மோனிஷா நாவல்கள்
Meendum Uyirthezhu - 23 & 24
Quote from monisha on August 27, 2022, 12:52 PM23
அபிமன்யு
அபிமன்யு தான் நினைத்ததை அடைந்த திருப்தியோடு மீண்டும் மலை உச்சியில் உள்ள கொங்ககிரி கிராமத்தை வந்தடைய, அவன் உடன் வந்த ஊர்க்காரர் அபிக்கு பாம்பு கடித்ததாக தெரிவித்தார். அந்த ஊர் மக்கள் எல்லோருமே பதட்டமடைந்து அவனைச் சூழ்ந்து கொண்டு நலம் விசாரித்தனர்.
அதோடு அவர்கள் நிற்காமல் அவர்களுக்குத் தெரிந்த மருந்துகளைத் தயாரித்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினர். போதாக்குறைக்கு அவனுக்குப் பார்த்து பார்த்து உணவு தயாரித்து கொடுத்தனர். எந்த உறவும் இல்லையென்ற போதும் அவன் மீது அந்த மக்கள் பொழிந்த அன்பும் அரவணைப்பும் அவனை நெகிழச் செய்தது.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அந்த ஊருக்கு அவன் அந்த மலரைத் தேடி வருவது வழக்கம். அப்படி ஒரு முறை தேடி வந்த போதுதான் அங்கே இருந்த சிலரை விஷக் காய்ச்சல் பீடித்திருந்தது.
அந்த மக்களுக்கு அந்த நோயின் தீவிரம் புரியவில்லை எனினும் அபிமன்யு அவர்கள் நாடியைச் சோதித்து ஏதோ ஒரு பெரிய உயிர்க் கொல்லி நோய் அவர்களைத் தொற்றியிருப்பதை உணர்ந்தான். அந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒற்றை ஆளாய் போராடி கொங்ககிரி மக்களைக் காப்பாற்றினான்.
அபிமன்யுவிடம் உள்ள இந்தத் திறமைக்கு முற்றும் முதலான காரணம் அவனின் தாத்தா அரங்கநாதன்தான். சிறுவயது முதலே அவருடன் அவன் இருக்கும் போதெல்லாம் செடிக் கொடிகளின் மகத்துவம் பற்றியும் அது மக்களுக்கு எத்தகைய பலனை அளிக்கிறது என்பதைப் பற்றி சுவாரசியமூட்டும் வகையில் எடுத்துரைத்து வந்தார். மேலும் அவர்களின் குலத்தொழியான சித்த மருத்துவத்தின் சிறப்புகளையும், அதனால் பயனடைவர்களைப் பற்றியும் விளக்கி வருவார்.
வழிவழியாய் அவர்கள் குடும்பத்தினர் வைத்தியத் தொழிலைச் செய்து வருபவர்கள். அபிமன்யுவின் தாத்தா அரங்கநாதனும் வைத்திய சாலை நடத்தி பலரின் நோயினைக் குணப்படுத்தி வந்தார். ஆனால் தேசத்தின் வளர்ச்சி என்ற பெயரில் நம்முடைய பழைய கலாச்சார முறை எல்லாம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்க, அந்த வைத்திய சாலைக்கு வருவோர்களின் எண்ணிக்கை குறைந்தது.
எல்லோரும் ஆங்கிலேயரின் மருத்துவத்தை நம்பிச் சென்று கொண்டிருக்க நம் பழமையான முறை மெல்ல மெல்ல அழிந்து கொண்டே வந்த காரணத்தால் அரங்கநாதன் பெரும் துயரில் ஆழ்ந்தார். அந்தச் சமயத்தில் அவரின் மகன் வைத்தீஸ்வரன் பிடிவாதமாய் சித்த வைத்திய முறையைக் கற்க விருப்பமில்லாமல் ஆங்கிலேய மருத்துவத்தின்பால் மோகம் கொண்டு அதை கற்க ஆர்வம் கொண்டார்.
அரங்கநாதனுக்கோ தம் முன்னோர்களால் வெகுகாலமாய் தொடர்ச்சியாய் பாதுகாக்கப்பட்டு வந்த வைத்திய முறை தன்னோடு வாரிசில்லாமல் அழிந்துவிடுமோ என்று அச்சம் உண்டானது. அப்போதுதான் வைத்தீஸ்வரனின் மனைவி சுகந்திக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
அவர்கள் சந்ததிகள் இரட்டையர்கள் பிறந்தாலே ஒன்று இறந்து பிறப்பது வழக்கமாய் இருந்தது. இம்முறையும் முதல் குழந்தை நன்றாகவே பிறக்க இரண்டாவதாகப் பிறந்தவன் அசைவற்று இருந்தான். மருத்துவர்கள் எல்லோரும் இறந்துவிட்டதாக உரைக்க, அரங்கநாதன் மட்டும் அந்தக் குழந்தையை தன் கையில் பெற்று நம்பிக்கையில்லாமல் சோதித்து பார்த்தார்.
அவன் உயிருடன் இறப்பதாக அவருக்கு உள்ளுணர்வு ஏற்பட தன்னால் இயன்ற வரை முயற்சி செய்தார். அவரின் முயற்சியின் பலனாக எல்லோரும் அதிசயிக்கும் விதமாய் அபிமன்யு கதறி அழத் தொடங்கினான். அப்போது அவர் அறிந்திருக்க மாட்டார்.
தான் உயிர் கொடுத்த காப்பாற்றியவன் வருங்காலத்தில் தம் பழமையான சித்த வைத்திய முறையைத் தூக்கி நிறுத்தப் போகிறான் என்றும் கொடிய நோய்களிலிருந்து பல உயிர்களைக் காப்பாற்றி பெரும் பெருமையை ஏற்படுத்த வல்லவனாய் திகழ்வான் என்றும்.
அர்ஜுன் தன் அப்பாவின் வழியைத் தேர்ந்தெடுக்க, அபிமன்யு தன் தாத்தாவின் வழியைப் பின்பற்றினான். அவன் சிறு வயதில் இருந்தே மூலிகைகளைக் குறித்தும் அவற்றின் பயன்கள் பற்றியும் நன்கு அறிந்து கொண்டான்.
அவன் தாத்தா அரங்கநாதன் காலம்காலமாய் காப்பாற்றி வைத்திருந்த பழைய வைத்திய குறிப்புகளையும் கற்றுத் தேர்ந்தான். அந்தச் சமயத்தில் அரங்கநாதன் மரணத்தைத் தழுவிட, அந்த இழப்பு பெரியளவில் அபிமன்யுவைப் பாதித்தாலும் அவனின் வைத்திய முறைக் குறித்த தேடலும் கற்றலும் அதோடு நின்றுவிடல்லை.
நம் தேசம் முழுக்க உள்ள பழைய மருத்துவ குறிப்புகளைத் தேடிக் கண்டெடுத்தான். பல அரிய மூலிகைகளைக் கண்டுபிடித்து அவற்றைச் சேகரித்து அதன் பயன்களைக் கண்டறிந்து அக்னி என்ற பெயரால் சித்த வைத்திய முறை பற்றிய புத்தகங்களை எழுதி வெளியிட்டான்.
அபிமன்யுவிற்கு தன் தாத்தா அரங்கநாதன் கற்பித்த விஷயங்கள் பசுமரத்தாணியாய் அவன் மனதில் ஆழமாய் பதிந்திருந்தது.
- முதலில் நோயுற்றவர்களை அச்சம் கொள்ள செய்து அவர்கள் மனதைரியத்தைத் தகர்க்க கூடாது.
- பிரச்சனை என்ற ஒன்று வரின் அதற்கான தீர்வு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும்.
- அதே போல் அந்தத் தீர்வை நாம் வெகுதூரத்தில் தேடிக் கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் அதற்கான தீர்வு நம் அருகாமையிலேயே இருந்தும் நாம் உணராமல் போய்விடுவோம்.
- எத்தகைய கொடிய நோயாக இருந்தாலும் நாம் நோயுற்றவர்களை அதிலிலருந்து மீட்க துவளாமல் முடிந்தளவு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
- நாம் எல்லா உயிர்களையும் காக்க வல்லவர்களாக இருப்பது சாத்தியம் இல்லை எனினும் நாம் எந்நிலையிலும் எத்தகைய துயர் ஏற்பட்டாலும் எந்த உயிரையும் கொல்ல துணியும் பெரும் பாவச் செயலை மட்டும் செய்யவே கூடாது என்ற உரைத்திருந்தார்.
இவையே அபிமன்யுவின் மூல மந்திரங்கள்.
கொங்ககிரி மக்களைப் பீடித்த அந்தக் கொடிய நோயில் இருந்து காக்க அபிமன்யு அவர் தாத்தா சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றினான். அந்த ஊரிலேயே விளைந்த மூலிகைகளை வைத்தே அவர்கள் உயிரை காப்பாற்ற அவன் கிட்டதட்ட நாற்பது நாட்கள் உறக்கமின்றி அயராத பாடுபட்டு வைத்தியம் புரிந்தான். அபிமன்யு தன் தாத்தாவிடம் கற்றவை மற்றும் அவனின் திறமை கொண்டு நம்பிக்கையோடு செய்த முயற்சி பலனளித்தது. அதே நேரத்தில் ஈஷ்வர்தேவ்வின் திட்டமும் தரைமட்டமானது.
அபிமன்யு அந்த மக்களைக் காப்பாற்றிய பின் இதற்கு பிண்ணனியில் இருக்கும் சூழ்ச்சியையும் அவன் கண்டுகொள்ள ஆரம்பித்தான். அவன் தேடல் முடிவுற்ற இடம் ரா மெடிக்கல் ரிசர்ச் சென்டர். அவர்களின் மோசமான திட்டத்தை முறியடித்ததோடு இல்லாமல் அர்ஜுனும் அபிமன்யுவும் சேர்ந்து இது குறித்து இன்னும் பற்பல விஷயங்களைச் சேகரிக்க ஆரம்பித்தனர். அப்படியாக அபிமன்யு தெரிந்து கொண்ட விஷயங்கள் ஈஷ்வர் மீது அளவில்லாத வெறுப்பை ஏற்படுத்தியது.
அபிமன்யுவும் ஈஷ்வர்தேவ்வும் உலகின் வெவ்வேறு மூலையில் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்காமலே துவேஷத்தையும் கோபத்தையும் வளர்த்து கொண்டு எதிரிகளாய் நின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரையும் ஒரே கோட்டில் இணைத்து நேருக்கு நேராய் சந்திக்க வைக்கும் வல்லமை படைத்தவள் நம் நாயகிதான்.
*இந்தியாவிலும் அயல்நாட்டிலும் முப்பதாயிரம் ஓலைகள் பதிப்பிடாமல் இருக்கின்றன. அவற்றில் மருத்துவம் சம்பந்தப்பட்ட ஓலை கிட்டதட்ட ஐம்பது சதவீதம் என ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
24
கரிசன் சோழா
மனிதன் என்னதான் மாய்ந்து மாய்ந்து தன் அறிவியல் அறிவால் இந்தப் பூமித் தேவதையின் அழகைச் சீரழித்து கொண்டிருந்தாலும் அவள் தன் இயற்கையின் ஆளுமையை அத்தனை சீக்கிரத்தில் விட்டுத்தர தயாராக இல்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கு சாட்சியாக இன்னும் சிற்சில மலைகளும் காடுகளும் தம் எழில் கொஞ்சும் இயற்கையின் அழகால் ஆட்சி புரிந்து கொண்டிருந்தன. அத்தகைய பசுமையும் வளமையும் சூழ்ந்த பொள்ளாட்சி நகராட்சியில் உள்ள சுற்றலாதளமாய் அமைந்துள்ள ஆனைமலையை நோக்கியே அபிமன்யுவின் ஜீப் பொறுமையாய் சென்று கொண்டிருந்தது.
அந்த இடத்தின் செழிப்பும் வனப்பும் நம் மனதைக் கொள்ளை கொள்ளச் செய்ய, ஒருவித சில்லென்ற உணர்வு நம் தேகத்தைச் சிலிர்ப்படையச் செய்து கொண்டிருந்தது.
அங்கே விழிகள் பார்க்கும் திசையெல்லாம் இயற்கையின் விந்தை! அவற்றைப் பார்த்து பார்த்து வியந்து கொண்டே இருக்கலாம். இன்றே இப்படியெனில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை அரசியாய் திகழும் இந்த மலைமகளின் அழகைக் கண்டு ரசித்திட கண்கள் கோடி வேண்டும்?! ஆனால் அத்தகைய கொடுப்பனை நமக்கில்லை.
இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையை விடுத்து அந்த இயற்கைக்குள்ளே மீளாமல் தொலைந்துவிட கூடாதா என்ற எண்ணம் தோன்ற அது சாத்தியமில்லை எனப் பெருமூச்செறிந்து மேலே அபியன்யுவோடு நாமும் அவன் செல்லும் திசை நோக்கிப் பயணிப்போம்.
அங்கே உள்ள சலசலக்கும் அருவிகளைக் கடந்து கம்பீரமாய் நின்று பல காலமாய் தம் மாட்சிமையை உரைக்கும் அந்த ஆனைமலை பாதையில் அபிமன்யு கருப்பு நிற ஜீப்பை ஓட்டிக் கொண்டு அந்தச் சூழலின் வளமையையும் செழிப்பையும் ரசித்தபடி சென்று கொண்டிருந்தான். இந்தப் பாதை அவனுக்கு ரொம்பவும் பழக்கப்பட்டதெனினும் அவன் இவ்விடத்தின் பசுமையும் அழகையும் எத்தனை முறை ரசித்தாலும் சலிப்பு தட்டுவதேயில்லை.
எப்போதுமே அவன் செல்லும் திசையெல்லாம் உள்ள மரங்களையும் தாவரங்களையும் உன்னிப்பாய் கவனித்தபடியே வருவது அவனுக்கு வழக்கம்தான். கொஞ்சம் வித்தியாசமான தாவரமும் மரமும் அவன் கண்ணில் பட்டுவிட்டால் அங்கேயே நின்று அதன் ஆராய்ச்சியில் இறங்கிவிடுவான்.
இயற்கையின் மீது அவனுக்கு ஏன் இத்தனை காதல் என்று அவனுக்கே விளங்கவில்லை. ஆனால் வெகுசீக்கிரத்தில் அவனின் காதலையும் மனதையும் முழுமையாய் தனக்கே உரித்தாக்கி கொள்ள ஒருத்தி வரவிருக்கிறாள். ஒரு பிறவியையே அவன் அவளுக்காக விட்டுகொடுத்து விட்டு, மீண்டும் அவளின் மீதே காதலில் திளைக்க போகிறான் என்பதை அப்போது அவன் நிச்சயம் ஊகிக்க கூட மாட்டான்.
அபிமன்யுவின் ஜீப் வந்து நின்ற இடம் ஆனைமலை பகுதியில் உள்ள கரிசன் சோழா. அங்கே உயரமான மரங்கள் செடிகள் பரவிக்கிடக்க கேரளத்தில் அமைந்திருக்கும் கொட்டாரம் போல ஒரு அழகிய பெரிய வீடு நம்மை ஈர்க்க அதன் ஓடுகள் எல்லாம் பச்சை வண்ணக் கொடிகள் சூழப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது.
அந்த வீட்டின் வெளிப்புறமே சௌந்தர்யத்தின் ரூபமாய் காட்சியளித்தது. மேல்புறம் உள்ள கோபுரம் போன்ற அமைப்பு வானை நோக்கி பார்த்த வண்ணம் இருக்க அதன் வாசல் புறத்தில் இருந்த சிவப்பு நிற தூண்கள் அந்த வீட்டினையே தூக்கித் தாங்கியபடி நின்றன என்றே சொல்ல வேண்டும்.
பார்க்க வீடு போன்றே காட்சியளித்தாலும் ஆயிரம் காலத்திற்கு மேல் பழமையான ஆதுர சாலை அது. அக்னீஸ்வரி தன் மரண தருவாயில் உரைத்ததைக் கேட்டு சுவாமிநாதன் தன் பெயரனோடு ஆரை நாட்டை விட்டு வந்து இந்த ஆனைமலை நாட்டில்தான் குடியேறினார். அங்கே உள்ள கரிசன் சோழா பகுதியில் பலவகையான மூலிகைத் தாவரங்களும் அரிதான மூலிகைப் பண்பு கொண்ட மரங்களும் நிரம்பி இருந்தன என்பதை அறிந்த சுவாமிநாதன் அவ்விடத்தில் மீண்டும் ‘அரங்கநாதன் ஆதுர சாலை’ அமைத்து தன் வைத்திய பணியைத் தொடர்ந்தார்.
அன்று அவரின் ஆதுர சாலை சாதாரணமாக ஓலையால் வேயப்பட்டிருந்த குடிலாயிருந்து நாளடைவில் பல பெரும் பேறும் சிறப்பும் பெற்றது. அந்த ஆதுர சாலை சிறப்பை அறிந்த பல பேரரசர்களும் சிற்றரசர்களும் பொன்னையும் பொருளையும் குவியல் குவியலாய் வழங்கி கௌரவித்தனர்.
அதுவும் சுவாமிநாதனின் பேரன் அரங்கநாதன் காலகட்டத்தில் கரிசன் சோழாவின் பெரிய விசாலமான இடத்தில் பிரமாண்டமான இந்தக் கொட்டாரம் அமைக்கப்பட்டது. ஆனால் சந்திரன் தேய்பிறையைக் காண்பதைப் போல் அவர்களின் பெருமை எல்லாம் காலங்கள் கடந்து செல்ல செல்ல தேய்ந்து கொண்டே வந்தது.
அதுவும் நூற்றாண்டுகள் கடந்து செல்ல, அபிமன்யுவின் தாத்தா அரங்கநாதன் காலத்தில் வைத்திய சாலையின் சிறப்பெல்லாம் குன்றி மொத்தமாய் இருள் சூழ்ந்துவிட்டதென்றே சொல்லலாம். ஆனால் மீண்டும் அபிமன்யு தலைதூக்கி அந்த ஆதுர சாலைக்குப் புத்துயிர் தந்தான்.
இப்போது அந்தப் பழமையான ஆதுர சாலையின் முன்புற அழகான மூலிகைத் தோட்டத்தில்தான் அபிமன்யு தன் ஜீப்பிலிருந்து இறங்கினான். அப்போது உள்ளே இருந்து ஒரு வயதான முதியவர் காவி நிற வேட்டியும் மேலே அதே நிறத்தில் துண்டும் போர்த்தியிருக்க அவரின் வெண்தாடி மார்பினைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவர் பெயர் திருமூர்த்தி. அவரும் அபிமன்யுவின் தாத்தா அரங்கநாதனோடு சேர்ந்தே வைத்தியம் பார்த்து கொண்டிருந்தவர்.
அந்தத் தோட்டத்தின் நடுவில் அமைக்கப்பட்ட பாதையில் அவர் அபியை நோக்கி நடந்து வந்தார். அவர் கிட்டத்தட்ட தொண்ணூறு வயதை எட்டியிருந்தும் அவரின் தடுமாற்றம் இல்லாத நடையும் நிமிர்ந்த உடலமைப்பும் அவரின் ஆரோக்கியமான வாழ்வியல் முறையைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.
திருமூர்த்தி அபிமன்யுவின் விழிகளில் வெற்றி களிப்பு மின்னிக் கொண்டிருப்பதைக் கவனித்தபடி வர அவன் வேகமாய் நடந்து வந்து அவரை இறுக அணைத்து கொண்டு, "பூக் கிடைச்சிடுச்சு தாத்தா..." என்று கொண்டாட்டமாய் உரைத்தான்.
திருமூர்த்தி அவன் பிடியில் இருந்து விலகி முகத்தைச் சுருக்கியபடி,
"போங்க தம்பி... சும்மா விளையாடாதீங்க... எங்கக் காலத்திலேயே நாங்க அந்த சந்திரவதனியைப் பார்த்ததில்லை... நீங்க என்னவோ இப்ப போய் கிடைச்சிடுச்சுன்னு... தேவையில்லாத வேலை எல்லாம் வேணாம்னு சொன்னா... கேட்காம... சும்மா அலைச்சல் பட்டுகிட்டு... சரி சரி... களைப்பாய் இருப்பீங்க... போய் குளிங்க தம்பி" என்றார்.
அபி ஒவ்வொரு முறையும் ஏமாற்றமாய் வருவதை மனதில் எண்ணிக் கொண்டு திருமூர்த்தி அவ்வாறு சலிப்போடு உரைத்தார்.
அபியின் முகம் சுருங்கிவிட, "என்ன தாத்தா நீங்க? நான் எதுக்கு விளையாட போறேன்... சந்திரவதனி பூவை நான் என் உயிரையே பணயம் வைச்சு பறிச்சிட்டு வந்திருக்கேன்... நீங்க என்னமோ நம்பமாட்டிறீங்க... இருங்க எடுத்துட்டு வர்றேன்" என்று சொல்லி ஜீப்பிலிருந்து சிறு மூடிப்போட்ட கூடையை எடுத்து வந்தான்.
இப்போது திருமூர்த்திக்கு உண்மையிலேயே ஆவல் பெருகிட அந்தக் கூடையை வாங்கி ஆர்வமாய் திறந்தார். அதன் மீது மூடியிருந்த வெண்ணிற ஈரத் துணியை விலக்கி விட்டு லேசாய் வாட்டமுற்றிருந்த போதும் அந்த கருநீல வண்ணத்தில் இருந்த சந்திரவதனி மலரைப் பார்த்த போது அது கண்கொள்ளா காட்சியென்றே தோன்றி வியப்பில் ஆழ்த்தியது. திருமூர்த்தியின் முகம் பிரகாசமடைய அவர் ஆச்சர்யம் பொங்க தம் சுருங்கிய பார்வையை அகல விரித்து பார்த்துக் கொண்டிருந்தார்.
"இத நானும் உங்க தாத்தாவுமே கேள்விதான் பட்டிருக்கும்... ஆனா இந்தக் காலத்தில... எப்படி... இப்பவும் என்னால நம்ப முடியலயே தம்பி" என்று குழப்பமாய் அவர் கேட்க, அபி தன் பேகில் இருந்த குறிப்பை அவரிடம் காண்பித்தான்.
அதை வாங்கி படித்த திருமூர்த்தி இப்போது நம்பிக்கைப் பெருகி வியப்போடு அபியை நிமிர்ந்து பார்த்து, "இந்தப் பூ... மூன்று நான்கு சந்ததிக்கு முன்னாடியே அழிஞ்சிடுச்சுன்னுல நினைச்சிட்டிருக்கோம்... நீங்கதான் மெனகெட்டுத் தேடி அலையறீங்கன்னுல நினைச்சேன்... ஆனா பெரிய விஷயம் தம்பி... எப்படியோ கண்டுபிடிச்சிக் கொண்டு வந்திட்டீங்களே!" என்று அவன் தோள்களில் பெருமையோடுத் தட்டினார்.
"அதான் தாத்தா அபி... நான் நினைச்சதை எப்படியாவது முடிச்சுக் காட்டிடுவேன்" என்று பெருமிதத்தோடு அவன் தன் டீஷர்ட் காலரை தூக்கி விட்டு கொண்டான்.
"உங்க தாத்தா என்கிட்ட அடிக்கடிக்கு சொல்வாரு... என் பேரன் கோடில ஒருத்தன்... எதை நினைச்சாலும் அதை செஞ்சு முடிச்சிட்டுதான் மறுவேலை பார்ப்பான்... அவன் பெரிசா சாதிச்சு எல்லாரும் பிரமிக்கிற மாதிரி பெரியாளா வருவான்... ஆனா அதை பார்க்க எனக்கு ஆயுசு இருக்குமோ என்னவோன்னு வருத்தப்படுவாரு... அவர் உங்கள பத்தி சொன்னதெல்லாம் சத்திய வாக்குதான் தம்பி" என்று சொன்னவரின் கண்களில் நீர் துளிர்க்க, அபியும் தன் தாத்தாவின் நினைவில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விழியோரம் துளிர்த்த நீரைத் துடைத்துக் கொண்டான்.
பின்னர் அபி, "இந்தாங்க தாத்தா... இதை எடுத்து வையுங்க... நான் போய் குளிச்சிட்டு வர்றேன்" என்று கூடையை திருமூர்த்தியிடம் கொடுத்துவிட்டு முன்னேறி சென்றவனிடம் திருமூர்த்தி, ”எங்க எடுத்தேன்... ஏது என்னன்னு ஒன்னும் சொல்லாம போறீங்களே தம்பி" என்று கேட்டார்.
"குளிச்சிட்டு வந்து... விவரமா எல்லாத்தையும் சொல்றேன் தாத்தா" என்று வாசல் படிக்கெட்டுகளில் முன்னேறிச் சென்றான்.
பெரிய கனமான வேலைபாடுடன் கூடிய வாசற் கதவைக் கடந்து அவன் உள்ளே செல்ல, அந்த வீட்டின் அமைப்பும் அங்கிருந்தப் பொருட்களுமே அதன் பழமையையும் பாரம்பரியத்தையும் உரைத்துக் கொண்டிருந்தது.
வீட்டின் நடுவில் ஒரு விசாலமான முற்றம் தூண்கள் சூழ அமைந்திருந்தது. அந்த முற்றத்தைச் சுற்றி அமைந்திருந்த விஸ்தரமான இடத்தில் நோயுற்றவர்களுக்கு மும்முரமாய் வைத்தியம் நடந்து கொண்டிருந்தது. முதிர்ந்த தோற்றமுடைய வைத்தியர்கள் சிலரும் இளம் வயதினர்கள் ஒன்றிரண்டு பேரும் சித்த வைத்தியத்தின் மீது ஆர்வம் கொண்டு கற்கும் நோக்கில் அங்கேயே வந்து தங்கி உதவி புரிந்து கொண்டனர்.
கொடிய நோய்களால் பிழைக்கவே முடியாது என்ற நிலையில் வந்தவர்களையும் அதிசியக்கும் விதமாய் புத்துயிர் பெற செய்திருக்கின்றனர். நிறைய நோயாளிகள் கை கால்கள் இயங்காமல் வந்து இயல்பான முறையில் மீண்டும் பழைய உடல் நிலையைப் பெற்று அங்கிருந்து சென்றுள்ளனர். அத்தகைய சிறப்பான முறையில் அந்த ஆதுர சாலை இயங்கிக் கொண்டிருந்தது.
அங்கே பல அறைகள் சூழ்ந்திருக்க அபி தன்னுடைய அழகான சிறு அறையில் தன் பையை வைத்து விட்டு வெளியே வந்தான்.
23