மோனிஷா நாவல்கள்
Konjam vanjam kondenadi - 27
Quote from monisha on October 31, 2020, 10:23 PM27
முதலிரவு
ஷிவானியை முதலிரவு அறைக்குள் அனுப்புவதற்கு முன்னதாக மரகதம் அவள் கரத்தில் பால் சொம்பைக் கொடுத்துவிட்டு,
"மாமா சொல்றபடி எல்லாம் கேட்டு நடந்துக்கோணும் சரியா?!" என்க,
அந்த கணமே அவள் இதயத்துடிப்பு கிடுகிடுவென ஏறத் தொடங்கியது.
அவள் மீண்டும் பதட்டமாகி,
"மாம்ஸ் என்ன சொல்வாரு? நான் என்ன கேட்டு நடந்துக்கணும்?" என்று கேட்டு வைக்க, மரகததிற்கு தலையே சுழன்றது. இவளுக்கு எப்படிதான் புரிய வைப்பதென்ற சலிப்போடு,
"நீ இந்த டீவி கீவி படமெல்லாம் பார்க்க மாட்டியால?" என்று கேட்கவும் ஷிவானி குதூகலமானாள்.
"அதெல்லாம் சூப்பரா பார்ப்பேனே... நானும் டாடும் கிரிக்கெட்... புஃட் பால் எல்லா மேட்சும் பார்ப்போம்... சம்டைம்ஸ் ஸ்டேடியம்கே போய் பார்ப்போம்... வாவ் செமயா இருக்கும்" என்க, "அய்யோ படுத்துறாளே" என்று எண்ணி மரகதம்,
"இங்கன வா" என்று அவள் காதருகில் ஏதோ ரகசியமாய் சொல்ல,
"என்னது சித்தி?" என்று கேட்டாள்.
"அந்த பாட்டை டீவில பார்த்ததில்ல" என்று கேட்டாள்.
"நோ... டாடுக்கும் எனக்கும் மூவிஸ் எல்லாம் பார்க்குற இன்டிரஸ்ட்டே இல்ல... ஸ்போர்ட்ஸ் சேனல்... நேஷ்னல் ஜாகிரஃபி... அன் யூ ட்யூப் சேனல்ஸ்ல குக்கிங் ரெசிப்பீஸ்" என்றவள் நீட்டி முழுக்க,
"அப்போ சினிமாலாம் பார்க்க மாட்டீக" என்றாள்.
"பார்ப்பேனே... பட் டேடுக்கு பிடிக்காது... ஸோ நான் அவ்வளவா பார்க்க மாட்டேன்... ஆனா நிறைய வெரைட்டியா வீடியோ கேம்ஸ் வைச்சிருக்கேன்... அதெல்லாம் விளையாடுவேன்" என்றதும் மரகததிற்கு வெறுத்துப் போனது.
"அப்போ முத ராத்திரியை பத்தி உனக்கு ஒண்ணுமே தெரியாதால" தவிப்போடு அவள் கேட்க,
"தெரியுமே... மேரேஜ்கப்புறம் ஒரு பொண்ணு ஹஸ்பெண்ட் கூட ஸ்பென்ட் பண்ண போற பஃர்ஸ்ட் நைட்... ரைட்" என்றதும் அவளை ஆச்சர்யமாய் பார்த்து
"ஆத்தாடி! உன்னைய விவரமில்லாதவன்னு நினைச்சேனே... பரவாயில்ல புள்ள... இம்புட்டு விவரமே போதுமே... பிறவு எல்லாம் தானா நடக்கும்" என்றவள் சொல்லி நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
"என்ன நடக்கும் சித்தி?... அதான் எனக்குப் புரியல... அன்ட் மாமா கூட ஒரே ரூம்ல தனியா இருக்க எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு" என்றவள் அஞ்சிய முகபாவனையோடு சொல்ல மரகதம் சிரித்தபடி,
"முதல் நாள்தான் கஷ்டமா இருக்கும்... பிறவு எல்லாம் பழகிடும்டி" என்று சொல்லி அவள் கன்னத்தைக் கிள்ளி அறைக்குள் அனுப்ப, லேசான பதட்டமும் பயமுமாகவே நுழைந்தாள் ஷிவானி.
உள்ளே வந்ததும் அந்த அறையின் படுக்கை அலங்காரங்கள் அவளைத் துணுக்குற செய்ய, மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவள் தன் பார்வையால் குருவை தேடி கொண்டே பால் சொம்பை அங்கிருந்த மேஜை மீது வைத்தாள்.
பேந்த பேந்த விழித்துக் கொண்டே அவள் சுற்றும் முற்றும் பார்க்க அவனோ பின்னோடு நின்றிருந்தான்.
அவன் கதவைத் தாளிட்ட மறுகணமே அவள் சற்றும் எதிர்பாரா வண்ணம் அவளை நெருங்கி அணைத்துக் கொள்ள
அவளோ பதட்டத்தில் ஊமையானாள்.
அவன் கரத்தைக் கொண்டு அவள் வெற்றிடையில் அழுத்த, அவள் முகம் வெளிறி போக,
"மா..ம்ம்ம்...ஸஸ்ஸ்" என்றவள் எச்சிலைக் கூட்டி விழுங்க, அவனோ அந்த கணம் அவளைப் பார்வையாலேயே மேய்ந்தான்.
ஊதாநிற சேலையில் ஒற்றை முந்தானையில் சர்வ அலங்காரங்களில் பூக்களைத் தழைய தழைய சூடிக் கொண்டு அவள் நிற்பதைப் பார்த்த மாத்திரத்தில் கிறங்கிப் போனவன்,
பெருகிய தன் தாபத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் அவளின் மெல்லிய தேகத்தை வன்மையாக தன் அணைப்பிற்குள் கிடத்த, அவளுக்கு கூச்சமும் பயமும் ஒன்றெனக் கலந்தது.
அவனைவிட்டு அவள் விலகிவர போராட, அவன் விடுவேனா என தம் இதழ்களால் அவள் கழுத்துபுறத்தில் கோலமிட, பெண்ணவள் பதறித்துடித்தாள்.
அவனின் சரசங்களில் அவள் திக்குமுக்காடிக் கொண்டிருக்க, அவனின் அந்த தொடுகையின் தீவிரத்தில் அவள் வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே கைதாகி நின்றன.
ஆனால் முடிந்தளவு போராடி அவனை விட்டு விலகியவள் பட்டென கதவருகில் சென்று தாளிட்டக் கதவை திறக்க முயல இதனைப் பார்த்து குரு அதிர்ந்து,
"என்னடி பண்ணுத கிறுக்குதனமா?" என்றவன் சொல்லிக் கொண்டே அவள் இடையைப் பற்றி பின்னோடு இழுத்தான்.
"என்னை விடுங்க? நான் வெளியே போகணும்" என்றவள் அவன் கரத்தில் தத்தளிக்க,
"இப்ப எதுக்குல வெளியே போகணும்?" என்று சொல்லியபடி அவளை முன்புறம் நிறுத்தித் திருப்பினான்.
"எனக்கு வேண்டாம்... எனக்குப் பிடிக்கல... ஐ நீட் டூ கோ அவுட்" என்றவள் முரண்டு பிடிக்க, குருவிற்கு என்ன செய்வதென்றேப் புரியவில்லை. அவளோ விட்டால் ஓடிவிடும் நிலையில் இருந்தாள்.
இப்போது அவள் வெளியே சென்றால் அவன் கதி அதோகதிதான். மீண்டும் தான் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்பட்டு நிற்க நேரிடும் என்று எண்ணமிட்டுக் கொண்டவன் அவளை கிஞ்சிற்றும் நகரவிடாமல் இன்னும் இறுக்கமாய் அவளை தன் கைவளைக்குள் நிறுத்திக் கொள்ள,
"என்னை விடுங்க" என்றவள் தவிப்புற்றாள். ஆனால் அவனின் இறுக்கமான பிடிக்குள் இருந்து வெளியே வருமளவுக்கான பலம் அவளுக்கு இல்லை.
"ஏன்ல இப்படி முரண்டு பிடிக்க... நீ இப்போ வெளியே போய் தொலைச்சேன்னா வேற வினையே வேண்டாம்... என்னைய எல்லோரும் உண்டு இல்லன்னு பண்ணிடுவாக" என்றவன் அஞ்சியபடி சொல்ல,
"எனக்கு அதெல்லாம் தெரியாது... இப்ப நான் வெளியே போகணும்" என்று அழுகையும் கோபமாய் அவள் கத்தினாள். பதிலுக்கு அவனும், "ஷிவானி" என்று உச்சஸ்தாயில் கத்த, அவள் மிரண்டு போய் அவனை ஏறிட்டாள்.
"இப்ப என்னடி உன் பிரச்சனை... நான் உன்னைய தொடக் கூடாது... அம்புட்டுதானே... தொடல" என்று பட்டென தன் கரத்தை விலக்கிக் கொண்டு தள்ளி வந்தவன்,
"ஆனா வெளிய கிளிய போய் ஏழரையை கூட்டிவைச்சீக... நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்... சொல்லிப்புட்டேன்" என்று எச்சரிக்கை செய்தான்.
ஷிவானி படபடப்பு அடங்காமல் மௌனமாய் நின்றவள் அமுங்கிய குரலில், "பிராமிஸா தொட மாட்டீங்க இல்ல" என்று கேட்க,
அவனின் முகமெல்லாம் சிவப்பேறியது. அவளை முறைப்பாய் பார்த்தவன், "முத இராத்திரி அதுவும் எந்த பொண்டாட்டியாச்சும் புருஷன்கிட்ட கிறுக்குதனமா இப்படி ஒரு சத்தியத்தை கேட்பாகளா?" என்றவன் கடுப்படிக்க,
"தென் ஐம் லீவிங்" என்று சொல்லி அவள் கதவருகில் செல்ல அவன் கதவின் முன்னே சென்று மறித்து நின்று கொண்டான்.
"வேணா ஷிவானி... நீ இப்போ வெளியே போய் தொலைச்சன்னா எல்லாம் என் மேலதான் ஏறுவாக... திரும்பியும் என்னைய தயா மாமா கூடப் படுக்க வைச்சிருவாக... அய்யய்யோ... அந்த மனுஷன் என்னையே பேசியே கொன்னுடுவாரு..." என்றவன் சொல்ல அவள் குழப்பத்தோடு என்ன செய்வதென்று புரியாமல் நின்றாள்.
அவன் மேலும் தன் கரங்களைக் கூப்பி, "தெய்வமே... உன்னைய கெஞ்சி கேட்கிறேன்... போய் அந்தாண்ட பக்கம் படுத்துகிடு... நான் உம்ம பக்கத்தில கூட வரமாட்டேன்" என்க,
அவள் அதற்கு மேல் பதிலேதும் பேசாமல் படுக்கையின் மீது முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள்.
குரு பெருமூச்செறிந்து ஏமாற்றத்தோடும் இயலாமையோடும் விளக்கை அணைத்துவிட்டு மனநொந்து அவனும் படுக்கையில் படுத்துகொண்டான்.
வேறென்ன செய்ய முடியும் அவனால். இப்போதைக்கு இந்த பிரச்சனைக்கு இதைவிட வேறு தீர்வும் அவனுக்குப் புலப்படவில்லை. அவன் தூக்கம் வராமல் புரள அவளோ அப்படியே சிலையென அமர்ந்திருப்பதைப் பார்த்து கோபமானவன்,
'செய்றதெல்லாம் செஞ்சுபுட்டு எப்படி உட்கார்ந்திருக்கா பாரு' என்று அவள் காதில் விழும்படியே புலம்பினான்.
அவள் அவன் புறம் திரும்பி, "என்ன சொன்னீங்க?" என்று கேட்க,
"நான் என்னவோ புலமபுக்கிறேன்... உனக்கு என்னவே... கம்முனு படு" என்று படுகோபமாய் முறைத்தான். அவன் பார்வையில் மிரட்சியுற்றவள் மேலே எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள்.
அதோடு ஒர் தலையணையை அவர்கள் இடையில் வைக்க, அவனுக்கு உள்ளூர பற்றிக் கொண்டு எரிந்தது . இருவரும் உறங்க முயற்சி செய்தனர். ஆம்! முயற்சிதான் செய்தனர். ஆனால் இருவருக்கும் நித்திரா தேவியின் அருள் கிடைக்கப்பெறவில்லை.
அவனின் எதிர்பார்ப்பு ஆசையெல்லாம் மீண்டும் கானல் நீராய் போய்விட, விரும்பியவளை அருகாமையில் வைத்துக் கொண்டு தன் ஆண்மையை காத்து கொள்ள அவன் போராடிக் கொண்டிருந்தான்.
அவளுக்கோ என்னதான் குரு பழக்கமாயிருந்தாலும் ஓர் ஆடவன் அருகில் படுத்திருப்பது அத்தனை சங்கடமாய் இருந்தது. அதுவும் அந்த படுக்கையில் கிடந்த பூவாசம் அவள் தூக்கத்தை துவம்சம் செய்து கொண்டிருந்தது.
ஆனால் நேரம் கடந்து செல்ல குரு லேசாய் கண்ணயர்ந்த சமயம் ஏதோ தடால் புடாலென உருளும் சத்தம் கேட்க, அடித்துப்பிடித்து எழுந்தமர்ந்தவன் அவசரமாய் லைட் ஸ்விட்சை போட்டான்.
ஷிவானி பீரோவின் அருகில் தலையைப் பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்திருந்தாள்.
"ஷிவானி" என்று பதறியவன் அவள் அருகில் வந்து, "என்னல ஆச்சு?" என்று கேட்க, அவள் தலையைத் தேய்த்தபடி எழுந்து நிற்க,
அவன் கீழே சிதறியிருந்த பொருட்களை எல்லாம் பார்த்துவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான். அவனை சங்கடமாய் ஏறிட்டவள், "பீரோவை திறந்க்கலாம்னு மேலே இருந்த சாவியை எடுக்க போய்... இந்த திங்ஸ் எல்லாம் என் தலையிலேயே விழுந்திருச்சு மாம்ஸ்" என்று சுற்றியிருந்த பொருட்களைக் காண்பித்து தலையை தேய்த்துக் கொண்டு நின்றாள்.
அவன் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு அவளை சிரத்தையின்றி பார்த்தவன், "இந்த இராத்திரில என்னத்தை எடுக்க பீரோவைத் திறக்கப் போனவ" என்றவன் வினவ,
"இந்த ஸேரி வியர் பண்ணிக்கிட்டு தூக்கமே வரல... நைட் டிரஸ் போட்டே தூங்கி பழகிட்டேனா... அதான் நைட் டிரஸ் எடுக்கலாம்னு" என்றவள் தயக்கமாய் பதிலுரைத்தாள்.
"அதை லைட்டைப் போட்டு எடுத்துத் தொலைக்க வேண்டியதுதானேல"
"லைட் போட்டு எடுத்து நீங்க முழிச்சிக்கிட்டா... நான் எப்படி டிரஸ் மாத்த முடியும்? அதான்"
"இதெல்லாம் நல்ல விவரம்தான்" என்றவன்
அவள் அருகாமையில் வந்து "ரொம்ப வலிக்குதோ?" என்று இறங்கிய தொனியில் கேட்டு அவள் தலையைத் தேய்த்துவிட்டான்.
"இட்ஸ் ஓகே மாம்ஸ்... பரவாயில்ல" என்றவள் சொல்ல அவனுக்கோ அவள் கூந்தலில் சூடியிருந்த மல்லியின் வாசம் சுண்டி இழுத்தது.
ஏக்கமாய் பெருமூச்சொன்றை வெளிவிட்டவன் கீழே சிதறியவற்றை குனிந்து எடுத்துக் கொண்டே,
"நைட் டிரஸ் மாத்திக்கிறேன்னு சொன்னீகளே... மாத்திக்கிடலயா?" என்று எதிர்பார்ப்போடு கேட்க, "நீங்க இங்க இருக்கும் போது எப்படி?" என்றவள் இழுத்துவிட்டு,
"மாம்ஸ்... ப்ளீஸ் ஒரு டென் மினிட்ஸ் வெளியே வெயிட் பண்றீகளா?" என்று கேட்க, "என்ன விளையாடுதீகளா? அதெல்லாம் முடியாது" என்று அழுத்தமாய் மறுத்தான்.
"அப்படின்னா நான் வெளியே போய் ரெஸ்ட் ரூம்ல மாத்... திட்டு ... வரவா" என்றவள் தயங்கிக் கேட்கவும் அவளை கடுப்பாய் முறைத்தவன்,
"இங்கன மாத்துறதுன்னா மாத்திக்கிடு... இல்லையா... போய் இப்படியே படுத்துக்குற வழிய பாரு... வெளியே கிளிய போணும்னு சொன்ன... அவ்வளவுதான்" என்று இறுகிய பார்வையோடு சொல்லியவன்,
"இவ கூட படுத்துக்கறதுக்கு பேசாம தயா மாமாவே பரவாயில்ல" என்று புலம்பிக் கொண்டான். அவன் சிதறியவற்றை எடுத்துக் கொண்டு எழ, அவள் யோசனையாய் நகத்தைக் கடித்து கொண்டு அங்கேயே நின்றாள்.
"எதுக்குல நிக்குத... போய் படு" என்றவன் சீற்றத்தோடு குரலை உயர்த்த, அவள் காற்று போன பலூன் போல முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டு நடந்தவள் தரையில் ஏதோ தட்டுப்பட அதனை யோசனையாய் குனிந்து எடுத்தாள்.
அதனைப் பார்த்த நொடி அவள் முகம் மலர்ந்து விழிகளை அகல விரிக்க குரு அவளிடம், "அதையும் கொடுல... மேலே அடுக்கிடுதேன்" என்றவன் வாங்க முற்பட அவள் அதனை கொடுக்காமல்,
"இது டேட்... மீயோட மேரேஜ் ஆல்பமா?" என்றவள் ஆச்சர்யம் பொங்கக் கேட்க, "ஹ்ம்ம்" என்றான்.
"நான் பார்த்ததே இல்ல... பார்த்துட்டு தர்றேனே" ஆவல் ததும்பக் கேட்டவள்,
"இதெல்லாம்" என்று அவன் கையிலிருந்ததை சுட்டிக் காட்டினாள்.
"இதெல்லாம் மத்த அக்காங்க விசேஷத்துக்கு எடுத்த போட்டோங்க... இன்னும் நிறைய கிடக்கு மேல" என்றவன் சொல்ல,
"சூப்பர்... நான் எல்லாத்தையும் பார்க்கணும்... எடுத்துத் தாங்க மாம்ஸ்" என்று ஆர்வமானாள்.
"இப்பவா?" அவளை அவன் ஏறஇறங்கப் பார்க்க,
"ஹ்ம்ம்ம்... எடுத்து கொடுங்க"
"நடுசாமத்தில போய் போட்டோ பார்க்கணுமாக்கும்... ஒண்ணும் வேண்டாம்... காலையில எடுத்துக் கொடுக்கேன்... இப்போ போய் படுவே" என்றவன் சொல்ல அவள் முகம் சுணங்கி,
"ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்... பாஃர்ஸ்டா பார்த்துட்டு தந்திடுறேன்... எனக்கு இப்போ தூங்குற மூடும் இல்ல மாம்ஸ்... ப்ளீஸ் மாம்ஸ்" என்றவள் கெஞ்சிய தொனியில் அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.
அவன் அங்கிருந்த எல்லா போட்டோ ஆல்பத்தையும் சீராய் துடைத்து அவள் கையில் வைக்க, "அய்யோ மாம்ஸ் ரொம்ப வெயிட்டா இருக்கே" என்று தடுமாறினாள்.
"நீதானம்ல எல்லாத்தையும் பார்க்கணும் சொன்ன... அப்போ சுமந்திட்டு வா" என்று சொல்லி கேலியாய் சிரித்துக் கொண்டே அவன் படுக்கையில் வந்து தலைசாய்த்து கொள்ள,
அவள் சிரமப்பட்டு அவற்றை எல்லாம் தூக்கிக் கொண்டு வந்து படுக்கையில் வைத்துவிட்டு மூச்சுவிட்டவள், "செம வெயிட்" என்றாள்.
"பின்ன இருக்காதா? சடங்கு நிச்சயம் காதுகுத்து கல்யாணம்னு அம்புட்டு இருக்கு அதுல" என்றவன் அவள் புறம் திரும்பி தன் ஒற்றைக் கரத்தால் தலையைத் தாங்கி கொண்டபடி உரைத்தான்.
"வாவ் சூப்பர்... நான் எல்லாத்தையும் பார்க்க போறேன்" என்றவள் அதீத ஆர்வத்தோடு தன் அம்மா அப்பா திருமண ஆல்பத்தைப் பிரிக்க,
"இதையெல்லாம் பார்த்து முடிக்கிறதுகுள்ள இன்னைக்கு இரா பொழுதும் கழிஞ்சிருமே" என்றான்.
"இட்ஸ் ஒகே... நான் மோர்னிங் தூங்கிக்கிறேன்" என்றவள் சொல்ல,
அந்த நொடி கலீரென்று சிரித்துவிட்டான் அவன்.
"தூங்கறது சாப்பிடறதைத் தவிர உனக்கு வேறெதவும் தெரியாதால" என்றவன் சிரிப்பைக் கட்டுபடுத்த முடியாமல் கேட்க,
"ஏன் தெரியாது? ஐ நோ குக்கிங் வெரி வெல்" என்றவள் சொன்னதுதான் தாமதம். ஓர் தலையணை அவள் மீது பாய்ந்து வந்தது. அவள் அதிர்ச்சியாக, அதனை தூக்கியடித்தது குருதான்.
"கொன்னுபுடுவேன்... சமையலைப் பத்தி பேசசுனீகன்னா" என்றவன் கடுப்பாக,
"நான் நல்லாதான் சமைப்பேன்... உங்களுக்குதான் பிடிக்கல" என்றவள் நொடித்துக் கொண்டு சொல்ல மற்றொரு தலையணை அவள் தலையின் மீது வந்து வீழ்ந்தது.
"நல்லா சமைக்கிற மூஞ்சியை பாரு... அக்கா உன் கதையெல்லாம் சொல்லிபுட்டாக"
"என்ன சொன்னாங்க?" அவள் புருவத்தை நெறிக்க,
"ஹ்ம்ம்... சூப்பு கொடுத்தே நீ எல்லோரையும் சாகடிப்பியாம்ல" என்றவன் சொல்ல, அவள் முகத்தில் கோபம் கனலாய் ஏறியது.
"திஸ் இஸ் டூ மச்... தெரியாம பேசாதீங்க.. என் டேடை போய் கேட்டுப் பாருங்க" என்றாள் முறைப்போடு!
அவனுக்கு அவள் சமையல் மீதிருக்கும் நம்பிக்கையை எண்ணி சிரிப்பு தாங்க முடியவில்லை.
"உன்னையெல்லாம் எப்படிதான் எங்கக்கா பெத்தாவளோ?" என்று சலித்துக் கொண்டிருக்கும் போதே அவள் தீவிரமாய் போட்டோ ஆல்பத்தில் மூழ்கி போயிருந்தாள்.
"ப்ச் அதை விடுங்க மாம்ஸ்... இந்த போட்டோல இருக்கிறது யாரு?" என்றவள் கேட்க,
"அம்புட்டு தள்ளியிருந்தா எப்படி தெரியும்... கொஞ்சம் பக்கத்தில வந்துதான் காமிக்கிறது" என்றவன் அவளை சூட்சமமாய் அருகில் அழைக்க அவளும் அவன் எண்ணம் புரியாமல் வந்து அமர்ந்து தன் சந்தேகத்தை வினவ,
அவனோ அவளுக்கு பதில் சொல்லியபடி அவளை அருகாமையில் வரவழைத்து ஆசைதீர ரசித்துக் கொண்டிருந்தான்.
அவளோ... இது யாரு.. அது யாரு... இதென்ன விசேஷம்... எனக் கேட்டு அவனை நொச்சி எடுத்தாலும் அவன் பொறுமையோடு பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அதுவும் அவளை இடித்துக் கொண்டும் உரசிக் கொண்டும்!
மெல்ல மெல்ல அவளை நெருங்கி அவள் தோள்மீது கை போட்டுக் கொள்ள, அதையெல்லாம் அவள் உணரக் கூட இல்லை. அவள் பார்வையெல்லாம் அந்த போட்டோக்களில் மட்டுமே லயித்திருக்க, அவன் பார்வை அவள் மீது மட்டுமே லயித்திருந்தது.
"மாம்ஸ் இந்த பாப்பா யாரு?" என்றவள் அவனிடம் கேட்க அப்போது தன் கவனத்தை அந்த போட்டோவின் மீது திருப்பியவன் ஒருவித நமட்டுசிரிப்போடு,
"நீயே கண்டுபிடி... உம்ம புத்திசாலிதனத்தை பார்ப்போம்" என்றவன் சொல்ல அவள் ஆழ்ந்த சிந்தனைக்குள் மூழ்கினாள்.
குருவோ அவளை அப்படியே விழுங்கிவிடலாம் என்றளவுக்கு அத்தனை கிறக்கமாய் பார்த்திருந்தான்.
"நான் கண்டுபுடிச்சிட்டேன்" என்றவள் அவன் புறம் திரும்பி, "ராகினிதானே" என்க, "உம்ஹும்" என்றான் சிரத்தையின்றி!
"அப்போ ஐஸ்ஸு"
"உம்ஹும்"
"இப்ப கரெக்ட்டா சொல்றேன்..? ராகினியோட சிஸ்டர் மோகினி" என்றவள் சொல்லவும் அவள் பின்மண்டையில் ஒரு போடு போட்டான்.
அவள் புரியாமல் தலையை தேய்த்துக் கொண்டு, "ஏன் மாம்ஸ் அடிக்கிறீங்க?" என்று கேட்க அவனோ வயிறு குலுங்க சிரித்தான்.
"ராகினி தங்கைங்க பேரு மோகினி இல்லடி... ரோஹினி அப்புறம் விஷாலினி... " என்றவன் சிரித்த மேனிக்கு சொல்ல,
"ஓ!! " என்றவள், "லேசா டங்கு ஸ்லிப்பாயிடுச்சு" என்று சமாளித்தாள்.
"அவளுககிட்ட போய் நீ இப்படி சொல்லி இருக்கணும்... உன்னைய வறுத்தெடுத்திருவாளுக" என்றவன் மேலும் சொல்லிச் சிரிக்க,
"அதெல்லாம் சொல்லமாட்டேன்... ஆனா இந்த பாப்பா இரண்டு பேருமே இல்லையா" என்று கேட்க, "உம்ஹும் இல்லை" என்றவன் பதலளிக்க அவள் குழப்பமாய் நெற்றியை தேய்த்து கொண்டு,
"எனக்கு தெரியல... நீங்களே சொல்லுங்களேன்" என்று அவனைப் பார்த்து குழைந்தாள். அவள் தலையைப் பிடித்து அழுத்தியவன்,
"அடியே என் அக்கா பெத்த அறிவுக் கொழுந்தே... நல்லா உத்து பாருல... அது நீதான்" என்றவன் சொன்ன மறுகணம் அவள் அதிர்ச்சியோடு, "நானா?" என்று கேட்டு தன் விழிகளை அகற்றிப் பார்த்தவள் அந்த போட்டோவிற்குள்ளேயே போய்விட்டாள்.
"எதுக்குல அப்படி சந்தேகமாய் பார்க்க... அந்த குட்டி அழகி நீதான்டி" என்றவன் சொல்லி அவள் கன்னத்தைக் கிள்ள, "ஆ" என்று தன் கன்னம் தேய்த்து கொண்டே,
"இந்த போட்டோல நான் ரொம்ப அழகா இருக்கேனே... அதான் யோசனையாய் இருக்கு" என்றாள் நம்பிக்கையின்றி!
"பின்ன அழகாத்தான் இருப்பீக... உடுப்பு இல்லாம இருக்கீக இல்ல... அதான் சும்மா அம்சமா கொழுகொழுன்னு" என்றவன் சொல்லி வர்ணிக்க,
அவள் பதறிக் கொண்டு அந்த போட்டோவை மார்போடு அணைத்து மறைத்துக் கொண்டவள்
"சீ போங்க மாம்ஸ்... நீங்க ரொம்ப மோசம்" என்று சொல்லியபடி அவனை விட்டு விலகி வந்து முதுகைக் காட்டி அமர்ந்து கொண்டாள்.
அவன் புன்னகை ததும்ப,
"அய்யோடா ! அந்த போட்டோவை நான் இருபது வருஷமா பார்த்துக்கிட்டு கிடக்கேன்... இப்போ மறைச்சு" என்றவன் சொல்லிக் கொண்டே அவளைத் தன் கரத்தால் பின்னோடு இழுத்து படுக்கையில் சாய்த்தான்.
அவள் பதறிக் கொண்டு எழுந்து கொள்ள முற்பட அவனோ இம்முறை அவளை விடும் நிலையில் இல்லை. மொத்தமாய் அவன் தன் கட்டுப்பாட்டை இழந்திருந்தான்.
அவள் கரத்திலிருந்த போட்டோவை தூக்கி அவன் தூர வீசிவிட, அவன் எண்ணம் புரிந்தவளாய்,
"மா... ம்ம்ம்ஸ்" என்றவள் குரல் அவனின் கல்மிஷமான பார்வையில் திக்கி நின்றது.
"நான் பாட்டுக்கு தூங்கியிருப்பேன்... என்னை எழுப்பிவிட்டு... உசுப்பிவிட்டு... இப்ப என்னால முடியலடி" என்றவன் சொல்லிக் கொண்டே அவள் முகத்தில் தன் இதழ்களால் ஊர்ந்தான்.
"என்னை விடுங்க வேண்டாம்" என்றவள் தத்தளித்துக் கொண்டிருக்க,
அவன் அவள் உதட்டை தம் விரல்களால் வருடி கொடுத்து,
"என் உதடு பட்ட பாலை குடிக்க மாட்டேன்னு சொன்னவக இல்ல நீங்க?" என்றவன் கேட்டபடி அவள் இதழ்களைத் தன் இதழ்களால் பூட்டிவிட அவள் அதிர்ந்து போனாள்.
அவனைத் தடுக்க முடியாமல் அவளை மொத்தமாய் அவன் ஆக்கிரமித்திருக்க,அவன் அந்த புது உணர்வில் ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தவன் அவளின் நிராகரிப்பையும் மீறி அவளுக்கு அந்த முத்தத்தை வழங்கிவிட்டே நிமிர்ந்தான்.
அவளோ மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தவள் பேச்சு மூச்சின்றி அவனை வெறிக்க வெறிக்கப் பார்க்க,
அவளை ஆழ்ந்து பார்த்து தம் கரத்தால் அவள் கன்னங்களை வருடியவன்,
"உன் திராட்சை கண்ணால அப்படி என்னைய பார்க்காதல... என்னால சுத்தமா முடியல... இம்புட்டு வருசத்தில வேறெந்த புள்ளயையும் மனசார நினைச்சுது கூட இல்ல... எப்போ உன்னையப் பார்த்தேனோ அப்பத்தில இருந்து உம் மேல கிறங்கிக்கிடக்கேன்.... தெரியுமா?!" என்று கேட்டவன் மேலும் தொடர்ந்தான்.
"வெளிப்படையாவே சொல்லுதேனே... என் மனசும் உடம்பும் உனக்காக தவிக்குதுல... என்னைய போட்டு படுத்தாதிக... என்னைய கொஞ்சம் புரிஞ்சிக்கிடு" என்று சொல்லியவன் மீண்டும் மின்னல் கீற்றென ஓர் முத்தத்தை அவள் உதட்டில் பதிக்க,
அந்த முத்தம் அவளை மொத்தமாய் சொல்லற்று செயலற்றுப் போக செய்திருந்தது. முதல்முறையாய் அவன் அந்த உணர்வில் கிறங்கித் தன்னிலை மறந்திருக்க, மெல்ல மெல்ல ஷிவானியின் நிலைமையும் அதுதான்.
அவனின் தொடுகையில்... அவள் உணர்வுகளெல்லாம் விழிப்படைய அவனுடனான அந்த கூடலில் அவளுமே தன்னை மறந்த நிலையில் லயிக்கத் தொடங்கியிருந்தாள். அந்த நீண்ட இரவு அவர்களின் நெருக்கத்தையும் கிறக்கத்தையும் அதிகப்படுத்திக் கொண்டே இருக்க, இருவருமே ஒருவருக்குள் ஒருவர் மூழ்கியிருந்தனர்.
நேரங்கள் மடிந்து கொண்டே போக, அவள் மீதான அவனின் தாபம் தணியாமல் அதிகரித்துக் கொண்டே போனது ஆனால் பெண்ணவளோ அவனின் தேடலுக்கும் தேவைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் ஒரு நிலையில் ஓய்ந்து போக அங்கே அவர்கள் கூடல் நிறைவற்றதாக முடிவுற்றது. அடைகாக்கும் கோழியைப் போல அவளைத் தன் கை வளைவுக்குள் அவன் வைத்திருக்க அவளும் அடங்கி ஓடுங்கி அவனுக்குள்ளே மொத்தமாய் அடைக்கலமாகினாள்.
27

Quote from Marli malkhan on May 9, 2024, 11:04 AMSuper ma
Super ma