மோனிஷா நாவல்கள்
Kannadi Thundungal - Episode 1

Quote from monisha on February 22, 2025, 4:28 PMகண்ணாடி துண்டுகள்
1
'எல்லாம் விதிப்படி நிகழ்கிறது. ஆனால் விதி எதன்படி நிகழ்கிறது? விதியானது நம் வாழ்வின் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குகின்றதா அல்லது சூழ்நிலைகள்தான் நம்மை அத்தகைய நிலைக்கு இழுத்து செல்கின்றனவா?'
வீட்டின் வாயிற் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
சில நிமிடங்களில் சமையலறை விழித்துக் கொண்டது. சாமான்கள் உருண்டன.
சாம்பல் நிறப் போர்வையை மொத்தமாக இழுத்து முகம் வரை மூடியிருந்த தீபிகா, வெளியே கேட்கும் சத்தங்களுக்குக் காது கொடுத்துக் கொண்டே தனது கைப்பேசியில் குறுந்தகவல்களைத் தட்டச்சுச் செய்தாள்.
“நாளைக்கு எனக்கு ஃபைனல் எக்ஸாம்ஸ் முடியுது... நீ வர்றியா மீட் பண்ணலாம்”
“ம்ம்ம் ஓகே” என்ற பதிலுடன் பல்லைக் காட்டிச் சிரிக்கும் எமோஜியும் வந்தது.
“விவேக்... அந்த ரெட் டீ ஷர்ட் போட்டுட்டு வர்றியா?”
“எந்த ரெட் டீ ஷர்ட்?”
“மறந்துட்டியா... நான் உன் லாஸ்ட் பர்த்டேக்கு கிஃப்ட் பண்ணேனே”
“ஓ... அந்த டீ ஷர்டா?”
“என்ன... அந்த டீ ஷர்டாஆஆஆ...ன்னு இழுக்குற... வைச்சிருக்கியா இல்லயா?” என்ற கேள்வியுடன் சிவந்த இரண்டு கோப முகங்களை அனுப்பினாள்.
“இப்ப எதுக்கு மூஞ்சி சிவக்குது... வைச்சிருக்கேன்டி... எங்க வைச்சிருக்கேன்னு தேடணும்”
“எது... தேடணுமா?” மீண்டும் பல கோப முகங்கள்!
“டென்ஷனாகதடி... என் பீரோ கன்னா பின்னான்னு கலைஞ்சிருக்கு... உள்ளே எங்க இருக்குன்னு தேடணும்... அத சொன்னேன்”
“இல்ல... நீ நான் கொடுத்த டீ ஷர்ட்டைத் தொலைச்சிட்ட... பொய் சொல்ற”
“சத்தியமா இல்லடி”
“அப்போ உடனே அந்த டீ ஷர்டைப் ஃபோட்டோ எடுத்து எனக்கு அனுப்பு”
“இப்பவா...?”
“ஆமா இப்பவே!”
“தீபு” என்று பாவமான முகபாவனை எமொஜியை அனுப்பி வைத்த போதும், அவள் மனம் இறங்கவில்லை.
“அனுப்பி வைடா”
“இப்போ ஏன் டி... நாளைக்குத் தேடிக் கண்டுபிடிச்சு அந்த டீ ஷர்ட் போட்டுட்டு வர்றேன்... ஓகேவா?”
“இப்போ நீ ஃபோட்டோ அனுப்பலனா என்கிட்ட பேசவே வேண்டாம்”
இவ்விதமாகப் போர்வைக்குள் தன் காதலன் விவேக்கிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த தீபிகா வெளியே பேச்சுக் குரல் நெருங்கி வருவதை அறிந்தவுடன் தனது கைப்பேசியை முதுகிற்குப் பின்னே மறைத்து வைத்துக் கொண்டாள்.
தீபிகாவின் தந்தை பாலாஜியும் இராஜேஷ்வரியும் பேசிக் கொண்டே அறைக்குள் நுழைந்தனர்.
பாலாஜி அவர்கள் தெருவிலேயே பெரிய மளிகை ஸ்டோர் வைத்திருக்கிறார். நல்ல வருமானம்தான் என்றாலும் பெரிதாக கார், வீடு என்று ஆடம்பரமாக வாழ்வதில் அவருக்கு விருப்பம் இல்லை. சிறிய வீடே போதும் என்று தன் தந்தையின் வீட்டைக் கொஞ்சமாக மாற்றியமைத்து அங்கேயே இருபது வருடங்களுக்கு மேலாகக் குடியிருக்கிறார்.
சுற்றுலா போன்ற சின்னச் சின்னச் சந்தோஷங்களுக்கும் கூடப் பணம் ஒதுக்கமாட்டார். கைக்கு வருகிற வருமானம் பெரும்பாலும் நகையாகவும் அல்லது வங்கியில் பணமாகவுமே இருக்கும்.
அதேநேரம் மகள்களுக்கு உடைகள் வாங்கித் தருவதிலும் பிடித்தமான உணவு வாங்கித் தருவதிலும் கணக்குப் பார்க்கமாட்டார். இருவரையும் அவர்கள் விருப்பம் போலப் படிக்கவும் வைக்கிறார்.
தீபிகா பி.ஸி.ஏ கடைசி ஆண்டு படிக்கிறாள். இளைய மகள் நந்திகா பொறியியல் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். மகள்கள் இருவரின் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டிருந்த பாலாஜி ஆளுக்கொரு ஓரமாகப் படுக்கையில் படுத்திருந்த மகள்கள் இருவரும் உறங்குவதைப் பார்த்துவிட்டு,
“பரவாயில்ல... இரண்டு பேரும் படுத்துட்டாங்க... இந்நேரம் வரைக்கும் வாயடிச்சிட்டு இருப்பாங்க” என்று கேட்க,
“தீபு அப்பவே படுத்துட்டா... சின்னதுதான் இவ்வளவு நேரம் டிவி பார்த்துட்டு இருந்தது... நான்தான் அதட்டிப் படுக்க வைச்சேன்” என்று சொல்லிக் கொண்டே அவரின் சகதர்மினி இராஜேஷ்வரி கட்டிலுக்கும் சுவருக்கும் அருகே இருந்த இடைவெளியில் பாயை விரித்துப் போட்டார்.
“தீபா ஏன் முழுசா மூஞ்சியை மூடிட்டுப் படுத்திருக்கா... மூச்சடைக்காது” என்று சொல்லிக் கொண்டே பாலாஜி அக்கறையாக மகளின் முகத்திலிருந்த போர்வையை மெல்ல கீழே இழுத்துவிட்டார். தீபிகாவிற்குப் படபடப்பானது. ஆழ்ந்து உறக்கத்தில் இருப்பது போல மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டிருந்தாள்.
விளக்குகள் அணைக்கப்பட்டதும் மெல்ல விழிகளைத் திறந்து, இருளில் அமிழ்ந்திருக்கும் அறையினைச் சுற்றும் முற்றும் பார்த்தாள். அம்மாவும் அப்பாவும் கீழே படுத்துவிட்டதை அறிந்ததும் தான் மறைத்து வைத்திருந்த கைப்பேசியை எடுத்துக் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த மேஜை மீது வைத்துவிட்டாள்.
அப்போது கீழே படுத்திருந்த அவள் பெற்றோர்களின் பேச்சுக் குரல் சன்னமாகக் கேட்டது.
“காலையில அண்ணன் எனக்கு ஃபோன் பண்ணுச்சு... உங்ககிட்ட பேசணும்னு” என்று இராஜேஷ்வரி தயக்கத்துடன் இழுக்க,
“எனக்கு தூக்கம் வருது ராஜி... கம்னு படு” என்றுவிட்டு பாலாஜி திரும்பிப் படுத்த போதும் இராஜேஷ்வரி பேச்சைத் தொடர்ந்தார்.
“ஏன் இப்படி பிடிவாதமா இருக்கீங்க...? கிருபாவுக்கு தீபாவைக் கொடுத்தாதான் என்ன?”
“அரசியல் அது இதுன்னு வெட்டியா சுத்திட்டு இருக்கான் புறம்போக்கு... அவனுக்கு நான் என் பொண்ணைக் கொடுக்கணுமா?” பல்லைக் கடித்துக் கொண்டு அவர் பதில் கூற,
“சும்மா இப்படி எல்லாம் பேசாதீங்க... அவனுக்குக் கட்சில நல்ல பதிவி கிடைக்கும்னு அண்ணன் சொல்லுச்சு” என்று இராஜி சொன்னதைக் கேட்டதும் மனைவி புறம் திரும்பியவர்,
“சரி... முதலில அவனுக்குப் பதவி கிடைக்கட்டும்... அப்புறமா என் பொண்ணைத் தர்றேன்” என்று அந்த உரையாடலுக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இவர்கள் பேசியதெல்லாம் செவியைத் தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்த தீபுவிற்கு உள்ளுர பதட்டம் கூடியது. கடந்த ஒரு ஆண்டாகவே இந்தப் பேச்சு வார்த்தைகள் மறைமுகமாக நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன.
உறவினர் வீட்டு விழாவிற்குப் போனால் அங்கே எல்லோரும் அவளையும் கிருபாவையும் சேர்த்து வைத்துப் பேசுவது, மருமகளே மருமகளே என்று மாமி கொஞ்சிக் கொஞ்சி அழைப்பது, போன மாதம் வந்த அவள் பிறந்த நாளுக்கு மூன்று சவரனில் செயின் வாங்கிப் போட்டது என்று அவர்களும் என்னன்வோ செய்து பார்க்கிறார்கள். அப்பாதான் பிடிக் கொடுக்க மறுக்கிறார்.
ஆனால் இப்போது நேரடியாகவே அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அம்மாவின் பிடிவாதம் முன்பு அப்பாவின் பிடிவாதம் எத்தனை நாட்களுக்குத் தாக்குப் பிடிக்குமென்று தெரியவில்லை. பயமாக இருந்தது தீபாவிற்கு!
தாய்மாமன் மகன் கிருபாவிடம் அவள் நன்றாகப் பேசிப் பழகுவாள்தான். கிண்டல்கள், கேலிகள் எல்லாம் நிறைய செய்திருக்கிறாளே ஒழிய திருமணம் என்றளவுக்கு எல்லாம் யோசித்ததுமில்லை.
அந்த எண்ணத்தில் பழகியதுமில்லை. ஆனால் அவன் அந்த எண்ணத்தில் பழகுகிறான் என்று அறிந்ததும் அவனுடனான பேச்சுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டாள். இருப்பினும் அவன்,
“என்ன தீபா... இப்ப எல்லாம் பேசவே மாட்டேங்குற?” என்று வலிய இழுத்து அவளிடம் பேச்சுக் கொடுப்பதும், “மாமாகிட்ட பேசு” என்று இழைவதும், வம்பு இழுப்பதும் அவளுக்கு அவன் மீது அதீத எரிச்சலை உண்டாக்கின.
அதுவும் விவேக்கைக் காதலிக்க ஆரம்பித்தப் பிறகு கிருபா நெருங்கி வருவது அவளை அதிகமாகச் சங்கடப்படுத்தியது.
விவேக்கை அவளுக்குப் பள்ளியிலிருந்து தெரியும். அவளை விட ஒரு வயது பெரியவன். பள்ளிப் படிப்பை முடித்து அவள் மகளிர் கல்லூரியில் பி.ஸி.ஏ. சேர, அப்போது அருகே இருந்த ஆண்கள் கல்லூரியில்தான் அவன் பி.காம். படித்துக் கொண்டிருந்தான்.
அவ்வப்போது பேருந்தில் வரும் போதும் போகும் போதும் இயல்பாகப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் அவர்கள் உறவு காதல் போல எல்லாம் இல்லை. நல்ல நட்புடன்தான் பழகினர்.
ஆனால் விவேக் திடீரென்று ஒரு நாள் காதலிக்கிறேன் என்று சொல்ல, அவன் சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வது என்று குழம்பினாள். ஒத்து வராது என்று ஒரு மாதிரி மறுத்தும் பார்த்தாள். ஆனால் அவன் விடாமல் தொடர்ந்து தன் காதலைச் சொல்லவும் அவள் மனம் லேசாக அவன் புறம் சாயத் தொடங்கிவிட்டது.
இருவரும் காதலிக்கத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிய போகிறது. விவேக் இந்த வருடத்துடன் தன் படிப்பை முடிக்கப் போகிறான். ஆனால் அவளுக்கு இன்னும் ஓராண்டு காலப் படிப்பு இருக்கிறது. படிப்பை முடித்து வேலைக்குச் சேரும் வரை திருமணம் போன்ற தேவையில்லாத குழப்பங்கள் எதுவும் வராமல் இருந்தால் பரவாயில்லை என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.
இந்தப் பயத்தினாலேயே வெகுநேரம் அவள் உறக்கத்தைத் தொலைத்துவிட்டிருந்தாள்.
அடுத்த நாள் காலை கைப்பேசியில் அலாரம் அலறுவதோடு சேர்த்து, “தீபிகா” என்று அம்மாவும் அலற, அவளுக்கு விழிப்பு வந்தது.
தங்கை படுத்திருந்த இடம் காலியாக இருந்தது. அவள் எப்போதோ கல்லூரி பேருந்தில் பாதி தூரம் போயிருப்பாள். நந்திகா பொறியியல் படிப்பில் சேர்ந்த பின் இருவரும் பேசிக் கொள்ள நேரம் அமைவதே இல்லை என்று தீபுவின் மனதினோரத்தில் ஒரு சிறு வருத்தம் எட்டி பார்த்தது.
படுக்கையிலிருந்து எழ முடியாமல் உடலும் மனமும் சோம்பிக் கிடந்தது. சில நொடிகள் அப்படியும் இப்படியுமாக உருண்டுவிட்டு படுக்கையிலிருந்து எழுந்தவளின் கரம் நேராக அவளுடைய கைப்பேசியை எடுத்துக் குறுந்தகவல்களைப் பார்த்தது.
அவள் கேட்ட அந்த டி ஷர்ட்டின் படத்தை இரவு ஒரு மணிக்கு அனுப்பி வைத்திருந்தான் அவள் காதலன். அதனைப் பார்த்த கணம் அத்தனை நேரம் அவள் மனதில் மண்டியிருந்த சோர்வெல்லாம் விலகிவிட்டது.
அவள் உடனே இதய சின்னத்தைப் போட்டு லவ் யூ டா என்று அனுப்பி வைத்துவிட்டு உற்சாகமாகக் கல்லூரிக்குப் புறப்பட்டுவிட்டாள். பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்ததும் மனதில் ஏதேதோ சிந்தனைகள் அலைமோதின.
முக்கியமாக தன் காதலை வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா என்ற பயத்தைவிட கிருபாகரனாலும் மாமாவாலும் ஏதேனும் தேவையில்லாத பிரச்சனைகள் வருமோ என்றுதான் கவலையாக இருந்தது.
அதுவும் மாமா அவர்கள் சாதிக் கட்சியில் பெரிய கையாக இருக்கிறார். சாதி மாற்று திருமணம் செய்வதாக இருந்தால் அவரிடமிருந்து நிச்சயம் எதிர்ப்பு வரும்.
இந்தக் குழப்பமெல்லாம் ஏற்படுவதற்கு முன்பாக தந்தையிடம் தன் காதலைப் பற்றிச் சொல்லிவிட வேண்டுமென்று நினைத்தாள் தீபிகா. ஆனால் அவள் துரதிஷ்டம், அவள் சொல்வதற்கு முன்பாக பாலாஜியின் காதுக்கு அவளுடைய காதல் விஷயம் எட்டிவிடுகிறது.
Episode 1 - audio
https://www.youtube.com/watch?v=PKzHGKbm1pI
கண்ணாடி துண்டுகள்