மோனிஷா நாவல்கள்
Monisha's AOA - 15
Quote from monisha on June 12, 2021, 6:28 PM15
கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர் காற்றின் கடைசி துளியையும் மாசுப்படுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் மனிதனுக்கு தெரியவரும்... இந்தப் பணம் என்ற காகிதத்தைத் தின்ன முடியாது - செவ்விந்தியர்கள் கூற்று
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த அணுவுக்கு அணுவாக பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் பேரொளி கடவுள்!
இறந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை நினைத்து நிகழ்காலத்தில் தினம் தினம் அழுகிற சம்பவங்கள் உலகத்தில் எப்போதாவதுதான் நடக்கும்.
அப்படியான இயற்கை பேரிடர்களை எல்லாம் தாண்டிய ஒரு பேரிடரின் பெயர் செர்னோபில்!
அங்கு நடந்த கோரமான அணுஉலை வெடிப்பினை பற்றி இணையதளத்தில் படித்த பின் பிரபஞ்சன் விழிகளில் நிற்காமல் கண்ணீர் வழிந்தோடியது.
எங்கோ, என்றோ நடந்த அழிவு... நமக்கான அதிவேக வாழ்வில் இதை செய்தியாகக் கூட கடக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், அந்த வெப்பத்தில் வெந்தவர்களுக்கு, வெந்து இறந்தவர்களுக்கு, கருகி செத்த மரம், செடிகளுக்கு, எந்தத் தீங்கும் செய்திடாமல் இன்றளவும் முடமாகிப் பிறக்கும் சிசுக்களுக்கு… அந்த சம்பவம் இன்றளவிலும் பெரும் சாபமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
அவர்களுக்காக நாம் சிந்தும் சில துளி கண்ணீர் தான் நமக்குள் எங்கோ ஒளிந்துக் கிடக்கும் மனிதத்தின் மிச்சமாக இருக்கக்கூடும்.
பிரபஞ்சனின் பார்வை கண்ணீரை சுரந்து கொண்டே தூரத்தில் தெரிந்த சமுத்திரனிடம் நிலை கொண்டிருந்தது. எந்த நொடி தன் கரையை உடைத்து கொண்டு வருவானோ?!
தற்போது வீட்டில் அவன் மட்டுமே தனிமையில் நின்றிருந்தான். ஷெர்லியை சத்யா வீட்டிற்கு தகவல் சொல்ல சொல்லி அனுப்பியிருந்தான்.
உடன் ஹரியும் சென்றிருந்தார். அதேநேரம் தங்கள் ஊர் காவல் நிலையத்திலிருக்கும் அவரின் நண்பரும் ஆய்வாளருமான சதாசிவத்திடம் இது பற்றி தெரிவித்து உதவிப் பெற முடியுமா என்று பார்க்கச் சென்றிருந்தார்.
ஆனால் இது போன்ற விஷயங்களில் வெறும் யுகங்கள் மட்டும் உதவாதே. இருப்பினும் முயற்சி செய்யாமலும் இருக்க முடியவில்லை.
மூளையின் ஒவ்வொரு மூலையிலும் பதட்டம்! பயம்! எச்சரிக்கை உணர்வு! என்று ஒவ்வொரு விநாடியும் பிரபஞ்சனுக்கு நரக வேதனையாக இருந்தது.
மரணம் கூட ஒரு சில நிமிடங்களின் வலி! ஆனால் மரணத்தை எதிர்க்கொண்டிருக்கும் போராட்டம் இருக்கே! அதுதான் வலிக்களுக்கெல்லாம் பெரிய வலி!
பிரபஞ்சன் மனதளவில் ஒரு பயங்கரமான மரண போராட்டத்தில் நின்று கொண்டிருந்தான். எரி குழம்பின் மீது நிற்பது போல் தகித்தபடி நொடிகளை எரித்து கொண்டிருந்தான். எதிர்க்காலத்தைப் பார்ப்பது என்பது சக்தியல்ல. சாபம்!
எதுவுமே செய்ய முடியாது என்ற இயலாமையை விட பிரபஞ்சனுக்கு இந்தப் பேரழிவைத் தடுக்க என்ன செய்வது? என்ன செய்வது? என்று அவனுக்குள் இருக்கும் தவிப்பு மிகுந்த அவஸ்தையாக இருந்தது. அவனை கொல்லாமல் உயிரோடு கொன்றுக் கொண்டிருந்தது.
செர்னோபில் போன்ற ஓர் அணுஉலை விபத்து நம் நாட்டில் நடந்து அதனால் பல்லாயிரம் உயிர்கள் இறப்பதையும் அவர்கள் சந்ததிகள் அனுபவிக்க போகும் கொடுமைகளையும் அவனால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை.
தான் கண்ட கனவு பலித்து அப்படி ஒரு பேரழிவு நிகழ்ந்து விடுமேயானால் அந்த நொடியே அந்தச் சூழ்நிலையில் தன் உயிரும் அப்படியே போய்விட வேண்டுமென்று ஒரு ஆபத்தான சங்கலப்பத்தை மனதிற்குள் எடுத்து கொண்டான்.
அவன் பார்வை கடலை வெறித்திருந்தாலும் அவன் மனம் ஓர் ஆழமான தியான நிலையில் இருந்ததை அவன் மட்டுமே அறிய கூடும். எண்ணங்களுக்கு ஓர் அபாரசக்தி இருக்கிறது. அந்தச் சக்தியின் மூலமாக எந்த பேரழிவும் ஆபத்தும் யாருக்கும் நேர்ந்துவிட கூடாது என்று தன்னுடைய ஒவ்வொரு அணுவிலிருந்தும் வேண்டுதலாக வைத்து கொண்டிருந்தான்.
இப்படியாக ஒவ்வொரு விநாடிக்கும் அவன் செத்து செத்து பிழைத்து கொண்டிருந்தான்.
அப்போது மேஜை மீதிருந்த பிரபஞ்சனின் கைப்பேசித் தொடர்ந்து ரீங்காரிமிட்டது. இரண்டு மூன்று அழைப்புக்குப் பின்னரே பிரபஞ்சன் அந்தச் சத்தத்தைக் கேட்டறிந்து அதனை ஏற்று காதில் வைத்தான்.
எதிர்புறத்தில் மிகுந்த பதற்றத்தோடு சேது பேசினான்.
அவன் சொன்னதைக் கேட்டபடி முகப்பறைக்கு வந்து தொலைக்காட்சியை உயிர்பித்தான்.
ப்ரேகிங் நியூஸ் ஒளிப்பரப்பட்டுக் கொண்டிருந்தது!
‘சுனாமி வர போகும் முன்னெச்சரிக்கை தகவல். வங்காள விரிகுடா நடுகடலுக்கடியில் உணரப்பட்ட ஏழு ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு. இது கடலோர பகுதிகளிலும் உணரப்பட்டது.’
அனைத்து சேனல்களில் இந்த ஒரே செய்தி மட்டுமே!
உச்சபட்ச பரப்பரப்பை எட்டியது வங்காள விரிகுடா கடற்பகுதியின் ஓரமாக அமைந்திருந்த நகரங்கள்!
வர போகும் பேரழிவை முன்னமே கண்டறிந்த மனிதனின் புத்திக் கூர்மை அணுஉலை என்ற பெயரில் ஒரு பேரழிவை தானே உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை உணராது போனது அவனின் முட்டாள்தனத்தின் உச்சமா?
அடிப்படை வசதிகளான உணவு, உடை, தங்கும் இடம் போன்றவற்றைக் கூட நம் நாட்டில் வாழும் அடித்தட்டு மக்களுக்கு இதுவரை ஒழுங்காகப் பூர்த்தி செய்யாத இந்த அரசாங்கங்கள் பல கோடிகளில் செலவு செய்து வெளிநாடுகளுடன் கைக் கோர்த்து அணுஉலைகள் நிர்மானித்து மின்உற்பத்தி செய்கிறது. நிச்சயம் அது அடித்தட்டு மக்களுக்காக அல்ல. சென்னைப் போன்ற மாநகரங்களில் கோடிகளில் லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்காக!
ஆக மனிதனின் அடிப்படைத் தேவை பணம் மட்டுமே! இந்தப் பணம் என்ற காகிதத்திற்காக எதிர்கால சந்ததியை முடமாக்கவும் மலடாக்கவும் பலிக்கடாவாக மாற்றவும் இந்த ஊழல் அரசாங்கங்கள் தயங்குவதில்லை.
15