மோனிஷா நாவல்கள்
Kannadi Thundungal - Episode 7

Quote from monisha on March 7, 2025, 12:02 PM7
அன்பும் பாசமும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் வரைதான்.
என்று நம் குடும்பங்களில் காலம் காலமாக நடக்கும் அநியாயங்கள் அவலங்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்கத் தொடங்குகிறோமோ அன்றே நாம் அவர்களுக்கு அந்நியப்பட்டுப் போவோம். அன்பும் பாசமும் அர்த்தமற்று போகும்.
தீபிகா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட தகவலறிந்த மறுகணமே வனிதா தன் கணவன் ராஜேஷுடன் வந்து சேர்ந்தாள். சிகிச்சை அறை வெளியே கவலையுடன் அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்து,
“தீபாவுக்கு... என்னாச்சுபா?” என்று பதட்டத்துடன் விசாரிக்க,
“என்ன நடந்ததுன்னு தெரியல ம்மா... நான் லோட் ஏத்திட்டு விடியற்காலை அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வந்த போது இந்தப் பொண்ணு வெளி வாசலில கட்டி இருந்த துணி எல்லாம் இரத்தமா வுழுந்து கிடந்துச்சு... பதறிட்டு நான்தான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டாந்து சேர்த்தேன்” என்றவர் வருத்தத்துடன் நடந்தவற்றைச் சொல்லி முடித்தார்.
“அடக்கடவுளே!” என்று தலையில் கை வைத்துக் கொண்ட வனிதா,
“இப்போ டாக்டர் என்னபா சொல்றாங்க?” என்று கேட்டாள்.
“கொண்டாந்து சேர்த்ததுமே டாக்டருங்க வயித்துல இருக்க பிள்ளையைக் காப்பாத்த முடியாதுன்னுட்டாங்கமா” என்று குரல் தழுதழுக்கக் கூறியவர் மேலும்,
“அந்தப் பொண்ணு உடம்பலயும் நிறைய இரத்தம் போயிடுச்சாம்... உயிருக்குப் போராடிட்டு இருக்காளாம்” என்று தெரிவிக்க, வனிதாவின் கண்கள் நீரால் நிரம்பிவிட்டன. அவள் வேதனையுடன் அப்படியே அங்கிருந்த இருக்கையில் சரிந்து அமர்ந்துவிட்டாள்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர் மருத்துவர்கள் தீபிகாவின் உயிரைக் காப்பாற்றினர். அவள் பிழைத்துக் கொண்டதாக வந்து தெரிவித்தப் போதுதான் வனிதாவிற்கு உயிரே வந்தது.
“நாங்க போய் பார்க்கலாமா?” என்றவள் செவிலியரிடம் கேட்க, “நார்மல் வார்டுக்கு மாத்தின பிறகுதான் பார்க்க முடியும்... இப்போ வேணா வெளியே இருந்து பாருங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட வனிதா கவலையுடன் அங்கிருந்த ஜன்னல் வழியாக தீபிகாவின் நிலையைப் பார்த்தாள்.
கிழிந்த கந்தல் துணியாகக் கிடந்த அப்பெண்ணைப் பார்க்க, வனிதாவிற்குப் பரிதாபமாக இருந்தது. கண்ணீர் சுரந்தது. அப்போதுதான் அவளுக்கு அந்தக் கேள்வியே எழுந்தது.
“ஆமா தம்பி எங்கேபா? அவனுக்கு விஷயம் தெரியுமா?” என்று தந்தையிடம் வினவ அவர் கொஞ்சம் தடுமாறிவிட்டுப் பின், “அந்தப் பரதேசிதான் இரண்டு நாளா வீட்டு பக்கமே வரலயே... ஃபோன் பண்ணாலும் எடுத்துத் தொலைய மாட்டுறான்” என்று கூறினார்.
இப்படியொரு பொறுப்பில்லாதவனைத் திருமணம் செய்து கொண்டு வந்ததற்கு இந்தப் பெண்ணுக்குக் கிடைத்திருக்கும் தண்டனையா இது? இருந்தாலும் இது ரொம்பவும் அதிகப்படி என்று வனிதாவின் மனம் எண்ணிக் கொண்டது.
இரண்டு நாள் கடந்த பிறகுதான் மெல்ல எழுந்து அமரவும் பேசவும் ஆரம்பித்தாள் தீபிகா. அதற்குப் பிறகு அவள் நல்லபடியாக உடல் நலம் தேறி இயல்பாக எழுந்து நடமாடுவதற்கு மேலும் ஐந்து நாட்கள் ஆகிவிட்டன.
அன்று அவளைச் சோதிக்க வந்த மருத்துவர், “எல்லாம் நார்மலா இருக்கு... ஒன்னும் பிரச்சனை இல்ல... இன்னைக்கு டிஸ்சார்ஜ் செஞ்சிடலாம்” என்று சொல்லிவிட்டுச் செல்லவும் தீபிகாவின் மனம் சொல்ல முடியாத வேதனையில் ஆழ்ந்தது.
கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய அந்த வீட்டிற்கே மீண்டும் திரும்புவது அவளுக்கு அவமானம் என்றாலும் வேறு வழி ஏதேனும் இருக்கிறதா தனக்கு என்று யோசித்து மனதில் புழுங்கிக் கொண்டே கிளம்பினாள்.
வனிதாதான் தீபிகாவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அவளை காரில் அழைத்துச் சென்றவள் தீபிகாவின் முகம் சரியில்லை என்பதைக் கவனித்து,
“நீ விவேக்கைப் பத்தி யோசிக்குறன்னு எனக்குப் புரியுது தீபா... ஹாஸ்பிட்டல்ல இருந்த இத்தனை நாள்ல ஒரு நாள் கூட அவன் வந்து உன்னைப் பார்க்கலங்குறது எனக்கும் கோபம்தான்... ஆனா உண்மையிலேயே உனக்கு இப்படி நடந்துடுச்சுன்னு அவனுக்குத் தெரியுமான்னு தெரியலயே.”
”ஒரு வேளை தெரிஞ்சிருந்தா ஓடி வந்துருப்பானோ என்னவோ?” என்று ஆறுதலாகப் பேச தீபிகாவின் உதடுகள் ஏளனமாக வளைந்தன.
வனிதாவை விரக்தியான புன்னகையுடன் நோக்கியவள், “உங்க தம்பிக்கு எல்லாம் தெரியும் க்கா” என்று கூற,
“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?” என்று வனிதா புரியாமல் கேட்க,
“அன்னைக்கு நட்ட நடு இராத்திரில புள்ளதாச்சின்னு கூடப் பார்க்காம கழுத்தைப் பிடிச்சு என்னை வெளியே தள்ளி விட்டதே உங்க தம்பிதானே க்கா” என, வனிதா அதிர்ந்தாள்.
தீபிகா சொன்ன காட்சியை நினைத்துப் பார்க்கும் போதே அவளின் ஈரக்குலை நடுங்கியது. அந்த அதிர்ச்சியை அவள் ஜீரணிப்பதற்கு முன்னதாக கார் அவர்கள் வீட்டு வாயிலில் நின்றது.
தீபிகா எதுவும் பேசாமல் அமைதியாக தன் அறைக்குள் சென்று அமர்ந்துவிட வனிதாதான் சீற்றத்துடன், “விவேக் எங்கபா?” என்று தந்தையிடம் விசாரித்தாள். அவர் பதில் சொல்லாமல் மகளைக் குழப்பத்துடன் ஏறிட,
“அப்பா உங்களைதான் கேட்குறேன்... விவேக் எங்க?” என்றவள் மீண்டும் சீறலாகக் கேட்க,
இம்முறை கொஞ்சம் சுதாரித்துக் கொண்டவர், “அவன்தான் வீட்டுப் பக்கம் வரவே இல்லையே மா” என்று அதே பதிலை கூறவும் அவரை முறைத்துப் பார்த்தவள், “விக்கி... டே விக்கி” என்று தம்பியை அதட்டி அழைக்க அவன் வெளியே வந்தான்.
“விவேக் எங்கேன்னு உனக்குத் தெரியுமா?” என்று அவனிடம் கேட்க அவன் தந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் படபடப்புடன், “தெரியாதுக்கா” என்று பதிலளிக்க, அவன் சொல்வது உண்மை என்று அவள் நம்பவில்லை.
“தீபிகா வுழுந்து அடிப்பட்ட அன்னைக்கு விவேக் எங்க இருந்தான்?” என்று அவள் அடுத்த கேள்வியைக் கேட்கவும் விக்னேஷின் முகம் வெளிறியது. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவன் திணற,
“சொல்லுடா” என்று மிரட்டினாள்.
“வனிதா” என்று அழுத்தமான குரலில் மகளை அழைத்தார் காளிமுத்து.
தந்தையின் புறம் கோபமாகத் திரும்பியவள், “தீபாவைக் கீழே தள்ளிவிட்டது உங்க புள்ளதான்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா?” என்று கேட்கவும் அவர் கண்களில் அதிர்ச்சி தென்படவில்லை. ஒருவித குற்றவுணர்வில் அவர் தலையைத் தாழ்த்திக் கொள்ள,
“அப்போ... உங்களுக்குத் தெரியும்” என்று கேட்டு அவரைக் கூர்மையாக நோக்க, அவர் பதிலின்றி அமைதியாக நின்றார்.
அவளுக்குக் கோபம் தலைதூக்க, “நீங்க இப்படியே கல்லு மாதிரி நில்லுங்க... ஆனா நான் சும்மா இருக்க மாட்டேன்... அவன் செஞ்ச வேலைக்கு இப்பவே போலீஸ்ல போய் கம்பிளைன்ட் பண்ண போறேன்” என்று கூற,
அவர் பதட்டத்துடன், “அவசரப்பட்டு எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு பண்ணாத வனிதா” என,
“நான் அவசரப்பட்டு எல்லாம் முடிவு பண்ணல... தெளிவா யோசிச்சுதான் சொல்றேன்... அவன் வந்தா போலீஸ்ல பிடிச்சு கொடுக்குறதுதான் முதல் வேலை” என்றவள் தீர்க்கமாக உரைத்தாள்.
“அவனை போலீஸ்ல பிடிச்சு கொடுத்துட்டா அந்தப் பொண்ணோட வாழ்க்கை... அதைப் பத்தி யோசிச்சியாமா” என்றவர் சொன்னதைக் கேட்டு அவள் அதிர்ச்சியடைந்தாள்.
“என்ன பேசுறீங்க? இதுக்கு அப்புறமும் தீபா அவனோட சேர்ந்து வாழணுமா?” என்று கேட்டவள் மேலும்,
“அவனையே எல்லாம்னு நம்பி வந்த அந்தப் பொண்ணுக்கு அவன் செஞ்சது அநியாயம் இல்லையாபா? இன்னைக்கு அந்தப் பொண்ணு உயிர் பிழைச்சு இருக்குறதே அதிசயம்தான்...”
”ஆனா அவ வயித்துல வளர்ந்த அந்த சின்ன உயிர்... இப்படி அது இரத்தமா கரைஞ்சு கருவிலேயே சிதைஞ்சு போக அது என்னபா பாவம் பண்ணுச்சு... சொல்லுங்க... நம்ம வீட்டு வாரிசு இல்லையா பா அந்தக் குழந்தை... இந்த வீட்டுல ஓடியாடித் தவழ வேண்டிய உசுரு இல்லையா?” என்று பேசும் போதே அவள் குரல் தழுதழுத்தது.
“எல்லாம் விதி மா... அவசரப்பட்டு ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்னுதால வந்த வினை” என்று காளிமுத்து விட்டேற்றியாகக் கூறிய பதில், வனிதாவை மேலும் கோபப்படுத்தியது.
“இப்பவும் தீபிகாவையும் சேர்த்துதான் குத்தம் சொல்றீங்க இல்ல நீங்க?”
“பின்ன இல்லையா? இப்படி அவசரபட்டு விவரம் புரியாம விளையாட்டுத்தனமா பண்ணிக்கிட்டு வந்த கல்யாணத்தோட விபரீதம்தானே இதெல்லாம்... இதுல தப்பு இரண்டு பேர் மேலயும்தான்” என்றவர் அழுத்தமாகக் கூற,
“போதும் நிறுத்துங்க பா... மொத்தப் பழியையும் அவங்க இரண்டு பேர்ல மட்டும் போடாதீங்க... இன்னைக்கு இவ்வளவு பெரிய விபரீதம் நடக்க நீங்கதான் முக்கிய காரணம்...” என்று வனிதா கூறவும் அவர் அதிர்ச்சியடைந்தார்.
“நானா? நான் என்ன பண்ணேன்?”
“இத்தனை நாள நீங்க அம்மாவை ஒரு மனுஷியாவது மதிச்சிருக்கீன்களா பா...? அவங்கள மரியாதையா நடத்தி இருப்பீங்களா...? எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில இருந்து நீங்க அம்மாவை அசிங்கமா திட்டிச் சண்டைப் போட்டுதான் நான் பார்த்து இருக்கேன்... அன்பா பாசமா நடத்தி நான் ஒரு நாள் கூடப் பார்த்ததே இல்லை...”
”அது மட்டுமா? எத்தனை தடவை என் முன்னாடியும் தம்பிங்க முன்னாடியும் அம்மாவை இழுத்துப் போட்டு அடிச்சிருக்கீங்க... உண்மையைச் சொல்லணும்னா அதெல்லாம்தான் இன்னைக்கு இவ்வளவு மோசமான விளைவை ஏற்படுத்தி இருக்கு” மகள் பேசியவற்றை எல்லாம் கேட்டு அதிர்ந்தவர்,
“என்னமா இப்படி சொல்ற?” என்று கேட்க,
“உண்மையைதானேபா சொல்றேன்... அம்மா உடம்பாலயும் மனசாலயும் பாதிச்சு... இன்னைக்குப் படுத்தப் படுக்கையா இருக்க காரணம் யாருபா... நீங்கதானே?” என்றாள்.
“வனிதா” என்றவர் சீற அவரின் கோபத்தைப் பொருட்படுத்தாமல் அவள் தொடர்ந்தாள்.
“ஆனா அதெல்லாம் அம்மாவோட முடிஞ்சு போகாம இன்னைக்கு உங்களை மாதிரியே உங்க பையனும் அவன் கட்டின பொண்டாட்டியை அடிச்சு கொல்ற அளவுக்குப் போயிருக்குன்னா அது யாராலபா?” என்ற மகளின் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
“இப்போ யோசிச்சு பார்த்தா... நீங்க அம்மாவை அடிச்ச அடி எல்லாம் விவேக் மனசுல வன்மமா ஊறிப் போயிருக்கு... அதுதான் கட்டின பொண்டாட்டியை இன்னைக்கு அவன் இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்க முக்கிய காரணம்... அவன் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான்பா.... நீங்க மட்டும்தான்” என்றவள் ஆணித்தரமாக அடித்துச் சொல்ல, அவர் சுக்கு நூறாக உடைந்துவிட்டார்.
“சாரி பா... நீங்க எங்களுக்கு எவ்வளவோ செஞ்சிருக்கீங்க... விளிம்பு நிலையில ஒரு சின்னக் குடிசை வீட்டுல உங்க வாழ்க்கையை ஆரம்பிச்ச நீங்க இன்னைக்கு இந்த நிலையில இருக்கீங்கனா அதுக்காக நீங்க நிறைய உழைச்சிருக்கீங்க... இன்னைக்கு நாம ஒரு நல்ல ஸ்டேட்டஸ்ல இருக்க நீங்கதான் காரணம்... எனக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுத்திருக்கீங்க... அதை நான் மறுக்கல.... அதேபோல நாம கஷ்டபடுற காலத்துல அம்மாவை நீங்க எப்படி எல்லாம் அடிச்சீங்க அவமானப்படுத்துனீங்கங்குறதயும் என்னால மறக்கவே முடியல பா.”
”இன்னைக்கு அதே மாதிரி கொடூரம் நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணுக்கு நடந்திருக்கிறதைப் பார்த்ததும் எனக்குள்ள இத்தனை நாளா புதைஞ்சிருந்த கோபமும் வலியும் வெளிய வந்திருச்சு” என்று சொல்ல மகளின் வார்த்தைகள் அனைத்தும் ஆழமாக அவரைக் குத்திக் கிழித்தன. ஒரு காலக்கட்டம் வரை பெற்ற குழந்தைகள் பார்க்கிறார்கள் என்று கூட யோசிக்காமல் மனைவியைக் காட்டுத்தனமாக அடித்திருக்கிறார்.
கஜலக்ஷ்மியும் அடி எல்லாம் வாங்கி அழுது முடித்து முகத்தைத் துடைத்து கொண்டு பழையபடி வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வார்.
ஒரு நிலைக்கு மேல் அவராக தன் தவறைப் புரிந்து அவர் குணத்தை மாற்றிக் கொண்டு வந்த போதுதான் கஜலக்ஷ்மி உடல் நிலை மோசமாகிப் படுத்தப் படுக்கையாகிவிட்டார். அன்று மனைவிக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று உருண்டு புரண்டு அழுதார். வேதனைப்பட்டார்.
ஆனால் மகள் சொல்வதை எல்லாம் இப்போது எண்ணிப் பார்த்தால் நன்றாக வாழ்ந்த காலத்தில் மனைவியை மரியாதையாக நடத்தவில்லை. ஏதோ ஒரு வகையில் விவேக்கின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு தான்தான் விதைப் போட்டிருக்கிறோம் என்று மூளைக்கு உரைத்தது. ஆனால் அப்போதும் காளிமுத்துவிற்கு மகனை விட்டுக் கொடுக்க விருப்பமில்லை.
“இது இப்படியே தொடரவிடக் கூடாது பா... அவன் செஞ்சதுக்கு அவனுக்கு தண்டனை வாங்கித் தரணும்” என்ற மகளின் வாதத்தை அவர் ஏற்காமல்,
“அவன் என்னதான் இருந்தாலும் உன் தம்பி... நீ இப்படி பேசறது சரி இல்ல” என்று அவர் எதிர்வாதம் செய்ய,
“அவனை மாதிரி ஒரு தம்பி எனக்குத் தேவையே இல்ல” என்றாள் வனிதா. இப்படியே இவர்கள் பேச்சு தொடர்ந்ததில் இருவருக்கும் இடையிலும் பேச்சுவார்த்தை முற்றி,
“இது எங்க குடும்ப விஷயம் வனிதா... இதுல நீ தலையிடாத... நீ உன் புருஷன் வீட்டுக்குப் போய் ஒழுங்கா குடும்ப நடத்துற வழிய பாரு” என்று முகத்திலறைவது போலச் சொல்லிவிட, வனிதா அதிர்ந்து நின்றாள்.
பதின்ம வயதிலிருந்து இந்தக் குடும்பத்திற்காக அவள் எவ்வளவோ உழைத்துக் கொட்டி இருக்கிறாள். ஆனால் அதெல்லாம் இப்போது ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. இது அவள் குடும்பம் இல்லாமல் போய்விட்டது. இதுதான் பெண்களின் நிலை என்று யோசித்து கண்கள் கலங்கியவள் மனவேதனையுடன்,
“இனிமே இந்த வீட்டு வாசப்படிய மிதிச்சனா பாருங்க” என்று விட்டு அப்போதே ரோஷமாகக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.
அறைக்குள் இருந்தபடி அவர்கள் சம்பாஷணைகளையும் சண்டைகளையும் கேட்டிருந்த தீபிகாவிற்கு உள்ளம் குமுறியது. ஆனால் அப்போதைக்கு அவர்களுக்கு இடையில் சென்று சண்டையிடவும் தனக்கு நேர்ந்த கெதிக்கு நியாயம் கேட்கவும் அவள் உடலில் தெம்பில்லை.
அதேநேரம் தனக்காகத் தன் தந்தைக்கு எதிராக நின்று பேசிய வனிதாவை எண்ணும் போது நன்றியும் அன்பும் ஒரு சேரப் பெருகியது. கண்களில் தாரைத் தாரையாகக் கண்ணீர் வழிந்தோடிய வண்ணம் தீபிகா அமர்ந்திருக்கையில் அறை வாசலில் வந்து நின்ற காளிமுத்து,
“உன்கிட்ட கொஞ்சம் பேசணுமா?” என்றார்.
“சொல்லுங்க மாமா” என்று அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டபடி எழுந்து நிற்கவும்,
“இருக்கட்டும் நீ உட்காரு மா” என்றவர் அவள் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து பேச துவங்கினார்.
“விவேக் செஞ்சது பெரிய தப்புதான் மா... ஆனா அதுக்காக வனிதா சொல்ற மாதிரி போலீஸ்க்குப் போறதெல்லாம் எப்படிமா சரியா வரும்... நீயே சொல்லு.”
”இப்ப ஏதோ கொஞ்சம் பொறுப்பில்லாம இருக்கான்... கொஞ்ச நாள் போனா அவனே மாறிடுவான்... நான் அவனைத் திருத்திடுவேன்... நீ என்னை நம்பு” என்றவர் சொன்னதைக் கேட்டதும் அவளுக்கு உள்ளுர சிரிப்புதான் வந்தது. இத்தனை வருடமாகச் செய்யாததை இனி அவர் செய்துவிட போகிறார். அதை அவள் நம்ப வேண்டுமாம் என்று அவள் எண்ணிக் கொள்ளும் போதே அவர் மேலும் தன் பசப்பு வார்த்தைகளைத் தொடர்ந்தார்.
“நீயும் என் மக மாதிரிதான்... உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு எனக்கும் அக்கறை இருக்கு... அதுவும் இல்லாம நீயும் இந்த வீட்டுலதானே வாழணும்” என்றவர் அழுத்திக் கூறிய போது அந்த நிதர்சனம் அவளுக்கு வலித்தது.
ஒரு வகையில் அவர் சொன்னது உண்மைதான். அவளுக்கும் வேறு போக்கிடம் இல்லை. மீண்டும் அந்த வீட்டில்தான் அவள் வாழ்ந்தாக வேண்டும். அதுவும் இவ்வளவு செய்த அவனுடன்...
தெருவில் கீரை விற்றுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் முகம் அவள் கண் முன்னே நிழலாடியது. என்னதான் அந்தப் பெண் உழைத்துச் சுயமாக சம்பாதித்தாலும் குடித்துவிட்டு அடித்து உதைக்கும் கணவனைச் சகித்துக் கொண்டுதான் வாழ்கிறாள். அதுதான் இந்த மோசமான சமுதாயத்தின் அவல நிலை. ஒரு வகையில் அதுதான் தன் நிலைமையும் கூட என்று எண்ணும் போதே தீபிகாவின் மனம் துடித்தது.
ஆனால் அவள் மனவலியைக் கொஞ்சமும் உணராமல், “நீ நடந்த எதையும் மனசுல வைச்சுக்காதே ம்மா” என்று மிகச் சுலபமாகச் சொல்லிவிட்டுச் சென்றார் காளிமுத்து.
அவர் விவேக்கின் தந்தை இல்லையா? அவர் அப்படிதான் பேசுவார். அவனின் அத்தனை தப்புக்களையும் அவரால் மறக்கவும் மன்னிக்கவும் முடியும் போது ஏன் தன்னுடைய தவறுகளைத் தன் பெற்றோர்களால் மன்னிக்கவும் மறக்கவும் முடியாதா என்ற கேள்வி எழுந்தது அவளுக்கு!
7

Quote from Marli malkhan on March 9, 2025, 6:08 AMSuper ma
Super ma