மோனிஷா நாவல்கள்
Meendum Uyirthezhu - 32
Quote from monisha on September 7, 2022, 12:21 PM32
கற்பனை பிம்பம்
அரண்மனை போன்ற அந்த வீட்டின் முகப்பறையின் நடுவில்... அவந்திகாவும் சுந்தரும் வேலை விஷயமாக பேசிக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் அவர்கள் இருவரையும் நோக்கி நடந்து வந்த ஈஷ்வர் நேராய் வந்து சுந்தரைப் பார்த்து புன்னகைப் புரிய, இருவரும் மரியாதை நிமித்தமாகக் கைக் குலுக்கிக் கொண்டனர்.
"ஹவ் ஆர் யூ அங்கிள்?" என்று ஈஷ்வர் உற்சாகமாய் வினவ,
சுந்தர் பவ்வியமாய், "நல்லா இருக்கேன் தம்பி... நீங்க எப்படி இருக்கீங்க... உங்கள பார்த்தே ரொம்ப நாளாயிடுச்சே" என்றார்.
"ஐம் குட்... யா நாம மீட் பண்ணி இயர்ஸ் கான்... என்ன பண்றது... லாட்ஸ் ஆஃப் வொர்க்" என்று சொல்லியபடி சோபாவில் அமர்ந்து அவரையும் அமரச் சொன்னான்.
சுந்தர் பார்க்க சற்று வயதான மரியாதைக்குரிய தோற்றத்தோடு இருக்க, அவரின் முறுக்கியிருந்த மீசை ஒரு மிரட்டல் தோரணையைக் கொடுத்தது.
சுந்தர் அவனை அங்கிள் என்று உரிமையாய் விளித்தாலும் அவர் அத்தகைய உரிமையை எடுத்துக் கொள்ளாமல், "உங்க வேலை பத்தி எனக்கு நல்லா தெரியும்... ஆனா மும்பையிலிருக்கிற நம்ம மெயின் பிரேஞ்சிற்கு நீங்க அப்பப்போ வந்து விசிட் பண்ணிட்டுப் போலாம் இல்லையா?!" என்று கேட்டார்.
அவந்திகாவும் அந்தக் கருத்தை ஆமோதித்து, "சுந்தர் சொல்றது கரெக்ட்தான் தேவ்" என்றார்.
ஈஷ்வர் புன்னகையோடு, "நீங்க கேட்குறது கரெக்ட்... பட் எனக்கு அவசியம்னு படல... பிகாஸ் நீங்களும் மாமும்தான் கம்பெனியை சூப்பரா ரன் பண்ணிட்டிருக்கீங்க... அதுவும் இல்லாம உங்க டாட்டர் சூர்யா வேற வெரி ப்ரில்லியன்ட்... மாம்முக்கு செம சப்போர்ட்டிவ்... ஸோ என் விசிட்... நாட் நீடட் அங்கிள்" என்றான்.
சுந்தர் தன் மகளைப் பற்றி ஈஷ்வர் சொன்ன புகழுரையைக் கேட்டுப் பூரித்துப் போயிருக்க, அவந்திகா மனதில் சட்டென்று வேறு எண்ணம் தலைதூக்கியது. சூர்யாவின் புத்திசாலித்தனத்தை அறிந்து ஈஷ்வர் வியக்கவும் ரசிக்கவும் செய்கிறான் எனில் நிச்சயம் அவளை நேரில் கண்டு பேசும் சந்தர்ப்பம் அமைந்தால் அவளை அவனுக்குப் பிடித்து போகும் என்று தன் கற்பனை குதிரையை வேகமாக ஓட விட அருகிலிருந்த ஈஷ்வர் தன் தாயின் தோளில் கை வைத்தான்.
"மாம்... என்னாச்சு?! நான் இவ்வளவு நேரமா உங்ககிட்டதான் பேசிட்டிருக்கேன்... என்னைக் கவனிக்காம நீங்க என்ன தனியா யோசிச்சிட்டிருக்கீங்க?" என்று கேட்க,
அவந்திகா தன் மனதிற்குள் உண்மையிலேயே தான் நினைத்தது நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால் சூர்யாவைப் பற்றி தான் சொல்லாமல் அவனாகவே உணர்ந்து கொள்ள வேண்டுமே என்று எண்ணினாள்.
மீண்டும் ஈஷ்வர் சலிப்போடு, "மாம்... அகையின்... வாட்ஸ் ஹான் யுவர் மைன்ட்... என்கிட்ட அதையாச்சும் சொல்லுங்க" என்றான்.
அவந்திகா தன் எண்ணத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெற்றுப் புன்னகையோடு, "நத்திங் தேவ்... நீ என்ன சொல்லிட்டிருந்த?" என்றார்.
"நான் தமிழ்நாட்டுக்குப் போகலாம்னு இருக்கிறேன்... அங்கே இருக்கிற சென்னை அன் கோவை பிரான்ச் ஆஃபிஸை விசிட் பண்ணிட்டு... அப்படியே ஒரு நல்ல லொகேஷன் சூஸ் பண்ணி தமிழ்நாட்டில ஒரு ரிசர்ச் சென்டர் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா... வாட் டூ யூ சே?" என்றான்.
அவந்திகா ஆர்வமாய் தலையசைத்து, "குட் ஐடியா... பண்ணலாமே... நீங்க என்ன சொல்றீங்க சுந்தர்?" என்று அவர் பார்வை சுந்தரை நோக்கித் திரும்பியது.
"எனக்கும் நல்ல யோசனைன்னுதான் தோனுது... பட் இதுக்குன்னு நீங்க தமிழ்நாட்டுக்குப் போகணுமா?" என்று சுந்தர் இழுத்தார்.
அவந்திகா இப்போது சுந்தரை நோக்கி, "போயிட்டு வரட்டும் சுந்தர்... எல்லா பிரான்ச் ஆஃபிஸ்ஸையும் ஈஷ்வர் விசிட் பண்ணிருக்கான்... என்ன காரணத்தினாலோ சென்னைக்கு மட்டும் அவனுக்குப் போகிற சேன்ஸ் கிடைக்கவேயில்லை... ஸோ போயிட்டு வரட்டும்" என்றார்.
ஈஷ்வரும் புன்னகையோடு, "எனக்குமே தமிழ்நாட்டை விசிட் பண்ணனும் லாங் டைம் டிஸையர்... அதுவும் இல்லாம எங்க அப்பாவோட பர்த் பிளேஸ் வேற" என்று உரைத்தாலும் அவன் மனதில் உள்ள திட்டமே வேறு.
சுந்தரும் புன்முறுவலோடு, "அதுவும் சரிதான் தம்பி... நீங்க கண்டிப்பா ஒரு தடவையாவது நிச்சயம் தமிழ்நாட்டுக்குப் போயிட்டு வரணும்... அது உங்க முன்னோர்கள் அரசாண்ட ஊர்" என்று உரைத்தார். சுந்தருக்கு அவர்களின் குடும்ப வரலாறும் பெருமையும் நன்கு தெரிந்திருந்தது.
ஈஷ்வர் தெரிந்தோ தெரியாமலோ தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் செல்லப் போகிறான்.
அப்போது ஈஷ்வர் மீண்டும் அவந்திகாவை நோக்கி, "மாம்... நான் அங்க இருக்கிற வரைக்கும் என் கூட யாராச்சும் அசிஸ்ட் பண்ணணும்... பிகாஸ் மதி அவங்க சொந்த ஊருக்குப் போயிட்டு வரலாம்னு இருக்கான்... நானும் ஓகே சொல்லிட்டேன்" என்றான்.
"நோ பிராப்ளம்... தேவ்... இப்ப சூர்யா அங்கதானே இருக்கா... உன் விசிட் முடியற வரைக்கும் அவளை ஹெல்புக்கு வைச்சுக்கோ" என்று அவந்திகா உரைக்க அவனின் திட்டம் நன்றாகவே வேலை செய்தது.
ஆனால் சுந்தர் இப்போது அவசரமாக, "வேண்டாம் மேடம்... தம்பி வேற யாரையாச்சும் கூட வைச்சுக்கிட்டா பெட்டர்... சூர்யா சரியா வரமாட்டா" என்று மறுத்து பேச ஈஷ்வர் இதை எதிர்பாராமல் அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தான்.
"நீங்க ஏன் அப்படி சொல்றீங்கன்னு புரியுது சுந்தர்?" என்று அவந்திகா சொன்ன மறுநொடி, "எதனால அங்கிள் சூர்யா வேணாங்கிறார்?" என்று குழப்பமாய் கேட்டான் ஈஷ்வர்.
"நத்திங்... சூர்யாகிட்ட எவ்வளவு புத்திசாலிதனம் இருக்கோ... அவ்வளவு கர்வமும் இருக்கு... அவகிட்ட ஆர்டர் போட்டெல்லாம் நீ எதையும் சாதிக்க முடியாது... நீ அவளைக் கொஞ்சம் பொறுமையா ஹேன்டில் பண்ணணும்" என்று சொன்னதும் ஈஷ்வருக்கு கோபம் மூண்டது.
நமக்கு கீழ் வேலை செய்யும் ஒரு பெண்ணிற்கு இவ்வளவு இடம் கொடுத்ததன் விளைவுதான் அவள் தன்னையே உளவறிந்தாள் என்று எண்ணியவன் தன்னிடம் அவளின் கர்வமும் திமிரும் ஒருபோதும் எடுபடாது என்றும் எண்ணிக் கொண்டான்.
மொத்தத்தில் ஈஷ்வரின் திட்டம் இதுவரை சரியாகவே வேலை செய்தது. முக்கியமாய் மதியை தன் ரிசர்ச் டீமுக்கான ஏற்பாடுகளைச் செய்ய சொல்லி அனுப்பிவிட்டு அதற்கும் ஒரு பொய்யான காரணத்தை அழகாக தயார் செய்துவிட்டான்.
ஆனால் சுந்தரை வேறொரு கவலை பீடித்திருந்தது. சூர்யா ஈஷ்வருக்காக பணி புரிவது சரி வருமா? அதற்கு முதலில் அவள் சம்மதம் சொல்வாளா? ஏனெனில் ஈஷ்வரின் கர்வமும் சூர்யாவின் திமிரும் நேரெதிராய் சந்தித்து கொள்வது ஆபத்து என்று தோன்றிற்று. ஆதலால் அவர்கள் இருவரும் ஒத்து வேலை செய்வது சிரமம் என்றும் அதை விட முக்கியமான காரணம் சூர்யாவுக்கு எந்தக் காரணத்தினாலோ ஈஷ்வரைப் பிடிக்காது போயிருந்தது என்பதையும் அவர் நன்கறிவர்.
அதுமட்டுமின்றி சூர்யா யார் என்னவென்று பார்க்காமல் எடுத்தெறிந்து பேசிவிடுவாள். இதனால் அவர்களுக்கும் மகாதேவன் குடும்பத்துக்கும் காலங்கள் தாண்டிப் பிணைக்கப்பட்டிருந்த நம்பகமான உறவை அவளின் திமிரால் ஒரே நொடியில் தகர்த்துவிடுவாளோ என்ற அச்சம் வேறு அவருக்கு மலைப் போல் வளர்ந்து நிற்க, சென்னையிலிருக்கும் தன் மகளிற்குக் கைப்பேசியில் அழைப்பு விடுத்தார்.
சூர்யா தன் தந்தையின் எண்ணைப் பார்த்ததும் ஆச்சர்யத்துடன் அழைப்பை ஏற்று, "என்ன மிஸ்டர் சுந்தர்... திடீர்னு அதிசயமா பொண்ணு ஞாபகமெல்லாம்" என்று கேலியாய் கேட்டாள்.
அவளின் ஆரம்ப வாக்கியத்தைக் கேட்டதுமே கோபம் தலைக்கேறியபோதும் தான் பொறுமையாய் பேசியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு, "எனக்கு உன் ஞாபகம் எல்லாம் இருக்கு... நீதான் யாரைப் பத்தியும் கவலை இல்லாம ஊரைச் சுத்தி வந்திட்டிருக்க" என்று உரைக்க,
"இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு... நான் அம்மா வீட்டுல தங்குறதா?" என்று கேட்டாள்.
"நான் அதை பத்தி எல்லாம் பேச வரல... நான் சொல்றதை மட்டும் பொறுமையா கேளு" என்றார்.
"என்னைக்குப்பா... நீங்க சொல்றதை நான் கேட்டிருக்கேன்" என்றவள் மீண்டும் கேலியாகக் கேட்க,
இவளுக்கு எப்படி நிலைமையைப் புரிய வைப்பது என்று தெரியாமல், "தலையெழுத்து... பூர்வ ஜென்மத்தில நான் செஞ்ச பாவம்... நீ வந்து எனக்கு மகளா வாச்சுருக்க" என்று சுந்தர் புலம்ப சூர்யா சத்தமாய் சிரித்தாள்.
"அதென்னபா பூர்வ ஜென்மத்தில? இந்த ஜென்மத்தில மட்டும் நீங்க என்னவோ புண்ணியமா செஞ்சுட்டிருக்க மாதிரி" என்று சொல்ல அதற்கு மேல் சுந்தருக்கு இவளிடம் என்ன பேசுவதென்றே புரியாமல் மௌனமாகிவிட்டார்.
சூர்யா சிறுவயதில் தன் அம்மாவிடம் இருந்து சுந்தர் பிரித்து அழைத்து வந்ததும், பின்னர் தன்னைக் கவனித்து கொள்ளவேயில்லை என்ற கோபத்தையும் நேரம் கிட்டும் போதெல்லாம் அவரிடம் காட்டிப் பழித்தீர்த்து கொள்வது வழக்கமான ஒன்றுதான். இம்முறையும் அவ்வாறே அவள் நடந்து கொள்ள சட்டென்று எதிர்புறத்தில் மௌனம் கலைந்து, "சூர்யா" என்றழைத்தார் அவந்திகா.
சூர்யாவைக் கையாளும் திறமை அவந்திகாவுக்கு மட்டுமே உரியது என்று எண்ணிய சுந்தர் அந்தப் பொறுப்பை அவரிடமே விடுத்தார். இதை எதிர்பாராத சூர்யாவின் குரலிலிருந்த கிண்டல் கேலி எல்லாம் மறைந்து, "எஸ் மேடம்" என்றாள்.
"நாளைக்கு ஈஷ்வர் சென்னைக்கு வரப்போறான்... நீதான் எல்லா அரேஞ்மெண்ட்ஸையும் கவனிச்சிக்கணும் ... மோரோவர் மதி அவனோட நேட்டிவ் பிளேஸ் போயிருக்கான்... ஸோ நீ ஈஷ்வருக்கு கூட இருந்து எல்லா வொர்க்லயும் அசிஸ்ட் பண்ணனும்" என்று அவர் அதிகாரமாய் சொல்லி முடிக்க,
சூர்யாவிற்கு எண்ணிலடங்கா எரிச்சல் தோன்றியது. முதல் முறையாய் அவந்திகாவின் வார்த்தைக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டி இருக்கிறது என்று அவள் தயங்கினாள்.
சூர்யாவின் அமைதியை வைத்து அவள் மனதிலிருப்பதை யூகித்தவர்,
"என்ன சூர்யா ப்ராப்ளம்? தேவோட வேகத்துக்கும் புத்திசாலித்தனத்திற்கும் எப்படி நம்மால ஈடுகொடுக்க முடியும்னு யோசிக்கிறியா... உன்னால முடியாதுன்னா சொல்லிடு" என்றார்.
அந்த வார்த்தைகளில் சூர்யாவின் ஈகோ தூண்டப்பட, முடியாது என்று சொன்னால் தன்னைத் தானே குறைத்து கொண்டதாகிவிடும் என்று எண்ணியபடி,
"இல்ல மேடம்... ஐ வில் டூ இட்" என்று சம்மதித்தாள்.
இவர்கள் இருவரையும் சந்திக்க வைப்பதன் மூலமாக சூர்யாவை ஈஷ்வருக்குப் பிடித்துப் போக வாய்ப்பிருக்கிறது என சிறு ஆசை எதிர்பார்ப்பாய் துளிர்விட்டிருந்தது அவிந்திகாவிற்கு!
அதேநேரம் அவந்திகாவிடம் சூர்யா சம்மதம் தெரிவித்துவிட்டாளே ஒழிய அந்த ஈஷ்வரை நேரில் எதிர்கொள்ளவதை எண்ணினாலே வெறுப்பு தொற்றிக் கொண்டது. அவனைத் தன்னால் ஒரு நாள் கூட சகித்து கொள்வது சாத்தியமில்லை என்று எண்ணியவள் நாளை இந்தச் சந்திப்பை நடக்கவிடாமல் செய்துவிட முடியுமா என மூளையைக் கசக்கி யோசித்து யோசித்து அவள் இரவு உறக்கத்தைத் தொலைத்ததே மிச்சம்.
ஈஷ்வர் அன்று மாலை சென்னையில் உள்ள மகாபலிபுரம் கெஸ்ட் ஹவுஸுக்கு வந்தடைவான் என்ற செய்தி கிடைத்தது. தான் அவனுக்கு முன்பாகவே அங்கே சென்றடைய வேண்டும். ஈஷ்வர் வந்துவிட்டால் பிறகு தான் வேலையில் மும்முரமாக இறங்கிவிட நேரும் என்று எண்ணியவள் அதற்கு முன்னதாக வேறொரு வேலையை முடித்துவிட அரங்கநாதன் மருத்துவமனைக்குச் சென்றாள்.
அரங்கநாதன் மருத்துவமனை. இந்தப் பெயர் அபிமன்யுவை நினைவுப்படுத்த சட்டென்று கரிசன் சோழாவிற்கும் சென்னையிலிருக்கும் மருத்துவமனைக்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது என்று அந்த நினைவைத் தவிர்த்தாள்.
பின்னர் நர்ஸிடம் அர்ஜுனை சந்திக்கும் நேரத்தைக் கேட்டறிந்தாள். பத்து மணி வாக்கில் எப்போதுமே கூட்டமாய் இருக்கும் மருத்துவமனை இப்போதும் கூட்டமாகவே இருந்தது. ஆனால் அந்தக் கிழமையில் அர்ஜுன் வெளி நோயாளிகளைப் பார்ப்பதில்லை என்பதால் காத்திருப்பின்றி சந்தித்துவிடலாம் என்று நினைத்தாள்.
அர்ஜுனிடம் ரம்யாவின் காதலைப் புரிய வைத்துவிடவே அவள் எண்ணி அங்கே வந்தாள். அர்ஜுனைப் பார்க்க அவள் வெகு நேரம் காத்திருக்க எங்கே ரம்யாவின் கண்ணில் சிக்கிக் கொண்டாள் தான் எண்ணியதைச் செய்ய விடாமல் அவள் தடுத்துவிடுவாள் என்று தோன்றியது.
அர்ஜுனுக்காகக் காத்திருந்து காத்திருந்து கோபத்தில் நர்ஸிடம் சண்டை போட ஆரம்பித்தாள். பின்னர் சூர்யாவை அந்த நர்ஸ் அர்ஜுன் அறையிலேயே காத்திருக்க சொல்லிவிட்டு இன்னும் சில நிமடங்களில் வந்துவிடுவான் என உரைத்துவிட, அந்த நீண்ட காத்திருப்பு சூர்யாவுக்குள் அலுப்பை உண்டாக்கியது.
சில மணித்துளிகள் கழித்து கதவு திறக்கும் சத்தம் கேட்டு ஆர்வமாய் இருக்கையில் இருந்து எழுந்து நின்றவள் திரும்பி நோக்கிய போது அவளின் விழிகள் அபிமன்யுவைக் கண்டு திகைப்புற்றது.
அவனைக் கண்டதும் அவளுக்குள் ஏற்பட்டது சந்தோஷமா புல்லரிப்பா என்று உணர முடியாதபடிக்கு சந்தோஷம் உண்டானாலும் அவன் ஏற்படுத்திய அவமானம் மேலோட்டமாய் எல்லா உணர்வையும் கீழ் தள்ளிவிட்டுக் கோப உணர்வே ஆளுமைச் செய்தது.
அபிமன்யுவை கரிசன் சோழாவில் வேட்டி சட்டையிலேயே பார்த்து இன்று முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் பேண்ட் ஷர்ட் உடன் பார்த்து ஆச்சரியமடைந்தவளை அவனுமே விழிகள் அகலப் பார்த்து கொண்டிருந்தான்.
அங்கே நின்று கொண்டிருந்தது சந்தேகமின்றி அபிமன்யுதான். கரிசன் சோழாவில் இருந்த அபிமன்யு இங்கே எப்படி?
கரிசன் சோழாவில் அபிமன்யுவிற்கு குரங்கைப் பார்த்தாலும் அவள் நினைவு வர, குளத்தில் குளிக்க சென்றாலும் அவள் எண்ணம் எழ, ஏன் கடவுளை வணங்கும் போதும் அவளே அவனைத் தொந்தரவு செய்தாள். கண்களை மூடி தியானம் செய்தாலும் அவள் முகமே முன் தோன்ற அந்த எண்ணத்திலிருந்து மீளவே அவன் சென்னை வந்து சேர்ந்தான்.
அங்கே வந்தடைந்ததும் சகோதரனைப் பார்க்கும் ஆர்வத்தில் மருத்துவமனைக்கு வந்தவன் அர்ஜுன் அறைக்குள் நுழைய அவன் மனதை முழுதாய் ஆட்கொண்ட முகம் இப்போது அவன் எதிரே நிற்க வேறென்ன எண்ணிக் கொள்வான்.
அவள் தன் கற்பனையின் பிம்பம் என்றே தோன்றியது. அதற்கு இன்னொரு காரணம் அவள் முதல்முறையாய் அவன் பார்த்த அதே மஞ்சள் நிற சேலையில் பளிங்கு சிலையென நின்றுகொண்டிருக்க, அவளின் ஓயாமல் பேசும் இதழ்கள் இப்போது ஊமையாகி அதிர்ச்சியில் மூழ்கியிருந்தது அவன் எண்ணத்திற்கு சாதகமாய் அமைந்தது.
அவன் கற்பனை என்று எண்ணிய அழகிய பிம்பத்தை நோக்கியபடி அபிமன்யு முன்னேறி வர, சூர்யா இப்போது திகைப்பிலிருந்து மீண்டாள். அவனின் பார்வையில் கோபம் இல்லையே என்று குழம்பியவள் அது ஒருவிதமான ஏக்கம் என்பதையும் கண்டுகொண்டாள்.
என்னதான் செய்கிறான் பார்க்கலாம் என்று சூர்யா மௌனமாய் நின்றிருக்க, அவனோ காதல் உணர்வோடு அவளின் அருகாமையில் நெருங்கி வர அவளுக்குப் படபடப்பானது.
அவனோ அவளை தன் கற்பனை பிம்பம் என்றெண்ணி கரத்தால் அவள் கன்னத்தைத் தீண்ட எத்தனிக்கவும்,
இதை எதிர்பாரதவள் பட்டெனப் பின்னோக்கி நகர்ந்தபடி, "மிஸ்டர் அபி நான் ஒன்னும் உங்க இலூஷன் இல்ல... ஐம் ரியல்" என்று சொல்லி அவனை மீட்டெடுத்தாள்.
அபிமன்யுவும் தன் தவற்றை எண்ணி ஒரு அடி பின் வைத்து அதிர்ச்சியுற அந்த நொடி அவள் நிஜமாய் நிற்கிறாள் என எண்ணி ஏமாற்றம் கொள்வதா அல்லது இன்பம் கொள்வதா எனப் புரியாமல் திகைத்தான். மேலும் தான் இப்படி அவளின் நினைப்பில் ஏங்குவதைக் காட்டிக் கொடுத்துவிட்டோமே என்று அவன் தன்னைத் தானே கடிந்து கொள்ள, அந்த முகப்பாவனை அவன் தன்னை நினைத்து ஏங்கித் தவிக்கிறான் என்பதை அவளுக்கும் உணர்த்தியது.
"உங்க மைன்ட் பவருக்கு... நிஜம் எது... கற்பனை எதுன்னு... கூடவா தெரியல மிஸ்டர் அபி" என்று அவள் எள்ளி நகையாட,
அவனுக்குக் கோபம் கனலாய் ஏறியது. "என்ன? இங்கயும் உன் ஸ்பை வேலையைப் பார்க்க வந்தியா?" என்று பதில் கேள்விக் கேட்டு முறைத்து நின்றான்.
"ஸ்பை வேலை பார்க்க வந்தேன்னா... எனக்கென்ன வேற வேலையே இல்லன்னு நினைச்சீங்களா?" என்று அவள் கடுப்பாய் கேட்க,
"அப்புறம் எதுக்கு... நீ இங்க வந்த?" என்றவன் அவளை ஏளனமாய் பார்த்தான்.
"அதை எதுக்கு நான் உங்ககிட்ட சொல்லணும்?" என்று அவள் பதலடி கொடுக்க அவன் சினத்தோடு,
"என் கண் முன்னாடி வராதன்னு உன்கிட்ட அன்னைக்கே சொன்னேன்ல... திரும்பியும் என் முன்னாடி வந்து நின்னு எதுக்கு என்னை இரிடேட் பண்ணிட்டிருக்க" என்றான்.
"இத பாருங்க மிஸ்டர்... உங்க கண்முன்னாடி வர்றனுங்கிறதெல்லாம் என் மோட்டிவ் இல்ல... நான் வேறொரு வேலையா வந்தேன்... எதிர்பாராம நாம மீட் பண்ண வேண்டியதா போச்சு... அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?" என்றாள்.
"உன் மோட்டிவ் என்ன வேணா இருந்துட்டு போட்டும்... ஐ டோன்ட் கேர்... முதல்ல இங்கிருந்து வெளிய போ"
அவன் சொன்னதைப் பொருட்படுத்தாதவளாய், "நான் ஏன் இங்கிருந்து வெளிய போகணும்... அத சொல்றதுக்கு நீங்க யாரு மிஸ்டர்... அன் நான் ஒன்னும் உங்களைப் பார்க்க வரல... டாக்டர் அர்ஜுனைப் பார்க்க வந்திருக்கேன்" என்றாள் அழுத்தம் திருத்தமாக!
இப்போது அபிமன்யுவிற்கு சூர்யா இன்னும் அர்ஜுனைப் பார்த்ததில்லையா என்ற கேள்வி எழ அவள் எதற்காக இங்கே வந்தாள் எனச் சிந்தனையோடு சில நொடிகள் மௌனமாய் நின்றான்.
அந்த அறையில் சூழ்ந்த நிசப்தத்தைக் கலைத்தபடி, "ஹெலோ மிஸ்டர் அபி" என்று அழைத்து, "அடிக்கடி இமேஜுனேஷனுக்கு போயிடாதீங்க... கொஞ்சம் ரியாலிட்டிக்கும் வாங்க" என்றாள்.
அபிமன்யுவிற்கு அவள் மீது அதீத எரிச்சல் மூள, "சூர்யா வேண்டாம்... நீ உன் லிமிட்டை தாண்டிப் பேசிட்டிருக்க" என்றான்.
"நீங்க மட்டும்... அன்னைக்கு உங்க லிமிட்டை தாண்டி என்கிட்ட பேசல"
"அப்படி என்ன பேசுனேன்" என்று அவன் அவளை அலட்சியமாய் கேட்க,
"என்ன பேசுனீங்களா? என்னைப் பார்த்து போயும் போயும் உன்னை மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்து இம்பிரஸ் ஆனேனேன்னு சொல்லி என்னை இன்ஸல்ட் பண்ணல… போதாக்குறைக்கு உங்க கற்பனையில நம்ம இரண்டு பேருக்கும் கணவன் மனைவி ரிலேஷன்ஷிப் வேற... அதுவும் சரியா கூட அறிமுகம் ஆகாத என்கிட்ட எப்படி உங்களால இப்படி எல்லாம் பேச முடிஞ்சுது அபி... இட்ஸ் ஸோ இடியாட்டிக்!" என்று தன் மனதில் உள்ள கோபத்தை சரியான சமயம் பார்த்து காண்பித்துவிட்டு இதற்கு அவனால் என்ன பதில் பேச முடியும் என்று அலட்சியமாய் பார்த்தாள்.
"இடியாட்டிக்... ஆமாம் நான் இடியாட்டிக்தான்... பொய் சொல்லி ஏமாத்தி புத்திசாலின்னு பேர் வாங்குறதை விட... மனசில பட்டதை நேர்மையா பேசி... நான் இடியாட்டிக்காவே இருந்துட்டு போறேன்" என்று சொல்லிவிட்டு அவள் விழிகளுக்குள் நுழைந்து இதயத்தைத் துளைப்பதைப் போல் அவன் பார்க்க, அவன் பார்வையின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
இவனைத் தன்னால் சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு முறையும் தான்தான் தோற்று போகிறோம் என்ற எண்ணம் எழ இவனை எதற்கு சந்தித்து தொலைத்தோம் என்று உள்ளுர எரிச்சல் உண்டானது.
அப்போதுதான், 'இவன் எப்படி இங்கே?' என்று அவளின் மூளை தாமதமாய் கேள்வி எழுப்பியது.
மீண்டும் தன் பார்வையை அவனிடம் திருப்பியவள், "ஆமாம்... நீங்களும் டாக்டர் அர்ஜுனைதான் பார்க்க வந்தீங்களா?" என்று கேட்க,
அவன் தன் விழிகளைச் சுருக்கி, "நீ தெரிஞ்சுதான் கேட்கிறியா இல்ல தெரியாமல்தான் கேட்கிறியா? சத்தியமா எனக்கு புரியல" என்று உரைக்க, அந்தப் பதிலின் அர்த்தமென்ன என்பதை ஆழமாய் சிந்திக்க ஆரம்பித்தாள்.
அபிமன்யுவைப் பார்த்ததிலிருந்து சண்டை போடுவதிலேயெ மும்முரமாய் இருந்துவிட்டதால் மூளை யோசிக்க மறந்தது. இப்போது மீண்டும் அரங்கநாதன் மருத்துவமனை என்ற பெயர் நினைவுக்கு வந்தது.
அந்தச் சமயம் பார்த்து கதவைத் திறந்து அர்ஜுன் உள்ளே நுழைந்தான்.
தன் அறைக்குள் நின்றிருந்த அபிமன்யுவைப் பார்த்தவுடன் அர்ஜுன் வியப்போடு கூடிய ஆனந்தத்தில், "டே... அபி... எப்போ வந்த... சொல்லவேயில்ல" என்று அவனை நெருங்க சூர்யா தன் கண்கள் காண்பது உண்மைதானா என அதிர்ச்சியானாள்.
இருவரையும் அவள் மாறி மாறி பார்க்க அவர்களின் ஒரே மாதிரியான தோற்றம்... அபிமன்யு ஆரம்பத்திலிருந்து தன்னை சந்தேகமாய் கேள்வி எழுப்பியதன் காரணத்தை அவளுக்கு விளங்க வைத்தது.
அபிமன்யு அர்ஜுனின் கேள்விக்குப் பதிலுரை தராமல் சூர்யாவின் குழப்பமான பார்வையைக் கவனித்து கொண்டிருந்தான்.
அப்போது அர்ஜுன் சூர்யாவைப் பார்த்து, "யார் அபி இவங்க?" என்று வினவினான்.
சூர்யா அதிர்ச்சியிலிருந்து மீளாமல் நின்றிருக்க அபிமன்யு அந்தச் சமயத்தை சாதகமாக்கியவனாய் சூர்யாவை நோக்கி கேலி புன்னகையோடு, "நீ மீட் பண்ணனும் சொன்ன டாக்டர் அர்ஜுன்" என்று உரைத்தான்.
அந்த நிலையில் அவள் என்ன பேசுவதென்று புரியாமல் விக்கித்து நின்றாள்.
அவள் தன் தவறை உணர்ந்தவளாய் மனதிற்குள், 'அபியும் அர்ஜுனும் பிரதர்ஸா? இப்போ அபி என்னப்பத்தி தப்பு தப்பா அர்ஜுன்கிட்ட சொல்லிட்டா... அப்புறம் ரம்யாவோட லவ்...' என்று நினைத்து தன்னைத் தானே நொந்து கொள்ள அபியின் பார்வை அவளின் தவிப்பை கவனித்தது.
அர்ஜுன் மீண்டும் அபியை நோக்கி, "யாருன்னு சொல்லவேயில்ல... என்ன மேட்டர்?" என்று கேட்க,
"அவங்களே சொல்லுவாங்க... ஏதாவது புது நேம் யோசிச்சு" என்று சொல்ல சூர்யா அவன் தன்னைக் குத்திக் காட்டிப் பேசுகிறான் என்பதை உணர்ந்தாள். இப்போது தன் சூழ்நிலை அவனுக்கு சாதகமாய் போய்விட்டதை எண்ணிப் பேச வார்த்தையின்றி எப்படி தன் தவறைச் சரி செய்வது என்று யோசனையில் ஆழ்ந்தாள்.
அர்ஜுன் அபிமன்யு சொல்ல வருவதின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள முடியாமல், "சரி முதல்ல உட்காருங்க... பேசுவோம்" என்று இருவரை நோக்கியும் உரைத்துவிட்டு தன் இருக்கையை நோக்கிச் செல்ல,
அபிமன்யு மேலும் சூர்யாவிடம்,"என்ன நேம் சொல்லலாம்னு யோசிக்கிறியா? நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா?" என்று அவளிடம் மெலிதாக உரைத்து பரிகசித்தான்.
"ப்ளீஸ் அபி அர்ஜுன்கிட்ட என்னைப் பத்தி எதுவும் சொல்லாதீங்க?" என்று கெஞ்சலான முகப்பானையோடு கேட்க, அபிமன்யு அவளை வியப்பாய் நோக்கினான்.
அர்ஜுன் தன் இருக்கையில் அமர்ந்துவிட்டு அவர்கள் இன்னும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அமரச் சொன்னான்.
அபிமன்யுவைப் பார்த்து சூர்யா பார்வையால் கெஞ்சிபடியே இருக்கையில் அமர, அதை அர்ஜுனும் கவனித்தான். அபிமன்யுவோ இத்தனை நேரம் திமிரின் உச்சாணி கொம்பில் நின்றிருந்தவளா இப்போது தன் கர்வத்தை விட்டு தன்னிடம் இறங்கி வந்து கெஞ்சிகிறாள் என யோசனையோடு அமர்ந்தான்.
அபிமன்யு அவளின் தவிப்பையே கண்கொட்டாமல் பார்க்க அர்ஜுன், "அபி... என்னையும் இங்கக் கொஞ்சம் பார்க்கலாம்" என்று கிண்டல் செய்ய, இப்போது தன் முன்னிலையில் அர்ஜுன் அமர்ந்திருப்பதை அபி உணர்ந்து பார்வையைத் திருப்ப,
"ம்ம்ம்... இப்போ சொல்லு அபி " என்று அர்ஜுன் மீண்டும் கேட்டான்.
சூர்யா அவன் பதிலை எதிர்பார்த்தபடி சொல்ல வேண்டாம் என கண்ணாலயே சமிஞ்சைக் காட்டிக் கொண்டிருக்க அவனும் என்ன காரணத்தினாலோ அவள் சொல்வதைக் கேட்க எண்ணி,"இல்ல அர்ஜுன் எனக்கு இவங்களை யாருன்னு தெரியாது... அவங்க உன்னைதான் பார்க்க வந்திருக்காங்க" என்று உரைத்தான்.
"தெரியாதா?" என்று அர்ஜுன் அதிர்ச்சியானான். அவர்கள் இருவரும் கண்ணாலயே பேசிக் கொள்வதைதான் அவன் கவனித்தானே. பிறகு ஏன் அபிமன்யு அவளைத் தெரியாதென்கிறான் என யோசித்தபடி அவளை நோக்கினான்.
32