மோனிஷா நாவல்கள்
Kannadi Thundugal - Episode 8

Quote from monisha on March 9, 2025, 5:16 PM8
அந்தக் கல்லூரியின் அறிவிப்பு பலகையில் தீபிகா பி சி ஏ யுனிவர்சிட்டி ரேங் ஹோல்டர் மற்றும் டிபார்ட்மென்ட் டாப்பர் என்ற இடம் பெற்றிருந்தது.
இறுதி வருட தேர்வில் தீபிகா தான் படித்தக் கல்லூரிக்கும் டிபர்மென்டுக்கும் பெருமை சேர்த்திருந்தாள். சகமாணவிகள் ஆசிரியர்கள் உட்பட எல்லோருக்கும் இந்தச் செய்தி பெரும் வியப்பை உண்டாக்கியிருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தீபிகா அனுபவித்தப் பிரச்சனைகளும் இன்னல்களும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப் போனது, அவனைத் திருமணம் முடித்தது, பின்பு கர்ப்பமாகி கல்லூரிக்கு வந்தது என்று அனைத்துமே அவர்கள் கல்லூரியில் பேசும் பொருளாக மாறியிருந்தது. இதனால் நிறையவே கிண்டல்களையும் கேலிகளையும் அவமானங்களையும் கூட அவள் கடந்து வர நேரிட்ட நிலையில் இன்று அதே வாய்கள்தான் அவளைப் பாராட்டித் தள்ளின.
இந்த நிகழ்வு தீபிகாவின் பெற்றோர்களிடம் கூட நல்லதொரு மாற்றத்தை உருவாக்கியிருந்தது.
சரியாக மூன்று மாதத்திற்கு முன்பு...
காளிமுத்துவின் சமாதான பேச்சுக்களுக்குப் பிறகு விவேக் வீட்டிற்கு வந்திருந்தான். ஆனால் இம்மியளவு கூட அவன் செய்த தப்பின் தீவிரத்தை உணர்ந்தவனாகவோ அல்லது அதனால் ஏற்பட்ட பாதிப்பை ஏற்பவனாகவோ அவன் பேசவில்லை.
“இனிமேயாச்சும் என்கிட்ட உன் திமிருத்தனத்தைக் காட்டாம அடங்கி ஒடுங்கி இருக்க பாரு” என்றவன் அதிகாரத்துடன் கூற அவள் அமைதியாக அவனைப் பார்த்து,
“அடங்கி ஒடுங்கி இருக்கணும்னா எப்படி... எனக்குப் புரியல... தெளிவா சொல்லு” என்று கேட்டாள்.
“ம்ம்ம்... நான் சொல்றபடி கேட்டனா நீ இந்த வீட்டுல எல்லா வசதியோட இப்போ இருக்க மாதிரி இருக்கலாம்”
“அப்படி இல்லனா...?”
“நடுரோட்டுக்குப் போக வேண்டியதுதான்... ஞாபகம் இருக்கட்டும்” என்றவன் எச்சரிக்க, அவளுக்கு அப்போதே தெள்ளத்தெளிவாகப் புரிந்தது. இவன் ஒரு போதும் மாறவும் மாட்டான் திருந்தவும் மாட்டான்.
அதே அலட்சியமும் பொறுப்பின்மையும்தான் அவனிடம் இப்போதும் இருக்கிறது. இன்னும் கேட்டால் முன்பை விடவும் அதிக அளவில். ஒரு வகையில் அவளுக்குப் போவதற்குப் போக்கிடம் இல்லை என்பதுதான் அவனுக்கு அத்தகையதொரு அலட்சியத்தை அவள் மீது ஏற்படுத்தி இருக்கக் கூடும்.
இவ்வாறாக பேசிவிட்டு அவன் வீட்டை விட்டுச் சென்ற நொடியில் அவள் மனதில் உதித்தக் கேள்வி இனியும் இந்த அவமானங்களையும் அலட்சியங்களையும் சகித்துக் கொண்டு தான் இங்கே இருக்க வேண்டுமா என்பதுதான்.
அப்போதே முடிவெடுத்துவிட்டாள். இனி ஒரு நாளும் இங்கே இருக்கக் கூடாது. இவனுடன் வாழக் கூடாது.
அப்படி வாழ்வதாக இருந்தால் அது தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்ளும் செயல் என்று எண்ணியவள் உடனடியாகத் தன்னுடைய சான்றிதழ்கள் துணிமணிகள் அத்தனையும் ஒரு பையில் நிரப்பிக் கொண்டு வெளியேறப் போக, “அண்ணி பை எல்லாம் எடுத்துட்டு எங்க போறீங்க?” என்று கேட்டுக் கொண்டு வந்து நின்றான் விக்னேஷ்.
“எங்க அம்மா அப்பா வீட்டுக்குப் போறேன் விக்கி... அவங்க என்னை ஏத்துக்கிட்டா நான் அங்க இருப்பேன்... இல்லயா செத்துப் போவேன்... ஆனா இந்த வீட்டுக்கு ஒரு நாளும் திரும்பி வர மாட்டேன்” என்று விட்டு வாசலைத் தாண்டப் போனவள் திரும்பி அவனைப் பார்த்து,
“நீயும் உங்க அப்பா அண்ணன் மாதிரி இல்லாம பொண்ணுங்கள மதிப்பா நடத்தக் கத்துக்கோ” என்றாள். அதன் பின் அவள் நேராகத் தன் பெற்றோரின் வீட்டிற்கு வந்தாள்.
அங்கே அவள் வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள் என்று தெரியும். இருப்பினும் அவளுக்கு வேறு வழி எதுவும் தோன்றவில்லை. அவர்கள் மனதை மாற்ற முடியுமா என்ற சிறு நம்பிக்கையுடன் அவள் அங்கே செல்ல,
“எங்களை அவமானப்படுத்துனது எல்லாம் போதாதா... இப்போ எதுக்குடி இங்கே வந்திருக்க?” என்ற அம்மாவின் கோபமும் கேள்வியும்தான் அவளை எதிர்கொண்டன.
அமைதியாக அவர்களை ஏறிட்டவள் விவேக் வீட்டில் அவளுக்கு நேர்ந்த அவமானங்களையும் அவளுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள, தந்தையாக பாலாஜியின் மனம் மகளுக்காக வருந்தியது. இருப்பினும் அவர் எதுவும் பேசவில்லை.
ஆனால் ராஜேஸ்வரி தன் கோபத்தை விட்டுக் கொடுக்க இயலாமல், “அவன்தான் வேணும்னு போன இல்லடி... அப்புறம் இங்க வந்து நின்னு இதெல்லாம் சொன்னா? நாங்க என்ன பண்ணனும்...? நாங்க யார் உனக்கு?” என்று கேட்க,
“அப்படி சொல்லாதீங்க ம்மா... இனிமே நீங்கதான் எல்லாம்னு வந்திருக்கேன்” என்று அழுது கொண்டே பேசிய தீபிகா மேலும்,
“நீங்களும் என்னைப் போன்னு சொல்லிட்டா... வேறு யாருமா இருக்கா எனக்கு...? நான் செத்துதான் போகணும்” என, அந்த வார்த்தைகள் அவர்கள் இருவரையும் நிலைகுலைய செய்துவிட்டது.
ராஜேஸ்வரி ஆத்திரத்துடன், “செத்துப் போய் அந்தப் பாவத்தை வேற எங்க தலையில கட்டப் பார்க்குறியாடி பாவி” என்று கேட்டவாறு மகளைச் சகட்டு மேனிக்கு அடிக்க,
“ராஜி விடு... ஏற்கனவே அவ உடம்பு முடியாம வந்துருக்கா” என்றபடி மனைவியைத் தடுத்த பாலாஜி,
“தீபா உள்ள வா” என்று மகளை அழைத்துவிட்டுச் சென்றார்.
“அப்பா சாரி பா” என்று அப்போதே தீபிகா அவர் காலைப் பிடித்துக் கொண்டு கதற எந்தவித உணர்வுகளும் இல்லாமல் குனிந்து மகளைக் கடுமையாகப் பார்த்தவர்,
“காலை விடுறியா... சாக போறேன்னு சொன்னதாலதான் உள்ள வர சொன்னேன்... மத்தபடி உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்ல... நான் உனக்கு அப்பா இல்ல நீ எனக்கு மக இல்ல... மத்தபடி நீ இந்த வீட்டுல இருந்துக்கலாம்... ஒரு நிரந்தர விருந்தாளி மாதிரி” என,
“அப்பா” என்று அவள் அதிர,
“அப்பாவா? இத்தனை நாளா தெரியலையா உனக்கு இந்த அப்பாவ?” என்றவர் கேள்வியில் அவள் அவர்களுக்கு ஏற்படுத்திய காயத்தின் ஆழமான வலியை உணர முடிந்தது. இருப்பினும் அந்தக் காயத்திற்கான மருந்து அப்போது அவளிடம் இல்லை. வெறும் மன்னிப்பு என்ற வார்த்தையை வைத்து மட்டும் அதனைச் சரி செய்ய முடியாது என்பதை அறிந்தவளின் அப்போதைய ஒரே நம்பிக்கை படிப்பு மட்டும்தான்.
படிப்பு கொடுக்கும் முன்னேற்றம்தான் தன் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற அவளது நம்பிக்கை பொய்க்கவில்லை. மகளின் வெற்றியில் ஒரு அம்மாவாக ராஜி பெருமிதம் கொண்டதை அவரின் விழிகள் தெள்ளதெளிவாகக் காட்டிக் கொடுத்தன.
அதேநேரம் கடந்த மூன்று மாதத்தில் மகளிடம் பெரிதாக எதுவும் பேச்சு வைத்துக் கொள்ளாத பாலாஜி, “நல்ல ஸ்கோர் பண்ணி இருக்க... மேல என்ன படிக்கப் போற?” என்று கேட்டது அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்க,
“எம் ஸி ஏ பண்ணலாம்னு இருக்கேன்பா... ஆனா ரெகுலர்ல இல்ல... வொர்க் பண்ணிட்டே படிக்கலாம்னு இருக்கேன்” என, அவர் மகளை யோசனையாகப் பார்த்தார்.
ஆனால் அவள் தன் முடிவில் தெளிவாக இருந்தாள். இனி யாரையும் சார்ந்து வாழக் கூடாது என்று.
அதற்கு ஏற்றார் போல ஒரு மிகப் பெரிய ஐடி நிறுவனத்தில் அவளுக்கு ப்ரோக்ராமர் வேலை கிடைத்தது. அதனைச் செய்து கொண்டே தன்னுடைய மேல் படிப்பை முடித்து நான்கு வருடங்கள் அதே பணியிடத்தில் தொடர்ந்த நிலையில்தான் அவளுக்கு அந்த வாய்ப்பு கிட்டியது.
பணியாளர்களின் திறமை மற்றும் வேலையில் அர்ப்பணிப்பை வைத்து மேலதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழுவை ஒரு பெரிய ப்ரொஜெக்ட்டிற்காகத் தேர்ந்தெடுத்து ஜெர்மனியில் உள்ள கிளைக்கு இரண்டு வருடங்களுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். அதுவும் இந்திய ரூபாய் மதிப்பில் மும்மடங்கு சம்பள உயர்வுடன்...
அதில் தீபிகாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அவள் இந்த இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை. அவள் திக்குமுக்காடிப் போனாள்.
வீட்டில் இது குறித்துத் தெரிவித்த போது பாலாஜிக்கு இதில் உடன்பாடில்லை. ஆனால் ராஜேஸ்வரி, “போயிட்டு வரட்டுங்க... அவ போயிட்டு வரும் போது அப்படியே அவளைப் பத்தின மத்த விஷயம் பேச்செல்லாம் மாறி இருக்கும் இல்ல” என்ற கருத்து அவருக்கும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது.
ஆதலால் பாலாஜியும் சம்மதித்ததில் தீபிகா ஜெர்மனியில் இரண்டு ஆண்டு காலம் வேலைப் பார்த்தாள். அதன் பின் வேலைகள் தாமதித்து ஆறு மாதம் அவளுடைய பணி அங்கே நீட்டிக்கப்பட்டது.
ஒரு வழியாக அவர்கள் சென்ற வேலைகள் எல்லாம் முடிந்து சென்னை வந்து இறங்க, ஏதேதோ மனதில் அலைபாயும் சிந்தனைகளுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்தாள் தீபிகா.
அங்கே சுழன்று வந்த தன்னுடைய பெட்டிகளை அவள் எடுத்துக் கொள்ள, உடன் வந்த நண்பர்களும் தங்கள் தங்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.
அப்போது ஒருவன் மட்டும், “டாக்ஸி வர சொல்லிட்டேன் தீப்ஸ்... நம்ம ஒன்னா போயிடலாம்” என்றான் அவளின் அலுவலக நண்பன் சத்யா. இருவரும் அந்த வாடகை காரில் தங்கள் பெட்டிகளை வைத்துவிட்டுப் பின்னிருக்கையில் ஏறிக் கொண்டனர்.
காலம் எத்தனை வேகமாக சுழல்கிறது.
தீபிகா ஆழமான யோசனையுடன் அமர்ந்திருப்பதைக் கவனித்த சத்யா, “என்ன வீட்டுக்குப் போறோம்கிற சந்தோஷமே உன் முகத்துல இல்ல?” என்று கேட்டான் சத்யா.
“அப்படி எல்லாம் இல்லயே... ஹாப்பியாதான் இருக்கேன்”
“பார்த்தா தெரியலயே” எப்போதுமான அவனின் பிரத்யேக கிண்டல் பார்வையுடன் கேட்க,
“பார்த்தா தெரியாது... ஆனா நான் சந்தோஷமாதான் இருக்கேன்” என்று கூற,
“ஓ... ஆனா நான் சந்தோஷமா இல்ல” என்றான்.
“ஏன் ஜெர்மனி விட்டு வந்தது அவ்வளவு கஷ்டமாவா இருக்கு?” என்றவள் எள்ளலாகக் கேட்க,
“ஜெர்மனி விட்டு வந்ததுல கஷ்டம் இல்ல... வீட்டுக்குப் போறதுலதான்” என்றான்.
“ஏன் அப்படி?”
“உனக்கு தெரியாதா? அங்க இருக்கும் போதே பொண்ணு ஃபோட்டோ எல்லாம் அனுப்பி இது ஓகேவா அது ஓகேவான்னு கேட்டுட்டு இருப்பாங்க... நேர்ல போனா அவ்வளவுதான்... கல்யாணம் பண்ணியே ஆகனும்னு பிச்சு பிடுங்கிடுவாங்க” என்றவன் தன் புலம்பலை ஆரம்பிக்கவும் அவள் சிரித்துவிட்டு,
“ஏன் சத்யா? கல்யாணம் பண்ண இன்டிரஸ்ட் இல்லையா உனக்கு?” என்று வினவ,
“கல்யாணம் பன்றதுக்கு இன்டிரஸ்ட் எல்லாம் இருக்கு... ஆனா இவங்க மெதட்ல ரொம்ப பார்மலா ஒரு பொண்ண பார்த்து ஓகே பண்ண எனக்கு விருப்பம் இல்ல” என்றான்.
“அவங்க மெதட் ஓகே இல்லனா உனக்கு வேற ஏதாவது மெதட் தனியா இருக்கா என்ன?”
“ம்ம்ம்... லைஃப் லாங் நம்ம வாழ்க்கைல வர போற கேரக்டர் கூட கொஞ்சமாச்சும் பேசிப் பழகிப் புரிஞ்சிக்கிட்டு இருக்கணும்னு நினைக்கிறேன்”
“அதுக்கென்ன... போய் பொண்ணு பாரு... அப்புறம் பேசிப் பழகிப் புரிஞ்சிக்க வேண்டியதுதானே?”
“உனக்கு நான் சொல்றது புரியல தீப்ஸ்... மேரேஜ் பண்ணிக்கணும்னு ஒரு பொண்ண ஃபோட்டோல பார்த்து எல்லாம் தோனாது... அப்படி தோனினா... அதுல அட்ரேக்ஷன் தாண்டி வேற என்ன இருக்க முடியும்...? எனக்கு அது வேண்டாம்...”
”மனசார வாழ்நாள் முழுக்க இந்தப் பொண்ணுதான் என் கூட இருக்கணும்னு தோனனும்... அப்படி ஒரு ஆழமான பிடித்தமும் உணர்வும் ஒரு பொண்ணுகிட்ட ஏற்படணும்”
“இதுவரைக்கும் யார்கிட்டயும் அப்படி ஒரு உணர்வு உனக்கு ஏற்படலையா?” என்றவள் கேட்ட கேள்வியில் ஒரு நொடி அமைதியாக இருந்தவன் பின் அவள் புறம் திரும்பி,
“ம்ம்ம்... ஒரு பொண்ணுகிட்ட மட்டும் ஏற்பட்டிருக்கு” என்றான்.
“அப்போ அந்தப் பொண்ணுகிட்ட போய் சொல்லிக் கல்யாணம் பண்ண வேண்டியதுதானே” என்று தீபிகா சொல்லவும், அவன் பதிலின்றி மௌனமாகிவிட்டான்.
எந்தக் கேள்வி கேட்டாலும் பக்கம் பக்கமாக பேசுபவன் அப்படி அமைதியானது அவளுக்கு வியப்பை அளித்தது. அப்போது அவர்கள் கார் அந்தப் பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கும் வளாகத்திற்குள் நுழைய, “என்ன சத்யா... ஏதாவது பிரச்சனையா?” என்று நண்பனிடம் மெதுவாகக் கேட்டாள்.
“பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல... சொன்னா அந்தப் பொண்ணு ஒத்துக்குவாளான்னு தெரியல... அதான் சொல்லல”
“சொன்னாதானே தெரியும்... ஒத்துக்குவாங்களா மாட்டாங்களான்னு”
“இல்ல தீப்ஸ்... சொன்னா ஒரு நல்ல ஃபிரண்ட்ஷிப்பை இழக்க வேண்டி இருக்குமோன்னு யோசனையா இருக்கு... அதான் சொல்ல முடியல”
“அப்படி எல்லாம் ஆகாது... நீ சொல்லு”
அவள் சொன்னதைக் கேட்டு மீண்டும் அவன் மௌனமாகிவிட, “சொல்லித்தான் பாரேன்... சொன்னாதானே அந்தப் பொண்ணுக்கு தெரியும்” என்றாள்.
அந்த நொடி அவன் தீபிகாவின் விழிகளை நேராகப் பார்த்து, “சரி சொல்லிடுறேன்... எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம்... உனக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமா தீப்ஸ்?” என்று கேட்டுவிட, அவள் மௌனமானாள்.
அவள் அமைதியாக இருக்க கார் அவன் குடியிருப்பு இருக்கும் அடுக்குமாடி முன்னே நின்றது.
அவன் இறங்கித் தன் பெட்டிகளை இறக்கிவிட்ட பிறகு தன் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்து அவளை நோக்கவும் அவள் தவிப்புடன்,
“சாரி சத்யா... எனக்கு விருப்பம் இல்ல” என்று நேரடியாக மறுத்துவிட்டாள்.
“இட்ஸ் ஓகே... போயிட்டு கால் பண்ணு... பை தீப்ஸ்” என்றவன் மிக இயல்பாக அவள் மறுப்பை ஏற்றுப் புன்னகையுடன் தலையசைத்துவிட்டுச் செல்ல அவள் முகம் வாடிப்போனது.
கார் அதன் பின் அந்த அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேறி அவள் வீட்டை நோக்கிப் பயணிக்கவும் அவள் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு சாய்ந்து அமர்ந்தாள்.
அவள் சிந்தனை சத்யாவைச் சுற்றியே சுழன்றது.
வாழ்நாள் முழுக்க அவனும் தானும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவளுக்குமே பல முறை தோன்றி இருக்கிறது. ஆனால் அதற்கு காதல் என்று அவள் பெயர் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.
இந்த இரண்டு ஆண்டு காலமாக நிறைய நேரங்களை இருவரும் ஒன்றாக செலவழித்து இருக்கிறார்கள். ஆரம்பகட்டத்தில் பழக்கப்படாத அந்தத் தேசத்தில் அவளுக்கு வழிக்காட்டியாகவும் ஒரு நல்ல தோழனாகவும் அவன்தான் இருந்தான். அவன் அருகில் இருக்கும் போது இயல்பாகவே ஒருவித பாதுகாப்பான உணர்வை அவள் உணர்ந்திருக்கிறாள்.
இதெல்லாம் தாண்டி அவனின் கண்ணியமான அன்பிலும் பழக்கத்திலும் மனதினோரத்தில் ஒருவித ஈர்ப்பும் அவளுக்கு அவன் மீது ஏற்பட்டிருந்த போதும் அதை அவளால் வெளிப்படையாக அவனிடம் சொல்ல முடியவில்லை.
அதுவும் தற்போது அவனே தன்னிடம் திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்கும் போது அதனை ஏற்காமல் மறுத்தது அவள் மனசாட்சிபடி பொய்தான்.
ஆனால் அவளுக்கு வேறு வழியில்லை. கடந்த கால வாழ்க்கையின் சில கசப்பான நினைவுகளை அவளால் இன்றும் இயல்பாகக் கடக்கவும் மறக்கவும் முடியவில்லை.
அதுவும் சத்யாவிற்குத் தன்னுடைய கடந்த காலம் தெரிந்தால் எப்படி எடுத்துகொள்வான்? அவன் தன் மீது கொண்டிருக்கும் மரியாதையும் அன்பும் ஒரு வேளை அவள் பகிர்ந்து கொள்ளும் உண்மையால் மாறிப் போய்விடுமோ? என்று பயம்தான் அவனின் கேள்விக்கு அவளைத் திடமாக மறுக்க வைத்துவிட்டது.
8