மோனிஷா நாவல்கள்
Kadhal sirai -3
Quote from bhagyasivakumar on April 5, 2021, 12:35 PM
அறையில் அமர்ந்தபடி அழுதுக்கொண்டு இருந்தாள் அருந்ததி. காயத்ரியும் அருந்ததியும் ஒரே அறையை தான் பகிர்ந்து கொள்வர் வழக்கமாக . இன்றும் அதேபோல் எதர்ச்சையாக அறைக்கதவை திறந்து உள்ளே வந்தாள் காயத்ரி.
"ஏய் அருந்ததி என்ன நீ அழுதுட்டு இருக்க" என்று வினவியதும் தன் அழுகையை முழுங்கிவிட்டு
"ஒன்னுல காயூ கொஞ்சம் தலை வலிக்குது அதான் வலியில் கண்கலங்குது" என்றாள் பொய்யான ஒரு காரணத்தை.
"அச்சோ அப்படினா காபி போட்டு எடுத்துட்டு வரவா"என்று கரிசனமாய் கேட்கவும் அவள் மனதில் இருந்த பாரமெல்லாம் இறங்கியது. ஆனால் அவள் மனசு அவளுக்கு தானே தெரியும்.
திருமணம் என்ற பெயரில் இந்த வீட்டை விட்டு பிரிய மனமும் இல்லை முக்கியமாக பரிட்சயம் இல்லாத ஒருவருடன் வாழ விருப்பமும் இல்லை. இது தான் இவள் அழுகைக்கு காரணம். ஆனால் இதை யாரிடமும் சொல்ல மனமில்லை. சொன்னாலும் யாரும் புரிந்துக்கொள்ள போவதுமில்லை. பிறகு ஏன் சொல்லணும். சரி பெண் பார்க்க வரட்டும். மற்றவை பிறகு பார்ப்போம் என்றபடி அன்றைய நாளை கழித்தாள்.
மறுநாள் சூரியன் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது. ரொம்ப நாள் கழித்து சுளிரென்ற வெயில். எல்லோரும் எழுந்து அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருவதாக தகவல் வந்தது.
"சந்திரலேகா சீக்கிரம் அருந்ததியை தயார் பண்ணுங்க மாப்பிள்ளை வீட்டார் வராங்களாம்" என்று அகிலாண்டேஷ்வரி சொன்னவுடனே தலைகால் புரியவில்லை...
"அடியேய் அருந்ததி சீக்கிரம் இந்த பட்டுப்புடவையும் நகையும் போடு" என்று சந்திரலேகா அவளை அழைத்துக்கொண்டு அறைக்குச் செல்ல அவளோ ஆர்வம் இல்லாதவளாய்
"மா எதுக்கு இவ்வளவு அலங்காரம் நான் சிம்பிளா இருக்கேனே" என்றவுடன்.
"லூசா டி நீ. பொண்ணு பார்க்க வரப்போ சிம்பிளாவா இருப்பாங்க" என்று திட்டிவிட்டு அவளை தயார் செய்தார். வெளியே வரும்போது தங்கச்சிலைப்போல் ஜொலிக்கும் அவளை எல்லோரும் பார்த்தனர்.
"அருந்ததி இம்புட்டு அழகா தெரியுறாளே. மாப்பிள்ளை உடனே ஓகே சொல்லிடுவாறு" என்று கிண்டலடித்தனர்.
"இந்த சேலை உனக்கு சூப்பரா இருக்கு அருந்ததி " என்று கதிர் சொன்னவுடனே அவனை ஏறிட்டவள்.
"தாங்க்ஸ் கதிர் மாமா" என்றாள் உற்சாகமாய்.
அவனும் புன்னகையித்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். ஆனால் என்னவோ தெரியவில்லை கதிர் என்ன சொன்னாலும் அருந்ததியிற்கு பிடித்துபோயிற்று. சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து சேர்ந்தனர்.
அருந்ததி கையில் காபி ட்ரேவுடன் அழைத்துவரப்பட்டு அனைவருக்கும் கொடுக்கும்படி சொல்லவே அவளும் யாரையும் எதிர்நோக்காமல் குனிந்த தலையுடன் வந்தாள். காபியை பரிமாறினாள்.
"ஏய் மாப்பிள்ளை சூப்பர்" என்று அருந்ததியின் காதோரம் கவியரசி உச்சரிக்க இவளோ எதையோ சொல்லி முணுமுணுத்தாள்.
அதற்குள் "நான் பொண்ணு கிட்ட தனியாக பேசணும்" என்றது மாப்பிள்ளையின் குரல்.
ஐயோ கடவுளே இது என்ன சோதனை அவர் கிட்ட நான் என்ன சொல்றது என்று விழிக்க அதற்குள் பெரியவர்கள் "எதுவாக இருந்தாலும் நேரடியாக கேளுங்க தனியா எதுவும் பேசவேண்டாம்" என்றதும் மாப்பிள்ளை அமைதியை கடைப்பிடித்தான்.
"சுத்தம் இந்த பெருசுங்க பண்ற வேலை இருக்கே" என்று சலித்துக்கொண்டான் கதிர். அது எப்படியோ அருந்ததி காதுகளில் எட்டிவிட அவள் நகைத்தாள்.
பிறகு மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் கிளம்பினர். சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது. அருந்ததியிடம் கதிரோ...
"அருந்ததி உன் கிட்ட கொஞ்சம் பேசணும் பின்னாடி தோட்டத்துக்கு வா" என்று அழைத்துவிட்டு நகர்ந்தான்.
அவளும் ஆர்வமாக சென்றாள். அவனோ அங்கிருக்கும் செம்பருத்தி செடியை வருடியவாறு நின்றிருந்தான்.
"கதிர்,....சாரி சாரி கதிர் மாமா ஏன் என்னை கூப்டிங்க" என்றதும்."அருந்ததி உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா" என்று விட்டென்று கேட்டுவிட்டான்.
"ம்ம்க்கும் நான் மாப்பிள்ளையை சரியா பார்த்திருந்தால் தானே பிடிச்சிருக்கா இல்லையானு சொல்லமுடியும்" என்றாள் சிரித்துக்கொண்டே.
"அடியேய் நடக்கப்போகிறது உன் கல்யாணம். இப்படி பதில் சொல்ற"என்று அவன் கேட்க.
"எப்படியோ எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை. பெரியவங்களுக்காக பண்ணிக்கபோகிற பொம்மை கல்யாணம். இதுக்கு ஏன் நான் மாப்பிள்ளை முகத்தை பார்க்கணும்" என்று வேண்டாய் வெறுப்பாக பதில் சொன்னவுடன் அவனுக்கு ஒருமாதிரி ஆயிற்று.
"சரி மாப்பிள்ளை கிட்ட போன்ல பேசுறீயா நான் வேணும்னா கால்பண்ணி தரேன்" என்றதும்.
"அட அதெல்லாம் வேண்டாம் கதிர்மாமா." என்றதும் அவனும் சரியென அப்படியே விட்டுவிட்டான்.
"கதிர்மாமா உனக்கு ஏன் என்மேல இவ்வளவு அக்கறை" என்றதும்.
"இருக்கக்கூடாதா? உன்னை சின்னவயசுல இருந்தே பார்த்துட்டு வரேன். ஒன்னா விளையாடிருக்கோம் பேசியிருக்கோம். இந்த அக்கறை கூட இல்லாமல் போனால் எப்படி சொல்லு. என்றான்.
அதற்குள் அகிலாண்டேஷ்வரி வந்துவிட்டார். "என்ன கதிர் என்ன சொல்றா உன் அத்தை பொண்ணு. மாப்பிள்ளை பிடிச்சிருக்கா" என்று கேட்க...
"ம்ம்ம் மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கான்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
அருந்ததியும் "சரிங்க மாமி நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்" என்று சென்று மறைந்தாள்.
இப்படியே நாட்களும் நகர்ந்தது.
விடிந்தால் நம்ப அருந்ததியிற்கு கல்யாணம். மண்டபம் முழுவதும் உறவினர்களின் கூச்சல் சத்தம். இன்னொரு பக்கம் மண்டப அலங்காரம். எல்லாம் கலைகட்டியது.
பொதுவாக கல்யாண கனவுகளில் மணப்பெண்ணுக்கு உறக்கம் வராது ஆனால் அருந்ததியிற்கு இந்த வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற வருத்தத்திலேயே உறக்கம் வரவில்லை.யாரிடமாவது மனசு விட்டு பேசணும் போல இருந்தது. தனது மொபைலில் மூழ்கியிருந்தான் கதிர். ரொம்ப நாள் கழித்து ஷில்பாவிடம் உரையாடல்.
"ஷில்பா நாளைக்கு நீயும் கல்யாணத்துக்கு வாயேன்" என்றான்.
"இல்லை கதிர் , எனக்கு ஒருமாதிரி இருக்கு . நான் வந்தா எல்லாரும் ஒருமாதிரி வேண்டாவெறுப்பா பார்ப்பார்கள்" என்றுரைக்க அவனும் அதை புரிந்துக்கொண்டு உரையாடலை விலக்கிவிட்டு எதர்ச்சையாக அருந்ததி ஆன்லைனில் இருப்பதை பார்த்தான்.
"அருந்ததி விடிந்தால் கல்யாணம் இப்படி தூங்காமல் இருந்தால் என்னத்துக்கு ஆகும் பேசாமல் தூங்கு" என்றான்.
"தூக்கம் எங்கே வருது" என்று பதிலளித்தாள்.
"ஏன் என்ன ஆச்சு" என்றதும்.
"ஆகுறதுக்கு ஒன்னுமில்லை ஓகே பை" என்று சொல்ல இவனும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டான். மறுநாள் காலை விடிந்ததும் மணமக்களுக்கு எண்ணெய் நிலங்கு வைக்கப்பட்டது. பிறகு அவர்கள் இருவரும் அவரவர் அறையில் தயாராக சென்றனர்.
முஹுர்த்தம் நேரமும் நெருங்கிக்கொண்டே இருந்தது. மாப்பிள்ளையோ "நான் தயாராகி வரேன் " என்று உரைத்துவிட்டு தாழிட்டு கொண்டான். நேரம் நெருங்க நெருங்க மாப்பிள்ளை கதவை திறக்கவேயில்லை. எவ்வளவு முயன்றும் கதவை திறக்க முடியவில்லை.
ஒருபுறம் மணக்கோலத்தில் அருந்ததி நின்றுகொண்டு இருந்தாள். இன்னொரு பக்கம் இந்த ஆர்ப்பாட்டம் வேறு. ஒருவழியாக கதவை திறந்து உள்ளே நுழைய அங்கு ஒரு கடிதம் இருந்தது...
கடிதத்தின் மேலே " இந்த கடிதம் அருந்ததியிடம் தரவும்" என்று எழுதியிருக்கவே அதை அவளிடம் ஒப்படைத்தனர். அவளுக்கு ஒருவித உடல்நடுக்கம். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரியாமல் தவித்துக்கொடண்டிருந்தாள்.
ஒருவழியாக கடிதத்தை பிரித்து பார்த்தாள்.
'அன்புள்ள அருந்ததி,
என்னை மன்னிச்சிரு. நான் பண்ணது பெரிய தப்பு தான் ஆனால் என் சூழ்நிலை அந்தமாதிரி. நான் ஒரு பெண்ணை விரும்புறேன். உன்னை கல்யாணம் செஞ்சிகிட்டு உன்னையும் என்னையும் ஏமாதிட்டு என்னால வாழவே முடியாது. எனக்கு என் காதலை வாழவைக்கிறது தான் முக்கியம். நான் என் காதலியை கைப்பிடிக்க போறேன். உன்னை மணக்கோலத்தில் நிக்க வச்சு அசிங்கபடுத்த கூடாதுனு பெண்பார்க்கும் அன்றே தனியா பேசணும் என்று சொன்னேன். ஆனால் பெரியவர்கள் விடவேயில்லை. அதானால இன்னைக்கு இப்படி ஒரு நிலை உனக்கு வந்ததற்கு என்னை மன்னிக்கவும்.இந்த கடிதத்தை படித்து முடிக்கும்போதே கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்ட ஆரம்பித்தது. எல்லோரும் அந்த கடிதத்தை வாங்கி படித்து அதிர்ந்து கலங்கிபோயினர். சண்முகம் தாத்தா நெஞ்சை பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.
"ஐயோ என் பேத்திக்கு இப்படி ஒரு நிலமையா...இப்ப நான் என்ன செய்வேன்"என்று பரிதவித்து போனார்
நடக்கும் சூழ்நிலை ஒவ்வொன்றும் சுற்றி இருந்த உறவினர்கள் பார்த்துக்கொண்டு இருந்தனர்."கதிர் ஒரு நிமிஷம் என் கூட வா" என்று விருதாச்சலம் அழைத்தார். ஒன்றும் புரியாமல் அவர் பின்னே சென்றான் கதிர். அறைக்கதவை தாழிட்டு பேசத்துவங்கினார்.
"கதிர் நான் சொன்னா கேப்பியா மாட்டியா" என்று வினவினார் அவர் வினவியதும் அவர் என்ன கேட்கப்போகிறார் என்பது ஒரளவு யூகிக்க முடிந்தது என்றாலும் அமைதியாக இருந்தான்.
"உன்னை தான் கதிர்" என்று உலுக்கினார்.
"அப்பா நீங்க என்ன சொல்ல வறீங்க" என்க...
"நடக்கிறது எல்லாம் உனக்கு புரியுது தானே? மாப்பிள்ளை கடிதம் எழுதிவச்சிட்டு எங்கே போனானே தெரியல. கல்யாணம் நின்றுச்சு. இப்ப சண்முகம் தாத்தா மனசு உடைஞ்சு போயிட்டாரு. ஒருபக்கம் மணக்கோலத்தில் அருந்ததி அழுதுகொண்டே இருக்காள். இன்னொரு பக்கம் உறவினர்கள் எகத்தாளம் பேச்சு. என்னை பண்றதுனு சுத்தமா புரியல.." என்றவுடன்...
"பா,கல்யாணத்தை நிப்பாட்டி நம்ம எல்லாரும் வீட்டுக்கு கிளம்பலாம் பா,வேற ஒரு மாப்பிள்ளை நம்ம அருந்ததிக்கு கிடைக்க மாட்டாங்களா என்ன. முதல்ல மண்டபம் காலி பண்ணுவோம்" என்றவனை ஏறிட்டார் விருதாச்சலம்.
"தெரிந்து தான் பேசுறீயா கதிர். இது ஒரு பொண்ணோட வாழ்க்கை கொஞ்சம் யோசி" என்றதும்.
"பா,அதுக்கு நான் என்ன பண்ணமுடியும் சொல்லுங்கள்" என்றான் கவலையாக...
"உன்னால மட்டும் தான் இப்ப நம்ம குடும்பம் மானத்தை காப்பாற்ற முடியும். நம்ம அருந்ததியிற்கு வாழ்க்கை தரமுடியும். இப்படி நடந்தால் இப்ப அழுதுட்டு நிக்கிற எல்லார் முகமும் சந்தோஷம் அடையும். ப்ளீஸ் கதிர்... நீ அருந்ததியை கல்யாணம் பண்ணிக்க" என்று தழுதழுத்த குரலில் கூறினார்.
"என்ன" என்று அதிர்ந்து பார்த்தான் கதிர் .
அடுத்த என்ன முடிவு எடுப்பான் கதிர்.
அறையில் அமர்ந்தபடி அழுதுக்கொண்டு இருந்தாள் அருந்ததி. காயத்ரியும் அருந்ததியும் ஒரே அறையை தான் பகிர்ந்து கொள்வர் வழக்கமாக . இன்றும் அதேபோல் எதர்ச்சையாக அறைக்கதவை திறந்து உள்ளே வந்தாள் காயத்ரி.
"ஏய் அருந்ததி என்ன நீ அழுதுட்டு இருக்க" என்று வினவியதும் தன் அழுகையை முழுங்கிவிட்டு
"ஒன்னுல காயூ கொஞ்சம் தலை வலிக்குது அதான் வலியில் கண்கலங்குது" என்றாள் பொய்யான ஒரு காரணத்தை.
"அச்சோ அப்படினா காபி போட்டு எடுத்துட்டு வரவா"என்று கரிசனமாய் கேட்கவும் அவள் மனதில் இருந்த பாரமெல்லாம் இறங்கியது. ஆனால் அவள் மனசு அவளுக்கு தானே தெரியும்.
திருமணம் என்ற பெயரில் இந்த வீட்டை விட்டு பிரிய மனமும் இல்லை முக்கியமாக பரிட்சயம் இல்லாத ஒருவருடன் வாழ விருப்பமும் இல்லை. இது தான் இவள் அழுகைக்கு காரணம். ஆனால் இதை யாரிடமும் சொல்ல மனமில்லை. சொன்னாலும் யாரும் புரிந்துக்கொள்ள போவதுமில்லை. பிறகு ஏன் சொல்லணும். சரி பெண் பார்க்க வரட்டும். மற்றவை பிறகு பார்ப்போம் என்றபடி அன்றைய நாளை கழித்தாள்.
மறுநாள் சூரியன் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது. ரொம்ப நாள் கழித்து சுளிரென்ற வெயில். எல்லோரும் எழுந்து அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருவதாக தகவல் வந்தது.
"சந்திரலேகா சீக்கிரம் அருந்ததியை தயார் பண்ணுங்க மாப்பிள்ளை வீட்டார் வராங்களாம்" என்று அகிலாண்டேஷ்வரி சொன்னவுடனே தலைகால் புரியவில்லை...
"அடியேய் அருந்ததி சீக்கிரம் இந்த பட்டுப்புடவையும் நகையும் போடு" என்று சந்திரலேகா அவளை அழைத்துக்கொண்டு அறைக்குச் செல்ல அவளோ ஆர்வம் இல்லாதவளாய்
"மா எதுக்கு இவ்வளவு அலங்காரம் நான் சிம்பிளா இருக்கேனே" என்றவுடன்.
"லூசா டி நீ. பொண்ணு பார்க்க வரப்போ சிம்பிளாவா இருப்பாங்க" என்று திட்டிவிட்டு அவளை தயார் செய்தார். வெளியே வரும்போது தங்கச்சிலைப்போல் ஜொலிக்கும் அவளை எல்லோரும் பார்த்தனர்.
"அருந்ததி இம்புட்டு அழகா தெரியுறாளே. மாப்பிள்ளை உடனே ஓகே சொல்லிடுவாறு" என்று கிண்டலடித்தனர்.
"இந்த சேலை உனக்கு சூப்பரா இருக்கு அருந்ததி " என்று கதிர் சொன்னவுடனே அவனை ஏறிட்டவள்.
"தாங்க்ஸ் கதிர் மாமா" என்றாள் உற்சாகமாய்.
அவனும் புன்னகையித்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். ஆனால் என்னவோ தெரியவில்லை கதிர் என்ன சொன்னாலும் அருந்ததியிற்கு பிடித்துபோயிற்று. சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து சேர்ந்தனர்.
அருந்ததி கையில் காபி ட்ரேவுடன் அழைத்துவரப்பட்டு அனைவருக்கும் கொடுக்கும்படி சொல்லவே அவளும் யாரையும் எதிர்நோக்காமல் குனிந்த தலையுடன் வந்தாள். காபியை பரிமாறினாள்.
"ஏய் மாப்பிள்ளை சூப்பர்" என்று அருந்ததியின் காதோரம் கவியரசி உச்சரிக்க இவளோ எதையோ சொல்லி முணுமுணுத்தாள்.
அதற்குள் "நான் பொண்ணு கிட்ட தனியாக பேசணும்" என்றது மாப்பிள்ளையின் குரல்.
ஐயோ கடவுளே இது என்ன சோதனை அவர் கிட்ட நான் என்ன சொல்றது என்று விழிக்க அதற்குள் பெரியவர்கள் "எதுவாக இருந்தாலும் நேரடியாக கேளுங்க தனியா எதுவும் பேசவேண்டாம்" என்றதும் மாப்பிள்ளை அமைதியை கடைப்பிடித்தான்.
"சுத்தம் இந்த பெருசுங்க பண்ற வேலை இருக்கே" என்று சலித்துக்கொண்டான் கதிர். அது எப்படியோ அருந்ததி காதுகளில் எட்டிவிட அவள் நகைத்தாள்.
பிறகு மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் கிளம்பினர். சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது. அருந்ததியிடம் கதிரோ...
"அருந்ததி உன் கிட்ட கொஞ்சம் பேசணும் பின்னாடி தோட்டத்துக்கு வா" என்று அழைத்துவிட்டு நகர்ந்தான்.
அவளும் ஆர்வமாக சென்றாள். அவனோ அங்கிருக்கும் செம்பருத்தி செடியை வருடியவாறு நின்றிருந்தான்.
"கதிர்,....சாரி சாரி கதிர் மாமா ஏன் என்னை கூப்டிங்க" என்றதும்.
"அருந்ததி உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா" என்று விட்டென்று கேட்டுவிட்டான்.
"ம்ம்க்கும் நான் மாப்பிள்ளையை சரியா பார்த்திருந்தால் தானே பிடிச்சிருக்கா இல்லையானு சொல்லமுடியும்" என்றாள் சிரித்துக்கொண்டே.
"அடியேய் நடக்கப்போகிறது உன் கல்யாணம். இப்படி பதில் சொல்ற"என்று அவன் கேட்க.
"எப்படியோ எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை. பெரியவங்களுக்காக பண்ணிக்கபோகிற பொம்மை கல்யாணம். இதுக்கு ஏன் நான் மாப்பிள்ளை முகத்தை பார்க்கணும்" என்று வேண்டாய் வெறுப்பாக பதில் சொன்னவுடன் அவனுக்கு ஒருமாதிரி ஆயிற்று.
"சரி மாப்பிள்ளை கிட்ட போன்ல பேசுறீயா நான் வேணும்னா கால்பண்ணி தரேன்" என்றதும்.
"அட அதெல்லாம் வேண்டாம் கதிர்மாமா." என்றதும் அவனும் சரியென அப்படியே விட்டுவிட்டான்.
"கதிர்மாமா உனக்கு ஏன் என்மேல இவ்வளவு அக்கறை" என்றதும்.
"இருக்கக்கூடாதா? உன்னை சின்னவயசுல இருந்தே பார்த்துட்டு வரேன். ஒன்னா விளையாடிருக்கோம் பேசியிருக்கோம். இந்த அக்கறை கூட இல்லாமல் போனால் எப்படி சொல்லு. என்றான்.
அதற்குள் அகிலாண்டேஷ்வரி வந்துவிட்டார். "என்ன கதிர் என்ன சொல்றா உன் அத்தை பொண்ணு. மாப்பிள்ளை பிடிச்சிருக்கா" என்று கேட்க...
"ம்ம்ம் மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கான்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
அருந்ததியும் "சரிங்க மாமி நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்" என்று சென்று மறைந்தாள்.
இப்படியே நாட்களும் நகர்ந்தது.
விடிந்தால் நம்ப அருந்ததியிற்கு கல்யாணம். மண்டபம் முழுவதும் உறவினர்களின் கூச்சல் சத்தம். இன்னொரு பக்கம் மண்டப அலங்காரம். எல்லாம் கலைகட்டியது.
பொதுவாக கல்யாண கனவுகளில் மணப்பெண்ணுக்கு உறக்கம் வராது ஆனால் அருந்ததியிற்கு இந்த வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற வருத்தத்திலேயே உறக்கம் வரவில்லை.
யாரிடமாவது மனசு விட்டு பேசணும் போல இருந்தது. தனது மொபைலில் மூழ்கியிருந்தான் கதிர். ரொம்ப நாள் கழித்து ஷில்பாவிடம் உரையாடல்.
"ஷில்பா நாளைக்கு நீயும் கல்யாணத்துக்கு வாயேன்" என்றான்.
"இல்லை கதிர் , எனக்கு ஒருமாதிரி இருக்கு . நான் வந்தா எல்லாரும் ஒருமாதிரி வேண்டாவெறுப்பா பார்ப்பார்கள்" என்றுரைக்க அவனும் அதை புரிந்துக்கொண்டு உரையாடலை விலக்கிவிட்டு எதர்ச்சையாக அருந்ததி ஆன்லைனில் இருப்பதை பார்த்தான்.
"அருந்ததி விடிந்தால் கல்யாணம் இப்படி தூங்காமல் இருந்தால் என்னத்துக்கு ஆகும் பேசாமல் தூங்கு" என்றான்.
"தூக்கம் எங்கே வருது" என்று பதிலளித்தாள்.
"ஏன் என்ன ஆச்சு" என்றதும்.
"ஆகுறதுக்கு ஒன்னுமில்லை ஓகே பை" என்று சொல்ல இவனும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டான். மறுநாள் காலை விடிந்ததும் மணமக்களுக்கு எண்ணெய் நிலங்கு வைக்கப்பட்டது. பிறகு அவர்கள் இருவரும் அவரவர் அறையில் தயாராக சென்றனர்.
முஹுர்த்தம் நேரமும் நெருங்கிக்கொண்டே இருந்தது. மாப்பிள்ளையோ "நான் தயாராகி வரேன் " என்று உரைத்துவிட்டு தாழிட்டு கொண்டான். நேரம் நெருங்க நெருங்க மாப்பிள்ளை கதவை திறக்கவேயில்லை. எவ்வளவு முயன்றும் கதவை திறக்க முடியவில்லை.
ஒருபுறம் மணக்கோலத்தில் அருந்ததி நின்றுகொண்டு இருந்தாள். இன்னொரு பக்கம் இந்த ஆர்ப்பாட்டம் வேறு. ஒருவழியாக கதவை திறந்து உள்ளே நுழைய அங்கு ஒரு கடிதம் இருந்தது...
கடிதத்தின் மேலே " இந்த கடிதம் அருந்ததியிடம் தரவும்" என்று எழுதியிருக்கவே அதை அவளிடம் ஒப்படைத்தனர். அவளுக்கு ஒருவித உடல்நடுக்கம். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரியாமல் தவித்துக்கொடண்டிருந்தாள்.
ஒருவழியாக கடிதத்தை பிரித்து பார்த்தாள்.
'அன்புள்ள அருந்ததி,
என்னை மன்னிச்சிரு. நான் பண்ணது பெரிய தப்பு தான் ஆனால் என் சூழ்நிலை அந்தமாதிரி. நான் ஒரு பெண்ணை விரும்புறேன். உன்னை கல்யாணம் செஞ்சிகிட்டு உன்னையும் என்னையும் ஏமாதிட்டு என்னால வாழவே முடியாது. எனக்கு என் காதலை வாழவைக்கிறது தான் முக்கியம். நான் என் காதலியை கைப்பிடிக்க போறேன். உன்னை மணக்கோலத்தில் நிக்க வச்சு அசிங்கபடுத்த கூடாதுனு பெண்பார்க்கும் அன்றே தனியா பேசணும் என்று சொன்னேன். ஆனால் பெரியவர்கள் விடவேயில்லை. அதானால இன்னைக்கு இப்படி ஒரு நிலை உனக்கு வந்ததற்கு என்னை மன்னிக்கவும்.
இந்த கடிதத்தை படித்து முடிக்கும்போதே கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்ட ஆரம்பித்தது. எல்லோரும் அந்த கடிதத்தை வாங்கி படித்து அதிர்ந்து கலங்கிபோயினர். சண்முகம் தாத்தா நெஞ்சை பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.
"ஐயோ என் பேத்திக்கு இப்படி ஒரு நிலமையா...இப்ப நான் என்ன செய்வேன்"என்று பரிதவித்து போனார்
நடக்கும் சூழ்நிலை ஒவ்வொன்றும் சுற்றி இருந்த உறவினர்கள் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
"கதிர் ஒரு நிமிஷம் என் கூட வா" என்று விருதாச்சலம் அழைத்தார். ஒன்றும் புரியாமல் அவர் பின்னே சென்றான் கதிர். அறைக்கதவை தாழிட்டு பேசத்துவங்கினார்.