மோனிஷா நாவல்கள்
KPN'S POOVUM NANUM VERU - 5
Quote from monisha on March 28, 2022, 7:07 PMஇதழ்-5
மகளுடைய கண்ணீரைக் கண்டு இளகிய மனதை வெளிக்காண்பிக்காமல், வசுந்தராவின் அம்மாவுடைய பார்வை அந்த அறையின் வாயிலில் நிலைக்க, "அப்பா ஆட்டோக்கு பணம் கொடுத்துட்டு வருவாங்கம்மா!" என வசுந்தரா சொல்லிக்கொண்டிருக்க, அப்போதே அங்கே வந்தார் ராகவன்.
கணவரைப் பார்த்ததும், அவருடைய கண்கள் அவரை உச்சி முதல் பாதம் வரை கனிவுடன் எடைபோட, "நான் நல்லா இருக்கேன் கலை! வசும்மா என்ன நல்லா கவனிச்சுக்கறா! நீ ஏன் இப்படி பிடிவாதம் பிடிச்சு எங்களை வேதனை படுத்தற?" என அவர் கேட்க,
"இவளுக்கு நீங்க ஏன் இன்னும் மாப்பிளை பாக்கல? சீக்கிரம் கல்யாணம் செய்து கொடுத்துட்டா நாம நிம்மதியா இருக்கலாம் இல்ல?" என அவர் தழுதழுத்த குரலில் சொல்லவும், எழுந்து நின்றவள், ராகவன் பதில் சொல்வதற்கு முன்பாக, "மா! ஏன் மா இப்படி பண்றீங்க? எனக்கு உங்க ரெண்டு பேரையும் நல்லபடியா வெச்சிருந்ததாலே போதும். தனிப்பட்ட வாழ்க்கைனு ஒண்ணை நான் கற்பனைல கூட நினைச்சு பாக்கல. அதனால இதை பத்தின பேச்சே வேண்டாம்" சொல்லும்போதே மனதிற்குள் முணுமுணுவென எழும் வலியை தடுக்கமுடியாத இயலாமையுடன் சொல்லி முடித்தாள் வசுந்தரா, பிடிவாதத்துடன். விட்டுக்கொடுக்காமல், "என் கடமையை முடிச்சாதான் மரணம் கூட என்னை நெருங்கும் போல இருக்கு; நீ சம்மதிக்கலைனா எனக்கு ட்ரீட்மெண்ட், சாப்பாடு ஒரு மண்ணும் வேணாம்; இப்படியே என் உயிர் போகட்டும்" என அவர் திண்ணமாகச் சொல்ல, "எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல; நான் என் வேலையை விட்டுட்டு உங்களையும் வீட்டுக்கே கூட்டிட்டு போயி பார்த்துக்கறேன்; என்ன வேணா நடக்கட்டும்" என வசு மேலும் பிடிவாதமாக பேச, "கலை! திடீர் திடீர்னு நீ என் இப்படி பிஹேவ் பண்ற! நல்ல காலம் வந்தால் நாம தடுத்தாலும் எதுவும் நிக்காது.
வசுவை அவ போக்குல விடு; இல்லனா உள்ளதும் கெட்டு போயிடும்" எனச் சொன்னவர், "அவ ஏன் இப்படி பேசறான்னு உனக்குப் புரியலையா; இல்ல நான் அவளுக்கு நல்லது செய்வேன்னு உனக்கு நம்பிக்கை இல்லையா?" எனக் கேள்வியுடன் முடித்தார் ராகவன்”.
"எதையும் நேருக்கு நேர் சந்திச்சுதானே ஆகணும். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே தள்ளிப்போட்டுட்டு போக முடியும்" என கலை ஆற்றாமையுடன் பதில் கேள்வி எழுப்பவும், "எல்லாத்துக்கும் ஒரு நேரங்காலம் வரணும் இல்ல கலை? கொஞ்சம் புரிஞ்சிக்கோம்மா!" என்ற ராகவன், "அந்த பையன் நம்ம வீட்டுக்கே வந்தான் கலை" என்றார் ஆச்சரியம் கலந்த குரலில்.
அமைதியாகப் பார்வையை வேறு புறம் திருப்பிய மகளைக் கேள்வியாகப் பார்த்துக்கொண்டே, "எந்த பையன்?" எனக் கேட்டார் கலை.
"அதான் மா அந்த சரிகாவோட அண்ணன்!" என அவர் சொல்லவும், பதட்டம் அடைந்தவராக, "கடவுளே! அவன் இங்கயா இருக்கான்? எப்படி நம்ம அட்ரஸ் கண்டுபிடிச்சு நம்ம வீட்டுக்கு வந்தான்? எதாவது பிரச்சனை பண்ணானா?" என கலை கேள்விகளாகக் அடுக்கவும், "பயப்படற அளவுக்கு ஒண்ணும் இல்லை கலை! அவன் எங்க ரெண்டு பேரையும் நேரில் பார்த்ததில்லை இல்ல; அதனால எங்களை அடையாளம் கண்டுபிடிக்கல; பதட்டப்படாதே!" என்ற ராகவன் அனைத்தையும் சொல்லி முடித்தார்.
"தீபன் ரொம்ப நல்ல பிள்ளைங்க; அதனாலதான் இந்த ஏழு எட்டு வருஷத்துக்குள்ள இவ்வளவு பெரிய நிலைமைக்கு வந்திருக்கான்!" என மனதார சொன்னவர், "அந்த படுபாவி திவாகர் இன்னும் திருந்தல பாருங்களேன்! இன்னும் பாவம் செஞ்சிட்டு உயிரோட நடமாடிட்டு இருக்கானே!
இந்த மாதிரி பிள்ளைகளை பெத்த வயித்தை கிழிச்சுக்கலாம்!" என விரக்தியுடன் தழுதழுத்தார் கலை.
"ப்ச்! இப்ப எதுக்கு இந்த பேச்சு! அவன் ஆட்டத்துக்கு முடிவு கட்ட ஒருத்தன் வருவான். அது அந்த தீபனா கூட இருக்கலாம் யார் கண்டது;
அன்னைக்கு அவன் தீபனை பார்த்து என்ன பம்மு பம்மினான் தெரியுமாம்மா?" எனச் சொன்னாள் வசுந்தரா. சொல்லும் பொழுதே அவளுக்குச் சிரிப்பும் வந்துவிட, மகளுடைய முகத்தில் தோன்றிய பிரகாசத்தில் தம்மைத் தொலைத்தனர் அந்த பெற்றோர்.
பின்பு, "பாரதி மேடம் கூட இப்ப இங்கதானே இருகாங்க; நாம விட்டால் கூட வசுவை அவங்க விட மாட்டாங்க. எப்படியும் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வெச்சுடுவாங்க கலை.
இனிமேல் இப்படி பிடிவாதம் பிடிக்காத; அந்த நர்ஸ் பொண்ணுக்கு கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணு.
நீ இங்க நல்லபடியா இருக்கற தைரியத்துலதான் நம்ம பொண்ணு அவ வேலையை நிம்மதியா பாக்கறா; புரிஞ்சிக்கோ!
சண்டே அன்னைக்கு மறுபடியும் வறோம்" என்று சொல்லிவிட்டு, சம்மதமாக அவர் தலையை ஆட்டவும் அங்கிருந்து கிளம்பினர் தந்தை மகள் இருவரும்.
***
"எழுநூத்தி அம்பது கோடியை அடிச்சிருக்கான்பா அந்த டீ.பீ! என்ன திமிரு இருக்கணும்! அவன் மட்டும் என் கையில கிடைச்சான்; செத்தான்!" என கண்மண் தெரியாத கோபத்தில் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்துக்கொண்டிருந்தான் திவாகர். அவனது கோபத்திற்கு இணையான ஆத்திரம் உள்ளுக்குள்ளே கனன்றுகொண்டிருந்தாலும் அதை வெளிக் காண்பிக்காமல் இறுகிப்போய் உட்கார்ந்திருந்தார் புஷ்பநாதன்.
"இந்த அஞ்சு வருஷத்துக்குள்ள, இதோட இப்படிப் போனது கிட்டத்தட்ட மூவாயிரம் கோடி! எல்லாமே கணக்குல வராம சுவிஸ் அக்கௌண்ட்ல போட்டுவெச்சிருக்கும் ப்ளாக் மணி! கம்ப்ளைண்ட் பண்ண கூட முடியல! இன்னும் எவன் எவனெல்லாம் இப்படிப் பணத்தை தொலைச்சிருக்கானோ ஒண்ணுமே தெரியல!" எனத் திருடனுக்குத் தேள் கொட்டிய வலியில் தவித்தவனாக வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டிருந்தான் திவாகர்.
"என்ன செய்யற்துனே புரியலையே திவா! எத்தனை தடவ நம்ம அகௌண்ட்ட மாத்திட்டோம்! பேங்க்க மாத்திட்டோம்! எந்த பேங்க் காரனும் ரெஸ்பான்சிபிலிட்டி எடுக்கமாட்டேங்கறானே. அந்த டீ.பீ எங்க இருந்து ஆபரேட் செய்யறான்னே கண்டுபிடிக்க முடியலியே.
அந்த பணத்தை அவன் டிரான்ஸ்ஃபர் பண்ற அக்கௌன்ட்டை ட்ரேஸ் பண்ணா அது எங்க எங்கயோ போய் கடைசியில நம்ம கிட்டேயே வருது!
அவன் யாரா இருக்கும்! ஏன் நம்மள வெச்சு செய்யறான்?" என ஆற்றாமையுடன் கேட்டார் நாதன்.
அவருடைய எந்த ஒரு கேள்விக்கும் அவரது மகனிடம் பதில் இல்லை. இயலாமையில் உண்டான கோபம் மட்டும் விஞ்சி இருந்தது அவனிடம்.
அதற்குள் அவருடைய காரியதரிசி தயக்கத்துடன் அவரை நெருங்கி, மெல்லிய குரலில் அவரிடம் ஏதோ சொல்லி அவரது கைப்பேசியைக் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து விலகிவிட, முகம் கடுகடுக்க அதை வாங்கி அவரது இளைய மகன் செய்த லீலையைப் பார்த்தவர், எழுந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல், அவரது மிகப்பெரிய மீசை துடிக்க, உதடுகள் வசை மாரி பொழிய கைப்பேசியைத் தூக்கி எறியவும் அது அக்குவேறு ஆணி வேறாக உடைந்துச் சிதறியது.
'இன்னும் என்ன புது பிரச்சினை?!' எனத் தந்தையை ஏறிட்டான் திவாகர்.
முதலில் கெட்ட கெட்ட வார்த்தைகளால் ஜவஹரை ஏசியவர், "அந்த பொர...க்கு! எப்பவும் செய்யற மாதிரி நேத்து ராத்தித்திரி தண்ணி அடிச்சிட்டு, நடுரோட்டுல போலீஸ்கரனுங்க கிட்ட தாறுமாறா நடந்துட்டு இருக்கான்! அவனுங்களும் இவனை ர்ர்ர்...ரொம்ப மரியாதையா நடத்தி அங்க இருந்து அனுப்பிவெச்சுட்டானுங்க!
அதோட முடிஞ்சிருக்கணும்!
ஆனா அதை ரகசியமா வீடியோ எடுத்து, 'டீ.பீ லீக்ஸ் ஹாஷ்டாக்' போட்டு அதை எல்லா சோசியல் மீடியலையும் வைரலாக்கிவிட்டிருக்கானுங்க.
இதை சரிசெய்யறதுக்குள்ள நம்ம தாவு தீர்ந்துடும்!" என சொல்லி தலையில் அடித்துக்கொண்ட புஷ்பநாதன் "ஏய் லலிதா! எங்கடி நீ ரெண்டாவதா பெத்த அமேசான் காட்டுல் இருக்க வேண்டிய அனக்கோண்டா!" எனக் கர்ஜித்தார், மூத்த மகன் ஏளனத்துடன் பார்த்த பார்வை பொறுக்கமுடியாமல்.
**********
சரியாக அதே நேரம், அவர்கள் வழக்கமாகச் செல்லும் க்ளப்பின் பாரில் உட்கார்ந்திருந்தனர் தீபன் மற்றும் திலீப் இருவரும்.
"என்ன மச்சான்! வீக் டேஸ்ல சரக்கடிக்கக் கூப்பிட்டிருக்க; அதுவும் மத்தியான நேரத்துல!" என நண்பனை வினோதமாகப் பார்த்துக்கொண்டே திலீப் கேட்க,
"ஒரு பெரிய டீல் முடிச்சிருக்கேன்; ஸோ... ர்ர்ர்ரொம்பவே ஹாப்பியா இருக்கேன்டா மச்சான்! அதை செலப்ரெட் பண்ணத்தான்" என்றான் தீபன் உல்லாசம் பொங்க.
"நான் என்னவோ உனக்கு வீட்டுல பொண்ணு கிண்ணு பார்த்து பிக்ஸ் பண்ணிட்டாங்களோன்னு ஒரு நிமிஷம் குதூகலமாயிட்டேன்! அது என்ன மச்சான் எனக்குத் தெரியாத பெரிய டீலிங்!" என திலீப் ஆர்வத்துடன் கேட்க,
அதில் ஒரு நொடி முகம் இறுகியவன் தன்னை சமாளித்துக்கொண்டு, "ஃபர்ஸ்ட் டைம் ஆன் லைன் பிசினஸ்ல ஒரு பெரிய அமௌன்ட் இன்வெஸ்ட் பண்ணி இருக்கேன். அதுதான்!" எனச் சொல்லிக்கொண்டே, மதுக்கோப்பையைக் கையில் எடுத்தவன், அதை ருசிக்கத் தொடங்கவும்,
"பார்த்தியா டீப்ஸ்! அந்த மினிஸ்டர் பையனோட வீடியோ ஒண்ணு லீக் ஆகி இருக்கு! அந்த போலீஸ்காரங்க எல்லாரும் எப்படி பொறுத்துட்டு போறாங்கன்னே புரியல மச்சி!" என ஜவஹரை பற்றி திலீப் குறிப்பிட, "யா! யா! நானும் பார்த்தேன்! அந்த போலீஸ் அபிஷியல்ஸ் எல்லாரும் பொறுமையா டீல் பண்ணிட்டு இருக்காங்களேன்னு எனக்கும் கொஞ்சம் நெருடலாத்தான் இருந்தது.
பட் அதுல ரெண்டு பேர் பணத்துக்காக பொறுத்து போனாலும், ரெண்டு பேர் வேற வழி இல்லாமதான சகிச்சிட்டு இருந்திருப்பாங்க.
அப்படி பட்ட ஒருத்தர்கிட்ட சமயம் பார்த்து அவன் மாட்டணும், உறிச்சி தொங்க விட்றுவாங்க! அன்னைக்கு பார்க்கணும் அவன் முகத்தை!" என்றான் தீபன் அழுத்தமாக.
அப்பொழுது அவனது கைப்பேசி ஒலிக்கவும், அதில் பாரதியின் பெயரைக் கண்டவன் அழைப்பை ஏற்று, "சொல்லுங்க மேம்!" என்றான் தீபன் மிகவும் பணிவுடன்.
எதிர்முனையில், "தீபா! உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்! வீட்டுக்கு வா! அட் ஒன்ஸ்!" என்று கட்டளையாக சொல்லிவிட்டு, பதிலுக்குக் கூட காத்திருக்காமல் அழைப்பைத் துண்டித்தார் பாரதி.
யோசனையுடன் சில நிமிடங்களைக் கடந்தவன், "திலீப்! உங்க சித்திதான் என்னை உடனே வரச் சொல்லி கூப்பிடறாங்க! என் கூட அவங்க வீட்டுக்கு வரியா?" என தீபன் கேட்கவும், பதறியவனாக, "டேய்! ரெண்டு மூணு ரவுண்டு உள்ளே போயிருக்கு!
எங்க அம்மாவால இதெல்லாம் கண்டுபிடிக்கவே முடியாது; இருந்தாலும் இந்த நிலைமையில அவங்க முன்னால கூட நான் போக மாட்டேன்!
நீ என்னடான்னா சிங்கத்தோட குகைக்குள்ள இல்ல கூப்பிட்ற!
அவங்க என்னை பிரிச்சி மேஞ்சிடுவாங்க; ஆளைவிடு" என திலீப் பின்வாங்க, அப்பொழுதுதான் உணர்ந்தான் தீபன் தானும் அதே நிலையில் இருப்பதை.
பாரதி எப்படியும் அவனை அழைப்பார் என்பது அவனுக்குத் தெரியும். வாரத்தின் வேலை நாளாய் இருப்பதால் மாலையில்தான் அழைப்பார் என எண்ணியிருந்தான் அவன்.
ஆனால் அவர் மதியமே அழைக்கவும், என்ன செய்வது என யோசித்தவன், திலீப்பை அங்கிருந்து அனுப்பிவிட்டு, அங்கேயே இருக்கும் காட்டேஜ் ஒன்றில் அவசர அவசரமாகக் குளித்து, உணவை அங்கேயே வரவழைத்துச் சாப்பிட்டவன், சுவையூட்டப்பட்ட சோம்பை ஒரு பிடி வாயில் போட்டு மென்றவாறு, அவனது காரில் இருந்த அவனுடைய வாசனைத் திரவியத்தை அதிகப்படியாக ஸ்பிரே செய்துகொண்டு, திலீப் சொன்னதைப்போலச் சிங்கத்தைச் சந்திக்க அதன் குகைக்குச் சென்றான் தீபன்.
அவன் வீட்டின் உள்ளே நுழையவும், "வா தீபன் உட்காரு!" என அவனை உபசரித்த பாரதி, அவன் சற்று தள்ளி எதிரே போடப்பட்டிருக்கும் இருக்கையில் போய் அமரவும், அவனைக் கூர்மையுடன் அளவிடும் ஒரு பார்வை பார்த்தவர், "ரயிலம்மா! எனக்கு எதுவும் வேணாம்! தம்பிக்கு மட்டும் லெமன் ஜூஸ் எடுத்துட்டு வா!" எனச் சமையல் செய்யும் பெண்மணியைப் பணித்தவர், தொடர்ந்து, "எப்பவும் உரிமையா என் பக்கத்துலதான உட்காருவ! இன்னைக்கு ஏன் அங்க?" எனக் கேள்வி கேட்டு அவனை அதிரவைத்து, அவனது பதிலுக்குக் காத்திருக்காமல், "தீபன்! உன் ஆக்டிவிடீஸ் எல்லாமே எனக்குத் தெரியும். அது உனக்கும் தெரியும்.
என்ன இருந்தாலும் என் பேரை வெச்சுதான நீ இதையெல்லாம் செய்யற?
அதுக்காகவாவது என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யணுமா வேண்டாமா?
நீ ரொம்ப ஸ்மார்ட்ன்னு எனக்கு தெரியும்! அதுக்காக நீ இதை அடிக்கடி என்கிட்ட நிரூபிக்க வேணாம்!" என இலகுவாகச் சொல்வதுபோலவே சொன்னார் பாரதி. ஆனாலும், "எனக்குத் தெரியாமல் ஏன் இப்படி செஞ்ச?' என்ற குற்றச்சாட்டும் அதில் அடங்கியே இருந்தது.
ரயிலம்மா எலுமிச்சை சாற்றை அவனிடம் நீட்டவும் அதை கைகளில் எடுத்துக்கொண்டவன்,
"மேம்! அவனுங்க தேவை இல்லாம என் விஷயத்தில் தலையிடறானுங்க! என்னால சும்மா கையை கட்டிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியல!" என தீபன் அழுத்தமாகச் சொல்லவும், அதற்கு ஏதும் சொல்லாமல், "முதல்ல இந்த ஜூஸை குடி! உச்சியில ஏறி இருக்கும் பித்தம் கொஞ்சம் இறங்கும்!" என போதை என்பதை பித்தம் என மாற்றி நக்கலாக பாரதி சொல்லவும், அந்த வார்த்தை 'சுரீர்' என உறைக்க, 'ப்பா! டேஞ்சரஸ் பார்ட்டி! இவங்க கிட்ட இன்னும் உஷாரா இருக்கணும்' என மனதில் எண்ணியவனாக, அவரை முறைத்துக்கொண்டே அதைப் பருகினான் தீபன்.
அவனுடைய பார்வையைக் கண்டு எழுந்த சிரிப்பை அடக்கியவராக, "ஆனா அவசரப்பட்டுட்ட தீபன்! இன்னும் ஒன் ஆர் டூ மந்த்ஸ் வெயிட் பண்ணியிருந்தால் தௌசண்ட் சீ..க்கு மேல கிடைச்சிருக்கும்.
நம்ம வேற பிளான் வெச்சிருக்கும்போது, இந்த நேரத்துல தேவை இல்லாம அந்த பையன வேற மாட்டி விட்டிருக்க!" என அவர் நிதானமாய் விளக்கவும்,
"மேம்! அவனுங்க அடங்கவே மாட்டானுங்க! என்னை சீண்டினா சும்மா விடுவேனா?" என தீபன் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்கவும்,
"அவன் உன்னைச் சீண்டினானா தீபன்! அது எப்ப?" என பாரதி ஒரு ஆழமான பார்வை பார்த்துக்கொண்டே அவனிடம் கேட்க, அவன் மௌனம் காக்கவும், "அவன் வசுந்தராவ டிஸ்டர்ப் பண்ணது உனக்கு பிடிக்கல; அதுதான?" என விஷயத்தின் ஆணி வேரை அறிந்து, உச்சியில் ஆணி அடிப்பதுபோல் நேரடியாகவே கேட்டுவிட்டார் Dதிவ்யாBபாரதி.
என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் திகைத்துப்போனான் தீபப்பிரகாசன்.
இதழ்-5