மோனிஷா நாவல்கள்
Kannadi Thundugal - Episode 13

Quote from monisha on March 14, 2025, 5:55 PM13
அன்பிற்காகவும் உறவுகளுக்காகவும் விட்டுக் கொடுப்பதில் ஓர் அலாதியான சுகம் இருக்கிறதுதான். ஆனால் எல்லா நேரங்களிலும் விட்டுக் கொடுத்தல் சுகமாக இருப்பதில்லை. சில நேரங்களில் அவைச் சுமையாகவும் மாறிவிடும்.
காபி கோப்பையுடன் வந்து அமர்ந்த தீபிகா தன்னுடைய கணினியில் வேலையைத் தொடர்ந்தாள்.
இரண்டு மூன்று நாட்களாக விடுப்பு எடுத்ததில் தேங்கிவிட்ட வேலைகள் யாவும் இப்போது மலை போலக் குவிந்து கிடந்தன. இன்னும் ஒரு மாதத்தில் திருமணத்திற்காக ஒரு நீண்ட விடுப்பை எடுக்க வேண்டியிருக்கும் நிலையில், அப்போதைக்கு அவளுக்குத் தன்னுடைய பணிகளைச் சரியாக முடித்துக் கொடுத்துவிட வேண்டுமென்ற டென்ஷன்தான்.
அதுவும் அவள் குழுவினர் யாரும் பெரிதாக உதவிக்கு இல்லை. இது போன்ற இக்கட்டான நிலையில் அவர்களின் வேலைகளை எல்லாம் இவள் எடுத்து முடித்துத் தந்திருக்கிறாள். ஆனால் இன்று அவளுக்கு என்று வரும் போது ஒருத்தரும் இல்லை.
சத்யா அவளுக்கு உதவக்கூடியவன் என்றாலும் அவனிடம் கேட்பதற்கு அவள் மனம் விரும்பவில்லை. இருவரும் இயல்பாகப் பேசியே மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டன. அதுவும் அவனே விலகி நிற்கும் போது அவளாக வலிய சென்று எப்படி பேசுவது? அது சரியாகவும் வராது.
காபி கோப்பைக் காலியாகிவிட்டது. அலுவலகப் பணியாளர்களும் ஒவ்வொருவராகக் கிளம்பிக் கொண்டிருந்தனர். இதற்கு மேல் இங்கேயே இருந்தால் அவர்கள் ஏரியாவிற்குச் செல்லும் கடைசி கேபும் கிளம்பிவிடும். பிறகு வீட்டிற்குச் செல்வதற்கு நிச்சயம் ரொம்பவும் தாமதமாகிவிடலாம். அவ்வளவுதான். அதன் பின் ராஜேஸ்வரி ஏழு எட்டுக் கட்டையில் வசை பாட ஆரம்பித்துவிடுவார்.
அந்தக் காட்சியை எண்ணிப் பார்த்த மறுகணம் அவள் தன் கணினியை அணைத்துவிட்டு எழுந்து கொண்டாள். தோள் பையை மாட்டியவள் தன் கைப்பேசியை எடுக்க, அதில் தங்கையின் மூன்று மிஸ்ட் கால்கள் இருந்தன. அவளுக்கு அழைத்துப் பேசிக் கொண்டே நடந்தாள்.
“என்ன நந்து கால் பண்ணி இருந்த?”
“அம்மா உன் கல்யாணப் புடவையோட ஃபோட்டோஸ் அனுப்பி இருந்தாங்க க்கா... அதைப் பார்த்துட்டுதான் உன்கிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன்”
“ஓ! பார்த்தியா... புடவை எப்படி இருந்துச்சு?”
“நல்லாத்தான் இருந்துச்சு... ஆனா?”
“என்ன சொல்லு?”
“அந்த ஆரஞ்சு புடவை கொஞ்சம் அடிக்கிற மாதிரி இல்ல?” என்றவள் தயக்கத்துடன் இழுக்க,
“கொஞ்சம் இல்ல... நல்லாவே அடிக்கிற மாதிரிதான் இருந்துச்சு... பட் எனக்குப் பிடிச்சிருந்துச்சு” என்றாள்.
“உண்மையிலேயே உனக்குப் பிடிச்சிருந்துச்சா... நீதான் அந்தப் புடவையை செலெக்ட் பண்ணியா?” என்றவள் சந்தேகத்துடன் கேட்க,
“ஆமா நான்தான் செலெக்ட் பண்ணேன்... அப்படி இருந்தாதானே அந்த ஹாலிலேயே கல்யாணப் பொண்ணா... நான் பளிச்சுன்னு பிரைட்டா தெரிவேன்” என்றவள் சிரித்துக் கொண்டே சொல்ல,
“உன் டேஸ்ட் ரொம்பவே மாறிடுச்சுக்கா” என்றாள் நந்து.
“நேரத்துக்கு ஏத்த மாதிரி நம்ம டேஸ்ட் மாத்திக்குறதுல தப்பு இல்ல” என்றவள் சொன்ன கருத்து நந்திகாவிற்குப் பிடிபடவில்லை.
“சரி உனக்குப் பிடிச்சிருந்தா ஓகேதான்”
“என் புடவையை விடு... உனக்கு எடுத்தப் புடவை எல்லாம் பார்த்தியா...? பிடிச்சிருந்துச்சா?”
“பிடிச்சுதான் இருந்துச்சு... ஆனா நான் வந்திருந்தா லெங்கங்கா எடுத்திருப்பேன்” என்றவள் வருத்தத்துடன் சொல்லவும்,
“அம்மாதான் உன்னை கூப்பிட்டாங்க இல்ல... வர வேண்டியதுதானே... வேலை இருக்கு அது இருக்குன்னு காரணம் சொல்லிட்டு இப்ப வந்து லெகங்கா எடுத்திருக்கலாம்னு இழுக்கிற” என்றவள் கடுப்புடன் கேட்கும் போதே நந்திகா அந்தப் பக்கம் அழத் தொடங்கிவிட்டாள். இதை அவள் எதிர்பார்க்கவில்லை.
“ஏ நந்து... எதுக்கு அழுற... என்னாச்சு?” என்றவள் கேட்டுக் கொண்டே திறந்திருந்த லிப்ட் வழியாக உள்ளே நுழைய, அங்கே சத்யா மட்டும் தனியாக நின்றிருந்தான். அவனைக் கண்டவள் தன் பேச்சை நிறுத்திவிட, இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று சந்திக்க முடியாமல் திரும்பிக் கொண்டன.
மறுபுறம் அலைப்பேசியில் நந்திகா, “என் வீட்டுப் பிரச்சனை என்ன தெரியுமா? நான் கிளம்பலாம்னுதான் இருந்தேன்... ஆனா என் மாமியார்தான் சண்டைப் போட்டு எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க” என்று கதை அளந்து கொண்டிருந்தாள்.
“அதானா?” என்று தீபிகா சாதாரணமாகக் கேட்க,
“என்ன அதானான்னு சிம்பிளா கேட்குற... இங்கே உன்னால எங்க வீட்டுல... எவ்வளவு பிரச்சனைனு தெரியுமா?” என்று அந்தப் பக்கம் நந்திகா கொதிக்கவும் அவளுக்குப் புரியவில்லை.
“என்னால பிரச்சனையா?” என்று கேட்க லிஃப்ட் திறந்து கொண்டது. சத்யா வெளியேறவும் கொஞ்சம் தாமதித்து வெளியே வந்தவள்,
“என்னால பிரச்சனையா... என்னடி அது?” என்று மீண்டும் கேட்டாள்.
“என் மாமியார் சொல்லுது... இது உங்க அக்காவுக்கு இரண்டாவது கல்யாணம்தானே... அவளுக்கு இப்போ புடவை எடுக்கிற பங்கஷனுக்கு எல்லாம் அவ்வளவு முக்கியமா நாம போகணுமான்னு... அதுவும் நீ ஓடிப் போன கதையெல்லாம் வேற பேசி அசிங்கப்படுத்துது” என்றவள் நடந்ததைச் சொல்லி வேதனையில் புழுங்க, தீபிகாவின் முகம் இருளடர்ந்து போனது.
வேகமாக நடந்து சென்று கொண்டிருந்த அவள் கால்கள் அப்படியே நின்றுவிட்டன.
நந்திகா மேலும், “எனக்கு செம கோபம் வந்திருச்சு... நான் நல்லா கத்திவிட்டேன்... வீட்டுல இதனால் ஒரே பிரச்சனை சண்டை” என்று உரைக்கும் போது தங்கையின் குரலிலிருந்த வேதனையையும் எதிர்கொண்ட அவமானத்தையும் தீபிகாவால் உள்வாங்க முடிந்தது.
“எனக்கு உன் நிலைமை புரியுது நந்து... மனசு கஷ்டப்படாதே... பார்த்துக்கலாம்” என்று தன்னைத்தானே ஒருவாறு சமாளித்துக் கொண்டவள் தங்கைக்கும் சமாதானம் கூறிவிட்டு மேலும் இந்த விஷயத்தில் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ள வேண்டாமென்றும் அறிவுறுத்தினாள்.
ஆனால் நந்திகாவின் மனம் அமைதியாவதாக இல்லை.
“ஒழுங்கா வேலைக்குப் போயிட்டு இருந்த வரைக்கும் ஒரு பிரச்சனையும் இல்லக்கா... இவங்க சொன்னாங்கனு வேலையை விட்டது தப்பா போச்சு... அதுக்கு அப்புறம்தான் எப்ப பாரு பிரச்சனை?” என்றவள் மேலும் தன் நிலைமையைக் கூறி வெதும்பினாள்.
“நான் அப்பவே வேலையை விடாதன்னு சொன்னேன் கேட்டியா...? இப்ப வந்து வருத்தப்பட்டா... சரி விடு... எல்லாம் போகப் போக சரியாயிடும்” என்று சமாதானம் கூறியவள் மேலும், “உங்க வீட்டுல நடந்த பிரச்சனை எதுவும் அம்மாகிட்ட சொல்லாதடி... அப்புறம் அவங்க உன்னலாதான் தங்கச்சி வீட்டுல பிரச்சனைனு என்னைதான் குத்திக் காட்டுவாங்க” என,
“தெரியும் க்கா அதான் சொல்லல” என்றாள் நந்து.
“சரி நந்து... நான் கேப்ல ஏறப் போறேன்... அப்புறம் பேசுறேன்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்ட தீபிகா உடனடியாக தங்கையின் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பிவிட்டு லெகங்கா வாங்கிக் கொள்ளச் சொல்லிக் குறுந்தகவல் அனுப்பி வைத்தாள்.
அதன் பின் அவளுக்காகக் காத்திருந்த அலுவலக காரில் ஏறிக் கொண்டாள். அதில் ஏற்கனவே அமர்ந்திருந்த உடன் பணிபுரியும் தோழிகள் இருவரிடம் புன்னகைத்துவிட்டுத் திரும்ப, பின்னிருக்கையில் இரண்டு ஆடவர்கள் அமர்ந்திருந்ததைப் பார்த்தாள். அவற்றில் ஒருவன் சத்யா. சிரமப்பட்டு அவனைப் பார்த்து அவள் புன்னகைக்க, அவனும் பெயருக்கென்று புன்னகைத்தான்.
அதன் பிறகு அவள் திரும்பவே இல்லை. ஆனால் பின்னே இருந்த ஆடவன் சத்யாவிடம் பேச்சுக் கொடுத்து கொண்டே வந்தான்.
“என்ன சத்யா... பேப்பர் போட்டியாமே உண்மையாவா?”
“ம்ம்ம் ஆமா”
“திடீர்னு வேலையை விடுற அளவுக்கு என்னாச்சு?”
“ஒன்னும் ஆகல... நல்ல சம்பளத்தோட நல்ல நல்ல ஆஃபர்ஸ் வருது... ஸோ அதை யூஸ் பண்ணிக்கலாம்னு” என்று அவன் பேசியதை விரும்பியும் விரும்பாமலும் கேட்க நேர்ந்ததில் அவள் மனம் கனத்தது.
அவன் எப்போதும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கேட்டிருக்கிறாள். அவன் நிச்சயம் விரும்பி எல்லாம் இந்த வேலையை விட வாய்ப்பில்லை. அவளை எதிர்கொள்ள முடியாமல்தான் விலகிக் கொள்ளப் பார்க்கிறான்.
இந்தத் தகவல் அவள் மனதிற்கு ரொம்பும் கஷ்டமாக இருந்தது. கார் அவனுடைய அடுக்குமாடி குடியிருப்பில் நிற்க, அங்கே இறங்கியவன் திரும்பிப் பார்க்காமல் நடந்தான். அவள் அவன் செல்லும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கார் நகர்ந்து தூரமாக வந்துவிட்டது.
எப்போதும் நம்முடைய நட்பு இப்படியே இருக்கும் என்றவன் சொன்னதெல்லாம் வெறும் வார்த்தைதான். ஒருவரை ஒருவர் விரும்பித் திருமணம் செய்யவும் முடிவெடுத்த பின் மீண்டும் அந்த உறவை நட்பாக மாற்றிக் கொள்வதெல்லாம் சாத்தியமற்ற காரியம். ஒரு வகையில் சத்யாவின் முடிவு சரிதான் என்று எண்ணிக் கொண்டவள் தன் கைப்பேசியிலிருந்து,
“உன்னுடைய புது வேலைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தட்டச்சு செய்து அனுப்பினாள்.
சில நிமிடங்களில் அவன், “உன்னுடைய திருமண வாழ்கைக்கு எனது வாழ்த்துகள்” என்று பதில் அனுப்பியிருந்தான். அதனைப் படித்ததும் அவள் கண்களிலினோரம் கண்ணீர் கசிந்தது.
நாம் போகும் பாதைகளில் இது போன்ற நல்ல நல்ல நட்புக்களைத் தொலைத்துவிட நேர்வது எல்லாம் நம்முடைய துர்பாக்கியமான நிலைமையே அன்றி வேறென்ன?
சட்டென்று வனிதாவின் நினைவு வந்தது. அவள் கூட அப்படிதான் தன் வாழ்வில் வந்த தடம் தெரியாமல் போய்விட்டாள். விவேக் வீட்டில் நல்ல தோழியாகவும் சகோதிரியாகவும் இருந்தவள். அங்கிருந்து வந்த பின் இருவரும் தங்களது பழக்கத்தைத் தொடர முடியாமல் போய்விட்டது.
இப்படி யோசித்திருக்கும் போதே கார் அவள் வீட்டு வாசலில் நின்றது. அமைதியாக இறங்கிவிட்டு அவள் உள்ளே நடக்க, “கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வந்தா என்ன உனக்கு...? கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இருக்க நேரத்துல கூட இப்படி லேட்டாதான் வீட்டுக்கு வரணுமா?” என்று ராஜேஸ்வரி மகளிடம் கடுகடுக்க,
“இல்லம்மா கொஞ்சம் வேலை” என்றவள் சோர்வுடன் பதிலுரைத்தாள்.
“சரி சரி போய் ட்ரஸ் மாத்திட்டு வா... நான் டிஃபன் எடுத்து வைக்கிறேன்”
“இருக்கட்டும் மா... நீங்க போய் படுங்க... நான் எடுத்து வைச்சு சாப்பிட்டுக்கிறேன்” என்று அவரை அனுப்பிவிட்டு அறைக்குள் வந்தாள். உடை மாற்றிவிட்டு முகம் கை கால்களை அலம்பிக் கொண்டு வந்து உணவு மேஜையில் அமர்ந்து ஹாட் பேக்கில் இருந்த இட்லியை வைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கினாள்.
அப்போது அவள் அலைப்பேசி ரீங்காரமிடவும் அறைக்குள் சென்று அதனைத் தேடி எடுப்பதற்குள் அமைதியாகிவிட்டது. யார் என்று அவள் பார்க்க, கிருபாகரன் என்று காட்டியது.
இப்போதைக்கு அவனிடம் பேசும் மனநிலையில் தான் இல்லை என்று எண்ணிக் கொண்டவள் மீண்டும் உணவு மேஜைக்கு வந்து சாப்பிட அமர்ந்தாள். அவள் உண்டு முடிப்பதற்குள் இரண்டு முறை அவள் கைப்பேசி அடித்து ஓய்ந்தது.
சாப்பிட்டு முடித்துப் படுக்கையில் வந்து அமர்ந்தபடி தன் கைப்பேசியைப் பார்க்க, அனைத்துமே கிருபாவின் அழைப்புகள்தான். ‘பிஸியா இருக்கியா?’ என்று கேட்டு ஒரு குறுந்தகவலை வேறு அனுப்பி இருந்தான்.
ஏதோ பேச விரும்புகிறான் என்று எண்ணி அவளே அவன் எண்ணிற்கு அழைக்கவும், “டிஸ்டர்ப் பண்ணிட்டேனா...? தூங்கிட்டு இருந்தியோ?” என்று கேட்க,
“இல்ல இல்ல... இப்பதான் ஆஃபிஸ்ல இருந்து வந்தேன்” என்றவள் சொல்ல,
“எனக்கும் இப்பதான் வேலை முடிஞ்சுது... அதான் உன்கிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன்” என்றான்.
அவளுக்கு உண்மையில் அவனிடம் பேசுவதற்கான ஆர்வம் இல்லை. உடல் சோர்வும் மனச்சோர்வும் சேர்ந்து அவளை அழுத்திக் கொண்டிருந்தது. அவனோ அது எதுவும் அறியாமல் தன் பேச்சைத் தொடர்ந்தான். படுக்கையில் சாய்ந்தபடி அவள் வெறுமனே உம் கொட்டிக் கொண்டிருந்தாள்.
அவன் அழைப்பை அவளாகத் துண்டிக்க ஒரு மாதிரி இருந்தது. அதுவும் ஆசையாக அவளிடம் பேச அழைத்திருப்பவனிடம் என்ன சொல்லி இணைப்பைத் துண்டிப்பது. அவனாகப் பேசிவிட்டு வைக்கட்டும் என்றவள் நினைத்திருக்க, அவனோ பேச்சை நிறுத்துவதாக இல்லை.
பஞ்சாயத்து போர்ட் பிரஸிடென்ட்டாக அவன் வேலையில் இருக்கும் தொல்லைகள் நெருக்கடிகள் போன்றவற்றை விவரித்துக் கொண்டிருந்தவன், தொடர்ச்சியாக அவள் வேலை சூழ்நிலைகள் பற்றியும் கேள்விகள் கேட்டான்.
அவளும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருக்க, அவன் அந்தப் பேச்சிலிருந்து அவர்களின் சிறு வயது நினைவுகளுக்குள் தாவினான். பின் மெல்ல அவன், அவளைக் காதலித்தக் கதைகளைச் சொன்னான்.
அவளுக்கோ கண்களைச் சுழற்றிக் கொண்டு உறக்கம் வந்தது. அவன் இப்போதைக்கு நிறுத்த மாட்டான் போல என்று எண்ணிச் சலிப்புற்றவள் காதில் கைப்பேசியை வைத்துக் கொண்டே தலையணையை நன்றாகச் சாய்த்துப் படுத்துக் கொண்டாள்.
அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டே அவள் கண்களை மூடிவிட்ட சமயம் அவன் சொன்ன வார்த்தை ஒன்று அவள் செவிக்குள் விழுந்து அவளை உலுக்கி எடுத்தது. அவசரமாக கண்களைத் திறந்து பார்த்தாள்.
அவன் இன்னும் தன் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருக்க, “கிருபா இப்போ என்ன சொன்ன?” என்று கேட்க,
“என்ன சொன்னேன்... வீட்டுல அம்மாகிட்ட உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சண்டைப் போட்டதைப் பத்தி சொன்னேன்”
“இல்ல... நீ இடையில ஏதோ?” என்று அவள் காதில் விழுந்த அந்த வார்த்தையைப் பற்றிக் கேட்க எண்ணியவள் அதனைக் கேட்காமல் நிறுத்திக் கொண்டாள்.
“என்ன தீபா...? ஏதோ சொல்ல வந்த... சொல்லு?” என்றவன் கேட்க,
“சாரி கிருபா... நாம நாளைக்குப் பேசுவோமா... எனக்குத் தூக்கம் வருது?” என்றவள் அந்தப் பேச்சை அதனுடன் முடித்துக் கொள்ள,
“சரி ஓகே தூங்கு... நான் நாளைக்கு கால் பண்றேன்” என்றவன் வைத்துவிட்டான். சரியாக அவன் சொன்ன வார்த்தை என்ன என்று யோசித்துப் பார்த்தாள்.
அதுவும் அவள் ஓடிப் போனதைப் பற்றி ஏதோ அவன் குத்தலாகச் சொன்னது போலிருந்தது. ஆனால் உண்மையில் என்ன சொன்னான் என்பது மட்டும் தெளிவாக அவள் நினைவுக்கு வரவில்லை.
அதுவும் அவன் பேசியது என்னவென்று தெரியாமல் அவனிடமும் கேட்க முடியாது. அது ஏதாவது தப்பாக முடிந்துவிடலாம் என்று குழம்பியவளுக்கு அதற்குப் பின் இரவெல்லாம் உறக்கமே வரவில்லை.
மனதில் சொல்ல முடியாத ஒரு பயவுணர்வு அழுத்தத் தொடங்கிய போதும் ஒருவாறு தன் உணர்வுகளைச் சமன்படுத்திக் கொண்டவள் தெளிவாகத் தெரியாத விஷயத்தைப் பற்றி ரொம்பவும் யோசித்துக் குழப்பிக் கொள்ள வேண்டாமென்று விட்டாள்.
அதற்குப் பிறகு கிருபாகரன் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவளுக்கு அழைத்தான். அவளும் அவனிடம் இணக்கமாகப் பேச முயன்றாள். அவனைப் புரிந்து கொள்ள எண்ணினாள்.
ப்ரீ வெடிங் ஃபோட்டோ ஷுட்டில் அவளுக்கு விருப்பமே இல்லாவிட்டாலும் அவன் ரொம்பவும் விருப்பப்பட்டுக் கேட்டதால் சம்மதித்தாள். ஆனால் அந்தச் சூழ்நிலை ஒரு வகையில் அவர்கள் உறவில் நெருக்கத்தை உண்டாக்கியது.
கொஞ்சம் கொஞ்சமாக தன் மனதிலிருந்த குழப்பங்கள் கவலைகள் கடந்த காலத்தின் மோசமான அனுபவங்கள் என்று அத்தனையும் ஒதுக்கிவிட்ட தீபிகா திருமண மேடையில் கிருபாகரனின் தாலியைப் பெற்று அவனைக் கணவனாக ஏற்றுத் தன் வாழ்வின் சரிபாதியாகவும் மாற்றிக் கொண்டாள்.
இருவரும் பெரியவர்களின் ஆசிப்பெற்று தம்பதிகளாகத் தங்கள் வாழ்க்கையின் புது அத்தியாயத்தை எழுத காத்திருந்தனர்.
13

Quote from Marli malkhan on March 14, 2025, 11:55 PMSuper ma
Super ma