மோனிஷா நாவல்கள்
Maranthu ponathum ini marakamal irupadhum
Quote from bhagyasivakumar on March 27, 2020, 3:22 PMhi friends this is your bhagya sivakumar.
இன்னைக்கு என்ன பேசப்போறன் அப்படினா...சமீபமாக நாம் பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கும் கொரனா பற்றி தான்.
இதை பற்றி நிறைய வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கில் நிறைய படிச்சிருப்பிங்க ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால் எந்த ஒரு வைரஸ் என்றாலும் அதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது தான்..
கண்ணுக்கு தெரியாத கிருமிகளை தான் நாம் வைரஸ் என்று குறிப்பிடுகிறோம். பொதுவாக நமக்கு ஏற்படும் சளித்தொல்லை மற்றும் காய்ச்சல் எல்லாம் சில நேரங்களில் வைரஸ் மூலமே வருகிறது. இதற்கு காரணம் நாம் சுத்தமற்று இருக்கும் சூழல்கள் தான். தற்போது அடிக்கடி கையை கழுவுதல் நல்லது என்று கூறுவது எதற்கு உங்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள தான். கண்களுக்கு தென்படாத கிருமிகள் நம் கைகளிலிருந்து வாய்வழியோ மூக்கு வழியோ சென்றடைவதை தடுக்கவே அடிக்கடி கையை சோப்பு மூலமாகவோ அல்லது ஹேண்ட்வாஷ் லிக்விட் மூலமாகவோ கைகளை கழுவ வேண்டும்.
முக்கியமாக கழிவறை சென்றுவந்த பின்னோ , சாப்பிடுவதற்கு முன்னோ , வெளியே பயணித்து விட்டு வந்தாலோ கழுவுதல் வேண்டும்.இந்த கைக்கழுவும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருப்பது நல்லது. அக்காலத்தில் வெளியே சென்று வந்தால் வீட்டில் நுழைவதற்கு முன்பே வெளியே இருக்கும் தண்ணீர் அண்டாவிலிருந்து தண்ணி மொண்டு கால்களை கழுவிட்டு வருவார்கள். பிறகு கோவிலுக்கு செல்லும் போது நுழைவாயிலில் இருக்கும் குழாயில் காலை அலம்பிட்டு தான் கோவிலை சுற்றவே செல்கிறோம். இது அக்காலத்தில் வழக்கமாகவே கொண்டு செயல்பட அந்த பழக்கம் அவர்களுக்கு வெகு சுலபமாக பழக்கமாயிற்று. ஆனால் இன்றோ அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் படி ஏறி அல்லது லிப்டில் ஏறியவுடன் கதவை திறந்தால் நேராக முற்றத்தை தான் பார்க்க முடிகிறது. அதிலும் கழிவறை நாம் உறங்கும் படுக்கையறையோடு ஒட்டியிருக்க அது இன்னும் உடலுக்கு கேடுதான் விளைவிக்கிறது . பழைய காலத்தில் வீட்டின் பின்புறம் தான் கழிவறை இருக்கும். காரணம் அது வீட்டினுள் வைப்பது அசுத்தம் தான்.
பிறகு சமையல் செய்வது கூட அக்காலத்தில் சுகாதாரமான இடத்தில் தான். சமையலறை என்பதே இரண்டு கட்டு தள்ளி சென்றால் தான் ... அதனால் தான் அக்காலத்தில் சமையல் கட்டு என்பார். ஆனால் தற்போது இதற்கு பெயர் சமையலறை...அது கூட சொல்ல முடியாது..வீட்டில் ஒரு தடுப்பு சுவர் தான் சமையல் செய்யும் இடமே. அதுவும் குளியலறை பக்கத்திலே . ..
சமையல் என்று சொல்லும் போது மஞ்சள் பற்றி சொல்லியே ஆகனும்.
மஞ்சள் நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய பொருளாக கருதப்படுகிறது. இதை அரிணம் என்றும் பீதம் என்றும் குறிப்பிடுவர். இது 60 முதல் 90 செ.மீ வரை வளரும் தன்மையைக் கொண்டது. இதில் curcumin என்ற வேதிப்பொருள் இருப்பதால் தான் நிறமும் மணமும் ஒருவித சுவையும் தருகிறது. ஆரம்பத்தில் இதை சமையலின் நிறத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இதை சித்த மருத்துவர்களால் அல்லது சித்த வைத்தியர்களால் கடைப்பிடித்து வந்த மருத்துவமுறையில் இதை பயன்படுத்தி வந்தனர்.
மஞ்சளில் பலவகைகள் உண்டு அதில் ஆலப்புழை வகை தான் மிகவும் சிறந்தது. கஸ்தூரி மஞ்சளோ சருமத்திற்கு பொலிவை தருகிறது. உணவிற்கு சேர்க்கும் மஞ்சளானது நல்ல நிறத்தையும் சுவையையும் தருகிறது. மஞ்சள் பொதுவாக "20'c வெப்பநிலையில் தான் நன்றாக வளரும். இதன் வேளாண்மைக்கு ஈரோடு பெயர்போனது.இதற்கு நல்ல நீர்பாசனம் தேவை.
விரலி மஞ்சள் தான் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் வகையாகும் . இது விரலைப்போல நீளமாக இருக்கும். இது தான் உணவில் உள்ள நச்சுக்களை அழிக்கும் சக்திகொண்டவையாகும்.மஞ்சள் ஒரு கிருமி நாசினி எனவே இதை பலவகையில் பயன்படுத்தி பயனடைவார்கள்.
ஏதேனும் கட்டி வந்துவிட்டால் மஞ்சள் எழைத்து பூசுவார்கள்,ஏதேனும் சளி இருமல் இருந்தால் பாலில் மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை கலந்து பருகுவார்கள். மூக்கடைப்பு மூக்கொழுவுதல் போன்றவற்றிற்கு மஞ்சளை சுட்டு முகர்ந்து கொள்வார்கள். இப்படி மஞ்சளை மருத்துவத்திற்காக பயன்படுத்தி வருகிறார்கள்.
கிழங்கு மஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள்,முட்டா மஞ்சள்,சடா மஞ்சள்...என பலவகைப்படும்
அக்காலத்தில் மஞ்சள் தேய்த்து குளிப்பதை பெண்கள் வழக்கமாக கொண்டு வந்தனர். தங்களது ஹார்மோன் சுரப்பிகளை சீராக வைத்துக்கொள்ள உதவியது. முகத்தில் முளைக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்கி முகத்திற்கு அழகு மற்றும் பொலிவை தந்தது. அதே சமயம் மஞ்சள் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.
இனிமேலாவது மஞ்சளை பயன்படுத்துவோம்.
....
தொடர்ச்சி அடுத்த பதிவில்..
hi friends this is your bhagya sivakumar.