மோனிஷா நாவல்கள்
Kannadi Thundugal - Episode 9

Quote from monisha on March 10, 2025, 5:11 PM9
காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும். மறக்கடித்துவிடும் என்பது முழுக்க முழுக்க உண்மை இல்லை. நாம் கடந்து வந்த ஏமாற்றங்களை வலிகளை மோசமான அனுபங்களை ஆழ்மனம் எப்போதுமே மறக்காது.
காரிலிருந்து இறங்கியதும் பல வண்ணப்பூச்சுகளால் பளிச்சிட்ட தன் புது வீட்டின் தோற்றத்தைக் கண்களாலேயே அளந்த தீபிகா, அதன் அழகை இரசித்து கொண்டே உள்ளே நுழைந்தாள்.
முந்தைய வருடம்தான் பாலாஜி மனம் வந்து அவர் கடைக்குப் பக்கத்தில் விலைக்கு வந்த இடத்தை வாங்கினார். பெரிதாக அங்கே வீடும் கட்டிக் கொண்டு கடையையும் கொஞ்சம் வளர்த்து சூப்பர் மார்கெட்டாகக் கட்டிவிடலாம் என்ற அவருக்கு ஆசை உண்டாகவும் அதனை விரைவாக செயல்படுத்தவும் தொடங்கினார். வேலையை ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் போதே நந்திகாவிற்கு வரன் கூடி வந்தது.
வீடு கட்டும் செலவுடன் திருமணச் செலவும் சேர்ந்து கொண்டதில் தடுமாறிய பாலாஜிக்கு தீபிகாவின் சம்பளம் பெரிதும் உதவியது.
அதுநாள் வரை அவளது சம்பளப் பணத்தை எடுத்துச் செலவு செய்வதில்லை என்று பிடிவாதமாக இருந்தார். என்னதான் கோபம் குறைந்து அவளை வீட்டில் சேர்த்துக் கொண்டுவிட்டாலும் நடந்த சம்பவங்களின் தாக்கங்கள் அவருக்குள் அப்படியேதான் இருந்தன. ஆதலால் ரோஷமாக மகளின் பணத்தைத் தொடக் கூடாது என்று எண்ணினார்.
ஆனால் எதிர்பாராமல் ஏற்பட்ட பணநெருக்கடியில் பாலாஜி சிக்கித் தவித்த போது, “ப்ளீஸ் பா என் அகௌன்ட்ல இருக்கப் பணத்தை எடுத்துச் செலவு பண்ணிக்கோங்க” என்று தீபிகா மன்றாடினாள்.
இதுதான் வாய்ப்பு என்று ராஜேஸ்வரியும், “பழசை எல்லாம் போட்டும் விடுங்க... நம்ம பொண்ணு பணம்தானுங்கள... கடன வாங்கி கஷ்டப்படுறதுக்கு அந்தப் பணத்தை எடுத்துக்கலாமே” என்று ஒரு வழியாகப் பேசி அவர் மனதைக் கரைத்துவிட்டார்.
அதன் பின் அவர்கள் வீடும் கடையும் மளமளவென வேகமாக வளர்ந்தது. அதனுடன் நந்திகாவின் திருமணமும் சீரும் சிறப்புமாக நடந்தேறியது. ஆனால் இரண்டு விழாவிற்கும் தீபிகாவால் வரமுடியவில்லை.
வரமுடியவில்லை என்பதை விட வராமல் அவள் தவிர்த்துவிட்டாள். விடுப்பு எடுத்துக் கொண்டு வர முடியாத நிலை என்று தங்கையிடம் பொய்யுரைத்துவிட்டாள். அவளுக்குத் தெரியும். அந்தப் பொய் அவள் பெற்றோருக்கு நிம்மதியைக் கொடுக்கும்.
அவர்கள் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் சொந்தபந்த விழாக்களில் அவள் வந்து முன்னே நிற்கும் போது தேவையில்லாத சங்கடங்களும் சச்சரவுகளும் வரும் என்ற கவலை கொண்டிருந்த அவர்களின் மன எண்ணத்தை அவள் ஒருவாறு புரிந்து கொண்டாள்.
அதனாலேயே அவள் அமைதியாக விலகிவிட்டாள். அதற்கு அவளின் ஜெர்மனி பயணம் தெரிந்தோ தெரியாமலோ உதவியாக இருந்தது.
இரண்டரை வருடங்களுக்குப் பிறகு தீபிகா தன் வீட்டு வாயிலுக்குள் நுழையவும், ராஜேஸ்வரியின் குரல் உயர்த்தலாகக் கேட்டது.
“லீவு போடுறன்னு ஒரு வார்த்தை சொல்லித் தொலைஞ்சிட்டுப் போக வேண்டியாதுதானடி”
“இல்லமா... ஊர்ல தம்பிக்கு அடிப்பட்டுடுச்சு... அவசரமா கிளம்பி போயிட்டேன்” என்று சமாளித்துக் கொண்டிருந்த பணிப்பெண் தீபிகாவைப் பார்த்ததும்,
“ம்மா யாரோ வந்திருக்காங்க?” என்று உரைக்கவும் திரும்பிப் பார்த்த ராஜேஸ்வரி,
“தீபா வந்துட்டியா... சாயந்திரம்தான் வருவன்னு இல்ல நினைச்சிட்டு இருக்கேன் நானு” என,
“ப்ளைட் க்ரேக்ட் டைமுக்கு ரீச்சாகிடுச்சு... உடனே ஏர்போர்ட்ல இருந்து கேப் போட்டு வந்துட்டேன்” என்று பதிலளித்துக் கொண்டே அகன்று விரிந்த முகப்பறையைப் பார்த்தாள்.
இது நம்ம வீடுதானா என்று அவளுக்கு ஆச்சரியமே உண்டானது. அதுவும் ஃபர்னிச்சர்கள் அனைத்தும் அதன் புத்தம் புது பொலிவு மாறாமல் இருந்தன. அவற்றை எல்லாம் அவள் பார்த்து வியந்து கொண்டிருக்கும் போது,
“தேவி... நீ அந்தப் பெட்டியை எடுத்துட்டுப் போய் நந்து ரூம்ல வைச்சிட்டு வா” என்று ராஜேஸ்வரி கட்டளையிட,
“இருக்கட்டுமா நான் எடுத்துக்கிறேன்” என்று தீபிகா பெட்டியை எடுக்க வந்த தேவியைத் தடுத்துவிட்டாள்.
“இருக்கட்டும் அவ எடுத்துட்டுப் போய் வைப்பா... கொடு”
“பரவாயில்ல மா நானே எடுத்துக்கிறேன்... ரூம் எங்க இருக்கு சொல்லுங்க?”
“அதோ நேரா தெரியுதுல அந்த ரூம்தான்” என்று சொல்ல,
“சரி ம்மா” என்றுவிட்டு அவள் தன் பெட்டி பைகளை எடுத்துக் கொண்டு செல்லும் போது அந்தப் பணிப்பெண்,
“யாரும்மா இவங்க?” என்று மெல்லிய குரலில் கேட்ட போதும் அது தீபிகாவின் காதில் விழுந்தது.
“உனக்கு ரொம்ப முக்கியமா? கதைப் பேசிட்டு நிற்காம சீக்கிரமா வீட்டைப் பெருக்கிட்டுத் துடை” என்று ராஜேஸ்வரி அதிகாரம் செய்யவும் அவள் அமைதியாகத் தன் வேலையைப் பார்க்க நகர்ந்துவிட்டாள்.
இவர்களின் சம்பாஷணைகளைக் கேட்டபடி அறைக்குள் சென்ற தீபிகாவிற்கு, ‘யாருன்னு கேட்டா... மகன்னு சொல்ல வேண்டியதுதானே... அதுக்கு ஏன் அம்மா திட்டணும்?’ என்ற எண்ணம் தோன்றியது.
இந்த யோசனையுடன் பெட்டியை வைத்துவிட்டு அறையைச் சுற்றிப் பார்த்தவள், படுக்கைக்கு மேல் மெகா சைஸில் பெரிதாக மாட்டியிருந்த புகைப்படத்தைக் கண்டு நின்றுவிட்டாள். நந்திகாவும் அவள் கணவனும் மிக நெருக்கமாகக் கட்டியணைத்து முத்தமிட்டு கொண்டிருந்த படம். அதனைப் பார்க்கவே சற்று விரசமாகவும் முகம் சுழிக்கும்படியுமாக இருக்க,
‘இந்த மாதிரி ஃபோட்டோஸ் எல்லாம் வீட்டு சுவத்துல மாட்டுவாங்களா என்ன?’ என்று எண்ணிக் கொண்டவளுக்குத் தங்கையின் நினைவு வரத் தன் செல்பேசி எடுத்து அழைத்தாள்.
“க்கா சென்னை வந்துட்டியா?” என்று நந்து உற்சாகமாகப் பேச,
“நான் நம்ம வீட்டுக்கே வந்துட்டேன்... நீயும் உன் ஹஸ்பெண்டும் இருக்க ஃபோட்டோ முன்னாடிதான் நிற்குறேன்” என்றாள்.
“எந்த ஃபோட்டோவைச் சொல்ற?”
“நம்ம பெட் ரூம்ல இருக்கே அந்த ஃபோட்டோதான்... ரொம்ப ரொமேன்டிக்கா” என்றவள் இழுத்தபடி சொல்லவும்,
“அதுவா க்கா... ப்ரீ வெடிங் ஷூட் ஃபோட்டோ... எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்ததுதா... நான்தான் பிரேம் போட சொன்னேன்” என்றவள் பெருமையாகச் சொன்னதைக் கேட்டுத் தலையிலடித்துக் கொண்ட தீபிகா,
“சரி அதை விடு... நீ எப்போ வர...? உன்னைப் பார்க்கணும் போல இருக்கு” என்றாள்.
“நீ ஊருக்கு வரன்னு சொன்னதும் நான் நேத்தே வரலாம்னு ப்ளேன் போட்டேன் க்கா... அதுக்குள்ள என் மாமியாருக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு”
“ஐயய்யயோ... என்னாச்சு அவங்களுக்கு?”
“நீ பதற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல... நான் அம்மா வீட்டுக்குக் கிளம்புனாலே என் மாமியாருக்கு மூக்குல வேர்த்துடும்... உடனே உடம்பு முடியல இடுப்பு வலிக்குது கால் வலிக்குதுன்னு படுத்துடுவாங்க”
“ப்ச்... அப்படினா நீ வரமாட்டியா?”
“இல்ல... நான் என் வீட்டுகார்கிட்ட சொல்லிட்டேன்... நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னாரு”
“நாளைக்கு நான் காலையிலயே ஆஃபிஸ் போயிடுவேனே நந்து”
“நாளைக்கே போகணுமா க்கா?” என்று நந்திகா வினவவும் ,
“ஆமா நந்து... கொஞ்சம் பார்மாலிட்டீஸ் இருக்கு... அதெல்லாம் நேரா ஆஃபிஸ் போய்தான் முடிக்க முடியும்” என்றாள். அதன் பின் சில நொடிகள் யோசித்தவள்,
“சரி அப்படினா... நான் சனிக்கிழமை வரட்டுமா?” என்று கேட்க
“சனிக்கிழமை ஓகே... ஆனா வந்துட்டு உடனே போகக் கூடாது... ஒரு இரண்டு நாளாச்சும் இருக்குற மாதிரி வா” என்றாள்.
“சரி க்கா... நான் இருக்க மாதிரியே வர்றேன்” என்றவள் சொல்ல, “கண்டிப்பா வந்துடு... எதுவும் காரணம் சொல்லாதே... ஓகே ஃபோனை வைச்சுடவா.... பை” என்று தீபிகா தன் பேச்சை முடித்து அழைப்பைத் துண்டித்தாள்.
அதன் பின் அவள் குளித்துவிட்டு தலையைத் துவட்டிக் கொண்டு ஹாலுக்கு வர, தரையைத் துடைத்துக் கொண்டிருந்த தேவி இவளைக் குறுகுறுவெனப் பார்த்து வைத்தாள். இன்னும் அவளுக்குத் தான் யார் என்ற சந்தேகம் தீரவில்லை போல என்று எண்ணிக் கொண்டே தீபிகா வீட்டின் அறைகளை பொறுமையாகச் சுற்றிப் பார்த்தாள்.
வீட்டின் கட்டுமானங்களில் அவள் நிறைய யோசனைகள் சொல்லி இருந்தாள். ஓரளவு அதே போலவே கட்டப்பட்டிருந்தது. ஆனால் மூன்று படுக்கையறைகள் வைக்கலாம் என்று அவள் சொன்னதற்கு மாறாக இரண்டு படுக்கையறைகள்தான் கட்டப்பட்டிருந்தன. அது மட்டும் கொஞ்சமாக அவளுக்கு வருத்தம்.
அதன் பின் அவள் சமையலறைக்குள் வரவும், ராஜேஸ்வரி மீன் வறுக்கும் வாசம் ஆளைத் தூக்கியது.
“மீனா ம்மா சூப்பர்... இன்னைக்கு செம கட்டுக் கட்டப்போறேன்”
“நீ டைனிங் டேபில போய் உட்காரு... நான் மீன் வறுத்துட்டு சாப்பாடு போடுறேன்” என்றவர் சொல்ல, அவள் அமைதியாக அங்கிருந்த உணவு மேஜையில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.
தேவியின் பார்வை அவளை இன்னும் தொடரவும், “என்ன என்னையே பார்க்குறீங்க?” என்று தீபிகா கேட்டு வைக்க,
“அதெல்லாம் ஒன்னும் இல்லமா” என்று அவள் தடுமாறித் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
“நீங்க வேலைக்குச் சேர்ந்து ஒரு இரண்டு மாசம் இருக்குமா?” என்று கேட்டாள் தீபிகா.
“இருக்கும் ம்மா”
“அதான் உங்களுக்கு நான் யாருன்னு தெரியல... நான் அவங்க பொண்ணுதான்” என,
“ஓ... நான் அம்மாவுக்கு ஒரே பொண்ணுன்னுதான் நினைச்சேன்... நீங்க இரண்டாவது பொண்ணா... வெளியூர்ல படிச்சிட்டு இருந்தீங்களா?”
“நான்தான் மூத்த பொண்ணு... ஜெர்மனில வேலைப் பார்த்துட்டு இருந்தேன்” என்றவள் தெரிவிக்கும் போது சமையலறை விட்டு வெளியே வந்த ராஜேஸ்வரி,
“என்ன கதை அளந்துட்டு இருக்க... சீக்கிரம் துடைச்சி முடி... சாமான் வேற துலக்கி வைக்கணும் இல்ல” என்று அதட்டல் போடவும் தேவி அமைதியாகத் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
“நான்தான்மா பேச்சு கொடுத்தேன்... அவங்க எதுவும் பேசல” என்று தீபிகா சொல்லவும்,
“எதுக்கு ? வேலைக்காரப் பொண்ணுக்கிட்டயும் உன் கதை எல்லாம் சொல்லி என் மானத்தை வாங்கணுமா உனக்கு?” என்று ராஜேஸ்வரி குத்தலாக கேட்க, அவளுக்குச் சுருக்கென்றானது.
அதற்குப் பிறகு அவள் ஒன்றும் பேசாமல் அமைதியாகிவிட்டாள். அடுத்த சில நிமிடத்தில் மீன் குழம்பும் மீன் வறுவல் எறா தொக்கு என்று அவளுக்குப் பிடித்த உணவு பண்டங்களை அடுக்கி வைத்த ராஜேஸ்வரி இலையைப் போட்டுப் பரிமாற வரவும், “அப்பாவும் வரட்டும் மா? சாப்பிடலாம்” என்றாள்.
“அவர் எங்கடி வேலை நேரத்துல வருவாரு... நீ சாப்பிடு” என்று ராஜேஸ்வரி பரிமாறத் தொடங்கிவிட்டார்.
மீன் குழம்பைச் சாதத்தில் பிசைந்து உண்டவள், “அங்கே கூட நிறைய வரைட்டி சாப்பிட்டிருக்கேன்... ஆனா உன் மீன் குழம்புக்கு வேற எதுவும் ஈடே இல்லமா” என்று சிலாகிக்க,
“நீ பார்த்து சாப்பிடு... முள்ளு கிள்ளு தொண்டைல மாட்டிக்க போகுது... நான் ஆம்லேட் போட்டுட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு ராஜேஸ்வரி எழுந்து கொள்ள,
“ம்மா இதுவே போதும்மா... ஆம்லேட் எல்லாம் வேண்டாம்” என்றாள்.
“இருடி போட்டுட்டு வர்றேன்... நீ பொறுமையா சாப்பிடு”
“ம்மா வேண்டாம் ம்மா” என்றவள் சொன்ன போதும் கேட்காமல் இராஜேஷ்வரி சமையலறைக்குள் சென்றுவிட்டார்.
‘இவ்வளவு ஐட்டம் இருக்கு... இதையே எப்படி சாப்பிட்டு முடிக்க போறேன்னு தெரியலயே... இதுல ஆம்லேட் வேறயா?’ என்றவள் தனக்குதானே புலம்பிக் கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய ஆமேலட்டைக் கொண்டு வந்து வைத்து அவளைத் திணறடித்தார்.
மூச்சு முட்ட முட்ட உண்டு முடித்தவள் அதன் பின் கைகளைக் கழுவிக் கொண்டு வந்து முகப்பறை சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்தாள்.
அவள் தங்கையின் திருமணப் புகைப்படம் அவள் அம்மா அப்பா ஜோடியாக நின்றிருந்தது போன்ற ஒரு படம் அதன் பின் தங்கை திருமணத்தில் குடும்பமாகப் பெரியப்பா வீட்டினருடன் சேர்ந்திருந்த படங்கள் என்று அவற்றை எல்லாம் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டு நிற்க,
“தங்கச்சி கல்யாண ஆல்பம் ரூம்ல தான் இருக்கு... நான் எடுத்து தர்றேன் நீ வந்து பாரு” என்று அழைத்தார் ராஜேஸ்வரி.
“தோ வர்றேன் ம்மா” என்றவள் அப்போது அலமாரிகளை அலங்கரித்திருந்த பழைய புகைப்படங்களை நோட்டமிட்டாள். அவற்றில் தங்கையின் சிறு வயது புகைப்படங்கள் எல்லாம் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அவளுடைய படம் ஒன்றே ஒன்று கூட இல்லை. சுற்றும் முற்றும் தேடியும் எதுவுமே இல்லை என்று அப்போதுதான் புரிந்தது.
அதன் பின் அவளால் அங்கே நிற்க முடியவில்லை. அறைக்குள் வந்து அமைதியாக அமர்ந்துவிட்டாள். மனம் வலித்தது. கண்களில் கண்ணீர் மளமளவெனப் பெருகியது.
அதற்குள் ராஜேஸ்வரி நந்திகாவின் திருமண ஆல்பங்களை அவளிடம் காட்டி ஒவ்வொரு நிகழ்வையும் வர்ணித்துப் பூரித்துப் போனார். என்னவோ அப்போது அவர் தங்கையைப் பற்றிப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளைக் குத்திக்காட்டும் நோக்கில் பேசியதாகவே தோன்றியது.
உண்மையில் தன் பெற்றோர்கள் என்னதான் அன்பும் அக்கறையும் காட்டினாலும் இன்று வரையிலும் மனதளவில் அவர்கள் தன்னை ஏற்றுக் கொள்ளவில்லை. தன் தவறை மன்னிக்கவும் இல்லை. அது அவர்களுடைய தவறும் இல்லை. தன்னுடைய தவறுதான்.
எத்தனை ஆண்டுகளான போதும் நடந்தவற்றை மாற்றி அமைக்க முடியாது. அவள் செய்த தவறைச் சரி செய்யவும் முடியாது.
ஓரளவு அந்த உண்மையை ஏற்குமளவுக்கு அவளுக்கு அப்போது முதிர்ச்சி ஏற்பட்டிருந்ததால் அந்த ஏமாற்றத்தையும் வலியையும் ஒருவாறு அவள் ஜீரணித்துக் கொண்டாள்.
மாலை வீடு திரும்பிய பாலாஜி, “எப்போ வந்தம்மா எப்படி இருக்க?” என்று விசாரித்து உபசரித்தப் போதும் அவரின் வார்த்தையிலும் பெரிதாக ஒட்டுதல் இல்லை என்பதாகவே அவளுக்குப்பட்டது.
இரவு அந்த அறையில் படுத்துக் கொண்டவளுக்கு உறக்கமே வரவில்லை. தூரத் தேசத்தில் தனி வீட்டில் வாழ்ந்த போது உணராத தனிமையையும் வெறுமையையும் சொந்த நாட்டில், சொந்த வீட்டில் உணர்ந்தாள்.
ஒரு வகையில் ஜெர்மனியில் வசித்திருக்கும் போது, ‘என்ன தீப்ஸ் ஒரு மாதிரி இருக்க உடம்பு சரி இல்லையா.?’ ‘மூட் அப்ஸட்டா’ ‘வீட்டு ஞாபகம் வந்திருச்சா?’ என்று அவள் எப்போது மனம் வருத்தப்பட்டு இருந்தாலும் அல்லது உடல் நலக் குறைவால் அவஸ்த்தைப்பட்டாலும் சத்யா வந்து நிற்பான்.
இன்று இந்த நொடி அவன் உடன் இல்லாதது மனதிற்கு என்னவோ போலிருந்தது. அவள் மனம் அவனைத் தேடியது. அவனிடம் பேச வேண்டுமென்று தவித்தது. தன் மனவேதனையைச் சொல்லி அழ வேண்டுமென்று துடித்தது.
ஜெர்மனியில் இருந்த வரை நல்ல நண்பர்களாக மட்டுமே இருந்த போதும் தற்சமயம் அந்த நட்பு என்ற எல்லைக் கோட்டின் விளம்பில் நின்று கொண்டு, இருவருமே அதன் எல்லைகளைத் தாண்ட விழைந்தனர்.
9