You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Forum breadcrumbs - You are here:ForumBhagya Novels: Kadhal Siraikadhal sirai -5

kadhal sirai -5

Quote

காயத்ரி தன் அறையோடு ஒட்டியிருக்கும் பால்கனியில் நின்றவாறு பிரவினுடன் அழைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாள். அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை அவளிடம் உரைக்க அவளோ..

"பிரவின் ஆக்சுவலி டியூஷன் சென்டர் ஆரம்பிக்கிறதா தானே சொன்ன. நீ என்ன திடிரென பி.பி.ஓவில் வொர்க் பண்ண போறேனு சொல்ற.." என்றவுடன்.

"அது ஆரம்பிக்க கொஞ்சம் பணம் தேவைபடுது காயூ . இப்பதான் அக்காவுக்கு கல்யாணம் எல்லாம் ஆகியிருக்கு. அதான் கிடைச்ச வேலையை பண்ணலாமேனு " என்று விளக்கமாக கூற... அதைப்புரிந்து கொண்டவளாய் சரி என்றபடி போனை வைத்துவிட்டு திரும்ப அங்கு அருந்ததி நின்றிருந்தாள்....

"காயூ...யாருகிட்ட ரொம்ப நேரமா பேசிட்டு இருந்த " என்று வினவினாள். பதில் சொல்ல இயலாது காயத்ரி தடுமாறினாள்.

"காயூ சொல்லு. நீ ஏதோ பையன் கிட்ட பேசுறனு  தெரியுது ஆனால் யாருன்னு தெரியல. ரொம்ப நாளாவே உன்னை கவனிச்சிட்டு தான் இருக்கேன் என்றதும்.

"அருந்ததி ,அது வந்து... அவன் பேரு ப்ரவின் என்கூட காலேஜ்ல படிச்சவன்"

"என்னடி லவ்வா" என்க...

"ஆமாம்" என்றபடி குற்றவுணர்வில் தயங்கி நிற்க...

"காயூ இதெல்லாம் வீட்டில் தெரிஞ்சா என்ன சொல்லுவாங்கனே தெரியல. உன் படிப்பு முடிஞ்சு ஒருமாசம் தான் ஆகுது. அதுக்குள்ள இப்படியா? நீ தெரிஞ்சு தான் இதெல்லாம் பண்ணுறியா ஏய் நாட்ல எவ்வளவு தப்பு நடக்குது பார்க்கிறல காதலுங்குற பேருல பொண்ணுங்களை ஏமாத்துவானுங்க டி யார்கிட்டயாச்சும் மாட்டிக்காதடி இதெல்லாம் வேணாம்" என்று அறிவுரை சொல்ல...

"ஐயோ அருந்ததி நீ சொல்றது எல்லாம் புரியுது. நான் சின்ன குழந்தை இல்லை. எனக்கு வயசு 22 ஆகுது. அதுமட்டுமின்றி அவன் அப்படிப்பட்ட பையன் இல்லை. குடும்ப கஷ்டத்தை பார்த்து வளர்ந்தவன். கண்டிப்பாக தவறாக எதுவும் செய்ய மாட்டான்." என்று அவனைப்பற்றி புகழாரம் சூட்டிக்கொண்டிருக்க...

"எப்படியோ ஆனால் ஒரு அண்ணியா நான் சொல்ல வேண்டியது சொல்லிட்டேன் அப்றம் உன் இஷ்டம்" என்று படுக்கையில் சாய்ந்தாள்.

"அருந்ததி நான் ஒன்னு கேட்டால் தப்பா எடுத்துக்க மாட்டேல.." என்று புதிராய் வினவினாள் காயத்ரி.

உடனே எழுந்து அமர்ந்து அவள் கரங்களை பிடித்து. "சொல்லு காயூ ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன்" என்றதும்.

"நீ யாரையும் லவ் பண்ணதே இல்லையா. உனக்கு லவ்வுனா பிடிக்காதா" என்று வினவ...

"ஹாஹா இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல காயத்ரி. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் அண்ணன் கதிரை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். எனக்கு பெருசா எந்த ஆண்கள் கிட்டயும் நட்பு கிடையாது. நான் குழந்தைல இருந்து. இந்த வீடு தான் உலகம். இதை தாண்டி எதுவும் பெருசா யோசிச்சது இல்லை. கல்யாணம் கூட பண்ணிக்க விருப்பமே இல்லை. ஆனால் சந்தர்ப்பம் சூழலில் உங்கள் அண்ணன் கதிர் கையால எனக்கு தாலி ஏறுச்சு. உங்கள் அண்ணன் கதிரை அப்போல இருந்தே பிடிக்கும் ஆனால் அதுக்கு பேரு காதல் எல்லாம் இல்லை. ஆனால் பிடிக்கும். இப்ப ரொம்ப பிடிக்குது ஆனால் அவர் தான் ஒட்ட மாட்டேங்குறாரு" என்று கண்கலங்கியபடி சொல்ல ...

"விடு அருந்ததி. சீக்கிரமே அப்படி ஒரு நாள் வரும்"

"சரி வா தூங்கலாம்" என்று இருவரும் படுத்து உறங்கினர். மறுநாள் காலைப்பொழுது மிகு பிரகாசமாய் உதயமானது. வீட்டில் எல்லோரும் எழுந்து அவரவர் வேலையை பார்க்கத்துவங்கினர்.

இன்று அந்த அவார்டு தரும் நாள் என்பதால் ஒருவித படபடப்புடன் கதிர் அந்த அவார்டு பங்கஷனுக்கு கிளம்பி போனான்.

"மச்சி உனக்கு தான் அவார்டு கவலையே படாத" என்றதும்.

"டேய் நீங்க வேற கடுப்பேத்தாதிங்க". என்று சலிப்புடன் நின்றுக்கொண்டு இருக்க..

'நாளைய இயக்குனர் அவார்டு கோஸ் டு மிஸ்டர் கதிர்' என்று மைக்கில் ஒலிக்க  திரும்பி ஆச்சரியமாக பார்த்தான். அவனால் நம்ப முடியவில்லை. ஆச்சியத்திலிருந்து மீளமுடியவில்லை.

கால்கள் மெல்ல மேடையை நோக்கி நடந்தன. உடன் ஷில்பாவும் இருந்தாள்.
கையில் அவார்டு வாங்கியவுடன் மைக் பிடித்து பேசத்துவங்கினான்.

"இந்த அவார்டு நான் வாங்குறது கூட யாருக்கும் தெரியாது. எங்கள் வீட்ல நான் இதையெல்லாம் சொல்லக்கூட இல்லை. ஆனால் எனக்கு இது ரொம்ப பெரிய விஷயம். எஸ்...இட்ஸ் கிரேட் டு ஹேவ் திஸ். எனக்கு அடுத்து திரைப்பட வாய்ப்பு கிடைக்குமானு தெரியாது ஆனால் கிடைச்சால் கண்டிப்பாக என்னோட பெஸ்ட் நான் குடுப்பேன்." என்று சொல்லிவிட்டு அவர்கள் தந்த காசோலையை வாங்கிக்கொண்டு அந்த மெமொன்டோவையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

அவன் உள்ளே நுழையும் நேரம் அனைவரும் பின்வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அதிர்ஷ்டவசமாக அவனது அறையில் அருந்ததி நின்றிருந்தாள்.

"கதிர் மாமா என்ன அவார்டு எல்லாம்"

"ஷார்ட் பிலிம்ஸ் எடுக்குறேன்ல அதான் நாளைய இயக்குனர் தகுதிக்கு வெற்றி பெற்றேன் அதோட அவார்டு தான் இது" என்றவுடன்.

"அம்மாடியோ சூப்பர் மாமா...எவ்வளவு சந்தோஷமான விஷயம். கங்க்ராட்ஸ்" என்று கைகுலுக்கினாள்.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனை தட்டியெழுப்பியவள்.

"என்ன ஆச்சு அப்படி பாக்குற மாமா"

"இல்லை, இதுவரை என்னோட சக்ஸஸ் பார்த்து யாரும் கை குலுக்கி பாராட்டினதே இல்லை. உனக்கு தான் தெரியுமே நம்ம ஆளுங்களுக்கு துணி கடை வியாபாரம் அதுல வர லாபம் நஷ்டம் இது பத்தி தானே கவலை. நீ கூட இதான் பர்ஸ்ட் டைம் என்னை இப்படி பாராட்டினது." என்றதும்.

"மனசுக்குள் பாராட்டிருக்கேன் வெளிபடையா உன்கிட்ட பாராட்டி பேச எல்லாம் தைரியமும் வரல. ஆனால் இப்பதான் நீ என் புருஷனாச்சே" என்று சொல்லியபடி புன்னகையித்தாள்.

"ஹாஹா. ஓகே அதெல்லாம் இருக்கட்டும். என்ன என் ரூம் பக்கம்" என்றதும் அவளுக்கு முகம் மாறியது.

'நமக்கு இந்த ரூமுக்கு வரக்கூடிய தகுதி இல்லையா. இந்த உரிமை எனக்கில்லையா. ஏன் இவர் இப்படி கேட்கிறாரு. என்னை முழுசா மனைவியா ஏத்துக்கலனாலும் பரவாயில்லை. ஆனால் இப்படியா பேசுறது' என்று மனதினுள் ரயில் ஓட்டிக்கொண்டிருக்க..

"ஹலோ மேடம் உங்களை தான். என்ன திடிரென என் ரூம் பக்கம்" என்றான் மறுபடியும் சற்று அழுத்தமாக.

"ஏன் உங்கள் ரூமுக்கு நான் வரக்கூடாதா" என்றாள் விலுக்கென்று.

"வரலாம். ஆனால் இப்போதைக்கு தேவையில்லை."என்று சொல்லி வைக்க அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

"கதிர் மாமா உனக்கு என்னை பிடிக்கலையா" என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

"பிடிச்சிருக்குனு சொன்னா நீ எப்படி எடுத்துப்பனு தெரியல. பிடிக்கலைனு சொன்னாலும் சரிவராது. இங்கே பாரு நம்ம கல்யாணம் திடிரென நடந்த ஒரு விபத்து. இதையெல்லாம் அவ்வளவு ஈஸியாக என்னால எடுத்துக்க முடியல. கொஞ்சம் நாள் ஆகும் முழுசா மனைவியா ஏத்துக்க. அதுக்கு நீ தான் டைம் குடுக்கணும். ஸோ...ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்டு" என்றதும்.

"சரி டீ தர காபி தரவாச்சு வரலாமா" என்றாள் எதார்த்தமாக.

"ஹாஹா..... நீ இருக்கியே. சரி இந்த படுக்கைவிரிப்பு எல்லாம் நீ தான் மாத்துனியா. சூப்பர். இதுக்கு தான் வந்தீயா ஆக்சுவலி".

"ஆமாம் கதிர்மாமா. துவைக்க கொஞ்சம் உங்கள் துணி எல்லாம் கூட இருந்துச்சு அதெல்லாம் எடுத்துட்டு போலாமேனு தான் வந்தேன். சரி வெளியே எல்லாரும் பேசிட்டு இருக்காங்க நீங்களும் வாங்க வெளியே. ரூம்லயே அடைஞ்சு இருக்காதிங்க கூண்டு கிளி மாதிரி" என்று சொல்லி லேசான சிரிப்பை உதிர்த்துவிட்டு வந்த வேலை முடிந்தது என்பதுபோல் அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் சென்றதும் அவனும் அறையை விட்டு வெளியேறி பின்வாசலில் பெரியவர்களிடம் பேச அமர்ந்தான். அருந்ததியோ அவன் சட்டையை எடுத்து முகர்ந்தாள். அவனுடைய வாசம் அதில் இருப்பதை உணர்ந்தாள்.

'எவ்வளவு நாள் வேண்டும் என்றாலும் காத்திருப்பேன்' என்று நினைத்துவிட்டு அவனது துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு அவளும் பேச வந்து அமர்ந்தாள்.

அங்கு மொபைல் நோண்டிக்கொண்டிருக்கும் கவியரசியை அதட்டினாள்.

"கவி என்ன இது எல்லோரும் பேசிட்டு இருக்கிறப்ப நீ மட்டும் மொபைல் பார்க்கிற" என்க..

"ஐயோ அருந்ததி...நீ வேற நான் சும்மா ஸ்டேடஸ் பாத்துட்டு இருந்தேன். நான் ஒன்னும் காயத்ரி மாதிரி லவ்..." என்று சொல்ல ஆரம்பிக்க அதற்குள் தன் கைகளால் வாயை பொத்தி...

"ஏய் என்ன பேசுற நீ. பெரியவங்க இருக்காங்க கம்முனு இரு" என்று அதட்டினாள் அருந்ததி.

ஒரு பக்கம் காயத்ரி கவியரசியை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள்.

"ஏய் கவி அது என்ன பழக்கம். அருந்ததியை அண்ணினு கூப்பிடு" என்று விருதாச்சலம் அதட்ட ...

"ஏன் அப்போல இருந்து நான் பெயரிட்டு தான் கூப்பிடுவேன் அதனால என்ன" என்றவுடன்.

"அது அப்போ இப்போ அவள் உன் அண்ணன் மனைவி" என்றவுடன். நம் கதாநாயகன் கதிரோ தலையை கோதியவாறு புன்னகையித்தான்.

'ஆமாம்ல அருந்ததி என் மனைவி ஆனாலும் நம்ம மனசு ஏன் இடம் கொடுக்கல...' என்று நினைத்தபடி இருக்க...

அடுத்து காயத்ரிக்கு விழுந்தது திட்டு "காயூ உனக்கும் தான் இனிமே அண்ணினு தான் கூப்பிடணும் புரிஞ்சிதா".

"ஐயோ...சாமி கூப்பிடுறேன் விடுங்க".

"ஹலோ காயூ அண்ணினு கூப்பிடல நானே பிரவின் விஷயத்தை வீட்ல சொல்லிருவேன் பாத்துக்க" என்று காதுகடித்து சிரிக்க...

"அண்ணியாரே உன்கிட்ட ஜாக்கிரதையா தான் இருக்கணும் போலருக்கு" என்று சிரித்து வைத்தாள் காயத்ரி.

"சரி சரி நான் டீ போடுறேன் எல்லாருக்கும் " என்று அகிலாண்டேஷ்வரி எழுந்திருக்க...

"மாமி இருங்க நானும் வரேன்" என்று பின்னாடியே சென்றாள் அருந்ததி.

அடுத்து என்ன? பார்ப்போம்.

You cannot copy content