லாம் அவசியமில்ல தயா... இன்னும் ஒரே வாரத்துல தமிழச்சி பழையபடி க்யூர் ஆகிட்டு டியூட்டில ஜாயின் பண்ணுவா” என்றார்.
“இல்ல வீரேந்திரன்... பிஸிக்கலா இப்போ தமிழச்சி இருக்குற நிலைமையில” என்று சொல்லி தயாளன் தயங்க,
“கைல இருக்க கட்டப் பார்த்து பேசாதீங்க தயா... அது இன்னும் இரண்டு நாளில் பிரிச்சிடுவாங்க... அப்புறம் ஒரு டூ டேஸ் ரெஸ்ட் எடுத்தா முழுசா க்யூர் ஆயிடுவா” என்றார் வீர்.
“அது சரிதான் வீரேந்திரன்” என்று அப்போதும் தயாளன் யோசிக்க,
“பிஸிக்கல் ஃபிட்னஸ் செர்டிபிஃக்கேட் ஏதாச்சும் வேணுமா?” என்று வீர் அவரிடம் அழுத்தமாய் கேட்கவும், “பரவாயில்ல வீரேந்திரன்... தமிழச்சி வந்து டியூட்டில ஜாயின் பண்ணாலே போதும்... நான் கிளம்பறேன்” என்றவர், தமிழச்சியிடம் விரைவில் உடல்நிலையைத் தேற்றிக் கொண்டு வேலையில் வந்து சேர சொன்னார்.
இவ்விதம் சொல்லிவிட்டு தயாளன் வெளியேறிவிட சரண் குழப்பத்தோடு, “தமிழச்சி அப்பா ஏதாச்சும் பெரிய போஸ்டிங்க்ல இருக்காரா சார்?” என்று கேட்க, தயாளன் மறுப்பாய் தலையசைத்தார்.
“அப்படின்னா ரொம்ப அரசியல் செல்வாக்கு உள்ளவரோ?!” என்று சரண் மீண்டும் தன் சந்தேகத்தை எழுப்ப,
தயாளன் பெருமூச்செறிந்து, “இப்ப உனக்கென்ன தெரியணும் சரண்... நான் ஏன் மிஸ்டர் வீரேந்திரன் சொன்னதை அப்படியே மறுக்காம கேட்டுக்கிட்டேன்னா” என்றதும் சரண் மௌனமானாய் அவரை ஏறிட்டான்.
“அரசியல் செல்வாக்கு பணபலம் இதெல்லாம் வீரேந்திரன் குடும்பத்துக்கு நிறைய இருக்கு... ஆனா அதெல்லாம் தாண்டி நம்ம டிபார்ட்மென்ட்டுக்கே வீரேந்திரன் மேல தனி மரியாதை உண்டு”
சரண் முகம் ஆச்சர்யமாய் மாற அவர் மேலும், “பத்து பன்னிரண்டு வருஷம் முன்னன்னு நினைக்கிறன்... அரசாங்கத்துக்கு எதிரா ஒரு பெரிய போராட்டம் நடந்துச்சு... எல்லோரையும் கிட்டத்தட்ட திரும்பிப் பார்க்க வைச்ச போராட்டம்... புரட்சின்னு கூட அதைச் சொல்லலாம்” என்றார்.
“ஆமா தெரியும் சார்” என்று சரண் தலையசைக்க,
“ஹ்ம்ம் அப்போ சிட்டி கமிஷ்னரா இருந்தது வீரேந்திரன்தான்... அந்தப் போராட்டத்தைக் கலைக்கச் சொல்லி மேலிடத்தில இருந்து பயங்கர பிரஷர்... வீரேந்திரன் அந்தப் பிரச்சனையை முடிக்க அமைதியான முறைல மக்கள் கிட்டப் பேசி எல்லோரையும் கலைஞ்சு போகச் சொன்னாரு... எல்லோரும் அவர் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து ஒரே ஒரு நாள் டைம் கேட்டாங்க... வீரேந்திரனும் இதைப் பத்தி மேலிடத்தில பேசி முடிக்கிறதுக்குள்ள... திடீர்னு சில கட்சிகள் பண்ண சதி...
போராட்ட கூட்டத்துல கலவரத்தை உண்டு பண்ணிட்டாங்க... கூட்டத்தைக் கலைக்க வேற வழியில்லாம போலீஸ் தடியடி நடத்த வேண்டியதா போச்சு... ரொம்ப கொடுமை... நிறைய பேர் இறந்துட்டாங்க... தான் பொறுப்பில இருக்கும் போது மக்களுக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்திருக்குறத வீரேந்திரனால தாங்கிக்கவே முடியல... ஏத்துக்கவும் முடியல...
மக்களை காவு வாங்கி இந்த அரசாங்கத்துக்கு அடியாளா வேலை பார்க்கற இந்தக் காக்கிச் சட்டையும் வேண்டாம்... இந்த வேலையும் வேண்டான்னு வீரேந்திரன் தான் உயிருக்கு உயிரா நேசிச்ச போலீஸ் வேலையையே அசால்ட்டா தூக்கிப் போட்டாரு” என்று தயாளன் நடந்தததை சொல்லி முடிக்க, சரணுக்கு வியப்படங்கவில்லை.
“ரியல் ஹீரோ சார்” என்றவன் மெய்சிலிர்ப்போடுச் சொல்ல,
“அவருக்கு கொஞ்சமும் சளைச்சவ இல்ல தமிழச்சி... அவளை சிலை கடத்தல் பிரிவில போட்டே ரெண்டு மாசம்தான் ஆச்சு... அதுக்குள்ள அவ கேஸ்சை எடுத்துட்டு போற விதத்தைப் பார்த்து ஸ்டேட்ல இருந்து சென்ட்ரல் வரைக்கும் ஆடிப் போயிருக்காங்க... எம்.பி. எலெக்ஷன் வேற வரப் போகுது... அந்த டைம்ல இவ எதையாச்சும் ஏடாகூடமா தோண்டி வைச்சுட்டான்னா... அதான் எப்படியாச்சும் தமிழச்சியைச் சிலைக் கடத்தல் பிரிவில இருந்து தூக்கச் சொல்லி மேலிடத்தில இருந்து பிரஷர்” என்று தயாளன் சொல்ல, அப்போதுதான் சரணுக்குப் புரிந்தது.
உண்மையிலேயே இந்தப் பொறுப்பை தன் திறமையைப் பார்த்து தன்னிடம் ஒப்படைக்கும் நோக்கம் இல்லை என்று!
பாவம்! சரணுக்குத் தெரியாது... இன்றைய அதிகாரிகள் என்பவர்கள் அரசியல்வாதிகளின் கையில் உருளும் பகடைக்காய்கள். ஆனால் அது வீருக்கு நன்றாய் தெரிந்திருந்தது. அனுபவம் கற்றுத் தந்தப் பாடமாக இருக்கலாம்.
தமிழச்சி அப்போது தன் தந்தையிடம், “அம்மாவையும் உங்களையும் இந்த நிலைமையில விட்டுட்டு நான் எப்படி உடனே போய் டியூட்டில ஜாயின் பண்ண முடியும்... அதுவும் அண்ணாவும் உங்க கூட இல்லாத நேரத்துல” என்று சொல்ல,
“உங்க அப்பாவைப் பார்த்தா உனக்கு அவ்வளவு பலவீனமா தெரியுதா தமிழச்சி?!” என்று கேட்டார்.
“ஐயோ! டேட் நான் அப்படி சொல்லல “
“நான் கூட இருக்கற வரைக்கும் உங்க அம்மாவுக்கு எதுவும் ஆகாது... எதுவும் ஆக விடமாட்டேன்... நீ சீக்கிரமா ரெக்கவராகி டியூட்டில ஜாயின் பண்ற வழிய பாரு... இல்லாட்டிப் போனா... உன்கிட்ட இருந்து இந்தப் பொறுப்பை வாங்கிடுவாங்க... அதுக்காகவே காத்துகிட்டு இருக்காங்க”
அவள் தன் தந்தையின் முகத்தை வியப்பாய் பார்க்க அவர் மேலும், “உங்க அம்மாவை நான் கல்யாணம் பண்ணிக்கிட்ட நேரத்துல... நான் சிலைக் கடத்தல் சம்பந்தமா ஒரு வழக்கு விசாரிச்சிட்டு இருந்தேன்” என்றார்.
“யா... அதைப் பத்தி நான் கேள்விபட்டிருக்கேன்... அது விஷயமா டீடைல்ஸ் வாங்கலாம்னுதான் ரகு சித்தப்பாவைப் பார்க்க அன்னைக்கு அவர் வீட்டுக்கே போனேன்”
“தெரியும்... ரகு சொன்னான்... அந்த கேஸ்ல நான் கடத்தப்பட இருந்த நிறைய சிலைகளை மீட்டேன்... கடைசியா அந்த க்ரைம் நெட்வொர்கை ஆப்ரெட் பண்றவனை நான் நெருங்கற சமயத்துல எனக்கு பிரமோஷன் கொடுத்து என்னைச் சிலைக் கடத்தல் பிரிவில இருந்து தூக்கிடாங்க... ஜஸ்ட் மிஸ்ல எல்லாம் என் கையை விட்டுப் போயிடுச்சு... அதுக்கப்புறம் நான் கண்டுபிடிச்ச குற்றவாளிகளுக்குக் கூட பெரிய தண்டனைக் கிடைக்கல
இன்னும் அந்த நெட்வொர்க் ஆப்ரெட் ஆகிட்டுதான் இருக்கு... கண்ணுக்குத் தெரியாம நிறைய சிலைகள் வருஷா வருஷம் காணாம போயிட்டுதான் இருக்கு... இன்னும் கேட்டா நம்ம ஊர் கோவில்கள்ல இருக்கப் பல சிலைகளைப் போலிகளா மாத்திட்டாங்க... இதுல மோசமான விஷயம் என்னன்னா நம்ம நாட்டுப் பொக்கிஷங்களைக் கடத்தறது பெரிய குற்றமா கூட பார்க்கப் படல... மினிமம் ஆறு மாசம்தான் தண்டனை... சிலைக் கடத்தல்கள் பத்தி உங்க அம்மாவும் ஆதியும் அவங்கப் பத்திரிக்கையில இன்னமும் எழுதிட்டுதான் இருக்காங்க... ஆனா அந்தக் கடத்தல் நெட்வொர்க்கை ஒன்னுமே பண்ண முடியலேயே” என்றவர் வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருக்க,
“டோன்ட் வொர்ரி டேட்... இந்தக் கடத்தல் வேலையைச் செஞ்சிட்டிருக்கவன் எந்த நாட்டுல இருந்தாலும் அவன் எந்த நாட்டுக்காரனா இருந்தாலும் சரி... நான் அவனைப் பிடிச்சுக் காட்டுறேன்”என்று அவள் திடமாய் உரைத்தாள்.
“அது அவ்வளவு சுலபம் இல்ல தமிழச்சி”
“நீங்க இந்த வார்த்தையை வீர் பொண்ணுகிட்ட சொல்லக் கூடாது” என்றாள் அவள். அந்தக் கணம் வீரின் விழிகளில் பெருமிதம் மின்னியது.
5