மோனிஷா நாவல்கள்
Kannadi Thundugal - Episode 14

Quote from monisha on March 17, 2025, 6:38 PM14
நமக்கு ஏற்படும் ஏமாற்றங்களுக்கு காரணங்கள் பல நேரங்களில் மனிதர்கள் இல்லை. நிறைய எதிர்பார்ப்புகளைச் சுமக்கும் நம் மனங்கள்.
தீபிகா இன்னும் பிரமிப்பிலிருந்து மீளவில்லை. அந்தளவு ஆடம்பரமும் பிரமாண்டமுமாக நிகழ்ந்தது அவளின் திருமண வரவேற்பு.
திருமண மண்டபத்தில் ஆரம்பித்து வழி முழுதும் நிற்க வைக்கபட்ட அவர்களின் வரவேற்பு பதாகைகள், காதைக் கிழிக்குமளவுக்கு நிகழ்த்தப்ட்ட வானவேடிக்கைகள், பிரபலமான இசைக் குழுவின் கச்சேரிகள் மற்றும் அமைச்சர்கள் அரசியல் தலைவர்களின் வருகைகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் அவர்களின் திருமணத்தில் ஆடம்பரத்தின் சாயல் படிந்திருந்தது.
பந்தியில் பரிமாறப்பட்ட உணவு வகைகளைப் பார்த்தாலே பசித் தீர்ந்துவிடுமளவுக்கு அத்தனை வகையான உணவுகள் இலைகளில் தவம் கிடந்தன. பலவை அப்படியே குப்பைக்கும் போயின.
கனவில் கூட இப்படி எல்லாம அவள் கற்பனை செய்ததில்லை.
அதேநேரம் இதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியாக அவளுக்குத் தோன்றிய போதும் அந்த எண்ணத்தை அவள் வெளிப்படுத்தவில்லை. மனதோடு வைத்துக் கொண்டாள். இது போன்ற கருத்துக்கள் அவர்களுக்கு ஒத்து வராது. இந்த ஆடம்பரமும் அதகளமும் மாமா மற்றும் கிருபாவின் அரசியல் வாழ்கைக்கு மிக மிக அவசியமானது.
புது மணதம்பதிகளை அழைத்துக் கொண்டு சிவப்பு வண்ண ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான அந்தப் புது கார் அவர்களின் ஊரை நோக்கிப் பயணித்தது. திருமண ஜோடிகளுடன் அவர்களின் பெற்றோர்களும் அதில் அமர்ந்திருந்தனர்.
உறங்காத களைப்பும் திருமணச் சடங்குகள் ஏற்படுத்திய அயர்ச்சியிலும் தீபிகா தன்னை மறந்து அப்படியே ஜன்னல் மீது சாய்ந்து கண்ணயர்ந்துவிட, அதனைப் பார்த்த கிருபா அவள் தலையை மெதுவாகத் தன் தோள் மீது சாய்த்துக் கொண்டான்.
எவ்வித சங்கடங்களும் இன்றி அவனின் கரங்கள் அவள் தோளை அரவணைப்பாகச் சுற்றிக் கொள்ள, தன் மீது சரிந்திருந்த அவள் முகத்தை ஆசையாகப் பார்த்தான். எத்தனை ஆண்டு கனவு. அவள் பருவ வயதை எட்டுவதற்கு முன்பிலிருந்தே கொண்ட விருப்பமல்லவா?
பின் அந்த விருப்பம் காதலாகி தாபமாகி அவனுக்குள் வருடகாலமாக நெருப்பாகத் தகித்துக் கொண்டிருந்தது. இன்றும் அந்த நெருப்பு அவனுக்குள் அதே உஷ்ணத்துடனும் உக்கிரத்துடனும் எரிந்து கொண்டிருந்தது.
கார் லேசாகக் குலுங்கியதில் விழித்துக் கொண்டவள், அணைத்திருந்த அவன் கரத்தைக் கண்டதும் சங்கடத்துடன் விலகிச் செல்ல முனைய, “ஊர் வர இன்னும் நேரம் இருக்கு தீபா... தூங்கு” என்றான்.
“இல்ல வேண்டாம்... எனக்குத் தூக்கம் போயிடுச்சு” என்றவள் தள்ளி வந்த அமர்ந்து கொள்ள, அருகே இருந்த அவளின் மெல்லிய கைவிரல்களை விடாமல் அவன் கரம் அழுத்திப் பிடித்தது.
“எல்லோரும் இருக்காங்க... கிருபா” என்று வாயசைப்பில் அவள் சொல்ல, அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. அவன் கை விரல்கள் அவள் கரத்தைத் தொட்டுத் தடவியபடி இருந்தன. வெட்கமும் சங்கடமுமாக அவள் தலையை ஜன்னல் புறம் திருப்பிக் கொண்டாள்.
சில நிமிடங்களில் கார் அவர்கள் ஊருக்குள் நுழைந்தது. பாதைகளின் இருபுறமும் பச்சைப் பசலேன்று விரிந்திருந்த அழகான காட்சியினூடே திருஷ்டிப் பொட்டாகச் சில நிறுவனங்களும் முளைத்திருந்தன.
இது எதுவும் அவளுக்குப் புதிய காட்சி இல்லை. சிறு வயதிலிருந்து அவள் பார்த்த இரசித்து வாழ்ந்த இடங்கள் அவை.
பாட்டியின் ஊருக்கு ஆசை ஆசையாக ஓடி வந்த காலம் என்று ஒன்று உண்டு. பள்ளிக் காலங்களில் விடுமுறை விட்டுவிட்டால் அக்கா தங்கைகள் இருவரும் அங்கே வந்துவிடுவார்கள். மாமா வீட்டிற்குப் போகிறோம் என்றதும் குதித்துக் கொண்டாடுவார்கள்.
இனி அந்த மாமா வீடுதான் தன்னுடைய வீடு. காலம் முழுக்கவும் தான் அங்கேதான் கழிக்கப் போகிறோம் என்ற உணர்வு அவளுக்குள் பல மாதிரியான எதிர்பார்ப்புகளைக் கொடுத்தது.
கண்களை மூடி அவளின் சிறு வயது ஞாபகங்களுக்குள் கொஞ்சம் பயணித்துப் பார்த்தாள். அத்தனையும் சுவாரசியமான நினைவுகள். நொண்டி, கண்ணாமூச்சி, பல்லாங்குழி விளையாடுவது, சொப்பு சாமானில் சாப்பாடு சமைப்பது என அது ஒரு அழகான உலகம்.
அந்த அழகான உலகத்தில் அவள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது பாடரென்று ஒரு வெடி சத்தம் ஒலித்து அவளது இதயத்தை அதிர செய்தது. நினைவுகளைக் குலைத்தது.
அவள் வெளியே எட்டிப் பார்க்க அவர்களை ஊருக்குள் வரவேற்பதற்காகதான் சரவெடிகள் போடப்பட்டன. அது அல்லாது அவர்களின் படங்கள் பதாகைகளாக வழி முழுதும் வைக்கப்பட்டிருந்தன. ஊருக்குள் இப்படியொரு வரவேற்பை அவள் எதிர்பார்க்கவில்லை.
அவற்றை எல்லாம் அவள் வியப்பாகப் பார்த்துக் கொண்டு வர, அங்கிருந்த ஒரு பதாகையைப் பார்த்துத் துணுக்குற்றாள். ப்ரீ வெடிங் ஷூட்டின் போது எடுத்தப் படம்.
‘இதைப் போய் பேனர்ல போடுவாங்களா?’ அவள் முகம் சுணங்கியது.
திரும்பி தன் கணவனைப் பார்க்க அவன் அந்த வரவேற்புக்களை இரசித்துக் கொண்டிருந்தான். அமைதியாகத் திரும்பிக் கொண்டாள்.
மாமா வீடு வந்தது. அந்த ஊரிலிருக்கும் மிகப் பெரிய பங்களா வீடு அது. பாட்டியின் காலத்தில் சிறிய கூரை வீடாக இருந்தது பின்னாளில் மாடிவீடாக மாறி, இப்போது பெரிய பங்களாவாக உயர்ந்து கம்பீரமாக நிற்கிறது.
வீட்டிற்கு முன்னிருந்த வாயிலின் முன்பு நான்கைந்து கார்கள் நிறுத்தலாம். அந்தளவுப் பெரிய வாசல். உறவினர்கள் சூழப் புது மணத்தம்பதிகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தீபிகாவும் கிருபாவும் பளிங்குத் தரைப் பளபளக்கும் அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்து உள்ளே வந்தனர். அதன் பின் சடங்குகள் சம்பிராதயங்கள் என்று சில நிமிடங்கள் கழிந்தன.
மெல்ல மெல்ல உறவுகள் களைந்துச் செல்ல, கொஞ்சமாக அவளுக்கு மூச்சு விட அப்போதே நேரம் கிடைத்தது. கிருபா செல்பேசியில் ஏதோ ஒரு அழைப்பு வரவும் பேசிக் கொண்டே எழுந்து சென்றுவிட்டான். வாசலில் ஏதோ கூட்டம் போல ஆண்கள் எல்லாம் வட்டமிட்டுப் பேசிக் கொண்டிருந்தனர்.
பாட்டி வீடாக இருந்த போதும் தற்சமயம் அங்கே ஓர் அந்நிய உணர்வு உண்டாகியிருந்ததை அவளால் உணர முடிந்தது. அந்த வீட்டில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சமீபமாக இன்டீரியர் வேலைகள் நடந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவற்றை எல்லாம் சுற்றிப் பார்த்தாள்.
மேஜைகள் சோஃபாக்களிலிருந்து அத்தனையும் புதிதாக மாற்றப்பட்டிருந்தன. வீட்டின் சுவர்களில் வண்ண ஓவியங்கள் அலங்கரித்திருந்தன.
“நல்லா இருக்கு இல்ல க்கா... எல்லாம் கிருபா மாமாதான் பார்த்துப் பார்த்துப் பண்ணாராம்... போன முறை நானும் என் வீட்டுக்காரரும் விருந்துக்கு வந்த போது அத்தை சொன்னாங்க” என்று நந்திகா சொல்ல, அவள் வியப்புற்றாள்.
இத்தனை இரசனையானவனா அவன்? நம்பவே முடியவில்லை. அவனைப் பற்றிப் பெரிதாக அவள் இப்போது வரை தெரிந்து கொள்ளவில்லை. இனி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.
அப்போது அங்கே வந்த சங்கரி, “நீ கொஞ்ச நேரம் ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோயேன் தீபா” என்று சொல்லிவிட்டு, “நந்து மா... அவனை கிருபா ரூமுக்கு அழைச்சிட்டுப் போறியா?” என்று கேட்க,
“சரிங்க மாமி” என்றவள் தமக்கையை மாடியில் இருக்கும் அறைக்கு அழைத்துச் செல்ல, “ஆமா... பிரதீப் வரலயாடி உன் கூட?” என்று தங்கையிடம் கேட்டுக் கொண்டே நடந்தாள் தீபிகா.
“வரல க்கா... மண்டபத்துல இருந்து அவங்க அம்மா அப்பாவை வீட்டுல விடக் கிளம்பிட்டாரு... அவங்களால எல்லாம் ரொம்ப நேரம் இந்த மாதிரி கூட்டத்துல எல்லாம் மேனேஜ் பண்ண முடியாது” என்று தங்கை பேசியதைக் கேட்டபடி நடந்த தீபிகா, அவன் அறைக்குள் வந்ததும் அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டாள்.
எதிரே இருந்த சுவரில் அவளின் சிறு வயது புகைப்படங்கள் அலங்கரித்திருந்தன. மற்றச் சுவர்களில் அவளும் கிருபாவும் ஜோடியாக இருக்கும் படங்கள் பெரிது செய்யப்பட்டு மாட்டப்பட்டிருந்தன.
திகைப்புடன் அவற்றை எல்லாம் அவள் பார்த்திருக்க ஆச்சரியம் கொண்ட நந்திகா அக்காவின் தோள்களை அழுத்தி, “கிருபா மாமாக்குள்ள இப்படியொரு ரொமான்டிக் ஹீரோவை நான் எதிர்பார்க்கவே இல்ல க்கா... நீ ரொம்ப கொடுத்த வைச்சவ” என்றாள்.
தங்கை பேசியது எதுவும் அவள் காதில் விழவில்லை. அவள் வீட்டில் கூட அவளின் படம் ஒன்று கூட இல்லை என்ற எண்ணம் வரவும் அவள் மனம் உணர்ச்சியில் திளைத்தது.
“என்ன க்கா... நீ ஃபுல் ஃப்ளாட் போல?” என்று தங்கை கேலிச் செய்யவும் மெல்ல தன் உணர்வுகளிலிருந்து மீண்டு வந்தவள்,
“அப்படி எல்லாம் இல்ல” என்று மறுத்தாள்.
“சும்மா சொல்லாதே க்கா” என்று அவளைப் போட்டு உலுக்கி வெட்கப்பட வைத்தவள், “எங்களுக்கு எல்லாம் வாச்சிருக்கங்க பாரு... ஒரு ரொமான்ட்டிக் லுக் கூட இல்ல... எப்பவும் அம்மா முந்தானையைப் பிடிச்சு சுத்திட்டு இருக்குங்க” என்று சலித்துக் கொள்ள,
“ஒரேடியா பிரதீப்பை வாராத... பாவம் அவரு உன்கிட்டயும் அவங்க அம்மாகிட்டயும் மாட்டிக்கிட்டுப் படாத பாடுபடுறாரு” என்றாள் தீபிகா.
“அட போக்கா... உனக்கு ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசாதே நான்தான் அவங்ககிட்ட மாட்டிக்கிட்டுப் படாதபாடு படுறேன்” என,
“அம்மா தாயே... உன் குடும்பக் கதையை ஆரம்பிக்காதே.... என்னால முடியல... ஏற்கனவே டயர்டா இருக்கு” என்று தீபிகா தலைக்கு மேல் கையை உயர்த்திக் கும்பிடு போடவும்,
“சரிக்கா... நான் ஆரம்பிக்கல... நீ படுத்துக் கொஞ்ச நேரம் தூங்கு... நான் கீழே போறேன்” என்றவள் எழுந்து கொண்டாள்.
“நீ ஏன் போற... இரு... எனக்கு இங்க தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கு” என்று தீபிகா சங்கடத்துடன் அவள் கரத்தைப் பிடிக்க,
“நம்ம மாமா வீடுதானே க்கா... இங்கே என்ன க்கா உனக்கு... நான் கீழே போறேன்... ஏதாச்சும் வேலை இருக்கும்... நான் போய் பார்க்கிறேன்... நீ படுத்துக்கோ” என்று விட்டு நந்திகா அந்த அறை கதவை மூடிக் கொண்டு சென்றாள்.
தீபிகா அந்த அறையைச் சுற்றும் முற்றும் தயக்கத்துடன் பார்வையிட்டபடி படுக்கையில் தலை சாய்த்துக் கொண்டாள். அவள் பார்வைக்கு நேராக கிருபாவின் படமொன்று மாட்டப்பட்டிருந்தது.
அந்தப் படம் அவளை வெகுவாக ஈர்த்தது. வேட்டிச் சட்டையில் ஒரு மாதிரி தெனாவட்டாக நின்றிருந்தான். அதலிருந்த அவனின் கம்பீரமான தோரணையை இரசித்திருந்தவளுக்குப் பார்வையைத் திருப்பவே முடியவில்லை.
உடலும் மனமும் சோர்ந்திருந்த போதும் அவளுக்கு அப்போது உறக்கம் வரவில்லை. கிருபாவின் நினைப்பு அவள் மனதை ஏதோ செய்தது. உள்ளம் உணர்வுகளால் பொங்கியது.
கண்களை மூடி அவனுடனான ஒரு கற்பனை உலகத்திற்குள் அவள் சென்றுவிட அந்தக் கற்பனைகள் அவளை எங்கெங்கோ இழுத்துச் சென்றன. திடீரென்று கிருபா இடத்தில் விவேக் நின்றிருந்தான். பதறித் துடித்து விழித்துக் கொண்டாள்.
‘சை... இப்போ எதுக்கு அவன் மூஞ்சி வந்துது’ என்று எரிச்சலடைந்தவளுக்கு அந்தக் காட்சி உறக்கத்தில் கனவுக்கும் அவள் கற்பனைக்கும் இடையில் நடந்த ஏதோவொரு குழப்பம் என்று புரிந்தது. முகத்தைத் துடைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
கீழே எல்லோரும் மும்முரமாக வேலை செய்தபடி பேசிக் கொண்டிருந்தனர். நந்திகாவும் அவர்களுக்கு உதவிக் கொண்டிருக்க, யாரும் அவளைக் கண்டுகொள்ளவில்லை. அவளுக்கு எதுவும் செய்யாமல் அமர்ந்திருக்கக் கடுப்பாக இருந்தது. பின்புறக் கதவைத் திறந்து தோட்டத்திற்குள் சென்றாள்.
அவள் பாதம் பதித்த இடத்தில் மஞ்சள் பூக்களும் வரிசையாக நடப்பட்டிருந்த கஸ்தூரி செடியிலிருந்து உதிர்ந்த மலர்களும் பாதை அமைத்திருந்தன. நித்திய மல்லிக் கொடி மேல் மாடியில் ஏறிப் படர்ந்திருந்த காட்சிப் பார்க்க இரம்மியமாக இருந்தது.
அவள் அவற்றை எல்லாம் பார்த்தபடி தோட்டத்திற்குள் நடந்தாள். முன்வாசலை விட இரு மடங்கு பெரியளவிலான இடம் பின்னே இருந்தது. காய்கறிகள் கீரைகள் எல்லாம் ஒரு புறம் பாத்தி செய்து நடப்பட்டிருக்க, மறுபுறம் பலா, வாழை, கொய்யா, தென்னை என்று வகை வகையான மரங்கள் அவ்விடத்தை நிழற்குடையாக மாற்றியிருந்தன.
சிறு வயதில் இவ்வளவு செடிகளும் மரங்களும் இங்கே இருந்ததாக அவள் நினைவில் இல்லை. இடமும் அப்போது இத்தனை பெரிதாக இல்லை. ஆனால் அவர்கள் சந்தோஷமாக ஓடி விளையாடுமளவுக்குப் பெரிய இடமாக இருந்தது. ஆங்காங்கே நின்ற மரங்களுக்கு மறைவில் அவள் ஒளிந்து கொண்டிருக்கிறாள்.
அந்த நாட்கள் எல்லாம் திரும்பவும் வராது. இனி அப்படி எல்லாம் விளையாடவும் முடியாது. ஆனால் அமைதியாக அமர்ந்திருக்க இது ஓர் அற்புதமான இடம் என்று எண்ணியவள் பாதைகள் அமைக்கப்பட்டிருந்த மொசைக் கல்லின் மீது நடந்தாள்.
வலதுபுறத்தில் ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி இருந்தது. மோட்டர் போட்டதும் அதில் தண்ணீர் நிரப்பப்பட்டுவிடும். இன்றும் அதில் தண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது. அங்கே நடந்து வந்தவளுக்கு அருகே பெண்கள் சிலரின் பேச்சுக் குரல் கேட்டது.
“அந்தப் பொண்ணு ஓடிப் போன கதை ஊரே நாறுச்சு தெரியாதா உனக்கு”
“அது தெரியும்... ஆனா எப்படி திரும்பி வந்துச்சு”
“அது பெரிய கதை... நம்பி போனவன் சரியான நாற பையன்... பிள்ளைதாச்சியா இருந்தவள அடிச்சு உதைச்சு துரத்தி வுட்டுட்டு இருக்கான்”
“சாதி சனத்தை அவமானப்படுத்திட்டுப் போனா இல்ல... அவளுக்கு நல்லா வேணும்”
“ஆனா இப்போ அதுக்கு அமைஞ்சிருக்குப் பாரு வாழ்க்கை”
“சும்மா சொல்லச் கூடாது... அந்த கிருபா பையன் தங்கமானவன்”
“பின்ன... அவ ஓடிப் போய் சீரழிஞ்சு திரும்பி வந்த பிறகும் வாழ்க்கைக் கொடுத்து இருக்கான்... இவ காலத்துக்கும்... அவன் காலடிலயே இல்ல விழுந்து கிடக்கணும்”
அதற்கு மேல் அந்தப் பேச்சுக்களை அவளால் கேட்க முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவரின் வார்த்தைகளும் அடி ஆழம் வரை சென்று அவளது கடந்த காலக் காயங்களைக் குத்திக் கிளறிவிட்டன. தொடர்ந்து இது போன்ற அவமதிப்பான பேச்சுக்களைக் கேட்டு அவள் பழகிவிட்ட போதிலும் வலித்தது.
கண்களில் கண்ணீர் நிறைந்து வழிந்தது. தொடர்நது கண்களில் வழிந்த கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
யாராவது அவளை இப்படி அழுது வடிந்து கொண்டு பார்த்தால் தவறாக நினைப்பார்கள் என்று பதட்டமானவள் அருகே இருந்த தண்ணீர் தொட்டியிலிருந்த தண்ணீரை முகத்தில் வாரி இறைத்துக் கொண்டாள்.
அவள் கண்ணீர் அதனுடன் கலந்துவிட்டது. சத்தமில்லாமல் அந்த இடத்தை விட்டு அவள் நீங்கி விட எத்தனிக்க, கிருபா அவள் எதிரே வந்தான்.
அவளைப் பார்த்ததும் அவன் முகம் புன்னகை வீச, அவள் மனமோ வேதனையில் அமிழ்ந்திருந்தது. அவனைப் பார்த்துப் புன்னகை செய்யும் மனநிலையிலும் அவள் இல்லை. விட்டால் போதும் அங்கிருந்து ஓடிவிடலாம் என்று இருந்தவளை அவன் வழிமறித்து நின்று கொண்டு,
“தனியா இங்க என்ன பண்ணிட்டிருக்க?” என்று கேள்வி எழுப்ப,
“இல்ல சும்மாதான் நடந்து வந்தேன்” என்றவள் மிகச் சிரமப்பட்டு தன் அழுகையை மறைத்துக் கொண்டு பேசினாள்.
அவனுக்கு அவள் உணர்வுகள் புரியவில்லை. ஆனால் அவள் முகத்தில் வழியும் ஈரத்தைக் கண்டவன், “முகத்தைக் கழுவிட்டு... துடைக்காம நிற்குற” என்று அங்கே கொடியிலிருந்த துண்டை எடுத்து வந்து கொடுத்து, “துடைச்சுக்கோ தீபா” என்றான்.
அவள் எதுவும் பேசாமல் அதனை வாங்கித் துடைத்துக் கொள்ளவும் அவள் நெற்றியிலிருந்த பொட்டு நெற்றியின் ஓரத்தில் இடமாறியது.
அவன் கைக்காட்டி, “நெத்தி பொட்டு தள்ளி வந்திருச்சு” என, அவள் அதனைத் தொட்டுத் தேட,
“நான் வைக்கிறேன் இரு” என்று அந்தப் பொட்டை எடுத்துச் சரியாக அவள் புருவத்தின் மத்தியில் ஒட்ட வைத்தவன்,
“நீ ரொம்ப அழகா இருக்க தீபா” என்றபடி அவள் கன்னங்களைத் தன் கைகளால் வழித்து எடுத்து உதட்டில் முத்தமிட அவள் திகைப்புற்றாள்.
அதற்குள் யாரோ, “கிருபா” என்று அழைக்க அவன், “ஆ தோ வர்றேன்” என்று விட்டு அவளைப் பார்த்து அழகாய் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அவனின் அந்தச் செய்கையில் சற்று முன்பாக அவள் மனதில் ஏறியிருந்த பாரமெல்லாம் அப்படியே காற்றோடு கரைந்து போனது.
14

Quote from Marli malkhan on March 18, 2025, 3:33 PMSuper ma
Super ma