மோனிஷா நாவல்கள்
Meendum Uyirthezhu - 20
Quote from monisha on August 23, 2022, 10:28 AM20
அரங்கநாதன் மருத்துவமனை
சங்க காலத்தில் தொண்டை நாட்டிற்குள் இருந்த நகரம் பின்னர் மெட்ராஸாக மாறி இப்போது சென்னை மாநகரம் என்ற பெயரில் விளங்கிக் கொண்டிருந்தது.
இன்றைய காலகட்டத்தில் இந்த உலகத்தையே வியாபாரம் தம் கயிற்றால் பம்பரமாய் சுழற்றிக் கொண்டிருக்க, மக்களும் அந்தச் சுழற்சியில் சிக்குண்டனர்.
சேவை என்ற வார்த்தைகள் எல்லாம் இன்றளவில் அர்த்தமற்ற ஒன்றாய் மாறி இருந்த நிலையில் வியாபார யுக்திகளோடு வேகமாய் சுழன்று கொண்டிருந்த சென்னை மாநகரத்தில் அமைந்திருந்த அரங்கநாதன் மருத்துவமனை இன்னும் அத்தகைய சேவை மனப்பான்மையோடு செயல்பட்டுக் கொண்டிருந்தது. எல்லோரையும் அதிசியக்க வைத்தது.
மூன்று தளங்களைக் கொண்ட அந்தப் பெரிய மருத்துவமனைக்கு வரும் பெரும்பான்மையானோர் எளிமையான தோற்றத்திலேயே காட்சியளித்தனர். அங்கே பலரும் வருவதும் போவதுமாய் எந்நேரங்களிலும் கூட்டம் சூழ்ந்தபடியே இருந்தது. அதன் பெரிய வாசல்புறத்தைத் தாண்டி உள்ளே சென்றால் நேரே பார்க்கும் திசையில் பெரிய வட்டநிற கடிகாரம் மணி பத்து என்று காட்டிக் கொண்டிருந்தது.
அங்கே காத்திருப்புக்கான இருக்கைகள் முழுவதிலும் ஆட்கள் அமர்ந்திருந்தனர். அதே சமயத்தில் பலரும் நின்றபடியும் காத்திருந்தனர். அதிலும் எல்லோருமே தங்கள் தோள்களில் குழந்தைகளை சுமந்து கொண்டிருக்க சிலரோ மடியில் அமர்த்திக் கொண்டிருந்தனர்.
அதிலும் நிறைய மழலைகள் தம் பெற்றோரின் பிடிக்குள் தங்காமல் அந்தக் காத்திருப்புக்கான இடத்தை விளையாட்டுத் தளமாய் மாற்றி ஓடியாடி கொண்டிருந்தனர். செவிலியர்கள் வெண்மை நிற உடையில் அங்கும் இங்கும் நடப்பதுமாய் இருக்க, அவர்களில் ஒருத்தி மருத்துவரைப் பார்க்க காத்திருப்போர்களை வரிசையாய் பெயரிட்டு அழைத்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தாள்.
அப்படி காத்திருந்த ஒரு பெண் செவிலியரின் அழைப்பை ஏற்று தன் மகனைக் கைகளில் பிடித்தபடி உள்ளே செல்ல, அங்கே இருந்த அறை கதவின் தங்க நிற பலகையில் கருப்பு நிறத்தில் டாக்டர் அர்ஜுன் குழந்தை நல மருத்துவர் என மின்னிக் கொண்டிருந்தது.
அந்த அறையின் கதவைத் திறந்து அந்தப் பெண் தன் மகனோடு உள்ளே செல்ல, தேஜஸ் நிறைந்த கண்களோடும், சிறு புன்னகையோடும் அர்ஜுன் அவர்களை தலையசைத்து வரவேற்றான்.
அவன் தன் இருக்கையில் கம்பீரத்தோடு அமர்ந்திருக்க, இளம் வயதினனாக இருப்பினும் அவனின் செயல்களில் ஒருவித முதிர்ச்சியும் அவன் தோற்றத்தைக் கண்டவுடன் பெரும் மரியாதையும் ஏற்படும் விதமாய் அமைந்திருந்தது.
அர்ஜுனின் முகத்தைப் பார்த்ததுமே அறைக்குள் நுழைந்த அந்தப் பெண்ணுக்கு ஒரு வித நம்பிக்கை பிறந்தது. அந்த சிறுவனோ பயந்தபடி அம்மாவின் கைகளைப் பற்றியபடி வந்தான்.
அர்ஜுனின் மேஜைக்கு அருகில் இருந்த இருக்கையில் அந்தப் பெண் அமர்ந்து தன் மகனின் உடல் நலக்குறைவு குறித்து விளக்கமாக உரைக்க, அவன் பொறுமையாகத் தலையசைத்து கேட்டபடி அந்தச் சிறுவனின் உடலைப் பரிசோதிக்க ஆரம்பித்தான்.
பின்னர் அர்ஜுன் புன்னகையோடு அந்தச் சிறுவனைப் பார்த்து,"உங்கப் பெயர் என்ன?!" என்று வினவ
"சரோ!" என்று மழலையாக உரைத்தான். அந்தப் பெண் உடனே "சரவணன்" என்று அந்தச் சிறுவனின் முழு பெயரை உரைத்தாள்.
அர்ஜுன் சரவணனை நோக்கி, "சரோக்கு என்ன ஆச்சு?!" என்று வினவ,
"சாக்லேட்ஸ் சாப்பிட்டேனா... அதான் வயிறு வலிக்குது" என்று அந்தச் சிறுவன் தான் செய்த தவறுக்கு ஒப்புதல் வாக்குமூலம் தர, அர்ஜுனின் இதழ்கள் அழகாய் விரிந்தது. அந்தப் புன்னகை பார்ப்பவர்களை தன் வசமிழுக்க கூடிய வல்லமை பொருந்தியதாக இருந்தது.
"சாக்லேட்ஸ் சாப்டீங்க... ஓகே... ஆனா சரோ சார் எத்தனை சாப்பிட்டீங்கன்னு சொல்லவே இல்லையே?!" என்று அர்ஜுன் மீண்டும் கேள்வி கேட்டவுடன் சரவணன் தன் விரல்கள் எல்லாவற்றையும் விரித்து, "த்ரீ சாப்பிட்டேன்" என்றான்.
அர்ஜுன் புன்னகையோடு, "அப்படின்னா... சரோவுக்கு கண்டிப்பா வயிறு வலிக்கதானே செய்யும்" என்று சொல்லி ஒரு வெள்ளைத் தாளை எடுத்து சில குறிப்புகளைத் திருத்தமாய் எழுதியவன் அந்தப் பெண்ணிடம் அந்தத் தாளை நீட்டி, "வயிறு வலி குணமாகதான் மருந்து... திரும்பி வராமே இருக்கனும்னா நல்ல உணவு பழக்கம்தான் தீர்வு" என்று உரைத்தான்.
பிறகு அர்ஜுன் சரவணன் புறம் திரும்பி, "இனிமே... பெர் சாக்லேட் அ டே... அதுவும் ஸ்மால் ஒன்தான்... ஓகே டியர்" என்று தலையாட்டி அவன் உரைக்க, சரவணனும் புன்னகையோடு தலையாட்டினான்.
வரும் போது பயந்தபடி வந்த சரவணன் போகும் போது சிரித்து கையசைக்க அர்ஜுன், "பை... சரோ!" என்று கையசைத்துவிட்டு மேஜையிலிருந்த ஸ்விட்ச்சைத் தட்ட வெளியே இருக்கும் செவிலி அடுத்ததாகக் காத்திருக்கும ஒருவரை உள்ளே அனுப்பினாள்.
இவ்விதம் அவன் வரும் கடைசி நோயாளிகள் வரை தன் பொறுமை கரையாமல் சிகிச்சை செய்தான். சிகிச்சை என்று சொல்வதை விட தன் பார்வையாலும் கனிவு நிறைந்த கவனிப்பாலுமே பலரின் நோயைக் கிட்டதட்ட குணப்படுத்தியே அனுப்பிவிட்டான்.
அங்கே குவிந்திருந்த பெரிய கூட்டமும் அவன் எழுதும் மருந்து மாத்திரைகளைத் தாண்டி அவனின் அறிவுரைக்காகவும் அன்பான அணுகுமுறைக்காகவுமே காத்திருந்தனர் எனலாம். மணி மூன்றை எட்டிய போது காத்திருப்பு அறை வெறிச்சோடிப் போனது.
பிறகு அர்ஜுன் செவிலியரை அழைத்து சில விவரங்களை உரைத்த பின் தன் லேப்டாப்பை எடுத்து ஏதோ வேலையில் ஈடுபட்டான்.
அந்த சமயத்தில் ஒரு பெண்ணின் குரல், "மே ஐ கம்மின் டாக்டர்" என்று அர்ஜுனிடம் அனுமதி கேட்க
அவன் தன் லேப்டாப்பை பார்த்தபடி, "கம்மின் ரம்யா!" என்றான்.
ரம்யா பெயருக் ஏற்றார் போல் ரம்மியமான அழகு கொண்டவள்தான். வானின் நீல நிற காட்டன் புடவையில் அழகான வடிவமைப்பான முகமும் புன்னகை தாங்கிய இதழ்களுமாய் உள்ளே நுழைந்தவள், கழுத்தில் தொங்கி கொண்டிருந்த அவள் ஸ்டெத்தஸ் கோப்பை எடுத்து மேஜை மீது வைத்தாள்.
பின் அர்ஜுனுடைய லேப் டாப்பை எடுத்து அவன் அனுமதியின்றி ஓரம் வைக்க, "ரம்யா...வாட்?" என்றான்.
"அல்ரெடி இட்ஸ் லேட்... இன்னும் லஞ்ச சாப்பிடாம இருந்தா என்னாகும்னு நான் உங்களுக்கு சொல்லணுமா டாக்டர்" என்று சொல்லி அவன் டிஃபன் பாக்ஸ்ஸை பிரித்து வைத்தாள்.
அவனும் வேறுவழியின்றி தன் இருக்கையில் இருந்து எழுந்து தன் கைகளைக் கழுவிக் கொண்டு, ”நீங்க சாப்பிட்டீங்களா?!" என்று ரம்யாவை வினவினான்.
"ம்... சாப்பிட்டாச்சு டாக்டர்... உங்களுக்குதான்... பேஷன்ட்ஸை பார்த்தா டைம் போறதே தெரியிறதில்ல... ஊருக்குதான் உபதேசம்... அதை நீங்க கடைப்பிடிக்க மாட்டீங்களா?!".
அவன் சிரித்து கொண்டே, “என்னுடைய நேரம் எவ்வளவு முக்கியமோ அதே சமயம் எனக்காக குழந்தைகளோட காத்திருக்கிறவங்களோட நேரமும் ரொம்ப முக்கியம் இல்லயா?!" என்றான்.
"டிரீட்மன்ட் செய்ற ஆர்வத்தில நீங்க பேஷன்டா மாறிடாம இருந்தா சரி" என்று ரம்யா உரைக்க அர்ஜுன் சிரித்தபடி உண்ண ஆரம்பித்தான்.
ரம்யா அந்த மருத்துவமனையில் மூன்று வருடங்களுக்கு முன்பு பயிற்சி மருத்துவராய் வேலைக்கு சேர்ந்து... இப்போதோ அர்ஜுனின் உற்ற தோழியாகவே மாறிவிட்டாள். அர்ஜுனும் அவளை நல்ல தோழியாகவே எண்ணினான்.
ரம்யாவின் நேர்த்தியான அழகு எல்லோர் பார்வையிலும் ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்தும் எனினும் அர்ஜுன் மட்டும் தோழமை என்ற எல்லையிலேயே நின்றான்.
அர்ஜுன் சாப்பிட்டு முடித்ததும் ரம்யா தலையசைத்து புறப்பட எத்தனிக்க, "ரம்யா ஒன் மினிட்" என்ற குரல் கொடுக்க அவளும் ஆர்வத்தோடு அவன் அருகில் வந்து நின்றாள்.
அர்ஜுன் தன் லேப்டாப்பை அவள் புறம் திருப்பி, "ரீட் திஸ் ஆர்ட்டிக்கல்" என்று பணித்தான்.
அவளும் ஆர்வமாய் படித்துவிட்டு கொஞ்சம் அதிர்ந்தவளாய், "ஆட்டிஸம் (Autism)... குழந்தையின் மனவளர்ச்சி குறைபாடினால் ஏற்படுகிற நோய் இல்லையா?!" என்று சந்தேகமாய் வினவினாள்.
அர்ஜுன் கொஞ்சம் இறுக்கமாய் முகத்தை வைத்து கொண்டு லேப்டாப்பை தன் புறம் திருப்பியவன், "இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சிகிச்சைக் கொடுத்த டாக்டர் ஜெஃப் பிரட்ஸ்டீர்ட்... இது அமெரிக்க அரசாங்கம் போட்ட தடுப்பூசியால் ஏற்பட்டதுன்னு ஒரு ரிசர்ச் மூலம் சொல்லி இருக்காரு... ஆனா அமெரிக்க அரசாங்கம் இதை இல்லன்னு திட்டவட்டமா மறுத்திடுச்சு" என்று அவன் விவரமாய் உரைக்க
ரம்யா அதிர்ந்தபடி, "ஓ மை காட்... இது உண்மையா... டாக்டர்?!" என்று கேள்வி எழுப்பினாள்.
"இது உண்மையா இல்ல பொய்யான்னு திட்டவட்டமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படல... பட் டாக்டர் ஜெஃப்... ஆட்டிஸம் பத்தி ஆர்ட்டிக்கல் வெளியிட்ட பிறகு மர்மான முறையில் இறந்துட்டார்னு நீயூஸ் வந்துச்சு... இது சூசைட்னு சொல்லி முடிச்சிட்டாங்க... தட்ஸ் இட்" என்று அர்ஜுன் சொல்ல ரம்யா அப்படியே அதிர்ந்து நின்றாள்.
அந்த டாக்டரின் கூற்று உண்மையெனில் பல குழந்தைகளின் எதிர்காலம் மருத்துவ துறையில் ஏற்பட்ட தவறால் அழிக்கப்பட்டு விட்டதை எண்ணி ரம்யா வேதனையுற, இருவரும் சில நிமிடங்கள் அமைதி காத்தனர்.
இப்போது அர்ஜுன் அவனின் மௌனத்தை கலைத்தபடி, "ஓகே ரம்யா! நீங்க இன் பேஷன்டஸை செக் பண்ணிட்டு ரிப்போர்ட்ஸை எனக்கு அனுப்பி வைச்சிடுங்க" என்றுரைக்க அவளும் பதில் பேசாமல் தலையசைத்து விட்டு மேஜை மீது வைத்த ஸ்டெத்தஸ்கோப்பை கையில் எடுத்தபடி வெளியேறினாள்.
ரம்யாவின் மனம் சிறிது நேரம் அர்ஜுன் சொன்ன விஷயங்களைப் பற்றி தீவிரமாய் எண்ணியபடி இருந்தது. இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்தவள் பின் அவளை அறியாமல் அர்ஜுனைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள்.
அரங்கநாதன் மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராய் இருக்கும் வைத்தீஸ்வரனின் மூத்த மகன் அர்ஜுன். அவனின் புத்திக்கூர்மை தீர்க்கமான பேச்சு சிந்தனை இவற்றை எல்லாம் தாண்டி குழந்தைகளிடம் அவனின் அணுகுமுறை என அவனைக் கண்டு வியாக்காவதவர்களும் பாராட்டாதவர்களும் கிடையாது.
அதிலும் மருத்துவ துறையின் மீதான அவனின் அதீத பற்றும் அவனின் பொறுமையும் ஆர்வமும் எல்லோரையும் ஈர்க்கும் வல்லமை பொருந்தியதாக இருக்க, ரம்யா கொஞ்சம் அதீதமாகவே ஈர்க்கப்பட்டாள்.
அதற்கு காரணம் அவனைப் பார்த்த நாளிலிருந்து அவளுக்குள் தோன்றிய ஒரு வித புரியாத உறவு. ஆனால் அவன் மருத்துவ தொழில் மீது தீராத காதல் கொண்டிருக்க, ரம்யா அவனின் மனதில் இரண்டாவது இடமாவது கிட்டுமா என ஏங்கிக் கொண்டிருந்தாள்.
ரம்யாவின் மனமும் அவளின் பார்வையின் பொருளும் அர்ஜுனுக்கு புரிந்த போதிலும் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதி காத்தான். அவனின் மனஎண்ணம் வேறு விஷயங்களில் ஆழ்ந்திருக்க இப்போதைக்கு காதல் குறித்த சிந்தனையில் அவன் லயிக்க விரும்பவில்லை. மற்றபடி அர்ஜுனுமே ரம்யாவின் மீது காதல் கொண்டிருப்பதை உணர்ந்திருந்தான்.
20