மோனிஷா நாவல்கள்
kadhal sirai -4
Quote from bhagyasivakumar on April 9, 2021, 1:11 PM
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே விவாதங்கள் ஓய்ந்தன கதவைத்திறந்தவுடன் வெளியே வேட்டிச்சட்டையுடன் கதிர் வெளியே வந்தான். அனைவர் முகத்திலும் குழப்பம் கலந்த ஒருவித தவிப்பு.
"நடக்கிறது எதுவும் புரியலையே" என்று ஒருசிலர் கிசுகிசுத்தனர். உடனே விருதாச்சலம் மேடையில் நின்றவாறு
"யாரும் மண்டபம் விட்டு கிளம்பாதிங்க. இந்த கல்யாணம் நடக்கும். மணமக்களை வாழ்த்திட்டு போங்க" என்று சொல்லி கதிரை மணமேடையில் அமரச்சொன்னார்."சந்திரலேகா பொண்ணை அழைச்சிட்டு வா" என்று விருதாச்சலம் அழைத்தார்.
அருந்ததியிற்கு நடப்பது எல்லாம் கனவா என்பதுபோல் திகைத்து நின்றாள். மகளை கைப்பிடித்து அழைத்து வந்து கதிர் பக்கத்தில் அமரவைத்தார் சந்திரலேகா.
"அண்ணே உனக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியல" என்றாள் சந்திரலேகா.
"அதெல்லாம் விடு லேகா கல்யாணம் முதல்ல நல்லபடியா முடியட்டும்" என்று சொல்லிவிட்டு ஐயரை மந்திரம் ஓதுவதற்கு கட்டளையிட அவ்வாறே எல்லாம் சிறப்பாக நடந்தது.
அவளது சங்குகழுத்தில் திருமாங்கல்யம் ஏறியது. தனது திருமாங்கல்யத்தை ஒருமுறை தொட்டு ஸ்பரிசித்தாள் அருந்ததி. கண்களில் ஒற்றியவள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் கதிரை கண்டாள். அவனுடைய மனநிலையும் அவளுக்கு புரிந்தது. இவளுக்கும் இது திடிர் கல்யாணம் என்றாலும் இதுவரை யாரை தினந்தோறும் வீட்டில் பார்த்தோமோ அதே கதிர் தான் தன் கணவன் என்பதை அவளால் நம்பமுடியவில்லை ...
'எல்லாம் கனவா நிஜமா' என்று மனதிற்குள் நினைத்தவாறு அவனருகே அமர்ந்திருந்தாள். கதிரால் இயல்பாக இருக்கமுடியவில்லை. இது என்ன திடிர் கல்யாணம் சினிமாவில் நடப்பது போல் என்று அவன் மனதில் தோன்றியது. அவளை ஏறெடுத்து ஒருமுறை பார்த்தான்.
அவளும் அவனை எதிர்நோக்கினாள் நன்றி பார்வையுடன்.
"நன்றி கதிர்மாமா" என்றாள் சட்டென்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி.அவனால் பதிலளிக்க இயலவில்லை. என்ன சொல்வான் அவன். பரவாயில்லை இருக்கட்டும் என்று சொல்வதா. இந்த திடிர் கல்யாணத்தில் த்ரிப்தி இல்லை என்பதா என்ன அவளிடம் சொல்வது.
"அருந்ததி..." என்றான் கலங்கிய குரலில்.
"என்ன கதிர்மாமா?"என்க...
"உன்னோட லைப்ல நான் வருவேனு எதிர்பார்க்கல ஐயம் ரியலி சாரி".
இப்ப எதுக்கு இந்த சாரி என்பதுபோல் விழித்தாள். திருமணத்தில் நடைபெறும் எல்லா சாங்கியமும் நடந்தது. ஒருசில சம்பிரதாயம் தவிர...
கண்ணத்தில் அப்பளம் உடைப்பது இதுபோன்ற சம்பிரதாய விளையாட்டை தவிர்த்தனர். அதெல்லாம் செய்யும் மனநிலையில் யாரும் இல்லை.
"அருந்ததி நட்சத்திரம் பாருங்கோ" என்று ஐயர் சொன்னவுடனே.
"அருந்ததியிற்கே அருந்ததி காட்டுறீங்களா அண்ணே" என்று நக்கலடித்தாள் காயத்ரி. அப்போ தான் முகத்தில் சிரிப்பே வந்தது இருவருக்கும்.
சண்முகம் தாத்தா மணமக்களை இன்முகத்துடன் ஆசிர்வதித்தார். எல்லாம் நல்லபடியா நடந்து முடிந்ததும். மணமக்களை காரில் அழைத்துக்கொண்டு அனைவரும் சென்றனர்.
வீட்டு வாசலில் இருவரையும் நிக்க வைத்து ஆலம் சுற்றி எடுத்தனர். பரிட்சயம் ஆன வீடு என்பதால் எந்தவித தயக்கமும் இன்றி அருந்ததி வலது காலை எடுத்து உள்ளே நுழைந்தாள். பூஜையறையில் அவள் கையால் விளக்கேற்றி சாமி கும்பிட்டபிறகு இருவருக்கும் பால்பழம் கொடுக்கப்பட்டது.
கதிரிற்கு என்னடா இது என்பதுபோல் ஒருவித சோர்வுடன் அமர்ந்திருந்தான். பெரியதாக உற்சாகம் எதுவுமில்லை. இது அவன் பிறந்து வளர்ந்த வீடுதான். சிறுவயதிலிருந்தே தன்னுடன் விளையாடியவள் தான் அருந்ததி. ஆனால் மனைவி ஸ்தானத்தில் நினைத்துப்பார்க்க முடியவில்லை அவனால்.
பெரியவர்கள் ஏதோ கிசுகிசுத்தனர்.
"அவங்களுக்கு நடந்தது திடிர் கல்யாணம். முதல்ல ஒரு நல்ல மனநிலைக்கு இரண்டு பேரும் வரட்டும். அடுத்த வாரம் நல்ல நாளில் முதலிரவு ஏற்பாடு செய்வோம்" என்று அகிலாணாடேஷ்வரி கூற அப்படியே ஆகட்டும் என்று சந்திரலேகாவும் கூறினார்.கதிர் தன் அறைக்குள் நுழைய வழக்கம் போல் காயத்ரியுடன் அறைக்கு சென்றாள் அருந்ததி.
"என்ன காயூ எதையோ யோசிக்கிற" என்றாள் அருந்ததி.
"ஆக்சுவலி இன்று இரவு முதலிரவா இருக்கணுமே ஏன் வைக்கவில்லை" என்றவுடன்.
"ஹாஹா தெரியல பெரியவங்க அதைபற்றி எதுவும் சொல்லலை" என்றாள் அருந்ததி.
"இருக்கும். வேற நல்ல நாளில் ஏற்பாடு செய்வாங்க. ஏன்னா பாவம் யாரும் எதிர்பாராத கல்யாணம். உங்கள் இரண்டு பேர் மனநிலை புரிஞ்சிக்கிட்டு தான் இன்னைக்கு எதுவும் பண்ணல போல" என்றாள் காயூ.
இருவரும் உறக்கநிலைக்கு சென்றனர். அங்கு உறக்கம் வராமல் கதிர் தன் நெற்றியில் கைவைத்தபடி விழித்துக்கொண்டு இருந்தான். காலையில் நடந்தேறிய திருமணம் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான்.
'ஏன் இப்படி பண்ணாங்க பெரியவங்க. கல்யாணம் நின்னுபோயிடும்னு யார் இருக்காங்களோ அவங்கள புடிச்சு கட்டி வச்சிடுறதா.' என்று ஆனால் ஒருபுறம் இந்த கல்யாணம் அரங்கேறாமல் இருந்திருந்தால் அதனின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை யூகித்தான்.
'சரி நடந்தது நடந்துருச்சு இனி எதையும் மாற்ற முடியாது. அதற்காக உடனே அவள்கூட வாழ்க்கையை ஆரம்பிக்கவும் முடியாது. கொஞ்ச நாள் போகட்டும் பிறகு பார்த்துப்போம். எப்படியோ முதலிரவு ஏற்பாடு எதுவும் பண்ணல அதுவரைக்கும் சந்தோஷம். என்று நினைத்தபடி கண்ணயர்தான் கதிர்.
மறுநாள் காலைப்பொழுதில் விரைவாக எழுந்து குளித்துமுடித்தவள்.
"மாமி, நான் கோவில் போயிட்டு வருகிறேன்" என்று அகிலாண்டேஷ்வரியிடம் சொன்னாள் அருந்ததி.
"போ மா ஆனால் தனியா போகவேண்டாம். இதோ கதிர் குளிச்சிட்டு வரட்டும் இரண்டுபேரும் சேர்ந்து போங்க" என்றவுடன் சரிங்க மாமி என்று காத்திருந்தாள்.
"டேய் கதிர் வந்துட்டியா,அருந்ததியை அழைச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வா" என்றதும்.
"இல்லை மா எனக்கு வேற வேலை இருக்கு" என்று பதிலளித்துவிட்டு விட்டென்று கிளம்பினான்.
"கதிர்...கதிர்மாமா.." என்று பின்னாடியே அருந்ததி செல்ல அதற்குள் அவனது இருசக்கர வாகனம் சத்தத்தை கிளப்பிக்கொண்டு அவனது கட்டுபாட்டில் சென்றது.
"ச்ச...என்ன இவரு" என்று ஒருவித சலிப்புடன் உள்ளே நுழைய...
"அம்மாடி எதுவும் தப்பா எடுத்துக்காத அவன் ஏதோ குழப்பமா இருக்கான். கொஞ்சம் பொறு எல்லாம் சரியாகிடும். சரி கோவிலுக்கு போகணும்னு சொன்னல காயத்ரியை அழைச்சிட்டு போ" என்க...
"ஐயோ நான் முடியாது. எனக்கு மூன்றாவது நாள் நான் போகமுடியாது" என்றதும்.
"யாரும் வேண்டாம் நான் போயிக்கிறேன்" என்றபடி நடந்துச்சென்றாள் அருந்ததி. ஒரு ஐந்து தெருக்கள் எட்டிபிடித்தால் அந்த பிள்ளையார் கோவில். இதற்கு துணையாம் துணை என்று மனதில் நினைத்தவாறு கோவிலினுள் நுழைந்தாள்.
"பிள்ளையாரப்பா" என்று சொல்லியவாறு தோப்புக்கரணம் போட்டுவிட்டு ஐயர் பூஜிப்பதை பார்த்துவிட்டு பிரகாரத்தை சுற்றினாள்.
என்னவோ தெரியவில்லை ஒருவித நிம்மதி அவளிடம் தென்பட்டது. ஆயிரம் கஷ்டங்கள் கட்டிடம் போல் எழுந்து நின்றாலும் கோவிலினுள் நுழைந்தால் தண்ணீர் போல துன்பங்கள் கரைந்தோடும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். அப்படித்தான் அருந்ததிக்கும். ஒருவித மகிழ்ச்சி ஏற்பட்டது.
கோவிலைவிட்டு வெளியே வந்தாள். வானம் மூடுவதுப்போல் இருந்தது.
'மழை வராப்புல இருக்கே' என்றவாறு நடந்து வந்துக்கொண்டிருக்க தற்செயலாக கதிர் வந்தான் வழியில்..."அ...அருந்ததி.."என்றான் அவள் பெயரை உச்சரித்தப்படி.
"கதிர்மாமா..." என்று பார்த்தாள் கேள்விகுறியாக.
"வா, வீட்டில் விட்டுடுறேன்" என்று அவளை அமர்த்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் நொடியில்.
"நல்ல வேளை மழை வராமல் இருந்துச்சு" என்று அவனிடம் சொல்ல...
"ம்ம்ம்... எதர்ச்சையாக உன்னை பார்த்தேன். சரி மழைல வந்தால் நனைஞ்சிக்கிட்டு வருவியேனு தான் பைக்ல அழைச்சிட்டு வந்தேன்" என்றபடி உள்ளே நுழைந்தான் பின்னால் அவளும் வர எல்லோரும் ஆச்சரியபார்வையுடன் எதிர்நோக்கினர்.
'போகும் போது சேர்ந்து போகல ஆனால் வரும்போது சேர்ந்து வராங்க. எப்படியோ இரண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தா சரிதான்' என்று சந்திரலேகா நினைத்துக்கொண்டு தன் வேலையை கவனித்தாள்.
நேரம் போய்கொண்டே இருந்தது. சமையலறையில் சமையலும் தடபுடலாக நடந்து முடிந்தது. கல்யாணம் ஆகி மறுநாள் இல்லையா அதான் அருசுவை உணவு புது திருமணஜோடிகளுக்காக தயாரிக்கப்படது.
வெறுமனே அமர்ந்திருக்க சற்று கடுப்பாக இருந்ததால் எழுந்து சமையலறைக்குள் நுழைந்தாள் அருந்ததி.
"கிச்சன் பக்கம் என்ன உத்தேசம்" என்றார் சந்திரலேகா ."லேகா இது என்ன கேள்வி, அவள் கல்யாணம் ஆனவ, இன்னும் சின்ன பொண்ணு இல்லை. வரட்டும் வந்து சமையல் கத்துகட்டும்" என்றார் மாமியார் தொனியில் நம் அகிலாண்டேஷ்வரி.
"சரிதான் அண்ணி நீங்க சொல்றது. அருந்ததி இந்தா அப்பளம் பொறி"என்று சந்திரலேகா மகளுக்கு கட்டளையிட...அவ்வாறே அருந்ததி செய்தாள்.
இவள் அப்பளம் பொறிக்கும்போது அருகில் அகிலாண்டேஷ்வரி குழம்பு தாளிக்க...
"அருந்ததி என் பையனை கட்டினதுல உனக்கு சந்தோஷம் தானே" என்று மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கேட்க..."அதெல்லாம் சந்தோஷம் தான் மாமி" என்று இன்முகத்துடன் சொல்ல..
"சரி சரி சீக்கிரமே உங்கள் இரண்டு பேருக்கும் முதலிரவு ஏற்பாடு பண்றேன். அவனை உன் வழிக்கு கொண்டு வருவது உன் பொறுப்பு" என்று புன்னகையித்தபடி கூற...
வெட்கத்தில் தலை குனிந்தப்படி தன் வேலையை பார்த்தாள் அருந்ததி. உணவு மேஜையில் எல்லாம் வைத்துவிட்டு அனைவரையும் அழைத்தனர். நீளவாக்கில் பாய் விரிக்கப்பட்டு அனைவரையும் அமரச்செய்தனர்.
"கதிர், நீ அருந்ததி பக்கத்தில் உக்காரு" என்றார் சண்முகம் தாத்தா.
மறுபேச்சு எதுவும் பேசாமல் அவளருகே அமர்ந்தான். உணவு பரிமாற ஆரம்பித்தார் அகிலாண்டேஷ்வரி.
"டேய் கதிர் இலையில் இருக்கும் ஸ்வீட் எடுத்து அருந்ததிக்கு ஊட்டி விடு" என்று அகிலாண்டேஷ்வரி சொல்ல..
"மா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்" என்று முறைத்தபடி சாப்பிட்டான்.
'ரொம்ப தான் பண்றாரு கதிர்மாமா 'என்று முணுமுணுத்தப்படி அருந்ததி சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
இவர்களின் உறவில் மாற்றம் வருமா? பார்ப்போம்.
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே விவாதங்கள் ஓய்ந்தன கதவைத்திறந்தவுடன் வெளியே வேட்டிச்சட்டையுடன் கதிர் வெளியே வந்தான். அனைவர் முகத்திலும் குழப்பம் கலந்த ஒருவித தவிப்பு.
"நடக்கிறது எதுவும் புரியலையே" என்று ஒருசிலர் கிசுகிசுத்தனர். உடனே விருதாச்சலம் மேடையில் நின்றவாறு
"யாரும் மண்டபம் விட்டு கிளம்பாதிங்க. இந்த கல்யாணம் நடக்கும். மணமக்களை வாழ்த்திட்டு போங்க" என்று சொல்லி கதிரை மணமேடையில் அமரச்சொன்னார்.
"சந்திரலேகா பொண்ணை அழைச்சிட்டு வா" என்று விருதாச்சலம் அழைத்தார்.
அருந்ததியிற்கு நடப்பது எல்லாம் கனவா என்பதுபோல் திகைத்து நின்றாள். மகளை கைப்பிடித்து அழைத்து வந்து கதிர் பக்கத்தில் அமரவைத்தார் சந்திரலேகா.
"அண்ணே உனக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியல" என்றாள் சந்திரலேகா.
"அதெல்லாம் விடு லேகா கல்யாணம் முதல்ல நல்லபடியா முடியட்டும்" என்று சொல்லிவிட்டு ஐயரை மந்திரம் ஓதுவதற்கு கட்டளையிட அவ்வாறே எல்லாம் சிறப்பாக நடந்தது.
அவளது சங்குகழுத்தில் திருமாங்கல்யம் ஏறியது. தனது திருமாங்கல்யத்தை ஒருமுறை தொட்டு ஸ்பரிசித்தாள் அருந்ததி. கண்களில் ஒற்றியவள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் கதிரை கண்டாள். அவனுடைய மனநிலையும் அவளுக்கு புரிந்தது. இவளுக்கும் இது திடிர் கல்யாணம் என்றாலும் இதுவரை யாரை தினந்தோறும் வீட்டில் பார்த்தோமோ அதே கதிர் தான் தன் கணவன் என்பதை அவளால் நம்பமுடியவில்லை ...
'எல்லாம் கனவா நிஜமா' என்று மனதிற்குள் நினைத்தவாறு அவனருகே அமர்ந்திருந்தாள். கதிரால் இயல்பாக இருக்கமுடியவில்லை. இது என்ன திடிர் கல்யாணம் சினிமாவில் நடப்பது போல் என்று அவன் மனதில் தோன்றியது. அவளை ஏறெடுத்து ஒருமுறை பார்த்தான்.
அவளும் அவனை எதிர்நோக்கினாள் நன்றி பார்வையுடன்.
"நன்றி கதிர்மாமா" என்றாள் சட்டென்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி.
அவனால் பதிலளிக்க இயலவில்லை. என்ன சொல்வான் அவன். பரவாயில்லை இருக்கட்டும் என்று சொல்வதா. இந்த திடிர் கல்யாணத்தில் த்ரிப்தி இல்லை என்பதா என்ன அவளிடம் சொல்வது.
"அருந்ததி..." என்றான் கலங்கிய குரலில்.
"என்ன கதிர்மாமா?"என்க...
"உன்னோட லைப்ல நான் வருவேனு எதிர்பார்க்கல ஐயம் ரியலி சாரி".
இப்ப எதுக்கு இந்த சாரி என்பதுபோல் விழித்தாள். திருமணத்தில் நடைபெறும் எல்லா சாங்கியமும் நடந்தது. ஒருசில சம்பிரதாயம் தவிர...
கண்ணத்தில் அப்பளம் உடைப்பது இதுபோன்ற சம்பிரதாய விளையாட்டை தவிர்த்தனர். அதெல்லாம் செய்யும் மனநிலையில் யாரும் இல்லை.
"அருந்ததி நட்சத்திரம் பாருங்கோ" என்று ஐயர் சொன்னவுடனே.
"அருந்ததியிற்கே அருந்ததி காட்டுறீங்களா அண்ணே" என்று நக்கலடித்தாள் காயத்ரி. அப்போ தான் முகத்தில் சிரிப்பே வந்தது இருவருக்கும்.
சண்முகம் தாத்தா மணமக்களை இன்முகத்துடன் ஆசிர்வதித்தார். எல்லாம் நல்லபடியா நடந்து முடிந்ததும். மணமக்களை காரில் அழைத்துக்கொண்டு அனைவரும் சென்றனர்.
வீட்டு வாசலில் இருவரையும் நிக்க வைத்து ஆலம் சுற்றி எடுத்தனர். பரிட்சயம் ஆன வீடு என்பதால் எந்தவித தயக்கமும் இன்றி அருந்ததி வலது காலை எடுத்து உள்ளே நுழைந்தாள். பூஜையறையில் அவள் கையால் விளக்கேற்றி சாமி கும்பிட்டபிறகு இருவருக்கும் பால்பழம் கொடுக்கப்பட்டது.
கதிரிற்கு என்னடா இது என்பதுபோல் ஒருவித சோர்வுடன் அமர்ந்திருந்தான். பெரியதாக உற்சாகம் எதுவுமில்லை. இது அவன் பிறந்து வளர்ந்த வீடுதான். சிறுவயதிலிருந்தே தன்னுடன் விளையாடியவள் தான் அருந்ததி. ஆனால் மனைவி ஸ்தானத்தில் நினைத்துப்பார்க்க முடியவில்லை அவனால்.
பெரியவர்கள் ஏதோ கிசுகிசுத்தனர்.
"அவங்களுக்கு நடந்தது திடிர் கல்யாணம். முதல்ல ஒரு நல்ல மனநிலைக்கு இரண்டு பேரும் வரட்டும். அடுத்த வாரம் நல்ல நாளில் முதலிரவு ஏற்பாடு செய்வோம்" என்று அகிலாணாடேஷ்வரி கூற அப்படியே ஆகட்டும் என்று சந்திரலேகாவும் கூறினார்.
கதிர் தன் அறைக்குள் நுழைய வழக்கம் போல் காயத்ரியுடன் அறைக்கு சென்றாள் அருந்ததி.
"என்ன காயூ எதையோ யோசிக்கிற" என்றாள் அருந்ததி.
"ஆக்சுவலி இன்று இரவு முதலிரவா இருக்கணுமே ஏன் வைக்கவில்லை" என்றவுடன்.
"ஹாஹா தெரியல பெரியவங்க அதைபற்றி எதுவும் சொல்லலை" என்றாள் அருந்ததி.
"இருக்கும். வேற நல்ல நாளில் ஏற்பாடு செய்வாங்க. ஏன்னா பாவம் யாரும் எதிர்பாராத கல்யாணம். உங்கள் இரண்டு பேர் மனநிலை புரிஞ்சிக்கிட்டு தான் இன்னைக்கு எதுவும் பண்ணல போல" என்றாள் காயூ.
இருவரும் உறக்கநிலைக்கு சென்றனர். அங்கு உறக்கம் வராமல் கதிர் தன் நெற்றியில் கைவைத்தபடி விழித்துக்கொண்டு இருந்தான். காலையில் நடந்தேறிய திருமணம் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான்.
'ஏன் இப்படி பண்ணாங்க பெரியவங்க. கல்யாணம் நின்னுபோயிடும்னு யார் இருக்காங்களோ அவங்கள புடிச்சு கட்டி வச்சிடுறதா.' என்று ஆனால் ஒருபுறம் இந்த கல்யாணம் அரங்கேறாமல் இருந்திருந்தால் அதனின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை யூகித்தான்.
'சரி நடந்தது நடந்துருச்சு இனி எதையும் மாற்ற முடியாது. அதற்காக உடனே அவள்கூட வாழ்க்கையை ஆரம்பிக்கவும் முடியாது. கொஞ்ச நாள் போகட்டும் பிறகு பார்த்துப்போம். எப்படியோ முதலிரவு ஏற்பாடு எதுவும் பண்ணல அதுவரைக்கும் சந்தோஷம். என்று நினைத்தபடி கண்ணயர்தான் கதிர்.
மறுநாள் காலைப்பொழுதில் விரைவாக எழுந்து குளித்துமுடித்தவள்.
"மாமி, நான் கோவில் போயிட்டு வருகிறேன்" என்று அகிலாண்டேஷ்வரியிடம் சொன்னாள் அருந்ததி.
"போ மா ஆனால் தனியா போகவேண்டாம். இதோ கதிர் குளிச்சிட்டு வரட்டும் இரண்டுபேரும் சேர்ந்து போங்க" என்றவுடன் சரிங்க மாமி என்று காத்திருந்தாள்.
"டேய் கதிர் வந்துட்டியா,அருந்ததியை அழைச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வா" என்றதும்.
"இல்லை மா எனக்கு வேற வேலை இருக்கு" என்று பதிலளித்துவிட்டு விட்டென்று கிளம்பினான்.
"கதிர்...கதிர்மாமா.." என்று பின்னாடியே அருந்ததி செல்ல அதற்குள் அவனது இருசக்கர வாகனம் சத்தத்தை கிளப்பிக்கொண்டு அவனது கட்டுபாட்டில் சென்றது.
"ச்ச...என்ன இவரு" என்று ஒருவித சலிப்புடன் உள்ளே நுழைய...
"அம்மாடி எதுவும் தப்பா எடுத்துக்காத அவன் ஏதோ குழப்பமா இருக்கான். கொஞ்சம் பொறு எல்லாம் சரியாகிடும். சரி கோவிலுக்கு போகணும்னு சொன்னல காயத்ரியை அழைச்சிட்டு போ" என்க...
"ஐயோ நான் முடியாது. எனக்கு மூன்றாவது நாள் நான் போகமுடியாது" என்றதும்.
"யாரும் வேண்டாம் நான் போயிக்கிறேன்" என்றபடி நடந்துச்சென்றாள் அருந்ததி. ஒரு ஐந்து தெருக்கள் எட்டிபிடித்தால் அந்த பிள்ளையார் கோவில். இதற்கு துணையாம் துணை என்று மனதில் நினைத்தவாறு கோவிலினுள் நுழைந்தாள்.
"பிள்ளையாரப்பா" என்று சொல்லியவாறு தோப்புக்கரணம் போட்டுவிட்டு ஐயர் பூஜிப்பதை பார்த்துவிட்டு பிரகாரத்தை சுற்றினாள்.
என்னவோ தெரியவில்லை ஒருவித நிம்மதி அவளிடம் தென்பட்டது. ஆயிரம் கஷ்டங்கள் கட்டிடம் போல் எழுந்து நின்றாலும் கோவிலினுள் நுழைந்தால் தண்ணீர் போல துன்பங்கள் கரைந்தோடும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். அப்படித்தான் அருந்ததிக்கும். ஒருவித மகிழ்ச்சி ஏற்பட்டது.
கோவிலைவிட்டு வெளியே வந்தாள். வானம் மூடுவதுப்போல் இருந்தது.
'மழை வராப்புல இருக்கே' என்றவாறு நடந்து வந்துக்கொண்டிருக்க தற்செயலாக கதிர் வந்தான் வழியில்...
"அ...அருந்ததி.."என்றான் அவள் பெயரை உச்சரித்தப்படி.
"கதிர்மாமா..." என்று பார்த்தாள் கேள்விகுறியாக.
"வா, வீட்டில் விட்டுடுறேன்" என்று அவளை அமர்த்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் நொடியில்.
"நல்ல வேளை மழை வராமல் இருந்துச்சு" என்று அவனிடம் சொல்ல...
"ம்ம்ம்... எதர்ச்சையாக உன்னை பார்த்தேன். சரி மழைல வந்தால் நனைஞ்சிக்கிட்டு வருவியேனு தான் பைக்ல அழைச்சிட்டு வந்தேன்" என்றபடி உள்ளே நுழைந்தான் பின்னால் அவளும் வர எல்லோரும் ஆச்சரியபார்வையுடன் எதிர்நோக்கினர்.
'போகும் போது சேர்ந்து போகல ஆனால் வரும்போது சேர்ந்து வராங்க. எப்படியோ இரண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தா சரிதான்' என்று சந்திரலேகா நினைத்துக்கொண்டு தன் வேலையை கவனித்தாள்.
நேரம் போய்கொண்டே இருந்தது. சமையலறையில் சமையலும் தடபுடலாக நடந்து முடிந்தது. கல்யாணம் ஆகி மறுநாள் இல்லையா அதான் அருசுவை உணவு புது திருமணஜோடிகளுக்காக தயாரிக்கப்படது.
வெறுமனே அமர்ந்திருக்க சற்று கடுப்பாக இருந்ததால் எழுந்து சமையலறைக்குள் நுழைந்தாள் அருந்ததி.
"கிச்சன் பக்கம் என்ன உத்தேசம்" என்றார் சந்திரலேகா .
"லேகா இது என்ன கேள்வி, அவள் கல்யாணம் ஆனவ, இன்னும் சின்ன பொண்ணு இல்லை. வரட்டும் வந்து சமையல் கத்துகட்டும்" என்றார் மாமியார் தொனியில் நம் அகிலாண்டேஷ்வரி.
"சரிதான் அண்ணி நீங்க சொல்றது. அருந்ததி இந்தா அப்பளம் பொறி"என்று சந்திரலேகா மகளுக்கு கட்டளையிட...அவ்வாறே அருந்ததி செய்தாள்.
இவள் அப்பளம் பொறிக்கும்போது அருகில் அகிலாண்டேஷ்வரி குழம்பு தாளிக்க...
"அருந்ததி என் பையனை கட்டினதுல உனக்கு சந்தோஷம் தானே" என்று மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கேட்க...
"அதெல்லாம் சந்தோஷம் தான் மாமி" என்று இன்முகத்துடன் சொல்ல..