மோனிஷா நாவல்கள்
Kannadi Thundugal - Episode 17

Quote from monisha on March 29, 2025, 8:28 PM17
காலையில் நடந்த சம்பவம். மாலையாகிவிட்ட போதும் அதன் தாக்கம் கொஞ்சமும் குறையாமல் தீபிகா அப்படியே தரையில் படுத்துக் கிடந்தாள். ஆனால் செய்யக் கூடாததை எல்லாம் செய்துவிட்டு முக்கியமான அழைப்பு வந்ததென்று அவன் குளித்துக் கிளம்பிவிட்டான்.
இருட்டிவிட்டது. வீட்டில் விளக்கேற்றவில்லை. அவள் மனம் பாட்டுக்கு ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தது.
‘எதற்கு ஓடிப் போனோம்? எதற்குத் திரும்பி வந்தோம்? மீண்டும் எதற்கு இவனைக் கல்யாணம் செய்தோம்? இங்கே வந்து என்ன வாழக்கையை வாழ்கிறோம்?’ இது போன்று அவள் மனம் எழுப்பும் கேள்விகளுக்குச் சரியாக அவளிடம் எந்தப் பதில்களும் இல்லை.
எல்லாமே அவளை மீறி நடந்தவைதான். அவசரத்திலும் வேகத்திலும் நடந்து முடிந்துவிட்டவை.
ஆனாலும் கிருபாவுடனான திருமணத்தை அவள் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டாள். மனதார அவனை நேசித்துதான் அவனுடன் உறவு கொண்டாள்.
இந்த நான்கு மாதத் திருமண வாழ்க்கையில் அவனுடன் சந்தோஷமாக இருந்த சந்தர்ப்பங்களும் உண்டு. அதே போல வார்த்தைகளால் காயப்பபட்ட அனுபவங்களும் உண்டு.
அதுவும் போகிற போக்கில் அவன் தூக்கி வீசும் வார்த்தைகள் அவளை மொத்தமாக நிலைகுலையச் செய்துவிடும்.
ஒரு நாள் சாதாரணமாக அவனுக்குச் சமையலுக்கு உதவி செய்வதாகச் சொல்லி காய் நறுக்கிக் கொண்டே, ‘உனக்கு ஏன் என்னை விட்டுட்டுப் போயும் போயும்... அந்த விவேக்கைப் பிடிச்சுது’ என்று கேட்கவும் அவள் எரிச்சலுடன்,
“கிருபா... திஸ் இஸ் யுவர் லிமிட்... இந்த மாதிரி பேசாதன்னு உன்கிட்ட பல முறை சொல்லி இருக்கேன்” என்று கண்டிக்க,
“தெரியும்... நீ சொல்லி இருக்கதான்... ஆனா நீயே யோசிச்சு பாரு... இந்தக் கேள்விக்கான பதிலை நான் வேற யார்கிட்ட கேட்க முடியும்?” என்றவன் சகஜமாக அந்த உரையாடலை மாற்றிவிடப் பார்ப்பான். அப்போதுதான் அவளுக்குக் கோபம் ஏகபோகத்துக்கும் ஏறும்.
அவனிடம் சண்டைப் போட்டுக் கத்தித் தொண்டை வறண்டு அழுது முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு, “நான் சாதாரணமாதான் கேட்டேன்... நீதான் சீரியஸா எடுத்துக்கிட்டு ரொம்ப சீன் போடுற... இப்படிதான் அன்னைக்கு அம்மாகிட்டயும் பேசி இருப்பன்னு நினைக்கிறேன்” என்று அந்தச் சூழ்நிலையை மாற்றி அவளையே குற்றவாளியாக நிறுத்திவிடுவான்.
படுக்கையில் ஒருமுறை அவனுடன் அவள் களித்து உறவாடி உச்சகட்ட இன்பத்தில் இருக்கும் போது,
“ஏன் தீபா” என்றவன் மெல்ல அவள் காதோரம் நெருங்கி, “அந்த விவேக் கூட இருந்த போது இந்த மாதிரி எப்பயாச்சும் ஃபீல் பண்ணி இருக்கியா?” என்று கேட்டு வைக்க அவள் கூனிக் குறுகிவிடுவாள். அந்த நொடி அவளுள் சுரந்த மொத்த இன்ப ஊற்றும் அமிலச்சுரப்பியாக மாறிவிட,
“சை... என்ன மனுஷன்டா நீ?” என்று அழுது கொண்டே அவனைத் தள்ளிவிட்டு, “அதைப் பத்தி பேசாதே பேசாதேன்னு சொன்னா கேட்க மாட்டியாடா... கேட்க மாட்டியாடா?” என்று சகட்டு மேனிக்கு அடித்துத் தள்ளிய போதும்,
“ஏ... அடிக்காதடி... சும்மா சும்மாதான்டி கேட்டேன்... விடுடி” என்று சாதாரணமாகத் தான் பேசியதை மட்டுப்படுத்திவிடுவான். அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் அவனிடம் முகம் கொடுத்துப் பேசாமல் சண்டையிட்டு அழுது பின் அவளே சமாதானமாகிவிடுவாள்.
யோசித்துப் பார்த்தால் விவேக் போல இதுவரையில் கிருபா அவளைக் கை நீட்டி அடித்ததில்லை. கை ஓங்கியது கூட இல்லை.
‘பொம்பள புள்ளை மேல கை நீட்டுறவன் ஆம்பளையே இல்ல’ என்று ஆயா ஒரு முறை சொன்னதாகச் சொல்லி இருக்கிறான்.
ஆனால் அடிகளை விட வார்த்தைகள் அதிகமாக காயப்படுத்தும் என்பதை ஆயா அவனிடம் சொல்லாமல் போனது அவளின் துரதிஷ்டம்தான்.
அதேநேரம் அவனுடைய குத்திக் காட்டல்களைத் தாண்டி அவன் அவளிடம் நல்லபடியாகவும் நடந்து கொண்டிருக்கிறான். அதேநேரம் ஊருக்குள் எந்த விழா, சடங்கு, கோவில் என்று எங்கே போனாலும் அவளையும் அழைத்துக் கொண்டுதான் போவான்.
அவள் வரவில்லை என்று மறுத்தாலும், “நீயும் வா தீபா... ஒன்னா போயிட்டு வரலாம்” என்று கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு செல்வான்.
அதேபோல அவள் தனியாக எங்கே போகிறேன் என்று சொன்னாலும் கூட மறுத்து அவனும் துணைக்கு வருவான். ஏன் இப்படிச் செய்கிறான் என்று அவள் யோசித்தாலும் கூட உள்ளுரத் தம்பதியாக அவன் கைக் கோர்த்துக் கொண்டு நிற்பது அவளுக்கும் பிடித்தே இருந்தது.
அதுவும் அங்கே அவனுக்குக் கிடைக்கும் மரியாதையும் மதிப்புகளையும் பார்க்கும் போது அவனுடைய மனைவியாக அவளுக்கும் பெருமையாக இருக்கும்.
இது ஒருபுறம் என்றால் மறுபுறம் அவன் இல்லாத சந்தர்ப்பங்களில் ஊரில் எங்காவது சென்றால் யாரும் அவளிடம் சரியாக முகம் கொடுத்துக் கூடப் பேசமாட்டார்கள். சமீபமாக தங்கம் கூட முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டாள். எல்லாம் சங்கரியிடம் அவள் போட்டுவிட்டு வந்த சண்டையால்தான். அந்த விஷயம் ஊர் முழுக்கப் பரவி, என்னவோ குடும்பத்தைப் பிரித்த சீரியல் வில்லி போல அவளை ஊருக்குள் சித்தரித்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால் கிருபாவோ தனிக்குடித்தனம் வந்த பத்தே நாளில் தன் அம்மா அப்பாவுடன் சமாதானமாகி அவர்கள் வீட்டுக்குப் போக வர இருக்கிறான். கடைசியில் அவள்தான் தனியாளாகி விட்டாள்.
அதுவும் தனிக்குடித்தனம் வந்ததில் அம்மா அப்பாவிடமும் அவளுக்கு முட்டிக் கொண்டுவிட்டது. நந்திகாதான் ஓரளவு அவளிடம் தொடர்பில் இருக்கிறாள். ஆனால் அவளும் கிருபாவை ஒரு ஹீரோ பிம்பமாகதான் பார்க்கிறாள்.
‘மாமா கிரேட் க்கா... உனக்காக மாமி கிட்ட சண்டை எல்லாம் போட்டு உனையா தனியா கூட்டிட்டு வந்துட்டாரு... ஆனா என் வீட்டுல பாரு... கஷ்டம்’ என்று அவனைப் புகழ்வதோடு தன்னிலையைச் சொல்லி வேறு புலம்புவாள்.
அவளுக்கு நிச்சயம் இவள் நிலைமை புரிய வாய்ப்பே இல்லை.
இதில் தனிக்குடித்தனம் என்ற பெயரில் தனித்தீவு போல மாந்தோப்பில் ஒரு சிறிய பங்களா. ஆரம்பத்தில் பார்க்கும் போது இரசனையாகத்தான் இருந்தது. ஆனால் நாட்கள் போகப் போகத் தனிமையில் தவித்துப் போனவள் உடனடியாக அலுவலகத்தில் விடுப்பை முடித்துக் கொண்டு வேலைக்குச் சேர முடிவெடுத்தாள்.
“கண்டிப்பா வேலைக்குப் போயே ஆகணுமா... அப்படி என்ன தீபா அவசியம்?” என்று அவளைப் பின்புறமாகக் கட்டியணைத்துக் கொண்டு குழைந்தவன், “அவ்வளவு தூரம் நீ எப்படி போயிட்டு வருவ? உனக்கு ரொம்ப கஷ்டம்டி” என்று அவளுக்காக உருக வேற செய்தான். ஆனால் அவன் கொஞ்சலுக்கும் கெஞ்சலுக்கும் அவள் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.
“தூரம் எல்லாம் இல்ல கிருபா... இங்கிருந்து பைக்ல ஸ்டேஷன் போயிட்டா... அப்புறம் ஒரே ட்ரைன்தான்... அதிகபட்சம் ஒன்றரை மணி நேரமாகும்... அவ்வளவுதான்”
“ஒன்றரை மணி நேரம்னா... ட்ரேவலிங் டைம் மட்டும் மூணு மணி நேரமாகுது தீபா... அவ்வளவு நேரம் ட்ரேவல் செஞ்சு போயிட்டு வந்தா உடம்பு கெட்டுப் போயிடாதா?” என்றவன் அவள் உடல்நிலையைச் சுட்டிகாட்ட, அவள் அதற்கும் கரையவில்லை.
“இது எப்பவும் நான் ட்ரேவல் பண்ற டைம்தான்... அம்மா வீட்டுல இருந்தாலும் ட்ராபிக்ல போய் சேர இவ்வளவு நேரம் ஆகும் கிருபா... என்னைக் கேட்டா இங்கிருந்து ட்ரைன் போறதுனால இன்னும் ஈஸியாதான் இருக்கும்” என்றாள்.
அவனும் விடாமல் மடக்கி மடக்கி ஏதாவது காரணம் சொல்லித் தடுக்க பார்க்க, அவளும் விட்டுக் கொடுக்காமல் அவன் கேட்ட கேள்விக்கு எல்லாம் திறமையாகப் பதில் சொல்லி அவனைத் திருப்பி மடக்கிவிட, அதற்கு மேல் மறுக்க அவனுக்கு எந்தக் காரணமும் இல்லை.
“சரி போயிட்டு வா... ஆனா ஒன்னு... நான்தான் காலைல உன்னை ஸ்டேஷ்ன்ல ட்ராப் பண்ணுவேன்... நைட் நீ வரும் போது உன்னைக் கூட்டிட்டு வருவேன்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட, அவ்வளவுதானே என்று அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டுவிட்டாள்.
ஆனால் அவன் சொன்ன விஷயத்தில் இருக்கும் வில்லங்கம் அப்போது அவளுக்குப் புரியவில்லை. முதல் இரண்டு மூன்று வாரங்கள் அவளைக் காலையும் மாலையும் பைக்கில் ஒழுங்காக அழைத்துச் சென்று வந்தவன் மெல்ல மெல்ல தன் அலப்பறைகளை ஆரம்பித்தான்.
அவள் எழுப்ப எழுப்ப நேரம் கழித்து எழுந்து கொள்வது அல்லது பைக்கை மெதுவாக ஓட்டிக் கொண்டு வருவது என்றவன் இரயிலை தவறவிட வைத்துவிடுவான்.
“உன்னாலதான் லேட்டாகிடுச்சு... நீ கொஞ்சம் ஃபாஸ்டா ஓட்டிட்டு வந்திருந்தா ட்ரைனைப் பிடிச்சிருக்கலாம்... இப்போ நான் எப்படி போவேன்... அடுத்த ட்ரைன் பத்து மணிக்குதான்” என்றவள் படபடப்பாகப் பேசிக் கொண்டிருக்கும் போது,
“இதுக்குதான் இந்த ஆஃபிஸ் போற டென்ஷன் எல்லாம் வேண்டாம்னு உன்கிட்ட அப்பவே சொன்னேன்” என்றவன் பதில் கூற அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
இருந்தும் அவன் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அடுத்து வந்த இரயிலைப் பிடித்து அலுவலகம் சென்றுவிட்டாள். ஆனால் அங்கே சென்று சேரவே மதியம் ஒரு மணி ஆகிவிட்டது. உடலும் சோர்ந்து போய்விட்டது. அதற்கு பின்பு அவள் எங்கிருந்து வேலை செய்வது?
இதற்காகவே அடுத்த நாள் அவள் எழுந்து அடித்துப் பிடித்துச் சீக்கிரமாகவே புறப்பட்டுவிட்டாள். ஆனால் வழியில் ஊர்காரர்கள் அவனை நிறுத்திப் பேச, அவனோ நிதானமாக அவர்களிடம் பேசி நேரத்தை கடத்துவிட்டுக் கிளம்பினான்.
“இப்போ ரொம்ப முக்கியமா அவங்ககிட்ட கதைப் பேசறது... ட்ரைனுக்கு டைமாவுதுன்னு தெரியல உனக்கு” என்றவள் கோபமாக அவனிடம் எகிற,
“கதைப் பேசிட்டு இருந்தேனா... நான் இந்த ஊர் பிரஸிடென்டுமா... அவங்க ஊர் பிரச்சனையைப் பேசிட்டு இருக்கும் போது பாதில விட்டுட்டா வர முடியுமா? அதான் பேசி முடிச்சிட்டு வரேன்” என்று விளக்கம் தர, அதற்கு மேல அவள் என்ன பேசுவது?
அவர்கள் வேலை என்றால் அது முக்கியமான விஷயம். அதுவே அவள் வேலை என்றால் துச்சம். இது பெரும்பான்மையான ஆண்கள் மனதில் இருக்கும் எண்ணம்தான்.
அவள் வேலைக்குப் போவதை எப்படியாவது நிறுத்திவிட வேண்டுமென்ற நினைப்பில்தான் அவன் இப்படி எல்லாம் செய்கிறான் என்று அவளுக்குப் புரியாமல் இல்லை.
ஆனால் அவன் என்ன செய்தாலும் அவளும் வேலையை விடுவதில்லை என்று தீவிரமாக இருக்க அவனும் விடாமல் குடைச்சல் கொடுத்துக் கொண்டேதான் இருந்தான்.
அன்று இரவு இரயில் நிலையத்தில், ‘தோ பக்கத்துல வந்துட்டேன்... இங்கேதான் இருக்கேன்’ என்று அவளை அலைகழித்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் இரயில் நிலையத்தில் காக்க வைத்துவிட்டான். தனிமையில் ரொம்பவும் தடுமாறிப் போனவள்,
“ஏன் கிருபா... இவ்வளவு லேட்டு... நான் எவ்வளவு நேரமா தனியா உட்கார்ந்திட்டு இருக்கேன் தெரியுமா... என் நேரம்... இங்க எல்லாம் கேப் கூட வராது... என்ன பண்றதுன்னே எனக்குப் புரியல” என்று வியர்த்துக் கொட்டி அழாத குறையாக அவள் சொல்ல,
“எனக்குத் தெரியும்... இப்படி எல்லாம் நடக்கும்னு... அதுக்குதான் ஆஃபிஸ் வேலை எல்லாம் வேண்டாம் சொன்னேன்... கேட்டியா?” என்று அப்போதும் அவள் வேலைக்குப் போகும் விஷயத்தையே குற்றமாகச் சொன்னான். அவளால் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அப்போதைக்கு அமைதியாக இருந்தவள் அடுத்த ஒரு வாரத்தில் அலுவலகம் செல்கிற வழியில் இருந்த பைக் ஷோ ரூமுக்குச் சென்று புது பைக்கைப் பார்த்து விசாரித்துப் பணம் கட்டி வாங்கிக் கொண்டு வந்து வீட்டு வாசலில் நிறுத்திவிட்டாள்.
‘யாரை கேட்டு நீ பைக் வாங்குன?’ என்றவன் சண்டை போடுவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் அது பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
இரவு எப்போதும் போல அவன் அருகே வந்து அவளை அணைத்தபடி படுத்துக் கொள்ள, “கிருபா” என்று மெதுவாக அழைத்துப் பார்த்தாள். அவன் அமைதியாகப் படுத்திருந்தான்.
மீண்டும் அவள், “கிருபா” என்று அழைத்து, “உன்கிட்ட சொல்லாம வாங்கிட்டு வந்துட்டேனு கோச்சிக்காதே... பைக் இருந்தா கொஞ்சம் ஈஸியா இருக்கும்னுதான் வாங்கினேன்... உன்னையும் காலைல தேவை இல்லாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் பாரு” என்று தொடர்ந்து அவள் விளக்கம் தர, அவன் அமைதியாகவே படுத்திருந்தான். உம் கூடக் கொட்டவில்லை.
ஒரு வேளை தூங்கிவிட்டானோ என்றவள் திரும்பிப் பார்க்கக் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டுதான் இருந்தான். “கிருபா சாரி” என்ற வார்த்தையை அவள் முடிப்பதற்கு முன்பாக அவள் இதழ்களை அழுத்தமாக மூடிவிட்டான்.
அதன் பின் இருவருக்கும் நிகழ்ந்த கூடலில் அவனுக்கு உண்மையில் தன் மீது கோபமெல்லாம் இல்லை என்று நம்பிவிட்டாள். ஆனால் காலையில் அவள் விழித்து எழுந்து பார்த்த போதுதான் அவளுக்கு உண்மையான அதிர்ச்சி காத்திருந்தது.
அலாரம் அடித்தச் சத்தம் கேட்டு எழுந்தவள் அதனை எட்டி அணைத்து விட்டு எழுந்து தலை முடியைக் கொண்டயிடும் போதுதான் அருகில் படுத்திருந்த கிருபாவைக் காணவில்லை என்பதைக் கவனித்தாள்.
“இவ்வளவு காலைல எழுந்து எங்க போனான்?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவள் குளியலறைச் சென்று காலைகடன்களை முடித்து விட்டுத் திரும்பினாள்.
பின் முகத்தைத் துண்டால் துடைத்துக் கொண்டே படுக்கையறை விட்டு வெளியே வர பின்கதவு திறந்திருந்தது.
“எழுந்து பல் விலக்கிட்டு இருக்கான் போல... சரி நம்ம காபியைப் போடுவோம்” என்று பாலை ஊற்றும் போது, சமையலறை ஜன்னல் வழியாகத் தெரிந்த அந்தச் சிவப்பு வெளிச்சத்தைக் கண்டாள். ஒளிப் பிழம்பாக எதுவோ ஒன்று வெளியே தெரிந்தது.
இன்னும் வானம் வெளுத்திருக்காத நிலையில் அது என்ன வெளிச்சமாக இருக்கும் என்ற யோசனையுடன் வாயில் கதவைத் திறந்து வந்து பார்த்தாள். அவளுக்குப் பக்கென்றாகிவிட்டது.
அவளுடைய புது பைக் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. எப்படி அந்த நெருப்பை அணைப்பது என்று யோசித்தவள் அருகே இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து ஊற்றினாள்.
கூடவே, “கிருபா கிருபா” என்ற கணவனை உதவிக்கு அழைத்தாள். ஆனால் அவள் அழைப்பிற்கு அவன் வரவில்லை. பின் அவளே தனியாக இரண்டு மூன்று வாலிகள் தண்ணீரை நிரப்பி ஊற்றிய பின் தீக் கொஞ்சம் மட்டுப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த பைக் உருக்குலைந்து விட்டிருந்தது.
அவளால் தாங்க முடியவில்லை. ஆசை ஆசையாகப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்து இந்த நிறம்தான் வேண்டுமென்று சண்டையிட்டு அந்த பைக்கை வாங்கி வந்தாள்.
எத்தனை ஆசையாக அந்த பைக்கைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள். ஓட்டிப் பார்த்தாள். யாரையும் எதிர்பார்க்காமல் சுதந்திரமாக வேலைக்குப் போய்விட்டு வருவதைப் போன்று நினைத்து மனதில் சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.
அத்தனை சந்தோஷமும் சாம்பலாகக் கருகிக் கொண்டிருக்கிறது.
அவள் கண்களில் கண்ணீர் சுரந்து வழியும் போதுதான் கிருபாவின் நினைவு வந்தது.
அவனைத் தேடிக் கொண்டு பின்வாயிலுக்குச் சென்று பார்க்க, அவன் சலனமே இல்லாமல் பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டிருந்தான்.
“எவ்வளவு நேரமா உன்னைக் கூப்பிடுறேன்... எங்கே போன நீ...? வெளியே என் பைக்ல தீப் பிடிச்சிடுச்சு தெரியுமா?” என்றவள் படபடப்புடன் பேச,
“அதுக்கு நான் என்ன பண்ணணும்?” என்றவன் தென்வட்டாக அவளை நிமிர்ந்து பார்த்துக் கேட்கவும்தான் அவள் மரமண்டைக்கு உரைத்தது. இந்தக் குரூரமான வேலையை இந்தப் பாவிதான் செய்திருக்கிறான் என்று.
சில நொடிகள் அவளுக்குப் பேச்சே வரவில்லை. ஏதோ அவள் வேலைக்குச் செல்வதை விரும்பாமல் சண்டைப் போடுகிறான் என்றுதான் நினைத்தாள். ஆனால் அந்த எண்ணத்தில் இப்படியொரு காரியத்தைச் செய்யத் துணிவான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
அவளால் யோசித்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அவள் உள்ளம் குமுறியது. கொதித்தது.
“ஏன் கிருபா இப்படி பண்ண? நான் எவ்வளவு ஆசை ஆசையா அந்த பைக்கை வாங்குனேன் தெரியுமா?” என்று அவள் கோபமும் வேதனையுமாகக் கேட்க அவன் நிறுத்தி நிதானமாக அவள் அருகே வந்து நின்று,
“நீ ஆசையா வாங்குன சரி... ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா?” என்று கேட்டான்.
அந்த நொடி அவள் கண்களில் பொறிப் பறந்தது. “ஆமா சொல்லல... சொன்னா மட்டும் வாங்க ஒத்துகுவியா என்ன?” என, அவன் அவளை அலட்சியமாகப் பார்த்து,
“அப்படி எல்லாம் இல்ல... நீ என்கிட்ட சொல்லி இருந்தா நான் வாங்கித் தந்திருப்பேன்” என்றான்.
“அதென்ன நீ வாங்கித் தர்றது... ஏன் எனக்குத் தேவையானதை எனக்கு வாங்கிக்கத் தெரியாதா இல்ல நான் வாங்கிக்கக் கூடாதா?” என்றவள் பதிலுக்குச் சீறலாகக் கேட்கவும்,
“உனக்குத் தேவையானதைச் செய்றதுக்குதான்டி நான் இருக்கேன்” என்று அவனும் பதிலுக்குச் சீற, அவள் உதடுகள் ஏளனமாக வளைந்தன.
“போதும்டா சாமி... நீ இதுவரைக்கும் எனக்குச் செஞ்ச எல்லாத்துக்கும் ஒரு பெரிய கும்பிடு... இனிமே எனக்கு நீ எதுவும் செய்யத் தேவை இல்ல” என்றவள் கையெடுத்து ஒரு கும்பிடுப் போட்டுவிட்டு முன்னே செல்ல,
“என்னடி பேசுற?” என்றவன் முறைப்பாகக் கேட்டு கொண்டே அவள் பின்னே வந்தான். விறுவிறுவென அறைக்குள் நடந்தவள் அவனைத் திரும்பியும் பார்க்காமல் தன் துணிமணிகளை பீரோவிலிருந்து எடுத்துக் கொண்டிருக்க,
“தீபா... என்ன பண்ற?” என்றவன் அவளைத் தடுக்க முற்பட,
“நான் என் வீட்டுக்குப் போறேன்... தனியா போறேன்... நீ என் கூட இனிமே வர தேவையில்ல” என்றவள் தீர்மானமாகச் சொல்லிவிட்டுத் தன்னுடைய உடைகளை எடுத்துப் பையில் வைத்தாள்.
“என்னை விட்டுப் போகணும்னு முடிவு பண்ணிட்டியா?”
“ஆமா முடிவு பண்ணிட்டேன்.. அன்னைக்கு மாதிரி நான் பயந்து ஓடி எல்லாம் போகல... உன் முகத்துக்கு நேரா எனக்கு உன் கூட வாழப் பிடிக்கலடானு சொல்லிட்டுதான் போகப் போறேன்” என்றவள் சொன்ன நொடி அவன் கண்களில் உஷ்ணம் ஏறியது.
“என் கூட வாழப் பிடிக்கலயா?”
“ஆமா பிடிக்கல... பொம்பளைங்க அடிக்கிறது ஆம்பளத்தனம் இல்லன்னு ஆயா சொல்லுச்சுனு நீ சொன்ன இல்ல... நான் இப்ப சொல்றேன் கேட்டுக்கோ.... பொம்பளைங்கள அடக்கி ஆள்றதும் ஆம்பளத்தனம் இல்ல... இதை அந்தக் கெழவி உன்கிட்ட சொல்லாம போயிடுச்சு” என்றவள் சொல்ல அவன் தவிப்புற்றான்.
“சரி தீபா... நான் செஞ்சது தப்புதான் மன்னிச்சிடு... என்னை விட்டுப் போகாத” என்றவன் அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச, அவள் முகம் இறுகியது.
அவன் கரத்தை உதறியவள் அவசர அவசரமாகத் தன் இரவு உடையை மாற்றிக் கொண்டே, “ஆமா நீ என்னைப் பத்தி என்ன நினைச்ச? நீ என்ன செஞ்சாலும் நான் உன் காலடில விழுந்து கிடப்பேனா.... இல்ல நீ கெஞ்சுனா நான் கரைஞ்சு போயிடுவேன்னா... நீ அப்படி நினைச்சிட்டு இருந்தா அது தப்பு.”
”நான் அந்த மாதிரி ஆள் இல்ல கிருபா... அடங்கி ஒடுங்கி என் கூட வாழுன்னு சொன்ன ஒருத்தனைப் போடா நீயாச்சும்னு உன் வாழ்க்கையாச்சும்னு துச்சமா தூக்கிப் போட்டுட்டு வந்தவ நான்... உன்னைத் தூக்கிப் போட மாட்டேன்னு எப்படி நினைச்ச?” என்றாள்.
அவள் பேசிய வார்த்தைகளில் அவன் முகம் வெளிறிப் போனது. கண்களில் பயம் தெரிந்தது.
“தீபா நான் சொல்றதைக் கேளு” என்றவன் அவளைப் பின்தொடர்ந்து வர, அவள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
“ஏய் நில்லுடி” என்றவன் சீறலாகக் கத்த,
“போடா டேய்” என்றவள் பாட்டுக்கு வாயிற் கதவைத் தாண்டிச் சென்றாள்.
“அடியேய்... நீ என்னை விட்டுப் போன... இந்த பைக் மாதிரி நானும் கரிகட்டையாயிடுவேன்டி” என்றவன் சத்தமாகச் சொல்ல அவள் அங்கேயே நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“இப்போ நீ போன… என்னை நானே கொளுத்திட்டுச் செத்துப் போவேன்” என்று அவன் மிரட்டலாகச் சொல்ல அவள் மெல்லத் திரும்பி வந்தாள்.
“என்ன மிரட்டுறியா?”
“மிரட்டல... சத்தியமா செய்வேன்”
“சரி போய் கொளுத்திக்கோ... உன்னைப் பாடைக் கட்டித் தூக்கிட்டுப் போய் சுடுகாட்டுல எரிக்கிற வேலையாச்சும் மிச்சமாவும்... போ போய் கொளுத்திக்கோ?” என்றவள் கடுப்புடன் சொன்ன விதத்தில் அவன் கண்கள் சிவக்க,
“என்னடி... செய்ய மாட்டேன்னு நினைக்குறியா?” என்றவன் வேக வேகமாகச் சென்று கதவை அடைத்துக் கொண்டுவிட்டான்.
அவள் உள்ளம் படபடத்தது. உண்மையிலேயே சொன்னது போலச் செய்துவிடுவானோ என்ற அச்சம் ஏற்பட, மெதுவாக ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க, அவன் தலையில் கெரோஸீனை ஊற்றிக் கொண்டிருந்தான். அத்தனை நேரம் அவளுக்குள் வெள்ளமாகப் புரண்டு ஓடிய தைரியம் எல்லாம் துளி கூட மிச்சமில்லாமல் வடிந்துவிட்டது.
“கிருபாஆஆஆ” என்றவள் கத்திக் கொண்டே கதவைத் தட்டி,
“என்ன பன்ற? பைத்தியமாடா நீ?” என்று அழத் தொடங்கிவிட்டாள்.
“நீதானடி என்னைக் கொளுத்திக்கச் சொன்ன” என்றவன் குரல் திடமாக ஒலித்தது.
“ஐயோ தெரியாம சொல்லிட்டேன்... கிருபா வேணாம் கிருபா... கதவைத் திற கிருபா”
“முடியாது” என்றவன் வத்திப்பெட்டியைக் கையில் எடுத்துக் கொள்ள,
“கிருபா வேண்டாம் வேண்டாம் ப்ளீஸ்... அந்த மாதிரி எதுவும் செஞ்சிராத” என்றவள் கெஞ்சியும் அவன் இறங்கவில்லை.
“கிருபா நான் எங்கேயும் போகல... சத்தியமா போகல... ப்ளீஸ் கதவைத் திற” என்றவள் கதறி அழுதப் பிறகுதான் கதவு திறந்தது. அவன் வெளியே வந்து வத்திப்பெட்டியை அவள் முன்னே விசறியடித்துவிட்டு,
“இப்போ கூட ஒன்னும் இல்ல... உனக்குப் போகணும்னு தோனுச்சுனா... என்னைக் கொளுத்திட்டுப் போ” என, அவள் அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு சரிந்துவிட்டாள்.
17

Quote from Marli malkhan on March 31, 2025, 12:11 AMSuper ma
Super ma