மோனிஷா நாவல்கள்
Kalyana Malai-short story
Quote from monisha on December 8, 2019, 12:17 PM"கல்யாண மாலை"
மல்லிகையில் ஒரு மாலை
தங்கச்சரிகையில் ஒரு சேலை
ஆ….
மல்லிகையில் ஒரு மாலை
தங்கச்சரிகையில் ஒரு சேலை
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்
ஓ…..
கல்யாணம் கண்டுபிடித்தான்…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா
பின்பு ஜீவிதம் துந்தனானேனா
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா...
பெரிய பெரிய ஒலிபெருக்கிகளில் அந்த தெருவே அதிரும்படி இந்தப் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தக் குடியிருப்பே ஒரு அழகான மற்றும் அமைதியான குடியிருப்புப் பகுதி ஆகையால் இந்த உற்சாகப் பாட்டுச் சத்தம் அந்த மாலை மங்கும் வேளையில் ஒரு விறுவிறுப்பான சூழலை உருவாக்கியது!
நல்ல பெரிய வீடு.
கல்யாண மிடுக்குடன் ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சியும் சேர ஒரு
புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது. தொடர் பாடல்கள் மட்டும் சிறுசுகளின் ஆடக் கச்சேரியுமாக அந்த வீடு ஒரு விழாக்கோலம் பூண்டிருந்தது.
வீட்டின் முன் பெரிய பந்தல்கள் போடப்பட்டிருப்பதால் ஆண்கள் அனைவரும் ஒரு மாநாடு நடத்திக்கொண்டிருந்தார்கள். வணிகத்தில் தொடங்கி சன் டிவி வாணி ராணி வரைக்கும் அங்கு அலசப்பட்டது!!
பல வீட்டாமைகளின்(வீடு ஆமை) திறமை அங்கே வெளிவந்தது!
அவ்வீட்டு வாசலிலேயே பெரிய ரங்கோலியுடன் சேர்த்து "ஸ்ரீதரன் வெட்ஸ் வரலக்ஷ்மி" என்று வரையப்பட்டிருந்தது. இரு வாழை மரங்கள் மட்டும் சற்றுத் தள்ளி ஒரு கல்யாண முருங்கை அந்த பந்தற்கால் கீழ் கட்டப்பட்டிருந்தது.
அப்படியே கொஞ்சம் உள்ளே வந்தால் இளவட்டங்கள் அனைவரும் ஒன்று கூடி பாட்டுக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தனர். கேட்டால்….அந்தாக்ஷரியாம்!?
சிறியவர்கள் பாட...
பெரியவர்கள் ஆட...
அடடடா... என்ன ஒரு கண்கொள்ளாக் காட்சி!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்படியே அடுக்களைக்குள் நுழைந்தால் மலர் அங்குள்ள தட்டுகளில் பலகாரங்களை அடுகிக்கொண்டிருந்தார்.
"அம்மா!!! அம்மா!!" -மகன், ஆனந்தனின் அழைப்பிற்கு மலரிடம் எந்த பதிலுமில்லை.
"அம்மா...ஆ... உங்களை தான் கூப்பிடுறேன்"-என்றபடி அவன் மறுபடியும் தன் தாயை அழைத்தான்.
"ஆமா... உனக்கும் உன் அப்பாவுக்கும் என்னைய கூப்பிடாம எந்த வேலையும் ஓடாதே! இப்போ என்ன வச்சுருக்க இந்த அம்மாவுக்கு?" என்றபடி மலர் தன் மகனிடம் திரும்பினார்.
"இல்லமா.... அது வந்து… இந்த அக்கா எ…"- இவன் முடிக்கவில்லை அதற்குள் அந்த வீட்டின் கடைக்குட்டி ஷிவா -"அம்மா!!! அம்மா!! அக்காவை பார்த்தீங்களா?! எங்கே போனாள்?!" என்று வந்து நின்றான்.
"இங்கதான்பா!!! அவ பிரெண்ட்ஸ் எல்லாம் வந்துருக்காங்க....மெஹந்தி வச்சிக்கிறேன்னு சொன்னா. அங்கதான் முன்னுக்கு இருப்பாள்!" -என்று சொன்னபடியே பலகாரத் தட்டுடன் முன் செல்ல விரைந்தவரின் கரம் பற்றி "அம்மா… இங்க பாருங்க அக்காவிற்காக ஆறு ஜோடி வளையல்கள் வாங்கிட்டு வந்தோம்!! நல்லா இருக்கா?"- என்று கேட்டான் ஆனந்தன்.
"அடடே... ரொம்ப அழகா இருக்குப்பா. இப்போ நிறைய பேர் இருக்காங்க!! கண்ணு படும். ராத்திரி கொடுப்பா. அக்கா ரொம்ப சந்தோஷப்படுவா!"-என்று முடித்தார்.
"மா... அக்கா நல்லா சந்தோஷமா வாழனும்மா!"-என்று கூறி ஆனந்தன் லேசாக கண் கலங்க ஷிவாவோ- "என்ன அண்ணா?! இப்படி சொல்லிட்டீங்க? அத்தான் கண்டிப்பா அக்காவை நல்லா பார்த்துப்பார். அக்கா நல்லாத்தான் இருப்பா!!! நம்ப அத்தான் அண்ட் கோ சாரி அத்தான் அண்ட் பேமிலிதான் என்ன பாடு பட போறாங்களோனு நினைச்சாலே ரத்தக்கண்ணீர் வருது!!!" என்று ஒரு குறும்பு பார்வையுடன் அன்னையை நோக்கினான்.
"படவா!! என் முன்னாடியே என் பெண்ணை பற்றி வம்பு பேசுகிறாயா?!"-என்று அடிக்க விரட்டினார்.
இப்படி அங்கு அந்த கல்யாண வீட்டில் கூடி இருப்போர் அனைவரும் கலகலப்பாக அந்த மாலையைக் கடக்க....
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இங்கே...
நாளை அதிகாலை சுபமுஹூர்த்தத்தில் திருமணம் புரிந்து கொள்ளப்போகும் நமது சுப்ரமணியம் மற்றும் மலரின் தவப்புதல்வியான வரலக்ஷ்மியோ தனது பெற்றோரின் அறையில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்த நிலையில் வானில் உள்ள பௌர்ணமி நிலவையும் தனது மறுதானியிட்ட செக்க சிவந்த கரத்தையும் முறைத்துக்கொண்டிருந்தாள்!!
அவள் முகத்தில் பல உணர்ச்சிகள் மாறி மாறி வந்த வண்ணம் இருந்தன! அதில் துளி அளவும் நிம்மதியோ சந்தோஷமோ இல்லை!!!
"மகள்!!"-என்ற தந்தையின் ஒற்றை அழைப்பிற்குதான் எத்தனை சக்தி?!
வரலக்ஷ்மி என்னும் சிலை அப்பொழுதுதான் உயிர் பெற்றதைப்போல் திடுக்கிட்டாள்.
"அப்பா. வாங்க பா...இங்க வந்து என்னோட உட்காருங்க"-என்று தனது தந்தை சுப்ரமணியத்தை அழைத்தாள்.
"என்ன மகள்?! என்ன யோசனை பலமா இருக்குது போல? நானும் ரொம்ப நேரமா கவனிக்கிறேன். ரொம்ப தீவிரமா என்ன யோசனை?! அங்க கீழ எல்லாரும் எங்கே கல்யாண பொண்ணுன்னுதான் தேடுறாங்க"-என்று சொன்னபடி வரலக்ஷ்மியின் மறுபக்கத்தில் அமர்ந்தார்.
"அப்பா.... அப்பா....எனக்கு பயமா இருக்கு பா!! நான் உங்க கூடவே இருந்துடுறேனே!!! பிலீஸ் பா!!"-என்று கெஞ்ச துவங்கினாள்.
"வரலக்ஷ்மி?! என்ன மா?! இப்படியா பேசுறது?! உங்க சம்மதத்தோடதானே அப்பா எல்லாம் செய்றேன்! இப்படி சொன்னா எப்படி?!"- என்று அவர் பதிலுக்கு தன் மகளிடமே கேட்டார்.
அவளோ சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.
பின்பு மெதுவாக அவரே தனது மகளிடம் -"என்ன மா? எதுவாக இருந்தாலும் இந்த அப்பாகிட்ட சொல்ல மாட்டீங்களா?!" என்று கேட்டார்.
"அதில்ல பா.... இத்தனை வருஷமா நான் இங்க உங்க எலார்க்கூடவும் இருந்த மாதிரி இனிமே இருக்க முடியாதுல பா?!"
மறுபடியும் அவளே தொடர்ந்தாள் -" உங்களை மாதிரி யாருப்பா என்னைய பார்த்துப்பா?! நான் இங்கேயே இருந்துடுறேனே!!! பிலீஸ்! ஐ அம் யூவர் ஒன்லி டாட்டர்!!" என்று தாஜா செய்தால்.
"மகள்!!! இந்த வீட்டிலேயே நீங்க தான் பொறுப்பா யோசிச்சு நல்ல முடிவு எடுப்பிங்கன்னு அப்பா நினைச்சேன்.... இப்போ நீங்களே இப்படி சொன்னால் எப்படி?! நாளைக்கு ஸ்ரீதர் கிட்ட என்னன்னு நான் சொல்ல?!"-என்று கேட்டார்.
"இல்ல பா.. அது அப்படி இல்லை!! எப்படி சொல்ல?! ஓகே… லெட்ஸ் கீப் இட் இன் திஸ் வே!!"-என்று சொன்னபடி தன் மனதில் உள்ளதை தத்தையிடம் வெளியிட ஆயத்தமானாள்.
"ஒரு உதாரணத்திற்கு அம்மாவை எடுத்துக்குவோம். அம்மா ஒரு சின்ன குடும்பத்தில் இருந்து வந்தாங்க... அவங்க, அப்பு, அம்மம்மா அண்ட் மாமா. தென், உங்களை கல்யாணம் செய்து ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்க்கைபாடங்க!! எல்லாம் ஓகே."
"அப்பா நல்லா புரிஞ்சுக்கோங்க நான் யாரையும் இங்க குற்றம் சொல்ல வர்ல. ஆனால் எப்படியாப் பட்ட குடும்பத்தில வாழ்க்கைப்பட்டாலும் ஆரம்பத்தில் சில முரண்பாடுகள் கருத்து வேற்றுமைகள் வருவதைத் தவிர்க்க முடியாது!"
"அப்படி தவிர்க்க முடியாத பட்சத்தில் அம்மா உங்களிடம் சொல்லும்போது நீங்க எப்படிப்பா அப்ரோச் செய்தீங்க?!"-என்று கேட்டபடி தந்தையின் முகத்தைப் பார்த்தாள்.
அப்பாவிடம் ஒரு யோசனைக்கான அமைதி.
பிறகு வரலாக்ஷ்மியே தொடர்ந்தாள் -" அப்பா...! நீங்க ஒரு நல்ல மகன், சகோதரன், தோழன், சிறந்த மனிதன்...இதை எல்லாவற்றிக்கும் மேல நீங்க தான் மிகச் சிறந்த அப்பா!!! ஆனால்....நீங்க ஒரு நல்ல கணவனா?!"-என்று ஒரு பெரிய கேள்வியுடன் நிறுத்தினாள்.
சுப்ரமணியம் தன் மகள் சொல்வதை ஒருவிதமான திகைப்புடன் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.
"கண்டிப்பா இந்த கேள்வியை அம்மாவிடம் கேட்டால்.... ஆமாம்னு யோசிக்காமல் சொல்லுவாங்க! ஆனால் உங்களை நீங்களே கேட்டதுண்டா?!"
"அப்பா....நீங்க இது வரைக்கும் எங்க மூன்று பேரையும் நல்ல விதத்தில் வளர்த்தீங்க. எங்களோட எல்லா தேவையையும் அறிந்து அம்மாவிடமும் கலந்து ஆலோசித்து எங்களுக்கு செய்து வைத்துளீர்கள்! இன்னைக்கு நாங்க மூன்று பேருமே ஒரு நல்ல நிலமையில் இருக்கிறோம். இப்படி எங்களுக்காகவே நீங்க உங்க பாதிக்கும் மேற்பட்ட வாழ்க்கையை வாழ்த்துட்டீங்க!"
"நீங்க உங்களை சுற்றி உள்ளவர்களுக்காக நிறைய செய்துள்ளீர்கள். பட்... உங்களையே நம்பி வந்த அம்மாவுக்கு நீங்க என்ன செய்திங்கன்னு நான் கேட்கலை....ஆனால்... அவங்களுக்காக எப்பவாவது குரல் கொடுத்துருக்ககீங்களா?! அவங்களுக்காக அவங்க பக்கம் நின்று பேசியிருக்கிறீர்களா?!"-என்று முடித்தாள்.
"மகள்..."-இதை தவிர சுப்ரமணியதிடம் வேறு வார்த்தை இல்லை. மகள் கேட்பதில் உள்ள உண்மை அவர் நாவை கட்டிப்போட்டது. மகளின் கூற்றில் உள்ள உண்மை அவர் உள் மனதைச் சுட்டது.
"அப்பா... நான் இதை இப்போ சொல்றதுக்கும் ஒரு காரணம் இருக்கு. எனக்கும் கல்யாணம் செய்து வைக்க போறீங்க....என்னை அவர் எப்படி ட்ரீட் செய்வார்னு யோசிக்கும்போது இதெல்லாம் மைண்ட்ல வந்தது!!"-என்று சொல்லி அமைதிகாத்தாள்.
"மகள்... ஸ்ரீதர் ஒரு நல்ல மனிதன் மா. கண்டிப்பா உங்களை நல்லா பார்த்துப்பார்"-என்று சொல்ல.
"என்னோட அப்பாவும் ரொம்ப ரொம்ப நல்லவர்தான்."
"அப்பா....நான் இப்பவும் சொல்றேன் நீங்க ரொம்ப நல்லவர். உங்களை போல ஒரு நல்ல மனுஷன் எங்கேயும் கிடைக்க மாட்டார்"-என்று சொன்னபடி தனது தந்தையின் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.
சுப்ரமணியம் அமைதியாக புன்னகைத்துக்கொண்டார்.
"அதே போல... என்னோட அம்மாவும் ரொம்ப ரொம்ப நல்லவங்க…ஹா!! ஹா!! அம்மானா... அம்மாதான்!! இதற்கு பிறகு நீங்க தான் அம்மாவை நல்லா பார்த்துக்கனும்."
"அம்மாவை நீங்க தான் புரிந்து நடந்துக்கனும். நீங்க அம்மாவை நடத்துற விதத்தில்தான் நாளைக்கு நம்ப வீட்டுக்கு வரும் மருமகள்களும் அம்மாவை நடத்துவார்கள்"
"நீங்க எங்க மூன்று பேருக்காக வாழ்ந்தது போகட்டும். இனிமே வரும் நாட்களை உங்களின் மலருக்காக வாழுங்களேன். மை அம்மா டிசேர்வ்ஸ் ஆல் கைண்ட் ஓஃப் ஹாப்பினெஸ் இன் திஸ் வோர்ல்ட்!!!"-என்ற பிராத்தனையுடன் முடித்தாள்.
இதை எல்லாம் சொல்லி முடித்ததும் அங்கு சற்று நேரம் ஒரு அமைதி. தகப்பன் மற்றும் மகள் இருவரில் யாரும் முன்வந்து அந்த அமைதியை உடைக்க முயலவில்லை.
ஒரு சில நிமிட இடைவெளியின் பின். வரலக்ஷ்மி கேட்டாள்-"என்னப்பா?! அமைதியா இருக்கீங்க!!!? நான் தப்பா ஏதாவது சொல்லி உங்க மனதை கஷ்டப்படுத்திட்டேனா? ஐ அம் சாரி பா!!"
"ச்ச… அப்படிலாம் இல்ல மா. என்னோட மகள்....எப்படி தப்பா சொல்லுவா?!"- என்று சொன்னபடி மிகவும் பெருமையாக வரலாக்ஷிமியின் தலையை வருடினார்.
பின்பு ஒரு உறுதியுடன்-"அப்பா பார்த்துக்கிறேன் மகள்!!" -என்று முடித்தார்.
அப்பாவிடம் இருந்து வந்த இந்த பதிலில் வரலக்ஷ்மி தந்தையை பெருமையுடன் அணைத்துக்கொண்டாள்.
"அப்பாவும் மகளும் இங்க என்ன தனியா மாநாடு நடத்துறீங்க?!"- என்று கிண்டலடித்தபடி அங்கு வந்தனர் தாய் மற்றும் இரு சகோதரர்களும்.
"எனக்கும் அப்பாவுக்கும் நடுவுல ஆயிரம் இருக்கும்... அதெல்லாம் சொல்ல முடியாதுமா?!"-என்று வரலக்ஷ்மி மல்லுக்கட்ட.
அதை முடிக்கும் பொருட்டு...ஆனந்தன்-"சரி...அக்கா!! இங்க என்ன டிஸ்கஷன்?! உங்களை எங்கே எல்லாம் தேடுறது? முதலில் இதைப் பிடிங்க"-என்றபடி தமக்கையின் கையில் அந்த ஜுவெல்ரி பாக்ஸை வைத்தான்.
"ஐ....வளையல்"-என்று கண்கள் மின்ன கூவினாள்.
"எனக்கே.... எனக்கா?! சோ ஸ்வீட்!"-என்றால் மகிழ்ச்சியில்.
"யெஸ் அக்கா...ரொம்ப நாளா உங்களுக்கு தர வேண்டும் என்று ஆசை இன்னைக்கு தான் நிறைவேரியது...பிடிச்சிருக்கா?!"-என்றான் ஷிவா வாஞ்சையுடன்.
"ரொம்ப பிடிச்சிருக்கு தம்பிகளா" – என்றாள் மகிழ்ச்சியுடன்.
அன்பென்ற ஒற்றை சொல்லை போல் ஒன்று வேறு இல்லை
நீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை
என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முள்ளாய் சுற்றும்
நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்
நீ சொன்னால் எதையும் செய்வேன்
தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உன்னகல்லவா….
ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே…
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே…
இரு தம்பிகளும் சேர்ந்து பாட கையில் தங்க வளையல்கள் ஜொலிஜொலிக்க…கண்களில் ஆனந்த கண்ணீர் பளபளக்க சகோதரர்களைக் கட்டி அனைத்தாள் வரலக்ஷ்மி.
"சரி...சரி! இப்படியே பாடிக்கிட்டு இருந்தா ஆச்சா!? கீழ போய் வந்தவர்களைப் பாருங்க....போங்க"-என்று சொன்னபடி தனது சேலை முந்தானையில் ஈர கண்களை ஒற்றிக்கொண்டார் மலர்.
"தாங்கியூ ப்ரோஸ். ஐ லவ் யூ போத்"-என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு வெளியாயினர் அம்மூவரும்.
"என்னங்க!!! நம்ப பிள்ளைகள் நல்ல பாசமான பிள்ளைகள்! என்றைக்கும் இதே பாசத்தோடு இருக்கணும்!"-என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டார்.
"கண்டிப்பாக இருப்பாங்க. மலரோட வளர்ப்பாச்சே! எப்படி சோடை போகும்?!"-என்று கூறி தன் மனைவியிடம் கண்ணடித்தார். பின் அமைதியாக தொடு வானத்தை வெறித்தார்.
மலர் சிறிது ஆச்சரியமாக கணவனை ஏரிட்டார்.
"என்னங்க! ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?! நம்ப பொண்ணு நல்லா இருப்பா! அவளை நினைச்சு நீங்க உடம்பை கெடுத்துக்காதிங்க!"-என்று தானே தன் கணவனின் அமைதிக்கான காரணத்தை கண்டுபிடித்தார்.
என்றுமே தனது நலம் பாராமல் தன்னை சுற்றியுள்ளோரின் தேவையை மட்டுமே பிரதானமாக கொண்டு வாழும் தன் மனையாட்டியை நினைத்து என்றும் அல்லாது இன்று அதிக பெருமைக் கொண்டார்.
"மகள்...மகள்னு!! மூச்சுக்கு முன்னூறு தரம் கூப்பிடுவிங்க! மகள் இல்லாமல் இருந்துடுவிங்கதானே?!"-என்று கவலையாக கேட்டார் மலர்.
"நீங்க இல்லாமல் தான் இருக்க முடியாது மலர்!"-என்று கூறியபடி தனது மனைவியின் கரத்தைப் பற்றி அந்த ஊஞ்சளில் அவரின் மறுபுறம் அமரச் செய்தார். அப்பொழுது ஒலிபெருக்கியில் ஒலித்த பாடலுடன் சேர்ந்து அவரும் தனது மனைவியை நோக்கி காதலாகப் பாடினார்....
வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசமொரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே...
இவையாவும் அங்கு தனது கைபேசியை எடுக்க வந்த வரலக்க்ஷிமியின் செவிகளிலும் விழுந்து அதன் பயனாய் ஒரு நிறைவான பொன்முறுவளை அவளின் முகத்தில் படரச் செய்தது.
தனது பெற்றோரின் மோன நிலை களையா வண்ணம் தனது கைபேசியை எடுத்துக்கொண்டு வந்த சுவடு தெரியாமல் வெளியெறினாள் சந்தோஷமாக!!
ஒலிபெருக்கியில் பாடல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது....
கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
-வாணிஸ்ரீ சுப்ரமணியம்-
"கல்யாண மாலை"