மோனிஷா நாவல்கள்
Konjam vanjam kondenadi - 8
Quote from monisha on October 31, 2020, 9:45 PM8
தவறான அபிப்ராயம்
இந்த களேபரத்தை பார்த்துக் கொண்டிருந்த வள்ளியம்மை பாட்டி ஆரஅமர,
"எல சிவகுரு... அவன் வேதா வூட்டுகாரன்தானே?!... எதுக்குவே அவன் இந்த சலம்புசலம்பிட்டு போறான்... என்னல ஆச்சுது?" என்று கேட்க,
சிவகுரு அவரை ஆச்சர்யமாய் பார்த்தபடி, "பரவாயில்ல அப்பத்தா... இம்புட்டு வயசிலயும் உனக்குக் கண்ணு நல்லா தெரியுது... அவரு வேதாக்கா வூட்டுக்காரன்னு சரியா கண்டுபிடிச்சிடுதே" என்றவன் கேட்டு சிரித்து கொண்டிருக்கும் போதே, முருகவேல் அவனை கோபமாய் முறைத்துக் கொண்டு நின்றார். தங்கம் மகனின் இந்த செய்கையால் கலங்கியபடி அவனைப் பார்க்க, அவன் தன் சிரிப்பைக் கட்டுபடுத்திக் கொண்டான்.
முருகவேல் சீற்றமாகி இடம் பொருள் ஏவலின்றி வாசலில் வைத்தே குருவின் கன்னத்தில் அறைந்துவிட, அவன் எதிர்வினை எதுவும் காட்டாமல் அப்படியே கல்லாய் சமைந்திருந்தான்.
தங்கம் அதிர்ச்சியாக, "என்னங்க... தோளுக்கு மேல வளர்ந்து நிற்கிற புள்ளையை போய்" என்று கேட்க,
வள்ளியம்மை கோபத்தோடு, "எதுக்குல என் பேரனை அடிச்சுதே" என்று முடியாமல் தன் கொம்பைத் தூக்கி ஊன்றி எழுந்து கொண்டார்.
"நீ சும்மா இரு கிழவி... அவன் செஞ்ச வேலைக்கு எல்லாம் அவன் தோலை உரிச்சிருக்கணும்" என்றவர் மூச்சிறைக்க அவனை முறைத்துப் பார்க்க குரு அமைதியாக தலையை தொங்க போட்டுக் கொண்டிருந்தான்.
தங்கம் தன் கணவனிடம், "வாசல்லையே வைச்சு எதுவும் பேச வேணாமுங்க... உள்ளார போலாம்" என்று அழைக்க, அவர் உள்ளே சென்றார்.
குரு அப்படியே திண்ணையில் அமர்ந்து கொள்ள வள்ளியம்மை தன் பேரனைப் பார்த்து, "எதுக்குல உங்க ஐயன் உன்னை அடிச்சிட்டுப் போறான்... அப்படி என்னதாம்ல பண்ண?" என்று மெலிதாகக் கேட்டு ஆறுதலாக தலையை தடவிக் கொடுக்க,
"வேதாக்கா மவ சிவானியை நான்தான் கட்டிக்கிடுவேன்னு சொன்னேன்... அதுக்குதான் ஐயா என்னை அடிச்சிட்டுப் போறாக" என்று வருத்தமுற சொன்னான்.
வள்ளியம்மை குரலை உயர்த்தி, "இதுக்காவா உங்க அப்பன் உன்னை அடிச்சிட்டு போகுதான்... அவனுக்கு சுத்தமா கூறே இல்லலே... சரியான கூறுகெட்டவன்... அவளைக் கட்டிக்கிட உனக்கு இல்லாத உரிமை வேற எவனுக்கில இருக்கு" என்று சொல்லவும்
சிவகுரு மெலிதான குரலில், "உரக்க பேசாதீக அப்பத்தா... ஐயா அப்புறம் உங்ககிட்டயும் கோபப்படுவாக" என்றான்.
"எனக்கு என்னல பயம்... அவன் வெளியே வரட்டும்... அவனை குமட்டிலயே குத்துதேன்" என்றார் வள்ளியம்மை பாட்டி.
குரு சிரித்துக் கொள்ள அவன் பாட்டி மேலும், "சிவானி பிறக்கும் போதே அவளை உனக்குதான் கட்டி வைக்கனும்னு நான் முடிவு பண்ணிடுதேன்... அந்த பொசக்கெட்டவன்தான் அவளை எங்கயோ கண்காணாம கூட்டிட்டு போயிட்டான்" என்று தன் மனக்குமறலைக் கொட்டிக் கொண்டிருந்தார்.
குரு தன் முகவாயை தடவியபடி, "ஏன் அப்பத்தா? சிவானி இங்கனதானே பிறந்தா?" என்று சந்தேகமாய் கேட்க,
"பின்ன... உங்க அக்காளுக்கு நான்தானேல பிரசவம் பார்த்தேன்... இந்த கையிலதான்ல அவளை முதல்ல தூக்கிக்கிடுதேன்... குழந்தையில அவ எம்புட்டு அழகா இருப்பா தெரியுமால?!" என்றவர் ஏக்கமாய் சொல்ல குருவும் ஏக்கமாய் பெருமூச்செறிந்து,
"இப்பவும் பார்க்க அம்புட்டு அழகாதேன் இருக்கா" என்று சொல்லிக் கொண்டிருந்த சமயம், "குரு" என்று தங்கம் அழைத்தார்.
அவன் வீட்டிற்குள் நுழைய முருகவேல் இருக்கையில் கோபமாய் அமர்ந்து கொண்டிருந்தார். அவருக்கு எதிர்புறம் தூணில் அவன் சாய்ந்தபடி மௌனமாய் நின்று கொள்ள,
தங்கம் வேதனை நிரம்பிய முகத்தோடு, "என்ன குரு... இப்படி பண்ணிட்ட... பெரிய மவளும் மருமவனும் எம்புட்டு வருஷம் கழிச்சி வீடு தேடி வந்தாயிங்க... இப்படியால அவைங்ககிட்ட மருவாதையில்லாம பேசுவ... பெரியவளோட மூஞ்சே சுருங்கிப் போயிடுச்சு... அப்படியே உடைஞ்சி நின்னுட்டா... ஏன்ல இப்படி செஞ்ச?... என்னல ஆச்சுது உனக்கு?" என்று தழுதழுத்தக் குரலில் அவர் வினவ அவன் கண்ணிலும் நீர் எட்டிபார்த்தது.
அவன் பதிலின்றி மௌனமாகவே இருக்க முருகவேல் சினம் பொங்க,
"சிவானி காதுகுத்தும் போது நடந்த பிரச்சனையை மனசுல வைச்சிட்டு... இத்தனை வருஷமா நம்ம பிள்ளையை கண்ணுல காட்டாம வைச்சிருந்தவன்ல அந்த சபரி... இருந்து இருந்து இப்பதான் அவன் இறங்கி வந்திருக்கான்... நீ அவைன்கிட்ட போய் வம்பு வளர்த்துட்டு நிக்க... இதுக்கப்புறம் அவன் எப்படில நம்ம மவளைக் கூட்டிட்டு வருவான்" என்றவர் கேட்க,
குரு அப்போதும் மௌனமாகவே நின்றான்.
"நானும் அம்மையும் பேசிட்டிருக்கோம்... நீ என்னடான்னா இடிச்ச புலி மாதிரி நிக்க... உன் மனசில என்னதாம்ல நினைச்சிட்டிருக்க... அதையாச்சும் சொல்லுவே" என்றவர் அழுத்தமாய் கேட்க,
அவன் அவரை நிமிர்ந்து பார்க்காமல், "எனக்கு சிவானியைக் கட்டிக்கிடணும்... அம்புட்டுதான்" என்று தன் எண்ணத்தை ஒரே வரியில் சொல்லி முடித்தான்.
முருகவேல் அவனை அதிர்ச்சியாய் பார்த்து, "புத்திகெட்டு போச்சுதால உனக்கு" என்று சீறிக் கொண்டு அவனை நெருங்க தங்கம் அவரை வழிமறித்து, "கோவப்படாதீக... நான் அவன்கிட்ட பேசி புரிய வைச்சிடுதேன்" என்றார்.
மனைவியின் வார்த்தைக்கு அமைதியானவர் குருவை எரிப்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, "நான் வெளியே போயிட்டு வந்திடுறேன்... உன் மவனுக்கு நல்லா விளங்குத மாதிரி சொல்லும்" என்றார்.
அவர் வெளியே சென்றதும் குரு இறுக்கம் தளர்ந்து மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு இருக்கையில் வந்து அமர்ந்து கொள்ள
தங்கம் அவனை நெருங்கி, "நீ செஞ்ச காரியத்திற்கு ஐயன் எம்புட்டு கோபமா போறாக பாத்தியா" என்றார்.
"அப்படி என்ன செஞ்சுபுட்டேன்... என் அக்கா மவளை கட்டிக்கிறன்னு சொன்னது ஒரு குத்தமா?!" இப்போது அவன் குரல் சீறி கொண்டு வெளியே வந்தது.
"புரிஞ்சிக்கோ குரு... நீ வேதா வூட்டுக்காரரை பத்தி தெரியாம பேசுத... அவக பிடிச்ச பிடி உடும்பு பிடியாக்கும்... கனவிலயும் சிவானியை உனக்குக் கட்டிக்கொடுக்க அவுக சம்மதிக்க மாட்டாக"
"அவக சம்மதிக்கலன்னா... நான் சிவானியைக் கட்டிக்கிட முடியாதோ?!" என்றவன் அலட்சிய புன்னகையோடு கேட்டபடி தன் இருகரத்தைப் பின்னோடு வைத்து சாய்வாய் அமர்ந்து கொண்டான்.
அவனின் இந்த வார்த்தைகள் தங்கத்தை அரண்டு போகச் செய்திருக்க, அந்த சமயம் பார்த்து குருவின் மூன்றாவது தமக்கை அமிர்தவள்ளி தன் மகள் ஐஸ்வர்யாவோடு ஆவேசமாக உள்நுழைந்தார்.
அவர் சீற்றமாகத் தன் தம்பியைப் பார்த்து, "ஏல குரு... நீ வேதாக்கா மவ சிவானியைக் கட்டிக்கிடுதேன்னு சொன்னியாமே? அப்படியாம்ல" என்று கேட்க குருவும் தங்கமும் அதிர்ச்சியாய் தங்கள் பார்வையை பரிமாறிக் கொண்டனர்.
அமிர்தம் மேலும், "நீ அப்படி சொன்னதால சபரி மாமா கோவிச்சுகிட்டு வந்த வேகத்தில போயிட்டாகளாமே" என்று சொல்ல, தங்கம் தன் மகளை யோசனையாய் பார்த்து,
"யாருடி உனக்கு இதெல்லாம் சொன்னது?" என்று வினவினார்.
"அப்பத்தா தான் சொல்லிச்சு... ஐயன் வேற குருவை அடிச்சிட்டாகளாமே... அதையும் சொல்லுச்சு" என்க,
"அதுக்குள்ள உங்க அப்பத்தா எல்லாத்தையும் சொல்லிப்புட்டாக" என்று தங்கம் மகனின் காதைக் கடிக்க,
"அந்த கிழவிக்கு இருக்கு" என்று குரு கடுப்பானான்.
அமிர்தம் தன் தம்பியை முறைத்தபடி, "கேட்குதோம்ல... என்னல நடந்துச்சு... நீ என்ன சொன்ன?" என்றவர் உக்கிரமாய் கேட்க,
"எனக்கு வேலை கிடக்கு... நான் கிளம்புதேன்... நீ உட்கார்ந்து அம்மைகிட்ட விலாவாரியாய் எல்லாத்தையும் விசாரிச்சிக்கிடும்" என்று சொல்லிவிட்டு அவன் விறுவிறுவென வெளியேற தங்கத்திற்கு கிலி பிடித்துக் கொண்டது.
'என்னை மாட்டிவிட்டிட்டு போறானே... இவளும் இவ பொண்ணும் சேர்த்து வீட்டை இரண்டாக்க போறாங்களே' என்றவர் எண்ணி கொண்டிருக்கும் போது அமிர்தம், "டே குரு" என்றழைக்க அவன் காதில் வாங்காமல் புறப்பட்டுவிட்டான்.
வெளியே வந்தவன் தன் பாட்டியை முறைத்து,
"ஏ வள்ளியம்மை... ஆல் இண்டியா ரேடியாவோட்டும் நடந்த கதையெல்லாம் வரவைங்க போறவைங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டு திரிஞ்சிட்டிருக்கியா?" என்று கேட்க,
"என்னல சொல்லுத... கொஞ்சம் சத்தமாதான் பேசேன்" என்று காதைப் பிடித்து உற்றுக் கேட்டார். பாட்டியை விழி இடுங்கப் பார்த்தவன்,
"திட்டினா மட்டும் உனக்கு காது கேட்காதே... இரு உன்னை வந்து வைச்சுக்கிடுதேன்" என்று கோபமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான். குரு வீட்டில் சூழ்நிலை இப்படி இருக்க, ஷிவானி வீட்டில் அரவிந்தனின் கார் சென்று நின்றது.
சபரி விறுவிறுவென வீட்டிற்குள் சென்றார். அவரின் முகபாவத்தை பார்த்து மோகனும் ரஞ்சனும் ஏதோ பிரச்சனை என்றளவில் கிசுகிசுத்துக் கொண்டிருக்க, வேதா பயந்து பயந்து உள்ளே நுழைந்தார்.
ஷிவானி அவர்கள் வந்ததை அறிந்து அறையை விட்டு வெளியே வந்தவள் தன் அம்மாவைப் பார்த்து, "என்ன மீ ஆச்சு? தாத்தா வீட்டுக்கு போனீங்களா? எல்லோரையும் மீட் பண்ணீங்களா?" என்றவள் ஆவல் ததும்ப கேட்க,
"உங்கம்மா நினைச்சதை நடத்திக் காட்டிட்டா வாணி" என்று சபரி உக்கிரமாக அவள் கேள்விக்கு பதிலளித்தார். தன் தந்தையின் முகபாவத்தைப் பார்த்த ஷிவானி என்னவோ ஏதோவென்று புரியாமல் பதட்டமானாள்.
வேதா கண்ணீரோடு, "நான் இப்படியெல்லாம் நடக்கும்னு சத்தியமா நினைக்கலங்க" என்று சொல்லவும் சபரி சீற்றத்தோடு, "பேசாதடி... பத்திக்கிட்டு வருது" என்றார்.
"டேட் என்னாச்சு? ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க ?" என்று ஷிவானி இடைபுகுந்து கேட்க,
நளினி முந்திக்கொண்டு, "அந்த காட்டானுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கனுமா... அவனுக்குதான் உன்னை கட்டிக்கிட எல்லா உரிமையுமாம்" என்று பல்லைக் கடித்து கொண்டு சொன்னார் சபரியின் தமக்கை! வேதாவிற்கு கோபமேறியது.
"வார்த்தையை அளந்து பேசுங்க மதினி... என் தம்பியை காட்டான் கீட்டான்னு சொல்ற வேலை வைச்சுக்காதீங்க" என்று சொல்ல, ஷிவானிக்கு நடந்தது என்னவென்று ஓரளவு புரிந்து போனது.
சபரி கோபமாக தன் மனைவியிடம், "அவனும் அவன் மூஞ்சியும்... பார்க்க அவன் காட்டான் மாதிரிதான்டி இருக்கான்... போயும் போயும் அவன் கெட்ட கேடுக்கு என் ஷிவானியைக் கட்டிக்கணுமா?" என்ற போது ஷிவானிக்குத் தலையெல்லாம் சுழன்றது.
இதற்கிடையில் ரஞ்சன் மோகனின் காதோரம், "உனக்குன்னு எங்கிருந்துடா வில்லனுங்க கிளம்புறானுங்க" என்க,
"நானும் அதேதான் யோசிச்சிட்டிருக்கேன்... மொழுமொழுன்னு இருந்த அந்த டோங் லீயே பெட்டர்... இவன் கொடுவா மீசையெல்லாம் வைச்சுகிட்டு ஹல்க்கா பல்க்கா இருக்கானே" என்று பீதி கலந்த பார்வையோடு சொல்ல,
"அடி தாங்குவியாடா?" என்று ரஞ்சன் கேட்க மோகன் அவன் கரத்தில் கிள்ளிவிட்டான்.
அதற்குள் சபரிக்கும் வேதாவிற்கும் இடையில் பேச்சு வார்த்தை முற்றியிருக்க, அரவிந்தன் இருவரையும் கட்டுப்படுத்த ரொம்பவும் பிராயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார்.
வேதாவும் சற்று கோபமாக, "உங்க அக்கா மகனுக்கு என் பொண்ணைக் கட்டிக்க உரிமை இருக்க மாதிரி என் தம்பிக்கும் கட்டிக்கிட உரிமை இருக்கு... அதைத்தானே அவன் கேட்டான்... அதிலென்னங்க தப்பு" என்றவர் தன் பங்குக்கு வாதாட, ஷிவானி அதிர்ந்து தன் தாயை பார்த்தாள். அந்த வார்த்தைகள் சபரியை ரௌத்திரமடையச் செய்தது.
"என்னடி சொன்ன?" என்று ஆவேசமாய் தன் மனைவியை அவர் அடிக்க கை ஓங்க, ஷிவானி அவரைத் தடுக்க முற்பட்டு கடைசியில் அந்த அறை அவள் கன்னத்திலேயே தவறுதலாய் விழுந்தது.
சபரி அந்த நொடி தான் ஷிவானியையா அறைந்துவிட்டோம் என்ற குற்றவுணர்வில் ஷாக்கடித்தது போல் நின்றார்.
ஒருமுறை கூட வேதாவும் சபரியும் அவளை அடித்தது கிடையாது. அப்படியே வேதா அடிக்க யத்தனித்தாலும் சபரி அதற்கு அனுமதிக்க மாட்டார். அந்தளவுக்குச் செல்ல மகள்.
ஷிவானி காயப்பட்ட தன் கன்னத்தைப் பிடித்தபடி அழுது கொண்டே நிற்க, "வாணிம்மா" என்று சபரியும் வேதாவும் அவளை நெருங்கினர்.
"ப்ளீஸ் டோன்ட்" என்று கை காண்பித்தபடி விலகி நின்றாள்.
"அப்பா தெரியாம அடிச்சிட்டேன்டா" என்று சபரி இறங்கியபடி சொல்ல, "நீங்க அடிச்ச அடியை விட... நீங்க இரண்டு பேரும் இப்படி நடுஹாலில் நின்னு சண்டை போட்டுக்குறீங்களே... அதுதான் எனக்கு ரொம்ப வலிக்குது... அதுவும் என்னை வைச்சே" என்றதும் இருவரும் மௌனமாய் தலைகவிழ்ந்தனர்.
ஷிவானி சபரியை பார்த்து, "ஏன் டேட்... நான் உங்க சிஸ்டர் சன்னை கல்யாணம் பண்ணிக்கணும்... அம்மாவுக்கு நான் அவங்க பிரதரைக் கல்யாணம் பண்ணிக்கணும்... சே! என்ன மாதிரியான கான்வர்ஸேஷன் இது?" என்றவள் அசூயையான பார்வையோடு கேட்க,
"நான் அப்படிச் சொல்ல வரல வாணிம்மா" என்று வேதா முன் வந்து நின்றார்.
"நீங்க அப்படிச் சொல்லல" என்று ஷிவானி முறைத்தபடிக் கேட்டதும் வேதாவால் பதில் பேசமுடியவில்லை.
"உங்க இரண்டு பேருக்கும் நான் உயிருள்ள மனுஷி மாதிரி தெரியிறேன்னா இல்லையா?!" என்றவள் கேட்க, சபரி தவிப்போடு, "ஸாரி வாணிம்மா... தப்புதான்" என்று மகளிடம் மன்னிப்பு கோரினார் சபரி!
"உங்க சாரியும் வேண்டாம்... ஒண்ணும் வேண்டாம்... இதோட எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணிட்டு மலேசியாவுக்கு டிக்கெட் புக் பண்ணுங்க... இல்லன்னா... நான் புக் பண்ணி போயிக்கிட்டே இருப்பேன் சொல்லிட்டேன்... திஸ் இஸ் பைஃனல்" என்று சொல்லி தன் அறைக்குள் சென்றவள்,
அங்கிருந்த பூஜாடியை தூக்கியெறிந்து முகம் பார்க்கும் கண்ணாடியை சல்லிசல்லியாய் நொறுக்கியிருந்தாள்.
அந்த சத்தம் எல்லோர் காதிலும் விழ மோகன் அப்போது, "மொத்தமா சந்திரமுகியா மாறிட்டா" என்றான்.
அவன் சொன்னது போலதான் நிறைய பொருள்கள் தெறித்து சேதாரமாக, சங்கீதாதான் அப்போது அவள் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
"என்ன பண்ணிட்டிருக்க ஷிவா நீ... எல்லாத்தையும் உடைச்சா பிரச்சனை ஸால்வாயிடுமா?" என்று கேட்க அவள் அதற்கு மேல் தாங்க முடியாமல் தன் கரத்தால் முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
சங்கீதா அவள் தோளைத் தடவி, "ஷிவா... ரிலேக்ஸ்" என்க,
அப்போது மோகன் அங்கே வந்து, "செய்யிறதெல்லாம் செஞ்சிட்டு அழறியா?" என்றவன் சொல்ல,
அதிர்ச்சியில் அவனை நிமிர்ந்து பார்த்து, "நான் என்ன லா செஞ்சேன்?" என்று வினவினாள்.
"நீ அவன்கிட்ட சிரிச்சி பேசினதாலதான் அவன் அதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு... பத்திரிகை வைக்க போனவங்ககிட்ட அப்படி கேட்டிருக்கான்"
"அவர்கிட்ட நான் சாதாரணமாதான் லா பேசினேன்"
"அவன் ஆள் பார்க்க ரவுடி மாதிரி இருக்கான்னு அப்பவே சொன்னேனே கேட்டியா? அதை சொன்னதுக்கு மேடம் என் சட்டையைப் பிடிச்சீங்க... இப்ப அது உண்மையாயிடுச்சு பார்த்தியா?!" என்று சொல்ல, ஷிவானி அவன் சொல்வது சரிதானோ என்று யோசித்தபடி மௌனமானாள்.
அவள் செய்த சாதாரணமான செய்கையை மோகன் பெரும் குற்றமளவுக்கு பேசி அவளை குற்றவுணர்வில் ஆழ்த்த, ஷிவானியின் உள்ளம் கொதிப்படைந்தது. மொத்தமாய் அவள் கோபமெல்லாம் குருவின் புறம் திரும்பியிருந்தது. அவன்தான் இப்போது நடந்த எல்லா பிரச்சனைகளுக்கும் காரணி என்றெண்ணிக் கொண்டாள்.
அந்த வீட்டில் உள்ளவர்கள் யாருக்குமே உறக்கம் வரவில்லை. எல்லோருமே அந்த குழப்பத்தை எப்படி சீர் செய்வது என்பது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஷிவானி தனியே பின்புற வாசலில் யோசனையோடு அமர்ந்திருக்க, "வாணிம்மா" என்றழைத்தபடி சபரி வந்து நின்றார்.
ஷிவானி அங்கிருந்து எழுந்து செல்ல யத்தனிக்க, "ப்ளீஸ் வாணிம்மா... அப்பாவை மன்னிச்சிடுறா.... இனிமே ப்ராமிஸா நான் உங்க அம்மாகிட்ட சண்டை போட மாட்டேன்" என்றுரைக்க அவள் மேலே செல்லாமல் மௌனமாய் நின்று கொண்டாள்.
"இப்பவும் நீ அப்பாகிட்ட பேச மாட்டியா வாணிம்மா?!" என்று கேட்க அவள் சற்று இறங்கிய தொனியில், "அப்படி எல்லாம் இல்ல டேட்" என்றாள்.
உடனே அவள் கரத்தைப் பிடித்து அருகில் அமர வைத்தவர் பொறுமையாக, "நாங்க போன இடத்தில என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?" என்று ஆரம்பித்தவர் நடந்தேறிய நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தார்.
அவர் மேலும், "நிச்சியதார்த்தத்தை நீ எப்படி நடத்துறன்னு நான் பார்க்குறேன்னு அவன் என்கிட்ட சவால் விடுறான் வாணிம்மா... எவ்வளவு இன்ஸல்டிங்கா இருந்துச்சு தெரியுமா? அந்தக் கோபத்திலதான் நான் அப்படி நடந்துக்கிட்டேன்" என்க, அவளின் விழிகளில் கோபம் கனலாய் ஏறின. தன் தந்தையை அவன் அவமானப்படுத்துவது போல் பேசியிருக்கிறான் என்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அவர் பொறுமையாக, "இந்த எங்கேஜ்மென்ட் இப்போ என் டிக்னிட்டி விஷயம்" என்றவர் சூட்சுமமாய் அவர் நினைத்ததை தன் மகளிடம் சொல்லிவிட்டார். ஒருவித நீண்ட மௌனம் அவர்கள் சம்பாஷணையை தடைப்படுத்தியிருக்க,
ஷிவானி தீவிரமான யோசனைக்குப் பின், "உங்க டிக்னிட்டிதான் டேட் எனக்கு முக்கியம்... நீங்க எங்கேஜமென்ட்டை நடத்துங்க... அவர் என்னதான் பன்றாருன்னு நாம பார்ப்போமே" என்றாள்.
"நிஜமாவா வாணிம்மா?" அவர் ஆச்சர்யமாய் கேட்க, "எஸ்" என்றவள் சம்மதிக்க சபரி நிம்மதியடைந்தார்.
ஆனால் ஷிவானியின் உள்ளமோ வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல அனலைக் கக்கி கொண்டிருந்தது.
அவள் தந்தை சொன்னதையும் மோகன் சொன்னதையும் எண்ணிக் கொண்டவளுக்கு சிவகுரு பற்றிய தவறான அபிப்பிராயம் ஆழமாய் வேரூன்றியது.
சபரி தன் மகளை உறங்கச் சொல்லி உள்ளே அழைத்து சென்றுவிட, அவளோ இரவெல்லாம் உறக்கம் வராமல் படுக்கையில் உழன்றாள்.
விடிந்தும் விடியாமலும் அவள் மோகனை தேடிக் கொண்டு போக, அவன் சோகமே உருவமாக வீட்டைச் சுற்றி வளைய வந்து கொண்டிருந்தான்.
அவன் பின்னோடு வந்து தோளைத் தொட்டவள், "மோக் சீக்கிரம் ரெடியாகிறியா? நாம வெளியே போயிட்டு வரலாம்" என்க, அவளை ஏற இறங்கப் புரியாமல் பார்த்தான்.
"என்ன லா முழிக்கிற?... போய் ரெடியாகு"
"எங்கே ஷிவா?" என்றவன் குழப்பமுறக் கேட்க,
"க்வஷினெல்லாம் கேட்காதே... ரெடியாகு.. நம்ம இரண்டு பேரும் கிளம்பறோம்" என்றவள் சொல்லிவிட்டுச் சென்றுவிட, இவள் எப்போது எப்படி இருப்பாள் என்பதை யூகிக்க முடியவில்லையே என்று எண்ணமிட்டு அவன் மண்டையை பிய்த்துக் கொண்டான்.
ஷிவானி வீட்டில் உள்ளவர்களிடம், "மைன்ட் அப்செட்டா இருக்கு... நானும் மோக்கும் வெளியே போயிட்டு வரோம்" என்று சொல்ல யாரும் அவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை.
மோகன் குழப்பமாக காரை இயக்கியபடி, "எங்க ஷிவா போகலாம்?" என்று கேட்க, "அன்னைக்கு நீ என்னைக் கூட்டிட்டு போனியே அந்த ரெஸ்டாரென்டுக்கு" என்றதும் அவளைக் கோபமாய் முறைத்தவன்,
"இந்த களேபரத்துலையும் உனக்கு ரெஸ்டாரென்ட்ல போய் சாப்பிடணுமா?" என்று கேட்க, "இடியட்... சாப்பிட இல்ல... சண்டை போட" என்றாள் அவள்!
அவன் அதிர்ச்சியோடு, "என்னைப் பார்த்தா எப்படி தெரியுது... உன் மீசைக்கார மாமன் கிட்ட என்னைச் சிக்க வைக்கலாம்னு பார்க்கிறியா? " என்றவன் கேட்க,
"ஏன் மோக் பயப்படுற?"
"பின்ன... என் உசுருக்கு கேரன்டி நீ கொடுப்பியா... திருநெல்வேலிகாரங்க எல்லாம் பேசிட்டு அருவா எடுக்க மாட்டாங்க... அருவா எடுத்துட்டுதான் பேசுவாங்க"
"நீ ஓவரா பில்டப் பண்ணாத லா" அவள் கடுப்பாக
"நான் சொல்றதெல்லாம் நிஜம் ஷிவா" என்று அச்சமுற்றான் மோகன்.
"அப்படின்னா ஒண்ணு பண்ணு... நீ உள்ள வர வேண்டாம்... நான் மட்டும் போய் பேசிட்டு வர்றேன்"
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ... வீட்டில தெரிஞ்சா பிரச்சனையாயிடும்"
"இதுக்கு மேல என்ன பெரிசா பிரச்சனை வரப் போகுது... எதுவாயிருந்தாலும் நான் பேஃஸ் பண்ணிக்கிறேன்... யூ ஜஸ்ட் கம் வித் மீ"
"மாமாவுக்கு தெரிஞ்சுதுனா?"
"நீ என்னைக் கூட்டிட்டு போறியா... இல்ல நானே போயிக்கட்டுமா லா" என்றவள் காரிலிருந்து இறங்க பார்க்க,
"சரி சரி கூட்டிட்டு போறேன்" என்று வேறுவழியின்றி சம்மதித்தவன்,
பதட்டத்தோடு தன் காரை இயக்கி சிவசு மெஸ்ஸின் வாசலில் கொண்டுவந்து நிறுத்தினான்.
8

Quote from Marli malkhan on May 9, 2024, 1:26 AMSuper ma
Super ma