மோனிஷா நாவல்கள்
Meendum Uyirthezhu - 39
Quote from monisha on September 19, 2022, 1:04 PM39
காதல் நோய்
அரங்கநாதன் மருத்துவமனை எப்போதும் போல் பரபரப்பு குறையாமல் இயங்க, அர்ஜுன் மும்முரமாய் நோயாளிகளைக் கவனித்து கொண்டிருந்தான். எப்போதும் போல் அவனுக்காக காத்திருப்போரின் வரிசை நீண்டதாய் இருந்தது. இருப்பினும் அவனின் பொறுமையும் கவனிப்பும் வியப்புக்குரியதாகவே பேசப்பட்டது. ஆனால் செவலியர்கள்தான் அவனுக்காக வரும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் சலித்துக் கொண்டனர். இந்த விஷயம் அர்ஜுனின் செவிக்கு எட்டிவிட எல்லா நோயாளிகளும் சென்றபின் செவலியர்களை அழைத்து கொஞ்சம் அதீத கண்டிப்போடுப் பேசி அனுப்பி வைத்தான்.
பின்னர் தன் இருக்கையில் அமர்ந்தபடி ஓய்வாக தன் கைப்பேசியினை எடுத்து அபிமன்யுவிற்கு அழைப்பு விடுத்தான்.
மறுபுறத்தில் "சொல்லு அர்ஜுன்" என்று அபிமன்யு கேட்க,
அவன், "கிளம்பிட்டியா ?" என்று வினவினான்.
"ம்ம்ம்... இப்பதான் கொஞ்ச நேரமாச்சு... அம்மாதான் ரொம்ப ஃபீல் பண்றாங்க... நீ கொஞ்சம் பேசிப் புரிய வைடா" என்றான்.
"நட்ட நடுராத்திரில போய் காதலியை மட்டும் சமாதான படுத்த முடிஞ்சது... அம்மாவை சமாதானப்படுத்த முடியல... அதுக்கு மட்டும் நான் வேணுமா?!"
"டேய் அர்ஜுன்... இதான் சான்ஸ்னு குத்திக்காட்டிறியா?!"
"சேச்சே இல்ல... சரி சொல்லு... காலையில எதுவும் கேட்க முடியல" என்றான்.
"என்ன கேட்க முடியல... என்னடா சொல்லணும்?"
"அதான் சார் நேத்து சொல்ல சொல்ல கேட்காம ரம்யா வீட்டு அட்ரெஸ் வாங்கிட்டு போனீங்களே... சூர்யாவை மீட் பண்ணி பிரப்போஸ் பண்ணியா?" என்று கேட்டான்.
அபிமன்யு சற்று நேரம் மௌனமாகிட அர்ஜுன் உடனே "என்னாச்சு... ஸைலன்டா இருக்க... சூர்யாகிட்ட அடி கிடி வாங்கினியா" என்று கேட்டுச் சிரித்தான்.
"யாரு... அவ என்னை அடிக்கப் போறாளாக்கும்... நான்தான் அவ பண்ண வேலைக்கு கன்னத்தில ஒன்னு கொடுத்திருக்கனும்... மிஸ்ஸாயிடுச்சு" என்றான்.
அர்ஜுன் பதறியபடி, "அப்படி என்னடா நடந்துச்சு?!" என்று கேட்க
"எவ்வளவு திமிர் இருந்தா நான் விளையாட்டுக்குதான் பிரப்போஸ் பண்ணன்னு என்கிட்டயே சொல்வா" என்றான் கோபத்தோடு.
"அப்போ இரண்டு பேரும் சண்டைதான் போட்டுக்கிட்டீங்களா!"
"என்னைப் பத்தி உனக்கு தெரியாதா அர்ஜுன்... நான் போய் சண்டை போடறதாவது... அவகிட்ட சமாதானமா பேசி நல்லா ஸ்டிராங்கா புரிய வைச்சிட்டேன்... இனிமே என்கிட்ட விளையாடமாட்டா" என்றான்.
"எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யமா இருக்கு அபி... உங்க இரண்டு பேரோட லைஃப் ஸ்டைலும் வேற வேற... அதுவுமில்லாம கரிசன் சோழாவும் மும்பையும் வேற வேற உலகம்... அப்படி இருக்க ஒருத்தரை ஒருத்தர் இந்தளவுக்கு புரிஞ்சுக்கிட்டு காதலிக்க முடியுமா?" என்று வியந்து கேட்டான்.
"நீ ஒரு விஷயத்தைப் புரிஞ்சிக்கோ அர்ஜுன்... வேற வேற உலகம்... வேற வேற வாழ்க்கை முறை... ஆனா நாங்க இரண்டு பேரும் வேற வேற இல்ல... சூர்யாவைப் பார்த்த அந்த நிமிஷமே நான் முடிவு பண்ணிட்டேன்... அவதான் என் பொண்டாட்டின்னு... எங்களுக்குள்ள இருக்கிற புரிதலும் காதலும் இன்னிக்கு நேத்து ஏற்பட்டதுன்னு தோனல......
அதை எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னும் தெரியல... அவளோட முகம் நான் அவளைப் பார்த்த பிறகு எனக்குள்ள பதிஞ்சதில்ல... ஏற்கனவே என் மூளைக்குள்ள ரொம்பவும் அழுத்தமா பதிவாகியிருந்த முகம்னு தோனுது... பூர்வ ஜென்ம பந்தம்னு சொல்வாங்களே அந்த மாதிரி... உங்க மெடிக்கல் டேர்ம்ஸ்ல சொல்லனும்னா... ஜெனிட்டிக் மெமரி " என்றான்.
"ஜெனிட்டிக் மெமரியா... என்னடா உளற... காதல் வந்ததும் நீ என்ன லூசாயிட்டியா?" என்று கேட்டு அர்ஜுன் சிரிக்க,
"உனக்கு இதெல்லாம் புரியாது அர்ஜுன்... புரிய வைக்கவும் முடியாது... பிகாஸ் உங்க மெடிக்கல் ஸைன்ஸை பொறுத்த வரை... மனிதனுடைய உறுப்புகள்தான் உடம்பை இயக்குது... பட் அது மட்டுமே இல்லன்னு சித்தம் சொல்லுது... அதை எல்லாம் தாண்டி ஒரு பவர் இருக்கு... பூமியை இயக்குகிற பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயம் போல புரிந்து கொள்ள முடியாத ஒன்னு அது" என்றான்.
"பவருங்கிற... ஆகாய்ங்கிற... இப்ப என்னதான் சொல்ல வர்ற"
"ம்ம்ம்... மனிதனையும் பஞ்ச பூதங்கள்தான் இயக்குது... அதுல ஆகாயம்ங்கிறது மனிதனோட எண்ணங்கள் மாதிரி... எது அழிவுப் பெற்றாலும் ஆகாயம் அழியாது... அப்படிதான் எண்ணங்களும்... எங்கயோ எப்பவோ தொலைச்சிருப்போம்... அது திடீர்னு நம்ம கைக்குக் கிடைக்கும்ல... அப்படி ஒரு உறவு எனக்கும் சூர்யாக்கும்... நீங்க சொல்ற மாதிரி அது வெறும் ஹார்மோன்ஸ் செக்ரீஷன் இல்ல... இட்ஸ் பியான்ட் தட்" என்று உணர்வுபூர்வமாய் அபிமன்யு விவரிக்க,
"அபி... வேண்டாம்… நீ சொல்றதை எல்லாம் கேட்டா நான் படிச்சதெல்லாம் மறந்திடும்... விட்டுடு" என்றான்.
"கரெக்ட்... அதுதான் ஒரு சித்த வைத்தியனுக்கும் டாக்டருக்கும் உள்ள வித்தியாசம்... நீங்கப் படிக்கிறீங்க... நாங்க வாழ்றோம்... நல்லா கேட்டுக்கோ அர்ஜுன்… நீ டாக்டரா இருக்கிற வரைக்கும் சத்தியமா உன் காதலை பிரப்போஸ் பண்ணவே மாட்ட... முதல்ல உன் கோட்டை கழட்டி வைச்சிட்டு... அர்ஜுனா மட்டும் ரம்யாகிட்ட பேசு... அப்புறம் நான் சொன்னதெல்லாம் உனக்கு தானா புரியும்... சரி அர்ஜுன்... ஃபோனை வைச்சிடு... நான் கரிசன் சோழாக்கு ரீச்சானதும் உன்னைக் கூப்பிடுறேன்" என்றான்.
"ம்ம்ம்... ஓகே அபி" என்று சொல்லியபடி இருவரும் தங்கள் உரையாடல்களை முடித்து கொள்ள, அர்ஜுன் அபிமன்யு சொன்னதை எண்ணி சிந்தனையில் ஆழ்ந்தான்.
அர்ஜுன் அபிமன்யு சொன்னதை எண்ணியபடி தன் அறையின் ஜன்னலோரமாய் சாய்ந்து நிற்க அப்போது ரம்யா உள்ளே வர அனுமதி கேட்டாள்.
அவளின் வரவை எதிர்நோக்கியே அவன் காத்திருக்க கொஞ்சம் ஆர்வமாய், "கம்மின் ரம்யா" என்றழைத்தான்.
ரம்யா அவன் இருக்கையில் காணாமல் தேடியவள் அவன் ஜன்னலோரமாய் சாய்ந்து நின்றிருக்க அவன் முகத்தைக் கூட பார்க்காமல்,
"நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ண வேண்டியவங்க ரிப்போர்ட்ஸ்... இதை செக் பண்ணிட்டு... பேஷன்ட்ஸையும் ஒருதடவை பார்த்திடுங்க" என்று சொல்லி ஒரு ஃபைலை மேஜை மீது வைத்துவிட்டு அவனைக் கண்டுகொள்ளாமல் வெளியேற அவளின் மீது அவனுக்கு கோபம் உண்டானது.
அவளை அழைக்கலாம் என அவன் யத்தனிக்கையில் அவளே அவன் புறம் திரும்பி, "சாப்பிட்டீங்களா?" என வினவினாள்.
மனதில் காதலை வைத்து கொண்டு அதை தெரிவிக்காமல் ஏதோ கடமைக்கென்று பேசுவது போல் நடிப்பவளை என்ன செய்யலாம் என அர்ஜுன் யோசித்து கொண்டிருக்க மீண்டும் அவள், "உங்களைதான் டாக்டர்... சாப்பிட்டீங்களான்னு கேட்டேன்" என்று கேட்க அர்ஜுன் அவளின் மீதான் பார்வையை எடுக்காமல், "இல்ல இனிமேதான்" என்றாள்.
"லேட்டாகுதுல... சாப்பிட்டுருங்க" என்று சொல்ல அவளின் அந்த அலட்சியப் போக்கு அவனை ரொம்பவும் காயப்படுத்தியது. அவள் மீண்டும் அந்த அறையைவிட்டு வெளியேற போக, "ரம்யா" என்று அழைத்தான்.
அவள் மேலே செல்லாமல் நின்றிடத்திலிருந்து திரும்பி, "ம்ம்ம்... சொல்லுங்க டாக்டர்" என்றாள்.
அர்ஜுன் அவளை நோக்கி "ஒரு விஷயம்" என்று சொல்லும் போதே அவளோ இடைமறித்து, "கொஞ்சம் வொர்க் இருக்கு அப்புறமா ஈவனிங் பேசுவோமா" என்று தவிர்த்தபடி மீண்டும் அவசரமாய் கிளம்ப யத்தனிக்க இன்னும் இன்னும் அவனுக்குக் கோபம் பெருகியது.
"மேடம் எப்போ ஃப்ரீன்னு சொன்னா நான் வேணா அப்ப வந்து மீட் பண்ணட்டுமா?" என்று அவன் சொன்ன நொடி அதிர்ச்சியோடு அவள் திரும்பி நோக்க,
அவன் கையைக் கட்டியபடி அவளைக் கூர்மையாய் நோக்கிக் கொண்டிருந்தான். அந்தத் தோரணையில் கொஞ்சம் மிரட்சியடைந்தவளிடம் மீண்டும், "உங்ககிட்ட பேசிறதுக்கு அப்பாயின்மென்ட் ஏதாச்சும் வாங்கணுமா மிஸ் ரம்யா?" என்று கேட்டான்.
"சாரி டாக்டர்... ஏதோ டென்ஷன்ல... சொல்லுங்க" என்று கேட்டு பதட்டத்தோடு நின்றாள். அர்ஜுனின் பார்வை அவளிடம் மட்டுமே இருக்க ரம்யாவிற்கு அவனின் பேச்சும் பார்வையும் கொஞ்சம் புதிதாய் தோன்றியது. ஏற்கனவே நர்ஸ்களிடம் அவன் கோபமாய் நடந்த தகவல் அவளுக்குள் அச்சத்தைத் தோற்றுவித்தது.
அர்ஜுன் சலிப்போடு, "டாக்டர் டாக்டர்னு கூப்பிடாத ரம்யா... கால் மீ அர்ஜுன்" என்றுரைக்க அவள் புரியாமல், "அதெப்படி டாக்டர்" என்றவளை அவன் முறைத்தபடி, "டாக்டர் இல்ல... அர்ஜுன்" என்றான் அழுத்தமாக.
ரம்யாவிற்கோ புதிதாய் ஏன் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று எண்ணியபடி, "சரி சொல்லுங்க அர்ஜுன்" என்றாள்.
அவனோ தயக்கத்தோடு, "அது... எப்படி உனக்கு புரியிற மாறி சொல்றது" என்று யோசிக்க,
"ஏதுவாயிருந்தாலும் பரவாயில்ல அர்ஜுன், சொல்லுங்க" என்றாள்.
அர்ஜுன் யோசனையாக, "ஐம் நாட் ஃபீலிங் வெல் ரம்யா... என்னமோ சரியில்ல... ரெஸ்டலஸ்ஸா இருக்கு... சரியா பேஷண்ட்ஸை கூட பார்க்க முடியல... சாப்பட பிடிக்கல... தூக்கம் வரமாட்டேங்குது" என்று பொய்யான முகப்பாவனையோடு உரைக்க ரம்யா அதிர்ந்தபடி, "உங்களுக்கா டாக்டர்?" என்று கேட்டவளை அவன் முறைக்க,
"சாரி சாரி... அர்ஜுன்..." என்றாள்.
பின்னர் தவிப்போடு, "நான் அப்பவே நினைச்சேன்... நீங்க ரெஸ்டில்லாம எப்ப பாரு பேஷண்ட்ஸையே கவனிச்சுக்கிட்டு... அதை பத்தியே யோசிக்கிட்டு... டைமுக்கு சாப்பிடாம... தூங்காம உடம்பைக் கெடுத்துக்கிட்டீங்க... சரி இப்ப என்னதான் பண்ணுது... பீவரிஷ்ஷா இருக்கா" என்று கேட்டாள்.
அவனோ தனக்குள் புன்னகையித்தபடி "எனக்கென்னன்னு என்னாலயே டைக்னைஸ் பண்ண முடியல... ரம்யா" என்று கூற,
ரம்யா அக்கறையோடு, "என்னதான் அப்படி" என்று சொல்லி அவன் கரத்தைப் பற்றி பல்ஸை சரி பார்க்க அர்ஜுனின் கண்களில் வெளிப்பட்ட குறும்புத்தனத்தை அவள் கவனிக்கவில்லை.
"பல்ஸ் நார்மலாதானே இருக்கு" என்று சொல்லி அவனை அவள் நிமிர்ந்து நோக்க அர்ஜுன் தலையசைத்தபடி, "நோ ரம்யா... சம்திங் ராங்... இப்ப கூட ஒரே படபடப்பா இருக்கு... மூச்சு வாங்கிற மாதிரி இருக்கு" என்று உரைத்தான்.
ரம்யா தெளிவற்ற நிலையில், "பிபி ரைஸ்ஸாகி இருக்குமோ... நீங்க முதல்ல இப்படி வந்து உட்காருங்க" என்று சொல்லி அவனை இருக்கையில் அமரச் சொல்லி அருகில் நின்று பிபியை சரி பார்த்தாள்.
அர்ஜுனோ அந்தத் தருணத்தை ரசித்தபடி இருக்க ரம்யாவோ, "பிபி கூட நார்மலாதான் இருக்கு... யூ ஆர் பெர்ஃபெக்ட்லி அல்ரைட்... நீங்க வேறெதோ குழப்பத்தில" என்று சொல்லி முடிப்பதற்கு முன்னதாக,
"நோ ரம்யா... ஐம் நாட் ஆல்ரைட்... உனக்கு நான் சொல்றது புரியமாட்டேங்குது" என்றான்.
அர்ஜுனின் முகப்பாவனையைக் கவனிக்காமல் ரம்யா யோசித்துவிட்டு, "ம்ம்ம்... நான் போய் டாக்டர் சந்திருவைக் கூட்டிட்டு வர்றேன்... பெட்டர் ஹி கேன் டைக்னைஸ்" என்று செல்லப் பார்த்தவளின் கரத்தை இறுக்கமாய் பற்றிக் கொண்டு குறும்புத்தனமாய் புன்னகையை உதிர்க்க, அவனின் பார்வை அவளைக் காந்தமாய் இழுப்பதை வெளிப்படுத்த முடியாமல் அவள் தவிப்புற்றாள்.
அவனோ அவள் அருகாமையில் எழுந்து நின்றபடி, "உன்னைத் தவிர வேறு யாராலயும் எனக்கென்னனு டைக்னைஸ் பண்ண முடியாது." என்றான்.
ரம்யா அவன் பார்வையையே ஒருவாறு புரிந்து கொண்டவளாய், "அப்படி என்ன அர்ஜுன்... யாராலையும் டைக்னைஸ் பண்ண முடியாத டிஸ்ஸீஸ்" என்று கேட்டுப் புருவத்தை உயர்த்தினாள்.
"இன்னுமா உன்னால் கண்டுபிடிக்க முடியல" என்று அவன் ஏக்கமாய் பார்த்தான்.
அவன் எண்ணத்தைக் கணித்த போதும் அவள் அலட்சியத்தோடு, "எனக்கு தெரிஞ்ச வரைக்கும் உங்களுக்கு ஒன்னுமில்ல அர்ஜுன்... நீங்களா ஏதாச்சும் கற்பனை பண்ணிக்காதீங்க" என்றாள்.
"இந்த நோய் இப்படி எல்லாம் டெஸ்ட் பண்ணிக் கண்டுபிடிக்க முடியாது" என்றான்.
"பின்ன வேற எப்படி?" என்று அவள் குழப்பமாய் கேட்க,
"என் ஹார்ட் பீட்டை ஃபீல் பண்ணி பாரு ரம்யா... உனக்கு புரியும்" என்றான்.
ரம்யா வேடிக்கையாகத் தலையசைத்து, "ஓ... ஓகே... ஹார்ட் பீட்டையும் செக் பண்ணிட்டா போச்சு" என்று சொன்னபடி அவள் ஸ்டெத்தஸ்கோப்பை கையில் எடுக்க போனவளின் கரத்தைத் தடுத்து,
"ஸ்டெத்ஸ்கோப்பில ஹார்ட் பீட்டை கேட்கதான் முடியும்... ஃபீல் பண்ண முடியாது..." என்று சொல்லிவிட்டு அவளின் வளை கரங்களை தன் கையால் அவனின் இடதுபுற மார்பகத்தின் புறம் வைத்து பிடித்துக் கொள்ள உணர்வுகளால் கட்டுண்டு அவன் விழிகளில் மெய்மறந்தவள் தன்னை மீட்டுக் கொள்ள முடியாமல் நிற்க அர்ஜுன், "இப்பையாச்சும் புரிஞ்சிதா" என்று கேட்டான்.
ரம்யா சுதாரித்து கொண்டு அவளின் கரத்தை மீட்க முயன்றபடி, "அர்ஜுன் ப்ளீஸ்... யாராச்சும் வந்திர போறாங்க... கையை விடுங்க" என்றாள்.
"என் அனுமதி இல்லாம யாரும் என் ரூமூக்குள்ள வர முடியாது... நீ சொல்லு... இப்பயாச்சும் உன்னால டைக்னைஸ் பண்ண முடிஞ்சதா" என்று கேட்டான்.
அவனோ அவள் தவிப்பை உணராமல் பிடிவாதமாய் அவள் பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். ரம்யா பதில் சொல்லாமல் பேச்சற்று நிற்க, "இப்படியே அமைதியா இருந்தா என்ன அர்த்தம்... நான் உன் மனசை புரிஞ்சுக்கலேனுதானே கோபமா இருந்த... இப்போ நான் என் மனசுல இருக்கிற காதலை உனக்கு புரிய வைச்சிட்டேன்... இப்போ நீதான் சொல்லணும் ரம்யா" என்று அவன் மீண்டும் அவள் பதிலை எதிர்நோக்க,
ரம்யாவிற்கு தேகம் சில்லிட்டுப் போக பேச்சு வராமல் நின்று அவனை மிரண்டபடி பார்த்து கொண்டிருந்த சமயம் அர்ஜுன் மேஜை மீதிருந்த ஃபோன் ஒலிக்க, அவள் கரத்தை விடுத்துவிட்டு ஃபோனை எடுத்துப் பேசினான்.
"தப்பிச்சோம்" என்று அறையை விட்டு வெளியேற பார்த்தவளைக் கண்ணசைவால் போகவிடாமல் தடை செய்ய இப்போதைக்கு தன்னை இவன் லேசில் விடமாட்டான் போலிருக்கிறதே என அச்சம் கொண்டவள் தன் மனதில் உள்ளதை எல்லாம் எவ்விதம் அவன் தெரிந்து கொண்டிருக்கிறான் என எண்ணி யோசனையில் ஆழ்ந்தாள்.
அவனோ பேசி முடித்த பின்னர் மேஜை மீதிருந்தப் பொருட்களை ஒழுங்குபடுத்திவிட்டு கோர்ட்டை எடுத்து கொண்டு அவள் முன்னே வந்து கம்பீரமாய் நின்றவன்,
"நான் கொஞ்சம் வெளியே கிளம்பணும்... வர லேட்டாயிடுச்சுன்னா... ஈவனிங் வர பேஷண்ட்ஸை நீ பார்த்துக்கோ ஓகேவா" என்று கேட்க ரம்யா தலையை மட்டும் அசைத்தாள்.
அவள் கிளம்பிவிடப் போகிறான் என நிம்மதி அடைய அர்ஜுன், "சரி நான் கேட்டதுக்கு சீக்கிரம் பதில் சொல்லு... நான் கிளம்பணும்" என்றான்.
ரம்யா மனதிற்குள், 'இவன் என்ன விடாக் கொண்டனாய் இருக்கிறான்' என எண்ணியபடி அவனை நோக்கி, "இப்போ நீங்க போயிட்டு வாங்க... நாம அப்புறம் பேசுவோம்" என்று தவிர்க்க,
"ஓகே பேசிறது அப்புறம் பேசுவோம்... ஆனா நான் உனக்கு கொடுக்க வேண்டியது ஒன்னு இருக்கு" என்றான்.
"என்னது அர்ஜுன்?" என்று அவள் ஆர்வமாய் கேட்க,
"டாக்டர் ஃபீஸ்"
"ஃபீஸா... எதுக்கு?" என்று ரம்யா அதிர்ச்சியடைய,
"எனக்கு ட்ரீட்மன்ட் பார்த்துட்டு இப்போ ஃபீஸ் எதுக்குன்னு கேட்டா எப்படி?" என்றாள்.
"விளையாடாதீங்க அர்ஜுன்... முதல்ல கிளம்புங்க" என்று அங்கிருந்து செல்ல பார்க்க அவன் வழிமறித்து நின்றான்.
"அர்ஜுன் இது ஹாஸ்பிட்டில்?" என்றாள் பதட்டத்தோடு
"எனக்கு தெரியாதா இது ஹாஸ்பிட்டல்னு... நான் ஃபீஸ்தானே கொடுக்குறேன்னு சொன்னேன்... கிஸ்ஸா கொடுக்கிறேன்னேன்... எதுக்கு இவ்வளவு பதற்ற" என்று கேட்டான் இறுக்கமான பார்வையோடு.
ரம்யாவோ என்ன செய்ய போகிறானோ எனப் பதட்டமாக நின்றாள்.
அர்ஜுன் அவளிடம், "எனக்கு டைம் இல்ல... நான் கிளம்பணும்... சீக்கிரம் கண்ணை மூடு" என்றான்.
"எதுக்கு கண்ணை மூடணும்" என்று கேட்டாள்.
"ப்ச்... சும்மா கேள்வி கேட்காம கண்ணை மூடு" என்று மிரட்ட, வேறு வழியில்லாமல் ரம்யா விழிகளை மூடிக் கொண்டாள்.
அர்ஜுனும் அபிமன்யுவும் வேறு வேறு ரூபமாய் நின்றாலும் ஒர் கருவில் ஜனித்தவர்கள் என்று அவ்வப் போது நிருபித்துவிடுகின்றனர். ஆனால் அர்ஜுன் அவன் காதல் முத்திரையை வேறுவிதமாய் பதிவிட்டான்.
விழிகள் மூடியிருந்த ரம்யாவின் கரத்தைப் பற்றி ஒரு அழகிய காதல் சின்னம் கொண்ட தங்க மோதிரத்தை அவள் விரலில் மாட்டிவிட்டான்.
ரம்யா தன் இமைகளைத் திறந்து வியப்பாய் பார்த்து கொண்டிருக்க அர்ஜுன் புன்னகையோடு, "சாரி...எனக்கு காதல் வசனமெல்லாம் பேச வராது... ஷார்ட்டா சொல்றேன்... நீ என் லைஃப் முழுக்க வேணும் ரம்யா... ஒரு ஃப்ரண்ட்டா... பிலாஸஃபரா... வைஃப்பா... எல்லாமுமா வேணும்... " என்றான்.
ரம்யாவோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனந்தத்தோடு சற்று நேரம் ஸ்தம்பித்து நின்றவள் இப்போது தான் பேசியே ஆக வேண்டும் என மனதைரியத்தை வரவழைத்து கொண்டு,
"தேங்க்ஸ் அர்ஜுன்... தேங்க்யூ சோ மச்... இந்த நிமிஷத்துக்காகதான் நான் இத்தனை நாள் ஏங்கிட்டிருந்தேன்... ஏன் காத்திட்டிருந்தேன்னு சொல்லனும்... இது போதும்... உங்க வாழ்க்கை முழுக்க நான் கூடவே இருப்பேன்... நீங்க எதிர்பார்த்த எல்லாமுமாய்..." என்றாள்.
அர்ஜுன் புன்னகையோடு, "ம்ம்ம் அட்லாஸ்ட்... நீ உன் மனசிலிருக்கிறதை சொல்லிட்ட ரம்யா... பட் எனக்கு நீ தேங்க்ஸ் சொல்ல கூடாது... உன் சிஸ்டர் சூர்யாவிற்குதான் சொல்லணும்... அவதான் எல்லாத்துக்கும் காரணம்" என்று உரைக்க ரம்யா யோசனையாக நின்றாள்.
அவன் அவசரமாய், "ஓகே ரம்யா... பை" என்று சொல்லி விடைப்பெற்றான்.
ரம்யா புரியாமல் அர்ஜுன் எதற்கு தன்னை சூர்யாவிற்கு நன்றி சொல்ல சொல்கிறான் என்று சிந்தித்தாள்.
எதுவாயிருந்தாலும் சூர்யாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என எண்ணி வேலையில் ஆழ்ந்தாலும் அவள் மனமோ அர்ஜுன் நினைவுகளிலேயே சஞ்சரிப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.
இவர்களின் உறவைப் போன பிறவியில் அக்னீஸ்வரியின் மீது கொண்ட வன்மத்தால் ருத்ரதேவன் உடைத்தெறிந்தான். அக்னீஸ்வரி உயரற்று போனாலும் அவர்களின் உறவைத் தான்தான் பிரித்தோம் என்ற குற்றவுணர்வு அவளின் மனதின் ஆழத்தில் நிலைகொண்டுவிட இன்று சூர்யாவாக ஜனித்து அவளே அவர்களின் காதலை அவர்களுக்கே புரிய வைத்து இணைத்தும் வைத்துவிட்டாள்.
இனி இவர்களின் அழகான பந்தம் இப்பிறவியில் செழிப்பாய் வளர, விரைவில் இவர்களாலயே அரங்கநாதன் குடும்பமும் தழைத்தோங்கிச் சிறக்கப்போகிறது.
39