மோனிஷா நாவல்கள்
KPN's Poove Un Punnagayil - 25
Quote from monisha on July 29, 2022, 5:36 PMஅத்தியாயம்-25
"வீட்டுல இருக்கற யாரை பத்தியும் கொஞ்சம் கூட கவலை இல்ல. யார் கிட்டயும் பயமும் இல்ல மரியாதையும் இல்ல. சொந்த புத்தியும் இல்ல, சொல்றத கேட்டு நடக்கற புத்தியும் இல்ல, இப்படி பட்ட பிள்ளைகளை பெத்ததுக்கு இதெல்லாம் நமக்குத் தேவைதான். இவளுக்குத்தான் பொறுமை நிதானம் எதுவுமே கிடையாது. உங்களுக்குமா? ஏற்கனவே மாத்திரை போட்டும் பீப்பீ குறையவே மாட்டேங்குது, இப்ப இது வேறயா?" என மகள் கணவர் இருவரையும் திட்டிக்கொண்டே கருணாகரனின் காயத்தைச் சுத்தம் செய்து மருந்து தடவிக் கட்டும் போட்டுவிட்டார் தாமரை. இதைச் செய்து முடித்து உடைந்து கிடந்த கண்ணடித் சில்லுகளை வாறி சுத்தம் செய்து அவர் வருவதற்குள் மகள் சொன்ன அனைத்தையும் அவரிடம் சொல்லிமுடித்தார் கருணா.
“ப்ச்... நான் அன்னைக்கே சொல்லல? இவ இந்த மாதிரித்தான் எக்குத்தப்பா எதையோ செஞ்சு வெச்சிருப்பான்னு எனக்கு அப்பவே தெரியும்” என அலுத்துக்கொண்டவர், "எவ்வளவு இன்சென்சிடிவா, அருவருப்பான வார்த்தையை ஒரு ஆம்பளைபிள்ளைய பார்த்து சொல்லிவெச்சிருக்க ஹாசினி நீ? ச்ச, இந்த அளவுக்கா உன்னை நாங்க கேவலமா வளர்த்திருக்கோம். ச்ச...ச்ச" என தாமரை ஆற்றாமையுடன் மகளிடம் பாய, அவள் மீதும் கொஞ்சம் தவறு இருப்பதாக அவள் கருதிய ஒரே காரணத்தினால், அதுவும் கூட ஒரு கட்டத்திற்கு மேல் மறைக்க முடியாத சூழ்நிலை இந்த சத்யாமாமாவால் உருவாகி, அதை அவளே ஒப்புக்கொள்ள வேண்டியதாகிப்போகவும், மறுத்து எதுவும் பேச வாய்ப்பே இல்லாமல் போக, மௌனமாக தலைகுனிந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டாள் ஹாசினி.
ஆனலும் அவள் முகத்தில் படர்ந்திருந்த கடுமையும் ஆத்திரமும், தன் தவறை ஒப்புக்கொள்ள அவள் கொஞ்சம் கூட தயாராக இல்லை என்பதை அவளைப் பெற்றவர்களுக்குச் சொல்லாமல் சொல்லியது.
"இவ வந்து இவ்வளவு நேரம் ஆகுதே, இந்த பசங்க ஏன் இன்னும் வந்து சேரல?" என அவர் கவலையுடன் கேட்க, "சந்துவை அழைச்சுக்கிட்டு மறைமலைநகர் சைட் வரைக்கும் போறானாம், சத்யா போன் பண்ணி இப்பதான் சொன்னான்" என அவருக்கு பதில் கொடுத்த தாமரை, "நல்லவேள, இவ பேசின எதையும் அவன் கேட்கல. பாவம் கேட்ருந்தான்னா மனசொடிஞ்சு போயிருப்பான்" என முடித்தார் எரிச்சலுடன்.
அதை காதிலேயே வாங்காதவள் போல ஹாஸினி அங்கிருந்து நைசாக நழுவப் பார்க்க, "மேனர்ஸ் இல்லாம பாதி பேசிட்டு இருக்கும்போது எங்க ஓடற, முதல்ல உட்காரு" என கருணாகரன் போட்ட அதட்டலில் பட்டென்று அவள் உட்கார,
"குட்டிம்மா, இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், இப்ப அப்பா உனக்கு ஒரு ஒரு கதை சொல்லலாம்னு இருக்கேன். கொஞ்சம் கவனமா கேளு. கல்யாணமாகி ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்கு வந்தா எந்த அளவுக்கு அவளுக்கு பிரச்சனைகள் இருக்கும்னு அப்பவாவது உனக்கு புரியுதான்னு பார்க்கலாம்" என்றவர், "இது வேற யாரோட கதையோ இல்ல. நம்ம குடும்ப கதைதான். உன் அம்மா அப்பாவோட கதை" என்றார் இலகுவாகவே சிறு புன்னகையுடன்.
'என்ன?' என்பதாக முகத்தில் படர்ந்த ஆச்சரியத்துடன் தாமரை அவரை ஏறிட, "என்ன பாக்கற தாமர? எல்லாம் நம்ம கதைதான். வா... இங்க வந்து உட்காரு. நீயும் என் கூட சேர்ந்து நம்ம மகளுக்கு சொல்லலாம் இல்ல!" என தன் பக்கத்தில் தட்டி ஜாடை செய்து அவர் சொல்லவும், வந்து உட்கார்ந்தார் தாமரை. அவர் முகத்தில் பரவிய சிந்தனை ரேகைகளைப் பார்த்ததும் அவர் பழைய வாழ்க்கைக்கே பயணப்பட்டு விட்டது புரிந்தது தாமரைக்கு.
தொடர்ந்தார் கருணாகரன்.
"என்னதான் நீங்கள்லாம் இப்ப இவ்வளவு அல்ட்ரா மார்டனா சுத்திட்டு திரிஞ்சாலும் பேசிக்கலி நம்மளோடது கிரமத்து பின்னணியிலயிருந்து வந்த விவசாய குடும்பம்தான்.
ஊர்லயே, வீடு, வாசல், நிலம் நீச்சுன்னு நம்மளோடது கொஞ்சம் பெரிய கை. சுத்துப்பட்டு ஊர்ல எல்லாம் தாத்தாவுக்கு நல்ல மரியாதை. அதுவும் நான் சிவில் முடிச்சதும் அவர கையிலயே பிடிக்க முடியலன்னா பார்த்துக்கோயேன்"
பெருமையுடன் சொல்லிக்கொண்டே போனார் அவர். 'ம்... ம்... என்றவாறு ஒரு சுவாரஸ்யத்துடன் அதை கவனிக்கத்தொடங்கினாள் ஹாசினி. பழைய நினைவுகள் மனதில் எழும்ப தாமரையையுமே ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது.
"நான் முதல்ல படிச்சது ஊர்ல இருக்கற கவர்மண்ட் பள்ளிக்கூடத்துலதான். அப்பறம் பீஈ, மெட்ராஸ்ல ரூம் எடுத்து தங்கி படிச்சேன்.
கௌசிக் மாதிரித்தான், படிக்கும்போதே ஒரு பெரிய கம்பெனியில அஃப்ரன்டிஸா சேர்ந்து வேலை கத்துக்க ஆரம்பிச்சுட்டேன்.
ஊர் பக்கமெல்லாம் எப்படினா, ஒண்ணு விவசாயம் பார்க்கணும் இல்லனா கவர்மெண்ட் வேலைக்கு போகணும். 'கால் காசு உத்தியோகன்னாலும் கவர்மெண்ட் உத்தியோகம்'ன்னு டயலாகே பேசிட்டு திரிவாங்க. அதே டிசைன்ல தாத்தா என்னையும் கவர்ன்மெண்ட் வேலைக்கு போகச்சொல்லி ரொம்பவே எதிர் பார்த்தாங்க.
ஆனா எனக்கு இப்படி மாச சம்பளம் வாங்கிட்டு பிழைப்பை ஓட்றதுல கொஞ்சம் கூட உடன்பாடு இல்ல.
ஸ்டீரியோ டைபிக்கா நானும் படிச்சேன் வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு பேருக்கு ஒரு வேலைக்கு போயிட்டு, சுவாரஸ்யமே இல்லாம ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்க்கைய தள்றதுல எல்லாம் இன்ட்ரஸ்ட்டே இல்ல.
பிசினஸ் பண்ணனும், ஒரு எண்டே இல்லாம ஸ்கை இஸ் த லிமிட்ன்னு போயிட்டே இருக்கணும் அப்படின்னு ஒரு அதீத வேகம் மட்டும் இருந்துது.
அதுக்கு தாத்தாவோட எதிர்பார்ப்பு செட் ஆகல. எவ்வளவோ ட்ரை பண்ணியும் என்னோட கனவ கொஞ்சம் கூட அவங்களுக்கு என்னால புரிய வைக்கவே முடியல. அதனால தாத்தாவுக்கும் எனக்கும் ஒரு பெரிய கோல்ட்வாரே ஸ்டார்ட் ஆகிடுச்சு.
கவர்மெண்ட் வேலைக்குன்னா எவ்வளவு வேணாலும் செலவு செய்ய தயார். ஆனா பிஸ்னஸ் பண்ணனும்னா பத்து பைசா கூட கொடுக்க மாட்டேன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டார்.
பாட்டிக்கு இதை பத்தியெல்லாம் ஒண்ணும் தெரியாது. தாத்தா சொன்னா அதுதான் சரின்னு போறவங்க. என் பக்கம் நிற்கணுமா இல்ல தாத்தா பக்கம் நிற்கணுமான்னு புரியாம ரொம்பவே தவிச்சு போயிட்டாங்க.
பொத்தி பொத்தி வளர்க்கிற நீயே இப்படி இருக்கியே அப்படினா சும்மா காட்டு செடி மாதிரி இன்டிபென்டன்ட்டா வளர்ந்த நான் அந்த வயசுல எப்படி இருந்திருப்பேன்னு கொஞ்சம் யோசிச்சி பாரு! 'உங்க கைல இருந்து பணம் வாங்கித்தான் பிஸ்னஸ் பண்ணனும்னா அப்படி ஒரு பிசினஸ் நான் செய்யவே மாட்டேன்' அப்படின்னு அவர் முகத்துக்கு நேராவே சொல்லிட்டு மெட்ராஸ் வந்துட்டேன்.
கைல இருந்த காசை வெச்சு அட்வான்ஸ் கொடுத்து, இங்க சின்னதா ஒரு ஆபீஸ் போட்டு அதுல ஜூனியர் பசங்க ரெண்டு பேர வேலைக்கு வெச்சு, சின்னதா ரூம் போடறது, பாத்ரூம் கட்டிக் கொடுக்கிறது, ஷெட் போடறது, இப்படி சின்ன வேலைகள் எடுத்து செஞ்சுட்டு இருந்தேன். பெரிய வருமானம் எதுவும் இருக்காது. வரவுக்கும் செலவுக்குமா சரியா இருக்கும்.
என் நிலைமை கிட்டத்தட்ட திரிசங்கு சொர்க்கம் மாதிரி தான்னு வெச்சுக்கோயேன். என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் அம்மா அப்பாவை விட்டுக்கொடுக்க முடியாது இல்ல. ஊர்லயும் மெட்ராஸ்லயுமா மாத்தி மாத்தி இருந்துட்டு இருந்தேன்.
ஓரளவுக்கு சின்ன சின்ன சப்கான்ரக்ட் எடுத்து மாசம் ஒரு ஏழாயிரம் எட்டாயிரம் அளவுக்கு வருமானம் கொண்டுவரதுக்குள்ள எனக்கு முப்பது வயசு ஆயிடுச்சு. அப்ப ஜனாவோட சம்பளம் கிட்டத்தட்ட இருபத்தஞ்சாயிரம்.
ஏன்னா, உன்னோட சித்தப்பா எம்காம் படிச்சு முடிச்சு சர்வீஸ் கமிஷன் எழுதி அவனுக்கு கவர்மெண்ட் வேலையும் உடனே கிடைச்சுது. அந்த வேலை பர்மனென்ட் ஆக, ஊருக்கு பக்கத்துலயே போஸ்டிங் போட அப்படி இப்படினு பிடிக்க வேண்டியவங்களை பிடிச்சு தாத்தா நிறைய பணத்தையும் செலவழிச்சார். கொஞ்சம் ஏமாந்தார்னு கூட சொல்லலாம்.
ஸோ சித்தப்பா லைஃப்ல ரொம்ப சீக்கிரமாவே கம்பர்டபுளா செட்டில் ஆகிட்டான்.
இந்த சூழ்நிலையில் தான் அடுத்த பிரச்சினை ஆரம்பம் ஆச்சு.
அது என்ன பிரச்சனைன்னு தெரியுமா? வேற ஒண்ணும் இல்ல கல்யாணம்தான்!
இப்ப இருக்கிற மாதிரி செட்டில் ஆனதுக்கப்பறம் கொஞ்சம் லேட்டா மேரேஜ் பண்ணிக்க ஊர் பக்கமெல்லாம் விடவேமாட்டாங்க. சொல்லப்போனா ஆம்பள பிள்ளைகளுக்கு பதினெட்டு பத்தொன்பது வயசுக்கெல்லாம் கல்யாணம் செஞ்சு வெச்சிடுவாங்க. பசங்களுக்கே இப்படின்னா பெண்பிள்ளைகளை பத்தி நினைச்சு பாரு? பதினாறு வயசை தாண்டவே விடமாட்டாங்க. அதனால படிக்கவைக்கவும் மாட்டாங்க.
ஸோ, முப்பது வயசுக்காரனுக்கு பொண்ணு கிடைக்கறது ரொம்பவே கஷ்டம்.
இப்ப ஒரு விஷயம் சொல்லப்போறேன். உண்மைய சொல்லனும்னா, அது உங்க அம்மாவுக்கே கூட தெரியாது" என அவர் ஓரக்கண்ணால் தாமரையைப் பார்த்துக்கொண்டே சொல்ல, அவர் சொன்ன விதத்தில் அப்படி ஒரு ஆர்வம் துளிர்த்தது தாமரைக்கு. ஹாசினிக்குமே.
"அது என்னப்பா?"
"உங்க ரூபா சித்தி இருக்கா இல்ல? அவ என் மாமா பொண்ணுதான?"
"ம்ம்..."
"முதல்ல அவளை எனக்கு கட்டிக்கொடுக்கறதாதான் பேச்சு"
"ஐயோ!" என ஹாசினி பதற, ஈயாடவில்லை தாமரையின் முகத்தில்.
"சாரி தாமர, எனக்கு விருப்பம்னும் இல்ல, விருப்பம் இல்லன்னும் இல்ல" என உண்மையான வருத்தத்துடன் சொன்னவர் தொடர்ந்தார்.
"நான் எஞ்சினியரிங் படிச்சிருந்த ஒரே காரணத்துக்காக அவளை பி.எஸ்.சி ஹோம் சயின்ஸ் படிக்க வெச்சாங்க. நான் மனசு மாறி கவர்மெண்ட் வேலைக்கு போவேன்னு அவங்களோட எதிர்பார்ப்பு. கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பார்த்தாங்க. அவளுக்கு இருபத்தி மூணு வயசு ஆகவும், அவங்க பொறுமை காத்துல போயிடுச்சு. அவ ஜாதக படி அந்த தைலயே முடிக்கணும் அது இதுன்னு பேசி, கடைசியில சின்னவனுக்குன்னா பொண்ணு கொடுக்கறேன், இல்லன்னா வெளியில பார்த்துக்கறேன்னு மாமா திட்டவட்டமா சொல்லிட்டாங்க. ரூபாவுக்கும் அதே எண்ணம்தான்.
அம்மாவால தம்பி மகளை விட்டுக்கொடுக்க முடியல. அதாவது ஒரு மருமகள அசல்ல எடுத்தாலும் ஒரு மருமகளாவது தம்பி மகளா இருக்கணும். அப்பத்தான் கடைசி காலத்துல நம்மள உட்கார வெச்சு செய்வான்னு அவங்களுக்கு ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை.
அதனால அதுக்கு சம்மதிச்சாங்க வேண்டியதா போச்சு. வேற வழி இல்லாம எனக்கு வெளியில பொண்ணு தேட ஆரம்பிச்சாங்க. பிஸினஸ்ன்னு சொன்னதும் எவனும் பொண்ணு கொடுக்க தயாரா இல்ல.
நான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னாலும், எனக்கு முடிக்காம சின்னவனுக்கு முடிக்கவும் அவங்களுக்கு மனசு வரல. அதுக்கும் சேர்த்து வெச்சு என் உயிரைத்தான் எடுத்தாங்க.
தேடு தேடுன்னு பெண்ணை தேடி, கூட்டிட்டு போய் பதினாறு வயசுலயும் பதினேழு வயசுலயும் இருக்கற பெண்ணை காட்டினாங்க" என அவர் சொல்லிக்கொண்டிருக்க, "ஐயோ" என பதறினாள் ஹாசினி. தாமரைக்குமே 'ஐயோ' என்றுதான் இருந்தது.
"இதுல அதிர்ச்சி ஆக என்ன இருக்கு. பணம் காசு இல்லாத கொடுமை, பொண்ணுக்கு கல்யாணம் முடிச்சு அனுப்பினா போதும்னு சம்மதிச்சிருப்பாங்க. நானும் படிப்பறிவில்லாம ஊரோட இருந்திருந்தா வாயை மூடிட்டு அந்த பொண்ணுங்கள்ள ஒருத்தியத்தான் கட்டிட்டு இருந்திருப்பேன், இதெல்லாம் அங்க சகஜம். மாட்டை பிடிச்சி கொடுக்க கூட கொஞ்சம் யோசிப்பாங்க. ஆனா பெண்ணை கட்டிக்கொடுக்க யோசிக்கவே மாட்டாங்க. இப்ப கூட இதெல்லாம் அங்கங்க நடந்துட்டுதான் இருக்குன்னு சொன்னா நீ நம்பக்கூட மாட்ட" என விளக்கம் கொடுத்தவர்,
"ஆனா எனக்கு மனசாட்சி இடம் கொடுக்கல. வீட்டுக்கு வந்து வேண்டாம்னு சொன்னா, தாத்தா வானத்துக்கும் பூமிக்குமா தையாத்தக்கான்னு குதிப்பார். பாட்டி அழுது புலம்புவாங்க. ஐப்பசி கார்திகைல எனக்கு முடிச்சா, ஜனாவுக்கு தைல முடிக்க ஈஸியா இருக்கும் இல்ல. அந்த பதைபதைப்பு அவங்களுக்கு
இதுக்கு நடுவுல ஒரு கல்யாணத்து போயிருந்த இடத்துல அந்த ஷண்முகத்தோட தங்கை அதான் என் சித்தப்பா மகன் மாணிக்கம் கட்டியிருக்கானே அந்த பொண்ணு, அவளை போய் எனக்கு பொண்ணு கேட்டு, அவனோட அப்பாவும் அவனுமா சேர்ந்து, 'படிச்ச படிப்புக்கு ஒழுங்கா ஒரு வேலை தேடிக்காம ஊர் ஊரா சுத்திட்டு இருக்கான், இவனெல்லாம் எங்க உருப்பட போறான், அது புரிஞ்சுதான உன் சொந்த மச்சானே உன் மூத்த மகனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான். நாங்க என்ன இளிச்சவாயனுகளா'ன்னு கேட்டு ரொம்பவே ரசாபாசம் ஆகி அவமானப்பட்டு வீட்டுக்கு வந்தாங்க.
அன்னைக்குனு பார்த்து நான் ஊர்ல இருக்கவும், உன் தாத்தா என்னை நல்லா வெச்சு செஞ்சாங்க.
'ஊர்ல இருக்கறவன் ஆயிரம் பேசுவான். என் பிள்ளை சீக்கிரமே நல்ல நிலைமைக்கு வந்துடுவான்னு நீங்கதான் அவனுங்க வாயை அடைச்சிட்டு வந்திருக்கணும். உங்களுக்கே என் மேல நம்பிக்கை இல்லை. அதான் இப்படி பேசறீங்க'ன்னு சொன்னதுக்கு, 'நம்பர அளவுக்கு நீ என்ன செஞ்சு கிழிச்ச?'ன்னு கேட்டாங்க. என்ன செஞ்சு கிழ்ச்சிருக்கேன்னு எனக்கே இன்னைக்குத்தான புரியது. அன்னைக்கு நிலைமைக்கு அவருக்கு என்ன சொல்லி என்ன புரியவெச்சிருக்க முடியும் சொல்லு என்னால?
'நீ இருக்கற இருப்புக்கு உனக்கு என்ன உலக அழகியா கிடைப்பா? உனக்கு பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ அடுத்ததா நான் பார்த்து முடிவு பண்ற பொண்ணு கழுத்துல நீ தாலி கட்டியே ஆகணும். இல்லனா நான் பூச்சி மருந்தை குடிச்சிட்டு ஒரேயடியா போய் சேர்ந்திடறேன்'ன்னு ஆடி தீர்த்துட்டார். அன்னைக்கு தேதிக்கு கொஞ்ச நஞ்ச அவமானப்படல ஹசி நான். இனிமேல் ஊருக்கே வரக்கூடாதுன்னு நினைக்கற அளவுக்கு எனக்கு சீச்சீன்னு வெறுத்து போச்சு. ஆனாலும் பாசம் பந்தம் யாரை விட்டது, அவர் 'வா'ன்னு கூப்பிட்டதும் மனசு கேட்காம ஓடி வரத்தான் செஞ்சேன்.
அப்பதான் லோகு சித்தப்பா மூலமா உங்க அம்மா ஜாதகம் வந்து பொருந்தியும் இருந்துது. மெட்ராஸ்ல இருந்து என்ன ஊருக்கு வரவெச்சு, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிதான் பெண் பார்க்க கூட்டிட்டு போனாங்க. அவளுக்கு இருபத்தி நாலு வயசுங்கறத தவிர அவளை பத்தின எந்த ஒரு டீடைலும் எனக்கு தெரியவே தெரியாது. அதனால பொண்ணுக்கு என்ன குறையோன்னுதான் தோணிச்சு.
அவங்க அப்பாவை கொண்டு அவளுக்கு கல்யாணம் தள்ளிப்போயிருக்கும்னு அங்க போன பிறகுதான் எனக்கு புரிஞ்சுது.
அந்த நேரத்துல கல்யாணத்தை பத்தி எனக்கு பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்ல. ஆனா ரூபா சித்தி மாதிரி அந்த பொண்ணு ஒரு டிகிரியாவது முடிச்சிருக்கணும். அவ காலேஜ் போனதால சுடிதார் போடுவா. அது மாதிரி சுடிதார் போட்டு கொஞ்சம் நாகரிகமா இருக்கனும். காரணம் என் தம்பி மனைவிக்கு என் மனைவி எந்தவிதத்துலயும் குறைஞ்சவளா இருக்க கூடாதுனு ஒரு தாட், அவ்வளவுதான். மத்தபடி அப்பா சொன்ன மாதிரி ஐஸ்வர்யா ராய் அளவுக்கெல்லாம் கனவு காண நான் ஒண்ணும் முட்டாள் இல்ல. ஆனா கோபுரங்கள் சாய்வதில்லை அருக்காணி மாதிரி மட்டும் இருக்க கூடாதுன்னு, ஒரு சின்ன லிஸ்ட் இருந்துது.
உங்க தாத்தா போட்ட கண்டிஷனுக்கு திக்...திக்குனு அங்க போய் பார்த்தால்… இந்த தாமரை!
பேருக்கு தகுந்த மாதிரி தாமரை மாதிரியே இவ்வளவு அழகா ஒருத்திய நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அதுவும் அவ டிகிரி முடிச்சிருக்கான்னு சொன்னதும் அவளை ரொம்பவே பிடிச்சுப்போச்சு. நான் க்ளீன் போல்ட்”
அவர் ரசனையுடன் சொல்லிக்கொண்டே போக, நியாயத்துக்கு தாமரை முகம் சிவந்திருக்கவேண்டும். அவர் அப்படிப்பட்ட ஒரு ஆசையுடன் தாமரையின் முகத்தைப் பார்க்க, அங்கே எள்ளும் கொள்ளும் வெடிக்க அவரை முறைத்துக்கொண்டிருந்தார் தாமரை.
'மகனே உண்மையிலேயே நீ க்ளீன் போல்டுதான் போ. பொண்ணு வாழ்க்கையை சரி செய்யறேன் பேர்வழியேன்னு பழசையெல்லாம் குடைஞ்சு சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்ட. இப்ப நீதான் உன் வாழக்கையை கோட்டை விடப்போற' என தன்னைத்தானே கடித்துக்கொண்டு, ஒரு பீதியுடன் மனைவியை ஏறிட்டார் கருணாகரன்.
****************
அத்தியாயம்-25