மோனிஷா நாவல்கள்
Kannadi Thundugal - Episode 5

Quote from monisha on February 28, 2025, 11:49 AM5
'தூரத்திலிருந்த அழகாய் வட்ட வடிவமாக இருக்கும் நிலவு நிஜத்தில் அகலப் பாதாளங்களும் பள்ள மேடுகளாகவும்தான் இருக்கின்றன. அவை காட்சிப் பிழைகளா அல்லது நமது பார்வையின் பிழைகளா?'
விவேக்கின் தம்பி விக்னேஷ் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.
“அக்கா ஸ்கூலுக்கு டைமாச்சு” என்றபடி அவன் உணவு மேஜையில் வந்து அமர,
“இதோ... இதோ வந்துட்டேன் விக்கி” சூடாகத் தோசையை வார்த்து சமையலறையில் இருந்து எடுத்து வந்து தம்பியின் தட்டில் வைத்தாள் வனிதா.
அதனை உண்டு கொண்டே, “இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு க்கா... வர்ற லேட்டாகும்” என, அப்போது வாட்டசாட்டமாக வெள்ளை சட்டை அணிந்து கொண்டு வந்தமர்ந்த காளிமுத்து,
“ஸ்கூலுக்கு லேட்டாகலயாடா உனக்கு” என்று மகனிடம் கண்டிப்பான குரலில் கேட்டார்.
“இல்ல பா டைம் இருக்கு” என்று தந்தைக்குப் பதில் சொல்லிக் கொண்டே தன் தட்டிலிருந்த தோசையை வாயில் திணித்துவிட்டு எழுந்து கொள்ள,
“விக்கி... இருடா இன்னும் ஒரு தோசை சாப்பிட்டுப் போடா” என்று வனிதா தோசையை எடுத்துக் கொண்டு வர,
“இல்ல க்கா... போதும்... கிளம்புறேன்” என்று தன் பையை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்ற தம்பியை வழியனுப்பிவிட்டு வந்தவள், காளிமுத்துவிற்கும் தோசை எடுத்து வந்து வைத்தாள்.
அவர் சாப்பிட்டுக் கொண்டே, “எங்க உன் பெரிய தம்பி... இன்னும் எழுந்து வரலயா?” என்று கடுகடுப்புடன் கேட்க,
“எழுந்துட்டிருப்பாங்க... இப்ப வந்துருவாங்க” என்று சமாளித்த மகளை ஆழமாகப் பார்த்தவர்,
“நீ அவனுக்கு ரொம்ப இடம் கொடுக்குற வனிதா... அதான் அவன் இப்படி பொறுப்பில்லாம சுத்திட்டு இருக்கான்” என்றார்.
“கல்யாணம் ஆகிடுச்சு... இனிமே அவனே பொறுப்பாகிடுவான் பாருங்க”
“ஆமா ஆமா... எப்படி ஆவான் பாரு” என்று எகத்தாளமாகச் சொல்லிவிட்டு எழுந்து கைக் கழுவிக் கொள்ள,
“நான் கிளம்புறேன் மா... ஆமா காசு கேட்ட இல்ல இந்தா” என்று மகளிடம் தன் சட்டைப் பையிலிருந்த பணத்தை எடுத்துக் கொடுக்க, இன்முகத்துடன் அதனைப் பெற்றுக் கொண்டாள்.
அவர் புறப்பட்டுச் சென்றப் பின் தன் தாயின் அறைக்கு வந்த வனிதா அவருக்கான பணிவிடைகளைச் செய்து முடித்து உணவு ஊட்டிக் கொண்டிருக்கும் போது,
“அக்கா” என்று வந்து நின்றான் விவேக்.
“வந்துட்டியா... தோசை மாவு வைச்சிருக்கேன்... நீயும் தீபாவும் தோசை ஊத்தி சாப்பிடுங்க” என,
“இல்ல க்கா... கொஞ்சம் வேலை இருக்கு... நான் கிளம்புறேன்... தீபு தலைவலின்னு படுத்துட்டு இருக்கா... அப்புறமா சாப்பிடுறேன்னு சொன்னா” என்றவன் வெளியேறப் போக,
“டேய் இருடா... நானாவது தோசைச் சுட்டுத் தர்றேன்” என்று வனிதா சொல்ல,
“இல்ல க்கா வேண்டாம்” என்றவன் உடனடியாக தன் பைக்கை எடுத்துக் கொண்டு புறபட்டுவிட்டான்.
அப்போது அம்மா கஜலக்ஷ்மியின் பார்வையில் தொனித்த அர்த்தத்தைக் கண்டுகொண்ட வனிதா, “அந்தப் பொண்ணு நல்ல பொண்ணுதான் மா... நீங்களா ஏதாவது நினைக்காதீங்க” என்று பதில் கூறினாள். ஆனால் அவருக்குத் தீபிகாவைக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை என்பது அவர் பார்வையிலேயே தெரிந்தது.
அதன் பின் வனிதா தன் தம்பி அறைக்கு வர, கதவு மூடியிருந்தது.
“தீபா தீபா” என்று அவள் குரல் கொடுத்த போதும் கதவு திறக்கப்படாமல் போக வனிதா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர, தீபிகா அழுதபடி இருந்தாள்.
“தீபா என்னாச்சு? ஏன் அழுதுட்டு இருக்க?” என்று விசாரித்தபடி வனிதா அருகே வந்து அமர, அவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள்.
“என்ன தீபா... ஏன் இப்படி அழுதுட்டு இருக்க...? தம்பி உனக்கு தலைவலின்னு சொல்லிட்டுப் போனான்... தலைவலிக்கா இப்படி அழற?” என்ற கேள்விக்கு, தீபிகாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
நேற்று இரவு காளிமுத்து பேசியதை எல்லாம் மனம் தாங்காமல் தீபிகா அழுது கொண்டே கணவனிடம் தெரிவிக்க, “அப்பா எப்பவும் அப்படிதான் தீபு... வரைமுறை இல்லாம பேசுவாரு... யார்கிட்ட என்ன பேசுறோம் என்னனு ஒன்னும் தெரியாது... ஆஃபிஸ்ல லாரி ட்ரைவருங்க கிட்ட எல்லாம் பேசிப் பேசி அது அப்படியே அவருக்குப் பழகிடுச்சு... நீ விடு... வருத்தப்படாதே” என்று சமாதானப்படுத்தினான். ஆனால் அவள் மனம் அமைதியடையவில்லை.
அந்த வார்த்தைகள் நேரடியாக அவளை நோக்கி வந்தவை. எத்தனை அவமானத்திற்குரிய அசிங்கமான வார்த்தைகள். அவள் உடல் கூசிப் போனது. எப்படி அவரால் மருமகளிடம் அப்படியொரு கேவலமான வார்த்தையைப் பேச முடிந்தது என்ற வேதனையுடன்,
“உங்க அக்காவுக்குக் கல்யாணம் ஆகணும்னு சொன்ன விஷயத்தை என்னால புரிஞ்சிக்க முடியுது... ஆனா அதுக்காக அவர் என்னைப் பேசுன வார்த்தையும் பேசுன விதமும்... ரொம்ப ரொம்ப தப்பு விவேக்” என்று அழுது கொண்டே கூறினாள்.
“நானும் அது தப்புன்னுதான் சொல்றேன் தீபு”
“தப்புதான்னு என்கிட்ட சொல்லாதே... உங்க அப்பாகிட்ட போய் சொல்லு” என்றவள் முகத்தில் அப்போது அப்படியொரு வேதனை தென்பட்டது.
ஆனால் அதனைப் புரிந்து கொள்ளாமல், “அதெப்படி தீபு... அவர்கிட்ட போய்...” என்று அவன் தயங்க,
“அவர்கிட்ட போய் சொல்லாம... வேற யார்கிட்ட போய் சொல்லுவ... அவர் பேசுனது தப்பு... அதை நீதானே அவர்கிட்ட போய் சொல்லணும்” என்றவள் திடமாகக் கூறினாள்.
“ஐயோ தீபு.... சொன்னாலும் அவர் புரிஞ்சிக்க மாட்டாரு... தேவை இல்லாம வாக்குவாதமும் பிரச்சனையும்தான் வரும்... கோபத்துல அவர் பாட்டுக்கு வீட்டை விட்டுப் போ ன்னு சொல்லிட்டா... நாம என்ன பண்றது... யோசிச்சு பார்த்தியா... அதனாலதான் சொல்றேன்... இந்த விஷயத்தை இப்படியே விடு” என்றவன் கூறிவிட்டுப் படுக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.
அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவள் அதிர்ச்சியுற்றாள். அவனுக்காக அவள் எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் பெற்றொரை விட்டு வந்திருக்கிறாள். ஆனால் அவனோ தன் தந்தை பேசிய ஒரு தப்பான வார்த்தைக்குக் கூட எதிராக பேசத் தயங்குகிறான். அவர் வீட்டை விட்டு அனுப்பிவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறான்.
இப்படியொரு முதுகெலும்பு இல்லாத ஒருவனை நம்பித்தான் தான் தன்னுடைய உறவுகளையும் வீட்டையும் விட்டு ஓடி வந்தோமா?
இவ்வாறாக யோசித்து யோசித்து இரவெல்லாம் அவள் அழுது கொண்டிருக்க, அவனோ காலையில் எழுந்து சர்வ சாதாரணமாக, “இன்னுமா அந்த விஷயத்தை விடல நீ” என்று கேட்டுவிட்டுப் போகிறான்.
அவனுக்கு ஒரு வேளை இது போன்ற வார்த்தைகள் அத்தனை பழக்கமாக இருக்கலாம். ஆனால் அவளுக்கு இல்லையே! அவள் குடும்பத்தில் யாரும் இது போன்று அநாகரிகமாகப் பெண்களிடம் பேச மாட்டார்கள். அப்படி பேசி இதுவரையில் அவள் கேட்டதுமில்லை.
மாமனாரின் மோசமான அந்த வார்த்தைகளும் கணவனின் இந்த அலட்சியம், இரண்டுமே அப்போது அவளை அதிகமாக பாதித்திருந்தது.
ஆனால் இது எதுவும் தெரியாத வனிதா, “என்ன தீபா... உங்க வீட்டு ஞாபகம் வந்துருச்சா?” என்று கேட்க, வேறு வழி இல்லாமல் அவளும் ஆமென்று ஆமோதித்தாள்.
“நீ ஒன்னும் மனசைக் கஷ்டபடாத... உங்க அம்மா அப்பா கூடிய சீக்கிரம் சமாதானம் ஆகி உன்னைப் பார்க்க வருவாங்க” என்று ஆறுதலாகப் பேசியவள்,
“இப்ப நல்ல பொண்ணா எழுந்து குளிச்சிட்டு வா... சாப்பிடலாம்... நானும் உனக்காகதான் சாப்பிடாம காத்திட்டிருக்கேன்” என,
“ஏன் க்கா எனக்காகப் போய் நீங்க சாப்பிடாம இருக்கீங்க... நீங்க போய் சாப்பிடுங்க” என்றாள்.
“இல்ல நீ வா... நாம சேர்ந்து சாப்பிடுவோம்” என்று வனிதா மனம் நிறைந்த அன்புடன் சொன்ன போது தீபிகாவிற்கு நெகிழ்ந்து போனது. வனிதாவின் ஆதரவான பேச்சும் அன்பும்தான் அந்த வீட்டில் அவளுக்கு ஏற்படும் அத்தனை அசௌகர்யங்கள் மற்றும் அந்நியத்தன்மைகளையும் களைகிறது.
உண்மையிலேயே வனிதா தூய்மையான மனம் படைத்தவள்.
ஒரு வகையில் வனிதாவின் சகோதரத்துவத்தால்தான் தீபிகா சுமுகமாக அங்கே ஒரு மாத காலத்தைக் கடத்திவிட்டிருந்தாள். அந்த இடைப்பட்ட காலத்தில் இருவரும் மிகவும் நெருக்கமாகப் பழகிவிட்டனர்.
அதேநேரம் காளிமுத்து அன்று அப்படியொரு வார்த்தையைச் சொன்னப் பிறகு தீபிகா விவேக்கை உடல் ரீதியாக அவளை நெருங்கவே விடவில்லை. இதனால் அறைக்குள் இருவருக்கும் இடையில் சின்னச் சின்னதாக மனஸ்தாபங்களும் விவாதங்களும் எழுந்தபடி இருந்தன. ஆனால் அதெல்லாம் அவளைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.
அப்போதைக்கு அவளுடைய நினைப்பு எல்லாம் கல்லூரிக்குச் சென்று இறுதி ஆண்டு படிப்பைத் தொடர்வது குறித்துதான். இதில் கல்லூரிக்குப் பணம் கட்ட தன் கழுத்திலிருந்த சிறிய தங்க செயினை விற்றுவிட, அவள் எண்ணிய போது வனிதா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
“நான் காசு தர்றேன்... நீ காலேஜுக்கு பீஸ் கட்டு” என்று தான் குடும்ப செலவலிருந்து சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த காசைக் கொடுக்க,
“ஐயோ வேண்டாம் க்கா... இந்தக் காசு உங்களுக்கு எதுக்காவது பயன்படும்” என்று மறுத்தாள் தீபிகா
“என்ன பெருசா பயன்பட போகுது... மிஞ்சி போனா புடவை சுடிதார் வாங்குவேன்... ஆனா இப்போ அது உன் படிப்புக்கு யூஸ் ஆகும் இல்ல... வைச்சுக்கோ” என்று வனிதா பணத்தைக் கொடுத்தப் போது தீபிகாவிற்குக் கண்கள் கலங்கிவிட்டது.
“தேங்க்ஸ் க்கா” என்று தீபிகா அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள். அடுத்த வாரத்தில் தீபிகா தான் கல்லூரிக்குப் போக வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தாள். அதனுடன் நாளை முதல் கல்லூரிக்குச் செல்வதற்காக விவேக்குடன் சென்று தீபிகா துணிமணிகள் வாங்கி வந்தாள்.
வீட்டிற்கு வந்ததும் அவள் தான் வாங்கிய புது உடைகள் அனைத்தையும் வனிதாவிடம் காண்பித்தாள்.
“எல்லா சுடிதாரும் ரொம்ப நல்லா இருக்கு தீபா”
“இது உங்களுக்கு” என்று அவள் வாங்கிய டிசைனில் கொஞ்சம் வேறு நிறத்தில் இருந்த சுடிதாரை எடுத்துக் காண்பிக்க,
“ஏய் என்னது ஒரே மாதிரி இருக்கு இரண்டும்” என்று வனிதா ஆச்சரியமானாள்.
“ஆமா ஒரே டிசைன்... ஆனா வேற கலர்... நம்ம இரண்டு பேருக்கும்” என்றதும் வனிதா சந்தோஷத்துடன்,
“சூப்பர் தீபா... செமையா இருக்கு... நம்ம இரண்டு பேரும் சேர்ந்து இதை ஒரு நாள் போட்டுக்கலாம்” என்றாள்.
“ஆமா க்கா” என்றவள் மேலும், “அப்புறம் அங்க எல்லாமே லேட்டீஸ் கலெக்ஷன்... அதான் விக்கிக்கு எடுக்க முடியல” என்று தெரிவித்தாள்.
“அதுக்கு என்ன... பரவாயில்ல விடு... அவன் ஒன்னும் நினைச்சுக்க மாட்டான்” என்ற வனிதா அப்போது ஒரே போல இருக்கும் அந்த இரு உடைகளையும் தன் அம்மாவிடம் காண்பித்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள்.
தீபிகாவின் முகத்தில் ஒளிர்ந்த புன்னகையைக் கண்ட கஜலக்ஷ்மியின் இதழ்களும் மலர்ந்தன. ஆரம்பித்தில் அவருக்கு தீபா மீதிருந்த அதிருப்தி எல்லாம் இவர்கள் இருவரின் பிணைப்பைப் பார்த்து மறைந்து கொண்டு வந்தது.
தீபிகாவிற்கும் தன் மாமியார் புன்னகைத்ததில் சந்தோஷம் உண்டாகிய நிலையில் வனிதா அவளிடம், “சரி... ஏற்கனவே ரொம்ப லேட்டாகிடுச்சு... நாளைக்கு காலேஜ் போகணும் இல்ல.. சீக்கிரம் போய் படு” என,
“ஆமா க்கா லேட்டாயிடுச்சு... சீக்கிரம் படுக்கணும்” என்று விட்டு தீபிகா அறைக்குத் திரும்பிய போது விவேக்கின் முகம் கடுகடுத்து கொண்டிருந்தது.
“ஏன் தீபு... வாங்குன டிரஸ் எல்லாம் இப்பவே கொண்டு போய் காண்பிக்கணுமா... காலைல காண்பிச்சுக்கலாம் இல்ல”
“எனக்குக் காண்பிக்கணும்னு தோனுச்சு காட்டிட்டு வந்தேன்... அதுல உனக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டுக் கொண்டே அவள் தன் உடைகளைக் களைந்து கொண்டிருக்க,
“எனக்குப் பிரச்சனைதான்” என்று சூசகமாகக் கூறிக் கொண்டே அவளைப் பின்புறமாக இழுத்து அணைத்துக் கொண்டான்.
“விவேக் விடு... நான் நைட்டி போடணும்” என்றவள் அவன் பிடியை விலக்கி விட முயல,
“அதெல்லாம் மாத்த வேண்டாம்... வா” என்றபடி படுக்கையில் தள்ளினான்.
“விவேக் வேண்டாம்... சீக்கிரம் தூங்குனாதான் நாளைக்கு எழுந்து காலேஜ் போக முடியும்” என்றவள் அவனை முரண்டித் தள்ளிய போதும் அவன் விடவில்லை.
“அதெல்லாம் சீக்கிரம் தூங்கிடலாம்” என்றவன் தன் காரியத்திலேயே கண்ணாக இருக்க,
“விவேக் ப்ளீஸ்... எனக்கு இப்போ இன்டிரஸ்ட் இல்ல... டயர்டா இருக்கு விடு” என்று அவள் காட்டிய எதிர்ப்பையும் சொன்ன காரணங்களையும் அவன் பொருட்படுத்தவே இல்லை. அவள் இதழ்களை நெருங்கி அவன் முத்தமிடவும் அவளுக்குக் கோபமேறியது.
அவனை இழுத்துத் தள்ளி விட்டவள், “என்ன மனுஷன் நீ... அன்னைக்கு உங்க பா என்னை எவ்வளவு கேவலமா பேசுனாரு... அதெல்லாம் மறந்து போச்சா உனக்கு” என்று கேட்க,
“அவருக்கு நம்ம மேல கோபம்... அப்படிதான் பேசுவாரு... அதெல்லாம் ஒரு விஷயம்னு பேசிக்கிட்டு... விடுடி” என்றவனின் அலட்சியம் மேலும் மேலும் அவள் கோபத்தைத் தூண்டிவிட்டது.
“எனக்கு அது பெரிய விஷயம்தான்... அதுவும் அவர் உங்க அக்காவைப் பத்திச் சொன்னது... எனக்கு சுளீர்னு கன்னத்தில அறைஞ்ச மாதிரி இருந்துச்சு” என,
“ப்ச் தீபு... நீ ரொம்ப ஓவரா யோசிக்குற” என்றவன் அதே அலட்சியத்துடன் பதில் கூற,
“ஆமா நான் ஓவரா யோசிக்குறேன்... ஆனா நீ யோசிக்கவே மாட்டுற... இனிமேயாவது யோசி... பாவம் உங்க அக்கா... உங்க அம்மாவைப் பார்த்துக்கிட்டுக் காலத்துக்கும் அவங்க இப்படியே இருக்கணு மா என்ன? அவங்களுக்கு ஒரு வாழ்க்கை இல்லயா?”
”அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்குற பொறுப்பு இல்லையா நமக்கு... அதைப் பத்தி எல்லாம் யோசிக்காம... எப்பப்பாரு” என்றவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் கரம் அவள் கன்னத்தில் இடியாக இறங்கியது. அவள் இப்படியொரு எதிர்வினையை அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
அடி வாங்கிய அதிர்ச்சியில் உறைந்தபடி இருந்தவளை எரிப்பது போலப் பார்த்தவன், “போனா போகுது போனா போகுதுன்னு பார்த்தா என்னடி ஓவரா பேசிட்டே போற... தேவை இல்லாம இதுல எங்க அக்காவை வேறு இழுத்துப் பேசி என்னை அசிங்கப்படுத்துற”
”இத்தனை வருஷமா கூடவே இருக்க எனக்குத் தெரியாதா... எங்க அக்காவுக்கு என்ன செய்யணும்னு... பெரிய இவளாட்டும் பேச வந்துட்டா” என்று கத்தவும், அவள் முகம் சுருங்கிவிட்டது.
அவன் மேலும் அவள் கன்னத்தை அழுத்திப் பிடித்து, “ஏய்... அப்புறம் நீ என் பொண்டாட்டி... உன்னை நான் தொடுவேன்... என் இஷ்டப்படி எல்லாம் தொடுவேன்... எப்ப எல்லாம் தோனுதோ... அப்ப எல்லாம் தொடுவேன்... உன்னால முடிஞ்சா தடுத்துக்கோ” என்று மூர்க்கத்துடன் வலுக்கட்டாயமாக அன்று அவளுடன் உறவு வைத்துக் கொண்டான்.
விவேக்கின் இந்த அதிரடியான கோபமும் செய்கையும் அவளைத் திடுக்கிட வைத்தது. காதலிக்கும் போது எப்போதும் அவள்தான் முறுக்கிக் கொள்வாள். கோபப்படுவாள். அவனோ அத்தனை மென்மையானவனாக நடந்து கொள்வான். கெஞ்சிக் கொஞ்சி அவளைச் சமாதானப்படுத்துவான்.
அப்படி அவன் கெஞ்சும் போதும் சமாதானம் செய்யும் போது அவளுக்கு இனம் புரியாத ஒருவித சந்தோஷம் கிடைக்கும். சின்னச் சின்னதாக அவன் அவளுக்காக இறங்கிச் செய்கிற விஷயத்திற்கு எல்லாம் அவள் மனம் பூரித்துப் போகும்.
ஆனால் இன்று இத்தனை அதிகாரமும் கோபமும் காட்டிய விவேக்கைப் பார்த்தப் போது அவளுக்கு பயங்கரமான அதிர்ச்சி உண்டாகியிருந்தது. அவ்வளவு சுலபமாக இந்த நிஜத்தை அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
5

Quote from Marli malkhan on February 28, 2025, 1:26 PMSuper ma
Super ma