மோனிஷா நாவல்கள்
Kannadi Thundugal - Episode 10

Quote from monisha on March 11, 2025, 7:23 PM10
நம் விதி என்பது சில நேரங்களில் துரத்துகின்ற நாயைப் போலதான். நாம் பயந்து ஓடிக் கொண்டே இருக்கும் வரை அதுவும் நம்மை விடாமல் துரத்திக் கொண்டே இருக்கும்
தீபிகா தன்னுடைய அலுவலக உணவகத்தில் அமர்ந்திருந்தாள். அவள் எதிரே இருந்த மேஜையில் மாதுளைச்சாறு நிரம்பிய கண்ணாடிக் குவளை வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு துளியைக் கூட அப்போது வரை அவள் பருகவில்லை.
நேற்று திடீரென்று ராஜேஸ்வரியும் பாலாஜியும் அவளின் கல்யாண பேச்சை ஆரம்பித்தது அவள் மனதில் குறுகுறுத்துக் கொண்டிருந்தது.
உண்மையில் அவர்கள் அக்கறையின் பால் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணுகிறார்களா அல்லது ஒரேடியாகக் கழித்துக் கட்டிவிடலாம் என்று எண்ணுகிறார்களா என்பதை அவளால் சரியாக யூகிக்க முடியவில்லை.
வேறு வழியே இல்லாமல் அவர்கள் கொடுத்த மாப்பிளைகளின் ஃபோட்டோக்களையும் அவற்றில் இருந்த விவரங்களையும் பார்த்து வைத்தவளுக்கு எதுவும் திருப்தி அளிக்கவில்லை. விவாகரத்தானவர்கள் மனைவியை இழந்தவர்கள் என்று நீண்ட அந்தப் பட்டியிலில் இருக்கும் எல்லோரும் அவளை விடவும் எட்டு பத்து வயது மூத்தவர்களாக இருந்தார்கள்.
அதெல்லாம் அவளுக்கு ஒரு பெரிய குறையாக இல்லாவிட்டாலும் இயல்பில் ஆழமாகத் திருமண வாழ்க்கையின் மீது வேரோடிப் போயிருந்த பயவுணர்வுதான் அவளுக்குள் ஒரு பெரும் மனத்தடையாக நின்றது.
அதேநேரம் சத்யாவின் முகமும் அவ்வப்போது அவள் நினைவிற்குள் வந்து அவளைத் தொல்லை செய்து கொண்டிருந்தது. வீட்டில் அவனைப் பற்றிச் சொல்வதற்கு அவளுக்குத் தைரியம் இல்லை.
முந்தைய முறை அவள் எடுத்தத் திருமண முடிவு மிக மோசமாக முடிந்தவிட்ட நிலையில் மீண்டும் சத்யாவை விரும்புவதாக வீட்டில் எப்படி சொல்ல முடியும். அதனை எப்படி அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
அப்படியே அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் சத்யாவிடம் தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி எப்படி உரைப்பது என்றவாறு அவளுக்குள் எண்ணிலடங்கா குழப்பங்கள் குடிப்புகுந்து அவள் மனநிம்மதியைக் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைத்துக் கொண்டிருந்தது.
அப்போது அவள் மனகுழப்பத்திற்குக் காரணமானவவே அவள் எதிரே வந்து பிரசன்னமாகி இருந்தான்.
“என்ன தீப்ஸ்... ஜூஸ் வாங்கி வைச்சிட்டு அதுல என்ன ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க...? நீ குடிக்குற மாதிரி இல்லன்னா என்கிட்டயாவது கொடு... நானாவது குடிக்கிறேன்” என்றவன் எள்ளல் புன்னகையுடன் சொல்லியபடியே அவளின் எதிர் இருக்கையில் அமர, என்னவோ முன்பு போல அவளால் இயல்பாக அவனிடம் சிரித்துப் பேச முடியவில்லை.
“சரி... நீயே குடி” என்றவள் அந்தக் கண்ணாடி குவளையை அவன் புறம் தள்ளி வைத்துவிட்டு எழுந்து கொண்டாள்.
“இப்போ எதுக்கு எழுந்து போற? என்னை அவாயிட் பண்றியா?” என்றவன் முகம் கடுப்பாக மாறியது.
“நான் ஏன் உன்னை அவாயிட் பண்ண போறேன்... கொஞ்சம் வொர்க் இருக்கு அதான் போறேன்” என்றவளின் காரணத்தை அவன் நம்பவில்லை.
“இவ்வளவு நேரமா இந்த க்ளாஸ்ஸ உத்துப் பார்த்துட்டு வெட்டியா உட்கார்ந்திருந்தியே... அப்ப இல்லயா உனக்கு வொர்க்... நான் வந்து உட்கார்ந்ததும்தான் உனக்கு வொர்க் வந்திருச்சுங்களா மேடம்” என்றவன் நக்கலாகக் கேட்டாலும் அவன் முகத்தில் ஆழமான கோபம் தென்பட்டது.
இரண்டு நாளாகவே அவனிடம் பேசாமல் அவள் அவனைத் தவிர்த்து வருகிறாள். எங்கே அவனிடம் பேசினால் அவனுக்காகத் தன் மனம் ஏங்குவதை காட்டிக் கொடுத்து விடப்போகிறோம் என்ற பயத்தில்தான் அவள் விலகிப் போக முயல,
“உன்கிட்ட பேசணும்தான் வந்தேன்... இப்போ நீ உட்காருவியா மாட்டியா?” என்றவன் அதிகாரமாகக் கேட்க, வேறு வழி இல்லாமல் அமைதியாக அவன் எதிரே அமர்ந்தாள்.
“ஏன் தீப்ஸ்... என் மனசுல இருக்குறதை வெளிப்படையா சொன்னது ஒரு குத்தமா? அதுக்காக என்னை நீ இப்படி அவாயிட் பண்ணி அசிங்கப்படுத்தணுமா?” என்றவன் கேட்ட கேள்வியில் அவள் பதறிவிட்டாள்.
“என்ன பேசுற சத்யா...? அப்படி எல்லாம் இல்ல?”
“வேற எப்படி...? நான் எங்க நிற்குறேனோ அங்கிருந்து நீ நகர்ந்து போயிடுற... நான் பேச வந்தா ஏதோ காரணம் சொல்லி எழுந்து போயிடுற...”
”நீ இவ்வளவு மோசமா என்னை அவாயிட் பண்றளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன் உன்னை...? கல்யாணம் பண்ணிக்க விருப்பமான்னு கேட்டேன்... நீயும் விருப்பம் இல்லன்னு சொல்லிட்ட...”
”அதுக்கு அப்புறம் எந்த விதத்திலையாச்சும் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணவோ கட்டாயப்படுத்தவோ செஞ்சேனா தீப்ஸ்? சொல்லு” என்றவன் அழுத்திக் கேட்க அவள் குற்றவுணர்வுடன் தலையைத் தாழ்த்தினாள்.
“சத்தியமா நான் உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல... நான் பழகுன பொண்ணுங்களயே ரொம்ப மெச்சூரான பொண்ணு நீதான்னு நான் நினைச்சிட்டு இருக்கேன்... ஆனா நீ என்னடானா...” என்றவன் வருத்தத்துடன் நிறுத்த,
“ஐம் சாரி சத்யா” என்றாள்.
அவன் எரிச்சலுடன், “எனக்கு உன் சாரி எல்லாம் வேண்டாம்... இதோட நம்ம ஃப்ரண்ட்ஷிப் முடிஞ்சிடுச்சுனு என் முகத்துக்கு நேரா சொல்லிடு... நான் போயிட்டே இருக்கேன்” என,
“அப்படி எல்லாம் என்னால சொல்ல முடியாது சத்யா” என்றவள் குரல் தழுதழுக்க விழிகளில் கண்ணீர் சொட்டியது.
“தீப்ஸ்”
“எனக்கு உன் ஃபிரண்ட்ஷிப் வேணும் சத்யா... ஃலைப் லாங் வேணும்” என்றவள் மனதிலிருந்து சொல்லியதைக் கேட்டு அவன் நெகிழ்வுடன்,
“நீ இப்படிதான் சொல்லுவேன்னு எனக்கு நல்லா தெரியும் தீப்ஸ்... பட் நீ என்னை அவாயிட் பண்ற மாதிரி நடந்துக்கிட்டது என்னை ரொம்ப ஹார்ட் பண்ணிடுச்சு தெரியுமா? அதான் நானும் கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன்” என்றான்.
“இட்ஸ் ஓகே... எனக்குப் புரியுது” என்றவள் தலையசைக்கவும்,
“அப்படினா... ஃப்ரண்ட்லி மோட் எப்பவும் போல... லெட்ஸ் ஷேர் திஸ் ஜூஸ்” என்று அவன் சொல்லவும் அவளும் புன்னகைத்தாள். இருவரும் அந்தப் பழச்சாறைப் பகிர்ந்து பருகினர்.
அத்தனை நேரம் அவள் மனதில் வலம் வந்த பிரச்சனைகள் எல்லாம் கழன்று கொண்ட அதேநேரம் அவள் பூசிக் கொண்டிருக்கும் நட்பு என்ற சாயம் எப்போது வெளுத்துவிடுமோ என்று அவளை அப்போது பயமுறுத்தியது.. முடிந்தளவு அவனிடம் மிகவும் எச்சிரிக்கையாக பழகினாள்.
இப்படியாக தீபிகாவிற்கு அந்த வாரம் தவிப்பும் குழப்பமுமாக முடிய, சனிக்கிழமை அவள் தங்கையும் தங்கை கணவன் பிரதீப்பும் வீட்டிற்கு வருகைத் தந்தனர். தீபிகாதான் அவர்களை ஆர்வமாக வரவேற்றாள். முன்பே பிரதீபிடம் சில முறைகள் அலைப்பேசியில் அவள் பேசி இருந்ததால் அவர்களுக்கு இடையில் அறிமுகம் தேவைப்படவில்லை.
அவன் தீபிகாவிடம் சகஜமாகப் பேசினான்.
ஜெர்மனியில் அவள் வேலையைப் பற்றியும் அங்குள்ள சூழ்நிலைகள் பற்றியும் மிக ஆர்வமாக அவளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
அவளும் சுவாரிசயமாக தான் தங்கியிருந்த இடத்தைப் பற்றி எல்லாம் விவரிக்க பிரதீப் வருத்தத்துடன், “சை... மிஸ் பண்ணிட்டோமே... நீங்க அங்கேயே இருந்திருந்தீங்கனா... உங்களைப் பார்க்குற சாக்குலயாச்சும் வந்து ஜெர்மனியைச் சுத்திப் பார்த்திருக்கலாம்” என,
“இப்ப கூட என்ன... நம்ம எல்லோரும் சேர்ந்து ஒரு யுரோப்பியன் டூர் ப்ளேன் பண்ணலாம்” என்றாள்.
“செலவு உங்களோடதுனா எனக்கு ஓகே” என்றவன் சொல்ல,
“இது நல்ல கதையா இருக்கே” என்றவள் பதிலுக்குக் கிண்டல் செய்ய, அவர்கள் வீடே கலகலத்தது. ஒரு வகையில் அவர்கள் அப்படி சகஜமாக உரையாடுவது பாலாஜிக்கும் ராஜேஸ்வரிக்கும் நிம்மதியாக இருந்தது.
அதன் பின் எல்லோரும் சேர்ந்து பேசிக் கொண்டே உண்டு முடித்த சில நிமிடத்தில், “நான் கிளம்புறேன் மாமா” என்று பிரதீப் புறப்பட தயாரானான்.
“அதுக்குள்ள கிளம்புறீங்களா?” என்று நந்திகா கணவன் முகத்தை வருத்ததுடன் ஏறிட,
“ஏன் மாப்பிளை... நாளைக்கு ஞாயிற்று கிழமைதானே இருந்துட்டு போங்க” என்றார் பாலாஜி.
“இருக்கட்டும் மாமா... நான் இருந்தா ரொம்ப நாள் கழிச்சு பார்த்திருக்க அக்கா தங்கச்சிங்களோட பிரைவஸி கெட்டுப் போகும்” என்றவன் சிரித்துக் கொண்டே சொல்ல,
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல... இருங்க பிரதீப்” என்றாள் தீபிகாவும்.
அவன் உடனே, “இல்ல... வீட்டுல அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு முடியல... அதான் போக வேண்டி இருக்கு... இல்லாட்டி இருந்துட்டுதான் போயிருப்பேன்” என்று சொல்ல, அதற்குப் பிறகு யாரும் அவனைத் தடுக்கவில்லை.
கணவனை வழியனுப்ப சென்ற நந்திகா வெகுநேரம் அவனிடம் தர்க்கம் செய்து ஒரு வழியாக அனுப்பி வைத்துவிட்டுத் திரும்ப,
“ஏன்டி... கிளம்புற நேரத்துல மாப்பிளைகிட்ட சண்டை போடுற?” என்று ராஜேஸ்வரி கடுகடுத்தார்.
“பின்ன... எப்போ வந்தாலும் இதே கதைதான்... ஒரு இரண்டு நாள் கூட இங்க இருக்க மாட்டுறாரு... இதுல என் மாமியார் வேற ஏதேதோ டிராமா பண்ணி... அவரை இங்க இருக்க விடாம் பண்ணிடுது” என்று தன் புகுந்து வீட்டுக் கதையைப் புலம்ப ஆரம்பித்தாள்.
“சரி விடுடி... இவ்வளவு நேரம் நம்ம கூடதானே இருந்துட்டுப் போனாரு” என்ற ராஜேஸ்வரியின் சமாதானம் ஒன்றும் அவள் காதில் விழவில்லை.
கணவன் சென்றுவிட்ட வருத்தத்தில் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த தங்கையை தீபிகாதான் சமாதானம் செய்து அறைக்குள் அழைத்து வந்தாள்.
சகோதிரிகள் இருவரும் நேரம் போவது தெரியாமல் கதை கதையாக அளந்து கொண்டிருந்தனர். எங்கெங்கோ சுற்றி வந்த அவர்களின் உரையாடல் இறுதியாக தீபிகாவின் திருமணத்தில் வந்து நின்றது.
“எத்தனை நாளைக்கு க்கா நீ இப்படி தனியாவே இருக்க போற?” என்ற அதர பழைய வசனத்தில் ஆரம்பித்த நந்திகா,
“நீ வெளிநாட்டுக்குப் போயிருந்த சமயத்துல உன்னை நினைச்சுதான் அம்மா அப்பா எப்பவும் வருத்தப்பட்டு பேசிட்டு இருப்பாங்க... உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி முடிச்சிட்டா அவங்களுக்கு உண்மையிலேயே நிம்மதியா இருக்கும்... அவங்க மனசுல இருக்க பாரமெல்லாம் இறங்கிடும்” என்று அவள் நீட்டி முழக்கி அம்மா அப்பா சென்டிமெண்டில் முடித்தாள். ஆனால் அவள் பேசிய எதுவும் தீபிகாவின் மனதை அசைக்கவில்லை.
“நீ சொல்றதெல்லாம் எனக்குப் புரியுது நந்து... ஆனா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்... ப்ளீஸ் அம்மா அப்பாகிட்ட சொல்லிப் புரிய வை” என்று தீபிகா அதோடு அந்தப் பேச்சைக் கத்தரித்துவிட, அதற்கு மேல் நந்திகாவால் ஒன்றும் பேச முடியவில்லை.
“சரி க்கா நான் அம்மா அப்பாகிட்ட பேசுறேன்” என்றவள் அப்போதைக்கு அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டாள். ஆனால் ராஜேஸ்வரி சுலபத்தில் விடவில்லை.
“நீயே அவசரபட்டுத் தப்பா ஒரு முடிவை எடுத்ததனாலதான் உன் வாழ்க்கைல இப்போ இவ்வளவு பிரச்சனையும் குழப்பமும்... ஒரு வேளை நாங்க பார்த்து உனக்குக் கல்யாணம் பண்ணி வைச்சிருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்குமா... நாங்க நடக்கவிட்டிருப்போமா?” என்று கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அவளை விடாமல் குத்திக் காட்டியவர் தொடர்ந்து திருமணத்திற்குச் சம்மதிக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார்.
அதுவும் அவள் அலுவலகத்திற்குப் போகிற நேரம் தவிர மற்ற நேரங்களில் அவள் இது போன்ற தொடர் பேச்சுக்களைக் கேட்க வேண்டி நேர்ந்தது.
ஒரு வகையில் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டுமென்பது அவர்கள் எண்ணமாகவே இருந்தாலும் அதற்கு அவள் மனம் கொஞ்சமாவது ஒத்துப் போக வேண்டுமே. ஆனால் ராஜேஸ்வரிக்கு அது புரியவில்லை.
ஏன் ஜெர்மனியிலிருந்து வந்தோம் என்று அவள் யோசிக்குமளவுக்கு அவர் விடாமல் அவளைத் தொந்தரவு செய்தார்.
எங்கே ஞாயிற்று கிழமை விடுமுறையில் வீட்டில் இருந்தால் திருமணப் பேச்சை ஆரம்பித்துவிடப் போகிறாரோ என்று பயந்த தீபிகா தன் அப்பாவின் சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றுவிட்டு வருவதாக சொல்லி நழுவிவிட்டாள்.
அவள் எதார்த்தமாக அங்கே சென்றாலும் அப்போது பில்லிங் செய்யும் ஊழியர் விடுப்பில் சென்றுவிட்டதில் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த தந்தைக்கு அவளின் வருகைப் பெரும் உதவியாக இருந்தது. சில நிமிடங்களில் அவளும் அந்த வேலையைக் கச்சிதமாகக் கற்றுக் கொண்டு பில்லிங்கில் அமர்ந்துவிட்டாள்.
அன்று மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்ததில் அவளால் பில்லிங்கிலிருந்து எழுந்து கொள்ளவே முடியவில்லை. அவளும் ஒரு நிலைக்கு மேல் வேலையில் மூழ்கிவிட்டதில் நேரம் போவதைப் பற்றி யோசிக்கவில்லை.
வாடிக்கையாளர்கள் கொண்டு வந்த பொருள்களைப் பார்த்து அதனை அவள் பில் செய்து கொண்டிருந்தாள். அப்போது தாடியும் மீசையுமாக வெள்ளை வேட்டி சட்டையில் வாட்டச்சாட்டமாக வெறுங்கையுடன் வந்து நின்ற ஆடவனைக் குழப்பமாகப் பார்த்தவள்,
“நீங்க எடுத்துட்டு வந்த திங்க்ஸ் எங்க?” என்று விசாரிக்க, அவன் பதில் பேசாமல் அவளையே கூர்ந்து பார்த்தான்.
“என்ன சும்மா நிற்குறீங்க... பொருள் எடுத்துட்டு வந்தீங்களா இல்லயா? இல்லனா ப்ளீஸ் நகர்ந்து போங்க... பின்னாடி வரவங்களுக்கு பில் போடணும்” என்றவள் வேலை மும்முரத்தில் அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டே அடுத்தவர்களைப் பார்த்து, “நீங்க கொண்டு வாங்க” என்று கேட்க,
அவனோ அங்கேயே நின்று கொண்டு, “நான் எதுவும் வாங்க வரல” என்று தெனாவட்டாகக் கூறவும் அவளுக்குக் கடுப்பானது.
“அப்புறம் எதுக்கு சார் வந்தீங்க?”
“நான் மாமாவைப் பார்க்க வந்தேன்... மாமா இல்லயா தீபா?” என்றவன் கேட்ட நொடிதான் இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று அவளுக்குச் சட்டென்று பொறித் தட்டியது.
அவனை உற்றுக் கவனித்தவளுக்கு அப்போதுதான் அடையாளம் தெரிய வர, அவள் முகம் சுண்டிவிட்டது. அவனை நேரடியாக எதிர்கொள்ள சங்கடப்பட்டுக் கொண்டே,
“அப்பா பின்னாடி ஸ்டாக் செக் பண்ணிட்டு இருக்காரு” என்று மெல்லிய குரலில் பதிலளிக்க, அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவன் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
அந்தப் பார்வையில் என்ன இருந்தது?
‘என்னை வேண்டாமென்று சொல்லிவிட்டுப் போய் நீ என்ன வாழ்ந்து கிழித்தாய்... சீரழிந்துதானே போனாய்?’ என்ற வன்மமா? அல்லது ‘ஐயோ பாவம்... உன் வாழ்க்கை இப்படி பாழாய் போய்விட்டதே’ என்ற பரிதாபமா?
உண்மையில் அவனின் அந்தப் பார்வையில் அவளால் எதையும் யூகிக்க முடியவில்லை. ஆனால் அவள் மனம் பாட்டுக்கு ஏதேதோ கற்பனைகளைச் செய்து கொண்டது.
அவனைப் பார்த்தப் பிறகு அவளால் இயல்பான வேகத்தில் வேலை செய்ய முடியவில்லை. தடுமாறினாள். கையில் எடுத்தப் பொருட்கள் எல்லாம் நழுவின. கடந்த கால நினைப்புகள் அவளை முள்ளாகக் குத்தின.
பில் செய்து கொண்டே அவன் எங்கே இருக்கிறான் என்று அவள் பார்வையைத் திருப்ப, அவன் அவள் தந்தையிடம் ஏதோ முக்கியமாகப் பேசிக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் பேசிவிட்டு அவன் புறப்பட்டு வெளியே வர, அவன் செல்லும் திசை பக்கமே அவள் திரும்பவில்லை. வேலையில் மும்முரமாக இருப்பது போல தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
அவன் வாசலைத் தாண்டிச் சென்றதும்தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
10

Quote from Marli malkhan on March 12, 2025, 10:20 PMSuper ma
Super ma