You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Meendum Uyirthezhu - 41

Quote

41

சிலந்திவலை

மஹாபலிபரம் கெஸ்ட் ஹவுஸிற்குள் சூர்யா நுழையும் போது வானில் சூர்யன் அஸ்தமித்து கொண்டிருக்க, பூமியைக் காரிருள் சூழக் காத்திருந்தது.

அவள் எதிர்பார்த்தது போல் எந்த விழாவும் அங்கே நடைபெறப் போவதற்கான அறிகுறி இல்லாததைக் கவனித்தாள்.

பின்னே எதற்கு அவன் தன்னைப் புடவையில் வரவேண்டியும், அதுவும் பார்ட்டிக்கு வருவது போலவும் வரச் சொன்னான் எனச் சிந்தித்தபடியே ஈஷ்வர் எங்கே என அங்கிருந்த வேலையாளிடம் கேட்டுச் சென்றாள்.

 சூர்யா யோசனையோடு மூடியிருந்த அந்த அறை கதவைத் தயக்கத்தோடு தட்ட ஈஷ்வரின் குரல் கம்பீரமாக, "கம்மின் சூர்யா" என்று ஒலித்தது.

அவளும் கதவைத் திறக்க அந்த அறையைப் பார்த்தபடி பிரமித்து நின்றாள். அந்த அறை முழுவதும் சிறு வண்ண விளக்குகளின் தோரணங்களால் ஜொலித்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிசயித்தாள்.

அந்த விசலாமான அறையில் இருந்த வட்ட மேஜையில் சிவப்பு ரோஜா பூங்கொத்தும் மெழுகவர்த்திகள் சுற்றிலும் நிறுத்தப்பட்டிருக்க இவையெல்லாம் எதற்காக என்ற கேள்விகளோடு அவள் பார்த்து கொண்டிருந்த சமயத்திலும், ஈஷ்வரைப் பற்றி சிந்தித்தவள் அவன் புறம் திரும்ப அவனோ வசீகரமான புன்னகையோடு வாசலில் நின்றிருப்பவளை,

"வெல்கம் சூர்யா" என்றழைத்தான்.

கொஞ்சம் தயக்கத்தோடே அவள் உள்ளே நுழைய அந்த வண்ண விளக்குகளின் பிரதிபலிப்பு சூர்யாவின் முகத்தில் வீசி இன்னும் அழகாய் அவள் முகத்தை மின்னச் செய்து கொண்டிருந்தது. அவளோ அந்த அறையின் அலங்கரிப்பை ரசித்தபடியே மூழ்கியிருக்க அவன் விழிகளோ இமைக்காமல் அவளிடமே நிலைத்திருந்தது.

சூர்யா அவன் முகத்தைக் கூட பாராமல், "ரொம்ப ஸ்பெஷல் கெஸ்ட் யாரையாச்சும் இன்வைட் பண்ணிருக்கீங்களா?" என்று கேட்டு விட்டு அவனை நோக்க அவனும் புன்னகையோடு, "ம்ம்ம்" என்று தலையசைத்தான்.

எப்போதும் போலவே இன்றும் ஈஸ்வர் எதிரில் இருப்பவர்களை ஒரே பார்வையாலேயே வசியப்படுத்துபவனாகவே இருந்தான். சூர்யாவும் அவனைக் கண்ட நொடி அத்தகைய காந்த சக்தியை உணர்ந்தாள் என்றே சொல்ல வேண்டும்.

அவளோ அந்த அறையின் அலங்கரிப்புக்கான காரணத்தை யூகித்தபடி "கண்டிப்பா இது அஃப்பிஷயல் மீட்டிங் கிடையாது... இல்லையா ஈஷ்வர்... ஏதோ பர்ஸனல் மீட்டிங் ரைட்" என்று கேட்க அதற்கு, "ம்ம்ம்... எஸ்" என்றான்.

மீண்டும் அவள் ஆர்வ மிகுதியால், "ஓ... அதனால்தான் நீங்க என்கிட்ட சொல்லலியோ?! பட் யார் அந்த பர்ஸ்ன்ல் கெஸ்ட்?" என்று கேட்டவளைப் பார்த்து புன்னகை புரிந்தானே ஒழிய பதிலுரைக்கவில்லை.

சூர்யா அவன் பதில் சொல்லாத போதும் விடாமல் அவனை நோக்கி, "ம்ம்ம்... ரொம்ப பர்ஸனலோ... நான் கேட்டிருக்க கூடாதோ?" என்று அவளே வினவிவிட்டு மீண்டும் அவனைப் பதில் பேசவிடாமல்,

"அப்படி பர்ஸனல் மீட்டிங்கா இருந்தா என்னை ஏன் இப்ப உடனே வான்னு கூப்பிட்டீங்க?" என்று கேட்டாள்.

இப்படி அவள் ஓயாமல் கேள்வி கணைகளைத் தொடுத்தபடி இருக்க அவனோ அதனை ரசித்தாலும் கொஞ்சம் கோபம் கொண்டவன் போல்,

"வந்ததிலிருந்து நானும் பார்த்திட்டிருக்கேன்... நீ என்னைக் கேள்வி மேல் கேள்வி கேட்டிட்டிருக்க... நீ எனக்கு பாஸா இல்ல நான் உனக்கு பாஸா?!" என்றான்.

அவனின் கோபத்தைக் கண்டு மௌனமாகிய போதும் யாராக இருக்கும் என அவள் யோசனையில் ஆழ்ந்துவிட அவனும் மெல்ல தான் நினைத்ததைச் சொல்ல எத்தனிக்க சூர்யா மீண்டும் அவனை நோக்கி,

"சாரி...நான் இங்கே ஏன் வந்தேங்கிறதை மறந்திட்டு தேவையில்லாம பேசிட்டிருக்கேன்... " என்று உரைக்க அவள் தன்னை பேசவே விடாமாட்டங்கிறாளே என ஒருபக்கம் கோபம் எழுந்தாலும் அவன் மௌனம்  காத்தான்.

சூர்யா புன்னகை ததும்ப, "தேங்க்யூ தேங்க் யூ சோ மச் ஈஷ்வர்... நான் எக்ஸ்ப்பெக்ட் பண்ணவே இல்லை... திடீர்னு அப்பா வந்து எல்லோரையும் சர்ப்பரைஸ் பண்ணிட்டார்... அக்காவும் அம்மாவும் அவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க... இந்த நாள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்... அதுக்கு நீங்கதான் காரணம் ஈஷ்வர்... ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..." என்று நெகிழ்ந்தபடி உரைக்க,

"தேங்க்ஸ் ஓகே... ஆனா நம்ம டீலிங்" என்று கேட்டு அவளை ஈஷ்வர் கூர்மையாய் பார்க்க,

"டீலிங்கா... என்ன டீலிங்?" என்றாள்.

"நான் என்ன கேட்டாலும் செய்றேன்னு சொன்னியே... மறந்திட்டியா சூர்யா”

சூர்யா கொஞ்சம் யோசித்துவிட்டு, "ம்ம்ம்... ரைட்... சொன்னேன்ல... ஓகே டன்... நம்ம டீலிங்படி... நீங்க என்ன கேட்டாலும்... நான் கண்டிப்பா செய்றேன்... பட் எனக்கு பாஸிபிளான விஷயமா கேளுங்க" என்றாள்.

அவள் அத்தனை சந்தோஷமான மனநிலையில் இருப்பதால் இதை விட சரியான சந்தர்ப்பம் வாய்த்திராது என்று எண்ணமிட்டபடி இருக்க, அந்த இடமே மௌனத்தால் சூழ்ந்து கொண்டது. சூர்யாவிற்கோ அவன் எதை கேட்க இப்படி யோசிக்கிறான் என்ற சிந்தனை தோன்றியது.

ஆனாலும் அவளை வேறொரு எண்ணமும் ஆட்கொள்ள அவள் மீண்டும் அவனை நோக்கி, "ஓகே... அந்த கெஸ்ட் எப்போ வருவாங்க?" என்று கேட்க,

"உனக்கு இப்போ அந்த கெஸ்ட்டை பார்க்கணும்... அப்படிதானே?" என்றான்.

சூர்யா ஆர்வமாய், "ம்ம்ம் எஸ்" என்று தலையசைக்க ஈஷ்வர், "என்னோட வா" என்று அழைக்க அவளும் யோசனையோடு அவனோடு சென்றாள்.

அவனோ அந்த அறையின் படுக்கையின் நேரெதிராய் இருக்கும் கண்ணாடியின் முன் வந்து நிறுத்தி அவள் பிம்பத்தையே காண்பித்து,

"நீதான் எனக்கான... என்னோட ஸ்பெஷல் கெஸ்ட்?" என்று உரைக்க சூர்யா அதிர்ச்சியோடு, "நானா... என்ன விளையாடுறீங்களா?" என்று கேட்ட நொடி "நோ ஐம் சீரியஸ்" என்றான்.

அவனின் பதிலால் அவள் முகத்திலிருந்த துடுக்குத்தனம் மறைந்து அவள் அதிர்ந்தபடி எதுவும் பேசாமல் மௌனமாய் நிற்க ஈஷ்வர் அவள் பின்னோடு நின்றபடி,

"உன் கோபம் உன் திமிரு உன் அகம்பாவம்... இதெல்லாமே என்னை கோபப்படுத்தின அதே நேரத்தில... என்னை ரொம்பவும் இம்பிரஸ் பண்ணிடுச்சு... நீ கோபப்பட்ட மாதிரி யாரும் உரிமையா என்கிட்ட கோபப்பட்டதும் இல்ல... ஐ லவ்ட் யுவர் ஆட்டிட்டியூட்... நான் உன்கிட்ட கேட்க நினைச்சது ஒரே விஷயம்தான்... ஜஸ்ட் மேரி மீ" என்றான்.

சூர்யா அதிர்ந்தபடி அவன் புறம் திரும்ப அப்போதுதான் ஈஷ்வர்தேவ்வை வேறொரு பரிமாணத்தில் பார்த்தால் என்று சொல்ல வேண்டும். அவன் பார்வை தன் மீது லயித்திருப்பதை உணர்ந்தவள், "அப்போ நீங்க என்கிட்ட கேட்கணும்னு நினைச்சது இதானா?" என்று கேட்க, "ம்ம்ம்" என்று தலையசைத்து ஆமோதித்தான்.

இப்படி ஒரு எண்ணத்தை அவன் மனதில் வைத்து கொண்டுதான் தன்னிடம் பழகினான் என்பதை தான் எப்படி யூகிக்காமல் போனோம் என்று சிந்தித்தவள் அவனிடம்,

"உண்மையிலேயே நீங்க எனக்கு செஞ்சது பெரிய உதவிதான்... பட் இப்போ நீங்க கேட்கிறது... சாரி ஈஷ்வர்... சத்தியமா அது மட்டும் என்னால முடியாது" என்றாள்.

"முடியாதா..." என்று கேட்டு சிரித்தவன் அவளை நோக்கி கர்வமாய், "மிஸஸ் ஈஷ்வர்தேவ்ங்கிற அந்த ஒரு அங்கீகாரத்திற்காக எத்தனை பேர் தவம் கிடக்கிறாங்க தெரியுமா... அப்படி ஒரு மதிப்பை நான் உனக்கு தரன்னு சொல்றேன்... நீ முடியாதுங்கிற" என்றான்.

அவன் பேச்சிலிருந்த அதிகாரம் சூர்யாவைக் கோபப்படுத்த அவள் ஏளனமாக, "தவம் கிடக்கிறவங்க எல்லோரையும் விட்டுவிட்டு போயும் போயும் உங்களுக்கு அசிஸ்டென்ட்டா இருக்கிற நான் எதுக்கு? நீங்க எனக்கு பாஸுங்கிற எண்ணத்தைத் தவிர வேறெந்த மாதிரி தாட்டும் எனக்கில்ல ஈஷ்வர்... உங்க ஸ்டேட்டஸுக்கு ஈக்வலா யாரையாச்சும் பாருங்க" என்றாள்.

"எனக்கு சரிசமமான ஸ்டேட்டஸ் இருக்கிற பொண்ணதான் நான் செலக்ட் பண்ணணும்னா... அதை நான் எப்பவோ செஞ்சுருப்பேன்... ஆனா நான் கல்யாணம் பண்ணிக்க போறப் பொண்ணு என் மனசுக்குப் பிடிச்சவளா இருக்கணும்னு நினைக்கிறேன்" என்றான்.

"உங்க மனசல இப்படி ஒரு எண்ணம் வர்றதுக்கு நான் காரணமா இருந்தா... அதுக்கு சாரி... பட் நீங்க நினைக்கிறது எப்பவும் நடக்காது" என்றவள் அவனைத் தவிர்த்துவிட்டுச் செல்ல பார்க்க அவன் அவளை வழிமறித்து,

"நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன்... இந்த ஈஷ்வர்தேவ் எதையாவது நடத்தணும்னு நினைச்சிட்டா அதை நடத்தியே தீருவேன்" என்றான்.

"நீங்களும் ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க... எனக்கு விருப்பமில்லாத விஷயத்தை யாருக்காகவும் எதுக்காகவும நான் செய்ய மாட்டேன்... உங்க விருப்பத்தை நீங்க என் மேல திணிக்கப் பார்க்காதீங்க... அதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்... நீங்க பெட்டர் உங்க மனசை மாத்திக்கோங்க... நான் கிளம்பிறேன்" என்று சொல்லலிவிட்டு புறப்படப் போனவளின் கரத்தை அவன் இறுக்கமாய் பிடித்துக் கொள்ள சூர்யா அவனை முறைத்தபடி,

"கையை விடுங்க ஈஷ்வர்... நீங்க பொண்ணுங்க விஷயத்தில ரொம்ப டீஸன்ட்டா நடந்துப்பீங்கன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்... அப்படிதான்னு நான் இப்ப வரைக்கும் நம்பறேன்... அந்த எண்ணத்தை நீங்களே உடைச்சுராதீங்க" என்றாள்.

"யூ ஆர் ரைட்... நான் மத்த எல்லா பொண்ணுங்க கிட்டயும் அப்படிதான்... பட் நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் டார்லிங்" என்றான்.

அவனின் அந்தத் தோரணையும் நடவடிக்கையும் அவளைக் கலவரப்படுத்த, "வேண்டாம் ஈஷ்வர்... இப்படி எல்லாம் பேசாதீங்க... எனக்கு சுத்தமா பிடிக்காது... என் கையை முதல்ல விடுங்க... நான் போகணும்" என்று தவிப்புற்றாள்.

"நீ இப்படி என்னை விட்டு விலகிப் போறது கூடதான் எனக்கு பிடிக்கல... புரிஞ்சுக்கோ சூர்யா... உனக்காக நான் தவிக்கிற தவிப்பு இன்னைக்கு நேத்தில்ல... உன்னோட இந்த முகம் என்னைத் தூங்கவிடாம வேலை செய்ய விடாம டார்ச்சர் பண்ணுது... நீ எனக்கு வேணும்" என்றான்.

"இப்படி எல்லாம் என்கிட்ட பேசாதீங்க ஈஷ்வர்... நான் அபிமன்யுவை லவ் பண்றேன்... அவரைதான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்" என்றாள்.

ஈஷ்வர் அதிர்ச்சியோடு அவளின் கரத்தை இன்னும் இறுக்கமாய் பற்ற அவள் வலியோடு, ”விடுங்க ஈஷ்வர்” என்று முகத்தைச் சுருக்கினாள்.

ஈஷ்வர் அவள் வலியைப் பொருட்ப்படுத்தாமல், "அவன் எல்லாம் என் கால் தூசி பெறுவானா... போயும் போயும் அவனைப் போய் நீ?" என்று கேட்க,

"ஸ்டாப் இட் ஈஷ்வர்... மைன்ட் யுவர் வார்ட்ஸ்... அபிமன்யு பத்திப் பேசெல்லாம் உங்களுக்குத் தகுதியே கிடையாது... அவரோட கேரக்டர் முன்னாடி நீங்கெல்லாம் நத்திங்... நல்லா கேட்டுக்கோங்க... அபிதான் என்னோட லவ்... அபிதான் என்னோட லைஃப்" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஈஷ்வர் கோபத்தோடு அவள் கழுத்தை நெருக்கியபடி சுவரொரத்தில் தள்ளி,

"உனக்கு அவன் அவ்வளவு முக்கியமா" என்று கேட்டான்.

அவனின் இரும்புக்கரம் அவள் கழுத்தை இறுகிய போதும் சூர்யா தெளிவோடு, "என் உயிரை விட எனக்கு அபிதான் முக்கியம்" என்று சொன்ன நொடி ஈஷ்வரின் கோபம் அதிகரித்தது.

ஆனால் அவளைக் கொல்லவோ காயப்படுத்தவோ மனம் வராமல் தன் கரத்தை அவன் விடுவிக்க அவளோ பெருமூச்சுவிட்டு அவனிடமிருந்து நகர பார்த்தவளை மீண்டும் தன் இரு கரங்களால் சிறைபிடித்தான்.

சூர்யா கோபத்தோடு, "ஈஷ்வர் வழி விடு" என்றாள்.

"முடியாது... அதுவும் நீ அந்த அபிமன்யுவை இந்தளவுக்கு விரும்பிறன்னு சொன்னப் பிறகு சும்மா உன்னை அனுப்ப மனசு வரல" என்றான்.

சூர்யா அலட்சியமான பார்வையோடு, "என்னடா பண்ணுவ..." என்று கோபமாய் கேட்க,

"டாவா... மேடமுக்கு ரொம்பதான் கோபம் வருது... சரி போகட்டும்... நீ என் டார்லிங்ல... ஸோ செல்லமா கூப்பிடுக்கோ... பரவாயில்ல... பட் ஒரே ஒரு ஹெல்ப்... அதை மட்டும் செஞ்சிட்டுப் போ" என்று சொல்ல சூர்யா குழப்பத்தோடு அவனைப் பார்த்தாள்.

அவனோ கல்மிஷமாய் புன்னகைத்து, "உன் லிப்ஸ் என்னை மேக்னட் மாறி இழுக்குதுடி... ஜஸ்ட் அ கிஸ் டார்லிங்..." என்றான்.

சூர்யா அவனின் மோசமான எண்ணத்தை அறிந்த நொடி நெருப்பில் சிக்குண்டவள் போல் தவித்தபடி அவனைத் தள்ளிவிட முயற்சித்தாள். ஆனால் அவனின் தேகம் கொஞ்சமும் அசைந்து கொள்ளாமல் அவளை நெருங்க,

"ஏ நோ... ஐ வில் கில் யூ" என்று அவள் விலகிப் போக எத்தனிக்க, "இனிமேதான் நீ என்னைக் கொல்லனுமாடி..." என்று அவன் அலட்சியமாய் புன்னகைத்து மேலும் மேலும் அவளிடம் நெருக்கமாய் வந்தான்.

சிலந்தியின் வலையில் தானே சென்று சிக்குண்ட பூச்சியாய் அவள் இப்போது வழியின்றி தவிக்க அந்தச் சிலந்தி நீண்ட காத்திருப்பின் பின் கிட்டிய அதன் இரையை அத்தனை சீக்கிரத்தில் தப்பிச் செல்ல விட்டுவிடுமா என்ன?

You cannot copy content